"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


வரதட்சணை சட்டத்தில் புதிய திருத்தம் - மருமகள்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!!

கடந்த சில மாதங்களாக  மருமகள்களுக்கு எதிரான ஒரு சதிகாரக் கூட்டம் மருமகள் பாதுகாப்பு சட்டங்களை தவறாக சித்தரித்து பல விமர்சனங்களை  பரப்பிக் கொண்டிருந்தது.  அதன்விளைவாக அரசாங்கம் இப்போது மருமகள் பாதுகாப்பு சட்டங்களான வரதட்சணை தடுப்பு சட்டங்களில் சில மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது என்று செய்தித்தாள்களில் செய்திகள் வந்துகொண்டிருப்பதை அனைத்து  மருமகள்களும் படித்திருப்பீர்கள்.

மருமகள்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள நமது அரசாங்கம்  எப்போதும் போல இந்த சட்ட திருத்தத்திலும் மருமகள்களுக்கு சாதகமாகத்தான் மாற்றம் கொண்டு வர இருக்கிறது  என்பதை மருமகள்கள் அனைவரும் புரிந்துகொண்டு மகிழ்ச்சியாக இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.

செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திருத்தத்தில் ஏற்படப்போகும் முக்கியமான மூன்று மாற்றங்கள்:   

1. மருமகள்கள் முதலில் கணவன் மற்றும் அவனது குடும்பத்திற்கெதிராக வரதட்சணை வழக்கை தொடுத்துவிட்டு காவல் நிலையம், நீதிமன்றம் என்று பத்து முறை அலையவிட்டு பிறகு அவன் நொந்துபோய் நிற்கும்போது  நமது வழக்கறிஞரை வைத்து  ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்திற்கு வெளியே  வழக்கை பேசி முடித்துக் கொள்ளலாம்.   இதற்கு முன்பு இதுபோல பேரம் பேசி முடித்துக் கொள்ள உயர்நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய  சூழ்நிலை இருந்தது.  பல மருமகள்கள் உயர்நீதிமன்றம் வரை செல்லும் அளவிற்கு வசதியற்ற நிலையில் இருப்பதைக் கண்டு நமது அரசாங்கம் இப்போது இந்த பேரம் பேசி வழக்கை முடித்துக் கொள்ளும் வசதியை  உள்ளூர்  நீதிமன்றத்திலேயே ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அரசாங்கம் இப்போது வரதட்சணை சட்டத்தை Compoundable என்று திருத்தம் செய்யவிருக்கிறது.  இது மருமகள்களுக்கு நல்ல செய்திதானே?  (Plans are afoot to amend a criminal law that will allow compromise and settlement between husband and wife)  இப்படி உள்ளூரிலேயே பேரம் பேசி முடித்துக்கொள்ள  முன்வராத கணவன்களுக்கு பாடம் புகட்ட இரண்டாவது சட்ட திருத்தம்.  அது என்னவென்று  தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

2. வழக்கு ஆரம்பித்த உடனே  மருமகளுக்கு கட்டுப்பட்டு  மருமகள் கேட்கும் பணத்தை கொடுக்காத அடங்காத கணவன்களை வழக்கு நடத்தி தண்டித்து விடலாம்.   பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் அலைந்து திரிந்து கடைசியில் மருமகளுக்கு கட்டுப்படாததால் சிறைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலையில் கணவனிடம் பணம் கொடுத்தால் சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறினால் அவன் எதைத் தேர்ந்தெடுப்பான்.  கண்டிப்பாக பணத்தைக் கொடுத்துவிட்டு மருமகளிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு ஊரை விட்டே ஓடிவிடலாம் என்று முடிவு செய்துவிடுவான்.  இதுதான் இரண்டாவது சட்ட திருத்தம்.   வரதட்சணை வழக்கில் தண்டிக்கப்பட்ட கணவன் ஒன்று சிறைக்குச் செல்லலாம் அல்லது சிறைத்தண்டனைக்குப் பதிலாக பணத்தைக் கட்டிவிட்டு சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். (Another new section is expected to be inserted to allow an accused to escape jail by paying a penalty).

3.  மூன்றாவது சட்ட திருத்தம் வழக்கு பொய்யானால் மருமகளுக்கு ரூபாய் 15,000 அபராதம்.   இதனால் மருகள்களுக்கு பாதிப்பு என்று எண்ணிவிடாதீர்கள்.   அது எப்படி என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். (Now, if a dowry harassment case is proved wrong or proved that the law is misused, only Rs 1,000 penalty is slapped. But the amendment provides for a Rs 15,000 fine.)

