"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


மருமகள்னா இப்படித்தான் தைரியமாக இருக்கவேண்டும்

கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுக்க அஞ்சி நடுங்கும் மருமகள்கள் இந்த செய்தியைப் படித்தபிறகாவது கொஞ்சம் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கணவன் மீது புகார் கொடுப்பது மட்டும் பெருமைக்குரிய விஷயமல்ல. வழக்கின் கடைசியில் கணவனின் குடும்பத்தில் எத்தனை பேர் சிறைக்குச் செல்கிறார்கள் என்பதில்தான் மருமகளின் ஒட்டுமொத்த வெற்றியே அடங்கியிருக்கிறது.


சாத்தான்குளம் : பெண்ணிடம் வரதட்சணை கொடுமை செய்த கணவர், மாமியார், நாத்தனார் உட்பட ஆறு பேருக்கு இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது நாசரேத் மேலவெள்ளமடத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகள் முத்துமாலை என்ற பாப்பாத்தி(30). இவருக்கும் பாளையங்கோட்டை சுப்பையா மகன் சங்கருக்கும் திருமணம் நடந்தது. சங்கரும் அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு பாப்பாத்தியை கொடுமை படுத்தினார்களாம்.

இது குறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாப்பாத்தி புகார் செய்தார். எஸ்.ஐ., காளீஸ்வரி வழக்குப்பதிவு செய்து பாப்பாத்தி கணவர் சங்கர்(40), மாமியார் பத்ரகாளி(68), கணவரின் சகோதரர்கள் சண்முகசுந்தரம்(48), ஆறுமுகசேகர்(43), அருணாசலம் ரவி(46), சகோதரிகள் குமரேசன் மனைவி செல்வி(42), மாடசாமி மனைவி முத்துமாலை(38) ஆகியோரை கைது செய்தனர்.

வழக்கு சாத்தான்குளம் கோர்ட்டில் நடந்தது. இதில் அருணாசலரவி இறந்துவிட்டார். வழக்கை விசாரித்த சாத்தான்குளம் நீதிபதி ஜெயசிங் ஆறு பேருக்கும் தலா இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் 13ஆயிரத்து 300ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். வரதட்சணை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு சிறைத் தண்டனை விதித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியில் இருப்பது போல ஒவ்வொரு இந்திய மருமகளும் கணவனின் ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் இந்தியாவில் வரதட்சணை என்ற வழக்கமே ஒழிந்திருக்கும். மருமகள்கள் அனைவரும் ஒன்றுபட்டால் எல்லா மருமகள்களும் வளமாக வாழலாம். அதனால் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மருமகளும் இந்த புனிதப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.


தைரியமான மற்றொரு எதிர்கால மருமகள்

திருமணத்தை நிறுத்திய பிளஸ்2 மாணவி; போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு எழுதினார் மார்ச் 24,2011 தினமலர்

கோவை : கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்திய பிளஸ்2 மாணவி, வீட்டை விட்டு வெளியேறி, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தேர்வு எழுதினார். கோவை கணபதி பகுதியில் வசிப்பவர் கணேசன்(47); வியாபாரி. [...]

வாழ்த்துக்கள்!


பொய் வழக்குப்போடும் மருமகளை தண்டிப்பது எப்படி?

முந்தைய பதிவில் வாசகர் ஒருவர் முக்கியமான ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அவருக்கு விளக்கம் அளிப்பதற்காக இந்தப் பதிவு. மருமகள்களே நீங்களும் கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். சிலசமயம் உங்களிடம்கூட இதுபோன்ற கேள்வியை யாராவது கேட்பார்கள்.
பின்வரும் கேள்வியைப் படித்துக்கொள்ளுங்கள். பிறகு கேள்வியிலுள்ள முக்கியமான விஷயங்களுக்கு ஒவ்வொன்றாக பதில் காண்போம்.

abiramamnatham said...

சஹோ தாங்கள் கூறுவது சரிதான் . எனினும் இந்த சட்டத்தை எத்தனை பேர் சரியாக பயன் படுத்துகின்றார்கள்? எத்தனை பேர் இதனை முறைகேடாக பயன் படுத்துகின்றார்கள் ? சரி அவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவோரை எவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் . எனென்றால் வரதட்சணை கொடுமை என்று ஒரு பெண் பொய்யான வழக்கு கொடுத்தால் மாப்பிள்ளை வீட்டார்கள் குடும்பத்துடன் கைது செய்யப்படுவார்கள் .ஆனால் மாப்பிள்ளை வீட்டார் நிரபராதிகள் என்றால் சட்டம் எற்றுக்கொள்ளாது.இதனால் நிரபராதிகலான மாப்பிள்ளை வீட்டார் நீதிமன்றம் என்று அலைய வேண்டும் .இதற்கு தாங்களின் கருத்து மற்றும் ஆலோசனைகள் என்ன?



மாப்பிள்ளை வீட்டார் நிரபராதிகள் என்றால் சட்டம் ஏற்றுக்கொள்ளாது.

இந்தியாவில் பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டார் (99%) வரதட்சணை வாங்கும் அல்லது மருமகளை கொடுமை செய்யும் குற்றவாளிகளே. அதனால்தான் நீங்கள் கூறியிருப்பதுபோல மாப்பிள்ளை வீட்டார் நிரபராதி என்று சொன்னாலும் சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. பொய்யை நீங்களே ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள் பிறகு சட்டம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? இது எப்படி பொய் என்று பின்வரும் பதில்களில் விளக்கமாகப் புரியும்.

எனினும் இந்த சட்டத்தை எத்தனை பேர் சரியாக பயன் படுத்துகின்றார்கள்? எத்தனை பேர் இதனை முறைகேடாக பயன் படுத்துகின்றார்கள் ?

இந்த சட்டங்கள் அனைத்தும் 100% சரியாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பல மருமகள்கள் தங்களது அறியாமையால் இதை எப்படி பக்குவமாகப் பயன்படுத்துவது என்று தெரியாமல் தவறு செய்துவிடுகிறார்கள். அதற்கு சிறு உதாரணம் சொல்கிறேன்: கணவனிடம் உள்ள பொருட்களை பெறுவதற்கு IPC406 என்ற குற்றப்பிரிவையும் சேர்க்க வேண்டும். ஆனால் தவறுதலாக சில மருமகள்கள் வெறும் IPC498A மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டம் இவற்றை மட்டுமே பயன்படுத்துவதால் கணவன் வீட்டார் எங்களிடம் மருமகளின் பொருட்கள் எதுவுமே இல்லை. அதனால்தான் பாருங்கள் IPC406 இல்லை. வெறும் 498A மட்டும்தான் இருக்கிறது. அதனால் இது பொய் வழக்கு என்ற அவதூறு பேசிவருகிறார்கள்.

உங்களைப்போல இந்திய தலைமை நீதிபதியும் ஒருமுறை மருமகள்கள் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதாக கூறியதற்கு மருமகளின் அறியாமைதான் இதுபோன்ற மாயத்தோற்றத்திற்குக் காரணம் என்று தேசிய மருமகள் வாரியத் தலைவி இந்திய தலைமை நீதிபதிக்கே மறுப்பு தெரிவித்துள்ளார். நீதிபதி அதற்கு எதுவும் மறுப்பு சொல்லவில்லை. தலைவி சொல்லியதுதான் உண்மை.

Faced with adverse comments from the CJI, National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said. (The Times of India, 1Feb 2009)

சரி அவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவோரை எவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் .

இதுதான் மிகமுக்கியமான கேள்வி.

எந்த மருமகளும் இந்த சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதில்லை.

மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் என்பவை முழுவதும் மருமகள்களுக்காகவே இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டவை.

இந்தியாவில் இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் சட்டமாமேதைகளின் ஆலோசனைப்படி இயற்றப்பட்டு பிறகு பார்லிமெண்டின் இரு அவைகளிலும் பரிசீலனை செய்யப்பட்டு அகில இந்திய உறுப்பினர்கள் அனுமதித்த பிறகே சட்டமாகிறது. அதனை கடைசியில் ஜனாதிபதி கையெழுத்திட்டு அனுமதி தந்த பிறகே நடைமுறைக்கு வருகிறது.

இப்படி இந்திய மாமேதைகளின் கடினமான பரிசீலணைக்குப் பிறகே நடைமுறைக்கு வரும் சட்டம் மருமகள்கள் முறைகேடாகப் பயன்படுத்தும் விதத்திலா இருக்கும்? இந்திய சட்டமேதைகளையும், தலைவர்களைம் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்.

இந்த சட்டங்களை நீங்கள் ஒருமுறை கூர்ந்து கவனித்துப் படித்துப்பார்த்தால் இந்திய மருமகள்கள் அனைவரும் அப்பாவிகள், தவறே செய்யத் தெரியாதவர்கள் என்று உங்களுக்கே புரிய ஆரம்பிக்கும்.

