"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


வரதட்சணை சட்டங்கள் மூலம் மனைவி கணவனை மிரட்டினால் தவறில்லை

இந்திய மருமகள்களுக்கு வழிகாட்டும் இந்த நல்ல பதிவுகளுக்கு வந்துள்ள கருத்துக்களில் பலர் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி.

பலர் இந்த பதிவுகளை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். அவர்களை திருப்திபடுத்துவதற்காக இந்த சிறப்புப் பதிவு.

கடுமையான விமர்சனங்களில் சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன். அதனைத்தொடர்ந்து அவர்களை சாந்தப்படுத்தும் வகையில் சில கருத்துக்களையும் கொடுத்திருக்கிறேன். படித்து மகிழுங்கள்.

==================================================

Anonymous said...

என்ன அருமையான வலைப் பதிவுகள். குடும்பத்ததை சீரழித்து மேற்கத்தியக் கலாச்சார வழியில் இந்தியக் குடும்ப அமைப்பை வழிநடத்த இதைவிட சிறந்த ஒரு வலைப்பதிவு இருக்க முடியுமா?

வயது போன காலத்தில் நாய் படும்பாடு படப்போகும் உங்களை மாதிரியான புத்திசாலியான மருமகள்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Wednesday, October 27, 2010 6:20:00 AM PDT

=======================

Anonymous said...

wht abt your family?Are you living with your DOG? I Mean your Husband?

Saturday, June 12, 2010 5:30:00 PM PDT

=======================

மிகவும் தவறான வழிகாட்டி பதிவு. தவறிழைக்கும் மருமகளை வழிகாட்டும் என்றும் நல்ல மருமகளுக்கு நல்லதொரு பாதுகாப்பு நல்கிடும் என்றும் 'மருமகளிடம்' எதிர்பார்த்தேன்.

குடும்பத்தினை சிதைக்கும் கோடரிக் காம்பு பதிவு என்று உணர்கிறேன். கருத்தினை சற்று ஆணித்தரமாக சொல்வதற்காக வருந்துகிறேன் ஆனால் உண்மை அது தான். நாட்டின் நலன் மற்றும் இறையாண்மை கருதி உங்கள் கருத்துகளை சீர்திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, July 14, 2010 12:55:00 PM PDT

======================
Anonymous said...

தூ....இதெல்லாம் ஒரு பொழப்பு....

Wednesday, December 30, 2009 1:24:00 PM PST

=======================

மேலே கருத்து சொல்லியிருக்கும் அனைவரும் இந்தப் பதிவுகள் ஏதோ மருமகள்களுக்கு தவறான வழிகாட்டுவதாக சொல்லியிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது.

திருமணமாகி கணவனின் குடும்பத்திற்கு செல்லும் மருமகள்கள் எப்படி தங்களது ஆட்சியை மாமியார் குடும்பத்தில் நிலைநாட்டுவது என்பதைத்தான் இந்தப் பதிவுகள் சொல்கின்றன. மருமகள்கள் தங்களது கைமேலோங்கி இருக்கச்செய்தால் அவர்களை யாரும் வரதட்சணைக் கொடுமை செய்யமுடியாதல்லவா?

அதற்காகத்தானே பல மருமகள் பாதுகாப்பு சட்டங்களை அரசாங்கமே கொடுத்திருக்கிறது. இவற்றை எப்படி பக்குவமாக மருமகள்கள் செயல்படுத்தலாம் என்று சொல்லிக்கொடுத்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காகத்தானே தேசிய பெண்கள் வாரியம், மாநில பெண்கள் வாரியம், பெண்கள் அமைச்சகம், பெண்ணுரிமை சங்கங்கள், பெண்ணுரிமை பேசும் வழக்கறிஞர்கள், மருமகள் கொடுக்கும் எல்லா வரதட்சணை வழக்குகளையும் பதிவு செய்யும் காவல்துறை நண்பர்கள் என்று ஒரு பெரிய மருமகள் ஆதரவுக் கூட்டமே நாட்டில் இருக்கிறது. மருமகளின் நலனுக்காக மட்டுமே செயல்படும் இந்த நுண்ணிய வலைப்பின்னலுடன் கூடிய அரசாங்க அமைப்பை முதலில் நன்கு புரிந்துகொண்டால் உங்களுக்கு இந்த தவறான எண்ணங்கள் தோன்றாது.

