"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படி

பல மருமகள்கள் பலவித கனவுகளோடு ஒரு “கணக்குப்போட்டு” தங்களது ஏக்கக் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நினைத்துவெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளையாகத் தேர்வு செய்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏக்கக் கனவுகளோடு வெளிநாட்டிற்கு வாழப்போகும் பெண்ணிற்கு ஏற்படும் ஏமாற்றம்தான் உலகத்திலேயே மிகப் பெரிய பாவம் . அதற்குப் பிராயச்சித்தம்தான் இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் வரதட்சணை சட்டங்கள். இதுபோன்ற மருமகள்களின் ஏக்கக்கனவுகள் ஏமாற்றமடைவதற்குக் காரணமான கணவன் மீது இந்தியாவில் வந்து வரதட்சணை வழக்குப் போடுவது தவறு கிடையாது.

அப்படி வழக்குப் போடும்போது “குடும்பம்” என்ற இந்திய மரபுப்படி இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்பத்தார் அனைவரையும் சேர்த்து புகாரில் எழுதிவிட்டால் போலிஸ் உடனடியாக மாமியார் குடும்பத்தாரை எந்தக்கேள்வியும் கேட்காமல் பிடித்து சிறையில் தள்ளிவிடுவார்கள் என்ற உண்மை பல மருமகள்களுக்கும் தெரியும். அப்படித் தெரியாத மருமகள்கள் முந்தைய பதிவுகளை படித்து தெரிந்துகொள்ளுங்கள். இது வழக்கமாக நடக்கும் வரதட்சணை வழக்கு நடைமுறை. ஆனால் வெளிநாட்டில் இருக்கும் கணவனை எப்படி அரசாங்க உதவியுடன் தன்வழிக்குக் கொண்டுவருவது என்று பல மருமகள்களுக்குத் தெரியாது. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மருமகள் வரதட்சணைப் புகார் கொடுத்தவுடன் இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்பத்தை உள்நாட்டு போலிஸ் “கவனித்துக்கொள்ளும்”. வெளிநாட்டில் இருக்கும் கணவனை “கவனிக்க” சர்வதேச போலிஸ் (InterPol) மருமகள்களுக்கு உதவி செய்கிறது. காவல்துறை எங்கிருந்தாலும் அது மருமகள்களுக்கு அரவணைப்பாகத்தான் செயல்படும். இது உலக நியதி. இப்படி சர்வதேச போலிஸின் உதவியுடன் உங்கள் கணவனை வழிக்குகொண்டுவர நம் நாட்டு சி.பி.ஐ. மருமகள்களுக்கு உதவி செய்ய வழி மேல் விழிவைத்துக் காத்துக்கிடக்கிறது.

ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட போபால் விஷவாயு வழக்கில் தொடர்புடையவர், இந்திய மக்களின் பலகோடி ரூபாயில் நடைபெற்ற பீரங்கி ஊழல் வழக்கில் தொடர்புடையவர் போன்றவர்களை தப்பவிட்டாலும் இந்தியமருமகள்களின் மாப்பிள்ளைகளை தப்பவிடமாட்டார்கள் நம்ம ஊர் அதிகாரிகள். மருமகள் மீது அவ்வளவு பாசமுடையவர்கள் நம்ம ஊர் அதிகாரிகளும், தலைவர்களும். இவர்களின் பாசத்தை மருமகள்கள் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு வெளிநாட்டில் இருக்கும் கணவனை சட்டையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்துவிடலாம்.



NEW DELHI: CBI on Saturday filed an application before a Delhi court seeking closure of the Bofors pay off case against Italian businessman Ottavio Quattrocchi.

In the plea filed before Chief Metropolitan Magistrate Kaveri Baweja, the probe agency said all efforts to extradite Quattrocchi for facing the trial here has failed.



Prime Minister Manmohan Singh said that the Ottavio Quattrocchi case was proving to be an embarrassment for the government and that it was “not a good reflection on the Indian legal system that we harass people while the world says we have no case.”

Speaking for the first time on the issue after The Indian Express reported last week that the CBI got the Interpol to withdraw the Red-Corner Notice on Quattrocchi, Singh told CNN-IBN on Saturday: “The Quattrocchi case is an embarrassment for the Government of India... we have tried to extradite him from Malaysia, from Argentina... and the courts have said we don’t have a strong case. Now it is not a good reflection on the Indian legal system that we harass people while the world says we have no case.”


The PM added that the Interpol asked India “why do you want to keep him under the Red-Corner Notice?” “The law minister referred (the issue) to the AG who gave the advice that it should be lifted,” he said.