1. 1961ல் வரதட்சணை தடுப்புச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றினார்கள். வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என்று இந்த சட்டத்தில் எழுதிய சட்டமேதைகள் மருமகள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்திருந்தாலும் மருமகள் மீதோ, அவரது குடும்பத்தார் மீதோ எந்தவித சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அழுத்தமாக எழுதிவைத்திருக்கிறார்கள். அதே சமயம் கணவன் தன்னிடம் வரதட்சணை கேட்டதாக மருமகள் புகார் கொடுத்தால் கணவன்தான் தான் வரதட்சணை கேட்கவில்லை அல்லது வாங்கவில்லை என்று தன்னை நிரபராதி என்று நிரூபித்துக்கொள்ளவேண்டும். மருமகள் எந்தவித ஆதாரத்தையும் காட்டத்தேவையில்லை.

இதிலிருந்து ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். சட்டத்தை இயற்றிய மாமேதைகள் மருமகள்கள் இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தமாட்டார்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள். பிறகு உங்களது கேள்வி எப்படி எடுபடும்?

2. கணவன்களின் கொடுமை அதிகரித்துக்கொண்டே போனதால் 1984ல் மீண்டும் நமது சட்ட மாமேதைகளும், பெருந்தலைவர்களும் IPC498A என்ற சிறப்புச் சட்டத்தை இயற்றினார்கள். இந்த சட்டத்திலும் கணவனைச் சார்ந்த யார் மீதுவேண்டுமானாலும் மருமகள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி குற்ற வழக்குத் தொடுக்கலாம் என்ற முழு உரிமையும் கொடுத்திருக்கிறார்கள். அதோடுமட்டுமல்லாமல் மருமகள் பொய்வழக்குத் தொடர்ந்தால் அதற்கும் தண்டனை உண்டு என்று இந்த சட்டத்தில் ஒரு வரிகூட எழுதப்படவில்லை என்பதுதான் இந்த சட்டத்தின் சிறப்பம்சம். மருமகள்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள் என்ற நம்பிக்கையினால்தான் இப்படி ஒரு உரிமையைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தியத் தலைவர்களின் நம்பிக்கை தவறு என்கிறீர்களா?

3. இந்த சட்டங்கள் இருந்தாலும் கணவன்களின் கொடுமை தாளமுடியாமல் மருமகளின் நலன் விரும்பும் நமது தலைவர்கள் மீண்டும் 2005ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்று ஒன்றைக் கொண்டுவந்தார்கள். அதிலும் மருமகள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகும் எளியோர்கள் என்றும், கணவன்கள் அனைவரும் வன்முறை மட்டுமே செய்யும் கொடிய மிருகங்கள் என்றும் வரையரை செய்திருக்கிறார்கள்.

இப்படி எல்லா சட்டங்களிலும் மருமகள்களுக்கு முழுச்சுதந்திரமும், நல்லவர்கள் என்ற முத்திரையையும் நம்நாட்டு சட்டமேதைகளும், தலைவர்களும் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அது அவ்வளவு சாதாரண விஷயமா?

நீங்கள் கூறுவது போல மருமகள்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால் 1961 முதல் 2005 வரை எப்படி இதுபோல மருமகள்களுக்கு மட்டுமே சாதகமாக பல சட்டங்களை இயற்றியிருப்பார்கள்? நம்நாட்டுத்தலைவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்துதான் சட்டத்தை இயற்றுவார்கள்.

உண்மை நிலவரம் நாட்டில் இப்படி இருந்துகொண்டிருக்கும்போது மருமகள்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் அவர்களை எப்படி தண்டிப்பது என்று அபாண்டமாக கேள்வி கேட்டிருக்கிறீர்களே?

உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன். சிந்தித்துப் பாருங்கள். அப்போதுதான் மருமகள் அனைவரும் அப்பாவிகள், சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தத் தெரியாதவர்கள், கணவன்கள்தான் தவறு செய்பவர்கள் என்று உங்களுக்கே புரியும்.

1. 1961 முதல் இன்றுவரை மருமகள்களுக்காக அடுக்கடுக்காக பல சிறப்புச் சட்டங்களை இயற்றிய அரசாங்கம் நீங்கள் கற்பனையாகக் கூறும் நிரபராதி மாப்பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தையும் இயற்றவில்லையே? அது ஏன்?

மாப்பிள்ளை வீட்டார் பக்கம் நியாயம் இல்லை. அதனால்தான் அரசாங்கம் இன்றுவரை ஒரு சட்டம் கூட இயற்றவில்லை. ஆனால் மருமகள்கள் அனைவரும் நல்லவர்கள். 1961ல் இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்புச்சட்டம் முதல் 2005ல் வந்துள்ள குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்வரை 1984ல் வந்த IPC498A உட்பட எந்த சட்டத்தையும் இன்றுவரை தவறாகப் பயன்படுத்தவில்லை. அதனால்தான் மருமகள்களின் பாதுகாப்பிற்காக அடுத்தடுத்து பல சட்டங்கள் வந்துள்ளன.

2. இங்கே இந்த பதிவில் நீங்கள் கேட்டிருப்பதுபோல உண்மையாகவே மாப்பிள்ளை வீட்டார் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் அரசாங்கத்திடம் இதுவரை தங்களுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தையும் கேட்கவில்லை?

மருமகள்கள் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். நிரபராதி கணவன்களை சிறையில் அடைக்கிறார்கள் என்று இந்த பதிவிற்கே நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்கும்போது உண்மையாக பாதிக்கப்பட்டிருந்தால் மாப்பிள்ளை கூட்டத்தார் அரசாங்கத்திடம் என்றோ இந்தக் கேள்வியை கேட்டு தங்களுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தை கொண்டுவந்திருப்பார்களே! அதை இதுவரை யாரும் செய்யவில்லையே? அது ஏன்?

தவறு செய்யாமல் இருந்தால்தானே மாப்பிள்ளை தரப்பினர் தைரியமாக அரசாங்கத்திடம் கேட்கமுடியும்! அதனால் நீங்கள் கூறும் மாப்பிள்ளை கூட்டம் 100% தவறு செய்கிறார்கள் என்று நிரூபணமாகிவிட்டதல்லவா? அதனால்தான் தாங்கள் நிரபராதி என்று சொன்னாலும் யாரும் காதில் வாங்கிக்கொள்ளாமல் மாப்பிள்ளை கூட்டத்தை சிறையில் தள்ளுகிறார்கள். இதுதான் உண்மை. இதற்கு மருமகள்கள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது.

3. ஏதோ சில வழக்குகளில் போனால் போகட்டும் என்று கணவனை மன்னித்து விடுவித்தால் அதை பொய் வழக்கு என்று சொல்வது முறையாகுமா?அப்படியே நீங்கள் கூறுவதுபோல மருமகள் பொய் வழக்குப்போட்டிருந்தால் நீதிமன்ற விசாரணையில் உண்மை தெரிந்துவிடும். அப்படியிருக்கையில் பொய் வழக்குப் போட்டதாக எத்தனை மருமகள்கள் நீதிமன்றத்தால் இதுவரை தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்?

4. இந்தியாவில் இருக்கும் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் முதல், மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை வரதட்சணை வழக்குகள் செல்கின்றன. ஆனால், இதுவரை எந்த நீதிமன்றமும் பொய் வழக்கிற்காக மருமகளை தண்டித்து சிறைக்கு அனுப்பியதாக சரித்திரமே கிடையாது. அப்படியென்றால் நீதிமன்றங்கள் என்ன மருமகள்கள் போடும் பொய் வழக்குகளை வேலை வெட்டியின்றி நடத்திக்கொண்டு மருமகள்களே சபாஷ்! நன்றாகப் பொய்வழக்குப் போடுங்கள் என்று பொய் வழக்குகளை ஆதரித்துக்கொண்டிருக்கின்றனவா? இந்திய நீதிமன்றங்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? கண்டிப்பாக இந்திய நீதிமன்றங்களை குறைத்து மதிப்பீடு செய்துவிடாதீர்கள்.

5. அப்படியே நீதிமன்றங்கள் பொய் வழக்குப்போட்ட மருமகளை விட்டுவிட்டாலும் அந்த வழக்கிலிருந்து விடுதலையான நீங்கள் சொல்லும் “நிரபராதி கணவன்கள்” எத்தனை பேர் மறுவழக்குத் தொடர்ந்து பொய்யான புகார் கொடுத்த மருமகள் மீதும், அதற்குத் துணையாக பொய் வழக்குப்போட்ட காவல்துறை மீதும், பொய் வழக்கை தங்கள் மீது திணித்து வாழ்வை அழித்து சிறைக்கு அனுப்பிய அரசாங்கத்தின் மீதும் மானநஷ்ட வழக்கு போட்டு வெற்றிபெற்றிருக்கிறார்கள்? அல்லது குறைந்தபட்சம் வழக்காவது தொடர்திருக்கிறார்களா?

இதற்கு உங்களிடம் இருக்கும் பதில் “ஒருவர்கூட இல்லை” என்பதுதான். நான் நிரபராதி என் மீது பொய் வரதட்சணை வழக்குப்போட்டுவிட்டார்கள் என்று சும்மா புலம்பிக்கொண்டிருக்கும் சிலரை பார்த்துவிட்டு நீங்கள் மருமகள்களைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதனால் மருமகள் பொய்வழக்குப்போடுகிறார், அவரை தண்டிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்காமல் கணவன்களையும், அவர்களது குடும்பத்தாரையும் மருமகள்களிடம் சரணடையச் செய்வது எப்படி என்று மாத்தியோசித்தால் கணவன்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நல்லது என்று நான் நினைக்கிறேன்.

