"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


முதலிரவிற்கு வர மறுத்த கணவன்

வரதட்சணைக் கொடுமை எந்த விதத்திலெல்லாம் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. கொடுமையைப் பற்றி சொல்வதற்குக்கூட கூச்சமாக இருக்கிறது.
ஓமலூர் : ஓமலூர் அருகே வரதட்சணை கொடுக்காததால், முதலிரவை தடுத்து நிறுத்திய கணவர் உட்பட ஆறு பேர் மீது போலீசில் மனைவி புகார் செய்தார். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கோட்டகவுண்டம்பட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மகள் ஹேமலதா (27). அவருக்கும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் அன்புநேசன் (29) என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது ஹேமலதாவின் பெற்றோர் வரதட்சணையாக 15 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்தனர்.
அவர்களுடைய முதலிரவு நேற்று முன்தினம் இரவு நடப்பதாக இருந்தது. பல்வேறு ஆசைகளுடன் அறைக்குள் நுழைந்த ஹேமலதாவிடம் கணவர் அன்புநேசன், "வரதட்சணையாக மேலும் 10 சவரன் தங்க நகை வேண்டும்; அதன் பின்னர் தான் முதலிரவு நடக்கும்' என்றார்.

அதை கேட்டு அதிர்ந்த ஹேமலதா, நடந்த சம்பவம் குறித்து தன் பெற்றோரிடம் கூறினார். அவர்களும் அன்புநேசனிடம் பேசினர். அன்புநேசனுக்கு ஆதரவாக அவருடைய தந்தை கண்ணன், தாய் காளியம்மாள், சகோதரி சாந்தி, மாமா கரியபெருமாள், உறவினர் சரோஜா ஆகியோர் ஒன்று சேர்ந்து, வரதட்சணையாக மேலும் 10 சவரன் தங்க நகை கொடுத்தால் தான் முதலிரவு நடக்கும் என்று கூறி விட்டனர்.

இதையடுத்து, ஹேமலதா, ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கணவர் உட்பட ஆறு பேர் மீது புகார் செய்தார். எஸ்.ஐ., மல்லிகா விசாரித்து வருகிறார்.செய்தித்தாளில் வந்துள்ள செய்தியில் ஒரு இளம் மருமகளின் முதலிரவை தடுத்து வரதட்சணை கொடுமை நடந்துள்ளது. பாவம் அந்த இளம் மருமகள். பல ஆண்டுகளாக முதலிரவைப்பற்றி பலவித கனவு கண்டு ஏக்கங்களோடு முதலிரவு அறைக்குள் நுழையும்போது கொடுத்த வரதட்சணை போதாது இன்னும் வேண்டும் அப்போதுதான் முதலிரவைப்பற்றிய உனது ஏக்கக் கனவுகளை தீர்த்துவைப்பேன் என்று கொஞ்சமும் கருணையில்லாமல் கணவன் கூறியிருக்கிறார். என்ன ஒரு கொடுமை!

கொடுமையான எண்ணமுடையன் கூட பெண்சுகம் என்று வரும்போது எல்லாவித கொடுமைகளையும் மறந்துவிடுவான். ஆனால் இந்தக் கணவன் முதலிரவன்றே தனது முதலிரவுக்கனவுகளைக்கூட மறந்து வரதட்சணைக்காக தனக்கு முதலிரவு நடக்காமல் போனால் கூட பரவாயில்லை என்று உணர்ச்சியே இல்லாமல் நடந்துகொண்டிருக்கிறாரே!

(சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு கணவர் முதலிரவன்று டாஸ்மாக் சரக்கு அடித்துவிட்டு புதுமனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக செய்தி வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்:+2 மருமகளும் டாஸ்மாக் மாப்பிள்ளையும்)

இந்திய ஆண்களுக்கு “உணர்ச்சியே” இல்லாமல் எல்லாம் மறத்துப் போய் விட்டதா? பெண்ணாசையை விட பொன்னாசை மேலோங்கிவிட்டதா? பெண்கள் நலவாரியம் இதைப் பற்றி ஒரு சர்வே எடுத்து ஒரு புள்ளிவிபரம் கொடுத்தால் இந்திய மருமகள்களுக்கு இந்திய ஆண்களின் உணர்ச்சிகளைப் பற்றியும் அது தொடர்பாக நடக்கும் வரதட்சணைக் கொடுமை பற்றியும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாம்.

இதுபோன்று இனிவரும் காலங்களில் இளம் இந்திய மருமகள்களின் உணர்ச்சிகளை வரதட்சணையின் பெயரால் கணவன்கள் புண்படுத்தாமல் இருக்க இரண்டு வழிமுறைகளை அரசாங்கம் செயல்படுத்தலாம்.

1. திருமணத்தன்று முதலிரவிற்கு முன் அனைத்து புதுமணமான கணவன்களும் கண்டிப்பாக “வயக்ரா” மாத்திரையை உட்கொள்ளவேண்டும். இந்த நடைமுறையை திருமணம் நடக்கும் பகுதியின் காவல்துறை மற்றும் வரதட்சணை தடுப்பு அலுவலர் கண்டிப்பாக கண்காணிக்கவேண்டும் என்று புதிய சட்டம் இயற்றலாம்.

1961ல் எழுதப்பட்ட இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டம் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது.


THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)

8-B. Dowry Prohibition Officers.-(1) The State Government may appoint as many Dowry Prohibition Officers as it thinks fit and specify the areas in respect of which they shall exercise their jurisdiction and powers under this Act.

(2) Every Dowry Prohibition Officer shall exercise and perform the following powers and functions, namely, -

(a) to see that the provisions of this Act are complied with;

(b) to prevent, as far as possible, the taking or abetting the taking of, of the demanding of, dowry;

(c) to collect such evidence as may be necessary for the prosecution of persons committing offences under the Act; and

(d) to perform such additional functions as may be assigned to him by the State Government, or as may be specified in the rules made under this Act.
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
Dated: 22/02/2005
Coram The Honourable Mr.Justice M.CHOCKALINGAM

Tamil Nadu Dowry Prohibition Rules, 2004 defines dowry prohibition officer as the police officer as Deputy Superintendent of Police of the Division concerned. It has been clearly mentioned in 5(xviii) of the said rules that the marriages performed within his jurisdiction are likely to be visited by him or his staff along with the police officers . Therefore, for this action, the visit becomes necessary.இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி திருமணம் நடக்கும் பகுதிகளில் சமூக நல அலுவலரும், காவல்துறை அதிகாரியும் திருமணங்களில் திடீரென்று ஆய்வு செய்து சட்டவிரோதமாக வரதட்சணை பரிமாற்றம் நடக்கிறதா என்று ஆய்வு செய்து வரதட்சணையற்ற திருமணங்களை உறுதிப்படுத்தவேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் மேலே செய்தியில் சொல்லப்பட்டுள்ளது போல “திருமணத்தின் போது ஹேமலதாவின் பெற்றோர் வரதட்சணையாக 15 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்தனர்.” என்ற செய்தி வந்திருக்காது அல்லவா? புதுமண மருமகளும் முதலிரவில் ஏமாற்றமடைந்திருக்கமாட்டார் அல்லவா?

இந்த வரதட்சணை தடுப்புச் சட்டங்களை 1961 முதல் இன்றுவரை இந்த அலுவலர்கள் யாரும் இதுவரை ஒழுங்காக செயல்படுத்தவில்லை. அதனால்தான் இதுபோன்ற பல இளம் இந்திய மருமகள்களின் “முதலிரவு ஏக்கக்கனவுகள்” வரதட்சணையின் பெயரால் சிதைக்கப்படுகிறது.