வெளிநாட்டில் இருக்கும் கணவனை சர்வதேச குற்றவாளி என்று பிரகடனம் செய்ய மருமகள்கள் செய்யவேண்டியது ஒரே ஒரு விஷயம்தான். உங்களுக்கு உதவியாக செயல்படும் காவல்துறை நண்பர்களை கொஞ்சம் “கவனித்தால்” போதும் உடனடியாக அவர்கள் சி.பி.ஐ. அமைப்பை தொடர்புகொண்டு வேண்டிய காரியங்களை செய்வார்கள். பிறகு சி.பி.ஐ. சர்வதேச போலிஸை தொடர்பு கொண்டு உங்கள் கணவனை சர்வதேச அளவில் தேடப்படும் கொடிய குற்றவாளி என்று அறிவித்துவிடுவார்கள். பிறகு சர்வதேச அளவில் உங்களது கணவன் மிகப்பெரிய குற்றவாளியாகக் கருதப்படுவார். எப்போது எந்த விமான நிலையத்திற்கு சென்றாலும் உடனடியாக சட்டைக் காலரை பிடித்துக்கொள்வார்கள். அதைப் பற்றிய செய்தியைப் பாருங்கள்.


தினமலர் 19 ஜூலை 2010

புதுடில்லி : திருமணம் செய்து ஏமாற்றி விட்டு, மனைவியை அனாதையாக விட்டு விட்டு, வெளிநாடுகளுக்கு ஓடிய 600 கணவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில், "ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள்.


போதை மருத்து கடத்துவோர், பயங்கரவாதிகள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு எதிராகவே வழக்கமாக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்படும். ஒருவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டால், இதுகுறித்த தகவல் இன்டர்போல் போலீசாருக்கு தெரிவிக்கப்படும். குற்றவாளி பதுங்கியிருப்பதாக கருதப்படும் நாட்டில், அவரை தேடும் பணி முடுக்கி விடப்படும். மேலும், விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும். சம்பந்தபட்ட நபர், விமான நிலையத்தில் தனது பாஸ்போர்ட்டை சோதனைக்காக கொடுக்கும்போது, அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகி விடும். உடனடியாக, அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அந்த நபரை அவர்களிடம் ஒப்படைப்பர். பயங்கரவாதிகள், போதை மருந்து கடத்துவோர் மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு வந்து திருமணம் செய்து விட்டு, மனைவியை ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி பதுங்கி விடும் கணவர்களும் தற்போது இந்த பட்டியலில் சேர்ந்துள்ளனர். இதுபோல் 600 பேருக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது
: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் திருமணம் செய்வதற்காக இந்தியா வருகின்றனர். இவர்களில் சிலர், திருமணம் முடிந்தவுடன், மனைவியை ஏமாற்றி இங்கேயே விட்டு விட்டு, அவர்கள் மட்டும் வெளிநாடுகளில் பதுங்கி விடுகின்றனர். சரியாக விசாரிக்காமல், வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதற்காக அவசரப்பட்டு திருமணம் முடித்தவர்கள், இதுபோல் அதிகமாக ஏமாறுகின்றனர். குறிப்பிட்ட அந்த நபர், எந்த நாட்டில், என்ன வேலையில் இருக்கிறார் என்பது கூட இவர்களுக்கு தெரிவது இல்லை. ஒட்டுமொத்தமாக ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர், இதுபோல் திருமணம் செய்து விட்டு ஓடியவர்களாக உள்ளனர். இவ்வாறு ஏமாற்றி விட்டு ஓடுவோரில் பெரும்பாலானோர் படித்தவர்களாகவும், நல்ல வேலையில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என்பது தான், அதிர்ச்சியான தகவல். இவ்வாறு திருமணம் செய்து விட்டு, ஓடுவோர் மீதும் வரதட்சணை கொடுமைக்கு சமமான வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலுள்ள செய்தியில் கவனித்தீர்களா. ஏமாற்றி திருமணம் செய்தாலும் அதற்கும் வரதட்சணைக் கொடுமைக்குச் சமமான வழக்குப் பதிவு செய்யப்படும். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் செய்தியில் உள்ள பெரும்பாலான “ரெட்கார்னர் நோட்டீஸ்கள்” திருமணம் செய்து ஏமாற்றிய கணவர்களின் மீது பதிவு செய்யப்படவில்லை. அதற்கு மாறாக திருமணம் செய்து வெளிநாடுகளுக்குச் சென்று பிறகு கணவன் தனக்கு ஒத்துவரவில்லை என்றவுடன் இந்தியாவிற்கு வந்து நமது கலாச்சார நடைமுறைப்படி வரதட்சணைக் கொடுமை என்று IPC498A, Dowry Prohibition Act போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் இந்திய மருமகள்களின் வேண்டுகோளின்படிதான் இந்த சர்வதேச குற்றவாளி என்ற முத்திரை கணவன்கள் மீது குத்தப்படுகிறது.