அறிவுப்பூர்வமாக தாங்கள் எழுப்பிய கேள்விக்கு மிக்க நன்றி. இதுபோல தங்களின் கருத்துக்களையும், கேள்விகளையும் தயங்காமல் எழுதுங்கள். தங்களின் கேள்வி மூலம் பல மருமகள்கள் பலன் பெறுவார்கள். நன்றி!

வாழ்த்துக்கள்!


மருமகளே குதிரை சவாரி செய்யக் கற்றுக்கொள்

இந்தியாவில் மருமகள்களுக்கு காலம் காலமாக நடந்துவரும் வரதட்சணைக் கொடுமை உலகத்திற்கே தெரிந்த விஷயம். படித்தவர், படிக்காதவர், பணக்காரன், ஏழை, அரசியல்வாதி, அரசு அலுவலர், வியாபாரி, திரைத்துறைக் குடும்பம், உள்நாட்டு மருமகள், வெளிநாட்டு மருமகள் என எல்லா இடங்களிலும் மருமகள்களுக்கு எதிரான வரதட்சணை வன்முறை இந்தியாவில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.

இதனைத் தடுப்பதற்கு 1961லேயே வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் மருமகள்கள் அவற்றை சரியாகப் பயன்படுத்தாததால் இன்றுவரை மருமகள்களுக்கு எதிரான இந்தக் கொடுமை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்தாத மருமகள்களை தட்டி எழுப்புவதற்காகவே மீண்டும் 1984ல் IPC498A என்ற சட்டத்தையும், 2005ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ற சிறப்புச் சட்டத்தையும் மருமகள் நலம் போற்றும் பெண்கள் நலவாரியத்தின் அயராத முயற்சியால் அரசாங்கம் அமலுக்குக் கொண்டுவந்தது.

ஆனால், என்ன பிரயோஜனம் இன்றும் பின்வரும் செய்தியைப் போல பல கொடுமைகளை நாம் படித்து அழவேண்டியிருக்கிறது.

மார்ச் 16,2011 தினமலர்

ஐதராபாத் : வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, போலீசில் புகார் செய்துள்ளார்.


மாமனார் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, ஐதராபாத் நகரைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் ஸ்ரீஜா தெரிவித்தார். பின்னர், ஐதராபாத் பஷீர்பாக் பகுதி மகளிர் காவல் நிலையத்திற்கு ரகசியமாக வந்த சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா, தன் புகாரை மகளிர் போலீஸ் நிலைய ஆய்வாளரிடம் வழங்கினார். இதையடுத்து, ஸ்ரீஜாவின் கணவர் ஷிரிஸ் பரத்வாஜ், அவரது தாய், தந்தையை, போலீசார், 14ம் தேதி இரவு கைது செய்தனர்.


காதல் திருமணம்: சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் ஷிரிஸ் பரத்வாஜை காதல் திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவியின் கடும் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜா, பரத்வாஜ் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீஜாவிற்கு குழந்தை பிறந்த பின், சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்த், சிரஞ்சீவி - ஷிரிஸ் பரத்வாஜ் ஆகிய இரு குடும்பத்தினரிடையே பேசியதால் எதிர்ப்பை கை விட்ட சிரஞ்சீவி, மகள் ஸ்ரீஜாவை தன் குடும்பத்தில் இணைத்து கொண்டார்.


மருமகள்களே,

மேலுள்ள செய்தியிலிருந்து ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். சட்டங்களை உங்கள் கைகளில் அரசாங்கம் என்றோ கொடுத்துவிட்டது. அவற்றை எங்கு, எப்போது, எப்படி பயன்படுத்தவேண்டும் என்று புத்திசாலித்தனமாக நீங்கள்தான் முடிவுசெய்து கொள்ளவேண்டும். வருமுன் காப்பதே நல்லது! கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்து எந்த புண்ணிமும் இல்லை! பிறகு அரசாங்கத்தை குறை கூறி எந்த பலனும் இல்லை.

உங்கள் திருமண வாழ்க்கைப் பயணத்திற்காக வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் என்ற சக்திமிக்க சாட்டையை மருமகள்கள் கையில் திருமணத்தன்றே அரசாங்கம் கொடுத்துவிடுகிறது. குதிரை கட்டுக்கடங்காமல் ஓடுவதற்கு முன்பே இரண்டு சாட்டையடி கொடுத்து அதன்மீது சவாரி செய்தால்தான் பயந்து உங்கள் கட்டுப்பாட்டிற்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கும். கட்டுக்கடங்காமல் குதிரை அறுத்துக்கொண்டு ஓடிய பின்பு சாட்டையை சுழற்றினால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது.

குதிரை எதுவென்று மருமகள்களுக்கு மட்டும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்!

வாழ்த்துக்கள்!


ஐயோ பாவம்! ஆணியைக்கூட பிடுங்க முடியாத இந்தியக் கணவன்கள்

மருமகள்களே,

உங்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி! அரசாங்கமும், நீதிமன்றங்களும்
எப்போதும் மருமகள்பக்கம்தான் இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்கு மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது. கவனமாகப் படியுங்கள்.

கணவன் மீது வரதட்சணை வழக்கு தொடுக்கும் மருமகள்களுக்கு எதிராக
சமீப காலமாக கணவன்கள் வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3ன் கீழ் வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்துவருகிறார்கள். அதனால் மருமகள்கள் சற்று பயந்துபோய் இருந்தார்கள் . இப்போது அவர்களுக்கு தெம்பூட்டும் வகையில் இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்த செய்தியை நன்றாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 3, 4, 7 இவற்றை ஒருமுறை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். மருமகள்களுக்காக அந்த முக்கியப் பிரிவுகளை மட்டும் கீழே தந்திருக்கிறேன். படித்து கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)


3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more,

4. Penalty for demanding dowry.-
If any person demands directly or indirectly, from the parents or other relatives or guardian of a bride or bridegroom as the case may be, any dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than six months but which may extend to two years and with fine which may extend to ten thousand rupees


மேலுள்ள சட்டப் பிரிவுகளில் பார்த்தீர்களா? பிரிவு 3ன்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதுவரை மருமகள்கள் கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் இந்த வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தி புகார் கொடுக்கும்போது திருமணத்திற்கு முன்பே கணவன் வீட்டார் வரதட்சணை கேட்டதாகவும், தாங்கள் அதைக் கொடுத்துதான் திருமணம் செய்ததாகவும் புகார் எழுதிக் கொடுத்து வருவதுதான் வழக்கம். அதற்கேற்றார்போல காவல்துறையும் கணவன் மீது மட்டுமே வரதட்சணை கேட்டதற்காக பிரிவு 4 மற்றும் வரதட்சணை பெற்றுக்கொண்டதற்காக பிரிவு 3 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துவந்தார்கள்.

ஆனால் பிரிவு 3ல் உள்ள சட்டத்திற்கு எதிராக நீங்கள் வரதட்சணை கொடுத்ததாக தைரியமாக புகாரில் எழுத்துமூலமாக எழுதித்தந்தாலோ அல்லது பல லட்சங்களும், கிலோ கணக்கில் தங்க நகைகளும் வரதட்சணையாக கொடுத்ததாக செய்தித்தாளில் செய்தி வெளியிட்டாலோ யாரும் அதைப் பற்றி கவலையே படமாட்டார்கள்.

ஆனால், வெறிபிடித்த இந்தியக் கணவன்களின் கூட்டம் சமீபத்தில் நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சனையை பெரிதாக்கி வரதட்சணை கொடுப்பதும் சட்டப்படி குற்றம். உயர்கல்வி கற்ற என்னுடைய மனைவி சட்டத்திற்கு எதிராக வரதட்சணை கொடுத்ததாக தானாகவே புகாரில் எழுதித்தந்திருக்கிறார். அதனால் அவர் மீதும் பிரிவு 3ன் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி மருமகள்களுக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3ன் கீழ்வழக்குப் பதிவு செய்ய முயற்சித்து வந்தார்கள். சில நீதிமன்றங்களும் இந்த வெறிபிடித்த கணவன்களின் பேச்சைக் கேட்டு மருமகள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் பெருமைக்குரிய மருமகள் ஒருவர் இந்தப் பிரச்சனையை இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று கணவன் மீது வரதட்சணை வழக்குப்பதிவு செய்யும் தனது உரிமையை வெற்றிகரமாக நிலை நாட்டியிருக்கிறார். மருமகள்கள் வரதட்சணை கொடுத்ததாகச் சொன்னாலும் சட்டங்கள் கணவனை மட்டுமே தண்டிக்கவேண்டும் என்று சட்டத்திற்கு வழிகாட்டியிருக்கிறார்.

இந்திய மருமகள்களுக்குச் சாதகமாக தீர்ப்பு சொல்வதற்காக நீதிமன்றமும் வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 7-ஐ காரணம் காட்டியிருக்கிறது. அதாவது பிரிவு 7ன் படி வரதட்சணை தொடர்பாக புகார் கொடுப்பவர் மீது இந்த சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியாது. இதைத்தான் பல மருமகள்கள் இதுவரை சாதகமாக பயன்படுத்தி வருகிறோம் என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்காது!

7. Cognisance of offences.- (2) Nothing in Chapter XXXVI of the Code of Criminal Procedure, 1973 (2of 1974), shall apply to any offence punishable under this Act.)

