"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


வெளிநாடுவாழ் மருமகள்களே உங்களை NRI கணவன் மிரட்டுகிறாரா?

இந்தியாவில் பெண்ணை பெற்றவர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய நினைத்தால் வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்களை நம்பி தங்களது பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கூடாது. இதனை ஒரு வாழ்க்கை நெறியாகப் பின்பற்றவேண்டும்.

இந்த விதிமுறையை மீறி NRI ஆணுக்கு திருமணம் செய்துவைத்தால் பிறகு வாழ்க்கை முழுதும் அழுதுகொண்டுதான் இருக்கவேண்டும் என்பதை “47 நாட்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே காட்டிவிட்டார்கள் நமது திரைப்பட மேதைகள்.

இந்த விஷயம் தெரியாமல் இன்றும் பல பெற்றோர்கள் தங்களது மகளை NRI -க்கு திருமணம் செய்துவைத்தால் வாழ்வு நன்றாக இருக்கும் என்று நினைத்து தங்களுக்குத் தெரியாமலேயே தங்களது மகளை பாழுங்கிணற்றுக்குள் தள்ளி விடுகிறார்கள்.

பிறகு திருமணமான சில மாதங்களிலேயே அந்த புதுமணப்பெண் தான் கண்ட கனவெல்லாம் நிறைவேறாமல் புதுக்கணவன் தன் சொற்படி நடக்காமல் இருக்கிறானே என்று ஏங்கி பெருத்த ஏமாற்றம் அடையும்போதுதான் NRI கணவன் தனக்கு வரதட்சணைக் கொடுமை மற்றும் ||Sex Torture|| செய்வதை உணர ஆரம்பிக்கிறார்.

கடைசியில் இந்த புது மருமகள் தாங்கள் NRI கணவனுடன் குடும்பம் நடத்தும் அந்த நாடுகளில் இருக்கும் காவல்துறையை நம்பாமல் இந்தியாவிற்கு ஓடிவந்து இந்தியக் காவல்துறையிடம்தான் கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுப்பேன் என்று கண்ணை கசக்குவதைக்கண்டால் காண்பவர் மனம் என்ன பாடுபடும்? இதுபோன்ற துயரமான சூழ்நிலையில் பெண்ணைப் பெற்றவர்களின் மனநிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

இனி இதுபோல வெளிநாடுவாழ் மருமகள்கள் இந்தியாவிற்கு வரும்வரை காத்திருக்க வேண்டாம். அவரவர் இருக்கும் நாடுகளிலேயே இருந்துகொண்டு தங்களது NRI கணவனின் கொட்டத்தை ஒடுக்கி வழிக்குக் கொண்டுவர இந்திய அரசாங்கம் தனது உதவிக் கரத்தை நீங்கள் இருக்கும் நாடுவரை நீட்டியிருக்கிறது.

உங்களது NRI கணவன் கொடுமை செய்தாலோ அல்லது விவாகரத்து செய்ய முயற்சித்தாலோ முதலில் அந்த நாட்டிலேயே இந்திய அரசாங்கம் கொடுக்கும் நிதி உதவியைப் பயன்படுத்தி எளிதாக கணவனை அடக்கிவிடலாம். இந்த நிதி உதவியை நீங்கள் இருக்கும் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். குறைந்தது $2000 - $3000 வரை உங்களுக்கு நிதியுதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதுபற்றி இந்திய தூதரக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை உங்களுக்காகத் தருகிறேன். படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.


SCHEME FOR GIVING LEGAL /FINANCIAL ASSISTANCE TO WOMEN DESERTED BY THEIR OVERSEAS INDIAN SPOUSES

MOIA’s Scheme for giving legal / financial assistance to Indian women deserted by their overseas Indian / foreigner husbands (revised w.e.f 30th November, 2011)

I. Objective:

The objective of the scheme is to provide some financial assistance to needy women in distress who have been deserted by their overseas Indian spouses for obtaining counseling and legal services. The term “Overseas Indian” would include NRIs and foreign citizens of Indian origin. The counseling and legal services would be provided through credible Indian Women’s Organizations/Indian Community Associations and NGOs identified for providing such services and empanelled with the Indian Missions in the USA, the UK, Canada, Australia, New Zealand and the Gulf. The scheme is a welfare measure to support women of Indian origin in distress, through the mobilization of the local Indian community in the endeavor and with some financial assistance from the Government.

