இந்தக் கொடுமைகளில் முக்கியாமனது கூட்டுக் குடும்பம் என்ற பெயரில் நாத்தனார்கள் அடிக்கும் கூத்து. வயதாகிவிட்டது என்று காரணம் காட்டி மாமனாரும் மாமியாரும் மருமகளிடம் பணிவிடை என்ற பெயரில் எதிர்பார்க்கும் இலவச கொத்தடிமைத்தனம். இதுபோன்ற பிரச்சனைகளை யாரிடம் சொல்லி அழுவது என்று பல மருமகள்கள் மனதுக்குள்ளேயே அழுது கொண்டிருக்கிறார்கள்.
இந்தியக் கணவன் மற்றும் அவனது குடும்பத்தினர் அனைவருக்கும் மருமகள் என்றால் ஏதோ இலவசமாகக் கிடைத்த தொலைக்காட்சிப் பெட்டி என்ற நினைப்பு. ஒவ்வொருவரும் ஒரு “சானலைப்” (Channel) பார்க்க விரும்புவதுபோல கணவன் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மருமகளை கொடுமை செய்து இன்பம் காணுகிறார்கள். என்ன ஒரு கொடுமை!
இந்தக் கொடுமை தாங்காமல் தனியாக வீடு பார்த்து குடும்பம் நடத்தலாம் என்றால் கணவன் ஒத்துழைப்பதில்லை. மருமகள் சற்றுக் குரலை உயர்த்தினால் உடனே விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டுவார்கள் இந்த மடையர்கள்.
இதுபோன்ற சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பல மருமகள்கள் இந்தப் பிரச்சனையை எப்படி பக்குவமாகக் கையாண்டு விவாகரத்து கோரும் கணவனுக்கு நெத்தியடி கொடுப்பது என்று இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இந்து திருமணச் சட்டப்படி விவாகரத்து கோருவதற்கு சில அடிப்படைக் காரணங்கள் தேவைப்படும். உதாரணத்திற்கு கணவனோ அல்லது மனைவியோ கொடுமை செய்தால் அதன் அடிப்படையில் விவாகரத்து கோரலாம்.
இந்திய மனைவி ஒருபோதும் தனது கணவனுக்குக் கொடுமை இழைப்பதில்லை என்று உலகத்திற்கே தெரியும். அதனால் கணவன் இந்த அடிப்படையில் விவாகரத்து கோரினால் விவாகரத்து கிடைக்கவே கிடைக்காது!
ஆனால் மனைவியின் சம்மதத்துடன் விவாகரத்திற்கு விண்ணப்பித்தால் கணவனுக்கு விவாகரத்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த சட்டப் பிரிவிற்கு இந்து திருமணச் சட்டம் பிரிவு 13 (B) [Hindu Marriage Act, 1955 Section 13B] என்று பெயர்.
மருமகள்கள் இந்த சட்டப் பிரிவைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு இதனையே தூண்டிலாகப் பயன்படுத்தி விவாகரத்து கோரும் கணவனுக்குப் பாடம் கற்பிக்கலாம்.
முதலில் கணவனின் விவாகரத்திற்குச் சம்மதம் (Mutual Consent) தெரிவித்து கணவனை நீதிமன்றத்தில் விவாகரத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கச் செய்யவேண்டும். நீதிமன்றம் தனது இறுதி முடிவினைத் தெரிவிக்க 6 மாதங்கள் வரை காலக் கெடு கொடுக்கும்.
இந்த நேரத்தில் கணவன், ஆகா மனைவி விவாகரத்திற்குச் சம்மதித்துவிட்டாள்! தனக்கு விரைவாக விவாகரத்து கிடைத்துவிடும் என்று “பலவித கனவுகளோடு” காத்துக்கொண்டிருப்பான். ஆனால் இந்த 6 மாத காலம் முடிவதற்குள் (கடைசி நாளன்று) திடீரென்று தனக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லை என்று கூறி மருமகள் நீதிமன்றத்தில் மற்றொரு விண்ணப்பத்தைக் கொடுத்தால் போதும் அத்தோடு கணவனின் விவாகரத்து என்ற கற்பனைக் கோட்டை சுக்கு நூறு அல்ல ஆயிரமாக தகர்ந்துவிடும்!
