"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


+2 மருமகளும் டாஸ்மாக் மாப்பிள்ளையும்

நேற்று செய்தித்தாளில் பரபரப்பாக ஒரு வீரமான இளம் மருமகளைப் பற்றி செய்தி வந்திருந்தது கவனித்தீர்களா?

அக்காவை பெண் பார்க்கச் சென்றவருக்கு +2 படிக்கும் தங்கையை திருமணம் செய்து வைத்துவிட்டனர் பெண்ணின் பெற்றோர். ஆனால் என்ன காரணத்தாலோ தெரியவில்லை இந்த புது மருமகள் திருமணமான அடுத்த நாளே போலிஸில் வரதட்சணை புகார் கொடுத்திருக்கிறார். அதை போலிஸ் பதிவு செய்ய மறுத்திருக்கிறார்கள். இந்த வீரமான மருமகள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று புகார் கொடுத்திருக்கிறார். இந்த இளம் மருமகளிடமிருந்து பல மருமகள்கள் வீரத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

செய்தித்தாளில் வந்த செய்தியைப் பாருங்கள்:

======================================================

திருமணமான 3வது நாளில் வரதட்சணை கேசு (498A) : கலெக்டரிடம் பள்ளி மாணவி புகார்

தினமலர்: ஜனவரி 19,2010

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வரதட்சணை கொடுமையால் திருமணம் முடிந்து மூன்று நாட்களில், தாய்வீட்டிற்கு வந்த பிளஸ் 2 மாணவி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கலெக்டரிடம் புகார் கொடுத்தார்.

ராமநாதபுரம் கருவப்பிள்ளைக்கார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகள் அனிதா (18). இங்குள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கும், மண்டபம் கேம்ப் மணிகூண்டு பகுதியை சேர்ந்த மற்றொரு ஆறுமுகம் மகன் சரவணன் என்பவருக்கும் 2009ம் ஆண்டு நவ., 29ம் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது, 11 சவரன் நகை , 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
சரவணன், ரேஷன் கடை விற்பனையாளராக உள்ளார். திருமணம் நடந்த மூன்று நாட்களிலே அனிதா, தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். பெற்றோர் விசாரித்ததில், சரவணன் மற்றும் அவரது தாயார் கஸ்தூரி, அண்ணன் மனைவி முனீஸ்வரி ஆகியோர் மேலும், 20 சவரன் நகை மற்றும் டூவீலர் வாங்கி வரக்கூறி கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அனிதா, ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகார் மீது சரியான நடவடிக்கை இல்லாததால், ராமநாதபுரத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், தன்னை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தார். இம்மனு, பிரதீப்குமார் எஸ்.பி.,க்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, மகளிர் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

அனிதா கூறியதாவது:

எனது அக்காவை பெண் பார்க்க வந்தவர்கள், படித்து கொண்டிருந்த என்னை திருமணம் செய்வதாக கூறியதால், பெற்றோர் திருமணம் நடத்தி வைத்தனர். ஆனால், திருமணம் முடிந்த மறுநாளே, எனது கணவர் சரவணன் குடிபோதையில் என்னை துன்புறுத்தினார். உன்னை பிடிக்கவில்லை. உனது அக்காவைத்தான் திருமணம் செய்ய இருந்தேன். நான் கேட்கிறபடி கூடுதல் வரதட்சணை வாங்கி வராவிட்டால், உன்னை கொலை செய்து, வேறு திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறி அடித்தார். இவ்வாறு அனிதா கூறினார்.

======================================================


இனி இந்த செய்தியிலிருந்து மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கியமான சட்டங்கள் தொடர்பான குறிப்புகளைக் காண்போம்:

  • எனது அக்காவை பெண் பார்க்க வந்தவர்கள், படித்து கொண்டிருந்த என்னை திருமணம் செய்வதாக கூறியதால், பெற்றோர் திருமணம் நடத்தி வைத்தனர்.
12ம் வகுப்பு படிக்கும் சிறுமியை திருமணம் செய்து வைத்த அவரது பெற்றோர்கள் இந்திய வரதட்சணைத் தடுப்புச் சட்டப்படி குற்றவாளிகள் கிடையாது.
  • திருமணத்தின் போது, 11 சவரன் நகை , 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது என்று செய்தி வந்திருக்கிறது.