இன்னும் சொல்லப்போனால் இந்திய இதிகாசமான இராமாயணத்தில் கூட கணவனை வழிக்குக் கொண்டுவர மனைவி கணவனை எப்படி மிரட்டியிருக்கிறார் என்று பக்குவமாக சொல்லியிருக்கிறார்கள். இந்திய இதிகாசங்களை மதிப்பவர்கள் மருமகள்கள் சட்டங்களை எப்படிப் பயன்படுத்தினாலும் தவறாக நினைக்கமாட்டார்கள்.

இராமாயணத்தில் வரும் இந்த இரண்டு பாடல்களைப் படித்து பொருளை உணர்ந்துகொண்டால் மருமகள்கள் கணவனை தன்வழிக்குக்கொண்டுவர சட்டங்களை தங்கள் வசதிப்படி பயன்படுத்தலாம் என்பது தெளிவாகும்.


3. கைகேயி சூழ்ச்சிப் படலம்

கைகேயின் தீஞ்சொற்கள்

'திசைத்ததும் இல்லை; எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள்,
குசைப் பரியோய்! தரின், இன்று கொள்வேன்; அன்றேல்,
வசைத் திறன் நின் வயின் நிற்க, மாள்வென்' என்றாள். 23


தசரதன் தனக்குக்கொடுத்த வரத்தை இப்போது செயல்படுத்தி ராமனை காட்டிற்கு அனுப்பாவிட்டால் சொல்லிய வார்த்தையை காப்பாற்றாத மன்னன் இவன் என்று சொல்லி தற்கொலை செய்துகொண்டு அதற்குக் காரணம் என்னுடைய கணவன் தசரதன்தான் என்று எழுதிவைத்து ஊரறிய உன் மானத்தை வாங்கிவிடுவேன் என்று தசரதனின் மனைவி கைகேயி தனது கணவனை மிரட்டியிருக்கிறார் என்று இந்த பாடல் வரிகள் சொல்கின்றன.

அதனால் இந்தக்காலத்து மருமகள்கள் தங்கள் கணவனை தங்கள் வழிக்குக் கொண்டுவர வரதட்சணை தடுப்புச் சட்டங்களை பயன்படுத்துவது என்பது ஒன்றும் ஏதோ புதியதொரு செயலாகக் கருத இயலாது.


தயரதன் கைகேயின் காலில் விழுந்து இரத்தல்

'கோல் மேல் கொண்டும் குற்றம் அகற்றக் குறிக்கொண்டார்
போல், மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை மன்னா,
கால்மேல் வீழ்ந்தான், கந்து கொல்யானைக் கழல் மன்னர்
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான். 29


கைகேயி அப்படி மிரட்டியவுடன் தசரதன் அவளின் காலில் வீழ்ந்து கதறி அவளின் கட்டளைக்கு அடிபணிந்திருக்கிறான். மாமன்னன் தசரதனே மனைவியின் மிரட்டலுக்கு அடிபணிந்து காலில் விழுந்திருக்கிறான் என்றால் இந்தக்காலத்துக் கணவன்கள் எம்மாத்திரம். அதனால் மருமகள்கள் IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற அரசாங்கம் கொடுத்திருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி கணவனையும் அவனது குடும்பத்தையும் தங்கள் வழிக்குகொண்டுவருவது என்பது இந்திய இதிகாச மரபினை அடிப்படையாகக்கொண்டு நடக்கின்ற ஒரு மரபாகும். இதனை குறையென்று சொல்லலாமா?

இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில்கூட டில்லி உயர்நீதிமன்றம் திருமணத்தின்போது பெண் வரதட்சணை கொடுப்பது தவறு கிடையாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் 3வது பிரிவுப்படி வரதட்சணைக் கொடுப்பது குற்றமாக இருந்தாலும் அதை ஒரு பெண் செய்யும்போது அது குற்றமாகாது. அதே சமயம் கணவன் என்னை மிரட்டி வரதட்சணை வாங்கினான் என்று சொன்னால் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு கணவனை மட்டுமே வரதட்சணை சட்டத்தின் 3வது மற்றும் 4வது பிரிவுப்படி தண்டிக்கும். அதனால் மருமகள்கள் சட்டங்களை தேவைக்கேற்றபடி தயங்காமல் பயன்படுத்தலாம்.

