"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


கணவனின் ஓய்வூதியத்தை “கட்” செய்த வீரமான மருமகள்

சென்னை:மனைவி, குழந்தைகளை பராமரிக்காத ராணுவ வீரருக்கு, ஓய்வூதிய பலன்கள் வழங்க, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவர் தாக்கல் செய்த மனு:எனக்கும், நீலகிரி வெலிங்டனில் பணியாற்றும் ராணுவ வீரர் சங்கர் என்பவருக்கும், 1998ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு, 12 வயதில் மகன், ஒன்பது வயதில் மகள் உள்ளனர். வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக, என்னிடம் விவாகரத்து பெறும் வகையில், வெற்றுப் பேப்பரில் கையெழுத்து போடுமாறு மிரட்டினார்.நான் மறுக்கவே, என்னை தாக்கினார்.

ஆம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். என்னையும், குழந்தைகளையும் கைவிட்டு விட்டார். கடந்த ஆண்டு ஜூலை முதல், என் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன்.எங்கள் இருவருக்கும் கூட்டாக வங்கியில் கணக்கு இருந்தது. ஏ.டி.எம்., மூலம் மாதம் 7,000 ரூபாய் எடுத்து வந்தேன். தற்போது அந்தக் கணக்கை முடித்து விட்டார். அவரது பணி ஆவணங்களில், "நாமினி' ஆக, என்னை தான் குறிப்பிட்டிருந்தார்.தற்போது, அவரது ஓய்வூதிய சலுகைகள் அனைத்தும், வேறொரு பெண்ணுக்கு கிடைக்கும் வகையில் செயல்படுகிறார். வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடுத்த வழக்கில், இடைக்கால நிவாரணமாக மாதம், 7,000 ரூபாய் எனக்கு வழங்க உத்தரவிட்டது.

எனக்கு ஏற்பட்ட இழப்புக்காக, 30 ஆயிரம் ரூபாய் மற்றும் இருப்பிட வசதி அளிக்க, என் கணவருக்கு உத்தரவிட்டது.என்னையும், குழந்தைகளையும் பராமரிக்காததால், ஓய்வூதிய பலன்களை வழங்கக்கூடாது என, ராணுவ உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். வரும் 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். எனக்கு வர வேண்டிய பராமரிப்புத் தொகையை தராமல், அவருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கக்கூடாது. எனவே, ஓய்வூதிய பலன்களை வழங்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதி சுகுணா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.செல்வராஜ் ஆஜரானார். விசாரணையை, மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து, அதுவரை ஓய்வூதிய பலன்களை வழங்க இடைக்காலத் தடை விதித்தார்.




அடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்

அடங்காத கணவன்களை வரதட்சணை சட்டங்கள் (IPC498A) மூலம் அடக்குவது எப்படி என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்கும். இதுவரை தெரிந்துகொள்ளாத மருமகள்கள் இந்த இணைப்புகளில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போது புதிதாக வந்திருக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் மூலம் இன்னும் எப்படி அதிக பலத்துடன் அடக்கலாம் என்று செய்தித்தாளில் விளக்கமாக எழுதியிருக்கிறார்கள்.

முக்கியமான “பாயிண்ட்டுகளை” சிவப்பு நிறத்தில் கனமான எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »சொல்கிறார்கள் >> அக்டோபர் 24,2011


குடும்ப வன்முறையிலிருந்து மீள வழி கூறும் வழக்கறிஞர் அஜிதா:

"குடும்பம் வேண்டும்; வன்முறை வேண்டாம்' என்று சொல்லும் பெண்களுக்காக, இது ஒரு சிவில் சட்டமாக போடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தில் ஒருவர் மீது புகார் கொடுத்தால், அவர்களைக் கைது செய்வதோ, சிறையில் அடைப்பதோ இல்லை. மாறாக, பாதுகாப்பு அதிகாரி என்ற ஒருவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிப்பர். இவர்களிடம் நேரடியாக புகார் தரலாம்.புகார் தரும் போது, பாதிக்கப்பட்ட பெண் என்றில்லை, அவர் சார்பாக, வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் தரலாம். ஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது.

ஒரு வீட்டில் வன்முறைக்கு யார் காரணமோ, அந்த ஆணுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, அதன் பின் அவரை யாராவது தூண்டினால், சம்பந்தப்பட்ட பெண் மீதும் புகார் தரலாம். புகாரைப் பெற்றுக் கொண்டவுடன், சம்பந்தப்பட்டவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பி, பேசச் சொல்வார்கள். அதனடிப்படையில், கோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.

எதற்குமே கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு எதிராகத் தான் இந்தச் சட்டம். புகார் மீதான ஆரம்பக் கட்ட நடவடிக்கையின் போதே, சிலர் "பிரச்னை செய்ய மாட்டேன்' என்று சொல்லி வீட்டிற்கு வருவர். வந்த பின், பழையபடி பிரச்னையை ஆரம்பிக்கலாம் என்பதால், அவர்களிடம் எழுதி வாங்கிக் கொள்வர். இதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்!
======

இனி இந்த சட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ள விளக்கத்தினைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்....

  • ஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது.
இந்த சட்டத்தைப் பயன்படுத்தி வீட்டில் இருக்கும் ஆண் மீது மட்டும்தான் புகார் தரமுடியும். ஏனென்றால் ஆண்கள்தான் எப்போதும் கொடுமை செய்யும் கொடுமைக்காரன்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் கணவன், தந்தை, சகோதரன், கணவனின் சகோதரன், திருமணம் செய்யாமல் கூடி வாழும் துணைவன், நாத்தனார்களின் கணவன்கள் என எந்த ஆண் மீது வேண்டுமானாலும் இந்த சட்டத்தின் மூலம் புகார் கூறலாம்.

குறிப்பாக மகளின் காதலுக்குத் தடைபோடும் அப்பா மீதும் இந்த சட்டத்தை மகள் ஏவிவிடலாம். எல்லாம் குடும்ப வன்முறைதானே...அதற்கும் இந்த சட்டத்தில் வழி இருக்கிறது! இதைப் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக எழுதியிருக்கிறேன். இங்கே சென்று படித்துப் பாருங்கள்: காதலுக்கு தடை போடும் பெற்றோருக்கு பாடம் கற்பிக்க வந்துவிட்டது சட்டம்!

  • கோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
கணவனைப் பிடிக்க வில்லை. அவன் முகத்திலேயே விழிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் மருமகள்கள் அதை குடும்ப வன்முறை தடுப்பு அலுவலரிடம் கூறி கணவனை அவன் சொந்த வீட்டிற்குள்ளேயே காலடி எடுத்து வைக்க முடியாமல் தடையுத்தரவு வாங்கி விடலாம். மீறி வந்தால் சிறைக்குத் தான் செல்ல வேண்டும்.

அவன் வீட்டிற்கு வரவில்லையென்றால் செலவிற்கு பணத்திற்கு என்ன செய்வது என்று மருமகள்கள் கவலையோடு யோசிப்பது புரிகிறது. அதைப் பற்றி கவலையே படவேண்டாம். இந்த குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம் கணவனை அவன் வீட்டிற்குள்ளேயே நுழைய விடாமல் தடுக்கலாம் ஆனால் மாதந்தோறும் குடும்ப பராமரிப்பிற்கு மட்டும் சரியாக பணத்தை அனுப்பவேண்டும் என்றும் நீதிமன்றத்தின் மூலம் ஆணை பிறப்பிக்கலாம். எப்படிஇருக்கிறது இந்த புதிய சட்டம்!!!!!!

  • இதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்!
முன்பிருந்தது போல் IPC498A வை மட்டும் பயன்படுத்தினால் ஜாமின் வாங்கிக்கொண்டு கணவன்கள் ஓடிவிடுவார்கள். இது பழைய நடைமுறை. அதனால்தான் இப்போது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் மருமகள்களின் கரங்களை வலுப்படுத்த வந்திருக்கிறது. இந்த குடும்ப வன்முறை சட்டத்தைப் பயன்படுத்தினால் கணவனை அவனது சொந்த வீட்டைவிட்டே விரட்டலாம், அவனது வருமானத்தில் கணிசமான ஒரு தொகையை மாதா மாதம் பெற்றுக் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால் அவன் குடும்ப சொத்தில் பங்குகூட வாங்கிக் கொள்ளலாம்.

இதன் விளைவாக அவன் என்ன செய்வதென்றே வழி தெரியாமல் மருமகள் சொல்லும் பேச்சிற்கு அடங்கி நடக்கலாம் என்ற முடிவிற்கு வந்துவிடுவான். அல்லது வேறு நல்ல தீர்வாக மருமகள் கேட்கும் ஒரு பெருந்தொகையை கொடுத்துவிட்டு ஆளை விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடிவிடுவான்.


இந்த இரண்டிற்கும் அவன் கட்டுப்படவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது IPC498A. இந்த IPC498A சட்டம் இப்போது தனித்து செயல்படாமல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்திற்குள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. தேவையானதை மருமகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதனால் மேலே குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து பலன்களையும் மருமகள் அனுபவிக்கலாம் அதே சமயம் IPC498A சட்டத்தையும் பயன்படுத்தி கணவனை கைது செய்து நீதிமன்றத்திலும் அலைய விடலாம். இந்த வசதி எப்படி இருக்கிறது....பிரமாதம்.

இப்படிப் பலவகையான வசதிகள் இருக்கின்றன இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில். அதனால் மருமகள்கள் இந்த புதிய சட்டத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு பக்குவமாகப் பயன்படுத்தி பலன் அடையாலாம். இப்படிப் பலர் இப்போது பயனடைந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள்!

முக்கியமான பின்குறிப்பு: இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை பெண்கள் தாராளமாக ஆண்களுக்கெதிராக பயன்படுத்தலாம். ஆனால் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் குடும்ப வன்முறை செய்வதாகக் கூறி பெண்ணின் மீது ஒரு ஆணால் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி புகார் கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்தியாவில் ஆண் மட்டுமே குடும்ப வன்முறை செய்பவன் என்பது உலகறிந்த உண்மை. மருமகள்களுக்கு எந்த வன்முறையும் செய்யத் தெரியாது! இதுவும் மருமகள்களுக்கு நல்லதுதானே!!



யாரிடம் வாலாட்டக் கூடாது தெரியுமா?

வரதட்சணை சட்டங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட மருமகள்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக பலம் படைத்தவர்கள் சட்டம் படித்த வக்கில்கள்தான். அதனால் சட்டம் தெரிந்த மருமகள்களிடம் கணவன்களும் அவனது குடும்பமும் வாலாட்டக் கூடாது! சட்டம் படித்த வக்கில்களிடம் பொது மக்கள் வாலாட்டக் கூடாது!!

மருமகள்களின் தோழர்களான சட்டம் படித்த வக்கில்களுக்கு மருமகள்கள் தங்களது ஆதரவை அளிக்க வேண்டும்.

போலீசுக்கு எதிரான போராட்டம் என கூறி வக்கில்கள் நடத்திய மனித சங்கிலியை ஏதோ ஒரு அவசர காரணமாக கடக்க முயன்ற பொதுமக்களை வக்கில்கள் தாக்கினர். (15 அக்டோபர் 2011 தினமலரில் வந்த செய்தியும் படமும்)



மருமகள்களின் ஆயுத பூஜை!


