முந்தைய பதிவுகளில் வரதட்சணை சட்டத்தைப்பற்றியும் அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் விளக்கியிருந்தேன். அதனை எத்தனை மருமகள்கள் புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. குறிப்பாக வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி? - பாடம் 3 ல் குறிப்பிட்டுள்ள பயன்பாடுகளை மீண்டும் ஒரு முறை இங்கே கொடுக்கிறேன். படித்து நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
“தனிக்குடித்தனம் போகவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள பயன்பாட்டிற்கு ஒரு நல்ல உதாரணம் கொடுத்து விளக்குவதற்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. வழக்கம் போல படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.
1. தனிக்குடித்தனம் போகவேண்டும் (இந்தவகையான பயன்பாட்டிற்கு பின்வரும் செய்தி ஒரு நல்ல செயல்முறை உதாரணம்)
2. மாமியார், மாமனாரை வீட்டை விட்டு விரட்டவேண்டும்
3. கணவரின் வயதான பெற்றோருக்கு பணம் தருவதை நிறுத்தவேண்டும்
4. உங்கள் வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும்
5. கணவரின் தம்பி தங்கைகளுக்கு செய்யும் உதவியை நிறுத்த வேண்டும்
6. உங்களின் ஆடம்பர வாழ்க்கையில் கணவர் குறுக்கிடுவதை தடுக்கவேண்டும்
7. மருமகள்களுக்கு இதைப் படிக்கும் போது கூச்சமாக இருக்கும் அதனால் நீங்கள் உங்கள் காதில் விழாமல் காதை மூடிக்கொண்டு படியுங்கள். என்ன இருந்தாலும் பெண்மைக்கே உரிய நாணம் தடுக்குமல்லவா. விரும்பிய ஆண் நண்பர்களுடன் பேசுவதை கணவர் தெரிந்து கொண்டார் அல்லது உங்கள் உரிமையில் தலையிட்டு அதை தடுக்க முயல்கிறார். அவரை வாயை மூடிக்கொண்டு ஒதுங்கியிருக்கச் செய்யவேண்டும்.
“தனிக்குடித்தனம் போகவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள பயன்பாட்டிற்கு ஒரு நல்ல உதாரணம் கொடுத்து விளக்குவதற்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. வழக்கம் போல படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.
தனிக்குடித்தனம் வராத கணவன் மீது வரதட்சணை வழக்கு
சிவகங்கை: குடும்ப பிரச்னையில் பெண்ணின் மாமனாரை மிரட்டியதாக தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது சிவகங்கை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிங்காரவேலன். இவருக்கும், பட்டமங்கலத்தை சேர்ந்த கார்மேகம் மகள் மீனாட்சிக்கும் 2009ல் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின், தனிக்குடித்தனம் செல்ல தன் கணவரை மீனாட்சி வற்புறுத்தினார். அவர் வர சம்மதிக்கவில்லை. இதற்கிடையில், தனது மகனை மீனாட்சி துன்புறுத்துவதாக சென்னை குடும்ப நல கோர்ட்டில் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நடக்கிறது.
இதற்கிடையில் மீனாட்சி, திருப்புத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக புகார் செய்தார்.
கடந்த மார்ச் 7 அன்று, திருப்புத்தூருக்கு ராமசாமி, அவரது மகன் விசாரணைக்கு வந்தனர். அங்கிருந்த சிவகங்கை தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், அவரது தம்பி இளங்கோவன், மீனாட்சியின் தாய் போதும்பொண்ணு ஆகியோர் மிரட்டி உள்ளனர். இது குறித்து ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுபடி, சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் குமாரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளார்.
வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்