சமீப காலமாக இந்திய மருமகள்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு பாதுகாப்பு தரும் சாதகமான சட்டங்களுக்கு எதிராகவும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக இந்திய அரசாங்கம் இதுவரை இந்திய மருமகளின் ஆபத்துக்கால அன்புத் தோழியாக இருந்துவந்த IPC498a என்ற வரதட்சணை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முயற்சி செய்துவருகிறது. இது இந்திய மருமகள்களுக்கு மிகவும் ஒரு ஆபத்தான சூழ்நிலையாகும்.
இதுபோன்ற தருணத்தில் பெங்களூரில் வாழும் மாமியார்கள் மற்றும் கணவர்கள் சாலையில் ஊர்வலமாகச் சென்று மருமகள் பாதுகாப்பு சட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு அட்டூழியங்கள் செய்திருக்கிறார்கள். அந்த வீடியோவை உங்களுக்காத் தந்திருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கவனமாகப் பாருங்கள்.
வீடியோ - 1
வீடியோ - 2
வீடியோ - 3
வீடியோ - 2
வீடியோ - 3
இந்த சாதகமற்ற சூழ்நிலையைக் கண்டு மருமகள்கள் கொஞ்சமும் கலங்கவேண்டாம். கணவன்களும், மாமியார்களும் போடும் கூப்பாடுகளைக் கண்ட இந்திய அரசாங்கம் அவர்களைத் திருப்திபடுத்துவதற்காக IPC498a சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதாக அறிவித்திருந்தாலும் அது என்றுமே மருமகள்களின் நட்பினை இழக்கத் தயாராக இல்லை.
அதனால் IPC498a சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதாக அறிவித்த அதே நேரத்தில் குடும்ப வன்முறை சட்டத்தை (Domestic Violence Act) நன்றாக முடுக்கிவிட ஆரம்பித்திருக்கிறது. இது IPC498A சட்டத்தைவிட மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகும். அதனால் மருமகள்கள் இதுபோன்ற சூழ்நிலையைக் கண்டு கலங்கிவிடாமல் தயங்காமல் குடும்ப வன்முறை சட்டத்தை பயன்படுத்த ஆரம்பித்து விடலாம். இந்த சட்டத்தில் உள்ள நுணுக்கங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
இந்த சட்டத்தை பயன்படுத்துவதில் ஏதாவது தயக்கம் இருந்தால் வரதட்சணை சட்டங்கள் மூலம் மனைவி கணவனை மிரட்டினால் தவறில்லை என்ற பதிவினைப் படியுங்கள். மனதில் தெளிவு பிறக்கும்.
வாழ்த்துக்கள்!
என் கணவனின் பொறுப்பின்மையால்
ReplyDeleteபல மனரீதியான கொடுக்குமைகுள்ளாகி
தற்கொலை எண்ணம் தலை தூக்கியதாலும் , அதனால் என்னால்
என் குழந்தைக்குஆபத்து வந்து விட கூடாதென அவனையும் பிரிந்து
வெளி நாட்டுக்கு வந்துவிட்டேன். என் குழந்தையை அவனிடம் இருந்து பாதுகாக்க வழி என்ன?
எனக்கு உதவுங்கள்.
1. கணவனோ, அவனைச் சார்ந்தவர்களோ (நண்பர்கள் உட்பட) மனைவியை உடலளவிலோ அல்லது மனதளவிலோ துன்புறுத்தினால் அதற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத்தர IPC498A சட்டத்தில் வழி இருக்கிறது.
ReplyDelete2. எனக்கு உங்களது தகவல் சரியாகப் புரியவில்லை. குழந்தை இப்போது உங்களுடன் இருக்கிறதா? அல்லது பொறுபில்லா கணவனுடன் இருக்கிறதா? குழந்தையை உங்களிடம் வைத்துக்கொள்ள இந்திய சட்டங்கள் பல வழிகளில் உதவுகின்றன. உங்களது தகவலைப் பொறுத்துதான் பதில் சொல்ல முடியும்.
வாழ்த்துக்கள்!