இன்று வெளிவந்துள்ள செய்தியில் இந்திய இந்துமத மருமகள்களுக்கு ஒரு நற்செய்தியை இந்திய அரசாங்கம் தந்திருக்கிறது. திருமணம் என்ற அடிமைத்தளையிலிருந்து எளிய முறையில் விடுதலை பெற இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் வேலையை ஆரம்பித்திருக்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பல மருமகள்கள் திருமண பந்தத்திலிருந்து எளிதாக விடுதலை பெறலாம். ஆனால் இதில் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த சட்ட திருத்தம் இந்து மதத்தைச் சேர்ந்த மருமகள்களுக்கு மட்டும்தான் உபயோகமாக இருக்கும்.
இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி சட்ட நடைமுறைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். அதற்காக மற்ற மதத்தைச் சேர்ந்த மருமகள்கள் வருத்தப்படவேண்டாம். நீங்கள் உங்களுடைய விவாகரத்து வழக்குகளை துரிதப்படுத்த வழக்கம்போல IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற வரதட்சணைத் தடுப்புச் சட்டங்களை பயன்படுத்தலாம். இந்த வழிமுறைக்கு ஈடாக இந்தியாவில் எந்த சட்ட திருத்தங்களும் விவாகரத்து வேலையை எளிதாக செய்து முடிக்க முடியாது.
என்னுடைய சொல்லில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையென்றால் சில மாதங்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த ஆயிஷா-சோயப் மாலிக் விவாகரத்து விஷயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். முதலில் திருமணமே நடக்கவில்லை என்று அடித்துச் சொல்லிய சோயப் மாலிக் IPC498A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ததும் வாலை சுருட்டிக்கொண்டு நடக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்வதாக ஒப்புக்கொண்டு எல்லா பேப்பர்களிலும் கையெழுத்துப்போட்டு தப்பித்தால் போதும் என்று ஓடியேவிட்டாரல்லவா.
வேறு நாட்டுக் குடிமகனே இந்திய சட்டத்தைப் பார்த்து அஞ்சும்போது இந்தியக்கணவன்கள் முதுகெலும்பற்ற பூச்சி போல அடங்கி ஒடுங்கிவிடுவார்கள். அதனால் விவாகரத்து சட்டங்களில் திருத்தம் வந்தாலும் வராவிட்டாலும் இந்திய மருமகள்கள் கவலைப்படவேண்டியதில்லை. உங்களுக்காகவே சர்வரோக நிவாரணி போல எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற சட்டங்கள் இருக்கின்றன. தயங்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்ட சட்டதிருத்தத்திற்கு மருமகள்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து இந்திய அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்தி இந்திய மருமகள்களின் வாழ்வில் ஒளியையும் வலிமையையும் ஏற்படுத்தவேண்டும்.
மனமொத்து விவாகரத்து செய்தாலோ அல்லது நீங்கள் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தாலோ உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் கொடுக்கவேண்டிய முக்கியமான கண்டிப்பான நிபந்தனை என்னவென்றால் விவாகரத்துப் பெறப்போகும் கணவன் அவனது பெயரில் அதிகபட்ச மதிப்பிலான ஒரு ஆயுள் காப்பீடு எடுக்கவேண்டும். அதற்கான மாதாந்திர தவணையையும் கணவனே கட்டவேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிடுங்கள். மறக்காமல் அந்தக் காப்பீட்டுத் தொகைக்கான பயனாளியாக (Beneficiary, Nominee) உங்கள் பெயரை போடவேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லுங்கள். இதை எழுத்து மூலமாக உறுதிபடுத்திய பின்புதான் விவாகரத்து கொடுக்கப்படும் என்று கண்டிப்புடன் சொல்லிவிடுங்கள்.
விவாகரத்தின்போது உங்களுக்கு ஒரு குறிப்பிட்டத்தொகையாக மாதத்தோறும் ஜீவனாம்சம் கிடைக்கும். ஆனால் விவாகரத்திற்குப் பிறகு அந்த ஜீவனாம்சம் கொடுக்கும் முன்னாள் கணவன் அற்ப ஆயுளில் மண்டையைப்போட்டுவிட்டால் ஜீவானாம்சம் கிடைக்காமல் போய்விடுமல்லவா? அதனால் அவனுக்கு ஆயுள் காப்பீடு செய்திருந்தால் அவன் மண்டையைப் போட்டுவிட்டாலும் அந்தப் பணம் உங்களை வந்து சேருமல்லவா.
வரதட்சணைப் புகாரில் எப்படி மாமியார் நாத்தனார் பெயர்களை மறக்காமல் சேர்க்கிறீர்களோஅதுபோல விவாகரத்து நிபந்தனையில் இந்த ஆயுள் காப்பீடு மேட்டரை மறக்காமல் சேர்த்துவிடுங்கள். விவாகரத்து ஆனபின்பு, நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்த களைப்பில் கணவன் மண்டையைப் போட்டாலும் பணத்திற்கு குறைவின்றி சந்தோஷமாக வாழலாம்.
“இந்தியக் கணவன் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்”. இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கும் அவற்றை இயற்றியவர்களுக்கும் மறக்காமல் உங்களது நன்றியை தெரிவித்துவிடுங்கள்.
வாழ்த்துக்கள்!
தில்லி, ஜூன் 10: விவாகரத்து பெறுவதற்காக நடைமுறைகள் எளிதாக்கப்படவுள்ளன. எனவே, இனி அதிக நாள்கள் காத்திராமல் விரைவில் விவாகரத்து பெறமுடியும்.இதற்கான சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.இ தன்படி, இந்து திருமணச் சட்டம் 1955 மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் 1954 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்படுகின்றன.
இனி சேர்ந்து வாழவே முடியாது என்ற கட்டத்திலும், ஜோடியில் ஒருவர் காணாமல் போய்விடுவது, கொடுமைப்படுத்துவது ஆகிய பிரச்னைகளை மையமாகக் கொண்டு ஜோடியில் ஒருவர் மட்டும் விவாகரத்து கோரும் போது, இனி எளிதாகவும், விரைவாகவும் விவாகரத்து கிடைக்கும்.