மருமகள் வரதட்சணை வழக்கு தொடுத்தவுடன் பல கணவன்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்ளத்தான் நினைப்பார்கள்.  இது மருமகள்களுக்கு முதல் வெற்றி.  அப்படி ஒத்துவராத கணவனை  வழக்கின் முடிவில் தண்டித்து சிறைக்குப் பதிலாக பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.  அப்படியே வழக்கின் இறுதியில் அவன் தண்டிக்கப்படவில்லையென்றால் வழக்கை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.  அதில் ஒரு பத்தாண்டுகள்  போய்விடும்.  அதிலும் கணவன் தப்பித்துவிட்டால் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு  செய்யலாம்.  அங்கு ஒரு பதினைந்து ஆண்டுகள்  கழிந்துவிடும்.  அதிலிருந்தும் கணவன் தப்பித்துவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.  அங்கு வழக்கு எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியாது.   இவையனைத்திலும் கணவன் தப்பிப்பிழைத்து வெற்றிபெற்றால் மட்டுமே மருமகளின் வழக்கு நிருபிக்கப்படவில்லை என்று சொல்ல முடியும். இப்படி 30 ஆண்டுகள் பல நீதிமன்றங்களில் அலைந்து திரிந்து வாழ்க்கையை தொலைத்த பிறகு கணவன் வெற்றி பெற்றால் மருமகளுக்கு வெறும் 15000 ரூபாய்  மட்டுமே நஷ்டமாகப்போகிறது.  ஆனால் நடந்துகொண்டிருக்கும் உண்மை என்னவென்றால் கணவன்களால் உச்ச நீதிமன்றம் செல்லும் வரை தாக்குப் பிடிக்க முடியாது.  அதனால் மருமகள்களுக்கு தோல்வி என்பதே கிடையாது என்பது உறுதி.

மருமகள்களுக்கு மற்றொரு சந்தேகம் எழலாம்.  இவ்வளவு வழக்குகளுக்கும் எப்படி செலவு செய்வது என்று ஒரு  அச்சம் ஏற்படலாம்.  கவலையே வேண்டாம்.  ஒரு புறம் வரதட்சணை வழக்கை தொடுத்துவிட்டு மறுபுறம் கைச் செலவிற்கு “குடும்ப வன்முறை வழக்கு” மற்றும்  குற்றவியல் நடைமுறை பிரிவு 125ன் கீழ் கணவனிடமிருந்து தவறாமல் ஒவ்வொரு மாதமும் பராமரிப்புத் தொகையை  சட்டத்தின் துணையோடே பெற்றுக்கொள்ளலாம்.   கணவனின் மீதான வழக்கை நடத்த அவனிடமே பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.  இது எவ்வளவு சந்தோஷமான செய்தி.

அதனால் இந்த சட்ட நுணுக்கங்களை மருமகள்கள் புரிந்துகொண்டு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சட்ட மாறுதல்களை பயன்படுத்தி வாழ்வில் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்கள்!!

Government plans to amend anti-dowry harassment law

New Delhi | Published on: March 15, 2015 Times of India

Plans are afoot to amend a criminal law that will allow compromise and settlement between husband and wife at the onset of trial in dowry harassment cases, a move that comes after frequent misuse of the provision to trouble men and their near relatives.

Under the proposal, Section 498A of the Indian Penal Code will be made a compoundable offence with the permission of the courts as suggested by the Law Commission and Justice Malimath Committee.

“A draft note for the Union Cabinet seeking to amend Section 498A of the IPC, making it compoundable, has been sent to the Law Ministry for drawing up the draft bill,” a Home Ministry official said.

Now, the offence is non-compoundable and non-bailable which provides for immediate arrest of the accused. Conciliatory effort by the warring sides is virtually impossible.

A husband or his family members are presumed to be guilty till they prove their innocence in the court. The guilty is punishable with a jail term of up to three years.

There have been allegations that in many cases, husbands and their relatives are often charged with false dowry harassment cases by their wives or her family members when some marital problems arise.

If the offence is made compoundable, misuse of the law may come down hugely as there would be scope for initiating conciliation proceedings and out-of-court settlement.