பிறகு கணவன் இந்த விவாகரத்து விண்ணப்பத்தின் மீது மேல்முறையீடு செய்து மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று பல ஆண்டுகளை வீணடித்துப் போராடுவான்.
ஆனால் மருமகள் பிடிவாதத்துடன் இருந்து குழந்தையின் நலனுக்காக நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று ஒரே போடாக போட்டு விட்டால் போதும். அவ்வளவுதான் உச்ச நீதிமன்றமே அசந்துபோய்விடும். பிறகென்ன கணவனுக்கு விவாகரத்து இந்த ஜென்மத்தில் கிடைக்காது. கணவன் தனது விவாகரத்து வழக்கை ஆரம்பித்து பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மருமகளிடம் நெத்தியடி வாங்கிக்கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று மூக்கு உடைபட்டு திரும்பி வரவேண்டியதுதான்.
இதுதான் விவாகரத்து என்ற வலையை விரிக்கும் முட்டாள் கணவனுக்கு சம்மதம் (Mutual Consent) என்ற தூண்டிலைப்போட்டு மருமகள் கொடுக்கும் நெத்தியடி ரகசியம்!
இதுபோன்ற ஒரு தொழில்நுட்பத்தை ஒரு மருமகள் வெற்றிகரமாக செயல்படுத்தி 11 ஆண்டுகளாகப் போராடி உச்ச நீதிமன்றம் வரை சென்ற கணவனுக்கு நெத்தியடி கொடுத்திருக்கிறார். அதுதொடர்பான செய்தியையும் இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவின் ஒரு பகுதியையும் கீழே தந்திருக்கிறேன். படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
புதுடில்லி:குழந்தையின் எதிர்காலத்தை முன்னிட்டு, விவாகரத்து மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது.
டில்லியை சேர்ந்த ஹித்தேஷ்வருக்கும், தீபாவுக்கும் கடந்த 94ம் ஆண்டு திருமணம் நடந்தது. 95ல் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதியினர் 2000ம் ஆண்டிலிருந்து பிரிந்து வாழ்கின்றனர். 2001ல் விவாகரத்து கேட்டு இவர்கள் விண்ணப்பித்தனர். "இந்த தம்பதியர் பிரிந்து வாழலாம்' என, கோர்ட் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விவாகரத்தை அங்கீகரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஹித்தேஷ்வர் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் டி.கே.ஜெயின் மற்றும் எச்.எல்.தத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. தீபாவிடம் நீதிபதிகள் விசாரித்ததில், கணவனுடனான கசப்புணர்வு நீடித்தாலும் குழந்தைக்காக சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தார்.இதை கருத்தில் கொண்டு, மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பளிப்பதாக கூறி ஹித்தேஷ்வரின் மனுவை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.======IN THE SUPREME COURT OF INDIA
CIVIL APPEALATE JURISDICTION
CIVIL APPEAL NO. 6288 OF 2008
Hitesh Bhatnagar ………….. Appellant
versus
Deepa Bhatnagar …………..Respondent2) The appellant-husband and the respondent-wife got married according to the Hindu Marriage Act, 1955 [hereinafter referred to as ‘the Act’] in 1994, and are blessed with a daughter a year thereafter. Some time in the year 2000, due to differences in their temperaments, they beganto live separately from each other and have been living thus ever since. Subsequently, in 2001, the parties filed a petition under Section 13B of the Act before the District Court, Gurgaon, for dissolution of the marriage by grant of a decree of divorce by mutual consent. However, before the stage of second motion and passing of the decree of divorce, the respondent withdrew her consent, and in view of this, the petition came to be dismissed by the Ld. Addl. District Judge, Gurgaon, though the appellant insisted for passing of the decree. The appellant, being aggrieved, has filed appeal No. F.A.O. No. 193 of 2003, before the High Court of Punjab and Haryana. The Learned Judge, by his well considered order, dismissed the appeal vide order dt. 08.11.2006. Being aggrieved by the same, the appellant is before us in this appeal.