II. Scope of and Eligibility for the Scheme:

The scheme would be available to the women who have been deserted by their overseas Indian spouses or are facing divorce proceedings in a foreign country subject to the following conditions:-

    1. The woman is an Indian passport holder.
    2. The marriage of the woman has been solemnized in India.
    3. The woman is deserted within five years of the marriage.
    4. Divorce proceedings are initiated within five years of the marriage by her overseas Indian spouse.
    5. An ex-parte divorce has been obtained by the overseas Indian spouse within 10 years of marriage and a case for maintenance and alimony is to be filed
    6. The scheme would not be available to a woman facing criminal charges or having a criminal case decided against her.
    7. Assistance will be limited to meeting initial cost and incidental charges for documentation and filing of the case by the Indian women’s organization/NGO on the woman’s behalf.
    8. The assistance will be limited to US $1500 per case and will be released to the organizations/NGO concerned to enable it to take steps to assist the woman in documentation and preparatory work for filing the case.
    9. The women’s organization/NGO will make efforts to enlist community advocates to extend further legal assistance/ appearance in court etc on a pro-bono basis.

      (x) The assistance will be limited to US$ 3000 per case for developed countries and US$ 2000 per case for developing countries and will be released to the empanelled legal counsel of the applicant or Indian Community Association / Women’s organization / NGO concerned to enable it to take steps to assist the woman in documentation and preparatory work for filing the case.

      (xi) The Indian Women’s Organizations / Indian Community Associations / NGOs will make efforts to enlist community advocates, preferably women advocates, to extend further legal assistance / appearance in court etc on a pro-bono basis.
      Note: *NGOs would also include local NGOs that are empanelled with the Indian Missions/Posts abroad.

Pattern of Assistance

Under the scheme Indian Missions in the countries concerned would empanel credible Indian Women’s Organizations/ Indian Community Associations/NGOs. The applications for providing legal aid received by the Missions would be examined by an officer designated by the Head of the Mission on case-to-case basis and approved by Head of Mission/Deputy Chief of the Mission.


முதல் கட்டமாக இந்திய அரசு கொடுக்கும் நிதியைப் பயன்படுத்தி நீங்கள் இருக்கும் நாட்டிலேயே கணவனுக்கு பாடம் புகட்ட முயற்சி செய்யுங்கள். அந்தக் கணக்கு தவறும் பட்சத்தில் கொஞ்சமும் கவலையே படாதீர்கள். இருக்கவே இருக்கிறது மருமகள்களின் சொர்க பூமி இந்தியா!

நாகரீகத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய பல நாடுகளை விட இந்தியாவில் தான் மருமகள்களுக்குச் சாதகமான பல சட்டங்கள் இருப்பதாக தேசிய பெண்கள் நல வாரியம் பெருமையுடன் கூறியிருக்கிறது.
Do not be forced into participating in legal action in country of husband’s residence. You can file a case in India and cannot be forced to defend a case filed against you by husband abroad-especially divorce. India has more women-friendly laws than many other countries - National Commission for Woman
உலகத்தில் வேறு நாடுகளில் கிடைக்காத மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் (Daughter-in-law Friendly Laws) இந்தியாவில் மட்டுமே இருப்பதால் இந்தியாவிற்கு வந்தால் பல விதமான சட்டங்கள் (Dowry Prohibition Act, IPC498A, IPC406, IPC502, Domestic Violence Act, Maintenance, etc.,) மூலம் வெளிநாட்டில் வசிக்கும் கணவன் மீதும், இந்தியாவில் வசிக்கும் அவனது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் மீதும் பல வித குற்ற வழக்குகளை இந்திய காவல்துறை மற்றும் நீதித்துறையின் உதவியுடன் எளிதாகவும் இலவசமாகவும் பதிவு செய்து NRI கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் தலையெழுத்தையே நீங்கள் நினைத்தவாறு மாற்றிவிடலாம். மருமகள்களுக்கு எல்லாமே இந்தியாவில் இலவசம்தான்!! இந்த இலவச வழிமுறைகளை எப்படி பயன்படுத்துவது என்று முந்தைய பதிவுகளில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


வாழ்த்துக்கள்!!!


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்