"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


மருமகள்களின் ஆயுத பூஜை!


ஆயுத பூஜையான இன்று மருமகள்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் “மருமகள் பாதுகாப்பு சட்ட ஆயுதங்களைப்” பற்றி மருமகள்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மருமகள்களுக்கு பாதுகாப்பு அளிக்க அகிம்சை வழி ஆயுதங்களாக அரசாங்கம் கொடுத்திருக்கும் சட்டங்களான வரதட்சணை தடுப்புச் சட்டம் (The Dowry Prohibition Act, 1961 (28 of 1961)), மருமகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (IPC498A), கணவனின் வன்முறையிலிருந்து மருமகளை காக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (Protection of Women from Domestic Violence Act, 2005) இவற்றைப் பற்றி மருமகள்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஆயுத பூஜை நன்னாளில் மருமகள்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த சக்தி மிகு அகிம்சை வழி ஆயுதங்களை பின்வரும் இணைப்புகளில் இருந்து தரவிறக்கம் செய்து அச்சடித்து இன்றைய பூஜையில் வைத்து பூஜை செய்து இந்த நகலை எப்போதும் கையில் வைத்துக்கொண்டால் கணவன் மற்றும் அவனது குடும்பத்தால் ஏற்படும் அனைத்துவித கொடுமைகளையும் அரசாங்கத்தின் உதவியோடு எதிர்த்து பாதுகாப்பு பெறலாம்.

பின்வரும் இணைப்புகளில் “PDF” வடிவில் இந்த சட்டங்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

1. வரதட்சணை தடுப்புச் சட்டம்

தற்போது வரதட்சணை கேட்கும் அல்லது திருமணத்தின்போது வரதட்சணை கேட்ட கணவனை அல்லது திருமணத்தின்போது வரதட்சணை பெற்றுக்கொண்ட கணவனை இந்த சட்டத்தின் மூலம் எப்போது வேண்டுமானாலும் தண்டிக்கலாம்.

2. மருமகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்

வரதட்சணைக்காகவோ அல்லது மதிப்பு மிக்க பொருட்களுக்காகவோ அல்லது எந்தவித காரணமும் இன்றி மருமகளை மனளதளவிலோ அல்லது உடலளவிலோ துன்புறுத்தும் கணவன் மற்றும் அவனைச் சார்ந்த அனைவரையும் (உறவினர், நண்பர்கள் உட்பட வயது, பாலினம் வித்தியாசம் இல்லாமல்) இந்த சட்டத்தின் மூலம் தண்டிக்கலாம்.

3. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்

மகள், மருமகள், மனைவி, சகோதரி என அனைத்து பெண்களும் தங்கள் குடும்பத்தில் இருக்கும் எந்த ஆண் உறவினராலும் (திருமணம் செய்யாமல் கூடிவாழும் துணைவன், கணவன், சகோதரன், தந்தை உட்பட) உடலியல், பாலியல், மனவியல், மற்றும் பொருளாதாரக் (Physical and Sexual Abuse, Verbal & Emotional Abuse and Economic Abuse) கொடுமைகளுக்கு ஆளானால் இந்த சட்டத்தின் மூலம் தகுந்த நிவாரணம் பெறலாம்.

இந்த ஆயுத பூஜை “சக்திமிக்க” பூஜையாக இருக்கட்டும்!

வாழ்த்துக்கள்!!


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்