"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1

மருமகள்களே,

முந்தைய பதிவில் கணவரையும் அவரது குடும்பத்தையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பது எப்படி என்பதற்கு ஒரு உதாரண செய்தியுடன் விளக்கியிருந்தேன். இந்தப் பதிவில் வரதட்சணை தடுப்புச்சட்டத்தைப் பற்றி ஒரு விளக்கம் தருகிறேன். குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வழக்கம் போல் இந்த சட்டத்தையும் வெளிநாடு மற்றும் உள்நாடு, இந்தியக் குடிமகள் அல்லது வேறுநாட்டு குடிமகள் யார் வேண்டுமானாலும் தாராளமாகப் பயன்படுத்தலாம். எல்லாம் இலவசம். ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால் மருமகளாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.

மருமகள்களை மட்டும் காப்பாற்றுவதற்காகவே வரதட்சணை தடுப்புச்சட்டம் 1961ம் ஆண்டில் இயற்றப்பட்டது. இதில் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் பிரிவுகள் 3 & 4.

பிரிவு 4

இதன்படி நீங்கள் உங்கள் கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ அல்லது அவரது நண்பர்களோ உங்களை வரதட்சணை கேட்டதாக சும்மா ஒரு பொய் சொன்னால் கூட போதும். உடனே அவர்களை கூண்டோடு தூக்கி உள்ளே போட்டுவிடுவார்கள்.

அந்தக் காலத்தில் 1960களில் மருமகள்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வரதட்சணை கேட்டதாக மருமகள் சொன்னால் அது உண்மையில்லை என்று கணவரும் அவரது குடும்பத்தாரும் தான் நிருபிக்கவேண்டும், மருமகள் எந்தவித ஆதாரமும் காட்டத்தேவையில்லை என்று மூதாதையர்கள் சட்டத்தை எழுதிவிட்டார்கள். அதனால்
அந்தக் குற்றச்சாட்டைப் பொய் என நிருபிக்கவேண்டியது கணவரும் அவரது குடும்பத்தாரும் தான்.

ஆனால் இந்தக் காலத்தில் எல்லா மருமகள்களும் அப்படி கிடையாது.
எத்தனை பொய் சொல்கிறார்கள். ஒரு நாளைக்கு எத்தனை பொய் சொல்லவேண்டியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பொய் என்பது வாழ்க்கையில் தவிர்க்கமுடியாததாக மாறிவிட்டது. இருந்தாலும் 1960களில் எழுதப்பட்ட சட்டம் மட்டும் இன்னும் இந்தக்காலத்து மருமகள்களும் பொய் சொல்லமாட்டார்கள் என நம்பிக்கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இருந்தது போல இன்றும் மருமகள்கள் இருப்பார்கள் என்று சட்டம் நினைப்பது சட்டத்தின் தவறு. மருமகள்களின் தவறல்ல. சட்டமும், சமூகமும் அப்படி நம்பிக்கொண்டிருக்கும் வரை மருமகள்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அதனால்
நீங்கள் பொய் சொன்னால் கூட உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இது வரை பொய் சொன்ன மருமகள்களை எந்த நீதிமன்றமும் தண்டித்ததில்லை. ஏனென்றால் வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் பொய் சொல்லும் மருமகளை தண்டிக்க எந்த சட்டப் பிரிவும் இல்லை. அப்படி பொய் சொல்லும் மருமகளை தண்டிக்க ஒரு புதிய சட்டப் பிரிவை சேர்க்க இதுவரை யாருக்கும் தைரியமும் இல்லை. அது தான் இந்திய சட்டத்தின் சிறப்பம்சம்.

அதனால் தயங்காமல் இந்த சட்டப்பிரிவை வரதட்சணை அல்லாத வேறு விதமான பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதற்குக் கூட தயங்காமல் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு கணவர் அவரின் தயாரிடம் பேசுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை அதை தடுக்கவேண்டும் என்றால் கூட மாமியார் அல்லது கணவர் அல்லது இருவருமே வரதட்சணை கேட்பதாகச் சொல்லாம். இதுவரை பல மருமகள்கள் வெற்றிகரமாக இதைப் பயன்படுத்தி தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். கடைசியில் நீதிமன்றத்தில் அது பொய் என்று கணவர் நிருபித்தாலும் நீதிமன்றம் மருமகளை தண்டிக்காது. அது தான் இந்திய நாட்டு சட்ட நடைமுறை.

பிரிவு 3

இந்தப் பிரிவின்படி வரதட்சணை கொடுப்பதோ அல்லது வாங்குவதோ குற்றம். ஆனால் இதுவரை பல மருமகள்கள் திருமணத்திற்கு முன்பே கணவரின் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு அதை தட்டாமல் நானும் எனது குடும்பத்தாரும் கொடுத்தோம் என தைரியமாக புகாரில் எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் வரதட்சணை கொடுத்ததாக நீங்கள் ஒரு பொய் புகார் கொடுத்தாலும் புகாரை பதிவு செய்யும் போலிஸ் வரதட்சணை வாங்கியதாக குற்றம் சாட்டி கணவரையும் அவரது குடும்பத்தை மட்டுமே கைது செய்வார்கள்.