வரதட்சணை கொடுத்ததாக பகிரங்கமாக செய்தித்தாளில் அறிவிப்பு செய்தாலும் வரதட்சணை கொடுத்த பெற்றோர்கள் வரதட்சணை தடுப்புச்சட்டம் பிரிவு 3-ன் படி தண்டிக்கப்படமாட்டார்கள. நான் முன்பு எழுதிய பதிவுகளில் சொன்னது போல இதுவரை வரதட்சணை கொடுப்பவர்களை தண்டித்த சம்பவம் இந்திய சட்ட வரலாற்றில் நடந்ததே கிடையாது. அதனால் மருமகள்கள் செய்தித்தாளுக்கு செய்தியளிக்கும்போது அற்பத்தனமாக இல்லாமல் பெருந்தன்மையுடன் கொஞ்சம் அதிகமாகவே வரதட்சணை கொடுக்கப்பட்டதாக சொல்லலாம். அப்போது தான் நீங்கள் சொல்லும் அளவிற்கு போலிஸும் நீதிமன்றமும் கணவரிடமிருந்து வசூல் செய்து தருவார்கள். கிடைத்தவரை லாபம் தானே!

  • தன்னை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தார்.

எப்போதும் கணவர் மீது மட்டும் புகார்கொடுத்தால் அது வரதட்சணை தடுப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வதாகக் கருதப்படும். அதனால் முடிந்த அளவிற்கு ஆட்களை சேருங்கள். "சிங்கம் மட்டும் தான் சிங்கிளாக வரும், பன்றி கூட்டமாகத்தான் வரும்". மருமகளைப் பொறுத்தவரை கணவரின் குடும்பம் பன்றிக் கூட்டத்திற்கு சமம். அதனால் எப்போதும் வரதட்சணைப் புகாரில் கூட்டமாக எழுதுங்கள்.

  • திருமணம் முடிந்த மறுநாளே, எனது கணவர் சரவணன் குடிபோதையில் என்னை துன்புறுத்தினார்.

இந்தக் கணவருக்கு புது மனைவியின் போதையைவிட டாஸ்மாக் போதை மிகவும் பிடித்திருக்கிறது. உலகத்திலுள்ள எந்த ஆணுக்கும் புதுமனைவி என்றால் ஒரு தனி போதை இருக்கும். ஆனால் அதையும் மிஞ்சும் அளவிற்கு நல்ல தரமான சாராயத்தை விற்பனை செய்வதற்காக அரசாங்கத்தை இந்த இடத்தில் பாராட்டியே ஆகவேண்டும்!

  • இது தொடர்பாக அனிதா, ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகார் மீது சரியான நடவடிக்கை இல்லாததால்....நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தார்.
இந்த +2 மாணவியை அவரின் வீரச்செயலுக்காக இந்திய மருமகள்கள் சார்பாக பாராட்டியே ஆகவேண்டும். படித்துப் பட்டம் பெற்ற எத்தனையோ மருமகள்கள் வரதட்சணைப் புகார் கொடுக்காமல் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இதுபோன்ற வீரமான இளம் மருமகள்கள் ஒரு கலங்கரை விளக்காக இருக்கிறார்கள்.

இதுபோன்று நீங்கள் கொடுக்கும் புகாரை போலிஸ் வாங்க மறுத்தாலோ அல்லது நடவடிக்கை எடுக்க மறுத்தாலோ கொஞ்சமும் தயங்காமல் 100 ( To Report A Crime - Control Room 100) என்ற எண்ணுக்கு போன் செய்து கண்ட்ரோல் ரூமில் காவல்நிலையத்தில் புகாரை வாங்கமறுப்பதாக சொல்லுங்கள். பிறகு பாருங்கள் போலிஸ் எப்படி அவசரகதியில் உங்கள் புகாரை பதிவுசெய்கிறார்களென்று தெரியும்.