தில்லியில் வியாழக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின், செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியது:கொடுமைப்படுத்தப்படு வது அடிப்படையில் விவாகரத்துக் கேட்பவர்கள், ஒருவர் விவாகரத்து கோரி மற்றொருவர் விவகாரத்து வேண்டாம் என்ற நினைத்து வழக்கைத் தாமதப்படுத்துவது போன்ற பிரச்னைகளை தீர்க்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சட்டக் குழு மற்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலின பேதம், கொடூரமாக நடந்து கொள்வது, வேறு மதத்துக்கு மாறுவது, சராசரி மனிதராக செயல்படாததது, குணப்படுத்த முடியாத தொழுநோய், பால்வினை நோய் போன்றவை விவாகரத்து பெற புதிய காரணங்களாக சேர்ந்துக் கொள்ளப்பட்டுள்ளன.தம்பதியர் இருவரும் ஒருமித்து விவாகரத்து பெறும் இந்து திருமணச் சட்டப் பிரிவு 13-பி, சிறப்புத் திருமணச் சட்டப் பிரிவு 28 ஆகியவற்றிலும் சிறு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவாகரத்து கோரி தம்பதி இருவரும் ஒரு மனதாக மனு செய்யும் போது, அந்த மனு 6 மாதத்துக்குள் திரும்பப் பெறப்படாவிட்டால் நீதிமன்றம் விரைவில் விசாரித்து விகாரத்து வழங்கும். அதிகபட்சம் 18 மாதங்களுக்குள் அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டு விடும். இருவருமே விவாகரத்து கோரும்போது அவர்கள் விரைவில் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளவும், கொடுமைக்கு உள்ளாகும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்றார் அம்பிகா சோனி.இந்த சட்டத் திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் பெற வேண்டும். அதன் பின்னரே நடைமுறைக்கு வரும்.
இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி சட்ட நடைமுறைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். அதற்காக மற்ற மதத்தைச் சேர்ந்த மருமகள்கள் வருத்தப்படவேண்டாம். நீங்கள் உங்களுடைய விவாகரத்து வழக்குகளை துரிதப்படுத்த வழக்கம்போல IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற வரதட்சணைத் தடுப்புச் சட்டங்களை பயன்படுத்தலாம். இந்த வழிமுறைக்கு ஈடாக இந்தியாவில் எந்த சட்ட திருத்தங்களும் விவாகரத்து வேலையை எளிதாக செய்து முடிக்க முடியாது.
என்னுடைய சொல்லில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையென்றால் சில மாதங்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த ஆயிஷா-சோயப் மாலிக் விவாகரத்து விஷயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். முதலில் திருமணமே நடக்கவில்லை என்று அடித்துச் சொல்லிய சோயப் மாலிக் IPC498A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ததும் வாலை சுருட்டிக்கொண்டு நடக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்வதாக ஒப்புக்கொண்டு எல்லா பேப்பர்களிலும் கையெழுத்துப்போட்டு தப்பித்தால் போதும் என்று ஓடியேவிட்டாரல்லவா.
வேறு நாட்டுக் குடிமகனே இந்திய சட்டத்தைப் பார்த்து அஞ்சும்போது இந்தியக்கணவன்கள் முதுகெலும்பற்ற பூச்சி போல அடங்கி ஒடுங்கிவிடுவார்கள். அதனால் விவாகரத்து சட்டங்களில் திருத்தம் வந்தாலும் வராவிட்டாலும் இந்திய மருமகள்கள் கவலைப்படவேண்டியதில்லை. உங்களுக்காகவே சர்வரோக நிவாரணி போல எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற சட்டங்கள் இருக்கின்றன. தயங்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்ட சட்டதிருத்தத்திற்கு மருமகள்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து இந்திய அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்தி இந்திய மருமகள்களின் வாழ்வில் ஒளியையும் வலிமையையும் ஏற்படுத்தவேண்டும்.
விவாகரத்திற்கு தயாராகும் மருமகள்களுக்கு ஒரு முக்கியமான "டிப்ஸ்"
மனமொத்து விவாகரத்து செய்தாலோ அல்லது நீங்கள் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தாலோ உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் கொடுக்கவேண்டிய முக்கியமான கண்டிப்பான நிபந்தனை என்னவென்றால் விவாகரத்துப் பெறப்போகும் கணவன் அவனது பெயரில் அதிகபட்ச மதிப்பிலான ஒரு ஆயுள் காப்பீடு எடுக்கவேண்டும். அதற்கான மாதாந்திர தவணையையும் கணவனே கட்டவேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிடுங்கள். மறக்காமல் அந்தக் காப்பீட்டுத் தொகைக்கான பயனாளியாக (Beneficiary, Nominee) உங்கள் பெயரை போடவேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லுங்கள். இதை எழுத்து மூலமாக உறுதிபடுத்திய பின்புதான் விவாகரத்து கொடுக்கப்படும் என்று கண்டிப்புடன் சொல்லிவிடுங்கள்.
விவாகரத்தின்போது உங்களுக்கு ஒரு குறிப்பிட்டத்தொகையாக மாதத்தோறும் ஜீவனாம்சம் கிடைக்கும். ஆனால் விவாகரத்திற்குப் பிறகு அந்த ஜீவனாம்சம் கொடுக்கும் முன்னாள் கணவன் அற்ப ஆயுளில் மண்டையைப்போட்டுவிட்டால் ஜீவானாம்சம் கிடைக்காமல் போய்விடுமல்லவா? அதனால் அவனுக்கு ஆயுள் காப்பீடு செய்திருந்தால் அவன் மண்டையைப் போட்டுவிட்டாலும் அந்தப் பணம் உங்களை வந்து சேருமல்லவா.
வரதட்சணைப் புகாரில் எப்படி மாமியார் நாத்தனார் பெயர்களை மறக்காமல் சேர்க்கிறீர்களோஅதுபோல விவாகரத்து நிபந்தனையில் இந்த ஆயுள் காப்பீடு மேட்டரை மறக்காமல் சேர்த்துவிடுங்கள். விவாகரத்து ஆனபின்பு, நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்த களைப்பில் கணவன் மண்டையைப் போட்டாலும் பணத்திற்கு குறைவின்றி சந்தோஷமாக வாழலாம்.
“இந்தியக் கணவன் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்”. இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கும் அவற்றை இயற்றியவர்களுக்கும் மறக்காமல் உங்களது நன்றியை தெரிவித்துவிடுங்கள்.
வாழ்த்துக்கள்!
//கணவன் மண்டையைப் போட்டாலும் பணத்திற்கு குறைவின்றி சந்தோஷமாக வாழலாம்.//
ReplyDeleteமருமகள் சந்தோஷமா ? இருங்க இருங்க
ஆடவர் காவல் நிலையம்ன்னு ஒரு காலத்தில வராமலா போகுது? அப்போ வச்சுக்கிறேன்...
:)
தெளிவான விளக்கங்கள்...
ஆண்களுக்கும் இப்படி எழுத மருமகன்னு யாராச்சும் ஓருத்தர் எழுத வாங்கய்ய்யா....