Permission from a court will be a guarantee against attempts where a wife may be compelled into a compromise by her husband or in-laws, the Home Ministry official said.

Now, if a dowry harassment case is proved wrong or proved that the law is misused, only Rs 1,000 penalty is slapped. But the amendment provides for a Rs 15,000 fine.

Another new section is expected to be inserted to allow an accused to escape jail by paying a penalty.

Opposing the move to dilute the anti-dowry provision of the law, senior Supreme Court lawyer Indira Jaising said it is a law which gives relief and protection to harassed woman and it should be continued.

“Violence against women is a violation of human rights. There is no compromise of that. I would disagree with the government move,” Jaising said.

The Supreme Court had in a judgement in 2010 said as it stood now, the law had become a “weapon in the hands of disgruntled women”. It had also observed that serious re-look of the entire provision is warranted by the Legislature.

“It is a matter of common knowledge that exaggerated versions of the incident are reflected in a large number of complaints. The tendency of over-implication is also reflected in a very large number of cases,” the apex court had said.

Section 498A was introduced in early eighties to protect married women from being subjected to cruelty by the husband or his relatives involving newly-married brides.
A spate of dowry deaths in Delhi and elsewhere led to a campaign by some leading women members of Parliament pushing the government to bring the amendment.

A punishment involving imprisonment of up to three years is provided in the present law. The expression ‘cruelty’has been defined in wide terms so as to include inflicting physical or mental harm to the body or health of the woman and indulging in acts of harassment with a view to coerce her or her relations to meet any unlawful demand for any property or valuable security.
 
The Law Commission recommended that the offence under Section 498A should be made a compoundable offence with the permission of Court.

Justice Malimath Committee on Criminal Justice Reform also recommended that it should be made compoundable as well as bailable.

Last year, the Home Ministry had asked all state governments to be judicious in slapping Section 498A of IPC in matrimonial disputes as the provision may be used as “weapons rather than shields by disgruntled wives”.

In an advisory to the states and union territories, the Ministry had asked them to instruct their police officers not to automatically arrest a person when a case under Section 498-A of the IPC is registered but to satisfy themselves about the necessity for arrest under the parameters laid down flowing from Section 41, CrPC (When police may arrest without warrant).



5 comments:

  1. புதுடில்லி : வரதட்சணை கொடுமை செய்வதாக, பொய்ப்புகார் கூறி பழிவாங்கும் மனைவிகளுக்காக சட்டத்தை பயன்படுத்தக்கூடாது; புகார் தந்தவுடனே, தீர விசாரிக்காமல் கணவன், அவன் குடும்பத்தினரை கைது செய்யக்கூடாது! - தங்களுக்கு சாதகமாக சட்டப் பிரிவு இருக்கிறது என்று, திட்டமிட்டு "பிளான்' போட்டு அப் பாவி கணவர்களை பழிவாங்கும் மனைவிகளுக்கு எதிராக முதல் முதலாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


    இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ. வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், அவர் குடும்பத்தில் உள்ள தந்தை, தாய் உட்பட யாரையும் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்த சட்டப் பிரிவு. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதால், அவர்கள் புகார் தந்தாலே, இந்த சட்டத்தை பயன் படுத்தி, கணவன், அவன் குடும்பத்தாரை கைது செய்வது போலீஸ் வழக்கம். கைது செய்தபின் தான் எல்லா விசாரணையும் நடக்கும். கடந்த சில ஆண்டாக இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கான மனுக் கள் குவிந்தன. பழிவாங்க துடித்த மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள், அவர்களின் குடும் பத்தார், சமூக நல அமைப்புகள், ஆண்கள் நல அமைப்புகள் போன்றவற்றில் இருந்தும் அரசுக்கு மனுக்கள் குவிந்தன. "வரதட்சணை கொடுமை செய்யும் ஆண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம், திட்டமிட்டு கணவனை, அவன் குடும்பத்தினரை பழிவாங்க சில பெண்கள், வரதட்சணை கொடுமை புகார் செய்வது அதிகரித்து வருகிறது.


    கடந்த காலங்களில், வரதட்சணை கொடுமைக்காக தண்டிக்கப்பட்ட கணவர்கள் எண்ணிக்கை சதவீதத்தை வைத்தே இதை புரிந்து கொள்ளலாம்; இதனால், அப்பாவி கணவர்களுக்காக மத்திய அரசு , இந்த சட்டத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்' என்று மனுக்களில் கோரப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகமும், சட்ட அமைச்சகமும் இது தொடர்பாக பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், டில்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புகள், அரசின் பரிசீலனைக்கு மேலும் வலுவூட்டின.