ஆயுத பூஜையான இன்று மருமகள்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் “மருமகள் பாதுகாப்பு சட்ட ஆயுதங்களைப்” பற்றி மருமகள்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மருமகள்களுக்கு பாதுகாப்பு அளிக்க அகிம்சை வழி ஆயுதங்களாக அரசாங்கம் கொடுத்திருக்கும் சட்டங்களான வரதட்சணை தடுப்புச் சட்டம் (The Dowry Prohibition Act, 1961 (28 of 1961)), மருமகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (IPC498A), கணவனின் வன்முறையிலிருந்து மருமகளை காக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (Protection of Women from Domestic Violence Act, 2005) இவற்றைப் பற்றி மருமகள்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஆயுத பூஜை நன்னாளில் மருமகள்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த சக்தி மிகு அகிம்சை வழி ஆயுதங்களை பின்வரும் இணைப்புகளில் இருந்து தரவிறக்கம் செய்து அச்சடித்து இன்றைய பூஜையில் வைத்து பூஜை செய்து இந்த நகலை எப்போதும் கையில் வைத்துக்கொண்டால் கணவன் மற்றும் அவனது குடும்பத்தால் ஏற்படும் அனைத்துவித கொடுமைகளையும் அரசாங்கத்தின் உதவியோடு எதிர்த்து பாதுகாப்பு பெறலாம்.

பின்வரும் இணைப்புகளில் “PDF” வடிவில் இந்த சட்டங்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

1. வரதட்சணை தடுப்புச் சட்டம்

தற்போது வரதட்சணை கேட்கும் அல்லது திருமணத்தின்போது வரதட்சணை கேட்ட கணவனை அல்லது திருமணத்தின்போது வரதட்சணை பெற்றுக்கொண்ட கணவனை இந்த சட்டத்தின் மூலம் எப்போது வேண்டுமானாலும் தண்டிக்கலாம்.

2. மருமகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்

வரதட்சணைக்காகவோ அல்லது மதிப்பு மிக்க பொருட்களுக்காகவோ அல்லது எந்தவித காரணமும் இன்றி மருமகளை மனளதளவிலோ அல்லது உடலளவிலோ துன்புறுத்தும் கணவன் மற்றும் அவனைச் சார்ந்த அனைவரையும் (உறவினர், நண்பர்கள் உட்பட வயது, பாலினம் வித்தியாசம் இல்லாமல்) இந்த சட்டத்தின் மூலம் தண்டிக்கலாம்.

3. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்

மகள், மருமகள், மனைவி, சகோதரி என அனைத்து பெண்களும் தங்கள் குடும்பத்தில் இருக்கும் எந்த ஆண் உறவினராலும் (திருமணம் செய்யாமல் கூடிவாழும் துணைவன், கணவன், சகோதரன், தந்தை உட்பட) உடலியல், பாலியல், மனவியல், மற்றும் பொருளாதாரக் (Physical and Sexual Abuse, Verbal & Emotional Abuse and Economic Abuse) கொடுமைகளுக்கு ஆளானால் இந்த சட்டத்தின் மூலம் தகுந்த நிவாரணம் பெறலாம்.

இந்த ஆயுத பூஜை “சக்திமிக்க” பூஜையாக இருக்கட்டும்!

வாழ்த்துக்கள்!!


கணவனை அவமானப்படுத்தும் மனைவியருக்கு காத்திருக்கும் பரிசு!

ஆந்திர மாநில மருமகள்களுக்கு அமைச்சர் கொடுக்கும் அரிய வாய்ப்பு!
கரும்புத் தின்ன கூலி கொடுக்கப் போகிறார்களாம்!




கர்னூல்: "மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்'' என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.

ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்கள் கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும். கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம்.

தெலுங்கானா பகுதியில், போராட்டங்கள் தொடர்ந்தாலும், மதுக்கடைகள் மட்டும், முழுவீச்சில் செயல்படுகின்றன. இவ்வாறு, வெங்கடேஷ் கூறினார்.

==================================================================
இதுபோன்ற நல்ல திட்டங்களை நாடு முழுதும் எல்லா மாநிலங்களிலும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் அனைத்து இந்திய மருமகள்களும் பலனடைவார்கள்.
==================================================================



காதலுக்கு தடை போடும் பெற்றோருக்கு பாடம் கற்பிக்க வந்துவிட்டது சட்டம்!

மருமகள்களே,

இதுவரை உங்களுக்குக் கொடுமை செய்யும் கணவனையும் அவனது குடும்பத்தையும் கட்டுப்படுத்தி அடக்க உதவும் சட்டங்களைப் பற்றி மட்டுமே உங்களுக்குத் தெரிந்திருக்கும். கணவனை அடக்க உதவும் அந்த மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் பொதுவாக “வரதட்சணை சட்டங்கள்” என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

இன்றுவரை இந்த சட்டப்பாதுகாப்புப் பெட்டகத்தில் Dowry Prohibition Act, IPC498A என்ற இரண்டு அற்புதமான சட்டங்கள்தான் மருமகள்களுக்கு பெரும் உதவி செய்து வந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்போது “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்” [Protection of Women from Domestic Violence Act,2005, (Come into Force on 26/10/2006)] என்ற சர்வ வல்லமை பொருந்திய சட்டம்தான் பரவலாக நடைமுறைக்கு வந்திருக்கிறது என்ற விஷயம் பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

2005லேயே இந்த சட்டம் உருவாக்கப்பட்டிருந்தாலும் இப்போதுதான் இது சமீபகாலமாக மருமகளின் பயன்பாட்டிற்காக பெருமளவில் விடப்பட்டிருக்கிறது. அந்த சட்டத்தின் முக்கியமான சாராம்சத்தை சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அப்படியே கொடுத்திருக்கிறேன் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
An Act to provide for more effective protection of the rights of women guaranteed under the Constitution who are victims of violence of any kind occurring within the family and for matters connected therewith or incidental thereto.

மேலுள்ள முக்கியமான வார்த்தையை கவனித்தீர்களா? பெண்ணுக்கு குடும்பத்தில் நடக்கும் எந்த வகையான வன்முறையிலிருந்தும் இந்த சட்டத்தின் மூலம் பாதுகாப்பு பெறலாம்.

இந்த சட்டத்தின் மூலம் யாரெல்லாம் பாதுகாப்பு பெறலாம் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதையும் தருகிறேன் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
Coverage – Who can Complain : "Aggrieved Person" [Section 2(a)]

  • Any woman who is or has been in a domestic relationship with the respondent (sisters, widows, mothers, daughters, women in relationships of cohabitation, victims of bigamous marriages, single women etc.) and
  • Who has been subjected to acts of domestic violence
  • Children are also covered
  • Any person can file a complaint on their behalf
யாரெல்லாம் இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்துகொண்டீர்கள் அல்லவா! இப்போது யாருக்கெதிராக இந்த சட்டத்தைப் பக்குவமாகப் பயன்படுத்தலாம் என்றும் ஒரு பட்டியல் தந்திருக்கிறார்கள். அதையும் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
Against Whom Can A Complaint be Filed :
“Respondent” [Section 2 (q)]
  • Any adult male member who has been in a domestic relationship with the woman who files a complaint of domestic violence.
  • Relatives of the husband or the male partner.
  • Includes both male and female relatives of husband or the male partner.
இந்த சட்டத்தின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டே போனால் இந்த ஒரு பதிவு போதாது. அதனால் இன்றைய பதிவிற்கான முக்கியமான விஷயத்தை மட்டும் இப்போதைக்குச் சொல்கிறேன். மற்றவற்றை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

இதுவரை இருந்த சட்டங்கள் நிகழ்கால மருமகள்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இப்போது வந்திருக்கும் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் எதிர்கால மருமகள்களுக்கும் நன்றாக உதவும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது எதிர்கால மருமகள்களால் இளமைக் காலத்தில் காதல் புரியாமல் இருக்க முடியாது. அதுபோன்ற சமயத்தில் பெற்றோர் ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களை அடக்கும் ஆயுதமாகவும் இந்த குடும்ப வன்முறை சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்று ஒரு வீரமிக்க எதிர்கால மருமகள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

அது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் மேலே சொல்லப்பட்டுள்ள சட்ட விளக்கத்தில் சிவப்பு நிற வாக்கியங்களை கவனியுங்கள்.

குடும்பத்தில் இருக்கும் ஒரு ஆணால் (தந்தை, சகோதரன் உட்பட) ஒரு பெண்ணுக்கு (மகள், மனைவி, சகோதரி, தாய்) உட்பட எந்த வகையான வன்முறை இழைக்கப்பட்டாலும் (மகளின் காதலை தந்தை கண்டிப்பதும் ஒரு வகையில் வன்முறைதான்) இந்த சட்டத்தின் மூலம் தீர்வு காணலாம் என்ற விளக்கம் பின்வரும் செய்தியின் மூலம் நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் தனது காதலை தனது தந்தை கண்டித்ததால் குடும்ப வன்முறை சட்டத்தைக் காட்டி தனது தந்தையை அடங்கச் செய்திருக்கிறார். செய்தியை கவனமாகப் படித்து புரிந்துகொண்டால் உங்களுக்கே இந்த சட்டத்தின் மகிமை புரியும்! இன்னும் பல அரிய பயன்பாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

ஐக்கிய நாட்டு சபையின் இந்தியாவிற்கான பெண்கள் வளர்ச்சி நிதியாக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தில் உருவான சட்டத்தின் அருமை பெருமை அவ்வளவு சிறிதாகவா இருக்கும்!

[நிதி ஒதுக்கீட்டின் தற்போதைய நிலவரம் இது - The schemes/programmes that address violence against women are budgeted both in the Union and the State budgets (depending upon whether it is a Centrally sponsored scheme, or is a State scheme). It is not possible to give the exact budgetary allocation as many Ministries meet the expenditure from their general budget. There is gender budgeting in India and Gender Budget Statement (Statement 20) is part of the Union Budget. It includes grants for demands from different ministries/departments. Grants under Part A deal with 100 per cent women specific programmes and Part B deal with 30 per cent women specific programmes. For the year 2010-2011, the total allocation is Rs. 67,749.80 crores (Rs. 19,266.05 crores for Part A and Rs 48,483.75 crores for part B).]

வாழ்த்துக்கள்!!


Stopped from seeing boyfriend, teen girl threatens to lodge case against father

22/09/11 Daily Bhaskar



Ahmedabad: A school girl of Ranip area in the city has threatened her doctor father that she will lodge a case of domestic violence against him if he does not allow her to meet her boyfriend. The father has approached police but cops say they cannot do much legally. However, they have offered to counsel the teenager.

Ranip police said Shruti (name changed), 14, a resident of Ranip, studies in class X and is in love with a boy of class XII of the same school. Her father, who is a doctor, spotted Shruti and the boy together on a number of occasions but thought they were just friends.

However, the doctor recently saw Shruti and the boy emerging from a multiplex in the city. He got angry and slapped her in the face asking her not to see the boy any longer. The girl did not say a word.

A few days after the theatre incident, the father once again found Shruti with her boyfriend at Kankaria. He was enraged and took the girl home. However, before the doctor could vent his anger, Shruti threw a book dealing with 'Protection of Women from Domestic Violence Act, 2005' towards him and threatened to file a case in court if he continued to 'harass' her.

The stunned father called up his friend, a city-based IAS officer, and told the whole story. The officer put him in contact with Ranip police station. Subsequently, the doctor met officials of Ranip police and narrated the whole case but cops told him that legally, they could not do much in the matter.