Notwithstanding anything contained in any law for the time being in force, a statement made by the person aggrieved by the offence shall not subject such person to a prosecution under this Act.


இந்த சட்டப்பிரிவு 7ல் உள்ள நுணுக்கத்தை நான் உங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்கிறேன். குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.


ஒரு அரசு அலுவலகத்தில் உங்களுக்கு ஒரு பணி நடைபெறவேண்டுமென்றால் அந்த அலுவலர் லஞ்சம் கேட்டால் நீங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும். நான் லஞ்சம் கொடுக்கமாட்டேன் வேறு அலுவலகத்தில் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு மின்சார அலுவலர் லஞ்சம் கேட்டால் நீங்கள் லஞ்சம் கொடுக்க மாட்டேன் போ என்று சொல்லிவிட்டு குடிநீர் வாரிய அலுவலகத்தில் மின்சாரம் கேட்கமுடியாது. அதனால் புகார்தாரர் வேறுவழியின்றி லஞ்சம் கொடுக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார். அதனால் லஞ்ச வழக்குகளில் லஞ்சம் கொடுப்பவரை விட லஞ்சம் கேட்பவர்தான் குற்றவாளி என்று சொல்லலாம்.


ஆனால் வரதட்சணை என்று வரும்போது, திருமணத்திற்கு முன்பே ஒருவன் வரதட்சணை கேட்டால் அவனை தூக்கியெறிந்துவிட்டு வேறு ஒரு ஆண்மகனை தேடிக்கொள்ளலாம். அதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இது லஞ்ச வழக்குப்போன்ற விவகாரம் கிடையாது. இந்த ஆள் இல்லையென்றால் வாழ்க்கையில் நமக்கு திருமணமே நடக்காது என்று சொல்லமுடியாது.


அதனால் இந்த விஷயத்தில் வரதட்சணை கேட்பவனும் அதை ஏற்றுக்கொண்டு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்பவளும் சரி சமமாக குற்றவாளியாகக் கருதப்படவேண்டும் என்று புத்திசாலித்தனமாக யோசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். நீதிமன்றங்களில் இப்படியெல்லாம் யோசித்துவிடுவார்களோ? என்று மருமகள்கள் கொஞ்சமும் கலங்கவேண்டாம். உங்களுக்கு தெம்பூட்டுவதற்காகத்தான் இந்த பின்வரும் செய்தியைத் தந்திருக்கிறேன்.



Hindustan TimesNew Delhi, March 09, 2011

A woman and her family members cannot be treated as accused under the Dowry Prohibition Act for giving dowry at the time of marriage, the Supreme Court has said.


A bench of Justices HS Bedi and CK Prasad upheld the Delhi High Court verdict that quashed a criminal case against a girl stating a dowry harassment victim was protected under the law and, could not be charged under the Act.


Two separate benches of the Delhi HC had taken divergent views on the issue. While Justice SN Dhingra (since retd) held the woman and her family could be prosecuted for giving dowry, Justice Ajit Bharihoke had said it could not be done.


The latter judgment held that section 7 of the Dowry Prohibition Act provided protection to the person who was a complainant under the law. Section 3 of the Act makes giving, accepting or abetting dowry an offence.


The SC order clarifies the legal position regarding the culpability of an alleged dowry-giver bride. It dismissed the appeal against Justice Bharihoke’s verdict filed by the husband who claimed that the judge could not have delivered it as the law was settled by Justice Dhingra.


The bench, however, dismissed the petition and said, “The girl is a victim and you want her to be prosecuted also. Then 498A (dowry harassment section) would be rendered nugatory.”

Vijary Aggarwal counsel for the woman who faced the case for giving dowry, contended there should be harmonious construction of the Act.


Justice Bharihoke had in October 2010 quashed a metropolitan magistrate’s order that directed registration of a case under the Act against a woman. The case was registered following a complaint made before the court by the husband.


Cases against women

Delhi police issues circular in 2007 asking its officers to register cases under the Dowry Act against women who marry despite dowry demand


Mar 19, 2010: Delhi court orders case against a woman saying she had willfully given dowry


Dec 4, 2008: Noida court orders case against woman.



சட்டங்களும், நீதிமன்றங்களும், அரசாங்கமும் எப்போதுமே மருமகள் பக்கம்தான் என்று தெரியாத முட்டாள் கணவன்கள் மருமகள்களுக்கு எதிராக முட்டி மோதிப் பார்த்து கடைசியில் ஆணியைக் கூட பிடுங்க முடியவில்லை. இவர்கள் எங்கே மருமகள்களுக்கு எதிராக சட்டத்தை பயன்படுத்தப் போகிறார்கள்?! அதனால் மருமகள்களுக்கு அடங்காத கணவனுக்கெதிராக வரதட்சணை சட்டங்களை கொஞ்சமும் தயங்காமல் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.

வரதட்சணை தடுப்புச்சட்டம் பிரிவு 7 இருக்கின்றவரையிலும், நீதிமன்றங்கள் அதை ஆராய்ந்து அறியாமல் அப்படியே படித்து பொருள் கொள்ளும் வரையிலும் மருமகள்களுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. வானமும், பூமியும் உள்ளவரை வரதட்சணை வழக்குகளில் உள்ள இந்த இரண்டு நடைமுறையிலும் எந்தவித மாற்றமும் ஏற்படாது. அதுவரை இந்திய மருமகள்களுக்குக் கொண்டாட்டம்தான்!

அதனால் கணவனுக்கெதிராக புகார் கொடுக்கும்போது சிக்கனமாக இல்லாமல் புத்திசாலித்தனமா கொஞ்சம் அதிகமாகவே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ததாக எழுதிக்கொடுங்கள். அப்போதுதான் நீதிமன்றங்கள் நீங்கள் சொல்வதில் பாதி அளவாவது கணவனிடமிருந்து வாங்கிக்கொடுக்கும்.

மருமகள்களுக்கு பாதுகாப்பாக வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு-7 இருக்கின்ற வரையில் மருமகள்களுக்கு அடங்கி நடக்காத கணவன்களுக்கு 71/2தான்!

வாழ்த்துக்கள்!




பெண்ணை அவமதிக்கும் இந்திய ஆண்கள்

ஆண்களுக்கு எப்போதுதான் புத்தி வருமோ? பெண் என்றால் ஏன் இப்படி அவமரியாதை செய்கிறார்கள்?

மருமகள்களே,

நீங்கள் சாமர்த்தியமாக வரதட்சணை தடுப்புச் சட்டங்களை பயன்படுத்தினால்தான் குடும்பத்தில் உங்களுக்கு மரியாதை இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தவே இந்த செய்தி வந்திருக்கிறது. படித்து நன்றாக மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.


புதுடில்லி: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறியதால் புதுடில்லி விமான நிலையம் பரபரப்படைந்தது. இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 6இ 179 என்ற விமானம் புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாரானது. காலை 8.10 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமான நிலையம் கடும் பனிப்பொழிவாக காணப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்படுவது தாமதமானது.ஒருவழியாக பனி மூட்டம் குறைய துவங்கிய உடன் சுமார் 9.40 மணியளவில் மீண்டும் விமானம் புறப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து பயணிகள் தங்களது இருக்கையில்வந்தமர்ந்தனர். பின்னர் விமானத்தை இயக்குபவரின் பெயர் அறிவிக்கப்பட்டது.அதில் பெண் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிருப்தியடைந்த பயணிகள் தங்களின் பயணம் குறித்து முணுமுணுக்கத் துவங்கினர். இதில் ஒரு பயணி தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து சென்று பெண் விமானி விமானத்தை இயக்க கூடாது. பெண் ஒருவர் விமானம் ஓட்டினால் பயணம் முழுமையாக இருக்காது என்றும் இவரை நம்பி நாங்கள் எப்படி பயணம் செய்ய முடியும் என்று கூறினார். இதனையடுத்து பயணிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் விமான நிறுவன ஊழியர்கள் முயற்சி செய்தனர்.இருப்பினும் பயணிகள் சமாதானம் அடையாததால் செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் மாற்று ஏற்பாடாக ஆண் விமான ஒட்டி மூலம் விமானம் இயக்கப்பட்டது. இதனால் சுமார் 40 நிமடங்கள் விமானநிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

பெண்ணை அவமதிக்கும் இழிநிலை இன்னும் இந்த நாட்டில் இருக்கிறது. அப்படியென்றால் குடும்பங்களில் மருமகள்களின் நிலை எப்படி ஒரு ஆபத்தான நிலையில் இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். குடும்பங்களில் உங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்குத்தான் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் (IPC498A, Domestic Violence Act) இருக்கின்றன. புத்திசாலி மருமகள்கள் அதைப் பக்குவமாகப் பயன்படுத்தினால் இந்த பெண் விமானிக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு தங்களின் கணவனின் குடும்பத்தில் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளலாம்.

வாழ்த்துக்கள்!


வரதட்சணை சட்டத்தை பயன்படுத்தலாமா? வேண்டாமா?

இந்தியாவில் மருமகள்களுக்காக பல சிறப்புச் சட்டங்கள் இருக்கின்றனவென்று பல மருமகள்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அந்த சட்டங்களைப் பற்றியும், அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றியும் முந்தைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.

