"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


அவசரமாக முடிவெடுக்காதீர்கள் - மருமகள்களுக்கு மட்டும்

வரதட்சணை தடுப்புச்சட்ட பாடங்களுக்கு இடையே இந்த முக்கியமான செய்தியை மருமகள்களுக்கு அவசரமாக சொல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் போலிஸ் ஒருவர் ஆள்மாறாட்டம் காரணமாக கொலை செய்யப்பட்ட செய்தியை எல்லா மருமகள்களும் பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். அந்த செய்தியைப் படிக்காதவர்களுக்காக இதோ அந்த செய்தி: தினமலரில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள் . ஆனால் இந்த செய்திக்குப் பின்னால் இருக்கும் கதையை யாரும் அந்த அளவிற்கு கூர்ந்து நோக்கியிருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். இந்த சம்பவங்களிலிருந்து மருமகள்கள் ஒரு முக்கியமான பாடம் படிக்க வேண்டியிருக்கிறது.

இந்த கொலைக்குப் பின்னால் ஒரு மருமகளால் அவசரகதியில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு இருக்கிறது. தனக்கும் தன் கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் தன் கணவரின் மீது இருந்த பாசத்தால் தன்னால் வாழ இயலாத வாழ்க்கையை தனது கணவரும் வாழக்கூடாது என்று அவரை வாழவிடாமல் செய்வதற்கு அவசரப்பட்டு வேறு விதமான முடிவை அவர் தேர்வு செய்திருக்கிறார். அந்தக் குழப்பத்தில் வேறு ஒரு அப்பாவி பலியாகிவிட்டார். அந்த மருமகள் கொடுத்துள்ள வாக்குமூலத்தை செய்தித்தாளில் வெளியிட்டிருக்கிறார்கள். இதோ அந்த செய்தி:

கைதான எஸ்.ஐ. மனைவி பரபரப்பு வாக்குமூலம்
தினகரன் 1/13/2010

நெல்லை : நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ. வெற்றிவேலை கடந்த 7ம் தேதி ஒரு கும்பல் படுகொலை செய்தது. விசாரணையில், குடும்ப தகராறில் கடையம் எஸ்.ஐ. சிவசுப்பிரமணியனை கொல்ல திட்டமிட்ட அவரது மனைவியின் உறவினர்கள் ஆள் மாறாட்டத்தில் இந்த கொலையை செய்தது தெரிந்தது.

இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நேற்று இவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையின்போது போலீசாரிடம் சிவகாமி அளித்த வாக்குமூலம்: எனக்கும், சிவசுப்பிரமணியனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆடம்பரமான முறையில் நடந்தது. திருமணம் நடந்து ஒருசில நாட்கள் மட்டுமே சிவசுப்பிரமணியன் என்னுடன் குடும்பம் நடத்தினார். அதன்பிறகு பிரிந்து சென்று விட்டார். என்னை திருமணம் செய்து என் வாழ்க்கையை நாசமாக்கியவர், வேறு யாருடனும் வாழக் கூடாது என்று நான் தெரிவித்ததால் எனது உறவினர்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். அவரை கொலை செய்ய ஆழ்வார்குறிச்சி சென்றவர்கள் ஆள்மாறாட்டத்தால் சிவசுப்பிரமணியனுக்கு பதில் எஸ்.ஐ. வெற்றிவேலை கொலை செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



இவர் ஏன் இப்படிக் கணவரை கொலை செய்ய முற்பட்டார் என்று ஆராய்ந்து பார்த்தால் "கொலையும் செய்வாள் பத்தினி" என்ற பழங்காலத்துப் பழமொழியை தவறாகப் புரிந்து கொண்டு இவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பழங்காலத்து முறைகளெல்லாம் இந்தக் காலத்திற்கு ஒத்து வருமா? மருமகள்கள் இப்போது எப்படியெல்லாம் முன்னேறியிருக்கிறார்கள். அதனால் காலமாற்றத்திற்கேற்ப மருமகள்கள்களும் மாறவேண்டும்.

