"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


காக்க காக்க மருமகளே காக்க!

இந்தப் பதிவுகளில் இதுவரை வரதட்சணை தடுப்புச் சட்டங்களைப் பற்றியும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதைப்பற்றியும் தெரிந்துகொண்ட மருமகள்களுக்கு மேலும் ஒரு நற்செய்தி வந்திருக்கிறது!

வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளான 3 மற்றும் 4 வது பிரிவு பற்றி முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தேன். மாமியார் கொடுமையால் மறந்துபோன மருமகள்கள் இங்கே சென்று நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்
-->வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1

இந்த சட்டத்தின் 3-வது பிரிவுப்படி வரதட்சணை கொடுப்பதும் பெற்றுக் கொள்வதும் சட்டப்படி குற்றமாகும். சட்டம் இப்படி இருந்தாலும் நமது அரசாங்கம் மிகவும் பெரிய மனதுடன் இதுவரை வரதட்சணை கொடுத்த எந்த மருமகளையோ அல்லது அவர்களது பெற்றோர்களையோ 3-வது பிரிவுப்படி தண்டித்திருக்கவில்லை.
ஆனால் அதற்கு மாறாக வரதட்சணைப் புகார் என்று வந்தால் சட்டமும் அரசாங்கமும் கணவனையும் அவனது குடும்பத்தையும் மட்டுமே இந்த சட்டங்கள் மூலம் “நன்றாக கவனித்து” வருகிறார்கள். இது எழுதப்படாத சட்டம்.

இவ்வளவு சுதந்திரம் இருந்தாலும் பல
படித்த மருமகள்களுக்கு வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்துவதில் சற்று நெருடலான விஷயமாக இருப்பது வரதட்சணை தடுப்புச்சட்டத்தில் உள்ள 3-வது பிரிவாகும். நான் வரதட்சணைக் கொடுத்துத்தான் திருமணம் செய்தேன் என்று புகார் எழுதும்போது சட்டத்தின் 3-வது பிரிவுப்படி கணவனை மட்டும் அரசாங்கம் தண்டிக்கிறதே என்று மருமகள்களின் மனம் வேதனை அடையுமல்லவா. என்ன இருந்தாலும் மருமகள்களுக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கும். அந்த மனசாட்சியும் உறுத்துமல்லவா?

அதனால் இதுபோன்ற நேர்மையான மருமகள்களின் மனஉறுத்தலை உணர்ந்துகொண்ட தேசிய பெண்கள் வாரியம் ஒரு தாய்மை உணர்வுடன் செயல்பட்டு மருமகள்கள் இந்த வரதட்சணை தடுப்புச் சட்டத்தை எந்தவித மனஉறுத்தலும் இல்லாமல் தாராளமாக தடையின்றி பயன்படுத்திக்கொள்ள வசதியாக வரதட்சணை கொடுப்பவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற பெருந்தன்மையான கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்திருக்கிறது.

வரதட்சணை கொடுப்பதை சட்டத்தின் மூலம் தடுக்காமல் அதற்குமாறாக வரதட்சணை கொடுப்பதை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் இந்த புதிய சட்ட திருத்தம் மூலம் நாட்டில் வரதட்சணையை அறவே ஒழித்துவிடலாம் என்று உறுதியாக நம்புகிறார்கள் நமது தலைவிகள். படித்த பெரிய தலைவிகள் சொல்வதில் ஏதாவது ஒரு உள் அர்த்தம் இருக்கும். இதன் உள்நோக்கத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதில் மருமகள்களுக்கு உள்ள ஏராளமான நன்மைகள் உங்களுக்குப்புரியும். தலைவிகள் சொல்வதைக் கேட்டால் மருமகள்களுக்கு என்றும் நன்மைதான்.

அதனால் மருமகள்கள் அனைவரும் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு முழு ஆதரவு கொடுத்து இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவவேண்டும். இந்த புதிய சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்தால் மருமகள்களின் கரங்கள் மேலும் வலுப்படும். கணவனின் குடும்பத்தில் கொடிகட்டிப் பறக்கலாம். எந்தவிதமான காரியங்களையும் எளிதாக சாதித்துக்கொள்ளலாம். கொடுப்பதுபோலக் கொடுத்து பிறகு அதை வரதட்சணை என்று சொல்லலாம். அல்லது எதுவும் கொடுக்காமலே வரதட்சணை கொடுக்கப்பட்டதாகவும் சொல்லலாம். அணு அளவும் பயப்படவேண்டாம். ஏனென்றால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் கணவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் ஒரு கலக்கம் வந்துவிடும். அதைத் தக்கவிதத்தில் பயன்படுத்தும் முழுக்கட்டுப்பாடும் மருமகள் வசம்தான். பிறகென்ன கவலை.

இப்போது இருக்கும் வரதட்சணை தடுப்புச்சட்டமும் அப்படித்தான் இருக்கிறது. இருந்தாலும் இந்த புதிய சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தால் கணவனும் அவனது குடும்பமும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்திருந்தாலும் இந்த சட்டத்திலிருந்தும், மருமகளிடமிருந்தும் தப்பிக்கவேண்டுமென்றால் இருக்கின்ற ஒரே வழி “காக்க காக்க மருமகளே காக்க” என்று மருமகளைத் தான் தினம் தினம் சுற்றி வரவேண்டும்.

இப்போது மருமகள்களுக்கு இந்த சட்ட திருத்தத்தின் முக்கியத்துவம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அதுதொடர்பான செய்தியை படித்து மகிழுங்கள்.


====================================================
மார்ச் 25,2010

புதுடில்லி : வரதட்சணை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற வகையில், புதிய சட்டதிருத்தம் வர உள்ளது. தற்போதைய வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், வரதட்சணை கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் இருவருக்குமே சமஅளவு தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, இருவருக்கும் குறைந்தது ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அல்லது கொடுக்கும் வரதட்சணையின் மதிப்புக்கு ஈடான அபராதம் ஆகியவற்றில் எது அதிகமோ, அது தண்டனையாக வழங்கப்படும்.

இவ்வாறு சட்டம் இருந்தாலும் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே வரதட்சணை கொடுப்பது மற்றும் வாங்குவது இரண்டுமே வழக்கத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சட்டத்தில் தற்போது திருத்தம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வரதட்சணை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தத்தின் படி, மணமகள் வீட்டார், தாங்கள் மணமகன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை குறித்து போலீசில் புகார் செய்து விட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம். இதனால், மணமகள் வீட்டாருக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.

வரதட்சணை கொடுப்பவர்கள், தானே முன்வந்து புகார் கொடுத்தால், அவர்களை குற்றவாளிகளாக கருதாமல், பாதிக்கப்பட்டவர்களாக பார்க்க, இந்த திருத்தம் முதல் முறையாக வழி வகுத்துள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம், இந்த சட்டத்திருத்தத்தை விரைவில் கேபினட்டின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. கேபினட் ஒப்புதல் வழங்கியதும், பார்லிமென்ட்டில் அறிமுகப்படுத்தப்படும்.


இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,'வரதட்சணை தடுப்பு சட்டம் மணமகள் வீட்டாருக்கு எவ்வித சலுகையும் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால், மணமகள் வீட்டார், வரதட்சணை தொடர்பான புகார்களை தெரிவிக்க முன் வருவதில்லை. இந்த தடையை நீக்குவதே, இந்த சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம்' என்றார்.

இதை தவிர மற்றொரு திருத்தமும், இச்சட்டத்தில் மேற்கொள் ளப்பட உள்ளது. அதாவது, மணமகன் அல்லது மணமகள் வீட்டார் தங்களுக்குள் வழங்கும் பரிசு பொருட்களும், தற்போதைய சட்டப்படி வரதட்சணையாக கருதப்படுகிறது. எனவே, இருவீட்டார் இடையே வழங்கப்படும் பரிசுப் பொ ருட்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது; இல்லையென்றால், அதுவும் வரதட்சணையாக கருதப்படும். சமூக நெருக்கடி காரணமாகவே, மணமகள் வீட்டார் வரதட்சணை கொடுக்கின்றனர் என்ற தொடர் விவாதத்தின் காரணமாகவே, இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

======================================================



மருமகள்களுக்கு வெற்றி!!!

வெற்றிகரமாக மருமகள்களின் கூட்டணி இடஒதுக்கீட்டில் வெற்றிபெற்றுவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கையாக அனைத்து மருமகள்களும் அரசியல் கடலில் மூழ்கி முத்தெடுக்கத் தயாராகுங்கள்.

இந்த இடஒதுக்கீட்டில் மருமகள் மட்டும் தான் பலனடையப்போகிறார்களா என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். நியாயமான கேள்விதான். கிழட்டு மாமியார்களை கட்சியில் தேர்வு செய்து தேர்தலில் போட்டியிட அனுமதிகொடுக்க எந்தக் கட்சித்தலைவர் விரும்புவார்? அப்படியே தப்பித்தவறி தேர்தலில் நின்றால் கிழட்டுப் பெண்களுக்கு ஓட்டுப்போடப்போவது யார்? சந்தேகமே இல்லை. கட்சிகளிலும் சரி வாக்காளர்களானாலும் சரி இளம் மருமகள்களை மட்டும் தான் அனைவரும் விரும்புவர். அதனால் மருமகள்களே தேர்தலில் நின்று அரசியல் களம்புக இன்றே தயாராகுங்கள்.

கண்டிப்பாக மருமகள்கள் தான் இனி நாட்டை ஆளப்போகிறார்கள். சட்டசபை நாடாளுமன்றம் இவற்றில் வெற்றிக் கொடி கட்டி கிழட்டு மாமியார் கூட்டத்தையும், கொடுமை செய்யும் கணவர் கூட்டத்தையும் புதுப்புதுச் சட்டங்களை இயற்றி நாட்டை விட்டே விரட்டுவோம்.






மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத், பாஜக தலைவர்கள் சுஷ்மா
புதுதில்லி, மார்ச் 9: மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவுடன் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நிறைவேறியது. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம்தேதி (திங்கள்கிழமை) இந்த மசோதாவை நிறைவேற்றுவது என்பதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முனைப்புடன் இருந்தது. எனினும் அது நிறைவேறாமல் போகவே அதை எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதில் வெற்றி கண்டது ஆளும் கூட்டணி.

மசோதா நிறைவேறியாக வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் முழு முயற்சி மேற்கொண்டனர். இந்த தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் என்றும் இந்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றினால் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியும் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும் அறிவித்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு.

மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 186 வாக்குகளும் எதிர்த்து 1 வாக்கும் பதிவாகின. சில கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.தமக்கு முன்கூட்டியே எதையும் தெரிவிக்காமல் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தாமலே மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தியதை கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இக்கட்சிக்கு மாநிலங்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ளனர்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்களும், தாம் கேட்டுக்கொண்ட திருத்தங்கள் மசோதாவில் இடம்பெறவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர்.1996 முதல் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டு நிறைவேறாமல் போனது. 14 ஆண்டுக்குப்பிறகு தற்போதுதான் பிரதான எதிர்க்கட்சியான பாஜக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இந்த மசோதா நிறைவேறியுள்ளது.மகளிருக்கு மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் அரசமைப்பு சட்ட 108வது திருத்த மசோதா திங்கள்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோதே சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரியின் இருக்கை அருகே சென்று அங்கு இருந்த மசோதா பிரதியை பறித்துக் கிழித்து அன்சாரியை தாக்கவும் முற்பட்டனர்.அவையில் தொடர்ந்து அமளி தொடரவே திங்கள்கிழமை அவை நாள் முழுவதுக்கும் ஒத்திவைக்கப்பட்டது.செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் அருண் ஜேட்லி (பாரதிய ஜனதா கட்சி), பிருந்தா காரத் (மார்க்சிஸ்ட்), சதீஷ் மிஸ்ரா (பகுஜன் சமாஜ் கட்சி), ஜெயந்தி நடராஜன் (காங்கிரஸ்) உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

விவாதத்தை தொடங்கிவைத்து அருண் ஜேட்லி பேசுகையில், மகளிர் மசோதாவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாகவும் அதே நேரத்தில் மாநிலங்களவையில் நடந்த வெட்கித்தலைகுனியக் கூடிய சம்பவங்கள் இந்த நல்லதொரு தருணத்தை மழுங்கடித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.இந்த மசோதா மூலமாக தலித்துகள், பழங்குடிகளுக்கு பாதிப்பு வராது. அவர்களுக்கு நியாயமான ஒதுக்கீடு இந்த மசோதா மூலம் கிடைக்கும் என்று ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.முன்னதாக, திங்கள்கிழமை நடந்த அமளியில் தொடர்புடையதாக 7 உறுப்பினர்களை, பட்ஜெட் கூட்டத் தொடரின் எஞ்சிய காலத்துக்கு சஸ்பென்ட் செய்ய அன்சாரி நடவடிக்கை எடுத்தார். அவைத்தலைவர் அன்சாரி விவாதமின்றி மசோதாவை வாக்கெடுப்புக்கு விடுவதாக அறிவித்தார். இந்த நடவடிக்கைக்கு பாஜக, இடதுசாரி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். முதலில் விவாதம் நடத்தி அதன்பிறகே வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இருப்பினும் முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறி அடுத்ததாக மசோதா மீது விவாதம் நடைபெறும் நிலை எப்போதும் இல்லாதவகையில் உருவானது.இந்த மசோதா சிறுபான்மையினருக்கோ அல்லது தலித்துகளுக்கோ எதிரானது அல்ல என்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவகை செய்யும் உன்னத நடவடிக்கை என்று பிரதமர் மன்மோகன் வர்ணித்தார்.மசோதாவுக்கு ஆதரவளித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் அருண் ஜேட்லி, மற்றும் பிற கட்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக, மசோதாவை ஒத்திவைத்து அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்கவேண்டும் என்று செவ்வாய்க்கிழமை காலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை லாலு பிரசாதும் முலாயம் சிங்கும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதற்கு பிரதமர் சம்மதிக்கவில்லை. இந்த மசோதா நிறைவேறுவதன் மூலம் 545 பேரைக் கொண்ட மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 181 பேர் இடம்பெறுவார்கள். 28 மாநில சட்டப்பேரவைகளில் மொத்தமுள்ள 4109 இடங்களில் 1370 இடங்கள் பெண்களுக்கு கிடைக்கும்.





மருமகள்களுக்கு நற்செய்தி!



இதுவரை வீட்டில் மட்டும் ஆட்சி செய்துவந்த மருமகள்கள் இனி சட்டசபை, பார்லிமென்ட் என அரசியலிலும் புகுந்து கலக்கலாம். மருமகள்களே இந்த இட ஒதுக்கீட்டிற்கு உங்களின் ஆதரவை முழுமனதுடன் தெரிவியுங்கள். இன்னும் சொல்லப்போனால் 50% இடஒதுக்கீடு கிடைக்க ஏதாவது செய்யமுடியுமா என்று உங்கள் தொகுதி MP-க்களிடமும் தேசிய மகளிர் வாரியத்திடமும் கோரிக்கை வையுங்கள்.

