"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


கணவனுக்கெதிராக செல்போனில் ஆதாரம் திரட்டுவது எப்படி?

மருமகள்களே,

உங்களுக்கு உபயோகமான ஒரு செய்தி. கணனுக்கு எதிராக வரதட்சணைப் புகார் கொடுக்கும்போது புகாருடன் நீங்கள் இணைக்கும் ஆதாரங்களுடன் (வரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்) கணவன் மற்றும் அவனது குடும்பத்தார் தொலைபேசியில் பேசிய பேச்சுக்களை பதிவு செய்து அதையும் உங்களது புகாருடன் இணைத்துவிடுங்கள். உங்களின் புகாரும் வழக்கும் மிகவும் உறுதியானதாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பின்வரும் செய்தியைப் படித்தால் உங்களுக்குப்புரியும்.

இதுபற்றிய தொழில் நுட்பத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள்!


சாட்டிங் மூலம் பல பெண்களை ஏமாற்றி கணவன் காதல் லீலை
தினகரன் 6/5/2011

சென்னை : சாட்டிங் மூலம் பல பெண்களை ஏமாற்றிவரும் தனது கணவரை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்வடிவு (27). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார்.

பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சொந்த ஊர் கோவை மாவட்டம். பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். என்னுடன் வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் பி.காம் படித்துள்ளார். இருவரும் காதலித்து 2009 பிப்ரவரி 1ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகுதான் கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் நான் கருவுற்றேன். கணவர் சாட்டிங் மூலம் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடன் சுற்றி திரிய ஆரம்பித்தார். அந்த பெண்களிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய்களை அவிழ்த்து விட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றார். இதை அறிந்த அந்த பெண் தொடர்பை துண்டித்து விட்டார்.

இந்நிலையில், மற்றொரு பெண்ணுடனும் தொடர்பு ஏற்படுத்தி, திருமணம் செய்வதற்காக, எனது பிரசவ செலவிற்காக வைத்திருந்த 1 லட்சம் மற்றும் 15 சவரன் நகைகளை செலவு செய்தார். அதன்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. போலீசில் புகார் அளித்தோம். சந்தோஷ்குமாரை கண்டுபிடித்து கொடுத்தனர்.

என்னுடன் சேர்ந்து வாழ்வதாக உறுதி அளித்தார். ஆனால், பெற்றோர் வீட்டிற்கு என்னை விரட்டினார். இதற்கு அவரது பெற்றோர் உடந்தையாக இருக்கின்றனர். தொடர்ந்து சாட்டிங் மூலம் எனது கணவர் பல பெண்களை ஏமாற்றி வருகிறார். அவரையும், அவரது பெற்றோரையும் கைது செய்து எனது பணம், நகையை மீட்டுத்தர வேண்டும். எனது, உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன் என்றார்.

முதல் இரவில் கதறிய பெண்

செந்தில்வடிவு & சந்தோஷ்குமார் தம்பதிகள் பதிவு திருமணம் செய்து கொண்ட அன்று இரவு ஒரு இளம்பெண் தன்னை ஏமாற்றி விட்டாயே என்று கூறி சந்தோஷ்குமாரிடம் போனில் கதறியதாக செந்தில்வடிவு தெரிவித்தார்.

செல்போனில் ஆதாரம்

தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ரோஷன் என்ற மகன் உள்ளான். சந்தோஷ்குமார் அடிக்கடி செல்போனில் பேசியது செந்தில்வடிவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, யாருடன் பேசுகிறார் என்பதை அறிந்து அந்த எண் மூலம் எதிர்முனையில் பேசிய பெண்ணிடம் நிலைமையை சொன்னார். அவர் சந்தோஷ்குமாரின் உண்மை குணத்தை அறிந்து செல்போன் பேச்சு முழுவதையும் பதிவு செய்து செந்தில்வடிவிடம் கொடுத்தார். தற்போது செந்தில் வடிவு இதை ஆதாரமாக கமிஷனரிடம் கொடுத்துள்ளார்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்