நீங்களே உங்கள் கைப்பட வரதட்சணை கொடுத்ததாக ஒப்புக்கொண்டு புகார் எழுதித்தந்திருந்தாலும் வரதட்சணை கொடுத்த குற்றத்திற்காக உங்களையோ உங்களது பெற்றோரையோ ஏன் என்று கூட கேட்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக உங்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.

அதன் பிறகு நீதிமன்றத்திற்கு வழக்குப் போனாலும் நீதிமன்றமும் கணவரையும் அவரது குடும்பத்தாரையும் மட்டுமே வரதட்சணை ஏன் வாங்கினாய் என்று கேட்டு நோண்டிக்கொண்டிருக்கும். வரதட்சணை கொடுப்பதும் குற்றம் தான், நீங்கள் ஏன் கொடுத்தீர்கள் என்று உங்களையோ உங்களது பெற்றோரையோ ஒரு கேள்விக் கூட கேட்காது. இதுவரை இப்படித்தான் போலிஸும் நீதிமன்றங்களும் வரதட்சணை வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனால் நீங்கள் ஒரு துளி கூட பயப்படவேண்டியதில்லை.

மேலும் இந்தப் பிரிவு 3 ல் ஒரு சாதகமான வசதி இருக்கிறது. அது என்னவென்றால் திருமணத்தின் போது நீங்கள் பல லட்சங்கள், பொருட்கள், மற்றும் நகைகளை வரதட்சணையாக கொடுத்ததாக புகாரில் எழுதித்தந்து அவைகளை திருப்பித் தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்கலாம். சமையலில் எவ்வளவு உப்பு காரம் வேண்டுமோ அவ்வளவு சேர்ப்பது போல உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எழுதலாம்.

வரதட்சணை கொடுப்பதே குற்றம் அப்படியேயிருந்தாலும் உங்களுக்கு எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது என்று போலிஸோ, நீதிமன்றமோ கொஞ்சம் கூட யோசிக்கமாட்டார்கள். ஏனென்றால் சட்டப்புத்தகத்தில் இப்படியெல்லாம் யோசிக்கவேண்டும் என்று எந்தப் பாடமும் இல்லை. அதனால் அவர்கள் இப்படியெல்லாம் யோசித்துவிடுவார்களோ என்று நீங்கள் கனவு கூட காணவேண்டாம். நீங்கள் பட்டியலிடும் பொருட்களை வாங்கும் அளவிற்கு உங்களுக்கு வசதியிருந்திருக்குமா அல்லது அந்த பொருட்களோ, நகைகளோ, பல லட்சங்களோ எப்படி வந்தது என்று ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக நீங்கள் பட்டியலில் எழுதியிருக்கும் கொடுக்காத பொருட்களை கூட கணவர் திருப்பித் தரவேண்டும் என்று கணவரின் சட்டைக் காலரைப் பிடித்துக்கொள்வார்கள்.

உங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கலாம் நான் நன்கு படித்திருக்கிறேன், நல்ல உயர் பதவியில் இருக்கிறேன், வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் எனக்கு எப்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம் தான் என்று தெரியாமல் இருக்குமா என்று யாராவது கேட்கமாட்டார்களா என்ற எண்ணம் உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கலாம். அதைப்பற்றி சுத்தமாக ஒரு துளி கூட கவலைப்படாதீர்கள். எனக்குத் தெரிந்தவரை வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் 3- வது பிரிவு படி வரதட்சணை கொடுத்த குற்றத்திற்காக நன்கு படித்த உயர் பதவியிலுள்ள மருமகளையோ அல்லது அவரது பெற்றோர்களையோ இதுவரை போலிஸோ, நீதிமன்றமோ கைது செய்து சிறைக்கு அனுப்பியதாக செய்தித்தாளில் கூட செய்தி வந்ததுகிடையாது.

நீங்கள் புகார் பதிவு செய்த உடனே செய்தித்தாள் முதல் நீதித்துறை வரை கணவரை மட்டுமே குற்றவாளியாக பார்ப்பார்கள். வரதட்சணை கொடுத்த குற்றவாளியான மருமகளையோ அல்லது அவரது குடும்பத்தாரையோ யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். இது மருமகள்களுக்கு மிகவும் சாதகமான ஒரு நல்ல விஷயம் தானே!