புது தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில் கிரிஜா வியாஸ் கூறியது: அனைத்துக் கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் விரும்புகிறது. இந்த மசோதாவை எதிர்க்கும் கட்சிகள் யோசித்து முடிவுக்கு வர வேண்டும். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அவர்களுக்கு அவகாசம் உள்ளது. மகளிர்க்கு அதிகாரத்தில் பங்கு கொடுப்பது மட்டுமே இந்த மசோதாவின் நோக்கம் அல்ல. அதையும் தாண்டி எதிர்கால சந்ததிகளின் நலனுக்காகவும் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா நிறைவேற அனைத்து உறுப்பினர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்த ஒதுக்கீடு எதிர்கால பெண்களின் நலனுக்காக என்று பெண்கள் வாரியத்தலைவி சொல்லியிருக்கிறார். அதனால் 50% இடஒதுக்கீடு கேளுங்கள். உங்களது எதிர்காலத் தோழிகள் பலன் அடையட்டும்.

இந்த இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டால் எல்லா மருமகள்களும் தைரியமாக அரசியலில் ஈடுபட்டு நாட்டு முன்னேற்றத்திற்குப் பாடுபடலாம். எத்தனை ஆண்டுகள் ஆண்கள் இயற்றும் சட்டங்களைப் பயன்படுத்தவேண்டிய சூழ்நிலையில் பெண்கள் வாழவேண்டும்? பெண்களே பல புதிய சட்டங்களை இயற்றி வரதட்சணைக் கொடுமை செய்யும் கணவர்களை எப்படி அடக்கி ஆளலாம் என்ற புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்கலாம். நாட்டின் ஆட்சியே மருமகள்களின் கையில் வந்த பிறகு வீட்டில் ஆட்சி செய்வது மிகவும் எளிதாகிவிடும் அல்லவா. அதனால் படித்த மருமகள்கள் முழுமனதுடன் அரசியலில் ஈடுபடவேண்டும். அதற்கு இந்த இடஒதுக்கீடு ஒரு பொன்னான வாய்ப்பு.

இந்த இடஒதுக்கீடு சட்டமாக வந்தாலும் என்னுடைய கணவரோ அல்லது மாமியார் வீட்டிலோ அரசியலில் ஈடுபட விடமாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அது தான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம். மருமகளின் விருப்பத்திற்கு அடிபணியாதவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்குத்தான் குடும்ப வன்முறை சட்டம் இயற்றியிருக்கிறார்கள். அதனைப் பற்றி அடுத்தப் பதிவில் விரிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு இந்த செய்தியைப் படித்து சந்தோஷமடையுங்கள்.


புது தில்லி, மார்ச் 7: மக்களவையிலும், மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடங்களை ஒதுக்க வகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்படுகிறது.உலக மகளிர் தினத்தின் 100-வது ஆண்டு நாளில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

காங்கிரஸ், பாஜக, இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், அகாலி தளம், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றன.சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் குறைப்பதற்கான சதி இந்த மசோதா என அவர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கும் பிரதிநிதித்துவம் தர உள் ஒதுக்கீடு தேவை என இக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.இன்று தாக்கல்: அரசமைப்பு சட்ட 108-வது திருத்த மசோதா என்கிற மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை விவாதத்துக்காக மாநிலங்களவையில் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி திங்கள்கிழமை தாக்கல் செய்கிறார்.

பிரதான கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிப்பதால் விவாதத்துக்குப் பின் நடைபெறும் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறுவது உறுதியாகிவிட்டது.மாநிலங்களவையில் காலியிடம் நீங்கலாக தற்போது 233 உறுப்பினர்கள் உள்ளனர். அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர குறைந்தது 155 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.மாநிலங்களவையில் 165 உறுப்பினர்கள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றனர்.

இவர்கள் தவிர ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அக் கட்சியைச் சேர்ந்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.பேசலாம்- அமைச்சர் பன்சால்: தற்போதைய வடிவில் மகளிர் மசோதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டம் என்பது தேங்கி நிற்கக் கூடியது அல்ல. மசோதா குறித்து புது வித ஆலோசனைகள் இருந்தால் அது குறித்து பேசி மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது- மொய்லி: மகளிர் மசோதா நிறைவேற தாங்கள்தான் காரணம் என எந்தக் கட்சியும் தனி உரிமை கோர முடியாது என மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.மகளிர் மசோதா நிறைவேறுவதற்கான பெருமை அனைத்தும் இந்த நாட்டு மக்களுக்கும், மகளிருக்கும், நாடாளுமன்றத்துக்கும் உரியது என்றார் அவர்.

முஸ்லிம், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான சதி- லாலு, முலாயம்
தற்போது தாக்கல் செய்யப்படும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முஸ்லிம், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது என ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து லாலு மேலும் கூறியதாவது: மகளிர் மசோதா என்பது மாபெரும் அரசியல் பிழை. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை, சச்சார் குழு அறிக்கை பரிந்துரைகளை அமல்படுத்த திராணியில்லாத மத்திய அரசு, திசை திருப்பும் செயலாக மகளிர் மசோதாவை எடுத்துக் கொண்டுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்கள் எம்.பி.யாக தேர்வு பெற இட ஒதுக்கீடு அவசியமா? கொறடா உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் என காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் என்னிடம் தெரிவித்து வருகின்றனர் என்றார் லாலு.முஸ்லிம்கள், தலித்துகள் மக்களவைக்கும், பேரவைகளுக்கும் தேர்வு செய்யப்பட கூடாது என காங்கிரஸýம், பாஜகவும் கூட்டாக சதியில் ஈடுபட்டுள்ளன என்றார் முலாயம் சிங் யாதவ்.

குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஒரு முஸ்லிம் கூட எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படவில்லை. நிலைமை இப்படியிருக்கையில் இந்த மாநிலங்களில் இருந்து முஸ்லிம் பெண் எப்படி எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படுவார் என முலாயம் கேள்வி எழுப்பினார்.மகளிர் மீது உண்மையிலேயே மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமானால், மத்திய அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வியிலும் 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் அவர்.

13 ஆண்டு போராட்டம் கடந்த 13 ஆண்டுகளாக இந்த மசோதாவைத் தாக்கல் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. 1997-ல் ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்த சமயத்தில் முதல்முறையாக இந்த மசோதாவை தாக்கல் செய்ய முயன்றபோது, அவரது சொந்தக் கட்சி (ஜனதா தளம்) எம்.பி.க்களே அவரது கையிலிருந்து மசோதா நகலை பிடுங்கி கிழித்து எறிந்தனர்.பாரதிய ஜனதா தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய சட்ட அமைச்சர் ராம் ஜேத்மலானி மகளிர் மசோதாவை தாக்கல் செய்ய முயன்றபோதும் அமளி ஏற்பட்டது.

ஆண் எம்.பி.க்கள் எதிர்ப்பு?
காங்கிரஸýம், பாஜகவும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்கு அளிக்குமாறு கொறடா உத்தரவைப் பிறப்பித்துள்ளபோதிலும், அனைத்து கட்சிகளிலும் உள்ள பெரும்பாலான ஆண் எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், கொறடா உத்தரவை மீறினால் கட்சி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் வேண்டாவெறுப்பாகவே இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் தெரிகிறது.







தாலி நிலைத்திருக்க நாலு முடிச்சு!

சட்டப்பாடங்களுக்கு நடுவே கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வதற்காக மருமகள்களுக்கு உபயோகமான ஒரு சிறு செய்தி.

தாலியில் போடப்படும் மூன்று முடிச்சு நிலைத்திருக்க நான்காவதாக ஒரு முடிச்சு போடவேண்டுமாம். தமிழ்நாட்டுப் பெரியவர்கள் சொல்கிறார்கள். மருமகள்களே நீங்கள் இதுபோல தாலி நிலைக்க உங்கள் வீட்டிலிருந்து வைரத்தால் ஆன கழுத்தணியை போட்டு நான்காவது முடிச்சு போட்டுக்கொண்டீர்களா?




1. உரிமைக்காக முதல் முடிச்சு - கணவனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் உரிமை. நான் முன்பே கூறியிருப்பது போல் இது தான் IPC 498A ரிமோட் கண்ட்ரோல். மறந்து போனவர்கள் முந்தைய பதிவுகளைப் படிக்கவும்.

2. உறவுக்காக இரண்டாம் முடிச்சு - கணவனுடன் சேர்த்து அவனது உறவினர் அனைவரையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துகொள்வதற்காக கொடுக்கப்படும் உரிமை. அதனால் வரதட்சணைப் புகார் எழுதும்போது கணவனின் குடும்பத்திலுள்ள எல்லா உறவினர்களையும் சேர்த்து கூட்டமாக எழுதலாம். இப்போது தான் எனக்குக் கூட இந்த இரண்டாம் முடிச்சின் அர்த்தம் புரிகிறது. நான் இதுவரை பார்த்த வரதட்சணைப் புகார்களிலெல்லாம் மருமகள்கள் கணவனின் குடும்பத்திலுள்ள எல்லோருடைய பெயரையும் சேர்த்து எழுதியிருந்தார்கள். அவர்களின் "தாலி சென்டிமென்ட்" இப்போது தான் புரிகிறது!

3. ஊருக்காக மூன்றாவது முடிச்சு - இதற்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கிறது. ஒன்று ஊரில் இருக்கும் கணவருடன் தொடர்புடைய யாரைவேண்டுமானாலும் வரதட்சணை வழக்கில் சேர்க்கலாம் என்று ஒரு அர்த்தம். இரண்டாவது அர்த்தம் மருமகளுக்குக் கட்டுப்படாத கணவனையும் அவனது குடும்பத்தையும் வரதட்சணை வழக்கில் சிக்கவைத்து தொலைக்காட்சி, செய்தித்தாள் என எல்லாவற்றிலும் செய்தியை போட்டு கணவனின் குடும்பத்தை ஊரறிய அவமானப்படுத்தலாம் என்றும் பொருள் கொள்ளலாம். பிறகு கணவன் தானாக வழிக்கு வருவான்.

ஆகா! மருமகள்களுக்காக பிற்காலத்தில் சட்ட மேதைகள் எழுதப்போகும் பலசட்டங்களை நமது முன்னோர்கள் எப்படி சுருக்கமாக மருமகள்களுக்கு புரியும் விதமாக மூன்று முடிச்சில் முடிந்து வைத்திருக்கிறார்கள். அருமை!

இந்த மூன்று முடிச்சுகளின் முழுப்பலனும் கிடைக்க நான்காவதாக ஒரு முடிச்சும் போட்டுக்கொள்ளவேண்டும் என்கிறார்கள். ஒரு வேளை வாஸ்த்து சாஸ்த்திரப்படி இது சரியாக இருக்கலாம் என நினைக்கிறேன். அல்லது திருமணத்தில் போடப்படும் இந்த நகையை எதிர்காலத்தில் கணவனும் அவனது குடும்பமும் கேட்ட வரதட்சணை என்று வழக்கில் சேர்க்க ஒரு ஆதாரமாக உதவும் என்ற உயர்வான நோக்கத்திலும் சொல்லியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் மேலே சொல்லியபடி தாலியில் போடப்படும் மூன்று முடிச்சுகள் உங்களுக்கு பலமாக அமைய இந்த நான்காவது முடிச்சு உறுதுணையாக இருக்கும் என நினைக்கிறேன்.

அதனால் நான்காவது முடிச்சு போட்டுக்கொள்ள விரைவில் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இதுவரை அப்படி செய்யவில்லையென்றால் உங்கள் வீட்டில் உங்களுக்கு சேரவேண்டிய சொத்தின் ஒரு பகுதியிலிருந்து பணத்தைப்பெற்று நான்காவது முடிச்சைப் போட்டுக்கொள்ளுங்கள். பல குடும்பங்களில் உடன்பிறந்த சகோதரர்களும், பெற்றோரும் பெண்ணின் திருமணத்திற்காக நிறைய செலவு செய்துவிட்டதாக பொய்கணக்குக் கூறி அத்தோடு உங்கள் கணக்கை முடித்துவிட்டு உங்களுக்கு சேரவேண்டிய சொத்தைக் கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள்.

அரசாங்கம் எப்போதோ பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை இயற்றிவிட்டது. ஆனால் தந்தையும், சகோதரர்களும் கூட்டணியமைத்து அந்த சட்டங்களை மதிக்காமல் தங்கள் வீட்டு பெண்களையே ஏமாற்றுகிறார்கள். அந்த சட்டங்களைப் பற்றி முன்பு ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்: பந்தாடப்படும் (மரு) மகள்கள்

இதுபோன்று ஏமாற்றுக்கார தந்தையும் சகோதரர்களும் இருக்கும் வரை எத்தனை பெரியார்கள் வந்து பெண்ணுரிமைக்காகப் போராடினாலும் பெண்களுக்கு சமஉரிமையை இந்த ஆணாதிக்க சமுதாயம் கொடுக்கப்போவதில்லை.






கணவனை சமாளிப்பது எப்படி?

நீங்கள் காவல்துறையில் பணிபுரிபவரையோ அல்லது காவல் துறையில் பணிசெய்பவரின் குடும்பத்திலோ திருமணம் செய்து வரதட்சணை கொடுமைக்கு உட்பட்டிருந்தால் உங்களுக்கு இந்தக் கொடுமைகளிலிருந்து நிவாரணம் பெற பல வழிகளை அரசாங்கம் செய்து கொடுத்திருக்கிறது.

வழக்கம் போல இந்த முக்கியமான பாடத்திற்கு போவதற்கு முன் முந்தைய பாடங்களை மறந்து போனவர்கள் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அதற்கான இணைப்புகள் கீழே உள்ளன.

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4

இனி, வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 5

போலிஸ் என்றவுடன் பயத்துடன் நாம் என்ன செய்யமுடியும் என்று தயங்கவேண்டாம். நீங்கள் வழக்கம் போல உங்களுக்குத் தேவையானபடி IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற சட்டங்களைப் பயன்படுத்தலாம். சில சமயம் இந்த புகார்களை நீங்கள் கொடுத்தவுடன் அவர்கள் எந்த வகையிலாவது "அவர்களுக்குத் தெரிந்த வழியில்" தப்பித்துவிடலாம்.

அதனால் நீங்கள் இந்த சட்டங்களுடன் கூடவே வேறுவிதமான வழிமுறைகளையும் பின்பற்றவேண்டும். அது தான் துறை சார்ந்த நடவடிக்கை. இதன் மூலம் காவல்துறையில் வேலையை இழக்கவோ அல்லது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதற்காக மருமகள்களுக்கு உதவுவது தான் "தமிழ்நாடு காவல்துறை அலுவலர் நடத்தை விதிகள்". இதை ஒவ்வொரு காவல்துறை பணியாளரும் கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் துறைசார்ந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த நடத்தை விதிகளின் படி காவல்துறையில் பணியாற்றும் நபர் வரதட்சணை வாங்கவோ அல்லது கொடுக்கவோ அல்லது கொடுப்பதற்கு உதவியோ செய்யக்கூடாது.

மேலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மணமகள் அல்லது மணமகன் அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த எவரிடமும் வரதட்சணை கேட்கக்கூடாது.

அதுமட்டுமல்ல திருமணம் முடிந்தவுடன் ஒவ்வொரு காவல் துறை பணியாளரும் தன்னுடைய திருமணத்திற்காக தான் வரதட்சணை கொடுக்கவோ அல்லது வாங்கவோ அல்லது கேட்கவோ இல்லை என்று உறுதிமொழியளித்து கணவன், மனைவி இருவரும் கையொப்பமிட்ட படிவத்தைத் தமிழ்நாடு காவல் துறைத் தலைவருக்கு (DGP) அனுப்பவேண்டும். திருமணம் காவல் துறை பணியாளரின் மகனுக்கோ அல்லது மகளுக்கோ நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட இரு குடும்பங்களும் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.

இதோ அது சம்பந்தப்பட்ட அரசாணை. பக்குவமாக நோட்டுப்புத்தகத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்:


TAMILNADU SUBORDINATE POLICE OFFICERS’ CONDUCT RULES 1964
(G.O.Ms.No. 3638, Home 24th November, 1964)

The amendment hereby made shall come into force with effect from 24th September 2009

DOWRY

No Police Officer shall

(5) (a) (i) give or take or abet the giving or taking of dowry

or


(ii) demand directly or indirectly, from the parents or guardian of a bride or bridegroom, as the case may be,any dowry.

Explanation.—For the purpose of this sub-rule, “dowry” has the same meaning as in the Dowry Prohibition Act, 1961(Central Act 28 of 1961).

(b) Every Police Officer shall, after his marriage or when he celebrates the marriage of his children furnish to the Director General of Police, a declaration that he has not taken any dowry. Where the Police Officer gets married, the declaration shall be signed by the Police Officer, the wife or husband, as the case may be, of the Police Officer and their parents or guardian. Where the son or daughter of the Police Officer gets married, the delcaration shall be signed by the parties of the marriage and their parents or guardian which shall include the Police Officer also”.


இது போல் எத்தனைக் காவலர்கள் அல்லது காவல்துறைக் குடும்பங்கள் இந்த நடத்தை விதிகளைப் பின்பற்றியிருப்பார்கள் என்று சற்று யோசித்துப்பாருங்கள். இவர்கள்தான் நாட்டில் மற்றவர்கள் கொடுக்கும் வரதட்சணைப் புகார்களை பதிவுசெய்து "விசாரணை செய்து" பலருக்கு குற்றப்பத்திரிக்கை "தயார் செய்து" நீதிமன்றங்களுக்கு அனுப்பும் வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.


நீங்கள் இதுபோன்ற காவல்துறை குடும்பங்களில் மருமகளாக சிக்கிகொண்டு "வரதட்சணை கொடுமைகளில்" தவித்துக்கொண்டிருந்தால் இந்த வழிகளையும் பயன்படுத்திக்கொள்ள கொஞ்சமும் தயங்காதீர்கள். அரசாங்கம் கொடுத்திருக்கும் சலுகைகளை பயன்படுத்தாமல் போவது மருமகள்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்வதற்குச் சமமாகும்.

பிறகென்ன காவல்துறை தலைவரின் காதுகளில் காவலர் குடும்பத்தைப் பற்றிய இந்த விஷயத்தைப் போட்டுவிடுங்கள். பிறகு எந்த வகையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேளுங்கள். சரியான பதில் கிடைக்கவில்லையென்றாலோ அல்லது எந்தவகையிலாவது மிரட்டல்கள் வந்தாலோ மாநில மகளிர் ஆணையத்தை அணுகி உதவி கேட்பதற்குக் கொஞ்சமும் தயங்காதீர்கள். மகளிர் ஆணைய அலுவலகத்தின் கதவுகள் மருமகள்களுக்காகவே எப்போதும் பாசமுடன் திறந்திருக்கின்றன.

இதோ அவர்களின் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்கள்.


Tamil Nadu State Commission for Women

Ground Floor, Agriculture Office Building,

Chepauk, Chennai - 600 005

Phone: 044 - 28592750


Dr. (TMT) K.M. Ramathal (Chaiperson)

100, Anna Salai, Guindy, Chennai–6000032
Phone:
044-22200375

Phone:
044 - 25380736
Fax:
044 - 22352751

Tmt. Qudsia Gandhi, I.A.S. (Member)

Special Commissioner and Commissioner, Treasuries and Accounts, Panagal Building, Chennai–15
Phone:
044 – 24342438,
24327294

Phone:
044 - 25362912
Fax:
044 – 24364988

Tmt. V. Vanitha (Member)

Principle, Police Training College, Chennai- 600 083
Phone:
044-24719271

Phone:
044-24716485
Fax:
044 - 24853434,
044 - 24892382

Tmt. Alice Manohari, (Member)

No.13, G.S.Nagar, Ramapuram Chennai-600 089

Phone:
044 - 69522065

Tmt. Eugenie pinto (Member)

Principle Queen Mary’s College, Chennai- 600004
Phone:
044-28444995

-NA-

Tmt. C. Sangamithrai, (Member)

259/9, Kilpauk Garden Road Chennai – 10

Phone:
044 - 32583841

Tmt. K. Gayathridevi, (Member)

No.38, G.S.T. Road, Opposite to Police Quarters, Madurantagam,Kancheepuram District, Tamil Nadu

Phone:
044- 25226399

Tmt. P. kamalambai, MLA (Member)

12-A, S.V.N. Street, Kancheepuram, Tamil Nadu

Phone:
9443320698

Thiru N. S. Palaniappan, I.A.S. (Member)

Secretary to Government, Social Welfare and NMP Department, Secretariat, Chennai- 600009
Phone:
044-25671545

Phone:
044-24860639
Fax:
044- 25675183

Thiru V. Thangavelu, I.A.S.(Member Secretary)

Commissioner and Director of Social Welfare, Chepauk. Chennai-600005
Phone:
044-28524499

Phone:
044-24405045
Fax:
044-28547020



போலிஸ் குடும்பத்திலுள்ள மருமகளுக்குத் தேவையான மேலும் சில முக்கியமானத் தகவல்கள்


வரதட்சணைத் தவிர பரிசுப் பொருட்கள் பெறுவதிலும் காவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சில விதிமுறைகள் இருக்கின்றன.


காவலரோ அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ காவல்துறைத் தலைவரின் அனுமதியில்லாமல் யாரிடமிருந்தும் 5000 ரூபாய் மதிப்பிற்கு மேலாக எந்தப் பொருட்களையும் பரிசாகப் பெறக்கூடாது. அதே சமயம் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பெறப்படும் பரிசுகளுக்கு காவல் துறைத் தலைவரிடமிருந்து அனுமதி பெறவேண்டாம். ஆனால் பரிசுப்பொருளின் மதிப்பு 5000 ரூபாய்க்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.


அதனால் உங்கள் திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட பரிசுகளின் மதிப்பை மறந்து விடாதீர்கள். தேவைப்படும்போது கணவரை கட்டுப்பாட்டிற்குள் வைக்க இந்த சின்ன விஷயங்கள் பெரிய அளவில் உதவும்! சிறு துரும்பும் பல் குத்த உதவும் அல்லவா!


இதோ பரிசுப்பொருட்கள் தொடர்பான அரசாணை:



Gifts

(1) Save as otherwise provided in these rules, no Police Officer shall, except with the previous sanction of the Director General of Police, accept or permit any member of his family, to accept from any person any gift of value exceeding Rs. 5,000/- (Rupees five thousand only):

Provided that the sanction of the Director General of Police shall not be necessary for the acceptance of

(a) gifts from a personal friend or close relative of a value not exceeding Rs. 5,000/- (Rupees five thousand only) on special occasions such as weddings, anniversaries, funerals and religious functions when the making or receiving of such gifts is in conformity with the prevailing religious or social customs;

(2) If any question arises whether, any gift is one which can be accepted without the permission of the Director General of Police, or if a Police Officer is in any doubt whether a gift offered to him is one which can be accepted without the permission of the Director General of Police, a reference shall be made to the Director General of Police, by such Police Officer and the decision of the Director General of Police thereon shall be final.



போலிஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரிசுப்பொருட்களை பெறுவதில் உள்ள சட்ட விதிகள் யாருக்கெல்லாம் பொருந்தும் என்று ஒரு சந்தேகம் மருமகள்களுக்கு இருக்கலாம். இதோ அதற்கான விளக்கம். இந்த விதிமுறையில் சொல்லப்பட்டவர்கள் யாராவது உங்கள் கணவரின் குடும்பத்தில் இருக்கிறார்களா என்று பட்டியலிட்டுத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். ஆபத்துக் காலத்தில் உதவும்.


Member of the Family in relation to member of service includes

(i) The wife/husband of such member whether residing with him/her or not, but does not include a wife/husband separated from the member of service by a decree or order of competent Court of Law (substituted by G.O.Ms.No. 2112, Home, 12th August, 1980) The son and daughter or the step son or step daughter of such member and wholly dependent on him, but does not include a child or step child who is no longer in any way dependent on him of whose custody, the member of the service has been deprived of by or under any law, and

(ii) Any other person related, whether by blood or marriage to such member or to his wife, as the case may be and wholly dependent on such member [G.O.Ms.No. 3074, Home, 9th November,1970]



சம்பந்தப்பட்ட போலிஸ் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர்கள் என்று இந்த நடத்தை விதிமுறையில் சொல்லப்பட்டிருப்பவர்கள் யார் என்று இந்த விளக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.


‘Close Relations’

in relation to a member of service include father, step-father, mother, step-mother, son, adopted son, daughter, adopted daughter, brother, step brother, sister step-sister, wife’s father, wife’s mother husband’s father, husband’s mother, brother’s wife, sister’s husband, daughter’s husband, son’s wife( substituted by G.O.Ms.No. 2112, Home, 12th August, 1980)


இப்போது மருமகள்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும் இந்த சட்ட விதிமுறைகள் யார் யாருக்கெல்லாம் பொருந்தும்? Constable அல்லது Head Constable அல்லது Sub-Inspector அல்லது Inspector? இப்படி பல சந்தேகங்கள் இருக்கலாம். இதோ தமிழ்நாடு காவலர் நடத்தைக் குறிப்புத் தெளிவாக விளக்கியிருக்கிறது.



‘Police Officer’ means any member of the Tamil Nadu Police Sub-Ordinate Service or Tamil Nadu Special Police Sub-Ordinate Service whether for the time being on Foreign Service or not (substituted by G.O.Ms.No. 1279, Home, 8th June, 1981).


போலிஸ் குடும்பங்களில் வாழ்க்கைப்பட்டுள்ள அப்பாவி மருமகள்களின் வாழ்வில்
இப்போது நம்பிக்கை என்ற தீப ஒளி தெரியும் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை ஒளியில் எந்தவகையிலாவது குறுக்கீடு ஏற்பட்டால் முன்பே கூறியது போல மகளிர் ஆணையம் என்ற கோட்டைக்குள் தஞ்சம் புக கொஞ்சமும் தயங்காதீர்கள்.


சட்டங்களைப் பயன்படுத்துங்கள்! சந்தோஷமாக வாழுங்கள்!!


இனி அடுத்த பதிவில் அரசுப்பணியில் உள்ள கணவரின் குடும்பத்தில் அல்லது மாமனாரின் குடும்பத்தில் வாழ்க்கையை தொலைத்திருக்கும் மருமகள்களுக்குத் தேவையான விஷயங்களைத் தருகிறேன்.


வாழ்த்துக்கள்!







மருமகளை ஏமாற்றும் "மாமக்கள்"

வரதட்சணை தடுப்புச்சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி? பாடம் 4

வழக்கம் போல் முன்பு சொல்லிய மற்ற பாடங்களை ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்போது தான் இந்தப் பாடம் எளிதாகப் புரியும்.

மருமகள்களை ஏமாற்றும் மாமக்கள்!
தலைப்பு சரிதான். எழுத்துப்பிழையோ என்று எண்ண வேண்டாம். மாமாக்கள் அல்ல. மா மக்கள் என்றால் பெரிய மனிதர்கள் என்று அர்த்தம்.

இதுவரை மருமகள்கள் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டம் (Dowry Prohibition Act), பெண்கொடுமை சட்டம் (IPC498A) போன்ற சட்டங்களைப் பற்றியும் அவற்றை எப்படித் திறமையாகப் பயன்படுத்தி கணவனையும், மாமியார் குடும்பத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது, தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்வது எப்படி என்பதையும் சில உதாரணங்களுடன் தெரிந்துகொண்டீர்கள். இனி இவற்றை நீங்கள் பயன்படுத்தும்போது ஏற்படும் இடையூறுகளைப் பற்றி விளக்குகிறேன்.

"சாமி வரங்கொடுத்தாலும் அதை பூசாரி தடுப்பது போல" என்று உங்கள் வீட்டில் இருக்கும் சில பெரிசுகள் அவ்வப்போது சொல்லிக்கொண்டிருக்கும். அதற்கு முழு அர்த்தத்தை நீங்கள் இந்த சட்டங்களைப் பயன்படுத்தும்போது தான் உணர்ந்து கொள்வீர்கள்.

அதாவது அரசாங்கம் என்ற கடவுள் உங்களின் வாழ்க்கையை வளமாக்க வரம் கொடுப்பதுபோல பல சட்டங்களைக் கொடுத்திருந்தாலும் அவற்றை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியாமல் அவற்றைத்தடுக்கும் பூசாரிகள் போல பலர் இடையூறு செய்து அந்த வரங்களின் பலனை தாங்கள் அனுபவிக்க முயற்சிசெய்வார்கள். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டால் தான் நீங்கள் விழிப்புடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து சட்டங்களின் முழுப்பலனை அனுபவிக்க முடியும்.

முந்தைய செய்தியில் +2 மருமகள் கொடுத்த வரதட்சணைப் புகாரை போலிஸ் சரியாகக் கண்டுகொள்ளவில்லை என்று செய்தி வந்திருந்ததைப் பார்த்தோம். இது போன்ற பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்பதைப் பற்றியும் விளக்கியிருந்தேன். இது மருமகள்களுக்கு ஏற்படும் முதல்கட்ட இடையூறு. இதைத்தாண்டி வந்து வெற்றிகரமாக புகாரைப் பதிவு செய்த பிறகு அடுத்த கட்டமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பலனில் பங்குபோட சிலர் முயற்சிசெய்வார்கள். ஏமாந்துவிடாதீர்கள்!

ஏதோ மருமகளுக்கு நல்லது செய்வதற்காகவே இந்தப் புனிதப் பணியில் ஈடுபடுவது போல சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு முன்வருவார்கள். விட்டுவிடாதீர்கள். குறிப்பாக புகாரைப் பதிவு செய்த நபரும், புகாரை எழுதுவதற்கு உங்களுக்கு உதவி செய்த சட்டம் படித்தவரும் கூட்டணியாகச் சேர்ந்துகொண்டு "பஞ்சாயத்து" என்ற பெயரில் உங்களின் வருமானத்தில் பங்குபோட முயற்சி செய்வார்கள். இது எப்படி நடக்கும் என்று விளக்கமாக தெரிந்துகொள்ளுங்கள்.

