இது ஒரு தேச சேவை. பல குடும்பங்களை அழிவில் இருந்து காப்பாற்றும்.
பிறந்த வீட்டில் இருந்து சொத்துக்களை பெறுவது எப்படி? திருமணம் ஆன பிறகு சொத்து பெரும் உரிமை உள்ளதா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்றைய பதிவில் மகள்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்துரிமை பற்றிய விஷயங்களைப் பற்றிக் காண்போம்.
மருமகள்கள் சந்திக்கும் வரதட்சணை தொடர்பான பல பிரச்சினைகளுக்குக் காரணமே அவர்களின் பெற்றோர்கள் தான். தங்களது மகளையே அவர்கள் சமமாக நடத்தாமல் வஞ்சிக்கிறார்கள். அதன் விளைவாகத்தான் பல அப்பாவிப் பெண்கள் புகுந்த வீட்டில் பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.
பெற்றோர்கள் தங்கள் வீட்டிலிருக்கும் ஆண்மகனை நடத்துவதுபோல தங்களது மகளையும் நடத்தாமல் பாரபட்சம் காட்டுகின்றனர். குறிப்பாக குடும்ப பாரம்பரிய சொத்துக்களை பங்கிடும் போது மகளுக்கும் சமமான பங்கு கொடுக்கப்படுவதில்லை.
மகன்கள் எல்லா சொத்துக்களையும் அனுபவித்து சந்தோஷமாக வாழ்க்கையை சொந்த வீட்டில் அனுபவிக்கும் வசதியை செய்து கொடுக்கும் பெற்றோர்கள் தங்களது மகள்களுக்கு சொத்தில் எந்தவித பங்கும் கொடுக்காமல் திருமணம் செய்து வெறுங்கையுடன் மாற்றான் வீட்டு மகள் போல வேறு ஒரு வீட்டிற்கு மருமகள் என்ற பெயரில் வஞ்சித்து அனுப்பிவிடுகின்றனர்.
எப்போதுமே கையில் நாலு காசு இருந்தால் தான் எங்குமே மதிப்பு. இது அனைவருக்கும் தெரியும். அப்படி மருமகளாக ஒரு புதிய வீட்டிற்கு செல்லும் போது கையில் நாலு காசுடன் தனக்கு உரிமையுள்ள தன் குடும்ப சொத்தின் ஒரு பகுதிக்கு அதிபதியாக அந்த வீட்டில் நுழைந்தால் எல்லோருமே கொஞ்சம் யோசிப்பார்கள். அதற்காக நீங்கள் உங்களின் சொத்துக்களையோ அல்லது நகைகளையோ, பொருட்களையோ உங்களின் கணவரிடமோ அல்லது அவரின் குடும்பத்தாரிடமோ கொடுத்துவிடவேண்டாம். அதுவும் ஆபத்தானது தான். சொத்துக்களை உங்கள் பெயரிலேயே வைத்துக்கொள்ளுங்கள். அதே சமயம் உங்களுக்கு உங்கள் பிறந்த வீட்டில் கிடைக்கவேண்டிய சொத்துக்களை ஏமாளியாக விட்டு விடாதீர்கள்.
உங்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய குடும்ப சொத்தின் ஒரு பகுதியைத்தான் பழைய காலத்தில் சீதனம் என்ற பெயரில் திருமணத்தின் போது கொடுத்து வந்தார்கள். ஆனால் காலமாற்றத்தில் பெண்ணின் பெற்றோர்களே பணத்தாசையில் அதை தங்கள் மகளுக்கு கொடுக்காமல் அதற்கு வரதட்சணை என்று சாயம் பூசி, தன் மகளுக்கு முறைப்படி சேரவேண்டிய சொத்தை கொடுப்பதையே ஒரு கொடுமையான செயலாக சித்தரித்து சொந்த மகளையே வஞ்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி பெற்றோர்களே மகளை ஏமாற்றும் போது மருமகளாக இன்னொரு வீட்டில் நுழையும் போது அவர்கள் எப்படி மகளைப்போல உங்களை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கமுடியும்?
அதனால் இன்றே நீங்கள் உங்களின் வழக்கறிஞரை சந்தித்து உங்களுக்குச் சேரவேண்டிய உங்கள் பிறந்த வீட்டின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களில் சரியான பகுதியைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். உங்கள் பெயரில் நாலு காசு வந்தபிறகு பாருங்கள் யாருமே உங்களை எந்த கொடுமையும் செய்யமுடியாது.
