"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


நீதிபதி மாமாவிற்கு பாடம் கற்பித்த மருமகள்

வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடைமுறையில் இருந்தாலும் அதை ஒழுங்காக செயல்படுத்தாத காரணத்தால் பல அப்பாவி மருமகள்கள் கணவனாலும் அவனது குடும்பத்தாலும் சொல்லமுடியாத கொடுமைகளுக்கு இன்றும் ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வரதட்சணை தடுப்பு அலுவலர் என்று ஒருவர் இருக்கிறார். அவருடைய மாவட்டத்தில் நடக்கும் திருமணங்களில் வரதட்சணை பரிவர்த்தனை, கொடுமை நடக்காமல் அவர் பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படி ஒரு அதிகாரி இருப்பது பல மருமகள்களுக்குத் தெரியவே தெரியாது. இது யாருடைய குற்றம்? இதைப்பற்றி மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாமல் ரகசியமாக வைத்திருப்பது யார்? அல்லது இந்தப் பணியை செய்யாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பது யார்? ஒருவேளை இது ஆணாதிக்க சதியாக இருக்கலாம்!

இருக்கின்ற வரதட்சணை தடுப்புச் சட்டத்தையே ஒழுங்காக செயல்படுத்தாமல் அதைனைத் தொடர்ந்து 1984ல் மீண்டும் IPC498A என்ற சட்டமும், 2005ல் குடும்பவன்முறை தடுப்புச் சட்டமும் இயற்றப்பட்டிருக்கிறது. இத்தனை சட்டங்கள் இருந்தாலும் மருமகள்கள் அனுபவிக்கும் இந்தக் கொடுமைகளுக்கு யார் காரணம்? கணவனும் அவனது குடும்பத்தாருமா? சட்டங்களை வெறும் ஏட்டளவிலேயே வைத்துக்கொண்டு அவற்றை முறைப்படி செயல்படுத்தாதமல் வைத்திருப்பது யார்? இதுவும் இது ஆணாதிக்க சதியாக இருக்கலாம்!

இதில் அதிகம் படித்த உயர் பதவியிலுள்ளவர்கள்தான் இந்த சட்டங்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தங்களது அதிகார ஆணவத்தில் மருமகள்களை கொடுமை செய்கின்றனர். இதுபோன்றவர்களை அந்த வீடுகளில் இருக்கும் மருமகள்கள் கொஞ்சமும் தயங்காமல் IPC498A, DP Act, DV Act போன்ற மருமகள் பாதுகாப்பு சட்டங்களைப் பயன்படுத்தி இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும். மேல்தட்டுவர்க்க மருமகள்களுக்கே இந்த அவலநிலை என்றால் சாதாரண நடுத்தர வர்க்க குடும்பங்களில் வாழும் மருமகள்களின் நிலையை எண்ணிப்பார்க்கவே முடியவில்லையே.

அதனால் நாட்டை சுத்தப்படுத்தும் முயற்சியில் இன்றே ஒவ்வொரு மருமகள்களும் களத்தில் இறங்கவேண்டும். மேல்தட்டு வர்க்க மக்களின் வீடுகளில் நான்கு சுவருக்குள் நடக்கும் கொடுமைகளை தயங்காமல் தட்டிக்கேளுங்கள். இந்திய அரசாங்கம் உங்கள் பக்கம் இருக்கிறது. இதுபோன்ற முயற்சிக்கு முன்னுதாரணமாக ஒரு மருமகள் களத்தில் இறங்கியிருக்கிறார். அவருக்கு இந்திய மருமகள்கள் சார்பாக வாழ்த்துக்கள்!


ஜனவரி 24,2011 தினமலர் செய்தி


ராஜ்கோட்:மருமகளை வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்திய, நீதிபதிக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


குஜராத் மாநிலம் அம்ரேலியைச் சேர்ந்த தர்ஷணா என்ற இளம்பெண்ணுக்கும், போர் பந்தர் மாவட்ட செசன்ஸ் கோர்ட் நீதிபதி அரவிந்த் தவேயின் மகன் கின்னார் என்பவருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், அம்ரேலி போலீஸ் ஸ்டேஷனில், தர்ஷணா தன்னை தனது கணவர், மாமனார் அரவிந்த் தவே, மாமியார் பிரதிபா, தனது கணவரின் தம்பி பிரசாந்த் ஆகியோர் 10 லட்சம் ரூபாய் கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், சில மாதங்களுக்கு முன்னர், தன்னை அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாகவும் போலீசாரிடம் புகார் அளித்தார்.மேலும், தனது கணவர் தன்னை விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டி வருவதாகவும், எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தர்ஷணா கேட்டுக் கொண்டார்.


இந்த புகாரின் மீது விசாரை மேற்கொண்ட போலீசார், புகாரில் உண்மை இருப்பதால், நீதிபதி அரவிந்த் தவே உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேல்தட்டுவர்க்க மருமகள்களே இன்றே விழித்தெழுங்கள். வீட்டிற்குள் உங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சமூக அந்தஸ்து என்ற பெயரில் மூடிமறைத்தது போதும். அதிகாரப் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் கயவர்கள் உங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை உடனே அரசாங்கம் கொடுத்திருக்கும் சட்டங்களைப் பயன்படுத்தி ஒடுக்குங்கள்.


நீங்கள் நடத்தப்போகும் பாடத்திற்கான பயிற்சியை இங்கே ஆரம்பியுங்கள்:


வாழ்த்துக்கள்!





No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்