சட்டப்பாடங்களுக்கு நடுவே கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வதற்காக மருமகள்களுக்கு உபயோகமான ஒரு சிறு செய்தி.
தாலியில் போடப்படும் மூன்று முடிச்சு நிலைத்திருக்க நான்காவதாக ஒரு முடிச்சு போடவேண்டுமாம். தமிழ்நாட்டுப் பெரியவர்கள் சொல்கிறார்கள். மருமகள்களே நீங்கள் இதுபோல தாலி நிலைக்க உங்கள் வீட்டிலிருந்து வைரத்தால் ஆன கழுத்தணியை போட்டு நான்காவது முடிச்சு போட்டுக்கொண்டீர்களா?
1. உரிமைக்காக முதல் முடிச்சு - கணவனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் உரிமை. நான் முன்பே கூறியிருப்பது போல் இது தான் IPC 498A ரிமோட் கண்ட்ரோல். மறந்து போனவர்கள் முந்தைய பதிவுகளைப் படிக்கவும்.
2. உறவுக்காக இரண்டாம் முடிச்சு - கணவனுடன் சேர்த்து அவனது உறவினர் அனைவரையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துகொள்வதற்காக கொடுக்கப்படும் உரிமை. அதனால் வரதட்சணைப் புகார் எழுதும்போது கணவனின் குடும்பத்திலுள்ள எல்லா உறவினர்களையும் சேர்த்து கூட்டமாக எழுதலாம். இப்போது தான் எனக்குக் கூட இந்த இரண்டாம் முடிச்சின் அர்த்தம் புரிகிறது. நான் இதுவரை பார்த்த வரதட்சணைப் புகார்களிலெல்லாம் மருமகள்கள் கணவனின் குடும்பத்திலுள்ள எல்லோருடைய பெயரையும் சேர்த்து எழுதியிருந்தார்கள். அவர்களின் "தாலி சென்டிமென்ட்" இப்போது தான் புரிகிறது!
3. ஊருக்காக மூன்றாவது முடிச்சு - இதற்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கிறது. ஒன்று ஊரில் இருக்கும் கணவருடன் தொடர்புடைய யாரைவேண்டுமானாலும் வரதட்சணை வழக்கில் சேர்க்கலாம் என்று ஒரு அர்த்தம். இரண்டாவது அர்த்தம் மருமகளுக்குக் கட்டுப்படாத கணவனையும் அவனது குடும்பத்தையும் வரதட்சணை வழக்கில் சிக்கவைத்து தொலைக்காட்சி, செய்தித்தாள் என எல்லாவற்றிலும் செய்தியை போட்டு கணவனின் குடும்பத்தை ஊரறிய அவமானப்படுத்தலாம் என்றும் பொருள் கொள்ளலாம். பிறகு கணவன் தானாக வழிக்கு வருவான்.
ஆகா! மருமகள்களுக்காக பிற்காலத்தில் சட்ட மேதைகள் எழுதப்போகும் பலசட்டங்களை நமது முன்னோர்கள் எப்படி சுருக்கமாக மருமகள்களுக்கு புரியும் விதமாக மூன்று முடிச்சில் முடிந்து வைத்திருக்கிறார்கள். அருமை!
இந்த மூன்று முடிச்சுகளின் முழுப்பலனும் கிடைக்க நான்காவதாக ஒரு முடிச்சும் போட்டுக்கொள்ளவேண்டும் என்கிறார்கள். ஒரு வேளை வாஸ்த்து சாஸ்த்திரப்படி இது சரியாக இருக்கலாம் என நினைக்கிறேன். அல்லது திருமணத்தில் போடப்படும் இந்த நகையை எதிர்காலத்தில் கணவனும் அவனது குடும்பமும் கேட்ட வரதட்சணை என்று வழக்கில் சேர்க்க ஒரு ஆதாரமாக உதவும் என்ற உயர்வான நோக்கத்திலும் சொல்லியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் மேலே சொல்லியபடி தாலியில் போடப்படும் மூன்று முடிச்சுகள் உங்களுக்கு பலமாக அமைய இந்த நான்காவது முடிச்சு உறுதுணையாக இருக்கும் என நினைக்கிறேன்.
அதனால் நான்காவது முடிச்சு போட்டுக்கொள்ள விரைவில் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இதுவரை அப்படி செய்யவில்லையென்றால் உங்கள் வீட்டில் உங்களுக்கு சேரவேண்டிய சொத்தின் ஒரு பகுதியிலிருந்து பணத்தைப்பெற்று நான்காவது முடிச்சைப் போட்டுக்கொள்ளுங்கள். பல குடும்பங்களில் உடன்பிறந்த சகோதரர்களும், பெற்றோரும் பெண்ணின் திருமணத்திற்காக நிறைய செலவு செய்துவிட்டதாக பொய்கணக்குக் கூறி அத்தோடு உங்கள் கணக்கை முடித்துவிட்டு உங்களுக்கு சேரவேண்டிய சொத்தைக் கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள்.
அரசாங்கம் எப்போதோ பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை இயற்றிவிட்டது. ஆனால் தந்தையும், சகோதரர்களும் கூட்டணியமைத்து அந்த சட்டங்களை மதிக்காமல் தங்கள் வீட்டு பெண்களையே ஏமாற்றுகிறார்கள். அந்த சட்டங்களைப் பற்றி முன்பு ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்: பந்தாடப்படும் (மரு) மகள்கள்
இதுபோன்று ஏமாற்றுக்கார தந்தையும் சகோதரர்களும் இருக்கும் வரை எத்தனை பெரியார்கள் வந்து பெண்ணுரிமைக்காகப் போராடினாலும் பெண்களுக்கு சமஉரிமையை இந்த ஆணாதிக்க சமுதாயம் கொடுக்கப்போவதில்லை.
//தாலி நிலைத்திருக்க நாலு முடிச்சு! //
ReplyDeleteஎந்தாயி முனுமுடிச்சி போட்டதுக்கே 9 பேருமேல பொய்கேசு.. என்னபெத்த தாயோட தாலிய அடகுவச்சித்தான் எல்லாருக்கும் பெயிலோடுத்தொம். இதுல நாலு முடிச்சி போட்டுருந்தென்னா.. பெயிலேடுக்க காசில்லாம ஜெயில்லேயே கடந்து செத்துபோயிருக்க வேண்டியதுதான்
மருமகள் சங்கத்தலைவியே!
ReplyDeleteஉங்க கூட்டத்துல உள்ள எல்லாரும் சேர்ந்து எல்லாரும் ஒரு கோரிக்கை வைங்க!
பொய்கேசுல போட்ட உடனே விசாரனை, கேசு ஜெயில்லுன்னு அலையவிடாம பொய்கேசுல உள்ள எல்லாரையும் நிக்கவச்சி சுடனம்னு போராடுங்க! நிம்மதியா கேசுபோட்டஅன்னைக்கே எங்க ஊசுரு போவட்டும்.. கோர்ட்டுகேசுன்னு நாய்மாதிரி அலைஞ்சி! அதவிட கொடும உங்கள பாதுகாக்கிறத்துக்குன்னே இருக்கிற காவல் தெய்வங்களுக்கு "அய்யா" "அம்மா" என்னு கூலகூம்பிடு போடமுடியல சாமீ (சாரி மாமீ)