இந்த சட்ட திருத்ததில் சில சிக்கல்களும் இருக்கிறது. என்னுடைய தோழிக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். என் தோழியின் கணவர், மற்றொரு பெண்ணை மணம் முடிக்கும் எண்ணத்துடன், என் தோழியை துன்புறுத்தினார். துன்புறுத்துவதன் மூலம், என் தோழியே விவாகரத்திற்கு விண்ணப்பிப்பார் என்பது அவருடைய எண்ணம். இது எதுவும் பலிக்காத நிலையில், என் தோழி அவரை துன்புருத்தியாதாக விவாகரத்திற்கு விண்ணப்பித்து இருக்கிறார். தன் மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு என் தோழி விவாகரத்திற்கு மறுத்து வருகிறார். இந்த புதிய சட்டத்திருத்ததால் என் தோழி பாதிப்படையலாம். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
ReplyDelete// Anonymous said...
ReplyDeleteஇந்த சட்ட திருத்ததில் சில சிக்கல்களும் இருக்கிறது. என்னுடைய தோழிக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். என் தோழியின் கணவர், மற்றொரு பெண்ணை மணம் முடிக்கும் எண்ணத்துடன், என் தோழியை துன்புறுத்தினார். துன்புறுத்துவதன் மூலம், என் தோழியே விவாகரத்திற்கு விண்ணப்பிப்பார் என்பது அவருடைய எண்ணம். இது எதுவும் பலிக்காத நிலையில், என் தோழி அவரை துன்புருத்தியாதாக விவாகரத்திற்கு விண்ணப்பித்து இருக்கிறார். தன் மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு என் தோழி விவாகரத்திற்கு மறுத்து வருகிறார். இந்த புதிய சட்டத்திருத்ததால் என் தோழி பாதிப்படையலாம். இது பற்றி உங்கள் கருத்து என்ன? //
உங்களது தோழிக்கு விவாகரத்து வேண்டாம், ஆனால் கணவரின் இரண்டாவது திருமணத்தை தடுக்கவேண்டும் அவ்வளவுதானே?
அதற்கு எளிய வழி இருக்கிறது. உங்களது தோழியை துன்புறுத்திய கணவர் மீது IPC498A பிரிவின் கீழ் புகார் பதிவு செய்யச் சொல்லுங்கள். கணவன் உடனடியாக கைது செய்யப்படுவார். பிறகு உங்கள் தோழியை CrPC125 பிரிவின்படி பராமரிப்புத்தொகை கேட்டு மற்றொரு வழக்குப் பதிவு செய்யச் சொல்லுங்கள். அவரது மகளுக்கும் அவருக்கும் சேர்த்து பணம் கிடைக்கும். இவையனைத்தும் உடனடியாக கைமேல் பலன்தரக்கூடிய வழக்குகள். விவாகரத்து போல இழுத்துக்கொண்டிருக்கும் வழக்குகள் அல்ல.
இந்த இரண்டு குற்ற வழக்குப் பிரிவில் சிக்கும் கணவன் விவாகரத்துப் பெறுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அப்படியே இந்த புதிய சட்ட திருத்தம் எளிதாக விவாகரத்துப் பெற உதவினாலும். கணவன் மீது இருக்கும் கிரிமினல் வழக்கு அவ்வளவு எளிதாக முடிந்துவிடாது. ஆயுள் முழுக்க நீதிமன்றத்திற்கு அலையவேண்டும். பிறகு விவாகரத்துப் பெற்று அடுத்த திருமணம் அவ்வளவு எளிதாக நடத்திவிடமுடியுமா? பிறகு கணவர் தானாக உங்களின் தோழியின் வழிக்கு வந்துவிடுவார்.
IPC498A,CrPC125, Domestic Violence Act போன்றவற்றை எப்படி கையாள்வது என்று தெரிந்துகொள்ள முந்தைய பதிவுகளைப் படிக்கவும். மேலும் சந்தேகமிருந்தால் உங்கள் கருத்துக்களை மின்னஞ்சலிலோ அல்லது மறுபதிவாகவோ எழுதுங்கள்.
நன்றி!
//ப்ரியமுடன்...வசந்த் said...
ReplyDeleteஆடவர் காவல் நிலையம்ன்னு ஒரு காலத்தில வராமலா போகுது? அப்போ வச்சுக்கிறேன்...//
வசந்த் அவர்களே உங்களின் கருத்திற்கு நன்றி!
இப்போது இருக்கும் ஆண் காவலர்கள் பணிபுரியும் காவல் நிலையங்களில் என்ன நடந்துகொண்டிருக்கிறது. விசாரணைக்கைதிகளாக வரும் பெண்களை கற்பழிக்கும் சம்பவங்கள் மட்டும்தானே நடந்துகொண்டிருக்கிறது!
3 மாதமாக பெண்ணை கற்பழித்த 2 போலீஸார் கைது
ThatsTamil,வெள்ளிக்கிழமை, ஜூலை 3, 2009, 14:06[IST]
உங்களுடைய மின்னஞ்சலை
ReplyDeletemoor123@rediffmail.com க்கு அனுப்பி வைக்க முடியுமா?
//Anonymous said...
ReplyDeleteஉங்களுடைய மின்னஞ்சலை
moor123@rediffmail.com க்கு அனுப்பி வைக்க முடியுமா?//
உங்களது சந்தேகங்களை marumagal@gmail.com என்ற முகவரிக்கு தயங்காமல் அனுப்பலாம். நன்றி!
இழுத்து பறித்துக்கொண்டிருக்கும் வழக்குகளால் சம்பந்தப்பட்ட இருவருக்குமே தொல்லைதான் இல்லையா...
ReplyDeleteஆயுள்காப்பீடு நல்ல யோசனை தான். அதே நேரம் குடும்ப வன்முறை சட்டங்கள் பொய் வழக்குகளாக பயன்படுத்தப்படுவதை அதிகபட்சம் தவிர்க்கலாம்.
ஒன்றுமே செய்ய இயலாத நிலையில் ஒரு இறுதி அஸ்திரமாக பயன்படுத்தலாமே தவிர, சட்டம் இருக்கிறது என்பதற்காக எப்போதுமே பொய் வழக்காக பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்பது எனது கருது
கமெண்ட் மாடரேஷன் என்று ப்ளாகர் செட்டிங்கில் இருக்கும் அதனை உபயோகப்படுத்துங்கள்.
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஅற்புதமான பதிவு!
அன்பு பதிவர்களே/நண்பர்களே,
என்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com/
wht abt your family?Are you living with your DOG? I Mean your Husband?
ReplyDelete//செந்தழல் ரவி said...
ReplyDeleteஆயுள்காப்பீடு நல்ல யோசனை தான். அதே நேரம் குடும்ப வன்முறை சட்டங்கள் பொய் வழக்குகளாக பயன்படுத்தப்படுவதை அதிகபட்சம் தவிர்க்கலாம்.