அதனால் நீங்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தால் தான் விடிவுகாலம் கிடைக்கும் என்று பயந்துவிடாதீர்கள். கலெக்டரிடம் மனு கொடுப்பதெல்லாம் பழைய ஸ்டைல். இப்போது நேரடியாக முதல்வர் அல்லது டிஜிபி அலுவலகத்திற்கு போன்செய்து புகார் கொடுக்கலாம். இதோ உங்களின் வசதிக்காக அந்த தொலைபேசி எண்கள். குறித்துவைத்துக்கொள்ளுங்கள். கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ வாலாட்டினால் உடனடியாக புகார் கொடுக்கலாம். அதை வாங்க மறுக்கும் போலிஸைப் பற்றிப் புகார் கொடுக்க இந்த எண்கள் பயன்படும்.

24 hours Telephone Desk at CM office & DGP office

24/7 automatic computerised telephone service for registering public grievances/complaints has been installed at the control room of the DGP office. Public in the State and even outside the State may use the facility. Their representations would be immediately forwarded to the police officer/police station concerned. Those who require emergency help may also dial 100.

CM Office 044-25672510

Control Room (DGP Office) 044-28447200


இது தவிர மருமகள்களுக்காகவே இலவச போன் வசதியும் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த எண்ணுக்கு எந்த தொலைபேசியிலிருந்தும் இலவசமாக அழைக்கலாம். 24 மணிநேர சேவை. இதோ அந்த எண்:

WOMEN HELPLINE

The Government of Tamil Nadu has launched a new scheme to aid women in distress. "Women Helpline" Units have been ordered to be opened throughout the state. Today "WOMEN HELPLINE UNITS" are functioning in most districts of Tamil Nadu. Women Police provide prompt help round the clock to women in distress in these "WOMEN HELPLINE UNITS".

Toll Free Numbers

Women help Line - 1091

மருமகள்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் கீழ்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

Dowry Harassment
(வரதட்சணை கொடுமை புகார் கொடுக்க)
Domestic violence / Problems by in-laws
(கணவர் மற்றும் அவனது குடும்பத்தின் மீது புகார் கொடுக்க)
Alcoholic spouses
(குடிகாரக் கணவருக்கு பாடம் புகட்ட)
Sexual harassment
(பாலியல் பலாத்காரம் என்று புகார் கொடுக்க)
Problems related to love affairs
(காதலனை வழிக்குக் கொண்டு வர)

வெளிநாடுகளில் இருக்கும் மருமகள்கள் தங்களுக்கு எதுவும் கிடையாதா என்று ஏக்கத்தோடு எண்ணிக்கொண்டிருப்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. வெளிநாடுகளில் இருக்கும் மருமகள்களுக்கு வசதியாக மின்னஞ்சல் மூலமாக புகார் கொடுக்கும் வசதியும் இப்போது வந்துவிட்டது. அதனால் வெளிநாட்டு வாழ் மருமகள்கள் தங்கள் கணவரைப் பற்றியும் இந்தியாவில் உள்ள கணவரின் குடும்பத்தைப் பற்றியும் புகார் கொடுக்க இந்த எளிய வழியைப் பின்பற்றலாம். இந்தியாவிற்கு செலவு செய்துகொண்டு வரவேண்டும் என்ற அவசியமில்லை. மின்னஞ்சலில் உங்கள் புகார் பெறப்பட்டவுடன் நீங்கள் குறிப்பிடும் உங்களது மாமியார் குடும்பம் வாழும் ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு உங்களது புகார் அனுப்பப்பட்டு அங்குள்ள போலிஸ் உங்களது எண்ணப்படி உங்களது மாமியார் குடும்பத்தை நன்கு கவனித்துவிடுவார்கள். இந்த வசதி எப்படி இருக்கிறது! இதனைப் பயன்படுத்தி நீங்கள் மகிழ்ச்சியடைய கீழுள்ள இணைப்பைத் தொடரவும்.


