"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


வரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்

வரதட்சணைக் கொடுமைக்குள்ளாகும் மருமகள்கள் கணவனின் குடும்பத்திற்கெதிராக IPC498A, Dowry Prohibition Act பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டிய ஆதாரங்கள் கீழே பட்டியலிடப்பட்டிருக்கிறது.

மருமகள்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர மாநில காவல் துறை இந்தப் பட்டியலைக் கொடுத்திருக்கிறது. அதனால் மருமகள்கள் மறக்காமல் இந்த ஆதாரங்களை காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்றால் உங்களின் புகார் உடனடியாக முதல் தகவல் அறிக்கையாக (FIR) பதிவு செய்யப்பட்டு உடனடியாக கணவனின் ஒட்டுமொத்தக் கூட்டமும் கைது செய்யப்படும்.

இந்த ஆதாரங்களை எப்படி திரட்டுவது என்று பல மருமகள்கள் கொடுத்த அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து ஒவ்வொரு பாயிண்ட்டிற்கும் கீழே மருமகள்களின் வசதிக்காக விளக்கமாக தந்திருக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Reporting Dowry Harassment
What should your complaint include?
  • Details of marriage including wedding card, marriage certificate, photos, videos etc.
இப்போதே உங்களின் திருமண அழைப்பிதழை தேடி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். போட்டோ மற்றும் வீடியோவை தனியாக ஒரு DVD காப்பி செய்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் எப்போது எந்த விசேஷம் நடந்தாலும் மாமனார் மாமியாருக்கு மரியாதை செய்வது போல ஒரு தட்டில் பூ பழங்கள் வைத்து கொடுப்பதுபோல ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது அந்தத் தட்டில்தான் பணம் வைத்துக்கொடுக்கப்பட்டதாக சொல்லலாம். முடிந்தால் அந்தத்தட்டில் பணம் இருப்பது போல ஒரு செட்டப் செய்து புகைப்படம் எடுத்துக்கொள்வது மிகவும் சிறப்பானது. நீங்கள் கொடுப்பதை விட உங்களது பெற்றோர் கொடுப்பதுபோல புகைப்படம் எடுத்துக்கொள்வது மிக மிக சிறப்பானது. அந்தப் புகைப்படத்தை யார் பார்த்தாலும் வரதட்சணை பரிவர்த்தனை நடந்ததாக நம்பிவிடுவார்கள்.
  • Name(s) of accused persons and their details like addresses and passports etc.

யார் மீதெல்லாம் புகார் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களைப்பற்றிய விவரங்களை தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் சமயத்தில் மிகவும் உதவியாக இருக்கும்!
  • Details of harassment like duration, time period, place and type of harassment.
கணவனுக்குத் தெரியாமல் தனியாக ஒரு நோட்டுப் புத்தகம் வைத்து அவ்வப்போது குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை தேதி, நேரம், இடம் போன்றவற்றை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக வெளி ஊர்களில் இருந்து நாத்தனார் உங்கள் கணவனுடனோ அல்லது உங்களுடனோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய விவரங்களை தவறாமல் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.
  • Details of demand of dowry, if any
  • Bank statement, if you have drawn dowry from the bank
  • Details of the cheque if you have paid the dowry in that form
பணப்பரிவர்த்தனை விஷயங்களை கவனமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்களது பெற்றோர் வங்கியிலிருந்து தங்களது சொந்த செலவிற்கு பணம் எடுத்திருந்தாலும் அந்த விஷயங்களை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது வரதட்சணை கொடுப்பதற்காகத்தான் அந்தப் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டதாக புகாரில் கணக்குக் காட்டிவிடலாம்.

  • Details of the person to whom it was handed over.
கணவன் வீட்டில் யார் யாரைப் பிடிக்கவில்லையோ அவர்கள் பெயரையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டு எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது யார் பெயரையாவது புகாரில் சேர்க்காமல் மறந்து போய்விடுவீர்கள்.
  • In case of physical violence, details of injuries and type of weapon.
  • Doctor’s prescription or case sheets of the treatment of such injuries.
எப்போதாவது அரிதாக வீட்டு வேலை செய்யும்போது (?) சிறு காயம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு அதற்கான ஆதாரத்தை பத்திரமாக ஒரு ஃபைலில் அழகாக தேதிவாரியாக அடுக்கிவைத்துக்கொள்ளுங்கள். புகார் கொடுக்கும்போது கணவனும் அவனது குடும்பத்தாரும் வரதட்சணைக்காக அடித்துக் கொடுமை செய்யும்போது ஏற்பட்ட காயம் என்று புகாரில் சேர்த்துவிடலாம்.
  • Details of the elders who had arranged the marriage and who tried to patch up the differences.
  • Places where the mediation/counselling sessions were held
கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கு வந்த பெரிசுகளின் பெயர்களை விலாசத்துடன் முழுவிவரத்தோடு சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக வயதான கிழவன்களை உங்கள் பக்கம் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இது போன்ற கிழங்கள்தான் ஜொல்லுவிட்டுக்கொண்டு மருமகள் சொல்வதெல்லாம் நியாயம் என்று எங்கு வேண்டுமானாலும் கண்ணை மூடிக்கொண்டு சத்தியம் செய்யத் தவம் கிடக்கும்.
  • Details of witnesses, especially independent witnesses and your own children.
உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆண் கிழடுகளை சரிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போதும் வழக்கு நடக்கும்போதும் காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ உங்கள் சார்பாக வாக்குமூலம் கொடுக்கவோ, சாட்சி சொல்லவோ உதவியாக இருக்கும். உங்களுக்கு குழந்தை இருந்தால் இப்போதே கணவனுக்கெதிராக பேசுவதற்கு தயார்படுத்தி வைத்து விடுங்கள். தேவையான சமயத்திற்கு உதவும்.
  • Any written agreements during marriage.
  • Details of gifts in the form of movable property like jewels/cash/garments/vehicles and immovable property like plots/flats.
  • Any written/voice communication between the partners, the victim and the parents in the form of letters, emails, voice records etc.
கணவன் தரப்பிலிருந்து யார் எப்போது பேசினாலும் அவற்றை எல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்துவைத்துக்கொள்ளுங்கள். வரதட்சணை தொடர்பான பேச்சை நீங்களே ஆரம்பித்து அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை பதிவு செய்துவிடுங்கள். அதே போல கடிதத்தில் ஏதாவது பணம், நகை போன்ற சொற்கள் எங்காவது இருந்தால் அந்தக் கடிதங்களை தனியாக ஒரு ஃபைலில் சேகரித்துவைத்துக்கொள்ளுங்கள்.
  • Reasons for the delay in lodging the complaint, if any.
  • Signature of the victim and contact number.

