மருமகளுக்கு பிடிக்காத கணவனையும், அவனது குடும்பத்தையும் ஏதாவது செய்ய வேண்டும்போல ஒரு உள்ளுணர்வு பல மருமகள்களுக்கும் உள்மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும். என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும்போது மருமகளின் தந்தை, சகோதரன் போன்றவர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்தோ அல்லது செய்தித்தாள், தொலைக் காட்சி போன்றவற்றில் பார்த்து தெரிந்துகொண்டு ஒரு நல்ல வழிமுறையை மருமகளுக்கு ஆலோசனையாக வழங்குவார்கள். அது என்ன என்று கேட்கிறீர்களா?
அதுதான் இந்திய அரசாங்கம் மருமகள்களுக்குக் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டம். இதன் பயன்பாடுகள் பற்றி இந்த ஒரு பதிவில் எழுதி முடிக்க முடியாது. இந்த சட்டங்கள் மூலம் மருமகள்கள் அளவிடற்கரிய பலன்களை அடையலாம். உதாரணத்திற்கு தனிக்குடித்தனம் வராத கணவனையும், அதற்குத் தடையாக இருக்கும் மாமியாரையும் பெட்டிப் பாம்புபோல அடக்கிவிடலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்ள பின்வரும் முந்தைய பதிவுகளை படித்துப் பாருங்கள்.

எல்லாம் சரி இப்போது கணவன் வெளிநாட்டில் இருக்கிறான். மருமகள் ஏதோ காரணத்தால் இந்தியாவிற்கு வந்துவிட்டால் அந்தக் கணவனுக்கு எப்படி பாடம் புகட்ட முடியும்? என்று பல மருமகள்களுக்கும் சந்தேகம் இருக்கும். கவலையே படாதீர்கள். மருமகளுக்கு பிடிக்காத கணவன் உலகத்தில் எந்த மூலையிலிருந்தாலும் பிடித்து பாடம் புகட்டக் காத்திருக்கிறது இந்திய காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை.
மருமகள் செய்யவேண்டியதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் கணவன் வரதட்சணைக் கொடுமை செய்தான் என்று ஒரு எளிய புகாரை பதிவு செய்யவேண்டும். பிறகு காவல்துறையினரிடம் சொல்லி கணவன் வெளிநாட்டில் இருப்பதால் மத்திய புலனாய்வுத் துறையை பயன்படுத்தி அவனை தேடப்படும் சர்வதேச குற்றவாளி என்று பிரகடனம் (Red Corner Notice) செய்துவிடலாம்.
இதற்கு நடுவே மற்றொரு சிறிய வேலை இருக்கிறது. நமது காவல்துறை நண்பர்களை பயன்படுத்தி கணவன் மீது பதிவு செய்யப்பட்ட புகாரை (FIR) பயன்பத்தி இந்தியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்கள், தரைவழி எல்லைகள் இங்கெல்லாம் உள்ள இந்திய குடியேற்ற அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பிவைக்கலாம். இதனை தேடப்படும் குற்றவாளி சுற்றறிக்கை (Look Out Circular) என்று அழைப்பார்கள். இந்தியாவிலிருந்து தப்பித்துவிட்ட கொடிய குற்றவாளி எப்போதாவது இந்திய எல்லைக்குள் நுழையும்போது குடியேற்ற அதிகாரிகள் மூலம் குற்றவாளியை கைது செய்ய காவல்துறை இந்த வழிமுறையைப் பயன்படுத்துவார்கள்.
இப்போது இதே வழிமுறையைப் பயன்படுத்தி வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு தெரியாமல் அவன் மீது இந்தியாவில் வரதட்சணை வழக்கு பதிவு செய்து அவனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, வழக்கிலிருந்து தப்பித்து வெளிநாட்டில் ஒளிந்துகொண்டிருப்பதாக சித்தரித்து அனைத்து விமானநிலையங்களுக்கும் அறிவிப்பு செய்துவிட்டால் போதும். இங்கு நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம் என்று தெரியாமல் கணவன் இந்தியாவிற்கு வரும்போது விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் அவனை பிடித்து நாட்டைவிட்டு தப்பிச் சென்ற தீவிரவாதி போல கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
இந்தக் காட்சியை கண்ணாறக்கண்டு களிக்க காவல்துறை நண்பர்களிடம் சொல்லிவைத்திருந்தால் போதும் கணவன் விமான நிலையத்தில் பிடிபட்டதும் உங்களுக்கு தொலைபேசியில் தகவல் தருவார்கள். உடனடியாக நீங்கள் உங்களது செய்தித்தாள், தொலைக்காட்சி மீடியா நண்பருடன் விமான நிலையத்திற்கு சென்று கணவனை படம் பிடித்து வரதட்சணை வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த கணவன் விமான நிலையத்தில் பிடிபட்டான் என்று செய்தி வெளியிட்டு விமான நிலையத்திலேயே தீபாவளியை கொண்டாடிவிடலாம். அதுபோல் ஒரு மருமகள் கணவனை விமானநிலையத்தில் கைது செய்த செய்தியை கீழே கொடுத்திருக்கிறேன். படித்து கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
கணவனுக்கெதிராக Look Out Circular, Red Corner Notice போன்றவறை ஒரு எளிய வரதட்சணைப் புகார் மூலம் எப்படி தயார் செய்வது என்ற தகவல்கள் கீழ்கண்ட இணைப்புகளில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

- வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படி?
- NRI கணவனை “கட்டுக்குள்” வைப்பது எப்படி? - இளம் மருமகளுக்கு மட்டும்
- NRI மாப்பிள்ளையா? வேண்டவே வேண்டாம்
- NRI கணவனுக்கு “கட்டம் கட்டுவது” எப்படி?
- NRI கணவனை விமான நிலையத்தில் கைது செய்வது எப்படி?
- NRI-கணவன் மீது இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுக்கப்போகிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்
வாழ்த்துக்கள்!!
திங்கட்கிழமை,
அக்டோபர் 29, 2012
தாம்பரம், அக். 29-
மேற்கு
அண்ணாநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் மீது
கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி வரதட்சணை
கொடுமை புகார் அளித்து இருந்தார்.
இதுதொடர்பாக
விஸ்வநாதனிடம் போலீசார் விசாரிக்க சென்றபோது தலைமறைவாகி விட்டார். அவர்
ஜெர்மனி சென்று இருப்பது தெரிந்தது. இந்த நிலையில் நேற்று இரவு ஜெர்மனியில்
இருந்து வந்த விமான பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது
வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசாரல் தேடப்பட்ட விஸ்வநாதன் இருப்பது
தெரிந்தது. அவரை கைது செய்து கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.