"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


பெண்களின் ஆடை சுதந்திரத்தைப் பாதுகாக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்


முன்னொரு காலத்தில் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று ஆணாதிக்க சமுதாயம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இப்போது எந்த உடையை பெண்கள் அணியவேண்டும், எந்த உடையை அணியக்கூடாது என்று கட்டளையிட்டு பெண்களை அடிமைப்படுத்த முற்படுகிறது இந்த ஆணாதிக்க சமுதாயம்.

இப்போது வார இதழ், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் பெண்களின் உடை விஷயத்தில் மூக்கை நுழைத்து பெண்ணுரிமையை பறிக்க முயல்கின்றன. 

இதுபோன்ற அடிமைத்தனம் உங்கள் வீட்டில் தலையெடுக்க ஆரம்பித்தால் உடனடியாக நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
உங்கள் வீட்டில் இருக்கும் அண்ணன், தம்பி, அப்பா, கணவன்,  ஆண் நண்பன், கூடி வாழும் துணைவன், அல்லது மற்ற ஆண் உறவினர்கள் யாராவது உங்களை குறிப்பிட்ட உடைதான் அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்தினாலோ அல்லது உங்களுக்குப் பிடித்த உடையை அணியக்கூடாது என்று கட்டாயப்படுத்தினாலோ உடனடியாக “பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் குடும்பவன்முறை தடுப்புச் சட்டத்தின்”  [Protection of Women from Domestic Violence Act,2005, (Come into Force on 26/10/2006)] கீழ் அந்த ஆண்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துவிடலாம்.  சட்டங்கள் நமக்குக் கொடுத்திருக்கும் உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் எதற்காகவும் விட்டுக் கொடுத்துவிடாதீர்கள்.  பிறகு சுதந்திரத்தை இழந்து அடிமைகளாகிவிட நேரிடும்.

உடை விஷயத்தில் எப்படி குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது..... மேலும் தொடர்ந்து படியுங்கள்.  இந்தப் பதிவை படித்து முடிக்கும்போது “நான் என் விருப்பப்படி எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து வீதியில் உலா வருவேன், அதை யாரும் தட்டிக் கேட்கவோ அல்லது தடுக்கவோ முடியாது” என்று உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறந்திருப்பதை உணர்வீர்கள்.

பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் குடும்பவன்முறை தடுப்புச்  சட்டத்தின் முக்கியமான சாராம்சத்தை சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அப்படியே கொடுத்திருக்கிறேன் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
An Act to provide for more effective protection of the rights of women guaranteed under the Constitution who are victims of violence of any kind occurring within the family and for matters connected therewith or incidental thereto.
மேலுள்ள முக்கியமான வார்த்தையை கவனித்தீர்களா? பெண்ணுக்கு குடும்பத்தில் நடக்கும் எந்த வகையான வன்முறையிலிருந்தும் இந்த சட்டத்தின் மூலம் பாதுகாப்பு பெறலாம்.  அப்படியும் உங்களுக்குள் ஒரு சந்தேகம் வரலாம்.  நான் அணியும் உடையை அணியக்கூடாது என்று கூறுவது குடும்ப வன்முறையாகுமா? என்று எண்ணுவீர்கள்.   குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்தின் வரையறைபடி அதுவும் ஒரு குடும்ப வன்முறைதான். 
Under the PWDVA, domestic violence is defined as any form of physical,sexual, emotional, economic and/or verbal abuse that injures, threatens,or endangers the physical, mental and emotional well being of the aggrieved person. 
உங்களுக்குப் பிடித்த உடையை அது கவர்ச்சியாக இருக்கிறது அதனால் அதை உடுத்தக்கூடாது என்று உங்களது ஆசைக்கு தடை போடுவது உங்களது உணர்ச்சிகளையும், மனதையும் காயப்படுத்துவதாகும்.  மேலும் அதற்கு உங்கள் வீட்டு ஆண்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்...... அப்பப்பா எத்தனை  கடுமையானதாக இருக்கும்...

இந்த சட்டத்தின் மூலம் யாரெல்லாம் பாதுகாப்பு பெறலாம் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதையும் தருகிறேன் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
Coverage – Who can Complain : "Aggrieved Person" [Section 2(a)]
  • Any woman who is or has been in a domestic relationship with the respondent (sisters, widows, mothers, daughters, women in relationships of cohabitation, victims of bigamous marriages, single women etc.) and
  • Who has been subjected to acts of domestic violence
  • Children are also covered
  • Any person can file a complaint on their behalf
யாரெல்லாம் இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்துகொண்டீர்கள் அல்லவா! இப்போது யாருக்கெதிராக இந்த சட்டத்தைப் பக்குவமாகப் பயன்படுத்தலாம் என்றும் ஒரு பட்டியல் தந்திருக்கிறார்கள். அதையும் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
Against Whom Can A Complaint be Filed :
“Respondent” [Section 2 (q)]
  • Any adult male member who has been in a domestic relationship with the woman who files a complaint of domestic violence.
  • Relatives of the husband or the male partner.
  • Includes both male and female relatives of husband or the male partner.
இந்த சட்டத்தின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டே போனால் இந்த ஒரு பதிவு போதாது. அதனால் இன்றைய பதிவிற்கான முக்கியமான விஷயத்தை மட்டும் இப்போதைக்குச் சொல்கிறேன். மற்றவற்றை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.




1 comment:

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்