செய்தித்தாளில் வந்துள்ள செய்தி...
குடும்ப பிரச்னையில் குழந்தையுடன் கணவன், மனைவி தற்கொலை
தேனி:குடும்ப பிரச்னையில் குழந்தையுடன் கணவன், மனைவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். தேனி அல்லிநகரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ் (32). இவருக்கும், மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த குருசாமி மகள் முத்துலட்சுமிக்கும்(23) மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களது மகன் கோவர்த்தனன்(2).பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்த ரமேஷ், சில மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை.
இந்நிலையில், முத்துலட்சுமி, தனிக்குடித்தனம் செல்ல விரும்பினார். ரமேஷின் தாய் இந்திராணி(50), இதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் மாமியார், மருமகளிடையே பிரச்னை ஏற்பட்டது.தனிக் குடித்தனம் செல்வது குறித்து, நேற்று காலை 9 மணிக்கு, ரமேஷ் - முத்துலட்சுமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டிற்குள் மகன் கோவர்த்தனனுடன் சென்ற இருவரும், கதவை பூட்டி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர்.தீயில் கருகிய குழந்தை கோவர்த்தனன், சம்பவ இடத்திலேயே பலியானான். படுகாயமடைந்த ரமேஷ், முத்துலட்சுமி ஆகியோர், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர். அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#############################################
இது போல இனி மருமகள்கள் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளத் தேவையில்லை. இது போன்ற பிரச்சனைகளுக்காகவே அரசாங்கம் பல சிறப்புச் சட்டங்களை இயற்றியிருக்கிறது. அவற்றில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A, வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பிடிக்காத மாமியாரை விட்டு கணவரைப் பிரித்து தனிக்குடித்தனம் போகவேண்டுமா, அல்லது பிடிக்காத மாமியாரை வீட்டை விட்டு அனுப்ப வேண்டுமா இது போன்ற பல சிக்கலான குடும்பப் பிரச்சனைகளுக்கு எளிய வழியில் தீர்வு காண இந்த சட்டங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற வழிமுறைகளை அடுத்த பதிவுகளில் காணலாம். இன்னும் பல குடும்பப்பிரச்சனைகளுக்கெல்லாம் சட்டப்பூர்வமாக எளிய வழியில் மருமகள்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இந்திய அரசு இயற்றியுள்ள இந்த சட்டங்களைப் பயன்படுத்தி எளிய தீர்வு காணலாம். இன்னும் சொல்லப்போனால் உங்கள் கணவரை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்குக் கூட இந்த சட்டங்கள் மருமகள்களுக்கு உதவி செய்கின்றன. இந்த விஷயங்கலெல்லாம் எத்தனை மருமகள்களுக்குத் தெரியும்? இப்படி இந்திய சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி எல்லா மருமகள்களுக்கும் இருப்பதில்லை. ஏனென்றால் இவற்றைப் பற்றி விளக்கமாக எடுத்துச்சொல்ல யாரும் முன்வருவதில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
//இது போல இனி மருமகள்கள் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளத் தேவையில்லை. இது போன்ற பிரச்சனைகளுக்காகவே அரசாங்கம் பல சிறப்புச் சட்டங்களை இயற்றியிருக்கிறது. அவற்றில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A, வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பிடிக்காத மாமியாரை விட்டு கணவரைப் பிரித்து தனிக்குடித்தனம் போகவேண்டுமா, அல்லது பிடிக்காத மாமியாரை வீட்டை விட்டு அனுப்ப வேண்டுமா இது போன்ற பல சிக்கலான குடும்பப் பிரச்சனைகளுக்கு எளிய வழியில் தீர்வு காண இந்த சட்டங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற வழிமுறைகளை அடுத்த பதிவுகளில் காணலாம்//
ReplyDeleteஆமாம் கணவனை ஆள்வைத்து அடித்துவிட்டு வீட்டை விட்டு விரட்டிவிட்டான் என்று கதைகட்டலாம்... கணவனில் தாய்கும் அவனின் நண்பருக்கும் கள்ளதொடர்பு என்றும் ஆபாச வக்கிர கதைகளை புணையளாம்.. திருமணத்திற்கு வந்த கணவரின் தம்பி நண்பருடைய தாயரும் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தினார்கள் என்று அவரையும் சிறயைில் அடைக்கலாம்... FIR ல் பெயர் இல்லாத நபர்களையும் சில மாதம் வருடம் கழித்து அவரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தார் என்று புழல் சிறையில் அடைக்கலாம்...
இதுபோல் பல சிறப்பியல்புகள் உள்ளன...
மற்றும் (வெயிட்டான காந்திபடம் போட்ட பேப்பர் வைத்துள்ள) மருமகள் என்றால் மகளிர்(??) காவல் நிலையத்தாருக்கு கணவன் குடும்பத்தினர் மூட்டைபூச்சிபோல்...
நடுஇரவில் மாநிலம் விட்டு மாநிலம் தாண்டி கணவனின் தாயரை முடியை படித்து இழுத்து அடித்து கைது செய்யலாம்... இப்படி பல சிறப்புகள் உள்ளன... கடைசியல் இதுபோல் பாதிக்கப்பட்ட (????????????) மறுமகள் பிரியாணிக்கும் குவாட்டருக்கும் குலைக்கும் வெள்ளைவேட்டி நாய்களை வைத்து சேர்ந்து வாழச்சொல்லி(??) கட்ட பஞ்சாயத்து நடத்தலாம்...
மருமகளே....
ReplyDeleteஎங்க ஊர் பக்கம் ஒரு சொலவாடை உண்டு, "அடி மட்டய பாத்து மே மட்ட பழிச்சதாம்....".
நீ இப்படியே எப்பவும் மருமகளாகவே இருக்க மாட்ட, உனக்கும் பிள்ளைகள் வளரும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகும். உனக்கும் மருமகள் வருவா(உனக்கு ஆண் பிள்ளை இருந்தால்). நீ இன்னைக்கு விதைக்கிற விணை மரமாகி, காயாகி, பழமாகி உனக்கு வரும் மருமகள் கையில் வரும். நீ நல்ல நோக்கத்தில் இதை செய்த்தால் நல்ல பழமாக வரும், இல்லாவிட்டால் நீ என்ன நோக்கத்தில் செய்கிறியோ அதே வடிவில் வரும். இது சாபமோ வசவோ இல்லை. இதுதான் இயற்கையின் நியதி. உனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், அந்த கடவுள் படைத்த காலம் நிச்சயம் பதில் சொல்லும். நீ ஆத்திகவாதியாக இருந்தால் 'ஒவ்வொறு வினைக்கும் எதிர் வினை உண்டு(லாஜிக்/சயன்ஸ்)'.
யார் கண்டது அந்த நேரத்தில் நீ 'மாமியார்' என்ற் ப்ளாக் ஆரம்பித்து, மருமகள் குடும்பத்தை எப்படி உள்ளே தள்ளுவது என்று எழுதினாலும் எழுதலாம். காலம்தான் பதில் சொல்லனும்.