"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


NRI கணவனை விமான நிலையத்தில் இலவசமாக கைது செய்வது எப்படி? - Part 2

இரண்டு வாரங்களுக்கு முன்பு மருமகளின் சொல்லுக்கு கட்டுப்படாத NRI கணவனை இந்திய போலிஸின் துணையோடு இந்திய விமான நிலையத்தில் இலவசமாக கைது செய்வது எப்படி என்று எழுதியிருந்தேன். அதற்கு உதாரணமாக அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய ஒரு கணவனை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கைது செய்த செய்தியையும் எழுதியிருந்தேன் . அதனை படிக்காத மருமகள்கள் இந்த இணைப்பில் சென்று படித்துக் கொள்ளுங்கள்: NRI கணவனை விமான நிலையத்தில் கைது செய்வது எப்படி?

அந்த வரிசையில் இப்போது மருமகளின் சொற்படி நடக்காத மற்றொரு NRI கணவனை “வரதட்சணை வழக்கில் சிக்கவைத்து” தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சர்வதேச குற்றவாளி வரிசையில் சேர்த்து கைது செய்திருக்கிறார்கள் என்பது மருமகள்கள் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டிய செய்தி.

இதுபோன்று மருமகளுக்கு அடங்காத NRI கணவன்களுக்கு எதிராக இந்தியாவில் “வரதட்சணை வழக்கு” பதிவு செய்து காவல்துறை நண்பர்களின் உதவியோடு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அந்த NRI கணவன் இந்தியாவிற்கு வரும்போது விமான நிலையத்தில் கைது செய்வதோடு மருமகள்களின் வேலை முடிந்துவிடாது என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்காது. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக மருமகள்கள் செய்ய வேண்டிய மற்றொரு காரியமும் இருக்கிறது.

இதுபோன்று காவல்துறை நண்பர்களின் இலவச உதவியோடு NRI கணவனை விமான நிலையத்தில் கைதுசெய்யும்போது மருமகள்கள் மறக்காமல் “மீடியா” நண்பர்களின் இலவச சேவையையும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கணவன் கைது சம்பவத்தை உடனடியாக செய்தித்தாள், தொலைக்காட்சி நிருபர்களுக்கு சொல்லிவிட்டால் போதும் மற்ற வேலையை அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்வார்கள்.

இதுபோன்ற “பரபரப்பான” செய்தியை அவர்களுக்கு அளிக்கும்போது “மீடியா” நண்பர்கள் தங்களின் நன்றிக்கடனை மருமகள்களுக்கு செலுத்தத் தவறுவதில்லை. செய்தி வெளியிடும்போது கணவனைப் பற்றி தெள்ளத் தெளிவாக எல்லா விவரங்களையும் எழுதிவிட்டு மருமகளின் பெயர் மற்றும் தகவல்களை இருட்டடிப்பு செய்து மருமகளின் பெயர் வெளியே தெரியாமல் மருமகளின் “கண்ணியத்தை” பாதுகாத்து தங்களது நன்றிக் கடனை மருமகளுக்கு செலுத்திவிடுவார்கள். அதற்கு உதாரணமாக பின்வரும் இன்றைய பரபரப்பான செய்தியை படித்துப் பாருங்கள்.


திரிசூலம்:வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசாரிடம் இருந்து தப்பி, சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்தவர், நாடு திரும்பிய போது விமான நிலையத்தில் சிக்கினார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சோமசுந்தர சுப்ரமணி, 38, இவருக்கும்,
தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், வரதட்சணை கேட்டு, தன்னை கொடுமைப்படுத்தியதாக, சோமசுந்தர சுப்ரமணி மீது அவரது மனைவி, தஞ்சாவூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில், போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சோமசுந்தர சுப்ரமணி, சிங்கப்பூர் சென்று தலைமறைவானார். அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த தஞ்சாவூர் போலீசார், அவர் குறித்த தகவல்களை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சோமசுந்தர சுப்ரமணி நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு, ஏர் இந்தியா விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்திறங்கிய போது, குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்தனர். பின், தஞ்சாவூர் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

அதனால் மருமகள்கள் NRI கணவனை வரதட்சணை வழக்கில் சிக்கவைத்து விமான நிலையத்தில் கைது செய்யும்போது மறக்காமல் “மீடியா” நண்பர்களின் சேவையையும் பயன்படுத்திக் கொண்டால் இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும்.

வாழ்த்துக்கள்!!


3 comments:

  1. Poiyyaana pugaar kodukkum marumagalgalum irukkiraargale.....avargal kodukkum pugaargal uNmai illai endraal NRI kaNavargal thappuvadhu eppadi enbadhaiyum solli irukkaalaam. Ippodhellaam kanavan veettil kodumai anubavikkum manaivigalai vida mani& aval parents dhaan adhigam. Adhaip patri yum ezhudhavum.

    ReplyDelete
  2. "Ippodhellaam kanavan veettil kodumai anubavikkum manaivigalai vida mani& aval parents dhaan adhigam. Adhaip patri yum ezhudhavum"

    You are 100% true. Before girl's parents feel the responsibility for their daughters successful life, Now if the husband and wife has any family issues, rather than solving it as responsible parents now they fuel to burning bush more thinking that they are modern parents, women's liberation .... and all modern words. These protective laws should be used to reduce to extreme domestic violence not just irresponsibly. This will pose danger to ever praised Indian Family system.

    ReplyDelete
  3. கருத்துக்களுக்கு நன்றி!

    உங்கள் சந்தேகத்தை போக்க இந்த பதிவை படித்துப் பாருங்கள்.
    பொய் வழக்குப்போடும் மருமகளை தண்டிப்பது எப்படி?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்