"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


கணவனை சிறையிலடைக்க இளம் மருமகள்களுக்கு கைகொடுக்கும் நீதிமன்றம்

கணவனைப் பிடிக்காமல் போவதற்கு மருமகள்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அது என்னவென்று தெரிந்துகொண்டு மருமகளின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது கணவனின் கடமை என்று பல கணவன்களுக்கு தெரிவதில்லை. இதுபோன்ற சமயத்தில் புரியாததுபோல நடிக்கும் கணவன்களை அடக்க உதவுவதுதான் வரதட்சணை சட்டங்கள்.

முன்பெல்லாம் கணவனையும் அவனது குடும்பத்தையும் அடக்க காவல்துறையை பயன்படுத்தி வந்த மருமகள்களுக்கு இப்போது நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கணவன் மீது வரதட்சணை புகார் கொடுத்தால் சில சமயங்களில் காவல்துறை கணவனையும் அவனது குடும்பத்தையும் கைது செய்ய மறுத்து மருமகளுக்கு புத்திசொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். இது தேவையா?

இதுபோன்ற சமயத்தில் மருமகள்கள் சற்றும் மனம் தளராமல் உயர்நீதிமன்றத்தை அணுகி காவல்துறை மீதே புகார் கொடுக்கலாம். கணவன் மீது வரதட்சணை புகார் கொடுத்தால் அதை பதிவு செய்யாமல் இழுத்தடிக்கிறார்கள் என்று உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு கொடுத்தால் போதும் காவல்துறை உடனடியாக அலறி அடித்துக்கொண்டு நமக்கேன் வம்பு என்று கணவைனை கைது செய்து மருமகளின் மனதை குளிர வைத்துவிடுவார்கள். அதுபோன்ற ஒரு வழிமுறையை ஒரு இளம் மருமகள் எப்படி பக்குவமாக கையாண்டிருகிறார் என்று பின்வரும் செய்தியை படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!!

வரதட்சணை கொடுமை: இன்ஜினியர் கைது
ஏப்ரல் 27,2012 தினமலர்

சென்னை: வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக, மென்பொருள் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா சாலையை சேர்ந்தவர் அனிதா,25. பெங்களூரை சேர்ந்த கார்த்திக்,27, மென்பொருள் இன்ஜினியர். இவர்களுக்கு, கடந்த நவம்பரில் தான் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக, சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே, வரதட்சனை கேட்டு கார்த்திக் கொடுமைபடுத்தியதாக, அண்ணா சாலை காவல் நிலையத்தில், அனிதா புகார் கொடுத்தார்.

இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய மகளிர் போலீசார், சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறி அனுப்பிவைத்தனார். இந்நிலையில், தான் அளித்த புகார் மீது அண்ணா சாலை போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படிகோரி, உயர் நீதிமன்றத்தில் அனிதா தரப்பினர் மனு செய்தனர். நீதிமன்ற உத்தரவையடுத்து, வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய வழக்கில், கார்த்திக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்