அதற்காகத்தானே மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. தனக்கு கணவர் துரோகம் செய்துவிட்டதாக நினைக்கும் மருமகள்கள் தான் வாழ இயலவில்லையென்றால் தன் கணவரும் வாழக்கூடாது, கணவரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் வாழக்கூடாது என்று நினைக்கும் போது அதை செயல்படுத்திக்கொள்ள பல சட்ட வழிமுறைகள் இருக்கின்றனவே.

தான் வாழ இயலாத வாழ்க்கையை அடுத்தவரும் வாழக்கூடாது என்று நினைப்பது வராலாற்றுக் காலம் முதல் இருந்துகொண்டுதானே இருக்கிறது. ராமாயணத்தில் கூட இராவணின் தங்கை சூர்ப்பநகை தனக்கு இராமன் கிடைக்கவில்லையென்பதால் சீதைக்கும் அந்த வாழ்க்கை கிடைக்கக் கூடாது என்றுதானே ராவணனை தூண்டிவிட்டு இராமாயணத்தில் போரே ஏற்பட்டது? அது போலத்தான் மருமகளும் தன்னால் வாழ முடியவில்லையென்றால் கணவரோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள மற்றவர்களோ வாழக்கூடாது என்று நினைக்கிறார்கள். இது இயற்கை தானே?

தனக்குப் பிடிக்காத ஒருவரை பழிவாங்க நினைத்து கொலை செய்ய நினைப்பது மிகவும் தவறு. அப்படி ஒரு முடிவெடுப்பது சட்டப்படி மிகவும் தவறு. அதற்குப் பதிலாக காலம் முழுதும் அந்த நபரும் அவரை சார்ந்தவர்களும் கஷ்டப்படவேண்டும் என்பதற்காகவே பல சட்டங்கள் இருக்கின்றன. அந்த சட்டங்களைத்தானே மருமகள்கள் பயன்படுத்த வேண்டும். அது தானே சட்டங்களை மதித்து நடக்கும் மருமகள்கள் சட்டங்களுக்கு கொடுக்கும் மரியாதை. அதற்காகத் தானே IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்றவை மருமகள்களுக்காகவே இருக்கின்றன.

இதை சூர்ப்பநகை அன்றே செந்திருக்கிறாள். அதனால்தான் அவள் நடந்த விஷயங்களைக் கூறி ராமனை மட்டும் பிரச்சனையில் சிக்க வைக்காமல் சீதையைப் பற்றியும் கொஞ்சம் இராவணனிடம் போட்டுக்கொடுத்து ராமனின் குடும்பத்திலுள்ள அவனது மனைவியான சீதைக்கும் பிரச்சனை வரும் அளவிற்கு பிரச்சனையைப் பெரிதாக்கி அதன்பிறகு வரிசையாக பல ஆட்களை இந்த பிரச்சனைகளில் சிக்கவைத்து கடைசியில் வரலாற்றுப் புகழ்மிக்க பெரும் போராக மாற்றினாள்.

அதனால், தான் வாழ இயலாத வாழ்க்கையை கணவர் மட்டுமல்ல அவரது குடும்பத்திலுள்ள எவரும் வாழக்கூடாது என்று மருமகள்களுக்கு ஒரு எண்ணம் தோன்றி அதன் விளைவாக வரதட்சணை கேசுகளில் கணவரின் குடும்பதிலுள்ள அனைவரின் பெயரையும் புகாரில் சேர்த்து எழுதுவதென்பது சூர்ப்பநகை காலந்தொட்டே வழிவழியாக நடக்கும் வரலாற்று மரபு அல்லவா!
அதை அவ்வளவு எளிதாக மாற்ற முடியுமா?

இந்த வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தினால் குறைந்தபட்சம் மாமியாரின் குடும்பத்திலிருந்து ஐந்து பேராவது வழக்கில் சிக்குவார்கள். இந்த எண்ணிக்கைக்கு குறைந்து இது வரை எந்த வரதட்சணை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாக சரித்திரமே கிடையாது.