இல்லையென்றால் புகுந்த வீட்டிலும் மரியாதை இருக்காது, அங்கிருந்து பிறந்த வீட்டிற்கு சென்றால் அங்கும் மரியாதை இருக்காது. ஏனென்றால் உங்கள் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உங்களின் திருமணத்தின்போதே உங்களை வேறு வீட்டிற்கு (மரு)மகளாக அனுப்பிவிட்டார்கள். அதற்குப் பிறகு அந்த வீட்டில் உங்களால் சல்லிக் காசு கூட எதிர்பார்க்கமுடியாது.
அப்படியே நீங்கள் உங்களின் பங்கைப் பெற்று கணவரை ஒதுக்கி சொந்தக்காலில் நிற்காலம் என்ற எண்ணத்தில் வீட்டிற்கு சென்றால் அதுவும் நடக்காது. உங்களின் சகோதரர்களுக்குத் திருமணமாகி புதிதாக வந்துள்ள (மரு)மகள்கள் நிலையும் இதேபோலத்தான் இருக்கும். அதனால் அவர்களும் புகுந்த வீட்டில் இருக்கும் சொத்தாவது நமக்கு இருக்க வேண்டும் என்ற எண்த்தில் தான் இருப்பார்கள். உங்களுக்குத் திருமணமாகி வேறுவீட்டிற்கு சென்றபிறகு உங்கள் பிறந்த வீட்டிற்கு வந்துள்ள புதிய மருமகள்களிடமிருந்து உங்களது பங்கை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. கடைசியில் இரண்டு இடங்களிலும் நீங்கள் பந்தாடப்படுவீர்கள்.
படித்த பெண்களாகட்டும், படிக்காத பெண்களாகட்டும் யாருமே இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்வதில்லை. இந்தக்கால மருமகள்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொருளாதாரம் தான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் நமது தமிழக அரசு கூட பெண்களுக்குச் சமமான சொத்துரிமை வழங்குவதற்கு ஒரு தனி சட்டமே இயற்றிவிட்டார்கள். இதைப் பற்றி மேலும் தகவல் அறிய கீழுள்ள புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்.
The Married Women’s Property Act.
Central Act No.3/1874 Rs.14.00
பாகப்பிரிவினை சட்டம்
The Partition Act.
Central Act No.4/1893 Rs.7.00
இவையனைத்தும் இந்த முகவரியில் கிடைக்கிறது.
Government Publication Depot
112, Anna Salai, Chennai-600 002
Phone: 2854 4412, 2854 4413
இது தவிர சகோதரி கனிமொழி அவர்களின் செய்தியையும் படியுங்கள்.
தமிழக முதலமைச்சர் மு கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழியை சென்னை ஆன்லைனுக்காக ஹெச் ராமகிருஷ்ணன் பேட்டி கண்டார்.
ராமகிருஷ்ணன் - நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள்..இதன் மூலம் என்னென்ன சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்..? நாடாளுமன்ற உறுப்பினராக ஆன பிறகு, அதை சாதிக்க முடியும் என்ற உறுதி உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா..?
கனிமொழி - எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. தந்தை பெரியாருடைய கருத்துக்கள், கனவுகள். பெண்களுக்கு சொத்துரிமை, சுயமரியாதை திருமணம் போன்ற விஷயங்கள்கூட, திராவிடர் பாரம்பர்யத்தில் வந்த திராவிடர் முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அவற்றை சட்டமாக்க முடிந்தது.
தி.மு.க., மகளிருக்கு அரசியல் பயிலரங்கு கனிமொழி இன்று துவக்கி வைக்கிறார்
அக்டோபர் 24,2009
சென்னை:தி.மு.க., மகளிருக்கான முதல் அரசியல் பயிலரங்கை, கனிமொழி எம்.பி., இன்று நீலகிரி மாவட்டத்தில் துவக்கி வைக்கிறார்.தி.மு.க., கலை, இலக்கியப், பகுத்தறிவுப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:
பெண்களுக்கு சொத்துரிமை, மகளிர் சுயஉதவிக் குழு திட்டம், மகளிர் காவலர் நியமனம், அரசு கல்லூரிகளில் பெண்களுக்கு அதிக இடம், திருமண உதவித் திட்டம் என, மகளிருக்கான பல்வேறு திட்டங்கள் தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப் பட் டுள்ளன. பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்கான தொடர் முயற்சிகள் விரைவில் செயல்வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு தினமலரில் வந்துள்ள செய்தியைப் படியுங்கள்.
