பின்வரும் செய்தியைப் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.
மனைவிக்கு பயந்து விமானத்தில் தப்ப முயன்ற கணவன் மும்பை ஏர்போர்ட்டில் கைது
தினமலர் செய்தி 25.1.2011
வரதட்சணை கொடுமை செய்துவிட்டு, விமானத்தில் அமெரிக்காவுக்கு தப்பிச்செல்ல இருந்த கணவனை, தகுந்த நேரத்தில் போலீசில் முறையிட்டு மடக்கினார் மனைவி. சாப்ட்வேர் இன்ஜியரான கணவன், மும்பை ஏர்போர்ட்டில் குடியுரிமைப்பிரிவு அதிகாரிகளிடம் சிக்கி திருதிருவென விழித்தார். இவரை விசாரணைக்காக கோவைக்கு அழைத்து வர தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
கோவை, ராமநாதபுரம், டி.நகர், அய்யப்பன் கோவில் வீதியில் வசிப்பவர் சுமித்ரா(29); எம்.பி.ஏ., பட்டதாரி. இவருக்கும் திருச்சி, முசிறியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சரவணகுமார்(31) என்பவருக்கும், 2006ல் ஆடம்பர திருமணம் நடந்தது. பெண் வீட்டார் 50 சவரன் நகை கொடுத்து, 10 லட்ச ரூபாய் செலவில் திருமணத்தை விமரிசையாக நடத்தினர். திருமணம் நடந்த போது, சுமித்ரா கோவையிலுள்ள தனியார் வங்கியிலும், சரவணகுமார் பெங்களூரிலுள்ள விப்ரோ நிறுவனத்திலும் பணியாற்றினர். அடுத்த சில நாட்களிலேயே சரவணகுமாருக்கு அமெரிக்காவிலுள்ள நிறுவனத்தில் வேலை கிடைத்து அங்கு சென்றுவிட்டார். அதன்பின், கோவையிலுள்ள மனைவி சுமித்ராவுக்கு போன் செய்த அவர், "உனது மாத சம்பளத்தை என் வங்கிக் கணக்கில் தவறாமல் செலுத்த வேண்டும்; ஏற்கனவே, நீ வாங்கிய இரண்டு மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்து' என, கட்டளையிட்டார். பணத்தின் மீது கணவன் குறியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த சுமித்ரா, அதன்படியே செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2009, மே மாதம் கோவைக்கு வந்த சரவணகுமார், மனைவியையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும், சரவணகுமாரின் உண்மையான முகம் வெளிப்பட்டது. "நீ, படித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்க வேண்டாம்' எனக்கூறி, மனைவிக்கு அங்கேயே வேலை தேடினார். இதற்காக, சுமித்ராவின், "பயோ-டேட்டோ'வை பல்வேறு நிறுவனங்களும் இணையதளம் வழியே அனுப்பினார். வேலைக்குச் செல்ல மறுத்த சுமித்ரா, தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததும் அடித்து துன்புறுத்த துவங்கினார். கருக்கலைப்பு செய்யாவிடில், விவாகரத்து செய்துவிடுவேன் எனவும் மிரட்டினார். மிரண்டு போன சுமித்ரா, கருக்கலைப்பு செய்து கொண்டார். கணவரின் தொல்லை தாங்காமல் அடுத்த சில நாட்களிலேயே கோவை வந்துவிட்டார். தன் நோக்கத்துக்கு உடன்படாததால் ஆத்திரமடைந்த சரவணகுமார், மனைவியுடன் போனில் பேசுவதை தவிர்த்தார்; தன் மொபைல் போன் எண்களையும் மாற்றிவிட்டார். கணவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் சுமித்ரா பரிவித்து வந்த நிலையில், எவ்வித தகவலும் தெரிவிக்காமல் கோவை வந்திறங்கினார் சரவணகுமார். அவருடன் சேர்ந்து வாழும் முயற்சியில் ஈடுபட்ட சுமித்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதிருப்தி அடைந்த அவர், போலீசில் முறையிடுவதாக எச்சரித்துள்ளார். போலீசார் கைது செய்துவிடுவார்களோ என உஷாரான சரவணகுமார், அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் இறங்கினார். இதுகுறித்து, கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்த சுமித்ரா, அமெரிக்காவுக்கு தப்பிச்செல்லும் முன் தன் கணவரை பிடிக்க வேண்டுமென்றும், அவர் வரதட்சணை துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்றும் தெரிவித்திருந்தார். ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சரவணகுமார், அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியை முறியடிக்கும் விதமாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, முக்கிய விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட் மற்றும் போட்டோ விவரங்கள் பரிமாறப்பட்டன. இந்நிலையில், கடந்த 21ம் தேதி அமெரிக்காவுக்கு செல்வதற்காக மும்பை விமான நிலையம் சென்ற சரவணகுமாரை, அங்குள்ள குடியுரிமைப்பிரிவு அதிகாரிகள், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்; காவலில் வைக்கப்பட்டார். இதுகுறித்த தகவல் கோவை மாநகர போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. சரவணகுமாரை கோவைக்கு அழைத்துவர, கமிஷனர் சைலேந்திரபாபு உத்தரவுப்படி, தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.