முந்தைய பாடங்களில் சொல்லப்பட்டதுபோல எல்லா மருமகள்களும் வரதட்சணைகொடுமைக்காக இந்த சட்டங்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற அவசியமில்லை. சிலருக்குப் பணத் தேவை இருக்கலாம், சிலருக்கு இருக்கின்ற ஆளை வெட்டிவிட்டு வேறொரு ஆளுடன் சேர்ந்துகொள்ளலாம் என்ற பல உயரிய நோக்கங்கள் இருக்கலாம். இப்படியெல்லாம் நடக்குமா என்று ஆச்சரியப்படாதீர்கள். நான் எழுதுவதற்காக ஏதோ சும்மா சொல்வதாக நினைக்கவேண்டாம். அதற்கான ஆதாரமாக தினமலரில் வந்துள்ள செய்தியின் ஒரு பகுதியைப் பாருங்கள் :


இளைய தலைமுறையினர், தற்போதைய அவசர கால வாழ்க்கையில் கணவனோ மனைவியோ இருவரில், ஒருவர் தன்னை விட பணத்திலும் குணத்திலும் சிறந்தவர்கள் கிடைத்தால் அவர்களுடன் சேர்ந்துகொண்டு பழைய கணவன் அல்லது மனைவியைக் கழட்டி விடுகின்றனர். இதனால், கணவன் மனைவி உறவு என்பது பாதுகாப்பில்லாமல் தொடர்கிறது.


செய்தியில் இருப்பது போல கணவன்கள் நினைத்தபடி மனைவியை அவ்வளவு எளிதாகக் கழற்றிவிட முடியாது. ஆனால் மனைவிக்கு 498A போன்ற சட்டங்கள் கைகொடுத்து அவர்களது எண்ணத்தை எளிதாக ஈடேற்றிவைக்கின்றன.

இது போன்று சட்டத்தின் மூலம் உதவிபெறும் மருமகள்கள் போகிற போக்கில் கைச்செலவிற்கு பணம் தேவையென்றால் இந்த 498A கேசைப் போட்டுவிட்டால் முட்டாள் கணவன்கள் கைதானவுடன் சொல்லிவைத்தது போலவே கையில் பணத்துடன் வந்து நிற்பார்கள். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரிந்தாலும் எவ்வளவு பணம் வேண்டுமோ கொடுத்துவிட்டு கேசை முடித்துவிட்டு தப்பிப்பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தோடு நிறைய கணவன்கள் இருக்கிறார்கள் நாட்டில்.

ஏனென்றால் கைதானவுடன் தான் இந்த முட்டாள்களுக்கு ஞானம் வரும். திருமணத்தின் போது தாங்கள் மனைவியிடம் கொடுத்த "498A ரிமோட் கண்ட்ரோல்" இப்போது தான் ஞாபகத்திற்கே வரும். மருமகள்களுக்கு தேவையானதைப் பெற்றுக்கொள்ள சட்டங்கள் இருப்பது போல கணவன்களுக்கு எந்த சட்டங்களும் இந்த நாட்டில் கிடையாது என்று அப்போதுதான் தேவலோகத்திலிருந்து புதியதாக ஒரு வாக்கு அவர்களின் காதில் ஒலிக்கும்! அதுவரை முட்டாளாக இருந்த கணவனுக்கு உடனடியாக ஞானம் பிறக்கும்!

அதனால் குடும்பத்தோடு கைதாகி வாழ்நாள் முழுவதும் சீரழிவதைவிட கையில் இருக்கின்ற காசை போட்டு இந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு எங்காவது கண்காணாமல் போய்விடலாம் என்று முடிவுசெய்து மருமகள் தரப்பிலிருந்து பேரம் பேசுவதற்கு ஏதாவது சிக்னல் வருகிறதா என்று வழி மேல் விழிவைத்துக் காத்துக்கிடப்பார்கள்.

இது போன்ற நேரத்தில்தான் மருமகள்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இறைச்சி வாசத்தைக் குறிவைத்துப் பறந்து வரும் பிணந்திண்ணிக் கழுகுகள் போல சிலர் மருமகள்களுக்கும் அவரது கணவனின் குடும்பத்திற்கும் இடையே பேரம் பேசி வேலையை முடித்துத்தருவதாக வருவார்கள்.

ஆனால் இவர்கள் சொன்னபடி வேலையை முடிக்காமல் கணவனிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு ஏதோ பாவப்பட்டு அவர்கள் வீட்டு காசை உங்களுக்கு பிச்சை போடுவது போல ஒரு தொகையை உங்களுக்குக் கொடுப்பார்கள். சிலசமயம் கொடுக்காமலும் போகலாம்!

இதுபோன்று அப்பாவித்தனமாக ஏமாந்து விடாமல் பேச்சுவார்த்தையில் நீங்களே நேரடியாக ஈடுபட்டு வேண்டியதை நேரடியாகப் பெற்றுக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் உறவிற்கு நடுவில் இடைத்தரகர்கள் எதற்கு? கடவுள் வரம் கொடுத்திருப்பது உங்களுக்கு அதற்கு நடுவில் பூசாரி எதற்கு? கிடைத்த வரத்தின் முழுப்பலனையும் பெற்றுக்கொள்ள மருமகள்கள் மட்டுமே உரிமையுடையவர்கள்.

இது போல மருமகள்களின் நியாயமான வருமானத்தில் மாமக்கள் "கையைவைத்த" சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. அதனால் மருமகள்கள் தாங்கள் உழைத்து சுயமாக சம்பாதிக்கும் பணத்தில் அடுத்தவர் குறுக்கிட்டுப் பங்கிடுவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அதே சமயம் நீங்கள் இருக்கும் போது உங்களது கணவரை அடுத்தவர் ஏமாற்றவும் இடமளிக்கக்கூடாது. என்ன இருந்தாலும் மருமகள்களுக்கும் பாசம் இருக்குமல்லவா? தங்கள் கண்ணெதிரேயே கணவரை அடுத்தவர்கள் ஏமாற்றுவதைப் பார்த்துக்கொண்டிருக்க அவர்கள் ஒன்றும் கல்நெஞ்சக்காரர்கள் இல்லை.

இது வேலியே பயிரை மேயும் காலம்! அதனால் நாட்டு நடப்பை விழிப்புடன் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதோ சமீபத்தில் நடந்த சம்பவம்:


தினமலர்: ஜனவரி 16,2010

நகரி:வரதட்சணை வழக்கில் இருவீட்டாரையும் சமரசம் செய்து வைப்பதாக கூறி, பணம் வசூலித்த டி.எஸ்.பி., இரு இன்ஸ்பெக்டர்கள், ஒரு எஸ்.ஐ., இரு போலீசார் உட்பட, ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.சென்னையைச் சேர்ந்த பத்ரிநாத்துக்கும், சித்தூர் மாவட்டம் புங்கனூர் மசூதித் தெருவைச் சேர்ந்த குருவப்பாவின் மகள் அருணாவிற்கும், 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இத் தம்பதிக்கு இடையே மனக் கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கணவனும் அவரது பெற்றோரும் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், மேலும் பணம் கொண்டு வரும்படி தொந்தரவு செய்வதாகவும், 2009ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, அருணா புங்கனூர் போலீசில் புகார் செய்தார்.இதன் மீது வழக்கு பதிவு செய்த அப்போதைய புங்கனூர் எஸ்.ஐ., ராமகிருஷ்ணா, பத்ரிநாத் குடும்பத்தினரிடம் ஒரு தொகையை வசூல் செய்து தருவதாகவும், சமாதானம் செய்வதாகவும், அருணாவிடம் கூறி பணம் வாங்கியதாக புகார் கூறப்பட்டது. பத்ரிநாத்திடம் இருந்து வாங்கிய பணத்தில், அதிக தொகையை போலீசாரே எடுத்துக் கொண்டனர்.

இந்த வழக்கில், பத்ரிநாத்திடம் இருந்து போலீசார் எவ்வளவு பணம் பெற்றனர் என்பது பற்றி அறிந்து கொள்ள, அருணா எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வழக்கு விசாரணையையும் புங்கனூர் போலீசார் துரிதப்படுத்தவில்லை. பத்ரிநாத்திடம் வாங்கிய பணத்தை, போலீசார் அருணாவிடமும் கொடுக்கவில்லை. பத்ரிநாத்திடமும் திருப்பி தரவில்லை.இந்நிலையில், அருணா, பத்ரிநாத் ஆகிய இரு குடும்பத்தினரும், சித்தூர் மாவட்ட எஸ்.பி., லட்சுமிரெட்டியை நேரில் சந்தித்து, நடந்த விவரங்களை கூறினர்.அதன் பேரில், பலமநேர் டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ்பெக்டர்கள், பத்மாகரரெட்டி,சீனிவாசுலு, எஸ்.ஐ., ராமகிருஷ்ணா மற்றும் போலீசார் நாராயணமூர்த்தி, நாகராஜ் ஆகிய ஆறு பேர் மீது விசாரணை நடந்தது. விசாரணையின் அறிக்கைப்படி, மாநில டி.ஜி.பி., கிரிஸ்குமார் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரையும், சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.



இதுபோல அப்பாவி மருமகள்களை ஏமாற்றும் விஷயங்களில் ஆண் பெண் என்ற பேதமே இல்லாமல் தான் நடக்கிறது இந்த ஏமாற்றுவேலைகள். அதற்கான உதாரணம் இதோ செய்தியாக வந்திருக்கிறது:




சென்னை: கணவன், மனைவி பிரச்னையில் வழக்குப் பதிவு செய்ய 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., அனிதா; போலீசாக இருந்தவர், 2004ம் ஆண்டு போலீஸ் இட ஒதுக்கீட்டில் எஸ்.ஐ.,யாக தேர்வானார்.மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அபர்ணா, அழகு கலை நிபுணராக உள்ளார். இவரது கணவர் சதீஷ், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தனியாக வாழ்ந்து வந்த அபர்ணாவுக்கு, தொல்லைகள் கொடுத்தார் சதீஷ். "பிரிந்து வாழும் கணவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மயிலாப்பூர் போலீசில் அபர்ணா புகார் கொடுத்தார். எஸ்.ஐ., அனிதா விசாரணை நடத்தினார். மனைவி அபர்ணா மீது, மயிலாப்பூர் போலீசில் சதீஷ் புகார் கொடுத்தார். அப்புகாரை பதிவு செய்த எஸ்.ஐ., புகார் மனு ரசீது கொடுத்தார். அபர்ணா கொடுத்த புகாரை கிடப்பில் போட்டார். இவரது புகாரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்தொகையாக 500 ரூபாய் கொடுத்த அபர்ணா, மீதித் தொகையை பிறகு தருவதாக கூறிச் சென்றார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., லட்சுமியிடம் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ரசாயன கலவை பூசப்பட்ட 500 ரூபாய் லஞ்ச பணத்தை எஸ்.ஐ.,யிடம் அபர்ணா கொடுத்தார். அதை வாங்கிய எஸ்.ஐ., அனிதாவை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் அப்பாசாமி தெருவில் வாடகை வீட்டில் எஸ்.ஐ., வசித்து வந்தார். தனிப்படை போலீசார், எஸ்.ஐ.,யின் வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


போலிஸ் மட்டுமல்ல சில வக்கீல்களும் இந்தமாதிரி வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக உங்களுக்கு உதவி செய்வது போல பாசமாக இருக்கும் வக்கீல்களை நம்பாதீர்கள்.

நீங்கள் உங்கள் கணவரிடமிருந்து பெறப்போகும் மொத்த தொகையில் பெரும்பகுதியை உங்களுக்கே தெரியாமல் "வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல" பக்குவமாக எடுத்துக்கொள்ளும் திறமைபடைத்தவர்கள் பலர் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பெண்ணுரிமை என்று பெரிதாகப் பேசி உங்களை வட்டமடிக்கும் வக்கீல்களை சுத்தமாக நம்பாதீர்கள்.

உண்மையை சொல்லவேண்டுமென்றால் இந்தக் கேசுகளை பதிவு செய்ய உங்களுக்கு வக்கீலின் உதவியே தேவையில்லை. நீங்கள் போய் போலிஸில் புகார் கொடுத்தவுடன் வழக்கை அரசாங்கமே ஏற்று நடத்தும். அரசாங்க வக்கீல் தான் அரசு பணத்தில் இந்த வழக்கை நடத்துவார். அதனால் மருமகள்கள் தனியாக வழக்கறிஞர் வைத்து கேசை நடத்தவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அதே போல பஞ்சாயத்து செய்வதற்கும் எந்த இடைத்தரகரும் தேவையில்லை. பேரத்தை நீங்களே நேரடியாகப் பேசி முடித்து முழுத்தொகையையும் பெற்று உழைப்பின் பலனை சந்தோஷமாக அனுபவியுங்கள்.

இதோ அரசு வழக்கறிஞர் ஒருவர் மருகளை ஏமாற்ற முயற்சி செய்த செய்தி:



கோவை : கோவையில் வரதட்சணை வழக்கில், தொழிலதிபரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட அரசு உதவி வக்கீலை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர். கோவை, கணபதி, சிவானந்தபுரம் பகுதியில் வசிப்பவர் தொழிலதிபர் ராஜகோபால் (60). இவரது மகள் சபீதா(20) எம்.இ., பட்டதாரி. இவருக்கும், கோவை ஆவராம்பாளையத்தில் வசிக்கும் துரை என்பவருக்கும், 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கணவன்-மனைவியிடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர்.

வரதட்சணை கேட்டு கணவர் துரை துன்புறுத்துவதாக, சபீதா போலீசில் புகார் செய்தார். சமீபத்தில், வழக்கின் விசாரணையை முடித்த போலீசார், கணவர் துரை உள்ளிட்டோர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒப்புதல் கேட்டு, வழக்கு ஆவணங்களை, கோவை அரசு உதவி வக்கீல் நாகராஜனுக்கு அனுப்பினர். கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேவையான ஆதார ஆவணங்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதற்கு, ராஜகோபாலனிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார் வக்கீல் நாகராஜன். இது தொடர்பாக ராஜகோபால், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதுவரை அரசு துறை அதிகாரிகளை மட்டுமே பொறிவைத்து பிடித்த போலீஸ் அதிகாரிகள், இந்த புகாரை மிகவும் சவாலாக எடுத்துக்கொண்டு நடவடிக்கையில் இறங்கினர்.