மின்னஞ்சல் மூலமாக மாமியார் மீதும் கணவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க


இப்போது மருமகள்களுக்கு வரதட்சணை புகார் கொடுக்க கொஞ்சம் தைரியம் வந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்!





6 comments:

  1. நீங்க நல்லவரா,கெட்டவரா?,,,,,யாருக்கு சப்போர்ட் பண்றீங்கன்னு தெரியல......

    ReplyDelete
  2. KASBABY,

    உங்களின் சந்தேகம் வரவேற்கத்தக்க ஒன்று.

    நீங்க நல்லவரா,கெட்டவரா?

    சந்தேகமே வேண்டாம். நானும் உங்களைப்போல ஒருவர் தான்.

    யாருக்கு சப்போர்ட் பண்றீங்கன்னு தெரியல.....

    நீங்கள் யாருக்கு 'சப்போர்ட்' செய்வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்குத்தான் நானும் 'சப்போர்ட்' செய்கிறேன்.

    ReplyDelete
  3. ஒரு பெண்ணை விட டாஸ்மார்க் மதுவில் இந்த அளவிற்கு போதை உண்டு என்பதை உலகிற்கு உணர்த்திய என் அன்பு நண்பி/நண்பருக்கு மிகவும் நன்றி. இது போன்ற ஆராய்ச்சிகள் மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .என் போன்ற இளைஞர்கள் இந்த இணையதள பத்திரிக்கையை வாசிக்கும் பொது எச்சரிக்கையாகவும் பயமாகவும் இருக்கிறது. டாஸ்மார்க்கில் கூட்டம் எப்படி ஏற்பட்டது என்பது கொஞ்சம் புரிகிறது ---- குரோம்பேட்டை ஸ்ரீதர்

    ReplyDelete
  4. குரோம்பேட்டை ஸ்ரீதர்

    உங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி.

    என் போன்ற இளைஞர்கள் இந்த இணையதள பத்திரிக்கையை வாசிக்கும் பொது எச்சரிக்கையாகவும் பயமாகவும் இருக்கிறது.

    மருமகள்கள் தங்களுக்குள்ள உரிமையை தெரிந்துகொள்வதில் உங்களுக்கு ஏன் பயமாக இருக்கிறது?

    ReplyDelete
  5. //எப்போதும் கணவர் மீது மட்டும் புகார்கொடுத்தால் அது வரதட்சணை தடுப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வதாகக் கருதப்படும். அதனால் முடிந்த அளவிற்கு ஆட்களை சேருங்கள். "சிங்கம் மட்டும் தான் சிங்கிளாக வரும், பன்றி கூட்டமாகத்தான் வரும்". மருமகளைப் பொறுத்தவரை கணவரின் குடும்பம் பன்றிக் கூட்டத்திற்கு சமம். அதனால் எப்போதும் வரதட்சணைப் புகாரில் கூட்டமாக எழுதுங்கள்.//

    ஆமா என்​னோட ​கேசுல முதல்ல 8 ​பேர ​சேத்தாங்க அப்பறம் ஒரு வருசம் கழிச்சி என்​​னோட இன்​னொரு தம்பி ​பே​ரையும்​சேத்து அவ​னையும் புழல் சி​றையில் அ​டைச்சாங்க. இப்படி பல சிறப்புகள் உண்டு இந்த 498ஏ சட்டத்திற்கு. எல்லா மருமகளுக்கு நல்ல விளிப்புணர்வு ஊட்டுங்க.. உங்க ​தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ithuku ore oru valithan irukku..pesama namma alaga eruntha variyaya love (kalla kathal) panni matter panni ellathiyum bombay ku parcel pannida vendiyathuthan

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்