26) In the present case, time and again, the respondent has stated that she wants this marriage to continue, especially in order to secure the future of their minor daughter, though her husband wants it to end. She has stated that from the beginning, she never wanted the marriage to be dissolved. Even now, she states that she is willing to live with her husband putting away all the bitterness that has existed between the parties. In light of these facts and circumstances, it would be travesty of justice to dissolve this marriage as having broken down. Though there is bitterness amongst the parties and they have not even lived as husband and wife for the past about 11 years, we hope that they will give this union another chance, if not for themselves, for the future of their daughter.
We conclude by quoting the great poet George Eliot "What greater thing is there for two human souls than to feel that they are joined for life - to strengthen each other in all labour, to rest on each other in all sorrow, to minister to each other in all pain, to be one with each other in silent, unspeakable memories at the moment of the last parting."
27) Before parting with the case, we place on record our appreciation for the efforts made by Shri. Harshvir Pratap Sharma, learned counsel, to bring about an amicable settlement between the parties.
28) In the result, the appeal fails. Accordingly, it is dismissed. No order as to costs.
……………………………J.
[ D. K. JAIN]
……………………………J.
[ H. L. DATTU]
New Delhi,
April 18, 2011.
பின்குறிப்பு: மேலுள்ள விவாகரத்து வழக்கில் கணவன் விவாகரத்துக் கேட்டாலும் மனைவி தன் குழந்தையின் நலனுக்காக அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக பிடிவாதம் பிடித்திருக்கிறார். அந்தக் குழந்தை 1995ல் பிறந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது அதற்கு வயது 16. இப்போது அது குழந்தை கிடையாது சுயமாக சிந்திக்கத் தெரிந்த இளம் பெண். ஆனால் மேலுள்ள வழக்கில் கணவன் தனது திருமண வாழ்வில் 11 ஆண்டுகளை இழந்துள்ளார். ஆனாலும், உச்ச நீதிமன்றம் மருமகளின் குரலுக்கு மட்டும்தான் செவி சாய்த்திருக்கிறது! இதனை இந்திய மருமகள்கள் நன்றாக கவனித்து குறிப்பெடுத்துக் கொள்ளவும்.
இந்த பதிவில் விவாகரத்து வழக்குத் தொடரும் கணவனுக்கு எப்படி நெத்தியடி கொடுப்பது என்று தெரிந்துகொண்டீர்கள். அடுத்த பதிவில் மருமகள் விரும்பும் விவாகரத்தைக் கொடுக்காத கணவனுக்கு எப்படி சட்டத்தின் துணையோடு நெத்தியடி கொடுத்து வழிக்குக் கொண்டுவந்து விவாகரத்துப் பெறுவது என்று தெளிவாக எழுதுகிறேன்.
வாழ்த்துக்கள்!
திரட்டிகளில் முதன்மை திரட்டியான --- தமிழ் திரட்டியில்--- தங்கள் பதிவை இணைத்து
ReplyDeleteஅதிக வாசகர்களை பெறுங்கள் --தமிழ் திரட்டியின்--- முகவரி
http://tamilthirati.corank.com/
தங்கள் வரவு இனிது ஆக
திரட்டிகளில் முதன்மை திரட்டியான --- தமிழ் திரட்டியில்--- தங்கள் பதிவை இணைத்து
ReplyDeleteஅதிக வாசகர்களை பெறுங்கள் --தமிழ் திரட்டியின்--- முகவரி
http://tamilthirati.corank.com/
தங்கள் வரவு இனிது ஆக
Thanks for taking the time to discuss this, I feel strongly about it and love studying extra on this topic. If possible, as you achieve expertise, would you mind updating your blog with extra information? This can be very useful for me.
ReplyDeleteThis will be a terrific web page, might you be interested in doing an interview regarding just how you created it? If so e-mail me!
ReplyDelete