"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


சென்னையில் ஆண்கள் செய்த அட்டகாசம்

சென்ற வாரம் ஏதோ ஆண்கள் தினம் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அருகே சென்று பார்த்தபோது ஏதோ நோட்டிஸ் கொடுத்தார்கள். அதில் ஆண்களுக்கு என்று தனியாக ஒரு அமைச்சகம் மற்றும் தேசிய அளவில் ஆண்கள் நல வாரியம் மற்றும் மாநில அளவில் ஆண்கள் நல வாரியம் வேண்டும் என்று கோரிக்கை எழுதப்பட்டிருந்தது.

தற்போது மருமகள்களுக்கு மட்டுமே தனியாக அமைச்சகம் மற்றும் வாரியங்கள் இருக்கின்றன. இது தவிர NGO என்று சொல்லப்படும் அரசு நிதியுதவி பெறும் பல அமைப்புகள் நாடு முழுதும் மருமகள்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஆண்கள் தங்களுக்கும் மருமகள்களுக்கு இருப்பதுபோல தனியாக அமைச்சகம் வேண்டும் என்று கேட்பது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கை.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மருமகள்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று வினோதமான கோரிக்கைகளும் காதில் விழுந்தது. அதைக்கேட்டபோது மிகவும் சிரிப்பாக இருந்தது. இவர்கள் போடும் கூப்பாடுகளை யாரும் காதில் வாங்கமாட்டார்கள் என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதைப்பற்றி கீழுள்ள வீடியோவில் கூட இரண்டு பொதுமக்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

அதனால் மருமகள்கள் கொஞ்சமும் தயங்காமல் வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தி இதுபோன்று கூச்சலிடும் ஆண்களை கட்டுப்படுத்தினால்தான் வருங்காலத்திலும் இந்திய மருமகள்கள் தங்கள் குடும்பங்களிலும், நாட்டிலும் செல்வாக்குடன் வாழமுடியும்.

உங்களுக்காக அந்த வீடியோவையும் கீழே கொடுத்திருக்கிறேன். பார்த்து தெளிவாக சிந்தித்து வரதட்சணை சட்டங்கள் மூலம் இவர்களை எப்படி அடக்கலாம் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!









7 comments:

  1. // மருமகள்கள் கொஞ்சமும் தயங்காமல் வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தி இதுபோன்று கூச்சலிடும் ஆண்களை கட்டுப்படுத்தினால்தான் வருங்காலத்திலும் இந்திய மருமகள்கள் தங்கள் குடும்பங்களிலும், நாட்டிலும் செல்வாக்குடன் வாழமுடியும். //

    எல்லாமும் உங்களிடம்தான் இருப்பதாக ஒரு நினைப்பு? அவர்களுக்கும் உரிமைகள் உண்டு, அதை தடுக்க எவருக்கும் அதிகாரம் இல்லை.

    // வருங்காலத்திலும் இந்திய மருமகள்கள் தங்கள் குடும்பங்களிலும், நாட்டிலும் செல்வாக்குடன் வாழமுடியும். //

    ஆண்களை கேவலபடுத்தி, துன்புறுத்தினால் அப்புறம் மருமகள்கள் எங்கு குடும்பங்களிலும், நாட்டிலும் செல்வாக்காக வாழமுடியும்?

    வீண் அகந்தையும், கர்வமும் ,எதிர்மறை எண்ணங்களும் காரியத்திற்கு ஆகாது. வைத்தவரை அழித்து சிதைக்கும் அன்றி குடும்பங்களும் செல்வாக்கும் எங்கிருந்து வரும்? சற்று புத்திசாலி தனமாக எழுதவும.

    ReplyDelete
  2. மாணிக்கம் அவர்களே,

    தங்களின் கருத்திற்கு நன்றி.

    ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கும் போதெல்லாம் மருமகள்களுக்குச் சிறப்புச்சட்டங்கள் உருவாக்கப்பட்டு ஆண்களை கட்டுப்படுத்துவதற்காகத்தான் அரசாங்கம் பல சட்டங்களை மருமகள்களுக்குக் கொடுத்திருக்கிறது.

    இப்போது ஆண்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்திருப்பது மருமகள்களின் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால் இவர்களை எப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால்தான் மருமகள்களுக்கும், நாட்டிற்கும் நல்லது. அதனால்தான் மருமகள் நல அமைச்சகம், மருமகள் நலவாரியம் என்று அரசாங்கமே மருமகள்களுக்காக தனியாக சலுகைகளை வழங்கி பல சிறப்புச் சட்டங்களையும் உருவாக்கி உதவி செய்துவருகிறது.

    அதனால் இதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் மருமகள்கள் அரசாங்கத்திற்கு உதவி செய்கிறார்கள்.

    ReplyDelete
  3. ஆமாம், கட்டாயம் இது போன்ற சட்டங்கள் பெருக வேண்டும். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு ஆண்மகனும், ஆண்களைப் பெற்றவர்களும் இதுபோன்ற சட்டங்களில் சிக்கி ஜெயிலுக்கு போக வேண்டும். அதுவும் பெரிய பதவில் இருப்பவர்களும், சமுதாயத்தில் உள்ள முக்கிய புள்ளிகளும் சிக்க வேண்டும்.