அந்தப் பதிவுகளைப் படித்திருந்தாலும் பல மருமகள்களுக்கு இன்னமும் அவற்றைப் பயன்படுத்தலாமா? அவற்றைப் பயன்படுத்தினால் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படுமா? என்ற எண்ண அலைகள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இதுபோன்று “மதில்மேல் பூனையாக” தவித்துக்கொண்டிருக்கும் பல மருமகள்களின் சந்தேகம் நீங்கி தெளிவு பிறப்பதற்காக இந்த செய்தியை உங்களுக்கு அளிக்கிறேன்.

சமீபத்தில் பரபரப்பாக செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்றில் நடிகர் ஒருவர் பாலியல் கொடுமை செய்ததாக ஒரு நடிகை புகார் கொடுத்து அது வழக்காக வந்திருந்தது என்று நீங்கள் படித்திருப்பீர்கள். அதற்கு நடிகர் மறுப்பு தெரிவித்து நடிகை தனக்கு கொடுக்கவேண்டிய பணத்தை தான் திருப்பிக் கேட்டதால் தன்மீது இந்த பொய்யான புகாரை கொடுத்ததாக செய்தியில் வந்திருந்தது.

இந்த செய்தியின் மூலம் மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. பணம் தொடர்பாக நடிகர் கூறியிருப்பது “சிவில்” பிரிவு குற்றமாகும். ஆனால் நடிகை கூறியிருக்கும் பாலியல் கொடுமை என்பது “கிரிமினல்” குற்றப்பிரிவில் வரும். இதற்குத்தான் வலிமை அதிகம். வரதட்சணைக் கொடுமையும் “கிரிமினல்” குற்றப்பிரிவு சட்டத்தின் கீழ் வருகிறது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

இப்போது பின்வரும் செய்தியைப் படித்துக்கொள்ளுங்கள். பிறகு மேலும் சில விளக்கங்கள் தருகிறேன்.


வளரும் கலைஞர்கள் இந்த மாதிரி ஒருவர் மீது ஒருவர் பொய்யான புகார்களைக் கொடுத்து பரபரப்பேற்படுத்தாமல் சமாதானமாகப் போகப் பாருங்கள், என நடிகர்கள் பாக்யாஞ்சலி – வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை கூறினார்.

உன்னையே காதலிப்பேன் என்ற படத்தில் அறிமுகமான இணை தயாரிப்பாளரும் வில்லன் நடிகருமான வேலு செக்ஸ் தொந்தரவு கொடுப்பதாக அந்த படத்தின் கதாநாயகி பாக்கியாஞ்சலி சென்னை வேப்பேரி போலீசில் புகார் கொடுத்தார்.

ஆனால் பாக்கியாஞ்சலி தன்னிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தராமல் இருப்பதாகவும், அதைக் கேட்டபோது தன்மீது, பொய்ப் புகார் கொடுத்ததாகவும் போலீசில் வேலு புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று பாக்கியாஞ்சலியும், வேலுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை இணைத்து விசாரிப்பதற்கு நீதிபதி அக்பர் அலி உத்தரவிட்டிருந்தார்.

இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா, ’2 பேர் கொடுத்த புகாரும் பொய்யானது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களுக்கு இடையே இருக்கும் தகராறு சிவில் பின்னணியில் இருப்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அந்த புகார்களை முடித்துவிட்டனர். அவர்கள் விவகாரத்தில் மேல் விசாரணை தேவையில்லை என்று விசாரணை கைவிடப்பட்டுவிட்டது’ என்றார்.

மேலும் அந்த வழக்குக்கான கோப்புகளையும், பரிமாறப்பட்ட காதல் கடிதங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார் அரசு வக்கீல்.

வளரும் கலைஞர்களுக்கு இது தேவையா?

அவற்றைப் பரிசீலித்த நீதிபதி அக்பர் அலி, இந்த புகார்களின் உண்மைத் தன்மை சந்தேகத்துக்கிடமானது என்பதை ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து, ’2 பேருமே வளர்ந்து வரும் நடிகர்கள். தொழிலில் கவனம் செலுத்தாமல் ஒருவர் மீது ஒருவர் பொய்யான புகார் கூறிக்கொண்டிருந்தால் பிரச்சினை வளர்ந்து கொண்டுதான் செல்லும். அது பரபரப்பு செய்தியாக அமையுமே தவிர வேறு பயனில்லை. எனவே 2 தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக செல்வது நல்லது. நான் வழக்கை 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

எனவே இருதரப்பும் வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்வார்கள் என்று தெரிகிறது.


செய்தியைப் பார்த்தீர்களா? போலிஸ் விசாரணைக்குப் பிறகு இரண்டுமே பொய் என்று அறிக்கை வந்திருக்கிறது. ஆனால் நடிகை பயன்படுத்தியிருக்கும் குற்றச்சாட்டு பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடிய குற்றப்பிரிவைச் சார்ந்தது. ஒரு ஆண் பாலியல் கொடுமை செய்தான் என்று பொய்யாகக் கூறுவது உண்மையான கற்பழிப்புக் குற்றத்தை விட கொடிய குற்றமாகும். ஆனால் நடிகை சர்வசாதாரணமாக இந்தக் குற்றச்சாட்டை பொய்யாக பயன்படுத்தியிருக்கிறார். இது நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்தபிறகும் சும்மா தூசியை தட்டிவிடுவதுபோல நீதிபதி சமாதானமாகப் போய்விடுங்கள் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.

இதிலிருந்து மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் மருமகள்கள் கணவனுக்கெதிராக எத்தகைய கொடுமையான குற்றச்சாட்டையும் தயங்காமல் கூறலாம். கடைசியில் அது பொய் என்று தெரிந்தால் கணவன்தான் மனைவியிடம் சமாதானமாகப் போகவேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிடுவார்கள் சட்ட மேதைகள். பொய் சொன்ன மருமகளுக்கு எந்த தண்டனையோ, பாதிப்போ ஏற்படாது என்று உறுதியாக நம்பலாம். இதுதான் வரதட்சணை வழக்குகளில் நீதிமன்றங்களில் இன்றுவரை நடந்துகொண்டிருக்கும் நடைமுறை.

அதனால் வரதட்சணை சட்டங்களை எந்தவித தயக்கமும் இன்றி உங்களின் வசதிக்கேற்ப பயன்படுத்தலாம் என்று உங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்!




கணவனை “கட்டுக்குள்” வைப்பது எப்படி - இளம் மருமகளுக்கு மட்டும்

இந்தியாவில் மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் பல இருந்தாலும் அவற்றை எப்படி தக்க சமயத்தில் பயன்படுத்தி கணவனை சிறையில் அடைப்பது என்று பல மருமகள்களுக்குத் தெரிவதில்லை. இதுபோன்ற அப்பாவி மருமகள்களுக்கு ஒரு பாடமாக ஒரு புரட்சி மருமகள் தனது கணவனை விமானநிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக காவல்துறையின் துணையோடு கையில் விலங்கிட்டு சிறையில் அடைத்துவிட்டார்.

பின்வரும் செய்தியைப் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.



வரதட்சணை கொடுமை செய்துவிட்டு, விமானத்தில் அமெரிக்காவுக்கு தப்பிச்செல்ல இருந்த கணவனை, தகுந்த நேரத்தில் போலீசில் முறையிட்டு மடக்கினார் மனைவி. சாப்ட்வேர் இன்ஜியரான கணவன், மும்பை ஏர்போர்ட்டில் குடியுரிமைப்பிரிவு அதிகாரிகளிடம் சிக்கி திருதிருவென விழித்தார். இவரை விசாரணைக்காக கோவைக்கு அழைத்து வர தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.


கோவை, ராமநாதபுரம், டி.நகர், அய்யப்பன் கோவில் வீதியில் வசிப்பவர் சுமித்ரா(29); எம்.பி.ஏ., பட்டதாரி. இவருக்கும் திருச்சி, முசிறியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சரவணகுமார்(31) என்பவருக்கும், 2006ல் ஆடம்பர திருமணம் நடந்தது. பெண் வீட்டார் 50 சவரன் நகை கொடுத்து, 10 லட்ச ரூபாய் செலவில் திருமணத்தை விமரிசையாக நடத்தினர். திருமணம் நடந்த போது, சுமித்ரா கோவையிலுள்ள தனியார் வங்கியிலும், சரவணகுமார் பெங்களூரிலுள்ள விப்ரோ நிறுவனத்திலும் பணியாற்றினர். அடுத்த சில நாட்களிலேயே சரவணகுமாருக்கு அமெரிக்காவிலுள்ள நிறுவனத்தில் வேலை கிடைத்து அங்கு சென்றுவிட்டார். அதன்பின், கோவையிலுள்ள மனைவி சுமித்ராவுக்கு போன் செய்த அவர், "உனது மாத சம்பளத்தை என் வங்கிக் கணக்கில் தவறாமல் செலுத்த வேண்டும்; ஏற்கனவே, நீ வாங்கிய இரண்டு மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்து' என, கட்டளையிட்டார். பணத்தின் மீது கணவன் குறியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த சுமித்ரா, அதன்படியே செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2009, மே மாதம் கோவைக்கு வந்த சரவணகுமார், மனைவியையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும், சரவணகுமாரின் உண்மையான முகம் வெளிப்பட்டது. "நீ, படித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்க வேண்டாம்' எனக்கூறி, மனைவிக்கு அங்கேயே வேலை தேடினார். இதற்காக, சுமித்ராவின், "பயோ-டேட்டோ'வை பல்வேறு நிறுவனங்களும் இணையதளம் வழியே அனுப்பினார். வேலைக்குச் செல்ல மறுத்த சுமித்ரா, தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததும் அடித்து துன்புறுத்த துவங்கினார். கருக்கலைப்பு செய்யாவிடில், விவாகரத்து செய்துவிடுவேன் எனவும் மிரட்டினார். மிரண்டு போன சுமித்ரா, கருக்கலைப்பு செய்து கொண்டார். கணவரின் தொல்லை தாங்காமல் அடுத்த சில நாட்களிலேயே கோவை வந்துவிட்டார். தன் நோக்கத்துக்கு உடன்படாததால் ஆத்திரமடைந்த சரவணகுமார், மனைவியுடன் போனில் பேசுவதை தவிர்த்தார்; தன் மொபைல் போன் எண்களையும் மாற்றிவிட்டார். கணவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் சுமித்ரா பரிவித்து வந்த நிலையில், எவ்வித தகவலும் தெரிவிக்காமல் கோவை வந்திறங்கினார் சரவணகுமார். அவருடன் சேர்ந்து வாழும் முயற்சியில் ஈடுபட்ட சுமித்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