அதனால் இந்த “வயக்ரா” சட்டத்தையாவது காவல்துறையும், சமூகநலத்துறையும் கண்டிப்பாக விழிப்புணர்ச்சியுடன் இருந்து ஒவ்வொரு திருமணத்திலும் செயல்படுத்தவேண்டும் என்று கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தால் இளம் மருமகள்களின் முதலிரவு ஏக்கக்கனவுகள் சிதையாமல் இருக்குமல்லவா?

2. இரண்டாவது வழிமுறை என்னவென்றால் செய்தித்தாள்களில் நாம் அவ்வப்போது படிக்கும் செய்திகளில் சில ஊர்களில் இரு பிரிவினரின் வேற்றுமையால் பாதியில் நின்ற தேரோட்டத் திருவிழாவை போலிஸார் வடம்பிடித்து இழுத்து தேரை நிலைக்குக் கொண்டுவந்து விட்டார்கள் என்று படித்திருக்கிறோம். அதுபோல வரதட்சணைப் பிரச்சனையால் பாதியில் நின்றுபோகும் முதலிரவு வைபவங்களையும் போலிஸார் உதவியோடு முடித்துவைக்கலாம். அதாவது காவல்துறை அதிகாரி காவலர்களுடன் திருமண நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு முதலிரவு முடியும்வரை பாதுகாப்புக் கொடுத்து இடையில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தி முதலிரவை முழுமையாக முடித்துவைக்க உதவி செய்யலாம். இதையும் கடுமையான சட்டமாக இயற்றவேண்டும்.

தேசிய மகளிர் வாரியமும், பெண்கள் நல அமைச்சகமும் இந்த இரண்டு வழிமுறைகளையும் புதிய சட்டமாக இயற்ற அரசிற்கு பரிந்துரை செய்தால் வருங்காலத்தில் திருமணத்திற்கு தயாராகி முதலிரவு கனவுகளோடு காத்திருக்கும் மருமகள்களின் வாழ்க்கை எந்தவித ஏமாற்றமும் இல்லாமல் நல்லமுறையில் அமையும்.

உங்களுக்கு இந்த புதிய சட்டங்ளைப் பற்றிய கருத்துக்கள் பிடித்திருந்தால் தேசிய மகளிர் வாரியத்திற்கும், பெண்கள் நல அமைச்சகத்திற்கும் உங்களது பரிந்துரைகளை எழுதி அனுப்புங்கள். இந்திய மருமகள்களின் நலனை காப்பாற்றுங்கள்.

===================

முந்தைய பதிவிற்கு வந்த விவாத கருத்திற்கு விளக்கம்


முந்தைய பதிவில் ஒரு வாசகர் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை மருமகள்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தினால் நீதிமன்றம் கேள்வி கேட்கும், மனைவி மீது கணவர் வழக்குத் தொடருவார் என்று எழுதியிருந்தார். அதற்கு தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பையும் உதாரணம் காட்டியிருந்தார். அவர் கொடுத்த தகவலின் ஒரு பகுதி:


“ஆக நீதிபதி டிங்ரா வரதட்சணை கொடுமை வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார். இதையே அடிப்படையாகக்கொண்டு தன் மீது மனைவி வீட்டார் பொய் வழக்கு தொடுத்து சிறைக்கு அனுப்பியதாக அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு கூட தொடுக்க இயலும்.”


அந்த விவாதக் கருத்துக்களை “Comments” பகுதியில் படித்துப்பாருங்கள்:
விவாகரத்து செய்யப்போகும் இந்திய மருமகள்களுக்கு ஒரு முக்கியமான "டிப்ஸ்"

இந்த வாசகர் சொல்வது போல அவ்வப்போது செய்தித்தாள்களில் நீதிமன்றம் இப்படி சொல்லியிருக்கிறது, அப்படி சொல்லியிருக்கிறது என்று வரும் செய்திகளைக் கண்டு மருமகள்கள் கொஞ்சமும் அஞ்சத்தேவையில்லை.