உங்களுக்கு அப்படியும் என் வார்த்தையில் ஒரு சந்தேகம் இருந்தால் கீழுள்ள செய்தியில் பாருங்கள் வங்கியில் துணை மேலாளராக இருந்த ஒரு மருமகள் அதுவும் ஒரு போலிஸ் அதிகாரிக்கு வரதட்சணை கொடுத்ததாக புகார் செய்து போலிஸும் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால் வரதட்சணை தடுப்புச் சட்டப் பிரிவு 3 & 4 கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது அந்தக் கணவர் மீது மட்டும் தான். வங்கி மேலாளராக இருந்த அந்த மருமகள் மீது ஒரு வழக்கும் இல்லை பாருங்கள். அவருக்கு என்ன வரதட்சணை கொடுப்பது தவறு என்று தெரியாமலாயிருக்கும் ? அதனால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. இன்றே எடுங்கள் பேனாவையும் ஒரு பேப்பரையும் உங்களுக்குத் தேவையானபடி எழுதுங்கள். உங்களது குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள். சட்டங்கள் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கின்றன.

கீழுள்ள செய்தியில் பல சட்டப்பிரிவுகள் சொல்லப்பட்டிருக்கிது. அவற்றை ஒவ்வொன்றாக எப்படி பயன்படுத்துவது என்று பிறகு விவரிக்கிறேன். எல்லாவற்றிலும் 498A என்ற பிரிவு தான் ராணி, மருமகள்களின் தோழி. அதன் அருமை பெருமைகளை விவரிக்க ஒரு தனி இணையதளமே தேவைப்படும். அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு கீழுள்ள செய்தியில் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3& 4 எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்று மட்டும் கவனமாகப் பாருங்கள்.

வாழ்த்துக்கள்!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Woman alleges IPS man duped her into marriage on false pretensions


The Pioneer Chennai
- December 30, 2009

A Commandant in the 13th Battalion of Indian Reserve Police, Jammu, SR Samuel, IPS, has been charged with duping a Chennai woman into a marriage through misrepresentation. He has also been charged with ill-treatment, dowry harassment, cruelty and criminal intimidation.

In her complaint to the Chennai Police Commissioner, T Sharmila complained (under Section 417 of IPC) that Samuel and his parents had cheated her and her family by claiming that he was a devout Hindu. He entered into a sham marriage — “dishonestly and fraudulently went through the marriage ceremony fully knowing that it was not a lawful marriage”. “The first counter petitioner, knowing fully well that the marriage is not lawful, caused me to cohabit with him leading me to believe that he was lawfully married to me,” Sharmila added in her complaint on September 7, 2009.

She has further charged the IPS officer and his mother Kamala Raju with ill-treatment, cruelty and dowry harassment. She accused them of mentally torturing her, treating her like a maid and constantly threatening to cause harm to her family (Section 498A and Sections 3 & 4 of the Dowry Prohibition Act and Section 406 of IPC). She charged Samuel with criminal intimidation by threatening to ruin her family reputation, to falsely implicate them in criminal cases, including that of NDPS and even to kill her.

Talking to The Pioneer, Sharmila’s counsel Sudha Ramalingam said that an FIR has been finally registered.

“Only after we filed a petition in the Madras High Court (seeking direction to register an FIR), did the
police file the FIR. But it was done only under Section 498A of the IPC and Sections 3 & 4 of the Dowry Prohibition Act,” she said, pointing out that the main case of misrepresentation was being ignored in the FIR registered on November 10, 2009.

“My husband is now trying to divert the real issue by claiming that I was immoral and that the child I was carrying was not his. He claims that he had not consummate the marriage. Immediately after I filed my police complaint on September 7, he has filed a divorce application in a family court and got media coverage. But I have the proof from the police doctor in Leh that the conception occurred on February 16 or 17. My marriage was on February 2. My husband is now trying for his third marriage. He now claims he is a Christian, but while filing his nullity of marriage he claimed he was a Hindu. He has constantly threatened me by saying that he has good contacts with MK Azhagiri, Prime Minister Manmohan Singh, Kiran Bedi and senior politicians. I really do not know if it is true. But I lived in fear, when I lived with him. Within two months of marriage, he asked me to get out. I made three attempts at reconciliation. But it did not work. I was always told that I am not fit to be an IPS officer’s wife,” Sharmila told The Pioneer. Ramalingam said that on the police records Samuel is an OBC Christian. She also went through a miscarriage after all the trauma.

According to Sharmila’s complaint, it was an arranged marriage whereby she and her parents were made to believe that Samuel had embraced Hinduism and was a vegetarian. Though Sharmila and her parents were opposed to the marriage because of religion, age and status, they were convinced about the marriage by a relative of Sharmila, Samuel’s friend and parents.

Both families hail from Paramakudi in Ramanathapuram district. While Samuel belongs to Yadava Christian community, Sharmila is from Yadava Hindu community. Sharmila was working in Karur Vaysya Bank as Officer-1 (Asst Manager). She was forced to resign with the promise that she would be allowed to pursue her Civil Service exam. She was told that his first marriage failed because it was a love marriage, an act of immaturity. Sharmila left her job to be with her husband in Jammu & Kashmir.