இந்த வழக்குகளில் சிக்கினால் கணவரால் திரும்பவும் ஒரு நல்ல வாழ்க்கை வாழவே முடியாது. ஏனென்றால் ஆயுளின் பாதிக் காலம் வரை நீதிமன்றத்திற்கு அலையவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் கணவரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் நிம்மதியை தொலைத்து நீதிமன்றத்திற்கு அலையவேண்டும். மருமகள்கள் தங்களின் எண்ணத்தை ஈடேற்றிக்கொள்ள இதை விட வேறு சிறந்த பாதுகாப்பான வழிமுறை ஏதாவது இருக்கிறதா?

இப்படி எளிய சட்டங்கள் இருக்கும்போது கொலை போன்ற கொடிய செயல்களில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்வது அறிவிற்சிறந்த மருமகள் எடுக்கும் சரியான முடிவாகுமா? அப்படியில்லாமல் வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தி தனக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தான் நினைத்த காரியத்தையும் சாதித்துவிட்டு சந்தோஷமாக இருப்பது தானே புத்திசாலித்தனம்? யோசியுங்கள்.

இனிவரும் காலங்களில் மருமகள்கள் இது போன்ற கொலை முயற்சிகளில் ஈடுபட்டு சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் அந்த சட்டங்களையே பயன்படுத்தி கணவரையும் அவரது குடும்பத்தையும் சிக்கலில் மாட்டிவைப்பது தான் புத்திசாலி மருமகள்களுக்கு அழகாகும்.

இது போன்று உணர்ச்சி வசப்பட்டு
பழைய காலத்து முறைகளில் எண்ணங்களை ஈடேற்றிக்கொள்ளும் முயற்சிகளில் இறங்கி தங்களின் வாழ்க்கையை அழித்துக்கொள்ளும் மருமகள்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் அரசாங்கம் 2005-ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ற ஒரு மிகச் சிறப்பான சட்டப்பிரிவை இயற்றிருக்கிறது.

இந்த சட்டம் மருமகள்களுக்கு ஒரு கற்பக விருக்ஷ்ம் என்றே சொல்லலாம். இந்த சட்டப்பிரிவின் மூலம் எல்லாவித எண்ணங்களையும் மருமகள்கள் அடையப்பெறலாம். என்ன இல்லை இந்த சட்டப்பிரிவிற்குள்? இந்த சட்டப்பிரிவிற்குள் சென்றால் மருமகள் வரதட்சணை சட்டத்தையும் பயன்படுத்தலாம், IPC498A சட்டத்தையும் பயன்படுத்தலாம், கணவரை அவரது சொந்த வீட்டை விட்டே விரட்டலாம், ஆடம்பரச் செலவிற்கு பணம் கேட்கலாம் இப்படி பல வசதிகள் இருக்கின்றன.

இந்த சட்டத்தைப் பயன்படுத்துவோர் தனியாக
வரதட்சணை சட்டம், IPC498A போன்ற புகார்களை தரவேண்டும் என்ற அவசியமில்லை. சுருக்கமாக சொல்லவெண்டுமென்றால் இந்த குடும்ப பாதுகாப்புச் சட்டத்தை மருமகள்களின் பலம் மிக்க ரகசிய பாதுகாவலன் என்று கூட சொல்லலாம். மருமகள் பாதுகாப்புச்சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளும் இந்த குடும்பவன்முறை தடுப்புச் சட்டத்திற்குள் நேர்த்தியாக அடுக்கப்பட்டு ஒரு பரிசுப்பெட்டகம் போல் மருமகள்களுக்கு பரிசாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் பெருமைகளை வேறொரு பதிவில் எழுதுகிறேன். அதுவரை அவசரப்படாமல் யோசித்து முடிவெடுங்கள்.

வாழ்த்துக்கள்.





1 comment:

  1. இனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் ! :-)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்