குடும்ப நல நீதிமன்ற சிறப்பு சட்டத்தின்படி வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அதாவது கணவன், மனைவி மட்டுமே நேரில் ஆஜராகி தங்களது வாதத்தை நீதிபதியிடம் கூறி வழக்கில் தீர்வு காணவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது கணவன், மனைவிக்கிடையேயான குடும்பப் பிரச்சனை என்பதால் வேறு எந்த மூன்றாம் நபரும் நீதிமன்றத்திற்குள் இந்த வழக்கு தொடர்பாக அனுமதிக்கப்படக்கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. வழக்குதாரர்கள் விரும்பினால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தங்களுக்கு உதவியாக வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதனால் பல மருமகள்களும் தங்களுக்கு உதவுவதற்காக வழக்கறிஞர்களை நியமித்து சாதுர்யமாக சட்டத்தின் துணையோடு கணவன்களின் கொட்டத்தை அடக்கிவந்தார்கள். இப்போது நீதிமன்றத்திற்கு வரும் இந்தக் கணவன்கள் முன்புபோல அடக்கமாக இல்லாமல் தங்களுக்குள் ஒன்றாக ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் உதவி செய்து சட்ட நுணுக்கங்களை கற்றுக்கொண்டிருப்பதால் மருமகள்களால் அவ்வளவு எளிதாக வழக்கை நடத்த முடியவில்லை.
மேலும் இந்தக் கணவன்கள் இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் “தகவல் அறியும் உரிமை” சட்டத்தின் மூலம் மருமகள்கள் பற்றி தெரிந்துகொள்ளக்கூடாத பல உண்மைகளையும் தெரிந்துகொண்டு வழக்கில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து மருமகள்களுக்கு உதவி செய்யும் வழக்கறிஞர்கள் வழக்கை நடத்த முடியாமல் தலைவலியை ஏற்படுத்தி வருகிறார்கள்.
உதாரணத்திற்கு மனைவி எந்தப் பணியிலும் இல்லை, அதனால் ஒரு பெருந்தொகையை பராமரிப்புத் தொகையாக கேட்கலாம் என்றால் இந்தக் கொடிய கணவன்கள் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் மருமகள் பணிபுரியும் அலுவலகத்தில் மருமகளின் சம்பளப்பட்டியலை பெற்று நீதிமன்றத்திற்கு எடுத்துவருகிறார்கள். இதனால் வழக்கை எளிதாக முடித்து மருமகள்களுக்கு சேரவேண்டிய தொகையை பெற்றுத் தந்து மருமகள்களின் வாழ்வில் இன்ப ஒளி ஏற்ற நினைக்கும் நல்ல உள்ளங்களான வழக்கறிஞர்களுக்கு கணவன்களின் இந்த செயல் ஒரு பின்னடைவாக இருக்கிறது. அதனால் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மருமகள்களின் நலனை காக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தலைமை நீதிபதியிடம் கணவன்கள் செய்யும் அட்டூழியங்களைப் பற்றி புகார் கொடுத்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது.
மருமகள்களின் நலனுக்காக போராடும் இவர்களுடன் இணைந்து மருமகள்களும் தங்களது குரலை எழுப்பவேண்டும். அப்போதுதான் குடும்ப நல நீதிமன்றங்களில் மருமகள்களின் கரம் ஓங்கி நிற்கும்.
பின்வரும் செய்தியை படித்து தவறாமல் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்!!
தலைமை நீதிபதியிடம் புகார்குடும்ப நல நீதிமன்றங்களில் ஆள்பிடிக்கும் என்ஜிஓ அமைப்பு
சென்னை, ஏப்.15.2012 தினகரன்குடும்ப நல நீதிமன்றங்களுக்கு தொடர்ந்து வரும் ஒரு என்ஜிஓ அமைப்பினர், வழக்குக்காக வரும் ஆண்களை சந்தித்து பேசி தங்கள் அமைப்பில் சேர்க்க முயற்சிக்கிறார்கள் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பெண் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரசன்னா தலைமையில், துணைத் தலைவர் நளினி, செயலா ளர் மஞ்சுளாதேவி, நூலகர் வித்யா ஆகியோர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:குடும்ப நல நீதிமன்றங்களுக்கு ஒரு என்ஜிஓ அமைப்பைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து வருகிறார்கள். வழக்குக்காக வரும் ஆண்களை சந்தித்து பேசி, அவர்கள் தங்களின் அமைப்பில் சேர்க்க முயற்சி செய்கிறார்கள். கணவர்களுக்கு எதிராக வழக்கு தொடரும் பெண்கள் தொடர்பான விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத் தின் கீழ் பெற்று, அவற்றை ஆண்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஏற்கனவே, இந்த நபர்கள் குறித்து பவதாரணி, காமாட்சி என்ற 2 பெண் வக்கீல்கள் குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளனர்.சட்ட விரோதமாக இந்த நபர்கள் குடும்ப நல நீதிமன்றங்களுக்குள் வருவதால், சுதந்திரமாக வழக்குகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்