போலீசாரின் ஆலோசனைப்படி, அரசு உதவி வக்கீல் நாகராஜனிடம் ஒரு லட்சம் ரூபாயில் ரூ.15 ஆயிரத்தை முன் பணமாக தருகிறேன் என ராஜகோபால் கூறினார். லஞ்ச ஒழிப்பு துறையினர், "பினாப்தலின்' ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜகோபாலிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று காலை தனது வீட்டில் லஞ்சப் பணத்தை வாங்கிய அரசு உதவி வக்கீல் நாகராஜனை, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து வக்கீல் நாகராஜன் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.1.5 லட்சம் ரொக்கம், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் இந்நடவடிக்கை கோர்ட் ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்று அப்பாவி மருமகள்கள் ஏமாற்றப்படுவதை தேசிய பெண்கள் வாரியமும் உறுதிபடுத்தியிருக்கிறது:


"National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it is lack of awareness that is exploited by lawyers and police"


இது ஒன்றும் பழைய காலமல்ல. மருமகள்களை இனியும் யாரும் ஏமாற்றமுடியாது. இடைத்தரகர்களை அணுகி ஏமாந்துவிடாதீர்கள்! குறிப்பாக "மாமக்களிடம்" ஏமாந்துவிடாதீர்கள்! தைரியமாக களத்தில் இறங்குங்கள். பணப் பரிவர்த்தனையை நேரடியாகப் பேசி முடியுங்கள். மருமகள்களுக்கு கிடைக்கவேண்டிய முழு உரிமையையும் சட்டங்களின் பலன்களையும் நேரடியாக அனுபவியுங்கள்.

வாழ்த்துக்கள்!





+2 மருமகளும் டாஸ்மாக் மாப்பிள்ளையும்

நேற்று செய்தித்தாளில் பரபரப்பாக ஒரு வீரமான இளம் மருமகளைப் பற்றி செய்தி வந்திருந்தது கவனித்தீர்களா?

அக்காவை பெண் பார்க்கச் சென்றவருக்கு +2 படிக்கும் தங்கையை திருமணம் செய்து வைத்துவிட்டனர் பெண்ணின் பெற்றோர். ஆனால் என்ன காரணத்தாலோ தெரியவில்லை இந்த புது மருமகள் திருமணமான அடுத்த நாளே போலிஸில் வரதட்சணை புகார் கொடுத்திருக்கிறார். அதை போலிஸ் பதிவு செய்ய மறுத்திருக்கிறார்கள். இந்த வீரமான மருமகள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று புகார் கொடுத்திருக்கிறார். இந்த இளம் மருமகளிடமிருந்து பல மருமகள்கள் வீரத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

செய்தித்தாளில் வந்த செய்தியைப் பாருங்கள்:

======================================================

திருமணமான 3வது நாளில் வரதட்சணை கேசு (498A) : கலெக்டரிடம் பள்ளி மாணவி புகார்

தினமலர்: ஜனவரி 19,2010

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வரதட்சணை கொடுமையால் திருமணம் முடிந்து மூன்று நாட்களில், தாய்வீட்டிற்கு வந்த பிளஸ் 2 மாணவி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கலெக்டரிடம் புகார் கொடுத்தார்.

ராமநாதபுரம் கருவப்பிள்ளைக்கார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகள் அனிதா (18). இங்குள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கும், மண்டபம் கேம்ப் மணிகூண்டு பகுதியை சேர்ந்த மற்றொரு ஆறுமுகம் மகன் சரவணன் என்பவருக்கும் 2009ம் ஆண்டு நவ., 29ம் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது, 11 சவரன் நகை , 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
சரவணன், ரேஷன் கடை விற்பனையாளராக உள்ளார். திருமணம் நடந்த மூன்று நாட்களிலே அனிதா, தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். பெற்றோர் விசாரித்ததில், சரவணன் மற்றும் அவரது தாயார் கஸ்தூரி, அண்ணன் மனைவி முனீஸ்வரி ஆகியோர் மேலும், 20 சவரன் நகை மற்றும் டூவீலர் வாங்கி வரக்கூறி கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அனிதா, ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகார் மீது சரியான நடவடிக்கை இல்லாததால், ராமநாதபுரத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், தன்னை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தார். இம்மனு, பிரதீப்குமார் எஸ்.பி.,க்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, மகளிர் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

அனிதா கூறியதாவது:

எனது அக்காவை பெண் பார்க்க வந்தவர்கள், படித்து கொண்டிருந்த என்னை திருமணம் செய்வதாக கூறியதால், பெற்றோர் திருமணம் நடத்தி வைத்தனர். ஆனால், திருமணம் முடிந்த மறுநாளே, எனது கணவர் சரவணன் குடிபோதையில் என்னை துன்புறுத்தினார். உன்னை பிடிக்கவில்லை. உனது அக்காவைத்தான் திருமணம் செய்ய இருந்தேன். நான் கேட்கிறபடி கூடுதல் வரதட்சணை வாங்கி வராவிட்டால், உன்னை கொலை செய்து, வேறு திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறி அடித்தார். இவ்வாறு அனிதா கூறினார்.

======================================================


இனி இந்த செய்தியிலிருந்து மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கியமான சட்டங்கள் தொடர்பான குறிப்புகளைக் காண்போம்:

  • எனது அக்காவை பெண் பார்க்க வந்தவர்கள், படித்து கொண்டிருந்த என்னை திருமணம் செய்வதாக கூறியதால், பெற்றோர் திருமணம் நடத்தி வைத்தனர்.
12ம் வகுப்பு படிக்கும் சிறுமியை திருமணம் செய்து வைத்த அவரது பெற்றோர்கள் இந்திய வரதட்சணைத் தடுப்புச் சட்டப்படி குற்றவாளிகள் கிடையாது.
  • திருமணத்தின் போது, 11 சவரன் நகை , 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது என்று செய்தி வந்திருக்கிறது.

வரதட்சணை கொடுத்ததாக பகிரங்கமாக செய்தித்தாளில் அறிவிப்பு செய்தாலும் வரதட்சணை கொடுத்த பெற்றோர்கள் வரதட்சணை தடுப்புச்சட்டம் பிரிவு 3-ன் படி தண்டிக்கப்படமாட்டார்கள. நான் முன்பு எழுதிய பதிவுகளில் சொன்னது போல இதுவரை வரதட்சணை கொடுப்பவர்களை தண்டித்த சம்பவம் இந்திய சட்ட வரலாற்றில் நடந்ததே கிடையாது. அதனால் மருமகள்கள் செய்தித்தாளுக்கு செய்தியளிக்கும்போது அற்பத்தனமாக இல்லாமல் பெருந்தன்மையுடன் கொஞ்சம் அதிகமாகவே வரதட்சணை கொடுக்கப்பட்டதாக சொல்லலாம். அப்போது தான் நீங்கள் சொல்லும் அளவிற்கு போலிஸும் நீதிமன்றமும் கணவரிடமிருந்து வசூல் செய்து தருவார்கள். கிடைத்தவரை லாபம் தானே!

  • தன்னை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தார்.

எப்போதும் கணவர் மீது மட்டும் புகார்கொடுத்தால் அது வரதட்சணை தடுப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வதாகக் கருதப்படும். அதனால் முடிந்த அளவிற்கு ஆட்களை சேருங்கள். "சிங்கம் மட்டும் தான் சிங்கிளாக வரும், பன்றி கூட்டமாகத்தான் வரும்". மருமகளைப் பொறுத்தவரை கணவரின் குடும்பம் பன்றிக் கூட்டத்திற்கு சமம். அதனால் எப்போதும் வரதட்சணைப் புகாரில் கூட்டமாக எழுதுங்கள்.

  • திருமணம் முடிந்த மறுநாளே, எனது கணவர் சரவணன் குடிபோதையில் என்னை துன்புறுத்தினார்.

இந்தக் கணவருக்கு புது மனைவியின் போதையைவிட டாஸ்மாக் போதை மிகவும் பிடித்திருக்கிறது. உலகத்திலுள்ள எந்த ஆணுக்கும் புதுமனைவி என்றால் ஒரு தனி போதை இருக்கும். ஆனால் அதையும் மிஞ்சும் அளவிற்கு நல்ல தரமான சாராயத்தை விற்பனை செய்வதற்காக அரசாங்கத்தை இந்த இடத்தில் பாராட்டியே ஆகவேண்டும்!

  • இது தொடர்பாக அனிதா, ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகார் மீது சரியான நடவடிக்கை இல்லாததால்....நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தார்.
இந்த +2 மாணவியை அவரின் வீரச்செயலுக்காக இந்திய மருமகள்கள் சார்பாக பாராட்டியே ஆகவேண்டும். படித்துப் பட்டம் பெற்ற எத்தனையோ மருமகள்கள் வரதட்சணைப் புகார் கொடுக்காமல் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இதுபோன்ற வீரமான இளம் மருமகள்கள் ஒரு கலங்கரை விளக்காக இருக்கிறார்கள்.

இதுபோன்று நீங்கள் கொடுக்கும் புகாரை போலிஸ் வாங்க மறுத்தாலோ அல்லது நடவடிக்கை எடுக்க மறுத்தாலோ கொஞ்சமும் தயங்காமல் 100 ( To Report A Crime - Control Room 100) என்ற எண்ணுக்கு போன் செய்து கண்ட்ரோல் ரூமில் காவல்நிலையத்தில் புகாரை வாங்கமறுப்பதாக சொல்லுங்கள். பிறகு பாருங்கள் போலிஸ் எப்படி அவசரகதியில் உங்கள் புகாரை பதிவுசெய்கிறார்களென்று தெரியும்.

அதனால் நீங்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தால் தான் விடிவுகாலம் கிடைக்கும் என்று பயந்துவிடாதீர்கள். கலெக்டரிடம் மனு கொடுப்பதெல்லாம் பழைய ஸ்டைல். இப்போது நேரடியாக முதல்வர் அல்லது டிஜிபி அலுவலகத்திற்கு போன்செய்து புகார் கொடுக்கலாம். இதோ உங்களின் வசதிக்காக அந்த தொலைபேசி எண்கள். குறித்துவைத்துக்கொள்ளுங்கள். கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ வாலாட்டினால் உடனடியாக புகார் கொடுக்கலாம். அதை வாங்க மறுக்கும் போலிஸைப் பற்றிப் புகார் கொடுக்க இந்த எண்கள் பயன்படும்.

24 hours Telephone Desk at CM office & DGP office

24/7 automatic computerised telephone service for registering public grievances/complaints has been installed at the control room of the DGP office. Public in the State and even outside the State may use the facility. Their representations would be immediately forwarded to the police officer/police station concerned. Those who require emergency help may also dial 100.

CM Office 044-25672510

Control Room (DGP Office) 044-28447200


இது தவிர மருமகள்களுக்காகவே இலவச போன் வசதியும் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த எண்ணுக்கு எந்த தொலைபேசியிலிருந்தும் இலவசமாக அழைக்கலாம். 24 மணிநேர சேவை. இதோ அந்த எண்:

WOMEN HELPLINE

The Government of Tamil Nadu has launched a new scheme to aid women in distress. "Women Helpline" Units have been ordered to be opened throughout the state. Today "WOMEN HELPLINE UNITS" are functioning in most districts of Tamil Nadu. Women Police provide prompt help round the clock to women in distress in these "WOMEN HELPLINE UNITS".

Toll Free Numbers

Women help Line - 1091

மருமகள்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் கீழ்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

Dowry Harassment
(வரதட்சணை கொடுமை புகார் கொடுக்க)
Domestic violence / Problems by in-laws
(கணவர் மற்றும் அவனது குடும்பத்தின் மீது புகார் கொடுக்க)
Alcoholic spouses
(குடிகாரக் கணவருக்கு பாடம் புகட்ட)
Sexual harassment
(பாலியல் பலாத்காரம் என்று புகார் கொடுக்க)
Problems related to love affairs
(காதலனை வழிக்குக் கொண்டு வர)

வெளிநாடுகளில் இருக்கும் மருமகள்கள் தங்களுக்கு எதுவும் கிடையாதா என்று ஏக்கத்தோடு எண்ணிக்கொண்டிருப்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. வெளிநாடுகளில் இருக்கும் மருமகள்களுக்கு வசதியாக மின்னஞ்சல் மூலமாக புகார் கொடுக்கும் வசதியும் இப்போது வந்துவிட்டது. அதனால் வெளிநாட்டு வாழ் மருமகள்கள் தங்கள் கணவரைப் பற்றியும் இந்தியாவில் உள்ள கணவரின் குடும்பத்தைப் பற்றியும் புகார் கொடுக்க இந்த எளிய வழியைப் பின்பற்றலாம். இந்தியாவிற்கு செலவு செய்துகொண்டு வரவேண்டும் என்ற அவசியமில்லை. மின்னஞ்சலில் உங்கள் புகார் பெறப்பட்டவுடன் நீங்கள் குறிப்பிடும் உங்களது மாமியார் குடும்பம் வாழும் ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு உங்களது புகார் அனுப்பப்பட்டு அங்குள்ள போலிஸ் உங்களது எண்ணப்படி உங்களது மாமியார் குடும்பத்தை நன்கு கவனித்துவிடுவார்கள். இந்த வசதி எப்படி இருக்கிறது! இதனைப் பயன்படுத்தி நீங்கள் மகிழ்ச்சியடைய கீழுள்ள இணைப்பைத் தொடரவும்.


மின்னஞ்சல் மூலமாக மாமியார் மீதும் கணவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க


இப்போது மருமகள்களுக்கு வரதட்சணை புகார் கொடுக்க கொஞ்சம் தைரியம் வந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்!





மனைவிக்கு ஓர் ரகசியம் - கணவனின் கையில் கட்டப்பட்டுள்ள இரும்புச்சங்கிலி

மருமகள்களே இதுவரை நீங்கள் வரதட்சணை தடுப்புச்சட்டங்கள் பற்றிய மூன்று பாடங்களைப் படித்திருக்கிறீர்கள்.

நீங்கள் இதுவரை படித்த பாடங்களில் வரதட்சணை தடுப்புச்சட்டம் (Dowry Prohibition Act) மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A (IPC498A) ஆகிய சட்டப்பிரிவுகளைப் பற்றி விளக்கியிருந்தேன்.

அடுத்த முக்கியமான பாடமான குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்திற்கு போவதற்கு முன் இதுவரை நடத்தப்பட்ட பாடங்கள் எந்த அளவிற்கு எளிமையாக இருந்தது, எத்தனை மருமகள்கள் புரிந்துகொண்டார்கள் என்று தெரிந்து கொள்ள இது ஒரு சுய பரிசோதனை. மருமகள்கள் தங்களுக்குள்ள சட்டங்களைப்பற்றி நன்கு புரிந்துகொள்ளவேண்டும் என்ற அக்கறையில் மருமகள்களுக்காவே இந்த சிறப்பு செயல்முறை விளக்கப் பாடத்தை உருவாக்கியிருக்கிறேன்.

"செத்தால் தான் சுடுகாடு தெரியும்" என்று ஒரு சொல்வழக்கு இருக்கிறது. அது மருமகள் விஷயத்தில் எடுபடாது. அதனால் வரதட்சணை அல்லது மருமகள் கொடுமை தடுப்புச்சட்டத்தை எப்போது பயன்படுத்தவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு நீங்கள் கொடுமைக்கு உள்ளாகும் வரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. அதற்கு முன்பாகவே இந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கொடுமைகளைப்பற்றி நன்கு பகுத்துணர்ந்துகொள்ளும் திறமையை நீங்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போது தான் எப்போதும் நீங்கள் விழிப்பாக இருந்து உங்களுக்கு கணவராலும் அவரது குடும்பத்தாலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இழைக்கப்படும் கொடுமைகளை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப சட்டங்களைப் பயன்படுத்தி அவர்களை அடக்கியாள முடியும்.