"Considering the nature of the case, there is not much that we can do. However, we have advised the doctor to visit us with the girl and her mother and we will try to counsel her about the expectations of her parents," Ranip police inspector Sudarshansinh Vala said.

Police said that the doctor has agreed to bring Shruti to police station. No formal police complaint has been lodged in this connection.

http://daily.bhaskar.com/article/GUJ-AHD-stopped-from-seeing-boyfriend-teen-girl-threatens-to-lodge-case-against-father-2449354.html





காதலிக்கும் இளம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்

வருங்காலத்தில் மருமகளாகப் போகும் இளம் பெண்களுக்காக இந்த செய்தி.

காதலில் விழும் பல இளம்பெண்களை இளைஞர்கள் ஏமாற்றுவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. அதற்காக காதலிக்காமல் இருக்கமுடியுமா?

அப்படியென்றால் எப்படி பாதுகாப்பாக காதலிப்பது என்று தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

சிலசமயங்களில் காதல் செய்துவிட்டு ஆண்கள் பெண்ணை ஏமாற்ற முற்படுவார்கள். அதுபோன்ற சமயத்தில் ஆணை வழிக்குக் கொண்டுவர பொதுவாக காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது வழக்கம். பல சமயங்களில் இதுபோன்ற புகார்களை யாரும் சரியாக கவனிக்க மாட்டார்கள். அப்போது இளம் பெண்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாதல்லவா? இதுபோன்ற இளம் பெண்களுக்கு உதவும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தனியாக ஒரு பெண்கள் உதவி மையம் இருக்கிறது. இந்த தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால் உங்களது காதல் பிரச்சனைக்கு தீர்வு காண அரசாங்கமே உதவி செய்கிறது.

WOMEN HELPLINE

The Government of Tamil Nadu has launched a new scheme to aid women in distress. "Women Helpline" Units have been ordered to be opened throughout the state. Today "WOMEN HELPLINE UNITS" are functioning in most districts of Tamil Nadu. Women Police provide prompt help round the clock to women in distress in these "WOMEN HELPLINE UNITS".

Toll Free Numbers (இலவச தொலைபேசி)

Women help Line - 1091


மருமகள்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் கீழ்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

Dowry Harassment
(வரதட்சணை கொடுமை புகார் கொடுக்க)
Domestic violence / Problems by in-laws
(கணவர் மற்றும் அவனது குடும்பத்தின் மீது புகார் கொடுக்க)
Alcoholic spouses
(குடிகாரக் கணவருக்கு பாடம் புகட்ட)
Sexual harassment
(பாலியல் பலாத்காரம் என்று புகார் கொடுக்க)
Problems related to love affairs
(காதலனை வழிக்குக் கொண்டு வர)

புதுப்பொலிவு பெறுகிறது போலீஸ் கவுன்சிலிங் வாகனம்
(தினமலர் செப்டம்பர் 8/2011)

தமிழகத்தில், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மூலம் இயங்கும் நடமாடும் போலீஸ் கவுன்சிலிங் வாகனம், புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.



சிவகங்கை: கடந்த தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட போலீஸ் கவுன்சிலிங் வாகனம் "டிவி' உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பொலிவு பெறுகிறது.

கடந்த 2001 அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை உடனே தடுக்கவும், வரதட்சணை கொடுமை, பெண்கள் வன் கொடுமை போன்ற சம்பவங்கள் நடந்தால், மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுன்சிலிங் நடத்த, வாகனம் வழங்கப்பட்டது. இதில், போலீஸ் அதிகாரிகள், டாக்டர், வக்கீல்கள், கவுன்சிலிங் உறுப்பினர்கள் சென்று, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கிவந்தனர்.

அதற்கு பின் வந்த தி.மு.க., அரசு, இலவச போலீஸ் கவுன்சிலிங் வாகன திட்டத்தை கிடப்பில் போட்டது. இதனால், போலீஸ் கவுன்சிலிங் வாகனம் பொலிவிழந்து போனது.

புதுப்பொலிவு: மீண்டும் அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தபின், முதல்வர் ஜெ., பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான புகார்கள் வந்தால், உடனே நேரில் சென்று கவுன்சிலிங் நடத்துமாறும், இதற்காக வழங்கப்பட்ட வாகனத்தை பயன்படுத்துமாறு தெரிவித்தார்.

மாவட்டந்தோறும் வழங்கப்பட்ட "போலீஸ் நடமாடும் கவுன்சிலிங்' வாகனத்தை புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது. இதில், பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்க, "டிவி' நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதற்காக புதிதாக "டிவி' உள்ளிட்ட சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.



பெண்களுக்கு உதவி செய்ய காவல்துறையால் இந்த பெண்கள் உதவி மையம் இயக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது அதே காவல்துறையைச் சேர்ந்த ஒரு போலிஸ்காரரே ஒரு இளம் பெண்ணை ஏமாற்றியிருக்கிறார் பாருங்கள். ஐயோ பெண்களை யார்தான் காப்பாற்றுவார்களோ?



செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், காதலித்த பெண்ணை கைவிட்டு, வேறு திருமணம் செய்ய முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

பழைய செம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 30. தஞ்சாவூர் ஆயுதப்படை போலீஸ்காரர். இவருக்கும், வத்தலக்குண்டு பூசாரிபட்டி திவ்யாவிற்கும், நேற்று முன்தினம், செம்பட்டியில் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று காலை, திருமணம் நடக்க இருந்தது.

இந்நிலையில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த நரசிம்மன் மகள் திவ்யா, "மணிகண்டன் என்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். திருமணத்தை நிறுத்த வேண்டும்,' என, போலீசில் புகார் செய்தார். மாப்பிள்ளை அழைப்பில் இருந்த மணமகனை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

பெண் வீட்டாருக்கு இத்தகவலை தெரிவிக்காத மாப்பிள்ளை வீட்டார், "மணமகனுக்கு உடல்நிலை சரியில்லை. நேரம் சரியில்லாததால் மதியம் ஒரு மணிக்கு மேல் தாலிகட்ட வேண்டும்,' என, கூறி சமாளித்தனர். ஆனால் மண்டபத்தில் விருந்து, மொய் வசூல் நடந்தது. மொய் வசூல் முடித்து மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப முயற்சித்த போது, பெண் வீட்டார் தடுத்தனர். மோதல் ஏற்பட்டு, போலீசார் வந்த பிறகே, பெண் வீட்டாருக்கு விஷயம் தெரிந்தது.

காதலி திவ்யா, "என்னை திருமணம் செய்ய வேண்டும் அல்லது மணிகண்டனை கைது செய்ய வேண்டும்,' என, முடிவில் உறுதியாக இருந்தார். மாலையில், மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.





வரதட்சணை சட்டத்தின் பயன்பாடு

முந்தைய பதிவுகளில் வரதட்சணை சட்டத்தைப்பற்றியும் அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் விளக்கியிருந்தேன். அதனை எத்தனை மருமகள்கள் புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. குறிப்பாக வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி? - பாடம் 3 ல் குறிப்பிட்டுள்ள பயன்பாடுகளை மீண்டும் ஒரு முறை இங்கே கொடுக்கிறேன். படித்து நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.



1. தனிக்குடித்தனம் போகவேண்டும் (இந்தவகையான பயன்பாட்டிற்கு பின்வரும் செய்தி ஒரு நல்ல செயல்முறை உதாரணம்)

2. மாமியார், மாமனாரை வீட்டை விட்டு விரட்டவேண்டும்

3. கணவரின் வயதான பெற்றோருக்கு பணம் தருவதை நிறுத்தவேண்டும்

4. உங்கள் வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும்

5. கணவரின் தம்பி தங்கைகளுக்கு செய்யும் உதவியை நிறுத்த வேண்டும்

6. உங்களின் ஆடம்பர வாழ்க்கையில் கணவர் குறுக்கிடுவதை தடுக்கவேண்டும்

7. மருமகள்களுக்கு இதைப் படிக்கும் போது கூச்சமாக இருக்கும் அதனால் நீங்கள் உங்கள் காதில் விழாமல் காதை மூடிக்கொண்டு படியுங்கள். என்ன இருந்தாலும் பெண்மைக்கே உரிய நாணம் தடுக்குமல்லவா. விரும்பிய ஆண் நண்பர்களுடன் பேசுவதை கணவர் தெரிந்து கொண்டார் அல்லது உங்கள் உரிமையில் தலையிட்டு அதை தடுக்க முயல்கிறார். அவரை வாயை மூடிக்கொண்டு ஒதுங்கியிருக்கச் செய்யவேண்டும்.

தனிக்குடித்தனம் போகவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள பயன்பாட்டிற்கு ஒரு நல்ல உதாரணம் கொடுத்து விளக்குவதற்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. வழக்கம் போல படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.



செப்டம்பர் 07,2011 தினமலர் செய்தி


தனிக்குடித்தனம் வராத கணவன் மீது வரதட்சணை வழக்கு


சிவகங்கை: குடும்ப பிரச்னையில் பெண்ணின் மாமனாரை மிரட்டியதாக தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது சிவகங்கை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிங்காரவேலன். இவருக்கும், பட்டமங்கலத்தை சேர்ந்த கார்மேகம் மகள் மீனாட்சிக்கும் 2009ல் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின், தனிக்குடித்தனம் செல்ல தன் கணவரை மீனாட்சி வற்புறுத்தினார். அவர் வர சம்மதிக்கவில்லை. இதற்கிடையில், தனது மகனை மீனாட்சி துன்புறுத்துவதாக சென்னை குடும்ப நல கோர்ட்டில் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நடக்கிறது.

இதற்கிடையில் மீனாட்சி, திருப்புத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக புகார் செய்தார்.

கடந்த மார்ச் 7 அன்று, திருப்புத்தூருக்கு ராமசாமி, அவரது மகன் விசாரணைக்கு வந்தனர். அங்கிருந்த சிவகங்கை தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், அவரது தம்பி இளங்கோவன், மீனாட்சியின் தாய் போதும்பொண்ணு ஆகியோர் மிரட்டி உள்ளனர். இது குறித்து ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுபடி, சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் குமாரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளார்.



வாழ்த்துக்கள்!


வெளிநாட்டு இந்திய கணவனுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த நெத்தியடி

வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்த எல்லைகள் எப்போதும் தடையாக இருப்பதில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த செய்தி. மருமகள்கள் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளவும்.