The proposal came in June 2008 and marriage took place on February 2, 2009. The marriage was a “self-respect marriage” adopted following Dravidian movement. The marriage was solemnised in the presence of the State Minister Suba Thangavelan.

Apart from the misrepresentation about his religion, Samuel (37) even forced her to eat non-vegetarian food on the marriage night itself. Though a handsome photograph of Samuel was shown to her, she realised on marriage night that Samuel wore a wig to cover his baldness.

In Leh, she had to go through mental and physical torture by the husband. She was not allowed to meet her relatives. She was told that he was forced to marry her because of his parents and that he had not re-converted to Hinduism. Samuel has demanded nullity of marriage under mutual consent.

“Samuel was sadistic in his dealings with me. He would often wake me up in the middle of the night, push me out of the bed and make me sleep on the floor without even a blanket saying that I should not get accustomed to comforts of being the wife of an IPS officer and remember that my status was that of a maid servant in his house. Not being used to the harsh, cold weather of Jammu & Kashmir, I would shiver in cold and suffer without adequate sleep. My husband would cruelly laugh at my pain and derive sadistic pleasure from my physical suffering. My health suffered greatly, yet I was not given any medical attention,” Sharmila alleged in her police complaint.





வெளிநாட்டு வாழ் மருமகள்களுக்கு ஓர் நற்செய்தி!

குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் மருமகள்களே உங்களுக்கெல்லாம் ஓர் இனிய செய்தி. வெளிநாட்டில் இருந்தபடியே இந்தியாவில் இருக்கும் கணவரின் குடும்பத்தாரை எப்படி உங்களின் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்பதற்கு ஒரு செயல்முறை விளக்கம் கீழுள்ள செய்தியில் இருக்கிறது.

நீங்கள் இந்தியக்குடியுரிமையை ரத்து செய்துவிட்டு வேறுநாட்டுப் பிரஜையாக குடியுரிமை வாங்கியிருந்தாலும் உங்கள் கணவர் உங்களை வெளிநாட்டில் ஏதாவது கொடுமை செய்வதாக நீங்கள் கருதினால் உடனடியாக இந்தியப் போலிஸை அணுகலாம். நீங்கள் இருக்கும் நாட்டிலுள்ள போலிஸையோ அல்லது கோர்ட்டையோ நீங்கள் அணுகி எந்தவித சிக்கலும் அனுபவிக்க வேண்டியதில்லை. இந்தியாவில் எல்லாம் எளிதாக்கப்பட்டுவிட்டது. வேறு நாடுகளில் நடக்கும் குற்றத்திற்குக் கூட இந்தியாவிலேயே வழக்கு பதிவு செய்யலாம். நீங்கள் அதற்காக இந்தியாவிற்கு கூட வரத்தேவையில்லை. ஒரு போன் அல்லது ஈமெயில் செய்தால் போதும். போலிஸ் உடனடியாக உங்களது மாமியார், நாத்தனார் மற்றும் கணவரின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கைது செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். பிறகென்ன வெளிநாட்டில் உங்களுடன் இருக்கும் கணவர் உங்கள் காலடியில் தான் விழவேண்டும். வேறு வழியே இல்லை.

வெளிநாட்டு வாழ் மருமகள்களின் நலனுக்காகவே இந்திய அரசு பல நல்ல சட்டங்களை இயற்றியிருக்கிறது. நீங்கள் புகார் கொடுக்கும் போது அப்படி இப்படி கொஞ்சம் சேர்த்து எழுதுங்கள். ஒன்றும் தவறில்லை. அப்போது தான் போலிஸ் மற்றும் பத்திரிக்கை போன்றவை நீங்கள் சொல்வதை கொஞ்சம் அழுத்தம் கொடுத்து எழுதுவார்கள். கொஞ்சம் கூட தயங்காதீர்கள். எந்த பாதிப்பும் மருமகள்களுக்கு எப்போதும் ஏற்படாது, இதுவரை அப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டதாக சரித்திரமே இல்லை. இந்திய அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது மருமகள்களின் காலம். அதிலும் வெளிநாட்டு மருமகள் என்றால் இந்தியாவில் எல்லாருமே தலையாட்டுவார்கள். இது அனைவருக்கும் தெரியும்.

அதனால் நீங்கள் இந்திய மருமகளாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு மருமகளாக இருந்தாலும் சரி இந்திய அரசு கொடுக்கும் இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல் சட்டங்களை செயல்படுத்தி சாதனைப் பெண்களாக தலைநிமிர்ந்து நில்லுங்கள். உங்களுக்குத் தேவைப்படும் சட்டப்பிரிவுகளில் மிகவும் முக்கியமானது IPC498a. இதன் முக்கியத்துவத்தையும் பயன்பாடுகளைப் பற்றியும் அடுத்துவரும் பதிவில் எழுதுகிறேன். அதுவரை உங்களுக்குத் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளைப் பட்டியல் போட்டு தயாராக இருங்கள்.