###############################
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் பெண்களுக்கான சம சொத்துரிமையை கொடுக்கப்படவேண்டும் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
"The Constitution guarantees formal equality and radical social reforms, forbidding child marriage (below the age of 18 for a girl), legalizing remarriage of widows and providing equal share to women in the joint family property under the Inheritance Act which introduced important innovations in the Indian social structure affecting women's status and role."
இது தவிர ஐக்கியநாடுகள் சபையின் அறிக்கை கூட என்ன சொல்கிறதென்றால் உழைப்பு என்று பார்க்கும் போது பெண்களின் பங்கு அதிக சதவீதம் இருக்கிறது. அதே சமயம் எத்தனைப் பெண்கள் சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார்களென்றால் அது மிகவும் மோசமாக வெறும் 10% தான் இருக்கிறதாம்.
United Nations Commission on Status of Women says:
"Women who constitute half of the world's population, perform two thirds of world's work, receive one tenth of its income and own less than one hundredth of its property. In India, while they produce 50 percent of the food commodities consumed by the country, they earn only 10 percent of the income and own 10 percent of the property of wealth of the country."
ஏன் இந்த ஏற்றத் தாழ்வு. உழைக்கின்ற அளவிற்கு பெண்கள் தங்களின் உரிமையைப் பெறத் தயங்குகின்றனர். பெண்கள் தங்களின் பிறந்த வீட்டில் கிடைக்கவேண்டிய உரிமையைக் கூட பெறத் தயங்குவதற்கு எந்த விதத்திலும் கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ ஒரு தடையாக இருப்பதாக யாராலும் கூறமுடியாது.
பிறந்த வீட்டில் சட்டப்படி கிடைக்கவேண்டிய உரிமையையே பெறமுடியாத உங்களுக்கு வெளியில் எப்படி மற்ற உரிமைகள் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? இந்த உரிமைகளை முழுக்க முழுக்க பெண்கள் தான் விழிப்புடன் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.
அரசாங்கம் மருமகள்களுக்காக எவ்வளவோ வழிமுறைகளை செய்திருந்தும் அதைப்பின்பற்றாமல் போனால் பாதிப்பு மருமகள்களுக்கு மட்டுமே. கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ பாதிக்கப்படமாட்டார்கள். அதனால் இந்த சொத்துரிமை சட்டத்தை அனைத்து மருமகள்களும் உடனடியாக பின்பற்றினால் அவர்களுக்கெதிரான பல கொடுமைகளை எதிர்கொள்ளும் சக்தி அவர்களுக்கு கிடைக்கும்.
இப்படி மாநில அரசும் மத்திய அரசும் உங்களின் நல்வாழ்க்கைக்கு பல சட்டங்களை இயற்றியிருக்கிறார்கள். சட்டங்களை மட்டும் தான் அவர்களால் இயற்ற முடியும். அதற்கு செயல் வடிவம் கொடுக்க நகரத்தில் உள்ள படித்தப் பெண்களால் தான் முடியும். உங்களைப் பார்த்து தான் கிராமப்புற பெண்கள் தங்களது உரிமைகளைப் பெறுவது எப்படி என்று கற்றுக்கொள்ள முடியும். அதனால் இனிவரும் காலங்களில் வெறும் மகள்களாகவும், மருமகள்களாகவும் பந்தாடப்படாமல் சொத்தில் சமஉரிமை பெறும் ஒரு குடும்ப அங்கத்தினராக உங்களின் தகுதியை உயர்த்தி சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு தனி அந்தஸ்த்தை உருவாக்குங்கள். அப்போது யார் உங்களுக்கு என்ன கொடுமை செய்யமுடியும் என்று பார்க்கலாம்.
பிறந்த வீட்டில் சொத்து உரிமையை நிலை நாட்ட குடும்ப வன்முறை சட்டத்தை பயன்படுத்த முடியமா ?