    "கணவன் குடும்பத்தாரை பழிவாங்க வேண்டும் என்ற எண் ணம் உள்ள பெண்களுக்கு வரதட்சணை கொடுமை புகார் பெரிதும் கைகொடுக்கிறது. அதற் கேற்ப, போலீசும், உடனே 498 ஏ சட்டப்பிரிவு, 406ம் பிரிவை பபயன்படுத்தி உடனே கணவன் குடும்பத்தினரை கைது செய்து விடுகின்றனர். சிறியவர்களை கூட கைது செய்வது சட்டப்படி சரியல்ல. இதுபோன்ற போக் குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும்' என்று ஒரு வழக்கில் டில்லி ஐகோர்ட் நீதிபதி கபூர் தன் கருத்தை வலியுறுத்தியிருந்தார். இதுபோல, சுப்ரீம் கோர்ட்டில் வந்த வழக்கில்,"வரதட்சணை கொடுமை வழக்குகளில் நிரபராதியாக வெளியே வருவோர் அதிகரித்து வருகின்றனர். அதனால், இப்படிப்பட்ட வழக் குகள் ஜோடிக்கப்பட்டு, சிலரால் பயன்படுத்தப்படுவதாக அறிய முடிகிறது. இதை தடுக்க சட்டப் படி பரிசீலிக்க வேண்டும்' என்று நீதிபதி அர்ஜித் பசாயத் கூறினார்.


    இந்த இரு தீர்ப்புகளும் மத்திய அரசின் கவனத்தை திசை திருப்பியது. சட்ட, உள்துறை அமைச்சகம் தீவிர பரிசீலனைக்கு பின், மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. "வரதட்சணை கொடுமை புகார் விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். புகார் தந்ததை ஆதாரமாக வைத்து உடனே, கணவன், அவர் குடும்பத்தினரை கைது செய்யவே கூடாது. தீர விசாரித்து, உயர் அதிகாரி திருப்தி பட்டாலொழிய கைது நடவடிக்கையில் இறங்கக்கூடாது. இது தொடர்பாக எல்லா போலீஸ் மண்டலங்களுக்கும் உத்தரவு அனுப்ப வேண்டும்' என்று கடிதத்தில் கூறப் பட்டுள்ளது. மத்திய உள்துறை செயலர், இந்த கடிதத்தை மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.


    வரதட்சணை கொடுமை புகார் அளித்தால், இந்த சட்டத்தின் கீழ் கணவனுக்கு அதிகபட்சம் மூன்றாண்டு சிறை தண்டனை தர முடியும். கடந்த 2007ல், ஒரு லட்சத்து 60 ஆயிரம் வழக்குகள் பதிவாயின. அதில், 76 ஆயிரம் வழக்குகளில் தான் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டது. 79 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண காப்பக சர்வேயில் தெரியவந்துள்ளது. "இந்த சட்டப்பிரிவுகளில் சில திருத்தங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டது. ஆனால், பெண்கள் அமைப்புகள் பெரும் போர்க்கொடி தூக்கியதால், இந்த முடிவில் பின்வாங்கி விட்டது. எனினும், கோர்ட்களின் கருத்துக்களுக்கு பின் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ReplyDelete
  2. ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தில் சேர நினைப்போர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :-

    ஆண்கள் பாதுகாப்பு சங்கம்,
    100ஏ, 5 பொன்னம்பலம் சாலை,
    கே.கே.நகர்,
    சென்னை - 600076.