இனி செய்தியைப் படித்து உங்களுக்குப் புரியாத விஷயங்களை எனக்கு எழுதுங்கள். நான் தெளிவுபடுத்துகிறேன்.

Notice against NRI hubby who asked for kinky sex
His wife has registered a complaint of harassment against him

Mumbai Mirror.com December 26, 2009


The Mahim police have issued a lookout notice on Friday against a Canada-based sales executive, after his wife registered a complaint of harassment against him. She also alleged that he demanded unnatural sex, but the police are yet to verify the claims.

“We will decide on the Sections to charge him with, after receiving the medical reports of the victim,” said Inspector Vinay Kulkarni of Mahim Police Station.

According to the police, xxxxxx, 34, was married to the complainant, a citizen of Canada, on September 1, 2008, at Laxmi Narayan Mandir in Khar. They met online and moved to Canada soon after the wedding.

The complainant, speaking from Canada said, “He lived with me in Canada for 10 months and did not work. We had a joint account which I did not check often. But I now am in debt of 50,000 Canadian dollars. He married me because he wanted to be a citizen of Canada.”

Her mother, who stays in Jogeshwari claimed, “After the marriage, on the first night at a hotel in Mumbai, he demanded unnatural sex. He even forced my daughter, after which they fought. In Canada too, xxxxxxxx made similar demands.”

The two also ended up filing complaints against each other. "The xxxxxxxxxxxx also took my daughter's jewellery worth Rs 7 lakh, and they used to ask for money,"she alleged further.

xxxxxxxxxx's mother xxxxxxx, who was arrested on December 5 and later released on bail, said, "All the allegations made by xxxxxxx's wife are incorrect. In fact, she has kept the gold jewellery we gifted her. We had her jewellery because she gave it to me for safe-keeping. I have deposited it with Mahim police."

This reporter asked her to get xxxxx to speak to Mumbai Mirror, but till the time of going to press, he did not respond.

"We have registered a complaint against xxxxxxxxi, his mother and sister , 40," said Kulkarni, adding, "All have been presently booked under Sections 406 (Punishment for criminal breach of trust), 498A (Husband or relative of husband of a woman subjecting her to cruelty) and 34 (Acts done by several persons in furtherance of common intention) of the Indian Penal Code."





சட்டம் தெரியாமல் உயிரைவிட்ட அப்பாவி மருமகள்

செய்தித்தாளில் வந்துள்ள செய்தி...

குடும்ப பிரச்னையில் குழந்தையுடன் கணவன், மனைவி தற்கொலை

தேனி:குடும்ப பிரச்னையில் குழந்தையுடன் கணவன், மனைவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். தேனி அல்லிநகரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ் (32). இவருக்கும், மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த குருசாமி மகள் முத்துலட்சுமிக்கும்(23) மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களது மகன் கோவர்த்தனன்(2).பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்த ரமேஷ், சில மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை.

இந்நிலையில், முத்துலட்சுமி, தனிக்குடித்தனம் செல்ல விரும்பினார். ரமேஷின் தாய் இந்திராணி(50), இதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் மாமியார், மருமகளிடையே பிரச்னை ஏற்பட்டது.தனிக் குடித்தனம் செல்வது குறித்து, நேற்று காலை 9 மணிக்கு, ரமேஷ் - முத்துலட்சுமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டிற்குள் மகன் கோவர்த்தனனுடன் சென்ற இருவரும், கதவை பூட்டி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர்.தீயில் கருகிய குழந்தை கோவர்த்தனன், சம்பவ இடத்திலேயே பலியானான். படுகாயமடைந்த ரமேஷ், முத்துலட்சுமி ஆகியோர், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர். அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#############################################

இது போல இனி மருமகள்கள் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளத் தேவையில்லை. இது போன்ற பிரச்சனைகளுக்காகவே அரசாங்கம் பல சிறப்புச் சட்டங்களை இயற்றியிருக்கிறது. அவற்றில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A, வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பிடிக்காத மாமியாரை விட்டு கணவரைப் பிரித்து தனிக்குடித்தனம் போகவேண்டுமா, அல்லது பிடிக்காத மாமியாரை வீட்டை விட்டு அனுப்ப வேண்டுமா இது போன்ற பல சிக்கலான குடும்பப் பிரச்சனைகளுக்கு எளிய வழியில் தீர்வு காண இந்த சட்டங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற வழிமுறைகளை அடுத்த பதிவுகளில் காணலாம். இன்னும் பல குடும்பப்பிரச்சனைகளுக்கெல்லாம் சட்டப்பூர்வமாக எளிய வழியில் மருமகள்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இந்திய அரசு இயற்றியுள்ள இந்த சட்டங்களைப் பயன்படுத்தி எளிய தீர்வு காணலாம். இன்னும் சொல்லப்போனால் உங்கள் கணவரை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்குக் கூட இந்த சட்டங்கள் மருமகள்களுக்கு உதவி செய்கின்றன. இந்த விஷயங்கலெல்லாம் எத்தனை மருமகள்களுக்குத் தெரியும்? இப்படி இந்திய சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி எல்லா மருமகள்களுக்கும் இருப்பதில்லை. ஏனென்றால் இவற்றைப் பற்றி விளக்கமாக எடுத்துச்சொல்ல யாரும் முன்வருவதில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