    அப்போதுதான் இந்தியப் பெண்கள் முன்னேற்றம் அடைவார்கள். ஆணாதிக்கமும் அடங்கும்.

    ஆண்களுக்கு எதற்கு உரிமை? பேசாமல் மனைவி சொல்படி கேட்டு நடந்துகொண்டு, அவர் கேட்கிறபோது பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு கம்னு கிடக்க வேண்டியதுதானே!

    வாழ்க பெண்ணியம்; வளர்க வரதட்சணைக் கொடுமை ஒழிப்பு மற்றும் குடும்ப வன்முறை பாதுகாப்பு போன்ற சிறப்பு சட்டங்கள்!

    ReplyDelete
  4. வருங்காலங்களில் "மருமகள்" என்ற Concept கூட இல்லாமல் போய்விடும் போல உள்ளது.
    living to gather - என்ற மன நிலைக்கு இன்றைய ஆண்களும் பெண்களும் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
    வருங்காலங்களில் மருமகள், மாமியார்....அப்புறம் "ஆண்கள் செய்யும் அட்டகாசம் " எல்லாம் இது போல நெட்டில் தான் படிக்கவேண்டியிருக்கும்.
    ஒன்றை மட்டும் சரியாக, தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்: பெண்களின் கொடுமைகளுக்கு 90% பிற பெண்களேதான் காரணம் என்பதை. மீதம் உள்ள 10% மட்டுமே ஆண்கள் காரணமாக இருக்கலாம்.

    அதுசரி, அது எப்படி வரதட்சணை சட்டத்தை பயன்படுத்தி
    //ஆண்களுக்கு என்று தனியாக ஒரு அமைச்சகம் மற்றும் தேசிய அளவில் ஆண்கள் நல வாரியம் மற்றும் மாநில அளவில் ஆண்கள் நல வாரியம் //

    இவைகளை தடுப்பீர்கள் அம்மணி?!
    எப்படியோ குடும்பம் என்ற ஒரு சமுதாய அமைப்பு அழிந்து ஒழிந்தால் சரிதான். அன்றுதான் ஆண்களின் விடுதலை நாள்.

    ReplyDelete
  5. I thing that you are writing these articles with a funny and a playful mood.
    Am I right?

    ReplyDelete
  6. மாணிக்கம் அவர்களே,

    மீண்டும் வந்து தங்களது கருத்தை பதிவுசெய்தமைக்கு மிக்க நன்றி.

    அதுசரி, அது எப்படி வரதட்சணை சட்டத்தை பயன்படுத்தி
    //ஆண்களுக்கு என்று தனியாக ஒரு அமைச்சகம் மற்றும் தேசிய அளவில் ஆண்கள் நல வாரியம் மற்றும் மாநில அளவில் ஆண்கள் நல வாரியம் //
    இவைகளை தடுப்பீர்கள் அம்மணி?!


    மருமகளிடம் சந்தேகம் கேட்கும் அளவிற்கு பொங்கியெழும் உங்களது ஆர்வத்திற்கு மிகுந்த பாராட்டுகள்.

    இந்த கேள்விகளுக்கான பதில்கள் முந்தைய பதிவுகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    உங்களின் வசதிக்காக அந்த இணைப்புகளை மீண்டும் தருகிறேன். மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் எழுதுங்கள். இதேபோன்று மனதில் ஆயிரம் சந்தேககங்களை வைத்துக்கொண்டு வெளிப்படையாக கேட்பதற்கு கூச்சப்படும் பல மருமகள்களும் பயனடைவார்கள்.

    வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1
    வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2
    வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3
    வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4

    //எப்படியோ குடும்பம் என்ற ஒரு சமுதாய அமைப்பு அழிந்து ஒழிந்தால் சரிதான்.//

    நீங்கள் மருமகளை தவறாக நினைக்கவேண்டாம். குடும்பங்கள் எப்போதும் இருக்கவேண்டும் என்பதே மருமகளின் உயரிய நோக்கம். குடும்பங்களை ஒழிப்பதல்ல இந்த பதிவுகளின் நோக்கம். குடும்பங்கள் இருக்கவேண்டும். அங்கே ஆண்களும் இருக்கவேண்டும். ஆனால் குடும்பத்தில் உள்ள அனைத்து அனைத்து ஆண்களையும் அடக்கியாளும் அதிகாரம் மருமகள்களுக்குக் கிடைக்கவேண்டும். இந்த குறிக்கோளை எந்தவகையிலாவது அடையவேண்டும்.

    நீங்கள் நினைப்பதுபோல் இது ஒன்றும் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது கேளிசெய்வதற்காகவோ எழுதப்படவில்லை. இந்திய மருமகள்களின் நலனுக்காகவே உயரிய நோக்கத்துடன் எழுதப்படுகிறது.

    ReplyDelete
  7. தமிழ்498A அவர்களே,

    //வாழ்க பெண்ணியம்; வளர்க வரதட்சணைக் கொடுமை ஒழிப்பு மற்றும் குடும்ப வன்முறை பாதுகாப்பு போன்ற சிறப்பு சட்டங்கள்!//

    தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்