செப்டம்பர் 04,2011 தினமலர்

புதுடில்லி: "வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர், அங்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும், அவருக்கு எதிராக இந்தியாவில் விசாரணை நடத்த முடியும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


ஆந்திராவைச் சேர்ந்தவர் தோட்டா வெங்கடேஸ்வரலு. இவர், தன் மனைவி சுனிதாவுடன், போஸ்ட்வானாவில் வசித்து வந்தார். இவரின் மனைவி சுனிதா, சமீபத்தில் போஸ்ட்வானாவில் இருந்து, ஆந்திராவுக்குத் திரும்பினார். ஆந்திராவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், வெளிநாட்டில் வசிக்கும்போது தன் கணவர் வரதட்சணை கேட்டு, தன்னை கொடுமைப்படுத்தியதாகப் புகார் தெரிவித்தார். ஆந்திராவில் உள்ள கூடுதல் முன்சீப் கோர்ட்டில், இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து, வெங்கடேஸ்வரலு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "வெளிநாட்டில் நடந்த ஒரு சம்பவத்துக்காக, இந்தியாவில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க முடியாது. எனவே, என் மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என கூறியிருந்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், சிரியாக் ஜோசப், எஸ்.எஸ்.நிஜார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்தியாவில் வசிக்கும் ஒருவர், இங்கு குற்றச் செயலில் ஈடுபட்டால், அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதே நடவடிக்கையை, அவர் வெளிநாட்டில் செய்த குற்றச் செயல்களுக்கும் எடுக்க முடியும். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர், வெளிநாட்டில் குற்றம் செய்தால், அவருக்கு எதிராக இந்தியாவில் விசாரணை நடத்த முடியும். அதேநேரத்தில், இந்த விசாரணையைத் துவங்குவதற்கு முன், மத்திய அரசிடம் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.


நான் முந்தைய பதிவுகளில் கூறியிருப்பது போல வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தவேண்டும் என்று மருமகள்கள் முடிவு செய்துவிட்டால் உடனடியாக அவர்கள் நாடவேண்டிய நாடு இந்தியா. இந்தியா மட்டுமே!

குற்றச் சம்பவம் வேறுநாடுகளில் நடந்தாலும் மருமகள்கள் அந்த நாடுகளில் இருக்கும் காவல்துறை மற்றும் நீதித்துறைகளை நாடுவது அவ்வளவு நல்லது இல்லை. ஏனென்றால் இந்தியாவில் இருப்பது போல பரிசுத்தமான ஊழலற்ற காவல் மற்றும் நீதித்துறைகள் வேறு நாடுகளில் எங்குமே கிடையாது. அதனால் கணவன் செய்யும் கொடுமைகள் பற்றி மருமகள்கள் தங்கள் கணவனுடன் வசிக்கும் அந்த நாடுகளில் இருக்கும் காவல் துறையில் புகார் செய்வதை விட இந்தியாவிற்கு வந்து புகார் கொடுத்தால்தான் மருமகள் விரும்புவதை அடைய முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த வழிமுறையில் பல மருமகள்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மருமகள்கள் கணவன் மீது புகார் கொடுக்க இந்தியாவிற்குகூட நேரில் வரவேண்டும் என்று அவசியமில்லை. வெளிநாட்டில் தங்கள் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் வெளிநாட்டில் இருக்கும் கணவன் மீது வரதட்சணைப் புகாரை இந்தியாவில் பதிவு செய்யலாம்.

வெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:

National Commission for Women, India
4, Deen Dayal Upadhayaya Marg,
New Delhi - 110 002
Phone: 91-11-23237166
91-11-23236988
Fax: 91-23236154
Complaints Cell:
91-11-23219750
Email: ncw@nic.in

Click Here to File Complaint Against NRI Husband


வாழ்த்துக்கள்!!!



இந்திய மருமகளுக்கு உபயோகமான சில குறிப்புகள்

இன்றைய செய்தித்தாளில் வந்த செய்தி. மருமகள்கள் இதிலிருந்து பல குறிப்புகளை எடுத்து தங்களது வரதட்சணைப் புகாரிலும் பயன்படுத்தலாம். அதனால் உங்களுக்காக இந்த செய்தி. கவனமாகப் படித்து முக்கியமான “பாயிண்ட்டுகளை” குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.


தகப்பன்சாமி பட தயாரிப்பாளர் மீது மனைவி கொலை மிரட்டல் புகார்

ஆகஸ்ட் 06,2011 தினமலர்


திருச்சி : திருச்சி தி.மு.க., பிரமுகரும், "தகப்பன்சாமி' படத்தின் தயாரிப்பாளருமான கோபால், தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக, அவரது மனைவியே, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். திருச்சி மாநகர, தி.மு.க.,வின், 50வது வட்ட செயலராக இருப்பவர் கோபால், 35. நடிகர் பிரசாந்த் நடித்த, "தகப்பன் சாமி' படத்தின் தயாரிப்பாளரான இவர், தற்போது, "உச்சக்கட்டம்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.


படத்தயாரிப்பாளர் கோபால் மீது, அவரது முதல் மனைவி ராதிகா, 30, தன் மகன் செலின்குமாருடன் வந்து, மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:


  • நானும், கோபாலும், 16 ஆண்டுக்கு முன், கடும் போராட்டத்துக்கு பின், இரு வீட்டாரின் சம்மதத்துடன், காதல் திருமணம் செய்து கொண்டோம். 80 சவரன் நகை, வீட்டுக்குத் தேவையான பொருட்களும் கொடுத்து, தடபுடலாக திருமணத்தை, என் தந்தை நடத்தினார்.

  • திருமணமாகி மூன்று மாதம், சந்தோஷமாக குடும்பம் நடத்தியவர், அதன் பிறகு, தினமும் பல்வேறு காரணங்கள் கூறி, சித்ரவதை செய்யத் துவங்கினார்.

  • எனக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், வீட்டுக்கே பல பெண்களை கூட்டிவந்து ஜாலியாக இருப்பார்.

  • தட்டிக்கேட்டால் அடி, உதைதான் கிடைக்கும்.

  • ஒருமுறை என்னை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த போது தப்பிவிட்டேன்.


  • கவிதா என்ற பெண்ணை கற்பழித்த வழக்கில் சிக்கி, பணம் கொடுத்து அவ்வழக்கை சரிசெய்து விட்டார். இதற்கு, அவரது சகோதரி தேன்மொழி, அவரது கணவர், மாமியார் சுரும்பாயி, மாமனார் சேகர், தம்பி வீரா ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.

  • மகன் பிறந்த நேரம் சரியில்லை என கூறி, என் மகனை கூட சரியாக கவனித்துக் கொள்ளாமல் கொடுமைப்படுத்தினார்.

  • என் கணவன் தம்பி வீரா, இரவு நேரங்களில் என் ரூம் கதவை தட்டி இம்சை கொடுப்பார்

  • இதையெல்லாம் சகித்து, 16 ஆண்டாக அவரது வீட்டிலேயே வாழ்ந்தேன். ஆனால், இதுநாள் வரை என் மகனை அவர் பார்க்கவில்லை என்பதால், என் மகனின் எதிர்காலத்துக்காக, எனக்கும், என் மகனுக்கும் நடந்த கொடுமைகளை, தற்போது புகாராக அளித்துள்ளேன்.

  • எனக்கு கொடுமை செய்து, கொலை செய்ய முயற்சித்த என் கணவர் கோபால் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • என் கணவர் இரண்டாவது திருமணம் செய்தது குறித்தும் விசாரித்து நடவடிக்கையும், திருமணத்தின் போது எனக்கு போட்ட நகைகளையும் மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.



எளிமையான புகார் எழுதுவது எப்படி

மருமகள்களுக்கு ஒரு எளிய மாதிரிப் படிவம்.


மருமகள் புகார் மாமனார் கைது

ஜூலை 31,2011 தினமலர்


கோவை : தன்னை தாக்கிய மாமனார் மற்றும் கணவரின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்துள்ளார்.


பீளமேடு, பிளேக் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கல்பனா(31). கணவர் பெயர் செந்தில் குமார். தனது மாமனார் ரங்கநாதன்(71) மற்றும் கணவரின் சகோதரர் சுந்தர்ராஜா ஆகியோர் குடும்ப பிரச்னை காரணமாக தன்னை அவதூறாக பேசி, அடித்ததாக பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் ரங்கநாதனை கைது செய்துள்ளனர்.




"மீடியா" - இந்திய மருமகளின் மற்றொரு ஆயுதம்!

கட்டுக்குள் “அடங்காத” கணவனையும் அவனது குடும்பத்தையும் எப்படி வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்துவது என்று இதுவரை எழுதியுள்ள பதிவுகளிலிருந்து தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்திய அரசாங்கம் பாசமுடன் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச்சட்டங்கள் மருமகள்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒரு ஆயுதம் என்று சொன்னால் இந்திய தகவல் தொடர்பு சாதனங்கள் எனப்படும் “மீடியாக்கள்” மருமகள்களின் மற்றொரு பலமிக்க ஆயுதமாகும்.

இந்திய மருமகள்கள் தங்களது இருகரங்களிலும் இந்த சக்திமிக்க இரண்டு ஆயுதங்களையும் தாங்கி நின்றால் எதிரே இருப்பது எமனாக இருந்தாலும் தலைதெறிக்க ஓடிவிடுவான்.

இந்திய மீடியாக்களுக்கு மருமகள்கள் என்றால் ஒரு தனி பாசம். தினந்தோறும் நீங்கள் செய்தித்தாள்களைப் பார்த்தால் கண்டிப்பாக ஒரு செய்தி மருமகளுக்கான செய்தியாகத்தான் இருக்கும்.

புதுமணப்பெண்ணுக்கு வரதட்சணைக் கொடுமை கணவர் குடும்பத்தோடு கைது, காதலித்து திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் கைது என்று இப்படி ஏதாவது ஒரு வகையில் மருமகள் பற்றிய செய்தியைப் போட்டு தங்களின் விசுவாவத்தைக் காட்டிக்கொள்வார்கள்.

இதுபோன்ற செய்திகள் வெளியிடுவதற்குமுன் அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது அல்லது இதுபோன்ற உறுதிசெய்யப்படாத செய்திகளை வெளியிடுவதால் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா? என்றெல்லாம் மீடியா நண்பர்கள் கவலைப்படுவதில்லை. இதில் மருமகள்களுக்கு ஒரு சாதகமான விஷயம் இருக்கிறது. அதைப்பற்றித்தான் இன்றைய பதிவில் சொல்லப்போகிறேன். கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் வரதட்சணைப் புகார் கொடுத்தவுடன் கணவனும் அவனது குடும்பமும் தலைமறைவாகி நீதிமன்றத்தில் ஜாமின் வாங்கிக்கொண்டு பிறகு ஒன்றுமே நடக்காததுபோல ஊருக்குள் உலவிக்கொண்டிருப்பார்கள். இதுபோன்ற அழுத்தக்காரர்களை சரியான இடத்தில் தட்டினால்தான் வலிக்கும். இதற்கு உதவுவதுதான் மீடியாக்கள்.

நீங்கள் புகார் கொடுக்கச் செல்லும்போதே ஒரு செய்தித்தாள் நிறுவன நிருபரையும் கூடே அழைத்துச்செல்லுங்கள். அல்லது உங்களது புகாரின் நகலை கணவனின் புகைப்படத்தோடு சேர்த்து உங்கள் ஊரில் திரிந்துகொண்டிருக்கும் நிருபருக்குக் கொடுத்துவிடுங்கள் போதும். அவ்வளவுதான். அடுத்தநாள் உங்கள் கணவனின் குடும்ப மானத்தை இலவசமாக நாறடித்துவிடுவார்கள்.

இதில் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் கண்டிப்பாக வராது. ஏனென்றால் இந்திய பத்திரிக்கைக்கு என்று ஒரு பண்பாடு இருக்கிறது. அது என்னவென்றால் பெண்ணைப் பற்றிய அதிலும் குறிப்பாக இளம்பெண்ணைப் பற்றிய செய்தி என்றால் அவர்களாக ஒரு கற்பனைப் பெயரை சூட்டி அந்தப் பெயருக்குப் பக்கத்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று பக்குவமாக உங்கள் நற்பெயரை காப்பாற்றிவிடுவார்கள். கணவன் மற்றும் அவனைச் சார்ந்தவர்களின் பெயர்கள் அப்படியே அப்பட்டமாக வெளிவரும்.