ஒன்றுமே செய்ய இயலாத நிலையில் ஒரு இறுதி அஸ்திரமாக பயன்படுத்தலாமே தவிர, சட்டம் இருக்கிறது என்பதற்காக எப்போதுமே பொய் வழக்காக பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்பது எனது கருத்து//
செந்தழல் ரவி அவர்களே,
உங்களின் கருத்திற்கு நன்றி. மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் என்பவை கைகேயிக்கு கொடுக்கப்பட்ட வரங்கள் போன்றது. அவற்றை எப்போது எப்படி பயன்படுத்தவேண்டும் என்று மருமகள்கள்தான் நிர்ணயிக்கமுடியும். அதனால் இதில் தவறான பயன்பாடு, பொய் வழக்கு என்ற பேச்சிற்கே இடமில்லை.
// Software Engineer said...
ReplyDeleteவணக்கம்,
அற்புதமான பதிவு!
அன்பு பதிவர்களே/நண்பர்களே,
என்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்! http://kaniporikanavugal.blogspot.com/ //
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! உங்களுடைய பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
//Anonymous said...
ReplyDeletewht abt your family?Are you living with your DOG? I Mean your Husband?//
நண்பரே, மருமகளைக் காணவந்தமைக்கு மிக்க நன்றி! இந்தியக் கணவனை “நாய்” என்று நீங்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டுவது முறையாகுமா?
are you an LIC agent
ReplyDeleteஇன்றைய டாப் இருபது வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
ReplyDelete//Anonymous said...
ReplyDeleteare you an LIC agent//
இந்தியாவில் நீங்கள் எதற்கெல்லாம் பணம் கொடுத்திருக்கிறீர்கள் என்று எண்ணிப் பாருங்கள்.
1. அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சென்று குழந்தையுடன் வெளியே வருவதற்குள் எத்தனை பேருக்கு லஞ்சம்.
2. பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் வாங்க லஞ்சம்.
3. நல்ல பள்ளி கல்லூரியில் சேர்ப்பதற்கு லஞ்சம்.
4. படித்து முடித்தபிறகு வேலை வாங்குவதற்கு லஞ்சம் அல்லது அயல்நாட்டில் வேலைதேடிச்செல்ல பாஸ்போர்ட் வாங்குவதற்கு Police verification செய்வதற்கு லஞ்சம்.
5. இதற்கு நடுவே வீட்டிற்கு மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, தொலைபேசி இணைப்பு, வீட்டுப் பத்திரப்பதிவு போன்ற எல்லாவற்றிற்கும் லஞ்சம்.
6. கடைசியில் இறந்தபிறகு இறப்புச் சான்றிதழ் வாங்க லஞ்சம்.
இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது நீங்கள் லஞ்சம் கொடுக்காமல் இந்தியாவில் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்கிறீர்களா? பிறப்பு முதல் இறப்பு வரை அற்பப்பதர்களுக்கு லஞ்சம் கொடுத்துத்தானே வாழ்கிறீர்கள்?
தாலிகட்டிய மனைவிக்காக ஒரு ஆயுள் காப்பீடு எடுக்கச் சொன்னால் என்னை LIC Agent என்று சந்தேகப்படலாமா?
"ஆனால் விவாகரத்திற்குப் பிறகு அந்த ஜீவனாம்சம் கொடுக்கும் முன்னாள் கணவன் அற்ப ஆயுளில் மண்டையைப்போட்டுவிட்டால் ஜீவானாம்சம் கிடைக்காமல் போய்விடுமல்லவா? அதனால் அவனுக்கு ஆயுள் காப்பீடு செய்திருந்தால் அவன் மண்டையைப் போட்டுவிட்டாலும் அந்தப் பணம் உங்களை வந்து சேருமல்லவா"
ReplyDeleteகணவனே வேண்டாம் என்று சொல்லி விலகிப்போகும்போது அவன் மூலம் வரும் பணம் மட்டும் வேண்டுமோ ? அமெரிக்காவில் இருப்பது போல, மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்தால் ஜீவனாம்ச வாய்ப்பு குறைய திருத்தம் கொண்டுவரவேண்டும்; அல்லது பெண்ணின் பொருளாதார நிலை, அவளுக்கு வேலை கிடைக்கும் சாதக அம்சங்கள் போன்றவற்றை கணித்து நீதிமன்றமே ஜீவனாம்சத்தை நிர்ணயம் அல்லது தள்ளுபடி செய்ய வழிவகை செய்யவேண்டும்.
அன்புடன்
முத்து
"வரதட்சணைப் புகாரில் எப்படி மாமியார் நாத்தனார் பெயர்களை மறக்காமல் சேர்க்கிறீர்களோ"
ReplyDeleteவரதட்சணை தடுப்பு சட்டத்தை பொய்யாய் கணவன் வீட்டாரை மாட்டி வைக்க பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் சென்ற ஆண்டு டெல்லி உயர்நீதி மன்றம் நச்சென்று ஒரு தீர்ப்பளித்துள்ளது. அதன்படி இஷ்டத்துக்கு மாப்பிள்ளையின் ஓர்ப்படியின் ஒன்றுவிட்ட அண்ணா பிள்ளையின் மைத்துனனின் ஒன்றரை வயது மருமகன் வரையெல்லாம் சகட்டுமேனிக்கு அனைவரது மேலும் புகார் கொடுக்க இயலாது. வரதட்சணை கொடுத்ததற்கு ஆதாரம் வேண்டும். மிக முக்கியமான விஷயம் ... மணமாகி பல ஆண்டுகள் கழித்து வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தால் 'தெரிந்தே வரதட்சணை கொடுத்த' காரணத்தால் பெண் வீட்டுக்காரர்கள் மேலேயே நடவடிக்கை பாயவும் வாய்ப்புள்ளது. மட்டுமின்றி, வரதட்சணை கொடுத்து இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு வேறு காரணங்களுக்காக வரதட்சணை கொடுமை வழக்கை கேடயமாக பயன்படுத்த நினைத்த காரணத்துக்காகவும் கடும் கண்டனத்துக்கும் - நடவடிக்கைக்கும் வாய்ப்பு உள்ளது.
//Muthu said...
