"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


இந்தியாவில் இருக்கும் மருமகள் வெளிநாட்டில் வசிக்கும் NRI-கணவனிடம் பணம் பெறுவது எப்படி?

இந்திய மருமகள்கள் பலவித வண்ணக் கனவுகளோடு வெளிநாடு வாழ் இந்தியரை திருமணம் செய்து கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் அயல்நாட்டில் இந்திய மருமகள்களுக்கு காத்திருப்பதோ கணவனும் அவனது குடும்பமும் செய்யும் வரதட்சணைக் கொடுமை மற்றும் பாலியல் கொடுமை!

வரதட்சணைக் கொடுமையோடு மட்டுமல்லாமல் கணவனுக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பும் இருக்கும். இதற்கிடையே போராடி வாழ்க்கையை நடத்தலாம் என்று பல மருமகள்கள் மன உறுதியுடன் இருந்தாலும் சில சமயங்களில் கணவனும் அவனது குடும்பமும் செய்யும் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போய்விடும். உதாரணத்திற்கு தொலைபேசி இணைப்பை துண்டிப்பது, உணவு கொடுக்காமல் துன்புறுத்துவது, வீட்டில் வைத்து பூட்டி வைப்பது, குடிக்க தண்ணீர் கொடுக்க மறுப்பது, உடுக்கும் உடையை ஒளித்துவைத்து மருமகளை பாலியல் கொடுமை செய்வது இப்படி பல கொடுமைகள் செய்கிறார்கள் என்று பல மருமகள்கள் தங்கள் புகாரில் எழுதியிருக்கிறார்கள்.

இதுபோன்ற காரணங்களைக் கூறி மருமகள்கள் இந்தியாவிற்கு வந்து கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தார் மீதும் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுப்பது வழக்கம். இதை நீங்கள் பலமுறை செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள்.

மருமகளின் “வெளிநாட்டு வண்ணக் கனவுகளை” சிதைத்ததற்கு வரதட்சணைக் கொடுமை வழக்கு கொடுத்தபிறகு மருமகள்கள் இந்தியாவில் தங்களது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க திட்டம் தீட்டுவது வழக்கம். அதுபோன்ற சமயத்தில் “கைச்செலவிற்கு” பணம் தேவைப்படும் அல்லவா?

பணத்தை நினைத்து மருமகள்கள் கவலையேபடத் தேவையில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மருமகள்களுக்கு கைகொடுத்து உதவக் காத்திருக்கிறது இந்திய சட்டங்கள். இந்திய சட்டங்கள் மூலம் கணவனிடம் ஒவ்வொரு மாதமும் தவறாமல் பணம் கிடைக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம். பணம் கொடுக்க கணவன் இந்தியாவில் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. வெளிநாட்டில் இருந்தாலும் இந்திய நீதிமன்றத்தின் மூலம் பணம் கிடைக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று பின்வரும் செய்தியில் மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.


டெல்லி: மனைவியிடம் வரதட்சனை கேட்டு கொமைப்படுத்திய கனடா வாழ் இந்தியரை, மாதந்தோறும் ரூ.33,000 ஜீவானம்சம் அளிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் பெற்றோருடன் வசித்து வருபவர் இந்தியர் புனித். கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தனது மனைவியை கனடாவிற்கு அழைத்து சென்ற புனித், அவரை அதிக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,

கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி புனித் உடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது புனித் வீட்டார் கேட்ட வரதட்சனை முழுமையாக அளிக்கப்பட்டது. திருமணம் முடிந்த 2 வாரங்களில் புனித் மீண்டும் கனடாவிற்கு சென்றுவி்ட்டார்.

அதன்பிறகு 5 மாதங்களுக்கு பிறகு, நான் கனடா செல்ல விசா அனுப்பினார். நான் கனடாவிற்கு சென்ற உடன் புனித் மற்றும் அவரது உறவினர்கள் என்னை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினர். புனித் வீட்டார் என்னை அடித்து உதைத்து மிரட்டல் விடுத்தனர். மேலும் புனித் என்னை தனது மனைவியாக ஏற்று கொள்ளாமல், கனடாவை சேர்ந்த ஒரு பெண் உடன் தகாத உறவு கொண்டிருந்தார்.

கொடுமை தாங்க முடியாமல் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டேன். தற்போது பெற்றோருடன் வசித்து வரும் எனக்கு கணவர் புனித் எந்த உதவியும் அளிக்க மறுக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றச்சாட்டப்பட்ட புனித் அரோரா, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நாளை கணக்கில் கொண்டு, தனது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.33,000 வீதம் ஜீவானம்சம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


இந்த செய்தியை படிக்கும்போது “நாகரீகத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய பல நாடுகளை விட இந்தியாவில் தான் மருமகள்களுக்குச் சாதகமான பல சட்டங்கள் இருப்பதாகவும், வெளிநாடு வாழ் மருமகள்கள் தங்களது தேவையை பூர்த்தி செய்துகொள்ளவேண்டுமென்றால் இந்தியாவிற்கு வந்து கணவன் மீது வழக்கு தொடுத்தால் நினைத்ததை சாதிக்கலாம்” என்று நமது தேசிய பெண்கள் நல வாரியம் பெருமையுடன் கூறியிருப்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்று உங்களுக்கே தெரியும்.
"Do not be forced into participating in legal action in country of husband’s residence. You can file a case in India and cannot be forced to defend a case filed against you by husband abroad-especially divorce. India has more women-friendly laws than many other countries." Report on “Problems Relating to NRI Marriages” by National Commission for Women

செய்தியை நன்றாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!!


2 comments:

  1. கணவன் வீட்டாரின் மீது கொடுக்கப்படும் பெரும்பாலான புகார்கள் போலியானவை. இப்படி ஒரு ஒருதலைப்பட்சமான சட்டத்தினை கையில் எடுத்துக்கொண்டு, பெண்கள் செய்யும் அக்கிரமங்கள் தான் இவைகள். சட்டம் சரி சமமாக இருக்க வேண்டும். இன்றைய சூழலில் நல்ல குடும்பத்தைக் சீரழித்து பிரித்து கொதறுவது தான் மருமகள்களின் முக்கிய வேலையாக இருக்கிறது.

    இப்படிப்பட்ட கொடூர சட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. //கணவன் வீட்டாரின் மீது கொடுக்கப்படும் பெரும்பாலான புகார்கள் போலியானவை.//

      உங்களின் கருத்து முற்றிலும் தவறானது. பொய் வழக்குப்போடும் மருமகளை தண்டிப்பது எப்படி? என்ற பதிவை படித்துவிட்டு உங்களது கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

      Delete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்