இதில் குறிப்பாக நீங்கள் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் குற்றம் செய்தது யார், செய்தி உண்மையானதா அல்லது பொய்யாக சித்தரிக்கப்பட்டதா என்பதைவிட ஆண், பெண் என்ற பாலின பேதத்தின் அடிப்படையில்தான் இந்த கற்பனைப் பெயர் சூட்டும் வழக்கம் இந்திய செய்திப் பத்திரிக்கை தர்மத்தில் இருக்கிறது. அதனால் கண்டிப்பாக உங்கள் பெயர் செய்தித்தாளில் வராது.

அதனால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நீங்கள் உங்கள் கணவனுக்கெதிராக வரதட்சணைப் புகார்கொடுத்த கையோடு அருகிலுள்ள தொலைக்காட்சி நிறுவனம், செய்தித்தாள் போன்றவற்றிற்கும் இந்த வழக்கைப் பற்றிய செய்தியைக் கொடுத்துவிட்டால் அவர்கள் சந்தோஷமாக உங்களது நற்பணியில் உதவிசெய்து கணவன் குடும்பத்தை சப்தமில்லாமல் சின்னாபின்னம் செய்துவிடுவார்கள்.

எது எப்படியோ நமது குறிக்கோள் நிறைவேற எந்த வழியையும் பயன்படுத்தத் தயாராக இருக்கவேண்டும். இந்திய மருமகள்களுக்காக அரசாங்கம் சட்டங்களைக் கொடுத்திருக்கிறது. மீடியாக்கள் எதையும் தரத்தயாராக இருக்கின்றன. தயங்காமல் இந்த இரண்டையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மீடியாவைப் பயன்படுத்தினால் எத்தகைய பலன் மருமகள்களுக்கு கிடைக்கும் என்று கீழுள்ள செய்தியில் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

மருமகளின் எண்ணப்படி நடக்காத கணவனின் குடும்ப மானத்தை கப்பலேற்றினால் தவறே இல்லை. பல கணவன்களுக்கு மானமே இல்லை என்பது வேறு விஷயம். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாம் பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ளதுபோல பலனை எதிர்பார்க்காமல் கடமையை மட்டும் செய்வோம்.

வாழ்த்துக்கள்!
IBN Live News


HYDERABAD: Former member of Rajya Sabha and TDP vice president Akarapu Sudarshan died of heart attack in a private hospital here on Wednesday. He was 57. He collapsed while watching his daughter-in-law making allegations of dowry harassment against her husband and family members in a private television channel. He died while undergoing treatment at a corporate hospital.


The former parliamentarian was resting in his house when one of his friends called him and told him about his daughter-in-law making allegations of dowry harassment on a TV channel. Sudarshan’s 24-year daughter-in-law Sudha, had earlier registered a case of dowry harassment against her husband, Ramesh (34).


According to Saroornagar women police station inspector A Laxmi, Ramesh fell in love with Sudha and they got married in 2009. Ramesh is the only son of Sudarshan and though unwillingly, the former MP and his family attended the marriage which was performed at White House function hall at LB Nagar. Their marriage lasted happily for two months and they stayed at Alkapuri.


But Ramesh, a realtor, incurred losses in his business soon after. Sudha alleged that as Ramesh started demanding a dowry of `20 lakh and threatened that she would not be accepted into their family if her family did not pay.� Sudha’s family members reportedly tried to meet Ramesh’s parents and sort out the differences but the former MP allegedly did not heed. She also alleged that she was once thrown out of the house.� The duo separated last February when Sudha went to her parents house at LB Nagar. A few days later, Ramesh also shifted back to his parents house after taking away their belongings. Sudha then lodged a complaint with LB Nagar police for taking away the articles.


In June this year, she registered a case of dowry harassment against Ramesh, his parents and seven other family members.� “A case was registered and Ramesh was arrested. His family members were not arrested as we have to investigate their role and whether they were involved in the harassment,” Laxmi said.


On Wednesday, Sudha appeared in a local TV channel alleging that Ramesh’s parents also harassed her and demanded action against them.


Sudharshan was watching the show when he collapsed and later died while undergoing treatment at a corporate hospital at LB Nagar.


Hailing from Nalgonda district, Sudarshan was elected to the state Assembly for two terms in 1989 and 1994 from Suryapet constituency. He also served as chairman of the APSRTC between 1997-1999. Sudarsan is survived by his wife, a son and three daughters.� Expressing grief over the demise of Sudarsan, TDP president N Chandrababu said, “Sudarshan’s death is an irreparable loss to the TDP and for Nalgonda.” Several TDP leaders mourned the death of the former MP at a condolence meeting held at NTR Bhavan here on Wednesday evening.




NRI கணவனுக்கு “கட்டம் கட்டுவது” எப்படி?

இந்தியாவில் பெண்ணை பெற்றவர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய நினைத்தால் வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்களை நம்பி தங்களது பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கூடாது. இதனை ஒரு வாழ்க்கை நெறியாகப் பின்பற்றவேண்டும்.

இந்த விதிமுறையை மீறி NRI ஆணுக்கு திருமணம் செய்துவைத்தால் பிறகு வாழ்க்கை முழுதும் அழுதுகொண்டுதான் இருக்கவேண்டும் என்பதை “47 நாட்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே காட்டிவிட்டார்கள் நமது திரைப்பட மேதைகள்.

இந்த விஷயம் தெரியாமல் இன்றும் பல பெற்றோர்கள் தங்களது மகளை NRI -க்கு திருமணம் செய்துவைத்தால் வாழ்வு நன்றாக இருக்கும் என்று நினைத்து தங்களுக்குத் தெரியாமலேயே தங்களது மகளை பாழுங்கிணற்றுக்குள் தள்ளி விடுகிறார்கள்.

பிறகு திருமணமான சில மாதங்களிலேயே அந்த புதுமணப்பெண் தான் கண்ட கனவெல்லாம் நிறைவேறாமல் புதுக்கணவன் தன் சொற்படி நடக்காமல் இருக்கிறானே என்று ஏங்கி பெருத்த ஏமாற்றம் அடையும்போதுதான் NRI கணவன் தனக்கு வரதட்சணைக் கொடுமை மற்றும் ||Sex Torture|| செய்வதை உணர ஆரம்பிக்கிறார்.

கடைசியில் இந்த புது மருமகள் தாங்கள் NRI கணவனுடன் குடும்பம் நடத்தும் அந்த நாடுகளில் இருக்கும் காவல்துறையை நம்பாமல் இந்தியாவிற்கு ஓடிவந்து இந்தியக் காவல்துறையிடம்தான் கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுப்பேன் என்று கண்ணை கசக்குவதைக்கண்டால் காண்பவர் மனம் என்ன பாடுபடும்? இதுபோன்ற துயரமான சூழ்நிலையில் பெண்ணைப் பெற்றவர்களின் மனநிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

வழக்கறிஞர் மற்றும் காவல்துறை உதவியோடு NRI கணவன் மீது வரதட்சணைக் கொடுமை புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்தாலும் வெளிநாடுகளில் ஒளிந்து வாழும் இந்த அயோக்கியர்களை அவ்வளவு எளிதாக இந்தியாவிற்கு பிடித்துக்கொண்டு வரமுடிவதில்லை.

NRI கணவனை இதுபோன்று இந்தியாவிற்கு இழுத்து வரமுடியாமல் துன்பப்படும் மருமகள்களுக்காகவே இந்திய அரசாங்கம் Arrest Warrant, Look Out Circular (LOC), Red Corner Notice (RCN), Passport Impounding போன்ற பல உயர்தரமான வழிமுறைகளைக் கொடுத்து உதவி செய்யக் காத்திருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல மருமகள்களுக்கு இதுபோன்ற வழிமுறைகளைப் பற்றி சரியான விழிப்புணர்ச்சி இல்லை.

அதனால் திருமணத்தின்போதே கணவனைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் பின்வரும் LOC விண்ணப்பத்தில் பதிவு செய்து வைத்துக்கொண்டால் தக்க சமயத்தில் NRI கணவனை “கட்டம் கட்டி” (Sketch) கழுத்தைப் பிடித்து இழுத்துவர உதவியாக இருக்கும்.

பையனின் ஜாதத்தை வாங்குவது போல அவனைப் பற்றிய இந்த "Special" ஜாதகத்தையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டியது பெண்ணைப் பெற்றவர்களின் பொறுப்பு.

திருமணப் பத்திரிக்கை அச்சடிக்கும்போதே கீழே கொடுக்கப்பட்டுள்ள LOC படிவத்தையும் ஒரு நகல் எடுத்து கணவனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து பத்திரமாக வங்கி லாக்கரில் வைத்துக்கொண்டால் பிறகு தக்க சமயத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

(படத்தின் மீது Click செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்)


நீங்கள் உங்கள் கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுக்கும்போது இந்த படிவத்தையும் சேர்த்து காவல்நிலையத்தில் கொடுத்து “கவனித்துவிட்டால்” போதும் உடனடியாக உங்கள் கணவனை தேடப்படும் கொடிய குற்றவாளி என அறிவித்து இந்தியாவில் இருக்கும் அனைத்து விமான நிலையங்களிலும், கப்பல் துறைமுகங்களிலும் எச்சரிக்கை செய்து விடுவார்கள். உங்கள் NRI கணவன் எப்போது இந்தியாவிற்குள் காலடி எடுத்துவைத்தாலும் பொறியில் சிக்கும் எலியைப் போல பிடித்துவிடலாம்.

இந்த LOC படிவம் வெளிநாட்டில் இருக்கும் கணவனை பிடிப்பதற்கு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் கொடுமைக்கார கணவன் இந்திய எல்லையை விட்டு தப்பிச் செல்லாமல் விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிக்கவும் பயன்படும். இதைப்பற்றி முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன் படித்து கவனமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள் (மனைவிக்கு பயந்து விமானத்தில் தப்ப முயன்ற கணவன் மும்பை ஏர்போர்ட்டில் கைது)

அடுத்த பதிவில் NRI கணவனுக்கு எதிராக உங்கள் ஊரிலேயே இருக்கும் மகளிர் காவல்நிலையத்தைப் பயன்படுத்தி International Criminal என்று பட்டம் சூட்டி சர்வதேச அளவில் “கட்டம் கட்டுவது” (Red Corner Notice) எப்படி என்று எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள்!!



ஒளிந்து வாழும் NRI கணவன்கள்






இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு பிறகு மனைவியை வரதட்சணை கொடுமை செய்து இந்தியாவிற்கு விரட்டிவிட்டு பல வெளிநாடு வாழ் இந்தியக் கணவன்கள் வெளிநாடுகளில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்.

அவர்களைப் பிடித்துக்கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு இந்திய தேசிய மருமகள் நல வாரியமும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், சிபிஐ மற்றும் இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலிஸ் அமைப்பும் மருமகள்களுக்கு பல வழிகளில் நன்றாகவே உதவி செய்து வருகின்றன என்று பல மருமகள்களுக்கும் தெரிந்த விஷயம்.