ReplyDeleteகணவனே வேண்டாம் என்று சொல்லி விலகிப்போகும்போது அவன் மூலம் வரும் பணம் மட்டும் வேண்டுமோ ? அமெரிக்காவில் இருப்பது போல, மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்தால் ஜீவனாம்ச வாய்ப்பு குறைய திருத்தம் கொண்டுவரவேண்டும்; அல்லது பெண்ணின் பொருளாதார நிலை, அவளுக்கு வேலை கிடைக்கும் சாதக அம்சங்கள் போன்றவற்றை கணித்து நீதிமன்றமே ஜீவனாம்சத்தை நிர்ணயம் அல்லது தள்ளுபடி செய்ய வழிவகை செய்யவேண்டும்.
அன்புடன்
முத்து//
முத்து அவர்களே,
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! நீங்கள் சொல்வது போல திருத்தம் கொண்டுவரப்போவது யார்? அமெரிக்காவிலிருந்து இப்போதுதானே மருமகள்களுக்கு வசதியாக Live-in-relationship முறையை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் திருத்தங்கள் வர அடுத்த ஜென்மம் கூட ஆகலாம். அதுவரை இந்திய சட்டங்களின் துணையோடு மருமகள்கள் வாழ்க்கையை அனுபவிக்கட்டுமே.
//Muthu said...
ReplyDeleteவரதட்சணை தடுப்பு சட்டத்தை பொய்யாய் கணவன் வீட்டாரை மாட்டி வைக்க பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் சென்ற ஆண்டு டெல்லி உயர்நீதி மன்றம் நச்சென்று ஒரு தீர்ப்பளித்துள்ளது. அதன்படி இஷ்டத்துக்கு மாப்பிள்ளையின் ஓர்ப்படியின் ஒன்றுவிட்ட அண்ணா பிள்ளையின் மைத்துனனின் ஒன்றரை வயது மருமகன் வரையெல்லாம் சகட்டுமேனிக்கு அனைவரது மேலும் புகார் கொடுக்க இயலாது. வரதட்சணை கொடுத்ததற்கு ஆதாரம் வேண்டும். மிக முக்கியமான விஷயம் ... மணமாகி பல ஆண்டுகள் கழித்து வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தால் 'தெரிந்தே வரதட்சணை கொடுத்த' காரணத்தால் பெண் வீட்டுக்காரர்கள் மேலேயே நடவடிக்கை பாயவும் வாய்ப்புள்ளது. மட்டுமின்றி, வரதட்சணை கொடுத்து இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு வேறு காரணங்களுக்காக வரதட்சணை கொடுமை வழக்கை கேடயமாக பயன்படுத்த நினைத்த காரணத்துக்காகவும் கடும் கண்டனத்துக்கும் - நடவடிக்கைக்கும் வாய்ப்பு உள்ளது.//
நீதிமன்றம் பல ஆண்டுகளாக பலவாறு பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் மருமகள்கள் பயப்படவேண்டியதில்லை. மருமகள் புகார் கொடுத்தவுடன் கணவன் வீட்டாரை கைதுசெய்துவிடுவார்கள் அல்லவா. பிறகு நீதிமன்றத்தில் அது தவறு என்று சொல்வதற்கு 5/6 ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள் கணவன் வழிக்கு வந்துவிடுவான்.
நீங்கள் மேலே கூறியுள்ள பல விஷயங்களில் வாய்ப்பு உள்ளது என்று சந்தேகமாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். இதுவரை அதுபோன்ற நடவடிக்கையை மருமகள்களுக்கு எதிராக தைரியமாக எந்த காவல்நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ எடுத்திருக்கிறார்களா?
நீங்கள் சொல்வதுபோல பார்த்தால் வரதட்சணை தடுப்புச்சட்டம் 1961லிருந்து இருக்கிறது. இன்றுவரை எந்த வழக்கிலாவது மருமகளை வரதட்சணை ஏன் கொடுத்தாய் என்று கைது செய்ததாக செய்தி இருந்தால் சொல்லுங்கள். உபயோகமாக இருக்கும்.
மருமகள்களுக்கு இந்திய அரசின் ஆதரவும், பெண்கள் துறை அமைச்கத்தின் ஆதரவும், பெண்கள் வாரியத்தின் ஆதரவும், காவல் நீதித்துறையின் ஆதரவும் அமோகமாக இருக்கிறது. அதனால் நீங்கள் சொல்வது போல எந்த நடவடிக்கையும் மருமகளுக்கெதிராக இந்தியாவில் கனவில் கூட நடக்காது.
உங்களின் விவாத கருத்திற்கு நன்றி!
"The report of a dowry harassment case usually spells bad news for groom. But if the Delhi High Court's order is anything to go by, it's time for the bride's family to watch out.
ReplyDeleteThe Delhi High Court on Friday ruled that a case of dowry harassment could go against the wife's family if the dowry had been given with their knowledge.
"I consider where these kinds of allegations are made, the police should simultaneously register a case under Dowry Prohibition Act against the parents of the complainants as well, who married their daughter despite demand of dowry", PTI quoted Justice Dhingra as saying.
The decision came as Dhingra dismissed a petition of a woman seeking registration of dowry harassment case against her in-laws' family.
Dhingra added that in case huge amounts of money was willingly paid during or after the marriage, it should be brought to the notice of the Income Tax Department.
The court pointed out that the bride's family was guilty if it solemnised the marriage despite a demand for dowry. "These kinds of allegation made after the breakdown of the marriage show the mentality of the complainant," the Court said.
The postive point of the judgment - Equality
The reason why the judgment is encouraging is that it promotes EQUALITY under law.
Definition of dowry: As per the Dowry Prohibition Act (originally passed in 1961 and amended twice in the 1980s), dowry is defined as 'any property or valuable security given or agreed to be given either directly or indirectly by one party to a marriage to the other party to the marriage or by the parents of either party to a marriage or by any other person, to either party to the marriage or to any other person at or before [or any other time after the marriage] in connection with the marriage of the said parties'.
As per this definition, gifts of jewelry, clothes and cash traditionally given by the groom's family would also be covered by the anti-dowry law and hence declared illegal.
Why the crime is ill-defined?
Gifts allowed : As per this law 'dowry' is forbidden but 'gifts' are allowed.
Presents to the groom allowed: Presents given to the groom are also exempted, provided no demand has been made and they are entered in a list and provided that 'such presents are of a customary nature and the value thereof is not excessive' in relation to the 'financial status of the person by whom, or on whose behalf, such presents are given.
http://www.indiatogether.com/manushi/issue148/dowry.htm
So far if a woman files a dowry harassment case, only the husband and family have been arrested. The wife's family was not arrested for violating the law. This has emboldened wives to misuse anti-dowry laws. So, this judgement is a good step towards EQUALITY in the present circumstances. It will deter women from filing false dowry harassment charges for the fear of punishment.