மருமகள்கள் சட்டத்தை நன்கு புரிந்துகொள்வதற்காகவே பெண்களின் தோழர், மருமகள்களின் விடுதலை விரும்பி பாரதியாரின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை திரைப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். கீழே உள்ள வீடியோவில் அதைக் காணுங்கள். பிறகு நீங்கள் கண்ட காட்சிகளில் உள்ள பெண்ணுரிமை சட்டங்கள் தொடர்பான சில விளக்கங்களை வீடியோவைப் பார்த்த பிறகு தொடரலாம்.





மருமகள்களே, வீடியோவைப் பார்த்து விட்டீர்களா. இப்போது சட்டங்களைப் புரிந்துகொள்வதற்கு சில விளக்கங்களைக் காணலாம். அதற்கு முன் IPC498A வை ஒரு முறை நினைவிற்கு கொண்டு வாருங்கள். மறந்து போன மருமகள்கள் இங்கே சென்று ஒரு முறை படித்துக்கொள்ளவும் வரதட்சணை தடுப்புச் சட்டம் பாடம் 3

1. காட்சியின் தொடக்கத்தில் பால்காரர், மளிகைக் கடைக்காரார், வீட்டின் சொந்தக்காரர் ஆகிய மூவரும் தங்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தைக் கேட்கிறார்கள். ஆனால் அவை கொடுக்கப்படவில்லை.

2. அடுத்த காட்சியில் இந்த மூவரும் பாரதியாரின் மனைவியிடம் கொடுக்கவேண்டிய பணத்தைக் கேட்டு மனம் புண்படும்படி பேசுகிறார்கள். இது மனைவிக்கு கணவனால் மறைமுகமாக ஏற்பட்ட கொடுமையாகும். இதில் மனதளவில் பாதிப்பு ஏற்படலாம். இது IPC498A பிரிவின் கீழ் வரும் கொடுமையாகும்.

உங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் கணவராலோ அல்லது அவரது குடும்பத்தாலோ உருவாக்கப்படுகிறதா என்று விழிப்புடன் கவனியுங்கள்.

3. அடுத்து வரும் காட்சியில் மனைவி வீட்டில் சமைப்பதற்கு கூட அரிசி இல்லாமல் பக்கத்து வீட்டில் சென்று அவமானப்பட்டு கடன் வாங்கி வருகிறார். பக்கத்து வீட்டுக்காரர்கள் மனைவியை அவமானப்படுத்தினால் அதுவும் கணவனால் மறைமுகமாக ஏற்படுத்தப்பட்ட கொடுமையாகக் கருதலாம். அதனால் இதுவும் IPC498A பிரிவின் கீழ் கணவனும் அவனைச் சார்ந்தவர்களும் (கணவனுக்கு தெரிந்தவராக பக்கத்துவீட்டுக்காரர்களாக இருந்தால் கூட போதும்) கொடுமை செய்ததாகக் கருதப்படும்.

உங்கள் கணவருக்கோ, அவரது குடும்பத்திற்கோ தெரிந்தவர்கள், நண்பர்கள், அல்லது உறவினர்கள் இது போல உங்களது மனம் புண்படும்படி நடந்து கொள்கிறார்களா என்று கவனமாக கண்காணியுங்கள்.

4. கடைசியில் வரும் காட்சி தான் அப்பட்டமான IPC498A பிரிவின் கீழ் வரும் கொடுமையை நேரடியாக விளக்கும் காட்சியாகும். கணவன் தன் மனைவிக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக்கொடுக்கவில்லை. அப்படியே மனைவி அவமானப்பட்டாவது கடன் வாங்கி வந்து சமைப்பதற்கு தயார் செய்தாலும் சமைப்பதற்குத் தேவையான அந்தப் பொருட்களை மனைவிக்குத் தெரியாமல் உணவு சமைக்க முடியாதபடி தூக்கியெறிந்து வீணடிப்பது மிகப்பெரிய கொடுமையாகக் கருதப்படும். இது மிகச்சரியாக IPC498A பிரிவின் கீழ் பதிவு செய்யவேண்டிய புகாராகும்.

உங்களுக்கு நேரத்திற்கு உணவு கொடுக்கப்படுகிறதா அல்லது உங்களுக்கு இருக்கும் உணவை யாராவது எடுத்து எங்காவது மறைத்துவைத்து விடுகிறார்களா, குறிப்பாக மாமியார்கள் இதுபோல உங்களுக்குப் பிடித்த உணவுவகைகளை பீரோவில் வைத்து பூட்டிவைத்து விடுகிறார்களா என்று மிகுந்த விழிப்புடன் இருந்து பார்த்துக்கொள்ளுங்கள். சில சமயம் சமைக்கும்போது மாமியார் கைதவறியோ அல்லது மறதியாகவோ
சமையலறையில் உள்ள பொருட்களை இடம் மாற்றி வைத்துவிட்டால் அது உங்களின் கண்களிலிருந்து அந்தப் பொருட்களை மறைப்பதற்காகச் செய்யும் கொடுஞ்செயலாகக் கருதப்படவேண்டும். இந்தவகையான கொடுமையை தாங்கள் மாமியார் வீட்டில் அனுபவித்ததாக பல மருமகள்கள் தங்களது புகார்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் கவனமுடன் இருங்கள்.

மேலும் இந்த வீடியோவில் மற்றொரு சட்டமும் அடங்கியிருக்கிறது. அது தான் இந்திய குற்றநடைமுறைச் சட்டப் பிரிவு 125. இந்திய குற்றநடைமுறை சட்டப் பிரிவு 125-ன் (Code of Criminal Procedure-CrPC 125) படி ஆண் என்பவன் (நன்றாக கவனிக்கவும் ஆண் மட்டும் தான்) தனது மனைவி, குழந்தை, மற்றும் பெற்றோர்களை தகுந்த உணவு, உடை, உறைவிடம் கொடுத்து பராமரிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவன் தண்டனைக்குள்ளாவான். இந்திய சட்டப்படி இது கொடிய கிரிமினல் குற்றமாகக் கருதப்படும்.

ஆனால் பெண் அல்லது மனைவி எவ்வளவு வசதியாக இருந்தாலும், கைநிறைய சம்பாதிக்கும் நல்ல பணியில் இருந்தாலும் இது போன்ற செலவுகள் செய்து தனது கணவனையோ அல்லது குழந்தைகளையோ, தனது பெற்றோரையே பராமரிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. சட்டத்தில் மனைவியருக்கும், மருமகள்களுக்கும் முழு விலக்கு அளித்து அரசாங்கம் அவர்களுக்கு மரியாதை செய்திருக்கிறது. அதே சமயம் பெண்கள் தங்களின் பெற்றோர் வீட்டிலும், கணவரின் குடும்பத்திலும் உள்ள சொத்துக்களில் சமபங்கு பெறுவதற்கு முழு உரிமையையும் கொடுத்து இந்திய சட்டம் வழிவகை செய்துள்ளது. இந்த சட்டங்களைப் பயன்படுத்தி கையில் நாலு காசு சேர்த்துக்கொள்ளுங்கள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுவது தான் மனைவியருக்கும், மருமகள்களுக்கும் பாதுகாப்பு.

மேலுள்ள வீடியோவில் கடைசி காட்சியில் மனைவிக்கு இது போன்ற பாராமரிப்புகள் சரியாக செய்யப்படவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. மாறாக உணவு சமைக்கமுடியாதபடி உணவுப்பொருட்கள் தரையில் வீசப்பட்டு மேலும் கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். அந்த அப்பாவி மனைவியின் கெட்டகாலம், அப்போது ஆங்கிலேயரின் ஆட்சி இருந்ததால் இதுபோன்ற CrPC 125, Indian Penal Code 498A போன்ற சட்டங்கள் இல்லை. அதனால் பாரதியார் இதுபோன்ற மனைவியர் பாதுகாப்பு சட்டங்களிலிருந்து தப்பித்திருக்கலாம். அவரது நல்லகாலம் தப்பித்துக்கொண்டார்.

இதோ அந்த CrPC 125 உங்களது நோட்டுப்புத்தகத்தில் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.

125. Order for maintenance of wives, children and parents.

(1) If any person leaving sufficient means neglects or refuses to maintain-

(a) His wife, unable to maintain herself, (கவனியுங்கள் முதல் உரிமை மனைவிக்குத்தான்) or

(b) His legitimate or illegitimate minor child, whether married or not, unable to maintain itself, or

(c) His legitimate or illegitimate child (not being a married daughter) who has attained majority, where such child is, by reason of any physical or mental abnormality or injury unable to maintain itself, or

(d) His father or mother, unable to maintain himself or herself.


மேலுள்ள வாக்கியங்களில் கவனித்தீர்களா? எல்லா வாக்கியமும் ஆண் அல்லது கணவன் என்று பொருள்படும்படி "HIS" என்று தான் ஆரம்பித்திருக்கிறது. அதனால் உங்களது கணவர் உங்களை அனைத்து விதத்திலும் பராமரிக்க சட்டப்படி கடமைப்பட்டவராவார்.

என்றைக்குத் திருமணத்தின்போது இந்த முட்டாள்கள் தாலியை உங்களது கழுத்தில் கட்டுகிறார்களோ அன்றே CrPC 125 என்னும் இரும்புச் சங்கிலியை தங்களது கையில் கட்டிக்கொள்கிறார்கள். தாலியில் போடப்படும் முடிச்சு அவன் கையில் தானே இரும்புச் சங்கிலியால் போட்டுக்கொள்ளும் முடிச்சாகும். முட்டாள் கணவர்கள் இதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உணரமாட்டார்கள். அதுவரை நமக்குக் கொண்டாட்டம் தானே!

IPC498A ன் ரிமோட் கண்ட்ரோலை உங்களிடம் கொடுத்தது போல வழக்கம்போல் CrPC125 சங்கிலியின் மறுமுனையும் உங்கள் வசம் தான் ஒப்படைக்கப்படுகிறது. அதனால் மருமகள்களே உங்களுக்கு என்னவேண்டுமோ எல்லாவற்றையும் கொஞ்சம் கூட தயங்காமல் தைரியமாகக்கேட்டு உரிமையோடு வாங்கிக்கொள்ளுங்கள். சங்கிலியை லேசாக அசைத்து ஒரு குறிப்புக் காட்டினால் போதும் ஓடிவந்து வேண்டியதைக் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம், போலிஸ், ஜெயில் தான்!

இந்த சட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களுக்குத் தேவையானதை உரிமையுடன் பெறுவதற்கு நீங்கள் கணவருடன் இருக்கவேண்டும் என்ற அவசிய கூட கிடையாது. கணவனின் ஒட்டு மொத்தக் கூட்டமும் பிடிக்காமல் தனியாகப் பிரிந்து வாழ்ந்தாலும் இந்த பராமரிப்புகளை குறையின்றி பெறலாம்.

மாமியார் வீடு பிடிக்கவில்லை, தனியாக வேறு வீட்டில் இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்து அதற்குக் கணவர் ஒத்துழைக்கவில்லை என்றால் அது உங்களை மனதளவில் கொடுமை செய்வதற்கு சமம். அதனால் இதை IPC498A பிரிவின் கீழ் கொடுமை என்று கணவர் மீதும் மாமியார் மீதும் புகார் கொடுத்துவிட்டு நீங்கள் தனியாக வசதியான ஒரு வீடு பார்த்து இருந்து கொண்டு இந்த CrPC 125 பிரின் கீழ் ஒரு வழக்கைப் போட்டால் மாதந்தோறும் உங்களின் "அனைத்து வகையான" பராமரிப்பிற்கும் (Complete Maintenance) தேவையான பணம் உங்கள் வீட்டு வாசற்படிக்கே வந்து கதவைத்தட்டும். நீங்கள் எந்த வேலையும் செய்யவேண்டிய அவசியமில்லை. இதை விட வேறு என்ன வேண்டும்? சொர்க்கத்தில் கூட இது போன்ற வசதி கிடைக்குமா என்பது சந்தேகமே!

எனவே இந்திய மருமகளாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்கவேண்டும் என ஆனந்தக் கும்மியடியுங்கள். இந்திய மருமகள்களுக்கு மட்டுமே இந்த சிறப்பான பிறப்புரிமையை இந்திய அரசு செய்துகொடுத்திருக்கிறது. அதனால் இந்தப் பிறவியிலேயே இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேறு எந்த நாட்டிலும் மருமகள்களுக்கு இது போன்ற வசதிகள் கிடைப்பதில்லை.

இப்போது ஓரளவிற்கு உங்களுக்கு IPC498A-வைப்பற்றிய செயல்முறை விளக்கம் நன்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். இன்று மற்றொரு புதிய சட்டப்பிரிவான CrPC125 பற்றியும் தெரிந்துகொண்டீர்கள். இவற்றையெல்லாம் இங்கு படித்தபிறகு எந்த மருமகளாவது இந்த சட்டங்களை இதுவரை பயன்படுதியிருக்கிறீர்களா? அப்படி பயன்படுத்தியிருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் என்னுடைய பணியை நான் சிறப்பாக செய்வதாக ஒரு சிறு சந்தோஷமடைவேன்.

வாழ்த்துக்கள்.



அவசரமாக முடிவெடுக்காதீர்கள் - மருமகள்களுக்கு மட்டும்

வரதட்சணை தடுப்புச்சட்ட பாடங்களுக்கு இடையே இந்த முக்கியமான செய்தியை மருமகள்களுக்கு அவசரமாக சொல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் போலிஸ் ஒருவர் ஆள்மாறாட்டம் காரணமாக கொலை செய்யப்பட்ட செய்தியை எல்லா மருமகள்களும் பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். அந்த செய்தியைப் படிக்காதவர்களுக்காக இதோ அந்த செய்தி: தினமலரில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள் . ஆனால் இந்த செய்திக்குப் பின்னால் இருக்கும் கதையை யாரும் அந்த அளவிற்கு கூர்ந்து நோக்கியிருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். இந்த சம்பவங்களிலிருந்து மருமகள்கள் ஒரு முக்கியமான பாடம் படிக்க வேண்டியிருக்கிறது.

இந்த கொலைக்குப் பின்னால் ஒரு மருமகளால் அவசரகதியில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு இருக்கிறது. தனக்கும் தன் கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் தன் கணவரின் மீது இருந்த பாசத்தால் தன்னால் வாழ இயலாத வாழ்க்கையை தனது கணவரும் வாழக்கூடாது என்று அவரை வாழவிடாமல் செய்வதற்கு அவசரப்பட்டு வேறு விதமான முடிவை அவர் தேர்வு செய்திருக்கிறார். அந்தக் குழப்பத்தில் வேறு ஒரு அப்பாவி பலியாகிவிட்டார். அந்த மருமகள் கொடுத்துள்ள வாக்குமூலத்தை செய்தித்தாளில் வெளியிட்டிருக்கிறார்கள். இதோ அந்த செய்தி:

கைதான எஸ்.ஐ. மனைவி பரபரப்பு வாக்குமூலம்
தினகரன் 1/13/2010

நெல்லை : நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ. வெற்றிவேலை கடந்த 7ம் தேதி ஒரு கும்பல் படுகொலை செய்தது. விசாரணையில், குடும்ப தகராறில் கடையம் எஸ்.ஐ. சிவசுப்பிரமணியனை கொல்ல திட்டமிட்ட அவரது மனைவியின் உறவினர்கள் ஆள் மாறாட்டத்தில் இந்த கொலையை செய்தது தெரிந்தது.

இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நேற்று இவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையின்போது போலீசாரிடம் சிவகாமி அளித்த வாக்குமூலம்: எனக்கும், சிவசுப்பிரமணியனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆடம்பரமான முறையில் நடந்தது. திருமணம் நடந்து ஒருசில நாட்கள் மட்டுமே சிவசுப்பிரமணியன் என்னுடன் குடும்பம் நடத்தினார். அதன்பிறகு பிரிந்து சென்று விட்டார். என்னை திருமணம் செய்து என் வாழ்க்கையை நாசமாக்கியவர், வேறு யாருடனும் வாழக் கூடாது என்று நான் தெரிவித்ததால் எனது உறவினர்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். அவரை கொலை செய்ய ஆழ்வார்குறிச்சி சென்றவர்கள் ஆள்மாறாட்டத்தால் சிவசுப்பிரமணியனுக்கு பதில் எஸ்.ஐ. வெற்றிவேலை கொலை செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



இவர் ஏன் இப்படிக் கணவரை கொலை செய்ய முற்பட்டார் என்று ஆராய்ந்து பார்த்தால் "கொலையும் செய்வாள் பத்தினி" என்ற பழங்காலத்துப் பழமொழியை தவறாகப் புரிந்து கொண்டு இவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பழங்காலத்து முறைகளெல்லாம் இந்தக் காலத்திற்கு ஒத்து வருமா? மருமகள்கள் இப்போது எப்படியெல்லாம் முன்னேறியிருக்கிறார்கள். அதனால் காலமாற்றத்திற்கேற்ப மருமகள்கள்களும் மாறவேண்டும்.

அதற்காகத்தானே மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. தனக்கு கணவர் துரோகம் செய்துவிட்டதாக நினைக்கும் மருமகள்கள் தான் வாழ இயலவில்லையென்றால் தன் கணவரும் வாழக்கூடாது, கணவரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் வாழக்கூடாது என்று நினைக்கும் போது அதை செயல்படுத்திக்கொள்ள பல சட்ட வழிமுறைகள் இருக்கின்றனவே.

தான் வாழ இயலாத வாழ்க்கையை அடுத்தவரும் வாழக்கூடாது என்று நினைப்பது வராலாற்றுக் காலம் முதல் இருந்துகொண்டுதானே இருக்கிறது. ராமாயணத்தில் கூட இராவணின் தங்கை சூர்ப்பநகை தனக்கு இராமன் கிடைக்கவில்லையென்பதால் சீதைக்கும் அந்த வாழ்க்கை கிடைக்கக் கூடாது என்றுதானே ராவணனை தூண்டிவிட்டு இராமாயணத்தில் போரே ஏற்பட்டது? அது போலத்தான் மருமகளும் தன்னால் வாழ முடியவில்லையென்றால் கணவரோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள மற்றவர்களோ வாழக்கூடாது என்று நினைக்கிறார்கள். இது இயற்கை தானே?

தனக்குப் பிடிக்காத ஒருவரை பழிவாங்க நினைத்து கொலை செய்ய நினைப்பது மிகவும் தவறு. அப்படி ஒரு முடிவெடுப்பது சட்டப்படி மிகவும் தவறு. அதற்குப் பதிலாக காலம் முழுதும் அந்த நபரும் அவரை சார்ந்தவர்களும் கஷ்டப்படவேண்டும் என்பதற்காகவே பல சட்டங்கள் இருக்கின்றன. அந்த சட்டங்களைத்தானே மருமகள்கள் பயன்படுத்த வேண்டும். அது தானே சட்டங்களை மதித்து நடக்கும் மருமகள்கள் சட்டங்களுக்கு கொடுக்கும் மரியாதை. அதற்காகத் தானே IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்றவை மருமகள்களுக்காகவே இருக்கின்றன.

இதை சூர்ப்பநகை அன்றே செந்திருக்கிறாள். அதனால்தான் அவள் நடந்த விஷயங்களைக் கூறி ராமனை மட்டும் பிரச்சனையில் சிக்க வைக்காமல் சீதையைப் பற்றியும் கொஞ்சம் இராவணனிடம் போட்டுக்கொடுத்து ராமனின் குடும்பத்திலுள்ள அவனது மனைவியான சீதைக்கும் பிரச்சனை வரும் அளவிற்கு பிரச்சனையைப் பெரிதாக்கி அதன்பிறகு வரிசையாக பல ஆட்களை இந்த பிரச்சனைகளில் சிக்கவைத்து கடைசியில் வரலாற்றுப் புகழ்மிக்க பெரும் போராக மாற்றினாள்.

அதனால், தான் வாழ இயலாத வாழ்க்கையை கணவர் மட்டுமல்ல அவரது குடும்பத்திலுள்ள எவரும் வாழக்கூடாது என்று மருமகள்களுக்கு ஒரு எண்ணம் தோன்றி அதன் விளைவாக வரதட்சணை கேசுகளில் கணவரின் குடும்பதிலுள்ள அனைவரின் பெயரையும் புகாரில் சேர்த்து எழுதுவதென்பது சூர்ப்பநகை காலந்தொட்டே வழிவழியாக நடக்கும் வரலாற்று மரபு அல்லவா!
அதை அவ்வளவு எளிதாக மாற்ற முடியுமா?

இந்த வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தினால் குறைந்தபட்சம் மாமியாரின் குடும்பத்திலிருந்து ஐந்து பேராவது வழக்கில் சிக்குவார்கள். இந்த எண்ணிக்கைக்கு குறைந்து இது வரை எந்த வரதட்சணை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாக சரித்திரமே கிடையாது.

இந்த வழக்குகளில் சிக்கினால் கணவரால் திரும்பவும் ஒரு நல்ல வாழ்க்கை வாழவே முடியாது. ஏனென்றால் ஆயுளின் பாதிக் காலம் வரை நீதிமன்றத்திற்கு அலையவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் கணவரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் நிம்மதியை தொலைத்து நீதிமன்றத்திற்கு அலையவேண்டும். மருமகள்கள் தங்களின் எண்ணத்தை ஈடேற்றிக்கொள்ள இதை விட வேறு சிறந்த பாதுகாப்பான வழிமுறை ஏதாவது இருக்கிறதா?

இப்படி எளிய சட்டங்கள் இருக்கும்போது கொலை போன்ற கொடிய செயல்களில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்வது அறிவிற்சிறந்த மருமகள் எடுக்கும் சரியான முடிவாகுமா? அப்படியில்லாமல் வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தி தனக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தான் நினைத்த காரியத்தையும் சாதித்துவிட்டு சந்தோஷமாக இருப்பது தானே புத்திசாலித்தனம்? யோசியுங்கள்.

இனிவரும் காலங்களில் மருமகள்கள் இது போன்ற கொலை முயற்சிகளில் ஈடுபட்டு சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் அந்த சட்டங்களையே பயன்படுத்தி கணவரையும் அவரது குடும்பத்தையும் சிக்கலில் மாட்டிவைப்பது தான் புத்திசாலி மருமகள்களுக்கு அழகாகும்.

இது போன்று உணர்ச்சி வசப்பட்டு
பழைய காலத்து முறைகளில் எண்ணங்களை ஈடேற்றிக்கொள்ளும் முயற்சிகளில் இறங்கி தங்களின் வாழ்க்கையை அழித்துக்கொள்ளும் மருமகள்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் அரசாங்கம் 2005-ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ற ஒரு மிகச் சிறப்பான சட்டப்பிரிவை இயற்றிருக்கிறது.

இந்த சட்டம் மருமகள்களுக்கு ஒரு கற்பக விருக்ஷ்ம் என்றே சொல்லலாம். இந்த சட்டப்பிரிவின் மூலம் எல்லாவித எண்ணங்களையும் மருமகள்கள் அடையப்பெறலாம். என்ன இல்லை இந்த சட்டப்பிரிவிற்குள்? இந்த சட்டப்பிரிவிற்குள் சென்றால் மருமகள் வரதட்சணை சட்டத்தையும் பயன்படுத்தலாம், IPC498A சட்டத்தையும் பயன்படுத்தலாம், கணவரை அவரது சொந்த வீட்டை விட்டே விரட்டலாம், ஆடம்பரச் செலவிற்கு பணம் கேட்கலாம் இப்படி பல வசதிகள் இருக்கின்றன.

இந்த சட்டத்தைப் பயன்படுத்துவோர் தனியாக
வரதட்சணை சட்டம், IPC498A போன்ற புகார்களை தரவேண்டும் என்ற அவசியமில்லை. சுருக்கமாக சொல்லவெண்டுமென்றால் இந்த குடும்ப பாதுகாப்புச் சட்டத்தை மருமகள்களின் பலம் மிக்க ரகசிய பாதுகாவலன் என்று கூட சொல்லலாம். மருமகள் பாதுகாப்புச்சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளும் இந்த குடும்பவன்முறை தடுப்புச் சட்டத்திற்குள் நேர்த்தியாக அடுக்கப்பட்டு ஒரு பரிசுப்பெட்டகம் போல் மருமகள்களுக்கு பரிசாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் பெருமைகளை வேறொரு பதிவில் எழுதுகிறேன். அதுவரை அவசரப்படாமல் யோசித்து முடிவெடுங்கள்.

வாழ்த்துக்கள்.





உங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் - இளம் மருமகள்களுக்கு மட்டும்

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 3

கணவரை வீட்டில் வளர்க்கும் நாய் போல் நடத்துவது எப்படி?

இந்த மூன்றாவது பாடம் மிகவும் முக்கியமான பாடம். அதனால் முதல் இரண்டு பாடங்களை ஒரு முறை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். கணவரை சமாளிக்க முடியாத திண்டாட்டத்தில் பாடங்களை மறந்துபோன மருமகள்கள் இங்கே சென்று ஒரு முறை முதல் இரண்டு பாடங்களை நினைவு படுத்திக்கொள்ளவும்

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 2

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1


நான் முன்பே கூறியபடி இந்திய அரசால் இயற்றப்பட்ட பெண்கள் பாதுகாப்பு சட்டங்களில் மிகவும் முக்கியமானது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 498A. இதை நான் மருமகள்களின் அந்தரங்க தோழி என்று தான் சொல்வேன். ஏனென்றால் இது அந்த அளவிற்கு மருமகள்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

அப்படி என்ன மந்திரஜாலம் இதில் இருக்கிறது என்று நீங்கள் வியப்பாக கேட்கலாம். இந்த சட்டப்பிரிவின் கருத்துக்களை கீழே தருகிறேன் படியுங்கள். பிறகு நீங்களே மிகவும் வியந்து போவீர்கள்.

The ingredients of Section 498-A are as follows:

“ 498A: Husband or relative of husband of a woman subjecting her to cruelty- Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.

Explanation – For the purpose of this section ’cruelty’ means –

(a) any wilful conduct which is of such a nature as is likely to drive the woman to commit suicide or to cause grave injury or danger to life, limb or health (whether mental or physical) of the woman;
or
(b) harassment of the woman where such harassment is with a view to coercing her or any person related to her to meet any unlawful demand for any property or valuable security or is on account of failure by her or any person related to her to meet such demand.”

படித்து உயர் பட்டம் பெற்று வெளிநாடுகளில் பணிபுரியும் பல மருமகள்கள் கூட வெளிநாடுகளில் கணவன் கொடுமைப்படுத்தினாலும் ஏதோ தங்களுக்கு
ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாதது போல பாசாங்கு செய்து அங்குள்ள போலிஸை அணுகி புகார் செய்யாமல், இந்தியாவிற்கு ஓடிவந்து போலிஸில் புகார் கொடுக்கிறார்கள். அப்போது தான் அங்கு என்ன நடந்தது என்று இந்திய போலிஸுக்கோ, நீதிமன்றத்திற்கோ உண்மை தெரியாது. ஆனாலும் அனைவரும் மருமகள் சொல்வதை மட்டும் தான் நம்புவார்கள். அதுபோன்ற ஆங்கிலம் படிக்கத் தெரியாத பல மருமகள்களுக்காக இதை மொழிபெயர்ப்பு செய்து எளிய வடிவில் தருகிறேன்.

498A பிரிவின் படி கணவரோ அல்லது அவரைச் சார்ந்த யாராகிலும் (உறவினர், நண்பர், பக்கத்து வீட்டுகாரர்கள் உட்பட) மனைவியை கொடுமைப்படுத்தினால் அவர்கள் மூன்றாண்டு சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இதில் கொடுமை இரண்டு வகைப்படும்:

1. எந்தவொரு காரணமுமில்லாமல் கொடுமை செய்து அது மனைவியின் உடலையோ அல்லது மனதையோ புண்படுத்தினால் அது கணவர் மனைவிக்கு செய்யும் கொடுமையாகக் கருதப்படும்.

உதாரணத்திற்கு வீட்டில் டிவி ரிப்பேர் ஆகிவிட்டது ஆனால் கணவர் வேலைப்பளு காரணமாக அதை சரி செய்யவில்லை என்றால் டிவியில் வரும் மெகா சீரியல்களைப் பார்க்காமல் உங்களது மனம் ஏங்கித் தவித்து வாடினால் அது கணவர் உங்களுக்குச் செய்த கொடுமையாகக் கருதப்படும். இது உண்மை. இந்தக் காரணத்தால் பல கணவர்கள் நீதிமன்றத்தால் தண்டனை அடைந்திருக்கிறார்கள்.

அதனால் டிவி, ரேடியோ, செல்போன், டாய்லெட் அடைப்பு, குழாயில் தண்ணீர் வரவில்லை போன்ற காரணங்களை சின்ன விஷயமாக நினைத்து அவ்வளவு எளிதில் விட்டுவிடாதீர்கள். இவையெல்லாம் கணவனையும் அவனது குடும்பத்தையும் அடக்க உதவும் கருவிகள்.

உதாரணத்திற்கு உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறேன். நடிகர் பிரசாந்த் அவர்களின் முன்னாள் மனைவி அவரது 498A புகாரில் பிரசாந்த் குடும்பத்தார் அவரை டாய்லெட் கழுவச் சொல்லி கொடுமை செய்ததாக எழுதியிருக்கிறார். அவர் கொடுத்த புகாரிலிருந்து சில பாயிண்ட்டுகள் உங்களின் வசதிக்காக தருகிறேன்.

1. She stated that her husband and herself were invited to Malaysia ..................... Her husband demanded electronic items such as LCD, TV, DVD Player, Home Theatre System, CDs and DVDs as Dowry, this resulted in huge expenses for her family.