அதனால் இந்த ரகசியத்தை மருமகள்கள் தெரிந்துகொண்டு உடனடியாக நடவடிக்கையில் இறங்கலாம். வெளிநாட்டில் இருக்கும் உங்கள் கணவனை உங்கள் வழிக்குக் கொண்டுவர இதை விட அருமையான வேறு வழி இருக்குமா? அது அவ்வளவு எளிதானதா என்று யோசிக்காதீர்கள். நம்ம ஊரில் ஜனாதிபதிக்கே கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றங்கள் இருக்கின்றன.

The Hindu Wednesday, Apr 28, 2004

NEW DELHI, APRIL 27. The Supreme Court today quashed the bailable arrest warrants issued by a Ahmedabad Magistrate against the President, A.P.J. Abdul Kalam, the Chief Justice of India, V.N. Khare, and two others on January 15 holding that the complaint was "ex-facie fraud".



அதனால் மருமகள் சொற்படி நடக்காத கணவனை சர்வதேசக் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை கிடையாது. இந்தியாவில் மருமகள்கள் முயற்சி செய்தால் எதுவும் செய்யலாம்.

உங்களுக்கு ஒரு போனஸ் செய்தி. மேலுள்ள வழிமுறையில் ஒரு மருமகள் மாமியாருக்கு விமான நிலையத்தில் எப்படி வரவேற்பு கொடுத்திருக்கிறார் என்று பாருங்கள்.



ஜெய்ப்பூர் : மருமகளிடம் வரதட்சணை கேட்ட வழக்கில், கலிபோர்னியாவிலிருந்து இந்தியா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண் நேற்று டில்லியில் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்காக இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய பெண் ஆர்த்தி. இவரது மகன் சாணக்கியாவுக்கும், நேகா பாலிவால் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது, நேகாவின் பெற்றோரிடம் ஆர்த்தி குடும்பத்தினர் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டனர். நேகாவின் பெற்றோரால் அவ்வளவு பணம் கொடுக்க முடியவில்லை. அதனால், கலிபோர்னியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சில நாட்களிலேயே நேகா சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். வரதட்சணை கொடுத்த பின்னரே நேகாவை ஏற்றுக் கொள்வோமென, ஆர்த்தி கூறிவிட்டார்.இதையடுத்து, தன் மாமியார் ஆர்த்தி மற்றும் கணவர் சாணக்கியா மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக நேகா புகார் அளித்தார். 2009 ஜனவரியில் இந்த புகாரை அளித்தார். இந்நிலையில், நேற்று கலிபோர்னியாவிலிருந்து டில்லி வந்திறங்கிய ஆர்த்தியை டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில், ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்து, விசாரணைக்காக ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்றனர். அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலுள்ள செய்தியில் பார்த்தீர்களா அமெரிக்காவில் நடந்த கொடுமைக்கு மருமகள் அமெரிக்க போலிஸிடம் எந்தப் புகாரும் தெரிவிக்காமல் இந்தியாவிற்கு வந்துதான் வரதட்சணைப் புகார் கொடுத்திருக்கிறார். இந்தியாவில் மருமகள்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. இந்த விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.


இப்போதாவது உங்களுக்கு சி.பி.ஐ. , சர்வதேச போலிஸ், இந்திய அரசாங்கம் போன்றவற்றை உங்களின் வசதிக்கேற்றவாறு எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று ஒரு நம்பிக்கை பிறந்திருக்கும். இதுபோல கணவனை சர்வதேசக் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கும் வசதி வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது. இந்தியாவில் மட்டும்தான் இந்த அரிய வாய்ப்பு மருமகள்களுக்காக உருவாக்கப்பட்டு அரசாங்கமும், அதிகாரிகளும் மருமகள்களுக்காக வியர்வை சிந்தி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உழைப்பை வீணாக்கிவிடாதீர்கள். அதனால் கணவன் மற்றும் மாமியார் குடும்பத்திற்கெதிராக வரதட்சணை சட்டங்களை பயன்படுத்தும்போது சி.பி.ஐ., InterPol போன்ற அமைப்புகள் இந்திய மருமகள்களுக்கு கொடுக்கும் சிறப்புச் சலுகைகளையும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!