"
நீதிமன்றம் வெறுமே பேசமட்டுமே செய்யவில்லை. டெல்லி நீதிமன்றத்தின் குட்டு இதோ, படியுங்கள். நான் "வாய்ப்புள்ளது" என்றெல்லாம் சொன்னதற்குக்காரணம் இந்த செய்தியின் தொடர்ச்சியை அறிந்துகொள்ள இயலாமல் போனதே.
ReplyDeleteஆக நீதிபதி டிங்ரா வரதட்சணை கொடுமை வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார். இதையே அடிப்படையாகக்கொண்டு தன் மீது மனைவி வீட்டார் பொய் வழக்கு தொடுத்து சிறைக்கு அனுப்பியதாக அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு கூட தொடுக்க இயலும்.
ReplyDeleteஉண்மையாக பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த சட்டத்தை பயன்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நிறைய பெண்கள் வெறும் ஈகோ-விற்காக (என் விஷயத்திலேயே என் இல்லாள் மிரட்டியிருக்கிறார். என் நல்ல நேரம் அவரே கைப்பட நாங்கள் எதுவும் அவரது வீட்டாரிடம் கேட்கவில்லை எழுதியுள்ள மின்னஞ்சல் ஆதாரம் என்னிடம் பத்திரமாக இருப்பதால் நான் அச்சப்பட ஏதுமில்லை) கணவன் வீட்டாரை மாட்டிவைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக இச்சட்டங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதுகுறித்த ஆதங்கம்தான் என்னுடையது. ஆனால் உங்களது பதிவுகளும் பதிலும் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக தோன்றியதாலேயே எனது பின்னூட்டம்.
இங்கே அமெரிக்காவில் என் நண்பன் ஒருவன் சொன்ன கதை இது :
அவனது நண்பன் ஒருவனது H1B visa காலாவதியாகி புதுப்பிக்க விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டிருக்கிறது. காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. பிறகு வழக்கறிஞர் உதவியோடு தோண்டிப்பார்க்க அப்போதுதான் தெரிந்திருக்கிறது, அவனது நண்பனின் முன்னாள் மனைவி விவாகரத்து வழக்கில் (இந்தியாவில் தொடரப்பட்டது) இவனையும் (அதாவது கணவனின் நண்பனையும்) இழுத்துவிட்டிருக்கிறார். அந்த வழக்கு முடிந்தும்கூட ஏழரை நாட்டுசனி போல அமெரிக்கா வரை தொடர்ந்திருக்கிறது.
பின்னர் வழக்கறிஞரின் துணையோடு வழக்கில் வென்று அவரது விசா புதுப்பிக்கப்பட்டது.
எவன் மனைவியையோ எவனோ கடத்திக்கொண்டு போக வேறெவன் வாலோ பற்றியெறிந்த கதைதான்.
"அதுவரை இந்திய சட்டங்களின் துணையோடு மருமகள்கள் வாழ்க்கையை அனுபவிக்கட்டுமே"
ReplyDeleteஅனுபவிக்கலாமே, அது முறையோடு பயன்படுத்தப்பட்ட சட்டங்களின் துணையோடு என்றால். வன்மத்திற்காகவும் தனிப்பட்ட ஈகோவிற்காகவும் சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தினால் ஒருவேளை சட்டமும் காவல்துறையும் பெண்கள் அமைப்பும் அதற்கு துணையாகக்கூட இருக்கலாம். ஆனால் ...
உப்பு தின்றால் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்பது விதி.
முத்து அவர்களே,
ReplyDeleteஉங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உங்களுடைய கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக அடுத்த பதிவு அமையும். அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன!
பின்குறிப்பு:
நீங்கள் பல விஷயங்களை இங்கே பகிர்ந்துகொண்டதால் உங்களுக்காக இந்த “டிப்ஸ்” தருகிறேன்.
//(என் விஷயத்திலேயே என் இல்லாள் மிரட்டியிருக்கிறார். என் நல்ல நேரம் அவரே கைப்பட நாங்கள் எதுவும் அவரது வீட்டாரிடம் கேட்கவில்லை எழுதியுள்ள மின்னஞ்சல் ஆதாரம் என்னிடம் பத்திரமாக இருப்பதால் நான் அச்சப்பட ஏதுமில்லை)//
என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த ஈமெயில் அது எழுதப்பட்ட தேதிக்கு முன்பான சம்பவங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்குப் பிறகு நீங்கள் வரதட்சணை கேட்கவில்லை என்பதற்கு இந்த ஈமெயில் ஆதாரமாக பயன்படுமா?
அடுத்து IPC498A சட்டப்பிரிவை நன்றாக கவனித்துப் படித்துப்பாருங்கள். அதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. 1. வரதட்சணைக்காக மனைவியை துன்புறுத்துவது, 2. வரதட்சணை அல்லாத விஷயத்திற்காக துன்புறுத்துவது. இதில் இரண்டாவது பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் வரதட்சணை தொடர்பான உங்களின் ஈமெயில் உங்களுக்கு உதவுமா?
உங்கள் மனைவிக்கு இந்த கருத்துப்பதிவுத் தளத்தை அறிமுகப்படுத்துங்கள். அவர்களும் பயனடையட்டும்!
"அந்த ஈமெயில் அது எழுதப்பட்ட தேதிக்கு முன்பான சம்பவங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்குப் பிறகு நீங்கள் வரதட்சணை கேட்கவில்லை என்பதற்கு இந்த ஈமெயில் ஆதாரமாக பயன்படுமா?"
ReplyDeleteபடும். காரணம், நாங்கள் இருப்பது வெளிதேசத்தில். இருவரின் பெற்றோரும் இருப்பது இந்தியாவில். பெற்றோர் இருவரது குடும்பமும் இருப்பது சிலநூறு கி.மீ.க்கள் அப்பால். அவர்களுக்குள் தொடர்பும் வெகு அரிதே.
இப்படிப்பட்ட சூழலில் என் பெற்றோர் என் இல்லாளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர் என்று புகார் கொடுத்தால் நீதிபதியே சிரிப்பார்.
"அடுத்து IPC498A சட்டப்பிரிவை நன்றாக கவனித்துப் படித்துப்பாருங்கள். அதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. 1. வரதட்சணைக்காக மனைவியை துன்புறுத்துவது, 2. வரதட்சணை அல்லாத விஷயத்திற்காக துன்புறுத்துவது. இதில் இரண்டாவது பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் வரதட்சணை தொடர்பான உங்களின் ஈமெயில் உங்களுக்கு உதவுமா?"
உதவாதுதான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அப்படி தவறாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டால் வேறு வழிகளில் தீர்த்துக்கொள்ளவேண்டியதுதான் ..ஹி..ஹி.
"உங்கள் மனைவிக்கு இந்த கருத்துப்பதிவுத் தளத்தை அறிமுகப்படுத்துங்கள். அவர்களும் பயனடையட்டும்!"