அதிருப்தி அடைந்த அவர், போலீசில் முறையிடுவதாக எச்சரித்துள்ளார். போலீசார் கைது செய்துவிடுவார்களோ என உஷாரான சரவணகுமார், அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் இறங்கினார். இதுகுறித்து, கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்த சுமித்ரா, அமெரிக்காவுக்கு தப்பிச்செல்லும் முன் தன் கணவரை பிடிக்க வேண்டுமென்றும், அவர் வரதட்சணை துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்றும் தெரிவித்திருந்தார். ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சரவணகுமார், அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியை முறியடிக்கும் விதமாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, முக்கிய விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட் மற்றும் போட்டோ விவரங்கள் பரிமாறப்பட்டன. இந்நிலையில், கடந்த 21ம் தேதி அமெரிக்காவுக்கு செல்வதற்காக மும்பை விமான நிலையம் சென்ற சரவணகுமாரை, அங்குள்ள குடியுரிமைப்பிரிவு அதிகாரிகள், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்; காவலில் வைக்கப்பட்டார். இதுகுறித்த தகவல் கோவை மாநகர போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. சரவணகுமாரை கோவைக்கு அழைத்துவர, கமிஷனர் சைலேந்திரபாபு உத்தரவுப்படி, தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.


கோவை : மனைவியை தவிக்க விட்டு, அமெரிக்கா தப்பிச் செல்ல முயன்ற கணவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கோவை, ராமநாதபுரம், அய்யப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுமித்ரா(29); பட்டதாரி. 2006ல் இவருக்கும், திருச்சி, முசிறியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சரவணகுமாருக்கும் திருமணம் நடந்தது.


கோவை தனியார் வங்கியில் பணியாற்றி வந்த சுமித்ரா, கணவருடன் 2009ல் அமெரிக்கா சென்றார். கணவரின் சித்ரவதை, கட்டாய கருக்கலைப்பு மற்றும் மிரட்டலுக்கு பயந்து கோவை திரும்பினார். சமீபத்தில் கோவை வந்த சரவணகுமார், மனைவியுடன் முகம் கொடுத்து பேசாமல், மீண்டும் அமெரிக்கா செல்ல முயன்றார். கணவனின் பாராமுகம், தப்பும் முயற்சி பற்றி போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்பட்டது.


கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அனைத்து விமான நிலையங்களையும் உஷார்படுத்தினர். கடந்த 21ம் தேதி, மும்பை விமான நிலையத்தில் சரவணகுமார் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., பொன்னுத்தாய் குழுவினர் மும்பை சென்று, நேற்று முன்தினம் சரவணகுமாரை கோவை அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பின், நேற்று முன்தினம் ஜே.எம்.எண்: 6 கோர்ட்டில், மாஜிஸ்திரேட் ஜோதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்; 15 நாள் நீதிமன்ற காவலுக்காக, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


===========

புத்திசாலி மருமகளான இவர் தனக்கு அமெரிக்க நாட்டில் கணவன் கொடுமை செய்ததாகவும், கருக்கலைப்பு செய்யச் சொன்னதாகவும் இந்தியாவிற்கு வந்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். நீங்கள் இந்த செய்தியில் ஒன்றை முக்கியமாக கவனிக்கவேண்டும். இந்த மருமகள் M.B.A. என்ற உயர்கல்வி கற்றவர், வங்கியில் பணிபுரிந்தவர் என்று செய்தியில் உள்ளது. ஆனால் இவர் இந்தக் கொடுமைகளைப் பற்றி அமெரிக்க போலிஸில் உடனடியாக புகார் கூறவில்லை. அப்படிக் கூறியிருந்தால் உடனடியாக அந்த நாட்டு போலிஸ் கணவனை சிறையில் அடைத்திருப்பார்கள். அதுவும் கருக்கலைப்பு செய்யச்சொல்லி மனைவியை கொடுமை செய்தல் என்பது அமெரிக்க சட்டப்படி மிகவும் கொடுமையான குற்றமாகும்.

இங்குதான் எல்லா வெளிநாட்டு வாழ் மருமகள்களும் ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். அமெரிக்கநாட்டில் உங்கள் கணவர் மீது நீங்கள் புகார் கொடுத்தால் “நீங்கள் நினைப்பதை” அடைவது சற்றுக் கடினம். ஏனென்றால் அமெரிக்க போலிஸிற்கோ, நீதிமன்றத்திற்கோ இந்திய “மருமகள்களின் கண்ணீரின்” மதிப்பு தெரியாது.

ஆனால் அதுவே நீங்கள் இந்தியாவிற்கு வந்து போலிஸ் முன் சற்று கண்ணைக் கசக்கினால் போதும் கணவனையும் அவனது குடும்பத்தையும் எந்தக்கேள்வியுமின்றி கூண்டோடு கைது செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள்.

இந்தியாவில் மருமகளின் கண்களுக்கும், கண்ணீருக்கும் சமுதாயத்தில் அப்படி ஒரு மதிப்பிருக்கிறது. நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையென்றால் பின்வரும் செய்தியையும் பாருங்கள்.

==========

தலையங்கம்: யார் குற்றவாளி?
17 Jun 2010 தினமணி தலையங்கத்தின் ஒரு பகுதி

சுமார் 23,000 பேரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த சம்பவத்தில் அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் மெத்தனமாக இருந்தது என்பதும், குறைந்தபட்ச இழப்பீட்டைத்தான் அரசு பெற்றுத்தந்தது என்பதும்தான் இதுவரையிலும் விவாதமாக இருந்து வந்தது. ஆனால் இப்போதுதான் அம்பலமாகியிருக்கிறது, குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியும் பறித்த கதை.

வாரன் ஆன்டர்சனை போபாலிலிருந்து தனி விமானத்தில் தில்லிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குத் தப்பவிட்டனர் என்ற உண்மை இப்போது வெளியுலகுக்குத் தெரிந்த பிறகு, அதற்குக் காரணமே அப்போதைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங்தான் என்று கூசாமல் பழிகூறி பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது காங்கிரஸ்.


அர்ஜுன் சிங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி "சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுமே என்று அஞ்சியே வாரன் ஆன்டர்சன் அனுப்பி வைக்கப்பட்டதாக'வும் அர்ஜுன் சிங் அந்த நோக்கிலேயே செயல்பட்டதாகவும் கூறி அவரையும் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். இது இந்திய அரசின் நிர்வாக லட்சணம் எப்படி இருக்கிறது என்பதையே பறைசாற்றுகிறது.

==========


23,000 பேர் இறந்துபோக காரணமான போபால் விஷவாயு கசிவில் நேரடித்தொடர்புடைய ஆட்களை பாதுகாப்பாக விமானத்தில் ஏற்றி அமெரிக்காவிற்கு அனுப்பிய இதே நாட்டில் அமெரிக்காவில் நடந்ததாக சொல்லப்பட்ட கொடுமைக்காக இந்தியாவிற்கு வந்து கண்ணீர் சிந்திய ஒரே ஒரு மருமகளின் கண்ணீரைத்துடைப்பதற்காக விமானத்தில் ஏறவிருந்த கணவனை மும்பை வரை சென்று கைதுசெய்து கையோடு அழைத்துவந்து கோவை சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதிலிருந்து மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் 23,000 அப்பாவிகள் இறந்து அவர்களின் குடும்பங்கள் விடும் கண்ணீரைவிட ஒரே ஒரு இந்திய மருமகளின் கண்ணீருக்கு ஆற்றல் மிகவும் அதிகம்!

அதனால் மருமகள்கள் தங்களது கண்ணீரை இந்தியாவில் தக்க சமயத்தில் சிந்தினால் அதன் மூலம் தங்களது குறிக்கோளை எளிதாக அடையலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் உங்களுக்கு உதவினாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து அவற்றை பக்குவமாகப் பயன்படுத்தத் தெரிந்தால்தான் கணவனின் குடும்பத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். இதுதான் இந்திய மருமகளாக இருப்பதற்கான அடிப்படை ரகசியம்.