கோவை : மனைவியை தவிக்க விட்டு, அமெரிக்கா தப்பிச் செல்ல முயன்ற கணவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கோவை, ராமநாதபுரம், அய்யப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுமித்ரா(29); பட்டதாரி. 2006ல் இவருக்கும், திருச்சி, முசிறியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சரவணகுமாருக்கும் திருமணம் நடந்தது.
கோவை தனியார் வங்கியில் பணியாற்றி வந்த சுமித்ரா, கணவருடன் 2009ல் அமெரிக்கா சென்றார். கணவரின் சித்ரவதை, கட்டாய கருக்கலைப்பு மற்றும் மிரட்டலுக்கு பயந்து கோவை திரும்பினார். சமீபத்தில் கோவை வந்த சரவணகுமார், மனைவியுடன் முகம் கொடுத்து பேசாமல், மீண்டும் அமெரிக்கா செல்ல முயன்றார். கணவனின் பாராமுகம், தப்பும் முயற்சி பற்றி போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்பட்டது.
கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அனைத்து விமான நிலையங்களையும் உஷார்படுத்தினர். கடந்த 21ம் தேதி, மும்பை விமான நிலையத்தில் சரவணகுமார் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., பொன்னுத்தாய் குழுவினர் மும்பை சென்று, நேற்று முன்தினம் சரவணகுமாரை கோவை அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பின், நேற்று முன்தினம் ஜே.எம்.எண்: 6 கோர்ட்டில், மாஜிஸ்திரேட் ஜோதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்; 15 நாள் நீதிமன்ற காவலுக்காக, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
===========
புத்திசாலி மருமகளான இவர் தனக்கு அமெரிக்க நாட்டில் கணவன் கொடுமை செய்ததாகவும், கருக்கலைப்பு செய்யச் சொன்னதாகவும் இந்தியாவிற்கு வந்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். நீங்கள் இந்த செய்தியில் ஒன்றை முக்கியமாக கவனிக்கவேண்டும். இந்த மருமகள் M.B.A. என்ற உயர்கல்வி கற்றவர், வங்கியில் பணிபுரிந்தவர் என்று செய்தியில் உள்ளது. ஆனால் இவர் இந்தக் கொடுமைகளைப் பற்றி அமெரிக்க போலிஸில் உடனடியாக புகார் கூறவில்லை. அப்படிக் கூறியிருந்தால் உடனடியாக அந்த நாட்டு போலிஸ் கணவனை சிறையில் அடைத்திருப்பார்கள். அதுவும் கருக்கலைப்பு செய்யச்சொல்லி மனைவியை கொடுமை செய்தல் என்பது அமெரிக்க சட்டப்படி மிகவும் கொடுமையான குற்றமாகும்.இங்குதான் எல்லா வெளிநாட்டு வாழ் மருமகள்களும் ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். அமெரிக்கநாட்டில் உங்கள் கணவர் மீது நீங்கள் புகார் கொடுத்தால் “நீங்கள் நினைப்பதை” அடைவது சற்றுக் கடினம். ஏனென்றால் அமெரிக்க போலிஸிற்கோ, நீதிமன்றத்திற்கோ இந்திய “மருமகள்களின் கண்ணீரின்” மதிப்பு தெரியாது.
