இதனைத் தடுப்பதற்கு 1961லேயே வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் மருமகள்கள் அவற்றை சரியாகப் பயன்படுத்தாததால் இன்றுவரை மருமகள்களுக்கு எதிரான இந்தக் கொடுமை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்தாத மருமகள்களை தட்டி எழுப்புவதற்காகவே மீண்டும் 1984ல் IPC498A என்ற சட்டத்தையும், 2005ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ற சிறப்புச் சட்டத்தையும் மருமகள் நலம் போற்றும் பெண்கள் நலவாரியத்தின் அயராத முயற்சியால் அரசாங்கம் அமலுக்குக் கொண்டுவந்தது.
ஆனால், என்ன பிரயோஜனம் இன்றும் பின்வரும் செய்தியைப் போல பல கொடுமைகளை நாம் படித்து அழவேண்டியிருக்கிறது.
மார்ச் 16,2011 தினமலர்
ஐதராபாத் : வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, போலீசில் புகார் செய்துள்ளார்.
மாமனார் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, ஐதராபாத் நகரைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் ஸ்ரீஜா தெரிவித்தார். பின்னர், ஐதராபாத் பஷீர்பாக் பகுதி மகளிர் காவல் நிலையத்திற்கு ரகசியமாக வந்த சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா, தன் புகாரை மகளிர் போலீஸ் நிலைய ஆய்வாளரிடம் வழங்கினார். இதையடுத்து, ஸ்ரீஜாவின் கணவர் ஷிரிஸ் பரத்வாஜ், அவரது தாய், தந்தையை, போலீசார், 14ம் தேதி இரவு கைது செய்தனர்.
காதல் திருமணம்: சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் ஷிரிஸ் பரத்வாஜை காதல் திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவியின் கடும் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜா, பரத்வாஜ் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீஜாவிற்கு குழந்தை பிறந்த பின், சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்த், சிரஞ்சீவி - ஷிரிஸ் பரத்வாஜ் ஆகிய இரு குடும்பத்தினரிடையே பேசியதால் எதிர்ப்பை கை விட்ட சிரஞ்சீவி, மகள் ஸ்ரீஜாவை தன் குடும்பத்தில் இணைத்து கொண்டார்.
மருமகள்களே,
மேலுள்ள செய்தியிலிருந்து ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். சட்டங்களை உங்கள் கைகளில் அரசாங்கம் என்றோ கொடுத்துவிட்டது. அவற்றை எங்கு, எப்போது, எப்படி பயன்படுத்தவேண்டும் என்று புத்திசாலித்தனமாக நீங்கள்தான் முடிவுசெய்து கொள்ளவேண்டும். வருமுன் காப்பதே நல்லது! கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்து எந்த புண்ணிமும் இல்லை! பிறகு அரசாங்கத்தை குறை கூறி எந்த பலனும் இல்லை.
உங்கள் திருமண வாழ்க்கைப் பயணத்திற்காக வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் என்ற சக்திமிக்க சாட்டையை மருமகள்கள் கையில் திருமணத்தன்றே அரசாங்கம் கொடுத்துவிடுகிறது. குதிரை கட்டுக்கடங்காமல் ஓடுவதற்கு முன்பே இரண்டு சாட்டையடி கொடுத்து அதன்மீது சவாரி செய்தால்தான் பயந்து உங்கள் கட்டுப்பாட்டிற்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கும். கட்டுக்கடங்காமல் குதிரை அறுத்துக்கொண்டு ஓடிய பின்பு சாட்டையை சுழற்றினால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது.
குதிரை எதுவென்று மருமகள்களுக்கு மட்டும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்..
ReplyDeleteசஹோ தாங்கள் கூறுவது சரிதான் . எனினும் இந்த சட்டத்தை எத்தனை பேர் சரியாக பயன் படுத்துகின்றார்கள்? எத்தனை பேர் இதனை முறைகேடாக பயன் படுத்துகின்றார்கள் ? சரி அவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவோரை எவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் . எனென்றால் வரதட்சணை கொடுமை என்று ஒரு பெண் பொய்யான வழக்கு கொடுத்தால் மாப்பிள்ளை வீட்டார்கள் குடும்பத்துடன் கைது செய்யப்படுவார்கள் .ஆனால் மாப்பிள்ளை வீட்டார் நிரபராதிகள் என்றால் சட்டம் எற்றுக்கொள்ளாது.இதனால் நிரபராதிகலான மாப்பிள்ளை வீட்டார் நீதிமன்றம் என்று அலைய வேண்டும் .இதற்கு தாங்களின் கருத்து மற்றும் ஆலோசனைகள் என்ன?
ReplyDeleteவேடந்தாங்கல்-கருன்,
ReplyDeleteஉங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.
abiramamnatham,
ReplyDeleteமருமகளைக் காண வந்தமைக்கு மிக்க நன்றி. உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தைப் போல பலருக்கும் இதுபோன்ற ஒரு கேள்வி மனதில் இருந்துகொண்டிருக்கிறது.
நீங்கள் கூறுவதுபோல எல்லா மாப்பிள்ளை வீட்டாரும் நிரபராதி என்று சொல்ல முடியாது. ஆனால் அதேசமயம் ஒரு மருமகள்கூட இந்த சட்டத்தை முறைகேடாக பயன்படுத்துவதில்லை.
உங்களின் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் பதிலளிக்க இங்கே இடம் போதாது என்பதால் உங்களுக்காக தனியாக ஒரு பதிவு அடுத்ததாக எழுதுகிறேன். கண்டிப்பாக அதையும் படியுங்கள்.
நன்றி!