வாழ்த்துக்கள்!

மருமகள்களுக்கு உபயோகமான மற்றொரு பதிவு. இதையும் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படி





நீதிபதி மாமாவிற்கு பாடம் கற்பித்த மருமகள்

வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடைமுறையில் இருந்தாலும் அதை ஒழுங்காக செயல்படுத்தாத காரணத்தால் பல அப்பாவி மருமகள்கள் கணவனாலும் அவனது குடும்பத்தாலும் சொல்லமுடியாத கொடுமைகளுக்கு இன்றும் ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வரதட்சணை தடுப்பு அலுவலர் என்று ஒருவர் இருக்கிறார். அவருடைய மாவட்டத்தில் நடக்கும் திருமணங்களில் வரதட்சணை பரிவர்த்தனை, கொடுமை நடக்காமல் அவர் பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படி ஒரு அதிகாரி இருப்பது பல மருமகள்களுக்குத் தெரியவே தெரியாது. இது யாருடைய குற்றம்? இதைப்பற்றி மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாமல் ரகசியமாக வைத்திருப்பது யார்? அல்லது இந்தப் பணியை செய்யாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பது யார்? ஒருவேளை இது ஆணாதிக்க சதியாக இருக்கலாம்!

இருக்கின்ற வரதட்சணை தடுப்புச் சட்டத்தையே ஒழுங்காக செயல்படுத்தாமல் அதைனைத் தொடர்ந்து 1984ல் மீண்டும் IPC498A என்ற சட்டமும், 2005ல் குடும்பவன்முறை தடுப்புச் சட்டமும் இயற்றப்பட்டிருக்கிறது. இத்தனை சட்டங்கள் இருந்தாலும் மருமகள்கள் அனுபவிக்கும் இந்தக் கொடுமைகளுக்கு யார் காரணம்? கணவனும் அவனது குடும்பத்தாருமா? சட்டங்களை வெறும் ஏட்டளவிலேயே வைத்துக்கொண்டு அவற்றை முறைப்படி செயல்படுத்தாதமல் வைத்திருப்பது யார்? இதுவும் இது ஆணாதிக்க சதியாக இருக்கலாம்!

இதில் அதிகம் படித்த உயர் பதவியிலுள்ளவர்கள்தான் இந்த சட்டங்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தங்களது அதிகார ஆணவத்தில் மருமகள்களை கொடுமை செய்கின்றனர். இதுபோன்றவர்களை அந்த வீடுகளில் இருக்கும் மருமகள்கள் கொஞ்சமும் தயங்காமல் IPC498A, DP Act, DV Act போன்ற மருமகள் பாதுகாப்பு சட்டங்களைப் பயன்படுத்தி இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும். மேல்தட்டுவர்க்க மருமகள்களுக்கே இந்த அவலநிலை என்றால் சாதாரண நடுத்தர வர்க்க குடும்பங்களில் வாழும் மருமகள்களின் நிலையை எண்ணிப்பார்க்கவே முடியவில்லையே.

அதனால் நாட்டை சுத்தப்படுத்தும் முயற்சியில் இன்றே ஒவ்வொரு மருமகள்களும் களத்தில் இறங்கவேண்டும். மேல்தட்டு வர்க்க மக்களின் வீடுகளில் நான்கு சுவருக்குள் நடக்கும் கொடுமைகளை தயங்காமல் தட்டிக்கேளுங்கள். இந்திய அரசாங்கம் உங்கள் பக்கம் இருக்கிறது. இதுபோன்ற முயற்சிக்கு முன்னுதாரணமாக ஒரு மருமகள் களத்தில் இறங்கியிருக்கிறார். அவருக்கு இந்திய மருமகள்கள் சார்பாக வாழ்த்துக்கள்!


ஜனவரி 24,2011 தினமலர் செய்தி


ராஜ்கோட்:மருமகளை வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்திய, நீதிபதிக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


குஜராத் மாநிலம் அம்ரேலியைச் சேர்ந்த தர்ஷணா என்ற இளம்பெண்ணுக்கும், போர் பந்தர் மாவட்ட செசன்ஸ் கோர்ட் நீதிபதி அரவிந்த் தவேயின் மகன் கின்னார் என்பவருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், அம்ரேலி போலீஸ் ஸ்டேஷனில், தர்ஷணா தன்னை தனது கணவர், மாமனார் அரவிந்த் தவே, மாமியார் பிரதிபா, தனது கணவரின் தம்பி பிரசாந்த் ஆகியோர் 10 லட்சம் ரூபாய் கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், சில மாதங்களுக்கு முன்னர், தன்னை அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாகவும் போலீசாரிடம் புகார் அளித்தார்.மேலும், தனது கணவர் தன்னை விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டி வருவதாகவும், எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தர்ஷணா கேட்டுக் கொண்டார்.


இந்த புகாரின் மீது விசாரை மேற்கொண்ட போலீசார், புகாரில் உண்மை இருப்பதால், நீதிபதி அரவிந்த் தவே உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேல்தட்டுவர்க்க மருமகள்களே இன்றே விழித்தெழுங்கள். வீட்டிற்குள் உங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சமூக அந்தஸ்து என்ற பெயரில் மூடிமறைத்தது போதும். அதிகாரப் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் கயவர்கள் உங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை உடனே அரசாங்கம் கொடுத்திருக்கும் சட்டங்களைப் பயன்படுத்தி ஒடுக்குங்கள்.


நீங்கள் நடத்தப்போகும் பாடத்திற்கான பயிற்சியை இங்கே ஆரம்பியுங்கள்:


வாழ்த்துக்கள்!





மருமகளின் புத்தாண்டுப் பரிசு!

நான் விளக்கமாகச் சொல்வதை விட நீங்களே படித்து மகிழுங்கள். இதுதான் மருமகள்களுக்கு இந்தப் புத்தாண்டின் பரிசு.



A local court has rejected anticipatory bail application of Inspector General of Police Ajit Kumar Shrivastava and his wife in a dowry case filed by their daughter-in-law.

Additional District and Sessions court judge Shailendra Shukla rejected their application yesterday saying Shrivastava was a top police officer and at a time when investigations into the case were at a preliminary stage, a bail will not be appropriate.

According to prosecution, Shrivastava and his wife Manjulata sought anticipatory bail after a dowry case was registered against them by their daughter-in-law Namrata.

Namrata, who tied the knot with Shrivastava's son Abhishek on April 18, 2008, had lodged a complaint against him, his parents and her sister-in-law Apurva in the Mahila Police Station here last month for demanding a dowry of Rs 30 lakh and harassing her when their demand was not fulfilled.

After investigating her complaint, a case was registered against the Shrivastavas.


இந்த புத்தாண்டில் ஒவ்வொரு மருமகளும் தங்கள் கணவனின் குடும்பத்திற்கு இதுபோலஅதிர்ச்சியான புத்தாண்டு பரிசு கொடுத்து மகிழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்கள்!





இந்திய மருமகள்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி!

மருமகள்களே,

கொடுமைக்கார கணவன் மற்றும் மாமியாரின் வன்முறைகளிலிருந்து உங்களைக் காப்பாற்ற நமது தோழிகள் பல ஆண்டுகளாகப் போராடி வரதட்சணை தடுப்புச் சட்டம் (Dowry Prohibition Act), IPC498A (1983), Protection of Women Against Domestic Violence Act-2005 போன்ற பல அருமையான சட்டங்களை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். அவை நமக்கு எப்படியெல்லாம் இன்றும் உதவிக் கொண்டிருக்கின்றன என்று நமக்கு நன்றாகவே தெரியும். அவற்றைப் பற்றித் தெரியாமல் இருக்கும் அப்பாவி மருமகள்கள் பின்வரும் முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.


இந்த இந்திய சட்டங்கள் நமக்குப் பலவாறு உதவிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சமீபத்தில் அமெரிக்க அரசாங்கமும் நமக்கு நிதியுதவி செய்து மேலும் பல புதிய சட்டங்களை உருவாக்கித்தர மனமுவந்து முன்வந்திருக்கிறது. அந்த புதிய சட்டத்திற்குப் பெயர்தான்

The International Violence Against Women Act (IVAWA) - Shaping U.S. Polices That Help Women Lift Themselves.

இந்திய மருமகள்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடும் அமெரிக்க அரசின் இந்த உயர்ந்த கொள்கைக்கு உங்களது ஆதரவைத் தெரிவிக்க பின்வரும் இணைப்பில் சென்று உங்களது ஆதரவுக் கருத்துக்களை எழுதுங்கள்.


இப்படி அந்நிய நாடுகளே இந்திய மருமகள்களின் நலனில் அக்கறை கொண்டு நிதியுதவி அளித்து புதிய சட்டங்களை இயற்ற உதவிசெய்யும்போது நமதுநாட்டில் மருமகள்களுக்கெதிராக ஒரு புதிய சதித்திட்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் யாரோ ஒருவர் இந்திய ராஜ்ய சபாவிற்கு மனு கொடுத்து மருமகள்களின் தோழியான IPC498A சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அந்தக் கொடுமையை இங்கே Petitions with the Committee டவுண்லோடு செய்து படித்துக்கொள்ளுங்கள். இதற்குப் பல உள்நாடு மற்றும் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து ராஜ்ய சபா பரிசீலணைக் குழுவிற்கு கடிதங்கள் அனுப்பியிருக்கிறார்கள்.