அந்த செய்தியினையும் படித்து குறிப்பெடுத்துக்கொண்டு தக்க சமயத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.



New Delhi: Giving dowry for fear that a proposed marriage may otherwise be called off is not an offence, the Delhi High Court has held while quashing an FIR against a bride and her family for conceding the demands of the groom's family.


Justice Ajit Bharihoke quashed the criminal proceedings after the bride and her family convinced the court that dowry was given under pressure. For, the bridegroom's family had threatened to cancel the marriage.


“As per the allegations in the complaint made by the petitioner [bride], the demand for dowry was made by the father of the respondent [bridegroom] at the time of engagement ceremony when he allegedly asked her father to concede his demand for dowry, failing which he would call off the marriage.


“From the aforesaid facts, it is obvious that the petitioner and her parents were confronted with the unenviable situation of either conceding the demand or facing loss of honour of their family in society, and if under that fear, the petitioner and her parents conceded the demand for dowry, they cannot be faulted as they were victims of the circumstances,” the court said.


Granting the bride relief, the court said, “She cannot be subjected to prosecution for the offence under the Dowry Prohibition Act.”


The court passed the order on the petition filed by Pooja Saxena challenging a lower court's order which directed the police to register an FIR against her and her family members, who alleged dowry harassment by her husband and in-laws. Sameer Saxena and his family members were accused of committing cruelty to Pooja by harassing her for dowry. The woman, in an FIR with the Roop Nagar police station, claimed that her family members had given huge dowry to Mr. Saxena at the time of their marriage.


Mr. Saxena later pleaded before the lower court that criminal proceedings be initiated against his wife and her family as she herself had admitted to giving huge dowry, which was an offence under the statute. The lower court on March 10 passed an order directing registration of the FIR on a petition filed by Mr. Saxena. — PTI


இந்த தீர்ப்பின் அடிப்படையில் வரதட்சணை தடுப்புச் சட்டத்தை எப்படி பக்குவமாகப் பயன்படுத்தலாம் என்று அடுத்தபதிவில் எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள்!


2 comments:

  1. ஆண்கள் எல்லாம் பகடைகள் ஆக மாற்றும் உங்க முயற்சிக்கு நன்றி .... சமுதாயத்தில் ஆண் இல்லாமல் பெண்ணால் தனித்து வழ முடியாது... பெண்ணுக்கு பெண்ணை எதிரியாக்கும் 498A சட்டம் தேவையா... நல்ல உறவுக்கு 30 -40 வருடம் வாழ நிறைய பொறுமை வேண்டும்.. ஆண் கொடுமை படுத்துபவன் என்ற எண்ணம் மாற வேண்டும். பெண்களில் நிறைய கொடுமைகாரிகள் marumagalga உள்ளனர். பாதிக்க patta ஆண்களை பார்த்து பரிதாப பட சங்கங்கள் SIF ,AIMWA உள்ளன. பெண்களின் குருர முகத்தை பாதிக்க பட்டர்வர்கள் பார்த்தால் புரியும் .

    ReplyDelete
  2. //Anonymous Jeeva said...

    ஆண்கள் எல்லாம் பகடைகள் ஆக மாற்றும் உங்க முயற்சிக்கு நன்றி .... சமுதாயத்தில் ஆண் இல்லாமல் பெண்ணால் தனித்து வழ முடியாது... பெண்ணுக்கு பெண்ணை எதிரியாக்கும் 498A சட்டம் தேவையா... நல்ல உறவுக்கு 30 -40 வருடம் வாழ நிறைய பொறுமை வேண்டும்.. ஆண் கொடுமை படுத்துபவன் என்ற எண்ணம் மாற வேண்டும். பெண்களில் நிறைய கொடுமைகாரிகள் marumagalga உள்ளனர். பாதிக்க patta ஆண்களை பார்த்து பரிதாப பட சங்கங்கள் SIF ,AIMWA உள்ளன. பெண்களின் குருர முகத்தை பாதிக்க பட்டர்வர்கள் பார்த்தால் புரியும் . //

    ஆண்களை பகடைகள் ஆக மாற்றும் முயற்சியா? மிகவும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு கணவனும் மருமகளுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவுகள்.

    நிறைய தவறான கருத்துக்கள் உங்கள் எழுத்துக்களில் இருக்கின்றன.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்