இதுபோல அவ்வப்போது செய்தித்தாள்களுக்கு செய்தி தரும் விதமாக நீதிமன்றங்கள் செய்தி சொல்வது பல காலமாக நடந்துவரும் ஒரு சாதாரண சம்பவம். அவ்வளவுதான்.

மேலுள்ள செய்தியில் வாசகர் சொன்னதுபோல தில்லி உயர்நீதிமன்றம் 2008ல் ஒரு தீர்ப்பு சொன்னது. ஆனால் அதற்கு முன்பாகவே 2005ல் இந்திய உச்ச நீதிமன்றம் “சட்ட தீவிரவாதம்” என்றுகூட மருமகள்களுக்கு எதிராக ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது. 2008ல் சென்னை உயர்நீதிமன்றம்கூட இந்த மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் செய்தித்தாளுக்கு ஒரு நாள் செய்தி மட்டுமே. அதனால் மருமகள்கள் இந்த சட்டங்களைப் பயன்படுத்த கொஞ்சமும் தயங்கவேண்டாம்.


மேலுள்ள செய்தியில் கூட மருமகளின் பெற்றோர் வரதட்சணைக் கொடுத்துத்தான் திருமணம் செய்தோம் என்று பகிரங்கமாக செய்தித்தாளில் வரும் அளவிற்கு தாங்கள் வரதட்சணை கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக காவல்துறை என்ன அவர்கள் மீது வழக்கா பதிவு செய்திருக்கிறார்கள்? வரதட்சணை கேட்டார்கள் என்று மருமகள் சொன்னதும் கணவன் உட்பட கணவன் வீட்டார் ஆறு பேர் மீதும் “முதலிரவிற்கு மருமகளுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை” என்று வழக்குப் பதிவு செய்த காவல்துறை மருமகளின் பெற்றோர் மீது வரதட்சணை கொடுத்ததற்காக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பதை நன்றாக கவனித்தீர்களா?

அதனால் நீதிமன்றங்கள் அவ்வப்போது சொல்லும் தீர்ப்புகள் எல்லாம் சும்மா அழுகின்ற கணவன்களின் வாயில் சப்பக்கொடுக்கும் “லாலிபாப்” மிட்டாய் போன்றது.


இன்னும் சொல்லப்போனால் இந்த சட்டங்களை தங்களின் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தும் மருமகளை தண்டிக்க வழிசெய்யும் எந்த சட்டங்களும் இந்தியாவில் சுத்தமாக கிடையவே கிடையாது.

வரதட்சணைக் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்று சொல்லும் வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் 3 வது பிரிவை பயன்படுத்தி எந்தக் காவல்துறை அதிகாரியோ அல்லது நீதிமன்றமோ இந்திய மருமகளுக்கெதிராகவோ அல்லது வரதட்சணைக்கொடுத்த அவரது பெற்றோருக்கெதிராகவோ
இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்ததில்லை, தண்டனையும் கொடுத்ததில்லை.


THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)

3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more:


இப்படி சட்டப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் சட்டத்தையே செயல்படுத்தாத காவல்துறையும், நீதிமன்றங்களும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் மருமகளை தண்டிக்கவேண்டும் என்று எந்த சட்டப் புத்தகத்திலும் சொல்லப்படாத, இல்லாத சட்டத்தையா செயல்படுத்திவிடுவார்கள்? அதனால் இந்திய மருமகள்கள் கொஞ்சமும் தயங்காமல் துணிந்து செயல்படலாம்.

இந்த செய்திகளிலிருந்து மருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை நீங்கள் வரதட்சணை தொடர்பான விஷயங்களுக்குப் பயன்படுத்தாமல் வேறுவிதமான உங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாகப் பயன்படுத்தலாம் என்பதை இதைவிட அரசாங்கம்
வேறு எப்படி உங்களுக்கு வெளிப்படையாக சொல்லித்தரமுடியும்?