இதை இப்படியே விட்டுவிட்டால் IPC498A சட்டத்தில் திருத்தம் செய்துவிடுவார்களேயானால் இந்திய மருமகள்களுக்கு குடும்பத்தில் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் போய்விடும். அதைப் பற்றி அனைத்திந்திய ஜனனாயக மாதர் சங்கம் தங்களது கவலையையும் எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறார்கள். அந்த செய்தியையும் படித்துக்கொள்ளுங்கள்.

Friday, Dec 24, 2010 The Hindu

NEW DELHI: The All India Democratic Women's Association (AIDWA) has opposed the proposed dilution of dowry-related Section 498-A of the Indian Penal Code on a petition filed before the Rajya Sabha by Anupama Singh.

In a memorandum to the Rajya Sabha Petitions Committee, the AIDWA has expressed shock and distress over the proposal demanding that offences under Section 498-A be made non-cognisable, bailable and compoundable. This Section recognises that acute domestic violence and dowry-related torture are a serious offence, and prescribes a jail punishment of up to three years, the AIDWA has pointed out.


Make ineffective


The attempt in the petition before the committee is to make Section 498-A totally ineffective so that no guilty husband or in-laws can be prosecuted under it. Section 498-A was incorporated in the IPC after a long, sustained struggle by women's organisations and others. However, dowry-related torture and domestic violence continued to escalate even after this Section and 304 (B) (dowry death) were incorporated in the law, the memorandum said.


Making 498-A non-cognisable would mean the police not responding to any complaint made under this Section by a woman in distress, and their not embarking on any investigation into cases, in which a woman suffered physical and mental violence as defined in Section 498-A or/and who was harassed or tortured for dowry. In effect, no case would be registered under this Section and women would have to go to court to file complaints before a magistrate. “Very few women in our country will have the means or ability to do so,” the memorandum pointed out.


“Our organisation has dealt with, and continues to deal with, several thousand complaints of dowry harassment, dowry death and domestic violence on a daily basis. It is our experience that women victims of violence do not file complaints under this Section unless they have suffered prolonged harassment and torture in their marital homes. Even then, we have found that the women who make complaints under Sec. 498-A have to face the brunt of gender bias, corruption and inefficiency in the criminal justice system. They have faced several obstacles to using the law. It would have been more relevant to consider strengthening of the dowry laws to ensure that women live a life free from violence.”



இந்த அதிர்ச்சியான செய்திக்கு நடுவே மற்றொரு அதிர்ச்சி மருமகள்களுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது. பின்வரும் புள்ளிவிவரத்தைப் பார்த்தீர்களா? மருமகள்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்துவருகின்றது. இந்த நிலை நீடித்தால் குடும்பத்தில் மருமகள்களின் ராஜ்ஜியத்தை அழித்துவிடுவார்களே.

12/26/2010
தினமலர்


தமிழகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், அவர்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


தமிழக காவல் துறை, பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. தமிழக குற்ற ஆவண காப்பக பதிவின்படி, பெண்களுக்கெதிரான குற்றங்கள், கடந்தாண்டை விட 23 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுவாக கற்பழிப்பு, மானபங்கம், கடத்தல், பாலியல் கொடுமை, வரதட்சணை கொடுமை, கணவன், உறவினர்களால் கொடுமைப்படுத்தப்படுதல் போன்ற குற்றங்கள் பெண்களுக்கெதிராக அதிகளவில் பதிவாகும். அந்த வகையில், 2008ல் 6,262 வழக்குகள் பதிவாயின. கடந்தாண்டு, 5,126ஆக குறைந்த நிலையில், நடப்பாண்டில் நவம்பர் வரை 5,508 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.


கற்பழிப்பு: கடந்தாண்டில் குறைந்தாலும், இந்தாண்டு மீண்டும் அதிகரித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டில், 626 கற்பழிப்பு புகார்கள் பதிவாகியுள்ளன. சேலம், நெல்லை, விழுப்புரம் மற்றும் சென்னையில் தான் அதிகளவில் கற்பழிப்புகள் நடந்துள்ளன. ஊட்டி மற்றும் கோவையில், தலா ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டது என, கற்பழிப்பு பட்டியல் நீள்கிறது. கற்பழிப்பு சதவீதம், கடந்தாண்டை விட இந்தாண்டு 12 சதவீதம் அதிகம்.


வரதட்சணை: வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், இந்தாண்டு 183 புகார்கள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாக, இந்தாண்டு 534 புகார்கள் பதிவாகியுள்ளன. இது கடந்தாண்டை விட 31 சதவீதம் குறைவு. இதில், அதிகபட்சமாக விருதுநகரில் 97, கன்னியாகுமரி 96, திருச்சியில் 87, சென்னை புறநகரில் 78 புகார்கள் பதிவாகியுள்ளன. இன்னும் டிசம்பர் மீதமிருக்கையில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் காக்கிச்சட்டை அதிகாரிகள்.


இதுபோன்ற ஆபத்தான காலகட்டத்தில் வாழும் மருமகள்களுக்கு இருக்கின்ற சட்டத்தையும் வலுவிழக்கச் செய்தால் பிறகு மருமகள்களால் இந்திய நாட்டில் வாழ முடியுமா? ஓநாய்கள் போல வட்டமிடும் கணவன் மற்றும் அவனது குடும்பத்தை மருமகள்களின் கட்டுப்பாட்டில் காலடியில் கிடக்கும் நாய் போல வைத்திருக்க மேலும் பல மருமகள் பாதுகாப்புச் சட்டங்கள்தான் தேவையே தவிர இருக்கின்ற சட்டங்களை திருத்தக் கூடாது. அதனால் நீங்கள் இன்றே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு உங்களது ஆதரவை அளித்து IPC498A சட்டதிருத்தத்திற்கு உங்களது எதிர்ப்பை தெரிவியுங்கள்.

மருமகள்கள் இந்த சட்டத் திருத்தத்தைப் பற்றி அக்கறையில்லாமல் தங்களது எதிர்ப்பை தெரிவிக்காமல் விட்டுவிட்டால் பிறகு இந்திய மருமகள்களின் பாதுகாப்பிற்காக புதிய சட்டத்தை இயற்றுவதற்கு அமெரிக்க அரசு கொடுக்கப்போகும் நிதியுதவி கிடைக்காமல் போய்விடும்.

இருக்கின்ற IPC498A சட்டத்தையே விட்டுவிட்டீர்களே பிறகு எப்படி புதிய சட்டத்திற்கு நிதியுதவி கொடுப்பது என்று வெளிநாட்டுக் கொடைவள்ளல்கள் நிதிகொடுக்கத் தயங்குவார்கள் அல்லவா? மருமகள்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையே இல்லாமல் போய்விடுமே. தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த நிதியுதவி நின்று போனால் பிறகு இந்திய மருமகள்களின் வாழ்க்கையே இருண்டுபோய்விடுமே. கணவனையும் அவனது குடும்பத்தையும் நம்பி எத்தனை ஆண்டுகள் வாழமுடியும்? மருமகள்கள் என்ன கணவன் வீட்டு அடிமைகளா? இதற்குமேல் என்னால் சொல்லமுடியாது.

அதனால் அனைத்து தன்னார்வ மருமகள் நல சங்கங்களுக்கும் உங்களது ஆதரவை தெரிவித்து மருமகள்களின் உரிமையைப் பாதுகாக்க தடையில்லா நிதியுதவி கிடைக்க உங்களது மேலான ஆதரவை நல்கி உங்களது எதிர்காலத்தில் சுதந்திரமான பெண்ணாக வாழுங்கள்.

ஆகவே IPC498A சட்டத்திருத்தத்திற்கு உங்களது குடும்பத்தோடு சேர்ந்து எதிர்ப்பினை தெரிவித்து இந்திய ராஜ்ய சபாவிற்கு கடிதம் அனுப்புங்கள். அதே சமயம் அமெரிக்க அரசின் நிதியுதவியில் உருவாகி இந்தியாவிற்கு வரப்போகும் புதிய சட்டமான The International Violence Against Women Act (IVAWA) - சட்டத்திற்கு உங்களது முழு ஆதரவினை தெரிவியுங்கள்.

மருமகள்களின் ஏகோபித்த ஆதரவுடன் இருகரம் கூப்பி இந்த புதிய சட்டத்தை இந்தியாவிற்குள் வரவேற்று கணவன்களையும், அவர்களது குடும்பங்களையும் அடக்கி மருமகள்களின் வெற்றிக்கொடியை நாடெங்கும் பட்டொளி வீசி பறக்கவிடுவோம் என்று சபதம் எடுத்துக்கொள்ளுங்கள்.

இன்றே நீங்கள் இதைச் செய்தால்தான் ஒவ்வொரு குடும்பத்திலும் மருமகள்கள் தங்களது கணவனின் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் தங்களின் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு உங்களது தோழிகளுக்கும் இந்த விழிப்புணர்வுச் செய்தியை தவறாமல் அனுப்பிவையுங்கள்.

வாழ்த்துக்கள்!