இந்த விஷயம் பற்றி கேள்விப்படாத மருமகள்களுக்காகவே பின்வரும் செய்தி வந்திருக்கிறது. படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படி என்ற முந்தைய பதிவினையும் படித்துக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!

48 runaway NRI grooms lose passport in Punjab
July 7,2011 NDTV

Jalandhar:
NRI grooms who believe "holiday marriages" are an easy way to make some money can think again. In just two months, the regional passport office (RPO) here has confiscated the passports of 48 men who married, allegedly got dowry, dumped their wives and attempted to flee the country.

In Punjab's Doaba area, an NRI groom is a prize catch. But many women have had a bitter experience. There have been numerous instances of men settled abroad coming back to marry and abandoning their wives after taking away their money and valuables.

To stem this exploitation, the RPO, which functions under the Ministry of External Affairs, initiated a women's grievance cell in February.

"We have established a 'women's grievance cell' to hear complaints from women who have been duped by their NRI husbands. So far, we have confiscated 48 passports of errant husbands by invoking a legal provision of the Passport Act, 1967," Parneet Singh, the passport officer of the Jalandhar RPO, told IANS.

The complainant has to submit the marriage certificate, copy of the First Information Report (FIR) filed with the police and documents detailing husband's name, date of birth and address.

"Over 100 complaints are still under our scrutiny and we would soon take appropriate action," the official said.

Once the complaint is received, he said, a show cause notice is issued. If there is no response to the notice, the passport is confiscated when the NRI shows it at the airport.

"Then he cannot leave the country until the matter is resolved, either legally or through mutual consent," he added.

"However, if he manages to flee, then we inform the Indian embassy in that country and he would be immediately deported to India, depending on the merits of the case," Parneet Singh said.

According to the passport office officials, Section 10 (3) of the Passport Act says the issuing authority can impound the passport in the public interest after giving a show cause notice.

The Jalandhar RPO caters to Jalandhar, Hoshiarpur, Nawanshahr and Kapurthala districts.

According to an RPO official, around 15,000 girls from Doaba region, consisting of Jalandhar, Hoshiarpur and Kapurthala districts, were duped by their NRI husbands during the last few years.

Jalandhar has the maximum number of such cases.

The officials have also directed district marriage officers to provide details about marriages involving NRI grooms so that their wives' names can be added to the passports.

The initiative has encouraged women to come out and voice their grievances.

"Manjit Singh had married me in October 2009 and left for Italy after two months. He had promised to call me to Italy in another three months. But since then he has snapped all relations with us and does not answer our calls," a 28-year-old from Jalandhar told IANS.

"My parents had given expensive gifts and huge dowry to him. I have filed a complaint against him at the RPO office. I hope that my husband will be deported to India and strict punishment will be given to him," said the woman, who did not want her name to be made public.

Other women have also been encouraged to come forward.

Kirpal Kaur, another victim from Jalandhar, told IANS: "A Canada-based man deceived me last year. He married me and took me to various places in India and disappeared with my cash and jewellery. Now I am also planning to approach the RPO against him."

Read more at: http://www.ndtv.com/article/india/48-runaway-nri-grooms-lose-passport-in-punjab-117366?cp&cp




பெங்களூரில் நடந்த அட்டூழியம்

மருமகள்களே,

சமீப காலமாக இந்திய மருமகள்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு பாதுகாப்பு தரும் சாதகமான சட்டங்களுக்கு எதிராகவும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக இந்திய அரசாங்கம் இதுவரை இந்திய மருமகளின் ஆபத்துக்கால அன்புத் தோழியாக இருந்துவந்த IPC498a என்ற வரதட்சணை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முயற்சி செய்துவருகிறது. இது இந்திய மருமகள்களுக்கு மிகவும் ஒரு ஆபத்தான சூழ்நிலையாகும்.

இதுபோன்ற தருணத்தில் பெங்களூரில் வாழும் மாமியார்கள் மற்றும் கணவர்கள் சாலையில் ஊர்வலமாகச் சென்று மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு அட்டூழியங்கள் செய்திருக்கிறார்கள். அந்த வீடியோவை உங்களுக்காத் தந்திருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கவனமாகப் பாருங்கள்.

வீடியோ - 1



வீடியோ - 2



வீடியோ - 3



இந்த சாதகமற்ற சூழ்நிலையைக் கண்டு மருமகள்கள் கொஞ்சமும் கலங்கவேண்டாம். கணவன்களும், மாமியார்களும் போடும் கூப்பாடுகளைக் கண்ட இந்திய அரசாங்கம் அவர்களைத் திருப்திபடுத்துவதற்காக IPC498a சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதாக அறிவித்திருந்தாலும் அது என்றுமே மருமகள்களின் நட்பினை இழக்கத் தயாராக இல்லை.

அதனால் IPC498a சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதாக அறிவித்த அதே நேரத்தில் குடும்ப வன்முறை சட்டத்தை (Domestic Violence Act) நன்றாக முடுக்கிவிட ஆரம்பித்திருக்கிறது. இது IPC498A சட்டத்தைவிட மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகும். அதனால் மருமகள்கள் இதுபோன்ற சூழ்நிலையைக் கண்டு கலங்கிவிடாமல் தயங்காமல் குடும்ப வன்முறை சட்டத்தை பயன்படுத்த ஆரம்பித்து விடலாம். இந்த சட்டத்தில் உள்ள நுணுக்கங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

இந்த சட்டத்தை பயன்படுத்துவதில் ஏதாவது தயக்கம் இருந்தால் வரதட்சணை சட்டங்கள் மூலம் மனைவி கணவனை மிரட்டினால் தவறில்லை என்ற பதிவினைப் படியுங்கள். மனதில் தெளிவு பிறக்கும்.

வாழ்த்துக்கள்!


விவாகரத்து கேட்கும் கணவனுக்கு நெத்தியடி கொடுப்பது எப்படி?

இந்தியாவில் மருமகள்கள் பலவித வண்ணக் கனவுகளோடு திருமண வாழ்வில் அடி எடுத்து வைத்து மாமியார் வீட்டிற்குச் செல்கிறார்கள். ஆனால் அங்கே சென்று சிலநாள் வாழ்ந்த பிறகுதான் திருமணம் என்ற பெயரில் கணவனும் அவனது குடும்பத்தாரும் செய்யும் கொடுமைகள் ஒவ்வொன்றாக தெரிய வருகிறது.

இந்தக் கொடுமைகளில் முக்கியாமனது கூட்டுக் குடும்பம் என்ற பெயரில் நாத்தனார்கள் அடிக்கும் கூத்து. வயதாகிவிட்டது என்று காரணம் காட்டி மாமனாரும் மாமியாரும் மருமகளிடம் பணிவிடை என்ற பெயரில் எதிர்பார்க்கும் இலவச கொத்தடிமைத்தனம். இதுபோன்ற பிரச்சனைகளை யாரிடம் சொல்லி அழுவது என்று பல மருமகள்கள் மனதுக்குள்ளேயே அழுது கொண்டிருக்கிறார்கள்.

இந்தியக் கணவன் மற்றும் அவனது குடும்பத்தினர் அனைவருக்கும் மருமகள் என்றால் ஏதோ இலவசமாகக் கிடைத்த தொலைக்காட்சிப் பெட்டி என்ற நினைப்பு. ஒவ்வொருவரும் ஒரு “சானலைப்” (Channel) பார்க்க விரும்புவதுபோல கணவன் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மருமகளை கொடுமை செய்து இன்பம் காணுகிறார்கள். என்ன ஒரு கொடுமை!

இந்தக் கொடுமை தாங்காமல் தனியாக வீடு பார்த்து குடும்பம் நடத்தலாம் என்றால் கணவன் ஒத்துழைப்பதில்லை. மருமகள் சற்றுக் குரலை உயர்த்தினால் உடனே விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டுவார்கள் இந்த மடையர்கள்.

இதுபோன்ற சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பல மருமகள்கள் இந்தப் பிரச்சனையை எப்படி பக்குவமாகக் கையாண்டு விவாகரத்து கோரும் கணவனுக்கு நெத்தியடி கொடுப்பது என்று இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இந்து திருமணச் சட்டப்படி விவாகரத்து கோருவதற்கு சில அடிப்படைக் காரணங்கள் தேவைப்படும். உதாரணத்திற்கு கணவனோ அல்லது மனைவியோ கொடுமை செய்தால் அதன் அடிப்படையில் விவாகரத்து கோரலாம்.

இந்திய மனைவி ஒருபோதும் தனது கணவனுக்குக் கொடுமை இழைப்பதில்லை என்று உலகத்திற்கே தெரியும். அதனால் கணவன் இந்த அடிப்படையில் விவாகரத்து கோரினால் விவாகரத்து கிடைக்கவே கிடைக்காது!

ஆனால் மனைவியின் சம்மதத்துடன் விவாகரத்திற்கு விண்ணப்பித்தால் கணவனுக்கு விவாகரத்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த சட்டப் பிரிவிற்கு இந்து திருமணச் சட்டம் பிரிவு 13 (B) [Hindu Marriage Act, 1955 Section 13B] என்று பெயர்.

மருமகள்கள் இந்த சட்டப் பிரிவைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு இதனையே தூண்டிலாகப் பயன்படுத்தி விவாகரத்து கோரும் கணவனுக்குப் பாடம் கற்பிக்கலாம்.

முதலில் கணவனின் விவாகரத்திற்குச் சம்மதம் (Mutual Consent) தெரிவித்து கணவனை நீதிமன்றத்தில் விவாகரத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கச் செய்யவேண்டும். நீதிமன்றம் தனது இறுதி முடிவினைத் தெரிவிக்க 6 மாதங்கள் வரை காலக் கெடு கொடுக்கும்.

இந்த நேரத்தில் கணவன், ஆகா மனைவி விவாகரத்திற்குச் சம்மதித்துவிட்டாள்! தனக்கு விரைவாக விவாகரத்து கிடைத்துவிடும் என்று “பலவித கனவுகளோடு” காத்துக்கொண்டிருப்பான். ஆனால் இந்த 6 மாத காலம் முடிவதற்குள் (கடைசி நாளன்று) திடீரென்று தனக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லை என்று கூறி மருமகள் நீதிமன்றத்தில் மற்றொரு விண்ணப்பத்தைக் கொடுத்தால் போதும் அத்தோடு கணவனின் விவாகரத்து என்ற கற்பனைக் கோட்டை சுக்கு நூறு அல்ல ஆயிரமாக தகர்ந்துவிடும்!

பிறகு கணவன் இந்த விவாகரத்து விண்ணப்பத்தின் மீது மேல்முறையீடு செய்து மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று பல ஆண்டுகளை வீணடித்துப் போராடுவான்.

ஆனால் மருமகள் பிடிவாதத்துடன் இருந்து குழந்தையின் நலனுக்காக நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று ஒரே போடாக போட்டு விட்டால் போதும். அவ்வளவுதான் உச்ச நீதிமன்றமே அசந்துபோய்விடும். பிறகென்ன கணவனுக்கு விவாகரத்து இந்த ஜென்மத்தில் கிடைக்காது. கணவன் தனது விவாகரத்து வழக்கை ஆரம்பித்து பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மருமகளிடம் நெத்தியடி வாங்கிக்கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று மூக்கு உடைபட்டு திரும்பி வரவேண்டியதுதான்.