அடேங்கப்பா எவ்வளவு நல்ல எண்ணம் ! இந்த நல்ல எண்ணத்திற்காகவே நீங்கள் நூறாண்டுகளுக்குமேல் வாழவேண்டும்.
//
ReplyDeleteMuthu said...
"அடுத்து IPC498A சட்டப்பிரிவை நன்றாக கவனித்துப் படித்துப்பாருங்கள். அதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. 1. வரதட்சணைக்காக மனைவியை துன்புறுத்துவது, 2. வரதட்சணை அல்லாத விஷயத்திற்காக துன்புறுத்துவது. இதில் இரண்டாவது பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் வரதட்சணை தொடர்பான உங்களின் ஈமெயில் உங்களுக்கு உதவுமா?"
உதவாதுதான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அப்படி தவறாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டால் வேறு வழிகளில் தீர்த்துக்கொள்ளவேண்டியதுதான் ..ஹி..ஹி.//
கடைசியில் கணவனால் சட்டத்தின் மூலம் மருமகளை எதுவும் செய்யமுடியாது என்று ஒத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி. இதுதான் இந்திய மருமகள்களின் பலம்.
Every dog will have it's own day, that's all I can say :)
ReplyDeleteஒரு கணவனை அழித்து எப்படி சந்தோசமாக வாழலாம் என நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு அண்ணனோ தம்பியோ இருந்தால் முதலில் அவர்களின் மனைவிகளுக்கு பாடம் சொல்லி கொடுங்கள்.
ReplyDeleteநான் சென்னையில் வசிக்கிறேன். நான் திருநெல்வேலியைச் சேர்ந்தவள். நான் MA, M.ed, M.Phil (தமிழ்), NET முடித்திருக்கிறேன். தற்பொழுது P.hd படிப்பதற்கு விண்ணப்பித்து இருக்கின்றேன். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 2014 நவம்பரில் நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஒருவரை பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். சென்னையில் சொந்த தொழில் செய்து வருகிறார். திருமணத்திற்கு முன்பு ஹைதராபாத்தில் ஜெனரல் மேனேஜராக வேலை பார்த்தார். மாமியார் கொடுமை என்று சொல்ல முடியாது, இருந்த போதும் தேவையே இல்லாமல் குறை கூறிக்கொண்டே இருப்பார். 2014 டிசம்பர் மாதத்தில் அவரது மடிக்கணினியை நான் தற்செயலாக பார்க்கும் பொழுது ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் வீடியோக்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டேன். பின் ஒரு நாள்,அலமாரியை சுத்தம் செய்யும் பொழுது, காதல் தோல்வியில் உருகி ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு எழுதிய கவிதையினை பத்திரப்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்தேன். இதனை அவரிடம் என்ன என்று கேட்டு அழுதேன். அவர் அதற்கு எனது மடிக்கணினியை எனது நண்பர்கள் பயன்படுத்துவர், அதனால் அவர்கள் அது போன்ற வீடியோக்களை பார்த்திருப்பர் என்று கூறி சமாளித்து விட்டார். அது மட்டுமின்றி ஒரு போதும் உனை கைவிட மாட்டேன் என்று வாக்குறுதியும் கொடுத்தார். ஜனவரி மாதம் ஹனிமூன் என்ற பெயரில் கேரளாவுக்கு விமானத்தில் அழைத்து சென்றார். அங்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டோம். பின்னர் அவரது நண்பர் வீட்டிற்கு செல்வோம் என்று கூட்டிச் சென்றார். அங்கு அவரது மனைவி இருந்தார். என்னை அந்த வீட்டில் ஓய்வு எடுக்கும்படி கூறிவிட்டு, தொழில் விஷயமாக ஒருவரை சந்திக்க வேண்டும் என்று கூறிவிட்டு ஒரு 9 மணி அளவில், அவரது நண்பருடன் கிளம்பி வெளியில் சென்று விட்டனர். பின்னர் 4 மணிக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டனர். நண்பரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை விட்டுவிட்டு, மாலையில் அவரும், அவரது நண்பருடனும் காரில் பகவதியம்மன் கோவிலுக்கு சென்றோம். எனது கணவருக்கு ஒழுங்காக நடக்க முடியவில்லை. அவரிடம் மாற்றங்கள் இருப்பதை உணர்ந்தேன். அவரும், அவரது நண்பரும் தவறு செய்து இருக்கிறார்கள் என்பதை இரவில் உறுதி செய்துவிட்டேன். பின்பு எனக்கு அந்த இடமே நரகம் போன்று இருந்தது. பின்பு விமானத்தில் விட்டிற்கு வந்து சேர்ந்தோம். அங்கு நடந்த விஷயங்களை அவரது பெற்றோர், சகோதரியிடம் கூறினேன். அவர்களும் என்னைப் போன்று திடுக்கிட்டனர். பின்னர் கண்டு கொள்ளவில்லை. என் வீட்டிற்கு நான் தெரியப்படுத்தவில்லை. அதன்பின்பு எங்களுக்குள் பிரச்சனைகள் அடிக்கடி வந்தது. அக்காவிடம் எல்லாவற்றையும் கூறினேன். வீட்டிற்கு வந்து விடட்டுமா என்று கேட்டேன். விவாகரத்து என்பது தீர்வாகாது. பெண்ணிற்கு இந்த சமூகத்தில் திருமண உறவு என்பது அவசியம். தாலி அவசியம். உனது படிப்பினை, வேலையினை கவனி. அவரை தலை முழுகிவிடு, அதை ஹாஸ்டலாக எண்ணிக்கொள் என்றாள்.
