இந்த விதிமுறையை மீறி NRI ஆணுக்கு திருமணம் செய்துவைத்தால் பிறகு வாழ்க்கை முழுதும் அழுதுகொண்டுதான் இருக்கவேண்டும் என்பதை “47 நாட்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே காட்டிவிட்டார்கள் நமது திரைப்பட மேதைகள்.
இந்த விஷயம் தெரியாமல் இன்றும் பல பெற்றோர்கள் தங்களது மகளை NRI -க்கு திருமணம் செய்துவைத்தால் வாழ்வு நன்றாக இருக்கும் என்று நினைத்து தங்களுக்குத் தெரியாமலேயே தங்களது மகளை பாழுங்கிணற்றுக்குள் தள்ளி விடுகிறார்கள்.
பிறகு திருமணமான சில மாதங்களிலேயே அந்த புதுமணப்பெண் தான் கண்ட கனவெல்லாம் நிறைவேறாமல் புதுக்கணவன் தன் சொற்படி நடக்காமல் இருக்கிறானே என்று ஏங்கி பெருத்த ஏமாற்றம் அடையும்போதுதான் NRI கணவன் தனக்கு வரதட்சணைக் கொடுமை மற்றும் ||Sex Torture|| செய்வதை உணர ஆரம்பிக்கிறார்.
கடைசியில் இந்த புது மருமகள் தாங்கள் NRI கணவனுடன் குடும்பம் நடத்தும் அந்த நாடுகளில் இருக்கும் காவல்துறையை நம்பாமல் இந்தியாவிற்கு ஓடிவந்து இந்தியக் காவல்துறையிடம்தான் கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுப்பேன் என்று கண்ணை கசக்குவதைக்கண்டால் காண்பவர் மனம் என்ன பாடுபடும்? இதுபோன்ற துயரமான சூழ்நிலையில் பெண்ணைப் பெற்றவர்களின் மனநிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
வழக்கறிஞர் மற்றும் காவல்துறை உதவியோடு NRI கணவன் மீது வரதட்சணைக் கொடுமை புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்தாலும் வெளிநாடுகளில் ஒளிந்து வாழும் இந்த அயோக்கியர்களை அவ்வளவு எளிதாக இந்தியாவிற்கு பிடித்துக்கொண்டு வரமுடிவதில்லை.
NRI கணவனை இதுபோன்று இந்தியாவிற்கு இழுத்து வரமுடியாமல் துன்பப்படும் மருமகள்களுக்காகவே இந்திய அரசாங்கம் Arrest Warrant, Look Out Circular (LOC), Red Corner Notice (RCN), Passport Impounding போன்ற பல உயர்தரமான வழிமுறைகளைக் கொடுத்து உதவி செய்யக் காத்திருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல மருமகள்களுக்கு இதுபோன்ற வழிமுறைகளைப் பற்றி சரியான விழிப்புணர்ச்சி இல்லை.
அதனால் திருமணத்தின்போதே கணவனைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் பின்வரும் LOC விண்ணப்பத்தில் பதிவு செய்து வைத்துக்கொண்டால் தக்க சமயத்தில் NRI கணவனை “கட்டம் கட்டி” (Sketch) கழுத்தைப் பிடித்து இழுத்துவர உதவியாக இருக்கும்.
பையனின் ஜாதத்தை வாங்குவது போல அவனைப் பற்றிய இந்த "Special" ஜாதகத்தையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டியது பெண்ணைப் பெற்றவர்களின் பொறுப்பு.
திருமணப் பத்திரிக்கை அச்சடிக்கும்போதே கீழே கொடுக்கப்பட்டுள்ள LOC படிவத்தையும் ஒரு நகல் எடுத்து கணவனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து பத்திரமாக வங்கி லாக்கரில் வைத்துக்கொண்டால் பிறகு தக்க சமயத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
(படத்தின் மீது Click செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்)
நீங்கள் உங்கள் கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுக்கும்போது இந்த படிவத்தையும் சேர்த்து காவல்நிலையத்தில் கொடுத்து “கவனித்துவிட்டால்” போதும் உடனடியாக உங்கள் கணவனை தேடப்படும் கொடிய குற்றவாளி என அறிவித்து இந்தியாவில் இருக்கும் அனைத்து விமான நிலையங்களிலும், கப்பல் துறைமுகங்களிலும் எச்சரிக்கை செய்து விடுவார்கள். உங்கள் NRI கணவன் எப்போது இந்தியாவிற்குள் காலடி எடுத்துவைத்தாலும் பொறியில் சிக்கும் எலியைப் போல பிடித்துவிடலாம்.
இந்த LOC படிவம் வெளிநாட்டில் இருக்கும் கணவனை பிடிப்பதற்கு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் கொடுமைக்கார கணவன் இந்திய எல்லையை விட்டு தப்பிச் செல்லாமல் விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிக்கவும் பயன்படும். இதைப்பற்றி முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன் படித்து கவனமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள் (மனைவிக்கு பயந்து விமானத்தில் தப்ப முயன்ற கணவன் மும்பை ஏர்போர்ட்டில் கைது)
அடுத்த பதிவில் NRI கணவனுக்கு எதிராக உங்கள் ஊரிலேயே இருக்கும் மகளிர் காவல்நிலையத்தைப் பயன்படுத்தி International Criminal என்று பட்டம் சூட்டி சர்வதேச அளவில் “கட்டம் கட்டுவது” (Red Corner Notice) எப்படி என்று எழுதுகிறேன்.
வாழ்த்துக்கள்!!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்