ஆனால் அதுவே நீங்கள் இந்தியாவிற்கு வந்து போலிஸ் முன் சற்று கண்ணைக் கசக்கினால் போதும் கணவனையும் அவனது குடும்பத்தையும் எந்தக்கேள்வியுமின்றி கூண்டோடு கைது செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள்.
இந்தியாவில் மருமகளின் கண்களுக்கும், கண்ணீருக்கும் சமுதாயத்தில் அப்படி ஒரு மதிப்பிருக்கிறது. நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையென்றால் பின்வரும் செய்தியையும் பாருங்கள்.
சுமார் 23,000 பேரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த சம்பவத்தில் அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் மெத்தனமாக இருந்தது என்பதும், குறைந்தபட்ச இழப்பீட்டைத்தான் அரசு பெற்றுத்தந்தது என்பதும்தான் இதுவரையிலும் விவாதமாக இருந்து வந்தது. ஆனால் இப்போதுதான் அம்பலமாகியிருக்கிறது, குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியும் பறித்த கதை.
வாரன் ஆன்டர்சனை போபாலிலிருந்து தனி விமானத்தில் தில்லிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குத் தப்பவிட்டனர் என்ற உண்மை இப்போது வெளியுலகுக்குத் தெரிந்த பிறகு, அதற்குக் காரணமே அப்போதைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங்தான் என்று கூசாமல் பழிகூறி பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது காங்கிரஸ்.
அர்ஜுன் சிங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி "சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுமே என்று அஞ்சியே வாரன் ஆன்டர்சன் அனுப்பி வைக்கப்பட்டதாக'வும் அர்ஜுன் சிங் அந்த நோக்கிலேயே செயல்பட்டதாகவும் கூறி அவரையும் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். இது இந்திய அரசின் நிர்வாக லட்சணம் எப்படி இருக்கிறது என்பதையே பறைசாற்றுகிறது.
23,000 பேர் இறந்துபோக காரணமான போபால் விஷவாயு கசிவில் நேரடித்தொடர்புடைய ஆட்களை பாதுகாப்பாக விமானத்தில் ஏற்றி அமெரிக்காவிற்கு அனுப்பிய இதே நாட்டில் அமெரிக்காவில் நடந்ததாக சொல்லப்பட்ட கொடுமைக்காக இந்தியாவிற்கு வந்து கண்ணீர் சிந்திய ஒரே ஒரு மருமகளின் கண்ணீரைத்துடைப்பதற்காக விமானத்தில் ஏறவிருந்த கணவனை மும்பை வரை சென்று கைதுசெய்து கையோடு அழைத்துவந்து கோவை சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதிலிருந்து மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் 23,000 அப்பாவிகள் இறந்து அவர்களின் குடும்பங்கள் விடும் கண்ணீரைவிட ஒரே ஒரு இந்திய மருமகளின் கண்ணீருக்கு ஆற்றல் மிகவும் அதிகம்!
அதனால் மருமகள்கள் தங்களது கண்ணீரை இந்தியாவில் தக்க சமயத்தில் சிந்தினால் அதன் மூலம் தங்களது குறிக்கோளை எளிதாக அடையலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் உங்களுக்கு உதவினாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து அவற்றை பக்குவமாகப் பயன்படுத்தத் தெரிந்தால்தான் கணவனின் குடும்பத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். இதுதான் இந்திய மருமகளாக இருப்பதற்கான அடிப்படை ரகசியம்.
வாழ்த்துக்கள்!
வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படி
அப்படியே மருமகன்ன்னு ஒரு பிளாக் ஆரம்பிச்சிங்கன்னா நல்லா இருக்கும்
ReplyDelete