ஆதாரங்களை எப்படி திரட்டுவது என்று இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த புதிய வழிமுறைகள் இருந்தாலும் எனக்கு அனுப்பிவையுங்கள். மற்ற மருமகள்களும் பயனடையட்டும்.

வாழ்த்துக்கள்!


6 COMMENTS:

498ஏ அப்பாவி said...

//கணவன் வீட்டில் யார் யாரைப் பிடிக்கவில்லையோ அவர்கள் பெயரையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டு எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது யார் பெயரையாவது புகாரில் சேர்க்காமல் மறந்து போய்விடுவீர்கள்//

மறந்து ​போனாலும் பரவாயில்​லை... சில வருடங்கள் மற்றும் சில மாதங்கள் கழித்தும் ​பெய​ரை அந்த F.I.Rல் இ​ணைத்துக்​கொள்ளலாம். உதாரணத்திற்கு எனது தம்பி ​பெயர் பல மாதங்கள் கழித்து இ​ணைக்கப்​பெற்று அவ​னையும் ​கைது ​செய்து சி​றையில் அ​டைத்தார் உங்கள் மருமகள் மன்ற சிறப்பு உறுப்பினர்.. (அதாங்க என்​னோட 498ஏ ம​னைவி)

Nithya Lavanya said...

மிகவும் தவறான வழிகாட்டி பதிவு. தவறிழைக்கும் மருமகளை வழிகாட்டும் என்றும் நல்ல மருமகளுக்கு நல்லதொரு பாதுகாப்பு நல்கிடும் என்றும் 'மருமகளிடம்' எதிர்பார்த்தேன்.

குடும்பத்தினை சிதைக்கும் கோடரிக் காம்பு பதிவு என்று உணர்கிறேன். கருத்தினை சற்று ஆணித்தரமாக சொல்வதற்காக வருந்துகிறேன் ஆனால் உண்மை அது தான். இந்த பதிவு செல்லும் விதத்தினை பார்க்கும் போது ஒன்று உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகிஇருக்காது அல்லது நீங்கள் ஒரு ஆணாக இருக்க வேண்டும் (சும்மா ஒரு பந்தாவுக்க) இந்த பதிவினை எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

நாட்டின் நலன் மற்றும் இறையாண்மை கருதி உங்கள் கருத்துகளை சீர்திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மருமகள் said...

Nithya Lavanya,
உங்களின் வருகைக்கும் “ஆணித்தரமான” கருத்திற்கும் நன்றி. மருமகளிடம் எதிர்பார்த்து நீங்கள் ஏமாற்றம் அடைந்ததற்கு வருந்துகிறேன். உங்களைப் போல பலரும் இப்படித்தான் ஏமாற்றமடைகிறார்கள். ஏனென்றால் இந்த சமூகம் மருமகள் என்றவுடன் ஒரு எதிர்பார்ப்புடன்தான் பார்க்கிறது. அதனால்தான் இந்த கசப்பான ஏமாற்றங்கள்.

உங்களின் கருத்தினை பார்க்கும்போது நீங்கள் கண்டிப்பாக ஒரு “மாமியாராகத்தான்” இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மாமியாருக்குத்தான் மருமகள் எது செய்தாலும் குற்றமாகத் தெரியும்.

மீண்டும் ஒருமுறை உங்களின் கருத்திற்கு நன்றி!

செந்தழல் ரவி said...

கல்யாணமே பண்ணாம இருப்பது எவ்வளவு நல்லது :))

மருமகள் said...

// Blogger செந்தழல் ரவி said...

கல்யாணமே பண்ணாம இருப்பது எவ்வளவு நல்லது :)) //

இப்படிப் பொதுவாக ஒரு கருத்து தெரிவித்து திருமண பந்தத்திலிருந்து நீங்கள் ஒதுங்கிக்கொண்டால் பிறகு குடும்பங்களில் “மருமகள்” என்ற “புனிதமான” உறவே இல்லாமல் போய்விடுமே.

uma said...

இந்த பதிவு மிக்க உண்மை, திருமணம் செய்தவுடன் பெண்கள் கணவரின் வருமானம் அனைத்தும் தங்களின் பிறந்த வீட்டிர்க்கு தான் சொந்தம் என்று பேராசை பிடிதவர்களாக நிறைய பெண்கள் இருக்கின்றார்கள். முதலில் போலீசில் வழக்கு போடுவதாக மிரட்டுகின்றனர். இவர்களின் ஆசைக்கு கட்டுபடாவிட்டால் பழிவாங்க போலீசில் போய் வழக்கு போடுகின்றனர். பாவம் கஷ்டப்பட்டு படிக்க வைத்த பையனின் பெற்றோர் எந்த தவறும் செய்யாமல் தண்டிக்க படுகின்றனர்.