பந்தாடப்படும் (மரு) மகள்கள்

முந்தைய பதிவிற்கு வந்த கேள்வி:
இது ஒரு தேச சேவை. பல குடும்பங்களை அழிவில் இருந்து காப்பாற்றும்.
பிறந்த வீட்டில் இருந்து சொத்துக்களை பெறுவது எப்படி? திருமணம் ஆன பிறகு சொத்து பெரும் உரிமை உள்ளதா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இன்றைய பதிவில் மகள்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்துரிமை பற்றிய விஷயங்களைப் பற்றிக் காண்போம்.

மருமகள்கள் சந்திக்கும் வரதட்சணை தொடர்பான பல பிரச்சினைகளுக்குக் காரணமே அவர்களின் பெற்றோர்கள் தான். தங்களது மகளையே அவர்கள் சமமாக நடத்தாமல் வஞ்சிக்கிறார்கள். அதன் விளைவாகத்தான் பல அப்பாவிப் பெண்கள் புகுந்த வீட்டில் பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

பெற்றோர்கள் தங்கள் வீட்டிலிருக்கும் ஆண்மகனை நடத்துவதுபோல தங்களது மகளையும் நடத்தாமல் பாரபட்சம் காட்டுகின்றனர். குறிப்பாக குடும்ப பாரம்பரிய சொத்துக்களை பங்கிடும் போது மகளுக்கும் சமமான பங்கு கொடுக்கப்படுவதில்லை.

மகன்கள் எல்லா சொத்துக்களையும் அனுபவித்து சந்தோஷமாக வாழ்க்கையை சொந்த வீட்டில் அனுபவிக்கும் வசதியை செய்து கொடுக்கும் பெற்றோர்கள் தங்களது மகள்களுக்கு சொத்தில் எந்தவித பங்கும் கொடுக்காமல் திருமணம் செய்து வெறுங்கையுடன்
மாற்றான் வீட்டு மகள் போல வேறு ஒரு வீட்டிற்கு மருமகள் என்ற பெயரில் வஞ்சித்து அனுப்பிவிடுகின்றனர்.

எப்போதுமே கையில் நாலு காசு இருந்தால் தான் எங்குமே மதிப்பு. இது அனைவருக்கும் தெரியும். அப்படி மருமகளாக ஒரு புதிய வீட்டிற்கு செல்லும் போது கையில் நாலு காசுடன் தனக்கு உரிமையுள்ள தன் குடும்ப சொத்தின் ஒரு பகுதிக்கு அதிபதியாக அந்த வீட்டில் நுழைந்தால் எல்லோருமே கொஞ்சம் யோசிப்பார்கள். அதற்காக நீங்கள் உங்களின் சொத்துக்களையோ அல்லது நகைகளையோ, பொருட்களையோ உங்களின் கணவரிடமோ அல்லது அவரின் குடும்பத்தாரிடமோ கொடுத்துவிடவேண்டாம். அதுவும் ஆபத்தானது தான்.
சொத்துக்களை உங்கள் பெயரிலேயே வைத்துக்கொள்ளுங்கள். அதே சமயம் உங்களுக்கு உங்கள் பிறந்த வீட்டில் கிடைக்கவேண்டிய சொத்துக்களை ஏமாளியாக விட்டு விடாதீர்கள்.

உங்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய குடும்ப சொத்தின் ஒரு பகுதியைத்தான் பழைய காலத்தில் சீதனம் என்ற பெயரில் திருமணத்தின் போது கொடுத்து வந்தார்கள். ஆனால் காலமாற்றத்தில் பெண்ணின் பெற்றோர்களே பணத்தாசையில் அதை தங்கள் மகளுக்கு கொடுக்காமல் அதற்கு வரதட்சணை என்று சாயம் பூசி, தன் மகளுக்கு முறைப்படி சேரவேண்டிய சொத்தை கொடுப்பதையே ஒரு கொடுமையான செயலாக சித்தரித்து சொந்த மகளையே வஞ்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி பெற்றோர்களே மகளை ஏமாற்றும் போது மருமகளாக இன்னொரு வீட்டில் நுழையும் போது அவர்கள் எப்படி மகளைப்போல உங்களை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கமுடியும்?

அதனால் இன்றே நீங்கள் உங்களின் வழக்கறிஞரை சந்தித்து உங்களுக்குச் சேரவேண்டிய உங்கள் பிறந்த வீட்டின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களில் சரியான பகுதியைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். உங்கள் பெயரில் நாலு காசு வந்தபிறகு பாருங்கள் யாருமே உங்களை எந்த கொடுமையும் செய்யமுடியாது.