ReplyDeleteஉங்களின் சந்தேகத்திற்கான பதில் அடுத்த பதிவுகளில் வரும்.
ReplyDelete//முந்தைய பதிவிற்கு வந்த கேள்வி:
ReplyDeleteஇது ஒரு தேச சேவை. பல குடும்பங்களை அழிவில் இருந்து காப்பாற்றும்.
பிறந்த வீட்டில் இருந்து சொத்துக்களை பெறுவது எப்படி? திருமணம் ஆன பிறகு சொத்து பெரும் உரிமை உள்ளதா?//
கணவன், சட்டங்கள் தெய்வமாகவும் சட்டங்கள் சமமாகவும் உள்ள அராஜகம் இல்லாத நேர்மைமிக்க காவல் துறையினைரை கொண்ட இந்திய தாய்நாட்டுக்கு "வருமானவரி" கட்டி வாழந்து உழைப்பில் வாங்கிய வீட்டை... முறைமாமன்கள், பொறுக்கிதனம் இல்லாத தம்பி மற்றும் ஹனிமுனுக்கும் உடன்அழைத்து வந்த நண்பர் ஆகியோரை வைத்து நாயடிப்பது போல் அடித்து வீட்டை விட்டு விரட்டி... குழந்தையை கொடுத்துவிட்டு ஒடிவிட்டான் என்று கதை கட்டலாம்... மற்றும் வீட்டை அபகரித்து வாடகைக்கு விட்டு வசுல்ராணி ஆகலாம்... இதற்கென்ற சிறப்பாக இயற்றப்பட்ட சட்டங்களை பற்றி குடும்ப "குத்து" விளக்குகளுக்கு தாங்கள் அறிவுறை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்...
மற்றும் தங்களுக்கு...
எப்படி 498ஏ வழக்கு பொடுவது... ?
ஆபாசமாக வக்கிர குற்றச்சாட்டுக்களை எப்படி எழுதுவது...?
ஆள்வைத்து அடித்து விரட்டிவிடுவது...?
அழுகாச்சி நாடகம் ஆடவது...?
எல்லாரையும் புழல் சிறையை சுற்றிக்காட்டுவது....?
போன்றவற்றில் ஏதெனும் சந்தேகம் இருந்தால்...வரட்சணை கொடுமைக்கு(?????) மிக மிக மிக மிக.... கடுமையா ஆளக்கப்பட்டு டிவியில் விளம்பரம் செய்துகொண்டிருக்கும் எங்களது மரியாதைக்கூரிய மேதகு. எனது மனைவி அவர்களிடம் தாங்கள் ஆலோசனையும் அறிவுரையும் பெறலாம்...
மருமகளே....
ReplyDeleteஎங்க ஊர் பக்கம் ஒரு சொலவாடை உண்டு, "அடி மட்டய பாத்து மே மட்ட பழிச்சதாம்....".
நீ இப்படியே எப்பவும் மருமகளாகவே இருக்க மாட்ட, உனக்கும் பிள்ளைகள் வளரும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகும். உனக்கும் மருமகள் வருவா(உனக்கு ஆண் பிள்ளை இருந்தால்). நீ இன்னைக்கு விதைக்கிற விணை மரமாகி, காயாகி, பழமாகி உனக்கு வரும் மருமகள் கையில் வரும். நீ நல்ல நோக்கத்தில் இதை செய்த்தால் நல்ல பழமாக வரும், இல்லாவிட்டால் நீ என்ன நோக்கத்தில் செய்கிறியோ அதே வடிவில் வரும். இது சாபமோ வசவோ இல்லை. இதுதான் இயற்கையின் நியதி. உனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், அந்த கடவுள் படைத்த காலம் நிச்சயம் பதில் சொல்லும். நீ ஆத்திகவாதியாக இருந்தால் 'ஒவ்வொறு வினைக்கும் எதிர் வினை உண்டு(லாஜிக்/சயன்ஸ்)'.
யார் கண்டது அந்த நேரத்தில் நீ 'மாமியார்' என்ற் ப்ளாக் ஆரம்பித்து, மருமகள் குடும்பத்தை எப்படி உள்ளே தள்ளுவது என்று எழுதினாலும் எழுதலாம். காலம்தான் பதில் சொல்லனும்.