மருமகள்களை பாதுகாக்கும் சட்டங்களை (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act) எப்படி புத்திசாலித்தனமாக கணவனின் குடும்பத்திற்கெதிராக பயன்படுத்தவேண்டும் என்று நன்றாகத் தெரிந்துகொண்டால் மருமகள்கள் எந்த நாட்டில், எந்தக் குடும்பத்தில் இருந்தாலும் தங்களது வெற்றிக்கொடியை பட்டொளி வீசி பறக்கவிடலாம்.


வாழ்த்துக்கள்!
10 comments:

 1. //முதலிரவிற்கு வர மறுத்த கணவன்//

  உட்காந்து ​யோசிப்பாங்க​ளோ! நல்லாத்தா ​யோசிக்கிராங்ய்யா ​கொஞ்ச நாளா...

  //“ஆக நீதிபதி டிங்ரா வரதட்சணை கொடுமை வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார். இதையே அடிப்படையாகக்கொண்டு தன் மீது மனைவி வீட்டார் பொய் வழக்கு தொடுத்து சிறைக்கு அனுப்பியதாக அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு கூட தொடுக்க இயலும்//


  எல்லாம் ​​செவிடன் காதில் ஊதிய சங்கு ​போல். அத்திப்பூத்தார் ​போல் எங்கயாவது இது​போல் நடக்கும்
  ஊதாரணமாக என்னு​டைய 498ஏ ​கேஸில் உயர்நிதிமன்றத்தில் வழக்கு சமரச ​மையத்தில் இருந்த​போழு​தே தாம்பரம் மகளிர் காவல் நி​லையத்தில் தாம்பரம் நீதிமன்றம் வாயிலாக உத்தர​வை வாங்கி ​பொய்வழக்க பதிவு​செய்து இந்த இழவு சட்டங்க​ளை பற்றி சரிவரததெ​தெரியாது எனது திருமணத்திற்கு வந்த எனது தம்பி நண்பuரின் தாயர் ​மகளிர் காவல் ​தெய்வங்களால் ​கைது ​செய்யப்பட்டு புழல் சி​றையில் அ​டைக்கப்பட்டார்..

  ஆக​வே இந்திய மருமகள்க​ளே தாங்கள் எ​தைப்பற்றியும் ​கவ​லைப்பட ​தே​வையில் நீங்கள் என்ன ஆபாச வக்கிர க​தைகள் ​வேண்டுமானாலும் எழுதி யா​ரை​​வேண்டுமானாலும் ​கைது ​செய்ய​வைக்கலாம்.

  யாராவது தங்களுக்கு கடன் ​கொடுத்தவர் திருப்பி ​கேட்டால் அவ​ரையும் இந்த வழக்கில் ​சேர்த்துவிடுங்கள்! ​கொய்யாலா சாவுர வ​ரைக்கும் ​​போலீஸ், ​​​பெயில, ​கோர்ட் ​கேஸ்ன்னு நாயா அ​லைஞ்சி ​​செத்து ஒழியட்டும். நீங்கள் நிம்மதியா வாழலாம்

  மாடம் 498ஏ F.I.R க்கு ​தொடர்வு ​கொள்ளவும்

  ReplyDelete
 2. நான் பின்னூட்டமிட்டபடி தவறாக தொடுக்கப்பட்ட வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்பது உண்மை. அப்புறமென்ன லாலிபாப் ? இதே மாதிரி வேறெதாவது பெண்கள் வேண்டுமென்றே தவறாக புகார் அளித்தால் இதே தீர்ப்பை முன்னுதாரணமாக காட்டி தள்ளுபடி செய்யக்கோரி அப்பாவி கணவன்கள் வாதாடலாம். விலக்கும் பெறலாம், தவறில்லாத பட்சத்தில்.

