கடந்த சில ஆண்டுகளாக போலிஸ் குடும்பத்தில் இளம் மருமகளாகத்
துடித்துக்கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிற்கு திருமணம் நடப்பதற்கு முன்பாகவே
வரதட்சணைக் கொடுமை ஆரம்பித்திருந்தது. அதனை எதிர்த்து போராடி காதலனையும்,
அவனது குடும்பத்தையும் சிறைக்கு அனுப்ப அவர் பட்ட பாடு சொல்லி மாளாது.
கடைசியில் ஒரு வழியாக காவல்துறை பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து
IPS காதலனையும் அவனது குடும்பத்தையும் ஒரு பெரிய குற்ற வழக்குப்
பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்.
இதை இப்படியே விட்டுவிடவும் கூடாது. கடைசிவரை என்ன நடக்கிறது என்று எல்லா மருமகள்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும். வழக்கை பதிவு செய்துவிட்டோம் என்று கணக்குக் காட்டிவிட்டு பிறகு புலன் விசாரணை செய்கிறோம் என்ற பெயரில் வழக்கை மாற்றிவிடுவார்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று கடந்த 2012ல் ஒரு பதிவு எழுதியிருந்தேன். 2011ம் ஆண்டிலிருந்து போரடிய இந்த இளம்பெண்ணிற்கு நான்கு ஆண்டுகள் கடந்து கடைசியில் இப்போதுதான் அந்த அபலைப் பெண்ணிற்காக நீதியின் கண்கள் திறந்திருக்கின்றன......
காதலித்த பெண்ணை ஏமாற்றிய வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் புழல் சிறையில் அடைப்பு
Read more at: http://tamil.oneindia.in/news/ tamilnadu/ips-officer-varun- kumar-surrenders-199446.html
இதை இப்படியே விட்டுவிடவும் கூடாது. கடைசிவரை என்ன நடக்கிறது என்று எல்லா மருமகள்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும். வழக்கை பதிவு செய்துவிட்டோம் என்று கணக்குக் காட்டிவிட்டு பிறகு புலன் விசாரணை செய்கிறோம் என்ற பெயரில் வழக்கை மாற்றிவிடுவார்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று கடந்த 2012ல் ஒரு பதிவு எழுதியிருந்தேன். 2011ம் ஆண்டிலிருந்து போரடிய இந்த இளம்பெண்ணிற்கு நான்கு ஆண்டுகள் கடந்து கடைசியில் இப்போதுதான் அந்த அபலைப் பெண்ணிற்காக நீதியின் கண்கள் திறந்திருக்கின்றன......
காதலித்த பெண்ணை ஏமாற்றிய வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் புழல் சிறையில் அடைப்பு
Read more at: http://tamil.oneindia.in/news/
சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்த போது காதலித்த பெண்ணை பின்னர் ஏமாற்றியதாக கிளம்பிய வழக்கில் தற்போது ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் சரணடைந்துள்ளார். வளசரவாக்கத்தைச் சேர்ந்த பிரியதர்சினிக்கும், வருண்குமாருக்கும் காதல் ஏற்பட்டது. யுபிஎஸ்சி தேர்வு முடிவில் வருண்குமார் ஐ.பி.எஸ் பதவிக்குத் தேர்வானார். அவருக்காக பிரியதர்சினி தனது ஐ.ஏ.எஸ் கனவை உதறி விட்டு வருண்குமாருக்கு உதவி செய்தார்.
இரு வீட்டார் சம்மதத்துடன் வருண்குமார் - பிரியதர்சினி நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் வருண்குமார் திடீரென பிரியதர்சினி குடும்பத்தாரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் திருமணம் நடைபெறாமல் நின்று போனது. இதுபற்றி கடந்த ஆண்டு பிரியதர்சினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வருண்குமார் மீது புகார் செய்தார். அந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் கீழ் செயல்படும் வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். வருண்குமாரை நேரில் அழைத்தும் விசாரணை நடந்தது. அதன்பிறகு கோர்ட் உத்தரவின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வருண்குமார் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை வருண்குமார் நாடினார். அங்கும் அந்த மனு தள்ளுபடியானது.
இதையடுத்து பிரியதர்சினி, மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து வருண்குமாரை கைது செய்ய வலியுறுத்தினார். இந்த நிலையில் வருண்குமார் இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் திடீரென ஆஜராகி சரணடைந்தார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னர் வருண்குமார் ஜாமீன் கேட்டு ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற்றது. இவ்விசாரணையின் முடிவில் அவரை வரும் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார்.இதை அடுத்து வருண்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Read more at: http://tamil.oneindia.in/news/
நீதி என்றால் தாமதம் தானோ...? ம்...
ReplyDelete