அத்தோடு மட்டுமல்லாமல் மற்றொரு இனிப்பான செய்தியும் மருமகள்களுக்கு காத்திருக்கிறது. அதுதான் விவாகரத்து தொடர்பான புதிய சட்டம். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் இந்தியாவில் இனி கணவன்கள் தலைகீழாக நின்றாலும் விவாகரத்தே கிடைக்காது.
மருமகள் விரும்பி விவாகரத்து கேட்டால் அதற்கு கணவனால் சட்டப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியாது ஆனால் அதே சமயம் கணவன் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தால் மருமகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம். அதனால் இந்த சட்டம் அமலுக்கு வந்தால் மருமகள் நினைத்தால் கணவனின் தலையெழுத்தையே மாற்றி விடலாம்!
இதுவரை வரதட்சணை தடுப்புச் சட்டம் (Dowry Prohibition Act), மருமகள் கொடுமை தடுப்புச் சட்டம் (IPC498A), மருமகள்களை கணவனின் குடும்ப வன்முறையிலிருந்து காக்கும் சட்டம் (Protection of Women from Domestic Violence Act 2005) போன்ற சட்டங்கள் மூலம் பலனடைந்து வந்த மருமகள்களுக்கு இந்த புதிய சொத்துரிமை சட்டமும், கணவனுக்கு விவாகரத்து வழங்கும் அதிகாரத்தை மருமகளுக்கு கொடுக்கும் சட்டமும் வாழ்வில் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கப்போகிறது என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை!
இதுவரை கணவனின் வருமானம் எவ்வளவு, சேமிப்பு எவ்வளவு, சொத்து மதிப்பு எவ்வளவு போன்ற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கும் மருமகள்கள் அவற்றைப் பற்றி தெரிந்து கொண்டு இப்போதே பட்டியலிட ஆரம்பித்து விடுங்கள். தக்க சமயத்தில் கணவனின் சொத்தை சரிபாதியாக கணக்கிட உதவும்!
பின்வரும் செய்தியை கவனமாகப் படித்து குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்!
திருமணத்திற்குப் பிறகு வாங்கும் சொத்தில் மனைவிக்கு பங்கு: வருகிறது புது சட்டம்
தினமலர் 23 மார்ச் 2012புதுடில்லி: திருமண சட்டங்களை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதன்மூலம், திருமணத்திற்கு பிறகு கணவர் பெயரில் வாங்கும் சொத்துக்களில், மனைவிக்கும் பங்கு உண்டு. இந்தத் திருத்தப்பட்ட சட்ட மசோதா, இந்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வருகிறது.
"திருமண சட்டங்கள் திருத்த மசோதா 2010' இரண்டாண்டுகளுக்கு முன், ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவும் தன் பரிந்துரைகளை அளித்தது. அவற்றில், நான்கு முக்கிய பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.அதன் விவரம் வருமாறு: திருமணத்திற்கு பிறகு கணவர் பெயரில் வாங்கும் சொத்துக்களில், மனைவிக்கும் பங்கு உண்டு. அதேபோல், ஒரு குழந்தையைத் தத்தெடுத்த தம்பதியர், அதன்பின் விவாகரத்து பெற நேரிட்டால், அந்தத் தத்து குழந்தைக்கும், மற்ற குழந்தைகளைப் போல சொத்தில் பங்கு பெற உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பெண் விவாகரத்து பெற்றாலும், கணவரின் சொத்துக்களில் பங்கு பெற உரிமையுண்டு. இருந்தாலும், எந்த அளவுக்கு சொத்தில் உரிமை பெறலாம் என்பதை, ஒவ்வொரு தனிப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கோர்ட்டுகளே முடிவு செய்யலாம். ஒரு தம்பதியரில் விவாகரத்து கோரி கணவன் மனு தாக்கல் செய்தால், அதை மனைவியானவர் எதிர்க்கும் வகையில், புதிய சட்ட விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், தம்பதியரில் மனைவியானவர் விவாகரத்து கோரி கோர்ட்டை அணுகினால், கணவர் அதை எதிர்க்க முடியாது. இவ்வாறு பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட சட்ட மசோதா, இந்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வருகிறது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்