இவ்வளவு சட்டங்கள் இருக்கும்போதே பல மருமகள்கள் கணவனாலும், அவனது குடும்பத்தாலும் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் அந்தத் தலைவி. அதனால் மருமகள்கள் தங்களது வெற்றிக்கொடியை மாமியார் வீட்டில் நிலைநாட்டி தங்களது அதிகாரத்தின் கீழ் கணவனையும் அவனது குடும்பத்தையும் கொண்டுவந்தால்தான் இதற்கு ஒரு விடிவுகாலம் வரும் என்று நான் கருதுகிறேன்.
அதனால் மருமகள்கள் அனைவரும் ஒன்று திரண்டு மருமகள் பாதுகாப்பு சட்டங்களையும், மருமகள் பாதுகாப்பு சங்கங்களையும் ஆதரித்து இந்திய மருமகள்களின் கரங்களை வலுப்படுத்துவோம் என்று சபதம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வரதட்சணை தடுப்பு சட்டத்தை நீக்கினால் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கும்
தினமலர் நவம்பர் 11,2010
மதுரை : "" வரதட்சணை தடுப்பு சட்டத்தைநீக்கினால், பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கும்,'' என, மதுரை ஏக்தா அமை ஒபின் ஆய்வாளர் பவளம்
தெரிவித்தார்.மதுரை ஏக்தா பெண்கள் ஆதார அமைப்பின் 20வது ஆண்டுவிழா நடந்தது. ஏக்தா இயக்குனர் பிம்லா, முன்னாள் தலைவி ரோகிணிதேவி, உறுப்பினர்கள் ஜேசுரத்தினம், தேவமனோகரன், காந்திமதி பங்கேற்றனர். மதுரை காமராஜ் பல்கலை இதழியல் துறைத் தலைவி சாந்தா துவக்கி வைத்தார். பெண் கொடுமையை சித்தரிக்கும் போஸ்டர்களை, மதுரை லேடிடோக் கல்லூரி முதல்வர் மெர்ஸி புஷ்பலதா வெளியிட்டார்.
இ.பி.கோ., 498 சட்டம் குறித்த மலரை வெளியிட்டு, பவளம் பேசியதாவது :கடந்த 1961 ல் வரதட்சணை தடுப்பு சட்டம் கொண்டுவரப் பட்டது. ஆனால் 1970 க்கு பிறகு, வரதட்சணை சாவுகள் அதிகமானது. எனவே 1983 ல், இ.பி.கோ., 498 (ஏ) சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆரம்பம்முதலே சமுதாயத்தில் எதிர்ப்பு இருந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன், அவரது குடும்பத்தினர் மூலம் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டால், இச்சட்டத்தின் உதவியை நாடலாம். ஆனால் இச்சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கணவரை மிரட்டி பணம் பறிப்பதற்கும், குடும்ப உறுப்பினர்களை மிரட்டுவதற்கும் இச்சட்டத்தை பெண்கள் பயன்படுத்துவதால், இதை நீக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றனர். ஆண், பெண் பாகுபாடில்லாமல், பொதுவான சட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் 1999 முதல் 2008 வரை, மொத்தம் 2091 வரதட்சணை சாவுகள் நிகழ்ந்துள்ளன. வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2146 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கணவன் மற்றும் கணவன் வீட்டாரால் கொடுமைப்படுத்தப்பட்டதாக (இ.பி.கோ.,498) 12 ஆயிரத்து 752 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இச்சட்டத்தை நீக்கினால், பெண்களுக்கு எதிரான வன்முறைகள்இன்னும் அதிகரிக்கும், என்றார்.
மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் என்பவை கைகேயிக்கு கொடுக்கப்பட்ட வரங்கள் போன்றவை அவற்றை எங்கு எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று மருமகள் மட்டுமே முடிவு செய்யமுடியும் (அதைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த பதிவினைப் படியுங்கள்: வரதட்சணை சட்டங்கள் மூலம் மனைவி கணவனை மிரட்டினால் தவறில்லை). மற்றவர்கள் இதில் எந்தக் குறையும் சொல்ல உரிமையற்றவர்களாவார்கள். அதனால் தற்போது இருக்கின்ற மருமகள் பாதுகாப்புச் சட்டங்களைப் போற்றிப் பாதுகாப்போம்! புதிய சட்டங்களை வரவேற்போம்!!
வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்