புது தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில் கிரிஜா வியாஸ் கூறியது: அனைத்துக் கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் விரும்புகிறது. இந்த மசோதாவை எதிர்க்கும் கட்சிகள் யோசித்து முடிவுக்கு வர வேண்டும். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அவர்களுக்கு அவகாசம் உள்ளது. மகளிர்க்கு அதிகாரத்தில் பங்கு கொடுப்பது மட்டுமே இந்த மசோதாவின் நோக்கம் அல்ல. அதையும் தாண்டி எதிர்கால சந்ததிகளின் நலனுக்காகவும் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா நிறைவேற அனைத்து உறுப்பினர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இந்த ஒதுக்கீடு எதிர்கால பெண்களின் நலனுக்காக என்று பெண்கள் வாரியத்தலைவி சொல்லியிருக்கிறார். அதனால் 50% இடஒதுக்கீடு கேளுங்கள். உங்களது எதிர்காலத் தோழிகள் பலன் அடையட்டும்.
இந்த இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டால் எல்லா மருமகள்களும் தைரியமாக அரசியலில் ஈடுபட்டு நாட்டு முன்னேற்றத்திற்குப் பாடுபடலாம். எத்தனை ஆண்டுகள் ஆண்கள் இயற்றும் சட்டங்களைப் பயன்படுத்தவேண்டிய சூழ்நிலையில் பெண்கள் வாழவேண்டும்? பெண்களே பல புதிய சட்டங்களை இயற்றி வரதட்சணைக் கொடுமை செய்யும் கணவர்களை எப்படி அடக்கி ஆளலாம் என்ற புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்கலாம். நாட்டின் ஆட்சியே மருமகள்களின் கையில் வந்த பிறகு வீட்டில் ஆட்சி செய்வது மிகவும் எளிதாகிவிடும் அல்லவா. அதனால் படித்த மருமகள்கள் முழுமனதுடன் அரசியலில் ஈடுபடவேண்டும். அதற்கு இந்த இடஒதுக்கீடு ஒரு பொன்னான வாய்ப்பு.
இந்த இடஒதுக்கீடு சட்டமாக வந்தாலும் என்னுடைய கணவரோ அல்லது மாமியார் வீட்டிலோ அரசியலில் ஈடுபட விடமாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அது தான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம். மருமகளின் விருப்பத்திற்கு அடிபணியாதவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்குத்தான் குடும்ப வன்முறை சட்டம் இயற்றியிருக்கிறார்கள். அதனைப் பற்றி அடுத்தப் பதிவில் விரிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு இந்த செய்தியைப் படித்து சந்தோஷமடையுங்கள்.
காங்கிரஸ், பாஜக, இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், அகாலி தளம், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றன.சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் குறைப்பதற்கான சதி இந்த மசோதா என அவர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கும் பிரதிநிதித்துவம் தர உள் ஒதுக்கீடு தேவை என இக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.இன்று தாக்கல்: அரசமைப்பு சட்ட 108-வது திருத்த மசோதா என்கிற மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை விவாதத்துக்காக மாநிலங்களவையில் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி திங்கள்கிழமை தாக்கல் செய்கிறார்.
பிரதான கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிப்பதால் விவாதத்துக்குப் பின் நடைபெறும் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறுவது உறுதியாகிவிட்டது.மாநிலங்களவையில் காலியிடம் நீங்கலாக தற்போது 233 உறுப்பினர்கள் உள்ளனர். அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர குறைந்தது 155 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.மாநிலங்களவையில் 165 உறுப்பினர்கள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றனர்.
இவர்கள் தவிர ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அக் கட்சியைச் சேர்ந்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.பேசலாம்- அமைச்சர் பன்சால்: தற்போதைய வடிவில் மகளிர் மசோதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டம் என்பது தேங்கி நிற்கக் கூடியது அல்ல. மசோதா குறித்து புது வித ஆலோசனைகள் இருந்தால் அது குறித்து பேசி மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது- மொய்லி: மகளிர் மசோதா நிறைவேற தாங்கள்தான் காரணம் என எந்தக் கட்சியும் தனி உரிமை கோர முடியாது என மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.மகளிர் மசோதா நிறைவேறுவதற்கான பெருமை அனைத்தும் இந்த நாட்டு மக்களுக்கும், மகளிருக்கும், நாடாளுமன்றத்துக்கும் உரியது என்றார் அவர்.
முஸ்லிம், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான சதி- லாலு, முலாயம்தற்போது தாக்கல் செய்யப்படும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முஸ்லிம், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது என ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து லாலு மேலும் கூறியதாவது: மகளிர் மசோதா என்பது மாபெரும் அரசியல் பிழை. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை, சச்சார் குழு அறிக்கை பரிந்துரைகளை அமல்படுத்த திராணியில்லாத மத்திய அரசு, திசை திருப்பும் செயலாக மகளிர் மசோதாவை எடுத்துக் கொண்டுள்ளது.
சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்கள் எம்.பி.யாக தேர்வு பெற இட ஒதுக்கீடு அவசியமா? கொறடா உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் என காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் என்னிடம் தெரிவித்து வருகின்றனர் என்றார் லாலு.முஸ்லிம்கள், தலித்துகள் மக்களவைக்கும், பேரவைகளுக்கும் தேர்வு செய்யப்பட கூடாது என காங்கிரஸýம், பாஜகவும் கூட்டாக சதியில் ஈடுபட்டுள்ளன என்றார் முலாயம் சிங் யாதவ்.
குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஒரு முஸ்லிம் கூட எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படவில்லை. நிலைமை இப்படியிருக்கையில் இந்த மாநிலங்களில் இருந்து முஸ்லிம் பெண் எப்படி எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படுவார் என முலாயம் கேள்வி எழுப்பினார்.மகளிர் மீது உண்மையிலேயே மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமானால், மத்திய அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வியிலும் 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் அவர்.
13 ஆண்டு போராட்டம் கடந்த 13 ஆண்டுகளாக இந்த மசோதாவைத் தாக்கல் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. 1997-ல் ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்த சமயத்தில் முதல்முறையாக இந்த மசோதாவை தாக்கல் செய்ய முயன்றபோது, அவரது சொந்தக் கட்சி (ஜனதா தளம்) எம்.பி.க்களே அவரது கையிலிருந்து மசோதா நகலை பிடுங்கி கிழித்து எறிந்தனர்.பாரதிய ஜனதா தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய சட்ட அமைச்சர் ராம் ஜேத்மலானி மகளிர் மசோதாவை தாக்கல் செய்ய முயன்றபோதும் அமளி ஏற்பட்டது.
ஆண் எம்.பி.க்கள் எதிர்ப்பு?காங்கிரஸýம், பாஜகவும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்கு அளிக்குமாறு கொறடா உத்தரவைப் பிறப்பித்துள்ளபோதிலும், அனைத்து கட்சிகளிலும் உள்ள பெரும்பாலான ஆண் எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், கொறடா உத்தரவை மீறினால் கட்சி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் வேண்டாவெறுப்பாகவே இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் தெரிகிறது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்