இந்திய காவல்துறை பணித் தேர்வு எழுதி பதவிக்கு வரும் மாவட்ட கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் போன்றவர்கள் இந்திய மருமகள்களின் கவலையை போக்குவதற்கு பெரிதும் உதவுவார்கள் என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
கணவனை வரதட்சணை வழக்கில் உடனடியாக கைது செய்யவேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் உங்கள் புகாரை தெளிவாக எழுதி (புகார் எழுதத் தெரியாத மருமகள்கள் வழக்கறிஞரின் உதவியை நாடலாம்) அழகாக தட்டச்சு செய்து, நேர்த்தியாக உடையணிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அலுவலகத்திற்கு சென்று நேரடியாக காவல் கண்காணிப்பாளரிடம் உங்களது புகாரை கொடுங்கள். பிறகு பாருங்கள் புகாரை பதிவு செய்து கணவனை கைது செய்யும்படி காவல்நிலையத்திற்கு உத்தரவு பறக்கும்.
காவல் கண்காணிப்பாளரின் உத்தரவு கிடைத்ததும் காவல் நிலையத்தில் உங்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கும். உடனடியாக கணவனின் வீட்டிற்கு காவலர்கள் ஓடிச் சென்று கணவனையும், அவனது குடும்பத்தையும் கூண்டுடோடு காவல் நிலையத்திற்கு கட்டி இழுத்து வந்துவிடுவார்கள். கணவனை கைது செய்து அழைத்துவரும் காட்சியைக் கண்ட மகிழ்ச்சியில் காவல் நண்பர்களுக்கு போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவுகள் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்!
இந்த வழிமுறையில் இன்றைய செய்தியில் பாருங்கள் ஒரு வீரமான மருத்துவ மருமகள் தனது கணவனை காவல்துறை மூலம் அதிரடியாக கைது செய்ய வைத்திருக்கிறார்.
மேற்கண்ட செய்தியை படித்தவுடன் வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு-3ன் படி “வரதட்சணை கொடுப்பதும் குற்றம்தானே” என்று சில மருமகள்களுக்கு லேசான சந்தேகம் வரலாம். அதைப் பற்றி கவலையே படாதீர்கள். புகாரிலும் சரி, செய்தித்தாளிலும் சரி நீங்கள் வெளிப்படையாக வரதட்சணை கொடுத்துதான் திருமணம் செய்ததாக தைரியமாகக் கூறலாம். அப்போதுதானே அதன் தொடர்ச்சியாக கணவன் மேலும் வரதட்சணை கேட்பதாக புகாரை ஒரு கோர்வையாக எழுதமுடியும்?டாக்டரிடம் வரதட்சணை கொடுமை: பேராசிரியர் கைது
தினமலர் செப்டம்பர் 01,2012
விருதுநகர்: விருதுநகரில், பெண் டாக்டரை, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய, பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் டி.கே.எஸ்.பி. நகரை சேர்ந்த, பல் டாக்டர் ஹேமாசங்கரி.
இவர், நஜ்மல் கோதா எஸ்.பி., யிடம் கொடுத்த புகார்: எனக்கும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி உதவி பேராசிரியர் மலைராஜனுக்கும், 2007 நவ., 14 ல், திருமணம் நடந்தது. வரதட்சணையாக 60 பவுன் நகை, 75 ஆயிரம் ரூபாய், 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொடுக்கப்பட்டன.
கடந்த 2009 ல், மலைராஜன், மாமியார் குருவம்மாள், நாத்தனார் லதாதேவி (மதுரை மீனாட்சி கல்லூரி உதவி பேராசிரியர்), மைத்துனர் அழகுராஜா (தனியார் கல்லூரி பேராசிரியர்) கேட்டதற்கிணங்க, ஒரு லட்சம் ரூபாய், 25 பவுன் நகையை, எனது பெற்றோரிடம் வாங்கிக் கொடுத்தேன்.
மீண்டும் வரதட்சணையாக, ஐந்து லட்சம், 25 பவுன் நகை வாங்கி வர, கணவர், குடும்பத்தார் வற்புறுத்தினர். "என்னால் கொடுக்க முடியாது' என, கூறியதால், கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர் என, குறிப்பிட்டிருந்தார். மலைராஜனை, மகளிர் போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
அதனால் நீங்கள் வரதட்சணை கொடுத்ததாக தயங்காமல் புகாரில் எழுதலாம். அப்படி எழுதினாலும் காவல்துறையோ, நீதிமன்றமோ மருமகளை ஒன்றுமே கேட்கமாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் மருமகள்களுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு-7ல் வரதட்சணை கொடுத்திருந்தாலும் தண்டிக்க முடியாதபடி பாதுகாப்பும் இருக்கிறது.
இப்போது மத்திய அரசாங்கம் மருமகள்களுக்கு சாதகமாக வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் மேலும் பல திருத்தங்களை கொண்டுவரவிருக்கிறது. இதனால் மருமகள்களுக்கு அமோகமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லாம். முன்பெல்லாம் கணவனுக்கு 5 ஆண்டுகள்தான் தண்டனை, இப்போது அதனை திருத்தி 7 ஆண்டுகள் என்று மாற்றவிருக்கிறார்கள். இதன் மூலம் ஏராளாமான பலன்கள் மருமகள்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. அதைப் பற்றி மற்றொரு பதிவில் எழுதுகிறேன். இப்போதைக்கு மத்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து இந்த சட்டதிருத்தத்திற்கு உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.
வாழ்த்துக்கள்!!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்