ReplyDeleteநானும் அது தான் சரி என்று எண்ணினேன். நான் பேசாமல் இருந்தாலும், உன்னிடம் பேசாமல் என்னால் இருக்க முடியாது என்று வலிய வலிய பேசுவார். நீ கேட்பதை நான் வாங்கித் தருவேன், தொழில் சார்ந்த விஷயங்களை என்னிடம் கேட்கக் கூடாது என்பது தான் அவரது விருப்பம். நானும் கேட்பது கிடையாது. அவரது அம்மாவின் கொடுமை அதிகமானது, தினமும் சண்டை. மாமா,அத்தையும் அவர்களது சொந்த ஊரிற்கு சென்று விட்டனர். நானும் அவரும் தனிக் குடித்தனம் வந்துவிட்டோம். அதன் பிறகு ஆண் நண்பர்களுடன் தவறு செய்துவிட்டு வருகிறார் என்று கண்டறிந்தேன். அவரது ஜட்டியில் செண்ட் அடிப்பது, அவரது மனைவியாக பிற நடவடிக்கைகள் மூலம் கண்டறிந்தேன். இதனால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை வந்தது.ஆனால் அவர் இதுவரை அவரை ஒரு gay என்று என்னிடம் ஒத்துக்கொள்ளவில்லை. உன்னால் நிரூபிக்க முடியுமா என்று அடித்திருக்கிறார். என்னால் விவாகரத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தின் மானம் என்னாவது என்றே அமைதியாக இருக்கின்றேன். 2015 ஆகஸ்டு மாதம் ஒரு கல்லூரியில் பிரொபசர் வேலை வாங்கி தருவதாக திருமணம் செய்தார். மந்திரியிடம் எல்லாம் வேலைக்காக விசாரித்துவிட்டு இறுதியில் ஏமாற்றிவிட்டார். அதையும் பொறுத்துக்கொண்டேன். எனக்கு திறமை இருக்கிறது. TRB தேர்வு எழுதி வேலைக்கு நிச்சயமாக சென்றுவிடுவேன். 2016 மார்ச் மாதத்தில் அவரது கம்பெனியில் பாட்னருடன் ஏற்பட்ட தகராரில் கம்பெனியை மூடிவிட்டார். இதில் 12 லட்சம் கடன் வந்து விட்டது. வேலையும் இல்லாமல் இருந்தார். அவரை இந்த சமயத்தில் நான் தான் ஆறுதலாக இருந்தேன். தற்பொழுது ஆண் நண்பர்களுடன் பழக்கம் இல்லை என்று நினைக்கின்றேன். எனக்கு திருமணத்தில் நம்பிக்கை உண்டு. இவர் திருந்துவார் என்று எண்ணுகின்றேன். ஆனால் பல நேரங்களில் என்னிடம் அன்பாக இருக்கிறார். சில நேரங்களில் அன்பில்லாமல் நடந்து கொள்கிறார். அடிக்கவும், கடிக்கவும், கிள்ளவும் செய்கிறார். இதனால் பச்சை பச்சையாக உடம்பில் தழும்புகள் இருக்கும். அந்த நேரங்களில் அவர் உண்மையான அன்பு என்னிடம் காட்டவில்லை என்பதை உணர்கிறேன்.
ReplyDeleteநான் என்ன செய்வது? இப்படி பட்டவர்கள் திருந்த வாய்ப்பிருக்கிறாதா? அவர் gay என்றால் என்னை ஏமாற்றி திருமணம் புரிந்ததற்கு என்ன தண்டனை கிடைக்கும்? LIC திருமணத்திற்கு முன்பு போட்டிருக்கிறார். அதில் nominee ஆக தந்தை பெயரை போட்டிருக்கிறார். திருமணம் ஆகிவிட்டால் தானாகவே மனைவி பெயருக்கு மாறிவிடும் என்று கூறுகிறார். அது உண்மை தானா? இவர் எந்த விஷயத்தை பற்றிக் கூறினாலும் எனக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. நான் என்ன செய்வது?
எனக்கு விவாகரத்து பெற விருப்பம் இல்லை. ஏனென்றால் அதன் பிறகு இந்த சமூகம் பெண்களுக்கும், அவரது பெற்றோருக்கும் கொடுக்கும் இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. தவறுகள் செய்யாமலேயே பல இடங்களில் நாம் நிந்திக்கப் படுவோம். அப்படிபட்ட தருணங்களை நான் வெறுக்கிறேன். இப்படிப்பட்ட ஆண்கள் மாறுவார்களா?
நானும் அது தான் சரி என்று எண்ணினேன். நான் பேசாமல் இருந்தாலும், உன்னிடம் பேசாமல் என்னால் இருக்க முடியாது என்று வலிய வலிய பேசுவார். நீ கேட்பதை நான் வாங்கித் தருவேன், தொழில் சார்ந்த விஷயங்களை என்னிடம் கேட்கக் கூடாது என்பது தான் அவரது விருப்பம். நானும் கேட்பது கிடையாது. அவரது அம்மாவின் கொடுமை அதிகமானது, தினமும் சண்டை. மாமா,அத்தையும் அவர்களது சொந்த ஊரிற்கு சென்று விட்டனர். நானும் அவரும் தனிக் குடித்தனம் வந்துவிட்டோம். அதன் பிறகு ஆண் நண்பர்களுடன் தவறு செய்துவிட்டு வருகிறார் என்று கண்டறிந்தேன். அவரது ஜட்டியில் செண்ட் அடிப்பது, அவரது மனைவியாக பிற நடவடிக்கைகள் மூலம் கண்டறிந்தேன். இதனால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை வந்தது.ஆனால் அவர் இதுவரை அவரை ஒரு gay என்று என்னிடம் ஒத்துக்கொள்ளவில்லை. உன்னால் நிரூபிக்க முடியுமா என்று அடித்திருக்கிறார். என்னால் விவாகரத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தின் மானம் என்னாவது என்றே அமைதியாக இருக்கின்றேன். 2015 ஆகஸ்டு மாதம் ஒரு கல்லூரியில் பிரொபசர் வேலை வாங்கி தருவதாக திருமணம் செய்தார். மந்திரியிடம் எல்லாம் வேலைக்காக விசாரித்துவிட்டு இறுதியில் ஏமாற்றிவிட்டார். அதையும் பொறுத்துக்கொண்டேன். எனக்கு திறமை இருக்கிறது. TRB தேர்வு எழுதி வேலைக்கு நிச்சயமாக சென்றுவிடுவேன். 2016 மார்ச் மாதத்தில் அவரது கம்பெனியில் பாட்னருடன் ஏற்பட்ட தகராரில் கம்பெனியை மூடிவிட்டார். இதில் 12 லட்சம் கடன் வந்து விட்டது. வேலையும் இல்லாமல் இருந்தார். அவரை இந்த சமயத்தில் நான் தான் ஆறுதலாக இருந்தேன். தற்பொழுது ஆண் நண்பர்களுடன் பழக்கம் இல்லை என்று நினைக்கின்றேன். எனக்கு திருமணத்தில் நம்பிக்கை உண்டு. இவர் திருந்துவார் என்று எண்ணுகின்றேன். ஆனால் பல நேரங்களில் என்னிடம் அன்பாக இருக்கிறார். சில நேரங்களில் அன்பில்லாமல் நடந்து கொள்கிறார். அடிக்கவும், கடிக்கவும், கிள்ளவும் செய்கிறார். இதனால் பச்சை பச்சையாக உடம்பில் தழும்புகள் இருக்கும். அந்த நேரங்களில் அவர் உண்மையான அன்பு என்னிடம் காட்டவில்லை என்பதை உணர்கிறேன்.