2. Also she was not asked to lit the lamp in Pooja Room but in the living room.

(விளக்கேற்ற சொன்ன இடம் கூட 498A கேசு போட உதவும். மருமகள்களே Note this point)


3. She further complained that soon after the marriage, when she went to her in-laws house, Mr.Prashanth's bed room was not ready and the toilet was very worse. She was forced to stay in the living room.

4. Her mother-in-law and sister-in-law used to harass her for not bringing enough jewellery, sarees and Dowry.

5. Servants were not allowed to wash her clothes and to clean her toilet. She had to clean it on her own, and even the toiletries have to be sent from her parent's house.

6.
Mother-in-law forced her to eat Non-Vegetarian


(நீங்கள் உங்கள் கணவர் வீட்டில் என்ன உணவு கொடுக்கிறார்கள் என்று கூட குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடிக்காத ஏதாவது ஒரு சமையல் செய்திருந்தால் அதுவும் உங்களை மனதளவில் கொடுமை செய்ததாக அர்த்தம். மாமியார் வீட்டு சமையல் என்னைக்கு மருமகளுக்கு பிடித்திருக்கிறது? அதனால் மாமியார் வீட்டில் அவர்கள் சமைப்பதே உங்களை கொடுமைப்படுத்துவதற்கு சமம் தான். 498A கேசு போட இது ஒரு நல்ல காரணம்.)


முழு அறிக்கையும் படித்து மேலும் பல நல்ல பாயிண்ட்டுகளை தெரிந்து கொள்ள ஆவலுடைய மருமகள்கள் இங்கே சென்று படிக்கவும் -->
நடிகர் பிரசாந்த் அவர்களின் 498A வழக்கின் போலிஸ் விசாரணை முழு அறிக்கை (PDF Format)


2. கொடுமையில் இரண்டாவது உட்பிரிவு வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்தல். இது உங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். வரதட்சணை தடுப்புச்சட்டம் பிரிவுகள் 3 & 4 நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மறந்து போயிருந்தால் முதல் இரண்டு பாடங்களை படியுங்கள்.

இனி மேட்டருக்கு வருவோம். இந்த சட்டத்தைப் பயன்படுத்தி கணவரையும் அவரது குடும்பத்தையும் அடக்கி அடிமைகளாக வைத்திருப்பது எப்படி என்று பார்ப்போம்.

இப்போது நான் உங்களுக்கு உங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு ரகசியத்தை சொல்லுகிறேன். கவனமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்தியாவில் பிறந்து இந்தியக் குடிமகனான ஒவ்வொரு ஆணுக்கும் இந்தியாவில் பிறந்த உடனே நாய்களுக்கு லைசென்ஸ் கட்டுவது போல் இந்த 498A என்ற சங்கேத குறியீடு தானாகவே குறியிடப்பட்டுவிடுகிறது. இந்த ரகசியம் மருமகள் உட்பட யாருக்குமே தெரியாது. இது தான் ஆண்களை ஒட்ட நறுக்கி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சங்கேதக் குறியீடு. இதை வேறுவிதமாக சொல்லவேண்டுமென்றால் "Emasculation" என்று கூட சொல்லாம். அதாவது கணவரை எல்லாவிதங்களிலும் அடக்கும் சக்தி இந்த 498A விற்கு உண்டு.

அதிர்ஷ்டவசமாக இந்த 498Aஐ தேவைப்படும் நேரத்தில் முடுக்கிவிடும் ரிமோட் கண்ட்ரோல் மருமகளின் கையில் தான் கொடுக்கப்படுகிறது. உடனே எங்களுக்கு அது போல் ரிமோட் கண்ட்ரோல் எதுவுமே கொடுக்கப்படவில்லையே என்று நீங்கள் சுற்றும் முற்றும் ஏக்கத்தோடு பார்ப்பது புரிகிறது. இந்த அப்பாவித்தனம் தான் மருமகள்களை அடிமையாக வைத்திருக்கிறது.

இன்னும் அந்த ரிமோட் கண்ட்ரோல் எது என்று தெரியவில்லையா! அது தான் ஊரறிய மேளம் கொட்டி தாலி என்ற வடிவில் உங்கள் திருமணத்தின் போது உங்கள் கழுத்தில் கட்டிவிடுகிறார்களே. அது தான் அந்த ரிமோட் கண்ட்ரோல்.

தாங்கள் எதை இந்தப் பெண்ணிடம் கொடுக்கிறோம் என்று கூட தெரியாமல் முட்டாள்கள் சந்தோஷமாக உங்களிடம் கொடுக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாத சில அப்பாவி மருமகள்கள் தாலி எதற்கு என்று புரட்சி பேசித் திரிகிறார்கள். கணவனையும் அவனது குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக ஆட்டிவைக்கும் ரிமோட் கண்ட்ரோல் சுவிட்ச் தான் உங்களிடம் கொடுக்கப்படுகிறதென்று இப்போதாவது புரிந்ததா?

இப்போது எல்லா மருமகள் கையிலும் ரிமோட் கண்ட்ரோல் இருக்கிறது. பிறகென்ன கணவனை எப்படி நடத்தவேண்டுமோ அப்படியெல்லாம் நடத்துங்கள்.

நான் இந்த பட்டனை அழுத்தி அது சரியாக வேலை செய்யாது போய்விடுமோ என்று நீங்கள் அச்சப்படுவதும் எனக்குப் புரிகிறது. கவலையே படாதீர்கள். இது "Made in india Product" கண்டிப்பாக மருமகள்கள் விஷயத்தில் நன்றாகவே வேலை செய்யும். எப்படியென்றால் நீங்கள் இந்தப் பிரிவின் படி ஒரு புகார் கொடுத்ததுமே புகாரில் நீங்கள் குறிப்பிட்ட ஆட்களையெல்லாம் போலிஸ் அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். ஏனென்றால் இந்த சட்டப்பிரிவு அப்படிப்பட்டது.
IPC 498A is:

1. Cognizable
2. Non-bailable
3. Non-compoundable

அதாவது இந்த சட்டப்பிரிவு படி புகார் பதிவு செய்தவுடனே அனைவரையும் கைது செய்யும் அதிகாரம் போலிஸுக்கு இருக்கிறது. நம்ம ஊர் போலிஸுக்கு சொல்லவே வேண்டாம் சட்டம் ஒன்று சொன்னால் அவர்கள் வேறு விதமாக ஒன்பது வகையான வேலைகள் செய்வார்கள். உதாரணத்திற்கு தினமலரில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள் ---> கஞ்சா கேசில் முதல் வகுப்பில் படிக்கும் 5 வயது சிறுவனை கைது செய்திருக்கிறார்கள். அதனால் கணவரையும், மாமியார் குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக கைது செய்வது எப்படி என்று அவர்களுக்கு சொல்லித் தரவேண்டியதில்லை என்று இப்போது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். கைது செய்த பிறகு கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ போலிஸிடம் ஜாமின் கொடுத்து வெளியே வரமுடியாது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக கொடுத்த வழக்கை திரும்பப் பெற முடியாது.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இந்த 498A பிரிவின் கீழ் ஒரு ஆளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் மும்பையில் பிடிபட்ட தீவிரவாதியை கூட விட்டாலும் விட்டுவிடுவார்கள் ஆனால் கணவரையும் அவரது குடும்பத்தையும் போலிஸும் நீதிமன்றங்களும் அவ்வளவு எளிதாக விட்டுவிடமாட்டார்கள். பல கட்டங்களில் "சிறப்பாக" கவனிப்பார்கள். பதிவு செய்யப்பட்ட புகார் உண்மையா பொய்யா என்ற பேச்சிற்கே இடமில்லை.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் வழக்கம் போல் அரசாங்கம் இந்த சட்டத்தை மருமகள்களுக்காகவே இயற்றியிருப்பதால் இந்தப் புகாரில் மருமகள்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம். பொய் சொன்னால் கூட மருமகள்களுக்கு எந்த தண்டனையும் கிடையாது.

இதுவரை இதுபோன்ற கேசுகளில் பல கணவர்கள் கடைசிவரை போராடி சின்னாபின்னப்பட்டு நீதிமன்றத்தில் இது பொய் என நிருபித்து வெளியே வந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு கேசில் கூட பொய் கேசு எழுதித்தந்த மனைவியை அழைத்து நீதிமன்றம் நீ ஏன் பொய் சொன்னாய் என்று இன்றுவரை ஒரு கேள்வி கூட கேட்டதில்லையென்றால் பாருங்கள் மருமகள்களுக்கு எவ்வளவு ராஜமரியாதை இருக்கிறதென்று. அதனால் மருமகள்கள் இஷ்டம் போல விளையாடலாம். எல்லாமே இலவசம்.

இதில் இன்னொரு வசதி என்னவென்றால் நீங்கள் எந்த செலவுமே செய்யவேண்டியதில்லை. எல்லாவற்றையும் அரசாங்கமே பார்த்துக்கொள்ளும். இன்னும் சொல்லப் போனால் இதில் உங்களுக்கு நல்ல வருமானமும் இருக்கிறது. அந்த வியாபார ரகசியத்தைப் பற்றி அடுத்த ஒரு பதிவில் எழுதுகிறேன்.

அதனால் உங்களுக்கு ஒரு காரியம் நடக்கவேண்டுமென்றால் கணவரின் முகத்தைப்பார்த்து பயந்து பயந்து கேட்கவேண்டியதில்லை. தைரியமாக இதை செய் என்று உத்தரவே போடலாம். உங்கள் கணவரிடம் நீங்கள் 498A என்பதை ஒரு மந்திரச் சொல் போல பயன்படுத்தலாம். இந்த மந்திரத்தைக் கேட்டவுடன் நாய் வாலை மடக்கிக்கொண்டு அஞ்சுவது போல நடுங்கிக்கொண்டு காலடியில் கிடப்பார்.

இதை நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு

1. தனிக்குடித்தனம் போகவேண்டும்
2. மாமியார் மாமனாரை வீட்டை விட்டு விரட்டவேண்டும்
3. கணவரின் வயதான பெற்றோருக்கு பணம் தருவதை நிறுத்தவேண்டும்
4. உங்கள் வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும்
5. கணவரின் தம்பி தங்கைகளுக்கு செய்யும் உதவியை நிறுத்த வேண்டும்
6. உங்களின் ஆடம்பர வாழ்க்கையில் கணவர் குறுக்கிடுவதை தடுக்கவேண்டும்
7. மருமகள்களுக்கு இதைப் படிக்கும் போது கூச்சமாக இருக்கும் அதனால் நீங்கள் உங்கள் காதில் விழாமல் காதை மூடிக்கொண்டு படியுங்கள். என்ன இருந்தாலும் பெண்மைக்கே உரிய நாணம் தடுக்குமல்லவா. விரும்பிய ஆண் நண்பர்களுடன் பேசுவதை கணவர் தெரிந்து கொண்டார் அல்லது உங்கள் உரிமையில் தலையிட்டு அதை தடுக்க முயல்கிறார். அவரை வாயை மூடிக்கொண்டு ஒதுங்கியிருக்கச் செய்யவேண்டும்.

இன்னும் பல காரணங்கள் உங்களுக்குத் தெரியும். இது போல எல்லாவித எண்ணங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். அது தான் ரிமோட் கண்ட்ரோல் கையில் இருக்கிறதே பிறகெதற்கு கவலைப்படவேண்டும். புகாரில் எழுத காரணங்களா இல்லை? வரதட்சணை தவிர மனதளவில் வேதனைப்பட வேறு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன அல்லவா? எல்லாவற்றையும் பயன்படுத்துங்கள்.

இந்த சட்டத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? யாரும் இதற்கு எதிர்ப்பு சொல்லமாட்டார்களா என்று ஒரு சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். மருமகள்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கும் இந்த சட்டத்திற்கெதிராக பாதிக்கப்பட்ட வயதான தாய்மார்களும் சகோதரிகளும் கிளம்பி அரசாங்கத்திடம் முறையிட்டனர். ஆனால் மருமகள்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் நமது அரசாங்கம் எல்லாப் பெண்களும் பெண்கள் அல்ல, மருமகள்கள் மட்டும் தான் இந்தியாவில் பெண்களாகக் கருதப்படுவார்கள் என்று சொல்லி வயதானப் பெண்களைக் காப்பாற்ற தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று கையை விரித்துவிட்டது.

அதைப்பற்றிய செய்தி இதோ செய்தித்தாளில் வந்திருக்கிறது ---> தினமலர், நவம்பர் 2009

செய்தித்தாளில் வந்த செய்தியின் ஒரு பகுதி....
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ. வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், அவர் குடும்பத்தில் உள்ள தந்தை, தாய் உட்பட யாரையும் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்த சட்டப் பிரிவு. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதால், அவர்கள் புகார் தந்தாலே, இந்த சட்டத்தை பயன் படுத்தி, கணவன், அவன் குடும்பத்தாரை கைது செய்வது போலீஸ் வழக்கம். கைது செய்தபின் தான் எல்லா விசாரணையும் நடக்கும்.

கடந்த சில ஆண்டாக இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்தன.

இந்த சட்டப்பிரிவுகளில் சில திருத்தங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டது. ஆனால், பெண்கள் அமைப்புகள் பெரும் போர்க்கொடி தூக்கியதால், இந்த முடிவில் பின்வாங்கி விட்டது.

பிறகென்ன அரசாங்கமே இந்த சட்டத்தை எல்லாவிதத்திலும் பயன்படுத்திக்கொள்வதற்கு மருமகள்களுக்கு பச்சைகொடி காட்டிவிட்டது. அதனால் இந்த சட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள கொஞ்சமும் தயங்காதீர்கள்.
வழக்கம் போல் இந்த சட்டப்பிரிவை உள்நாடு வெளிநாடு என நாடு வித்தியாசமில்லாமல் இந்தியக்குடிமகள், வேறுநாட்டுக் குடிமகள் என யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்தலாம். மருமகளாக இருக்கவேண்டும் என்பது தான் ஒரே ஒரு நிபந்தனை.

மற்றொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன் எப்போதும் இந்த 498A புகார் எழுதும் போது இந்த மருமகள்களின் மகாராணியை தனியாக எழுதக்கூடாது. அது இந்த மருமகள்களின் ரகசிய சினேகிதியை அவமரியாதை செய்வதற்கு சமமாகும். அதனால் அதற்கு தோழியாக IPC 406, 506, Dowry Prohibition Act sections 3,4,5,6 போன்ற தோழிகளையும் கூடவே அனுப்புவது தான் காலம் காலமாக நடந்து வரும் மரபு. இந்திய மருமகள்களாக இருந்து கொண்டு மரபு மீறலாமா?

இந்த துணை சட்டப்பிரிவுகளை இனிவரும் பதிவுகளில் விளக்குகிறேன்.

மறக்காமல் 498A என்ற மந்திரத்தை எழுதி கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் கண்ணில் படும்படியான இடங்களில் வீடு முழுவதும் மாட்டிவையுங்கள். பிறகு பாருங்கள் உங்களுக்கு கிடைக்கும் மரியாதை எப்படி இருக்கிறதென்று.

வாழ்த்துக்கள்.