5 comments:

  1. இதோ இன்னொரு லாலிபாப்.

    http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=4211023

    கணவன் - மனைவி வெளிநாட்டில் இருந்தால் இந்தியாவில் இருக்கும் மாமனார்-மாமியார் மீது வீட்டு வன்முறை (சரியான மொழிபெயர்ப்பா என்று தெரியவில்லை) சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க இயலாது என்று அதே டெல்லி உயர்நீதி மன்றத்தில் அதே திங்க்ரா-தான் தீர்ப்பு சொல்லியுள்ளார். மட்டுமன்றி அப்படி தீர்ப்பு சொன்ன கீழ் நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு குட்டும் கொடுத்துள்ளார்.

    லாலிபாப் சப்பக்கொடுப்பதில் திங்ரா நிரம்ப ஆர்வம் உடையவராக தெரிகிறார் போல.

    ReplyDelete
  2. // Blogger Muthu said...

    இதோ இன்னொரு லாலிபாப்.

    http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=4211023

    கணவன் - மனைவி வெளிநாட்டில் இருந்தால் இந்தியாவில் இருக்கும் மாமனார்-மாமியார் மீது வீட்டு வன்முறை (சரியான மொழிபெயர்ப்பா என்று தெரியவில்லை) சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க இயலாது என்று அதே டெல்லி உயர்நீதி மன்றத்தில் அதே திங்க்ரா-தான் தீர்ப்பு சொல்லியுள்ளார். மட்டுமன்றி அப்படி தீர்ப்பு சொன்ன கீழ் நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு குட்டும் கொடுத்துள்ளார்.

    லாலிபாப் சப்பக்கொடுப்பதில் திங்ரா நிரம்ப ஆர்வம் உடையவராக தெரிகிறார் போல.
    //


    உங்களின் கருத்திற்கு நன்றி.

    நீங்கள் சொல்வதுபோல உயர்நீதிமன்றம்வரை கணவன் போகவேண்டும். அதுவரை கணவனின் குடும்பம் நிம்மதி இல்லாமல் அலையவேண்டும். போலிஸ், வழக்கறிஞர் என்று எல்லா இடத்திலும் பணத்தைக் கொட்டி அழவேண்டும். கடைசியில் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு எப்படி இருந்தால் என்ன. நஷ்டப்பட்டது கணவனும் அவனது குடும்பமும்தான். மருமகளுக்கு என்ன பெரிய இழப்பு இதில் இருக்கிறதென்று நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள்?

    இந்தியாவில் ஒரே ஒரு திங்கராதான் இருக்கிறார்.ஆனால் பல மருமகள்கள் இருக்கிறார்கள். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சட்டங்கள் மருமகள்களுக்கு சாதகமாக இருக்கும்வரை திங்கரா போன்ற எத்தனை நீதிபதிகள் வந்தாலும் மருமகள் கொடுக்கும் வரதட்சணைப் புகாரில் FIR பதிவானவுடன் கணவன் சிறைக்குச் செல்வதைக் கடவுளால்கூட தடுக்கமுடியாது. இது எல்லாக் கணவன்களுக்கும் தெரிந்த உண்மை. அதனால் அவ்வப்போது திங்கரா போன்ற நீதிபதிகள் கொடுக்கும் ஓரிரு தீர்ப்பைப் பார்த்து லாலிபாப் சாப்பிட்டதுபோல சந்தோஷப்படவேண்டியதுதான்.

    மீண்டும் உங்கள் கருத்திற்கு நன்றி!

    ReplyDelete
  3. ரொம்ப ஆழமா பாதிக்கப்பட்டிருப்பீங்க போல. உங்கள் மனோநிலை புரிகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. //Muthu said...

    ரொம்ப ஆழமா பாதிக்கப்பட்டிருப்பீங்க போல. உங்கள் மனோநிலை புரிகிறது. வாழ்த்துக்கள்.
    //

    மருமகளின் மனநிலையைப் புரிந்துகொண்ட முதல் மனிதர் நீங்கள்தான்!

    ReplyDelete
  5. என்ன அருமையான வலைப் பதிவுகள். குடும்பத்ததை சீரழித்து மேற்கத்தியக் கலாச்சார வழியில் இந்தியக் குடும்ப அமைப்பை வழிநடத்த இதைவிட சிறந்த ஒரு வலைப்பதிவு இருக்க முடியுமா?

    வயது போன காலத்தில் நாய் படும்பாடு படப்போகும் உங்களை மாதிரியான புத்திசாலியான மருமகள்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்