இல்லையென்றால்
புகுந்த வீட்டிலும் மரியாதை இருக்காது, அங்கிருந்து பிறந்த வீட்டிற்கு சென்றால் அங்கும் மரியாதை இருக்காது. ஏனென்றால் உங்கள் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உங்களின் திருமணத்தின்போதே உங்களை வேறு வீட்டிற்கு (மரு)மகளாக அனுப்பிவிட்டார்கள். அதற்குப் பிறகு அந்த வீட்டில் உங்களால் சல்லிக் காசு கூட எதிர்பார்க்கமுடியாது.

அப்படியே நீங்கள் உங்களின் பங்கைப் பெற்று கணவரை ஒதுக்கி சொந்தக்காலில் நிற்காலம் என்ற எண்ணத்தில் வீட்டிற்கு சென்றால் அதுவும் நடக்காது. உங்களின் சகோதரர்களுக்குத் திருமணமாகி புதிதாக வந்துள்ள (மரு)மகள்கள் நிலையும் இதேபோலத்தான் இருக்கும். அதனால் அவர்களும் புகுந்த வீட்டில் இருக்கும் சொத்தாவது நமக்கு இருக்க வேண்டும் என்ற எண்த்தில் தான் இருப்பார்கள். உங்களுக்குத் திருமணமாகி வேறுவீட்டிற்கு சென்றபிறகு உங்கள் பிறந்த வீட்டிற்கு வந்துள்ள புதிய மருமகள்களிடமிருந்து உங்களது பங்கை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. கடைசியில் இரண்டு இடங்களிலும் நீங்கள் பந்தாடப்படுவீர்கள்.

படித்த பெண்களாகட்டும், படிக்காத பெண்களாகட்டும் யாருமே இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்வதில்லை. இந்தக்கால மருமகள்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொருளாதாரம் தான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் நமது தமிழக அரசு கூட பெண்களுக்குச் சமமான சொத்துரிமை வழங்குவதற்கு ஒரு தனி சட்டமே இயற்றிவிட்டார்கள். இதைப் பற்றி மேலும் தகவல் அறிய கீழுள்ள புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்.

The Married Women’s Property Act.
Central Act No.3/1874 Rs.14.00


பாகப்பிரிவினை சட்டம்
The Partition Act.

Central Act No.4/1893 Rs.7.00

இவையனைத்தும் இந்த முகவரியில் கிடைக்கிறது.
Government Publication Depot
112, Anna Salai, Chennai-600 002
Phone: 2854 4412, 2854 4413

இது தவிர சகோதரி கனிமொழி அவர்களின் செய்தியையும் படியுங்கள்.

தமிழக முதலமைச்சர் மு கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழியை சென்னை ஆன்லைனுக்காக ஹெச் ராமகிருஷ்ணன் பேட்டி கண்டார்.

ராமகிருஷ்ணன் - நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள்..இதன் மூலம் என்னென்ன சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்..? நாடாளுமன்ற உறுப்பினராக ஆன பிறகு, அதை சாதிக்க முடியும் என்ற உறுதி உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா..?


கனிமொழி - எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. தந்தை பெரியாருடைய கருத்துக்கள், கனவுகள். பெண்களுக்கு சொத்துரிமை, சுயமரியாதை திருமணம் போன்ற விஷயங்கள்கூட, திராவிடர் பாரம்பர்யத்தில் வந்த திராவிடர் முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அவற்றை சட்டமாக்க முடிந்தது.

################################################

தி.மு.க., மகளிருக்கு அரசியல் பயிலரங்கு கனிமொழி இன்று துவக்கி வைக்கிறார்

அக்டோபர் 24,2009

சென்னை:தி.மு.க., மகளிருக்கான முதல் அரசியல் பயிலரங்கை, கனிமொழி எம்.பி., இன்று நீலகிரி மாவட்டத்தில் துவக்கி வைக்கிறார்.தி.மு.க., கலை, இலக்கியப், பகுத்தறிவுப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:

பெண்களுக்கு சொத்துரிமை, மகளிர் சுயஉதவிக் குழு திட்டம், மகளிர் காவலர் நியமனம், அரசு கல்லூரிகளில் பெண்களுக்கு அதிக இடம், திருமண உதவித் திட்டம் என, மகளிருக்கான பல்வேறு திட்டங்கள் தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப் பட் டுள்ளன. பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்கான தொடர் முயற்சிகள் விரைவில் செயல்வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு தினமலரில் வந்துள்ள செய்தியைப் படியுங்கள்.

###############################

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் பெண்களுக்கான சம சொத்துரிமையை கொடுக்கப்படவேண்டும் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

"The Constitution guarantees formal equality and radical social reforms, forbidding child marriage (below the age of 18 for a girl), legalizing remarriage of widows and providing equal share to women in the joint family property under the Inheritance Act which introduced important innovations in the Indian social structure affecting women's status and role."