    செல் நம்பர்:- 9381029153, 9385066665

    பேக்ஸ் :- 044 24811911

    ReplyDelete
    Replies
    1. இப்பிடிலாம் ஒரு சங்கம் இருக்கா???? அண்ணா

      Delete
  3. சட்டத்தை பயன்படுத்தி பெண்கள் மிரட்டுகிறார்கள்; ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆவேசம்
    Posted on நவம்பர் 20, 2010 by saintthomasfables
    இன்று ஆண்கள் தினம்

    காலம் மாறித்தான் போச்சு! பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்று பெண்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். அவர் களுக்காக ஆண்களும் வக்காலத்து வாங்கினார்கள்.
    இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று ஆண்கள் எழுப்பும் குரல் சற்று ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது.
    இன்று உலக ஆண்கள் தினம். ஆண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தி ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பொது செயலாளர் மதுசூதனன் முன்னிலை வகித்தார். வக்கீல்கள் ராஜ ராஜேஸ்வர பாண்டியன், ராமகிருஷ்ணன், வெற்றி செல்வன், தொல்காப்பியன், லிங்கம், வெற்றிவேல், ராஜா ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் வடசென்னை மாவட்ட தலைவர் சையத் அலி நன்றி கூறினார்.
    சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அருள் துமிலன் ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார்.
    போலியாக வரதட்சணை புகார்கள் கொடுத்து ஆண்களையும், அவரை சார்ந்த குடும்பத்தாரையும் கொடுமை படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.
    * பொய்யான வரதட்சணை புகார்களை அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பதிவு செய்யக்கூடாது. வழக்கில் கைது செய்யும் ஆண்களை மத்திய- மாநில அரசுகள் பணியில் இருந்து உடனடியாக நீக்கக் கூடாது.
    * கள்ளக்காதல், கொலைகளை தடுத்திட இ.பி.கோ.497 சட்டத்தில் திருத்தம் செய்து ஆண்-பெண் இருவருக்கும் தண்டனை வழங்க வேண்டும்.
    * கலாச்சாரத்தை சிதைக்கும் குடும்ப வன்முறை சட்டம் 205-ஐ ரத்து செய்ய வேண்டும். தேசிய பெண்கள் கமிஷனிடம் மட்டும் கருத்து கேட்டு சட்டம் இயற்றுவதால் ஆண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். ஆண்களை பாதுகாக்க தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்.
    * பெண்களுக்கு பணியிட பாதுகாப்பு என்ற பெயரில் இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வர உள்ள மசோதாவில் திருத்தம் தேவை. வழக்கு விசாரணையில் பெண்கள் கொடுக்கும் புகார் பொய்யானது என்று தெரிய வந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது ஒருதலைபட்சமானது. சட்டத்தின் துணை கொண்டு ஆண்களை அடிமைப்படுத்தும் செயல் ஆகும். எனவே இந்த சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்ற வேண்டும்.
    ஆண்களின் கோரிக்கைக்கு ஆதரவாக குடும்ப பெண்களும் குரல் எழுப்புகிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பானுமதி என்ற பட்டதாரி பெண் கூறியதாவது:-
    பெண்களுக்கு பாதுகாப்பு, சுதந்திரம் என்ற பெயரில் வழங்கி உள்ள சலுகைகளை பெண்களே தவறாக பயன்படுத்தி பல குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகிறார்கள்.
    எனது தம்பிக்கும் அவன் மனைவிக்கும் பிரச்சினை. அதற்கு என் தம்பி மனைவி எங்கள் வீட்டில் உள்ள எல்லோர் மீதும் பொய்யான வழக்கு போட்டார்கள். அதனால் போலீஸ் நிலையத் துக்கும், கோர்ட்டுக்கும் அலைந்து ஜெயிலுக்கும் சென்று வந்தேன். அந்த ஒரே பிரச்சினை காரணமாக ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியும் காணாமல் போய் விட்டது என்றார்.
    சங்கத்தின் தலைவர் அருள்துமிலன் கூறியதாவது:-
    தவறு யார் செய்தாலும் தண்டிக்கப் படவேண்டும். ஆனால் சட்டத்தை பயன்படுத்தி பெண்கள் ஆண்களை பழிவாங்குவது, அதிகரித்து வருகிறது. கணவனை பிடிக்காவிட்டால் உடனே வரதட்சணை சித்ரவதை என்ற பெயரில் பொய் புகார்களை கொடுத்து ஒட்டு மொத்த குடும்பத்தையும் கோர்ட்டுக்கு அலைக்கழிக்கிறார்கள்.
    குடும்ப உறவுகள்தான் நம் கலாச்சாரத்தின் ஆணிவேர். இப்போது பெண்கள் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் கலாச்சாரத்துக்கு வேட்டு வைக்கிறார்கள். பாதிக்கப்படும் ஆண்களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லை. எனவேதான் தேசிய ஆண்கள் ஆணையம் தேவை என்கிறோம்.
    இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்