  அன்புடன்
  முத்து

  ReplyDelete
 3. "
  1. திருமணத்தன்று முதலிரவிற்கு முன் அனைத்து புதுமணமான கணவன்களும் கண்டிப்பாக “வயக்ரா” மாத்திரையை உட்கொள்ளவேண்டும். இந்த நடைமுறையை திருமணம் நடக்கும் பகுதியின் காவல்துறை மற்றும் வரதட்சணை தடுப்பு அலுவலர் கண்டிப்பாக கண்காணிக்கவேண்டும் என்று புதிய சட்டம் இயற்றலாம்."

  போலீஸ்காரர்களை பொதுமக்கள் மாமாக்கள் என்று விளிப்பது உண்மைதான். அதற்காக இப்படியெல்லாமா ? விட்டால் விளக்கு பிடிக்க சொல்லி கேட்பீர்கள் போல. :)) போதும் தாயே, அவர்களையாவது விட்டு வையுங்கள்.

  ReplyDelete
 4. //நான் பின்னூட்டமிட்டபடி தவறாக தொடுக்கப்பட்ட வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்பது உண்மை. அப்புறமென்ன லாலிபாப் ? இதே மாதிரி வேறெதாவது பெண்கள் வேண்டுமென்றே தவறாக புகார் அளித்தால் இதே தீர்ப்பை முன்னுதாரணமாக காட்டி தள்ளுபடி செய்யக்கோரி அப்பாவி கணவன்கள் வாதாடலாம். விலக்கும் பெறலாம், தவறில்லாத பட்சத்தில்.

  அன்புடன்
  முத்து
  //

  முத்து அவர்களே நீங்கள் தளராமல் எல்லாவற்றிற்கும் விஷயங்களைத் தேடிக் கண்டுபிடித்து பதில் எழுதுவதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.

  நீங்கள் சொல்வதுபோல உயர்நீதிமன்றத்திற்கு சென்று அதை திங்கரா போன்ற நீதிபதி கண்டுபிடித்து தீர்ப்பு சொல்வதற்கு சராசரி எத்தனை ஆண்டுகள் ஆகும்? அதற்குள் கணவன் என்ன பாடுபடுவான் என்று உங்களைப் போன்றவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். மருமகளைப் பொறுத்தவரை கடைசியில் கணவன் சிறைக்குச் செல்கிறானா அல்லது விடுதலை பெறுகிறானா என்பது முக்கியமல்ல. மருமகள் புகார் கொடுத்தவுடன் கணவன் ஒரு கைப்பாவை போல மாறிவிடுவான். போலிஸ், வழக்கறிஞர், நீதிமன்றம், நீதிபதி என பலரின் கைகளில் விளையாட்டு பொம்மையாகிவிடுவான் அல்லவா? அதுதான் மருமகள்களுக்கான வெற்றி.

  நீங்கள் சொல்வதுபோல திங்கரா போன்ற நீதிபதி எத்தனை நீதிமன்றங்களில் இருக்கிறார்கள். அல்லது உங்கள் வழக்கை நீங்கள் திங்கரா எங்கே இருக்கிறார் என்று தேடிச்சென்று அந்த நீதிமன்றத்தில் நடத்த முடியுமா? அதனால் அவ்வப்போது செய்தித்தாள்களில் வரும் செய்தியை மட்டும் படித்து மனசாந்தி அடைந்துகொள்ளவேண்டியதுதான். அதனால் மருமகளின் சொற்படி கணவன் நடந்தால் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம்.

  ReplyDelete
 5. திங்ரா போன்ற ஒரு நீதிபதி போதும், அந்த ஒரு தீர்ப்பு போதும். நான் கேள்விப்பட்டவரையில் ஒரு தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும்வரை, அது மேல் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படாதவரை, அதை உதாரணமாக காட்டி எந்த நீதிமன்றத்திலும் அதே விதமான தீர்ப்பை பெற இயலும். அதற்காக டெல்லி வரை சென்று திங்ராவை மட்டும் தேடிப்பிடிக்க வேண்டியதில்லை.