இதுதான் விவாகரத்து என்ற வலையை விரிக்கும் முட்டாள் கணவனுக்கு சம்மதம் (Mutual Consent) என்ற தூண்டிலைப்போட்டு மருமகள் கொடுக்கும் நெத்தியடி ரகசியம்!

இதுபோன்ற ஒரு தொழில்நுட்பத்தை ஒரு மருமகள் வெற்றிகரமாக செயல்படுத்தி 11 ஆண்டுகளாகப் போராடி உச்ச நீதிமன்றம் வரை சென்ற கணவனுக்கு நெத்தியடி கொடுத்திருக்கிறார். அதுதொடர்பான செய்தியையும் இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவின் ஒரு பகுதியையும் கீழே தந்திருக்கிறேன். படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.



புதுடில்லி:குழந்தையின் எதிர்காலத்தை முன்னிட்டு, விவாகரத்து மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது.

டில்லியை சேர்ந்த ஹித்தேஷ்வருக்கும், தீபாவுக்கும் கடந்த 94ம் ஆண்டு திருமணம் நடந்தது. 95ல் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதியினர் 2000ம் ஆண்டிலிருந்து பிரிந்து வாழ்கின்றனர். 2001ல் விவாகரத்து கேட்டு இவர்கள் விண்ணப்பித்தனர். "இந்த தம்பதியர் பிரிந்து வாழலாம்' என, கோர்ட் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், விவாகரத்தை அங்கீகரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஹித்தேஷ்வர் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் டி.கே.ஜெயின் மற்றும் எச்.எல்.தத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. தீபாவிடம் நீதிபதிகள் விசாரித்ததில், கணவனுடனான கசப்புணர்வு நீடித்தாலும் குழந்தைக்காக சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தார்.இதை கருத்தில் கொண்டு, மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பளிப்பதாக கூறி ஹித்தேஷ்வரின் மனுவை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.­


======

IN THE SUPREME COURT OF INDIA
CIVIL APPEALATE JURISDICTION
CIVIL APPEAL NO. 6288 OF 2008

Hitesh Bhatnagar ………….. Appellant
versus
Deepa Bhatnagar …………..Respondent

2) The appellant-husband and the respondent-wife got married according to the Hindu Marriage Act, 1955 [hereinafter referred to as ‘the Act’] in 1994, and are blessed with a daughter a year thereafter. Some time in the year 2000, due to differences in their temperaments, they beganto live separately from each other and have been living thus ever since. Subsequently, in 2001, the parties filed a petition under Section 13B of the Act before the District Court, Gurgaon, for dissolution of the marriage by grant of a decree of divorce by mutual consent. However, before the stage of second motion and passing of the decree of divorce, the respondent withdrew her consent, and in view of this, the petition came to be dismissed by the Ld. Addl. District Judge, Gurgaon, though the appellant insisted for passing of the decree. The appellant, being aggrieved, has filed appeal No. F.A.O. No. 193 of 2003, before the High Court of Punjab and Haryana. The Learned Judge, by his well considered order, dismissed the appeal vide order dt. 08.11.2006. Being aggrieved by the same, the appellant is before us in this appeal.


26) In the present case, time and again, the respondent has stated that she wants this marriage to continue, especially in order to secure the future of their minor daughter, though her husband wants it to end. She has stated that from the beginning, she never wanted the marriage to be dissolved. Even now, she states that she is willing to live with her husband putting away all the bitterness that has existed between the parties. In light of these facts and circumstances, it would be travesty of justice to dissolve this marriage as having broken down. Though there is bitterness amongst the parties and they have not even lived as husband and wife for the past about 11 years, we hope that they will give this union another chance, if not for themselves, for the future of their daughter.

We conclude by quoting the great poet George Eliot "What greater thing is there for two human souls than to feel that they are joined for life - to strengthen each other in all labour, to rest on each other in all sorrow, to minister to each other in all pain, to be one with each other in silent, unspeakable memories at the moment of the last parting."

27) Before parting with the case, we place on record our appreciation for the efforts made by Shri. Harshvir Pratap Sharma, learned counsel, to bring about an amicable settlement between the parties.

28) In the result, the appeal fails. Accordingly, it is dismissed. No order as to costs.

……………………………J.
[ D. K. JAIN]
……………………………J.
[ H. L. DATTU]
New Delhi,
April 18, 2011.

பின்குறிப்பு: மேலுள்ள விவாகரத்து வழக்கில் கணவன் விவாகரத்துக் கேட்டாலும்
மனைவி தன் குழந்தையின் நலனுக்காக அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக பிடிவாதம் பிடித்திருக்கிறார். அந்தக் குழந்தை 1995ல் பிறந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது அதற்கு வயது 16. இப்போது அது குழந்தை கிடையாது சுயமாக சிந்திக்கத் தெரிந்த இளம் பெண். ஆனால் மேலுள்ள வழக்கில் கணவன் தனது திருமண வாழ்வில் 11 ஆண்டுகளை இழந்துள்ளார். ஆனாலும், உச்ச நீதிமன்றம் மருமகளின் குரலுக்கு மட்டும்தான் செவி சாய்த்திருக்கிறது! இதனை இந்திய மருமகள்கள் நன்றாக கவனித்து குறிப்பெடுத்துக் கொள்ளவும்.

இந்த பதிவில் விவாகரத்து வழக்குத் தொடரும் கணவனுக்கு எப்படி நெத்தியடி கொடுப்பது என்று தெரிந்துகொண்டீர்கள். அடுத்த பதிவில் மருமகள் விரும்பும் விவாகரத்தைக் கொடுக்காத கணவனுக்கு எப்படி சட்டத்தின் துணையோடு நெத்தியடி கொடுத்து வழிக்குக் கொண்டுவந்து விவாகரத்துப் பெறுவது என்று தெளிவாக எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள்!


கணவனுக்கெதிராக செல்போனில் ஆதாரம் திரட்டுவது எப்படி?

மருமகள்களே,

உங்களுக்கு உபயோகமான ஒரு செய்தி. கணனுக்கு எதிராக வரதட்சணைப் புகார் கொடுக்கும்போது புகாருடன் நீங்கள் இணைக்கும் ஆதாரங்களுடன் (வரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்) கணவன் மற்றும் அவனது குடும்பத்தார் தொலைபேசியில் பேசிய பேச்சுக்களை பதிவு செய்து அதையும் உங்களது புகாருடன் இணைத்துவிடுங்கள். உங்களின் புகாரும் வழக்கும் மிகவும் உறுதியானதாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பின்வரும் செய்தியைப் படித்தால் உங்களுக்குப்புரியும்.

இதுபற்றிய தொழில் நுட்பத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள்!


சாட்டிங் மூலம் பல பெண்களை ஏமாற்றி கணவன் காதல் லீலை
தினகரன் 6/5/2011

சென்னை : சாட்டிங் மூலம் பல பெண்களை ஏமாற்றிவரும் தனது கணவரை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்வடிவு (27). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார்.

பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சொந்த ஊர் கோவை மாவட்டம். பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். என்னுடன் வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் பி.காம் படித்துள்ளார். இருவரும் காதலித்து 2009 பிப்ரவரி 1ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகுதான் கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் நான் கருவுற்றேன். கணவர் சாட்டிங் மூலம் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடன் சுற்றி திரிய ஆரம்பித்தார். அந்த பெண்களிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய்களை அவிழ்த்து விட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றார். இதை அறிந்த அந்த பெண் தொடர்பை துண்டித்து விட்டார்.

இந்நிலையில், மற்றொரு பெண்ணுடனும் தொடர்பு ஏற்படுத்தி, திருமணம் செய்வதற்காக, எனது பிரசவ செலவிற்காக வைத்திருந்த 1 லட்சம் மற்றும் 15 சவரன் நகைகளை செலவு செய்தார். அதன்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. போலீசில் புகார் அளித்தோம். சந்தோஷ்குமாரை கண்டுபிடித்து கொடுத்தனர்.

என்னுடன் சேர்ந்து வாழ்வதாக உறுதி அளித்தார். ஆனால், பெற்றோர் வீட்டிற்கு என்னை விரட்டினார். இதற்கு அவரது பெற்றோர் உடந்தையாக இருக்கின்றனர். தொடர்ந்து சாட்டிங் மூலம் எனது கணவர் பல பெண்களை ஏமாற்றி வருகிறார். அவரையும், அவரது பெற்றோரையும் கைது செய்து எனது பணம், நகையை மீட்டுத்தர வேண்டும். எனது, உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன் என்றார்.

முதல் இரவில் கதறிய பெண்

செந்தில்வடிவு & சந்தோஷ்குமார் தம்பதிகள் பதிவு திருமணம் செய்து கொண்ட அன்று இரவு ஒரு இளம்பெண் தன்னை ஏமாற்றி விட்டாயே என்று கூறி சந்தோஷ்குமாரிடம் போனில் கதறியதாக செந்தில்வடிவு தெரிவித்தார்.

செல்போனில் ஆதாரம்

தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ரோஷன் என்ற மகன் உள்ளான். சந்தோஷ்குமார் அடிக்கடி செல்போனில் பேசியது செந்தில்வடிவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, யாருடன் பேசுகிறார் என்பதை அறிந்து அந்த எண் மூலம் எதிர்முனையில் பேசிய பெண்ணிடம் நிலைமையை சொன்னார். அவர் சந்தோஷ்குமாரின் உண்மை குணத்தை அறிந்து செல்போன் பேச்சு முழுவதையும் பதிவு செய்து செந்தில்வடிவிடம் கொடுத்தார். தற்போது செந்தில் வடிவு இதை ஆதாரமாக கமிஷனரிடம் கொடுத்துள்ளார்.


வெளிநாட்டில் இருக்கும் கணவனை விரட்டிப் பிடிக்க எளிய தொழில்நுட்பம்

பல மருமகள்கள் தங்களது கணவனை நல்வழிப்படுத்துவதற்காக கொஞ்சம் மன தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வரதட்சணை வழக்குகளை பதிவு செய்கிறார்கள்.

ஆனாலும் சில வழக்குகளில் கணவன் வெளிநாட்டில் பதுங்கிவிடுவதால் வழக்கு அவ்வளவு சுறுசுறுப்பாக நடப்பதில்லை. இந்த நடைமுறை சிக்கல்பற்றி பல மருமகள்களுக்கும் நன்கு தெரிந்திருக்கும். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுவாழ் மருமகள்கள் உருவாக்கும் வரதட்சணை வழக்குகளில் இதுபோன்ற தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இந்த தொழில்நுட்ப சிக்கல்களை தீர்ப்பதற்காக பொதுவாக வழக்கறிஞர்கள் ஒரு அருமையான யோசனையை மருமகள்களுக்கு பல காலமாக கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதை பல மருமகள்களும் பின்பற்றி வெற்றி கண்டிருக்கிறார்கள்.

வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் கணவனை தங்களின் வழிக்குக் கொண்டுவருவதற்காக இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் வரதட்சணை வழக்கில் சேர்த்துவிட்டால் அவர்கள் கைது, சிறை, நீதிமன்றம் என்று அலையும்போது அந்தக் காட்சியைக் கண்டு வெளிநாட்டில் இருக்கும் கணவன் இந்தியாவிற்கு ஓடிவந்து எலி பொறியில் சிக்குவதுபோல தானாக மாட்டிக்கொண்டு பிறகு மருமகளின் வழிக்கு வந்துவிடுவான். இதுதான் பல ஆண்டுகளாக வெளிநாட்டு வாழ் கணவன்களை நல்வழிப்படுத்த வரதட்சணை வழக்குகளில் வழக்கறிஞர்களின் உதவியோடு மருமகள்கள் கையாண்டுவரும் தொழில்நுட்பம்.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. சில கணவன்கள் இந்த “எலிப்பொறி” நுணுக்கத்திலும் சிக்காமல் வெளிநாடுகளில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி வழிக்குக்கொண்டுவருவது என்று சமீப காலமாக பல மருமகள்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குழப்பத்தை போக்கும்விதமாக சமீபத்தில் ஒரு மருமகள் சென்னை உயர்நீதிமன்ற உதவியுடன் வரதட்சணை வழக்கில் ஒரு புதுமை படைத்திருக்கிறார். அந்த செய்தியை கீழே கொடுத்திருக்கிறேன். அந்த செய்தியைப் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.


சென்னை : வரதட்சணைக் கொடுமை புகார் தொடர்பான வழக்கு விசாரணையில், தமிழகத்தில் முதன்முறையாக, சென்னையிலுள்ள கோர்ட்டில் வெளிநாட்டில் இருக்கும் சாட்சியை, வெப் - கேமரா மூலம் இன்டர்நெட்டில் ஆஜர்படுத்தி, விசாரணை நடத்தினர்.

சென்னை, அண்ணாநகரை சேர்ந்த ஜெனிதா என்பவர், தன் கணவர் சாம்சுதீஷ் மற்றும் குடும்பத்தார் மீது, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசாரிடம் 2008ம் ஆண்டில், வரதட்சணை புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு, சென்னை எழும்பூர் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. வழக்கை, வரும் ஜூன் 4ம் தேதிக்குள் நடத்தி முடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தலைமை மாஜிஸ்திரேட் கிள்ளிவளவன் வழக்கை விரைந்து விசாரிக்கிறார். நேற்று, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரிடம் சாட்சி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அரசு வக்கீல் கந்தசாமி ஆஜரானார். புகார்தாரர் ஜெனிதா, அவரது தாயார் ஹெலன் நட்டர்ஜி, ஜெனிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ராஜசேகர் மற்றும் தனசேகரன் ஆகியோரிடம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. ஜெனிதாவின் தங்கை விவேதா ஆஜராகவில்லை. அவர் ஸ்வீடனில் இருப்பதாலும், தற்போது முக்கிய தேர்வு நடப்பதாலும் வரமுடியாத சூழல் உள்ளதாக புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கும் பொருட்டு, ஸ்வீடனில் இருக்கும் சாட்சியிடம், வெப் - கேமரா மூலம் விசாரணை நடத்த தலைமை மாஜிஸ்திரேட் கிள்ளிவளவன் உத்தரவிட்டார். கோர்ட் அறையில் இன்டர்நெட் இணைப்புடன் கூடிய கம்ப்யூட்டர் வைக்கப்பட்டு, ஸ்வீடனில் இருக்கும் விவேதா கம்ப்யூட்டரில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம், காலையில் 12.15 முதல் மதியம் 1.40 மணி வரையிலும், பிற்பகலில் ஒரு மணி நேரமும் சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அவரது வாக்குமூலம் ஆடியோவிலும், கோர்ட் டைப்பிஸ்ட் மூலமும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை மே 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை, சிறையில் இருக்கும் குற்றவாளிகளிடம் தான் வீடியோ கான்பரன்சில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்று தான், முதன் முதலாக வெப் - கேமரா மூலம் வெளிநாட்டில் இருக்கும் சாட்சியிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

எனவே, இனி வெளிநாட்டில் சாட்சி இருக்கிறார், புகார்தாரர் இருக்கிறார் அல்லது குற்றஞ்சாட்டப்படுபவர் இருக்கிறார் என காரணங்களை சொல்லி, வழக்கை இழுத்தடிக்கும் முயற்சிகளுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உங்களது வரதட்சணை வழக்கிலும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் கணவனை விரைவாக நல்வழிப்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.

வாழ்த்துக்கள்!


இந்திய மருமகளை ஏமாற்ற முயற்சி செய்யாதீர்கள்!

இந்திய மருமகள்களுக்காக பெண்கள் அமைப்புகளும், தலைவிகளும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குச் சமமாகப் போராடி அரசாங்கத்திடமிருந்து IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்ற பல அரிய சட்டங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் பல மருமகள்களுக்கு இவற்றை எப்படி பக்குவமாகப் பயன்படுத்த வேண்டும் என்றுகூட தெரியவில்லை. இதுபோன்ற ஒரு பரிதாபமான சூழ்நிலையில் தட்டுத்தடுமாறி சில மருமகள்கள் இந்த சட்டங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தால் அந்த மருமகள்களை மிரட்டி ஏமாற்றும் அநியாயங்கள் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கொடுமைகளைப் பற்றி முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன் - மருமகளை ஏமாற்றும் "மாமக்கள்" .

ஆனால் இந்தக் கொடுமை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பின்வரும் சமீபத்திய செய்தியைப் பாருங்கள்.



ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கணவர் மனைவியிடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளபோது, கணவரை விட்டு கொடுக்க மனைவியிடம் மகளிர் தினத்தன்று, போலீசார் பேரம் பேசிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் தெற்கு முனியசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாரதி(36). இவர் 18 ஆண்டுகளுக்கு முன் வழுதூரை சேர்ந்த மத்திய போலீஸ் செல்வத்தை திருமணம் செய்தார். இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில், கருத்துவேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். ராமநாதபுரம் சி.ஜே.எம். கோர்ட்டில் விவகாரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறி, மதுரையை சேர்ந்த முருகன் மகள் உஷாராணியை திருமணம் செய்தார் செல்வம். "இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் கிரியிடம் மனு கொடுத்தார் ஜெயபாரதி.

இதை விசாரிக்க ராமநாதபுரம் பஜார் ஸ்டேஷனுக்கு எஸ்.பி., உத்தரவிட்டார். "இனி உன்னால் சேர்ந்து வாழ முடியாது. உனது கணவர் கொடுப்பதை வாங்கி கொண்டு செல்,'' என, ஜெயபாரதியிடம் பேரம் பேசியுள்ளனர் போலீசார் . இச்சம்பவம் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயபாரதி கூறியதாவது: வருமானம் இன்றி எனது தாலியை விற்று மகனை படிக்க வைத்து வருகிறேன். கோர்ட்டில் வழக்கு இருக்கும் போது மறுதிருமணம் செய்த எனது கணவர் மீது நடவடிக்கை எடுங்கள் என போலீசில் கூறினால், "கொடுக்கும் பணத்தை வாங்கி செல். இல்லையேல் உனது மகன் வாழ்க்கை சீரழிந்துவிடும்,'' என மிரட்டுகின்றனர் என்றார்.

பஜார் இன்ஸ்பெக்டர் குணசுந்தரத்திடம் கேட்டபோது, "இரண்டாவது திருமணம் செய்ததற்கு உரிய ஆதாரங்களை கொண்டுவந்தால், நடவடிக்கை எடுக்கிறோம் என்று தான் கூறினோம். கோர்ட்டில் வழக்கு உள்ளபோது குடும்ப பிரச்னையில் தலையிட மாட்டோம். அதுவும் இந்த வழக்கை கூடுதல் எஸ்.பி., விசாரித்து வரும்போது நான் எப்படி பேசுவேன்,''என்றார்.


இப்படி ஏமாற்றப்படும் இந்திய மருமகள்களுக்கு தீர்வே கிடையாதா? என்று ஏக்கத்தோடு தவிக்கும் மருமகள்களுகு வழிகாட்டுவதற்காக ஒரு செய்தி வந்திருக்கிறது.

பின்வரும் செய்தியில் பாருங்கள் மேலுள்ள செய்தியில் இருப்பது போலவே ஒரு மருமகள் கணவனுக்கெதிராக காவல்நியைத்தில் புகார் கொடுத்ததை கவனிக்காமல் ஒதுக்கியிருக்கிறார்கள். புத்திசாலியான மருமகள் தேசிய பெண்கள் வாரியத் தலைவியை நேரடியாக சந்தித்துப் புகார் கொடுத்தவுடன் இப்போது “வேலை” நடக்க ஆரம்பித்திருக்கிறது.

மருமகள்களே,

அடங்காத கணவனையும் அவனது குடும்பத்தையும் அடக்குவதற்காக இந்திய சட்டங்கள் உங்களுக்கு இலவசமாக வேலை செய்யக் காத்துக்கொண்டிருக்கின்றன. அதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் போகும்போதுதான் நீங்கள் மேலுள்ள செய்தியில் இருப்பதுபோன்ற தடைகளை சந்திக்க நேரிடுகிறது.

உங்களைப் போன்ற மருமகள்களுக்கு உதவுவதற்காகவே அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்து தனியாக ஒரு அமைச்சரகத்தையும், வாரியத்தையும் அமைத்திருக்கிறது. அவற்றை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அந்த வாரியம் எங்கு இருக்கிறது, எப்படிப் போகவேண்டும் என்றுகூட நீங்கள் தவிக்கக்கூடாது என்பதற்காகத்தான் நீங்கள் உங்கள் வீட்டு நாற்காலியில் அமர்ந்தபடியே “ஆன் லைனில்” புகார் கொடுக்கும் வசதியை உங்களுக்காகவே தந்திருக்கிறார்கள். இதுபோன்ற வசதிகள் இருக்கும்போது அவற்றைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் அறியாமையில் சிக்கி கணவனிடமும் அவனது குடும்பத்திடமும் துன்பப்படலாமா?

உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் கணவனை சிறையில் அடைக்க மருமகள்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தேசிய மருமகள் வாரியத்தில் புகார் கொடுக்கலாம்!!!
 Online Complaint Registration for NRI's

இந்த வசதியை ஒவ்வொரு இந்திய மருமகளும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது தோழிகளுக்கும் இதுபற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள்.



GURGAON: The wife of a reputed Gurgaon-based industrialist has lodged a police complaint against her husband, accusing him of domestic violence. She has alleged that the accused had been harassing her for the past 23 years.

Geeta Sachdeva, wife of industrialist and owner of Su-Kam Power Systems, Kunwer Sachdeva, has also filed a written complaint with the National Commission for Women (NCW) accusing him of physical and mental torture. According to Geeta, she probably would have still endured it, but for the brutal way in which he allegedly beat her up a few weeks ago at Ramgarh, which compelled her to approach authorities.

Geeta lodged an FIR at Ramgarh police station on March 12. The investigating officer in Ramgarh, Ram Bhardwaj said, "We have filed an FIR under sections 107 and 116 of CrPC and the investigations are on."

On returning to Gurgaon from Ramgarh, in the face of police reluctance to register a complaint, she approached the women's cell, which summoned Sachdeva, but he did not turn up.

Gurgaon police commissioner S S Deswal said, "It is a social problem and not a criminal act. They have been married for 25 years. If they are unable to adjust, a counselor should be able to help them. We will try to counsel them and resolve the matter. If that does not help, we will register a case of domestic violence."

Geeta later met Girija Vyas, chairperson of National Commission for Women (NCW) and lodged a complaint.

In his defence, the accused denied having beaten his wife. "I don't know what you are talking about. I was not in Ramgarh that day."

Sachdeva also added that they have already filed for mutual divorce and that his legal team has lodged a complaint with the police.

வாழ்த்துக்கள்!