"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


கையில் தாலியுடனும், மனதில் ஆசையுடனும் திருமணத்திற்கு காத்திருக்கும் இந்திய இளைஞர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்

இதுவரை மருமகள்களுக்கு மட்டுமே ஆலோசனை வழங்கிவந்த நமது பதிவுத்தளம் இன்று இந்தியாவில் திருமணம் செய்ய மனதில் ஆசைகளை சுமந்து நிற்கும் ஆண்களுக்கு ஒரு அறிவுரைச் செய்தியை வழங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறது.  ஏனென்றால் இந்த அறிவுரை மருமகள்களின் எதிர்கால நலனுடன் தொடர்புடையதாக இருப்பதால் இதனை சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் திருமணம் செய்து சுகமாக மருமகளின் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்தலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு கையில் தாலியுடன் திரியும் ஆண்கள் இனி முதலில் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்து வங்கியில் குறிப்பிட்ட அளவிற்கு சேமிப்பு வைத்துக்கொண்டு பிறகுதான் திருமணம் பற்றியே யோசிக்க வேண்டும். 

ஆண் என்பவன் மனைவி மற்றும் குடும்பத்தை எல்லா சூழ்நிலையிலும் பாதுகாக்கவேண்டிய கடைப்பட்டவனாவான் என்று CrPC 125 என்ற சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்தக் கடமையிலிருந்து தவறும் பட்சத்தில் அவனுக்கு தண்டனை வழங்கப்படும். இது பற்றி முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன்.  
========================================================
இந்த பகுதி மருமகள்களுக்கு - இதோ அந்த CrPC 125 உங்களது நோட்டுப்புத்தகத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

125. Order for maintenance of wives, children and parents.

(1) If any person leaving sufficient means neglects or refuses to maintain-

(a) His wife, unable to maintain herself, (கவனியுங்கள் முதல் உரிமை மனைவிக்குத்தான்) or

(b) His legitimate or illegitimate minor child, whether married or not, unable to maintain itself, or

(c) His legitimate or illegitimate child (not being a married daughter) who has attained majority, where such child is, by reason of any physical or mental abnormality or injury unable to maintain itself, or

(d) His father or mother, unable to maintain himself or herself.
 மேலுள்ள வாக்கியங்களில் கவனித்தீர்களா? எல்லா வாக்கியமும் ஆண் அல்லது கணவன் என்று பொருள்படும்படி "HIS" என்று தான் ஆரம்பித்திருக்கிறது. அதனால் உங்களது கணவர் உங்களை அனைத்து விதத்திலும் பராமரிக்க சட்டப்படி கடமைப்பட்டவராவார்.

என்றைக்குத் திருமணத்தின்போது இந்த முட்டாள்கள் தாலியை உங்களது கழுத்தில் கட்டுகிறார்களோ அன்றே CrPC 125 என்னும் இரும்புச் சங்கிலியை தங்களது கையில் கட்டிக்கொள்கிறார்கள். தாலியில் போடப்படும் முடிச்சு அவன் கையில் தானே இரும்புச் சங்கிலியால் போட்டுக்கொள்ளும் முடிச்சாகும். முட்டாள் கணவர்கள் இதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உணரமாட்டார்கள்.
========================================================
அதனால் இந்தியாவில் திருமணம் செய்ய கனவு காணும் ஆணுக்கு பணம், பதவி என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்பதை பின்வரும் செய்தி மீண்டும் ஒருமுறை இந்திய ஆண்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது. 


தினமலர் மே 22,2013

மும்பை: சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான், கணவர்களின் கடமை. அதைச் செய்யத் தவறிய கணவன், தன் மனைவிக்கு பராமரிப்பு செலவுக்கான தொகையை கொடுத்து தான் ஆக வேண்டும்,'' என, மும்பை ஐகோர்ட் நீதிபதி, எம்.எல்.தகிலியானி உத்தரவிட்டுள்ளார்.

மகேஷ் என்பவரின் மனைவி சசி. மும்பையில் வசிக்கும் இருவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்கின்றனர். கடந்த, 2012ம் ஆண்டில், தனக்கு மாதம், 1,500 ரூபாயும், தன், 1 வயது குழந்தைக்கு, மாதம் தோறும், 1,000 ரூபாயும், பராமரிப்பு செலவாக வழங்க, கணவருக்கு உத்தரவிட வேண்டும் என, குடும்ப நல கோர்ட்டில், சசி வழக்கு தொடர்ந்தார்.அதைக் கேட்ட கோர்ட், மாதம் தோறும், 1,500 ரூபாய் கொடுக்க, மகேஷுக்கு உத்தரவிட்டது.

"குழந்தை சிறு குழந்தையாக இருப்பதால், அதிகம் சாப்பிடாது. எனவே, அதற்காக தனி பராமரிப்பு செலவு கொடுக்கத் தேவையில்லை' என, குடும்ப நல கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.
 
இதை எதிர்த்து, அந்தப் பெண், மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு, பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ள நீதிபதி, எம்.எல்.தகிலியானி முன், விசாரணைக்கு வந்தது."மகேஷ் வேலையில்லாமல் இருப்பதால், மாதம் தோறும், 1,500 ரூபாய் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார். இதில், கூடுதலாக, 1,000 ரூபாய் கேட்பது நியாயமல்ல' என, அவரின் வழக்கறிஞர் வாதிட்டார்.

நீதிபதி தகிலியானி, தன் உத்தரவில், நேற்று கூறியதாவது: சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான் கணவரின் கடமை. சம்பாதிக்காமல் இருப்பதும், வேலையில்லாமல் இருப்பதும், மனைவியின் குற்றமல்ல; கணவனின் குற்றம். இதற்காக, தகுந்த வேலை பார்ப்பது, கணவனின் பொறுப்பு. அதை, மகேஷ் செய்யத் தவறிவிட்டார்.எனவே, குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டபடி, சசிக்கு, மாதம், 1,500 ரூபாயும், அவர்களின் குழந்தைக்கு, மாதம், 1,000 ரூபாயும் பராமரிப்பு செலவாக கொடுக்க வேண்டும். இந்தத் தொகையை, 2012ம் ஆண்டிலிருந்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி தன் உத்தரவில் கூறியிருந்தார்.



1 comment:

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்