  இன்னொன்று, உங்களுக்கு பதில் சொல்வதற்காகவெல்லாம் தளராமல் தேடவில்லை. அதற்கு எனக்கு தேவை இல்லை, நேரமும் இல்லை. நான் தினமும் MSN India படிப்பதுண்டு. அப்படி படிக்கையில் கண்ணில் பட்டது இந்த செய்தி. அதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்பினேன், அவ்வளவே !

  கவலைப்படாமல் உங்கள் சேவையை தொடருங்கள்.

  ReplyDelete
 6. // Muthu said...

  திங்ரா போன்ற ஒரு நீதிபதி போதும், அந்த ஒரு தீர்ப்பு போதும். நான் கேள்விப்பட்டவரையில் ஒரு தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும்வரை, அது மேல் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படாதவரை, அதை உதாரணமாக காட்டி எந்த நீதிமன்றத்திலும் அதே விதமான தீர்ப்பை பெற இயலும். அதற்காக டெல்லி வரை சென்று திங்ராவை மட்டும் தேடிப்பிடிக்க வேண்டியதில்லை.
  //

  உங்களின் தளராத முயற்சிக்கும் இந்திய நீதிமன்றத்தின் மீது இருக்கும் நம்பிக்கைக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. "உங்களின் தளராத முயற்சிக்கும் இந்திய நீதிமன்றத்தின் மீது இருக்கும் நம்பிக்கைக்கும் பாராட்டுக்கள்."

  தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி. ஆயிரம் குறைபாடுகள் இருப்பினும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ள பெரும்பாலான குடிமகன்களில் ஒருவன்தான் நான். என்ன, அதில் உள்ள சந்து பொந்துகளை பயன்படுத்தி தவறிழைக்காதவர்களையும் தேடிக்கண்டுபிடித்து கண்டனத்துக்குரிய முறையில் அவர்கள்மீது சட்டத்தையும் நீதிமன்றத்தையும் ஏவல்நாய் போல ஏவச்சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு என் மனமும் ஆன்மா இன்னும் அழுகிப்போய்விடவில்லை.

  ReplyDelete
 8. மருமகள்,

  வரதட்சணை அது இதுன்னு குதிக்கிறீங்களே...எனக்கு ஒரு சந்தேகம்.

  நான் வேலைக்கு போய் பணம் சம்பாதிக்கல. வீட்டு வேலையை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருந்து விடுகிறேன். அதுவும் பெண் வீட்டிலேயே இருந்து விடுகிறேன். என்னுடைய எல்லா செலவையும் பெண்ணே பார்த்துக்கொள்ளட்டும். வரப்போகும் மனைவி வேலைக்குச் சென்று பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யட்டும். இப்படி இருக்கேன்னு வச்சுக்கோங்க...என்னை மணக்க எந்த பொண்ணு ரெடி ?

  ReplyDelete
  Replies
  1. இதுவரை மருமகளை வரதட்சணை கொடுமை செய்து பணம் பறித்தது போதாது என்று இப்போது வீட்டில் அமர்ந்துகொண்டு மருமகளின் உழைப்பை உறிஞ்சி சாப்பிடலாம் என்று கிளம்பிவிட்டீர்களா? நன்றாக இருக்கிறது. இதற்கும் புதிய சட்டம் வந்தால்தான் ஆண்களின் கொட்டத்தை அடக்க முடியும் போலிருக்கிறதே!

   Delete
  2. ஒரு காசும் இல்லாம வந்தால், பொண்ணுங்க நீங்க கல்யாணம் பண்ணிக்க மாட்றீங்க....இதே விஷயத்தை ஆண்கள் செய்தால் அது வரதட்சனையா...?

   நல்லா இருக்கு உங்க காமெடி நியாயம்...

   ஹிஹி...ஆண்கள் கொட்டத்தை அடக்குவதிருக்கட்டும்...தங்களுடைய காமெடிப் பேச்சை முதலில் நிறுத்துங்கள். சிரிப்புத் தாங்க முடியல

   Delete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்