இது தவிர ஐக்கியநாடுகள் சபையின் அறிக்கை கூட என்ன சொல்கிறதென்றால் உழைப்பு என்று பார்க்கும் போது பெண்களின் பங்கு அதிக சதவீதம் இருக்கிறது. அதே சமயம் எத்தனைப் பெண்கள் சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார்களென்றால் அது மிகவும் மோசமாக வெறும் 10% தான் இருக்கிறதாம்.

United Nations Commission on Status of Women says:

"Women who constitute half of the world's population, perform two thirds of world's work, receive one tenth of its income and own less than one hundredth of its property. In India, while they produce 50 percent of the food commodities consumed by the country, they earn only 10 percent of the income and own 10 percent of the property of wealth of the country."

ஏன் இந்த ஏற்றத் தாழ்வு. உழைக்கின்ற அளவிற்கு பெண்கள் தங்களின் உரிமையைப் பெறத் தயங்குகின்றனர். பெண்கள் தங்களின் பிறந்த வீட்டில் கிடைக்கவேண்டிய உரிமையைக் கூட பெறத் தயங்குவதற்கு எந்த விதத்திலும் கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ ஒரு தடையாக இருப்பதாக யாராலும் கூறமுடியாது.

பிறந்த வீட்டில் சட்டப்படி கிடைக்கவேண்டிய உரிமையையே பெறமுடியாத உங்களுக்கு வெளியில் எப்படி மற்ற உரிமைகள் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? இந்த உரிமைகளை முழுக்க முழுக்க பெண்கள் தான் விழிப்புடன் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.

அரசாங்கம் மருமகள்களுக்காக எவ்வளவோ வழிமுறைகளை செய்திருந்தும் அதைப்பின்பற்றாமல் போனால் பாதிப்பு மருமகள்களுக்கு மட்டுமே. கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ பாதிக்கப்படமாட்டார்கள். அதனால் இந்த சொத்துரிமை சட்டத்தை அனைத்து மருமகள்களும் உடனடியாக பின்பற்றினால் அவர்களுக்கெதிரான பல கொடுமைகளை எதிர்கொள்ளும் சக்தி அவர்களுக்கு கிடைக்கும்.

இப்படி மாநில அரசும் மத்திய அரசும் உங்களின் நல்வாழ்க்கைக்கு பல சட்டங்களை இயற்றியிருக்கிறார்கள். சட்டங்களை மட்டும் தான் அவர்களால் இயற்ற முடியும். அதற்கு செயல் வடிவம் கொடுக்க நகரத்தில் உள்ள படித்தப் பெண்களால் தான் முடியும். உங்களைப் பார்த்து தான் கிராமப்புற பெண்கள் தங்களது உரிமைகளைப் பெறுவது எப்படி என்று கற்றுக்கொள்ள முடியும். அதனால் இனிவரும் காலங்களில் வெறும் மகள்களாகவும், மருமகள்களாகவும் பந்தாடப்படாமல் சொத்தில் சமஉரிமை பெறும் ஒரு குடும்ப அங்கத்தினராக உங்களின் தகுதியை உயர்த்தி சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு தனி அந்தஸ்த்தை உருவாக்குங்கள். அப்போது யார் உங்களுக்கு என்ன கொடுமை செய்யமுடியும் என்று பார்க்கலாம்.


பெண்களின் கொடுமைகள் - அறிமுகம்

பெண்களுக்கு இந்த நாட்டில் பல வித கொடுமைகள் இழைக்கப்படுகிறது. அவற்றில் குறிப்பாக மருமகள்களுக்கு வரதட்சணை என்ற பெயரில் இழைக்கப்படும் கொடுமைக்கு அளவே இல்லை. இது போல இன்னும் பல கொடுமைகள் மருமகள்களின் உரிமையை பறித்து கணவராலும் அவரது குடும்பத்தாலும் பல பெண்களுக்கு இழைக்கப்படுகிறது. கிராமங்களில் இருந்தாலும் சரி, நகரங்களில் இருந்தாலும் சரி, படித்து நன்கு கைநிறைய சம்பாதிக்கும் பெண்களாக இருந்தாலும் அவர்கள் படும் கொடுமைக்கு அளவே இல்லை. இந்த அப்பாவி பெண்களுக்கு இந்திய சட்டங்களில் உள்ள பாதுகாப்புகள் குறித்த போதிய விழிப்புணர்ச்சி இல்லை. அதனால் தான் இன்றும் பல பெண்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற அப்பாவி பெண்களுக்கு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றியும் அவற்றிலிருந்து சட்டப்படி எப்படி நிவாரணம் பெறுவது என்பது பற்றியும் இனிவரும் பதிவுகளில் விவரமாகத் தருகிறேன்.