"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


இந்தியாவில் இருக்கும் மருமகள் வெளிநாட்டில் வசிக்கும் NRI-கணவனிடம் பணம் பெறுவது எப்படி?

இந்திய மருமகள்கள் பலவித வண்ணக் கனவுகளோடு வெளிநாடு வாழ் இந்தியரை திருமணம் செய்து கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் அயல்நாட்டில் இந்திய மருமகள்களுக்கு காத்திருப்பதோ கணவனும் அவனது குடும்பமும் செய்யும் வரதட்சணைக் கொடுமை மற்றும் பாலியல் கொடுமை!

வரதட்சணைக் கொடுமையோடு மட்டுமல்லாமல் கணவனுக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பும் இருக்கும். இதற்கிடையே போராடி வாழ்க்கையை நடத்தலாம் என்று பல மருமகள்கள் மன உறுதியுடன் இருந்தாலும் சில சமயங்களில் கணவனும் அவனது குடும்பமும் செய்யும் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போய்விடும். உதாரணத்திற்கு தொலைபேசி இணைப்பை துண்டிப்பது, உணவு கொடுக்காமல் துன்புறுத்துவது, வீட்டில் வைத்து பூட்டி வைப்பது, குடிக்க தண்ணீர் கொடுக்க மறுப்பது, உடுக்கும் உடையை ஒளித்துவைத்து மருமகளை பாலியல் கொடுமை செய்வது இப்படி பல கொடுமைகள் செய்கிறார்கள் என்று பல மருமகள்கள் தங்கள் புகாரில் எழுதியிருக்கிறார்கள்.

இதுபோன்ற காரணங்களைக் கூறி மருமகள்கள் இந்தியாவிற்கு வந்து கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தார் மீதும் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுப்பது வழக்கம். இதை நீங்கள் பலமுறை செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள்.

மருமகளின் “வெளிநாட்டு வண்ணக் கனவுகளை” சிதைத்ததற்கு வரதட்சணைக் கொடுமை வழக்கு கொடுத்தபிறகு மருமகள்கள் இந்தியாவில் தங்களது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க திட்டம் தீட்டுவது வழக்கம். அதுபோன்ற சமயத்தில் “கைச்செலவிற்கு” பணம் தேவைப்படும் அல்லவா?

பணத்தை நினைத்து மருமகள்கள் கவலையேபடத் தேவையில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மருமகள்களுக்கு கைகொடுத்து உதவக் காத்திருக்கிறது இந்திய சட்டங்கள். இந்திய சட்டங்கள் மூலம் கணவனிடம் ஒவ்வொரு மாதமும் தவறாமல் பணம் கிடைக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம். பணம் கொடுக்க கணவன் இந்தியாவில் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. வெளிநாட்டில் இருந்தாலும் இந்திய நீதிமன்றத்தின் மூலம் பணம் கிடைக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று பின்வரும் செய்தியில் மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.


டெல்லி: மனைவியிடம் வரதட்சனை கேட்டு கொமைப்படுத்திய கனடா வாழ் இந்தியரை, மாதந்தோறும் ரூ.33,000 ஜீவானம்சம் அளிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் பெற்றோருடன் வசித்து வருபவர் இந்தியர் புனித். கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தனது மனைவியை கனடாவிற்கு அழைத்து சென்ற புனித், அவரை அதிக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,

கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி புனித் உடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது புனித் வீட்டார் கேட்ட வரதட்சனை முழுமையாக அளிக்கப்பட்டது. திருமணம் முடிந்த 2 வாரங்களில் புனித் மீண்டும் கனடாவிற்கு சென்றுவி்ட்டார்.

அதன்பிறகு 5 மாதங்களுக்கு பிறகு, நான் கனடா செல்ல விசா அனுப்பினார். நான் கனடாவிற்கு சென்ற உடன் புனித் மற்றும் அவரது உறவினர்கள் என்னை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினர். புனித் வீட்டார் என்னை அடித்து உதைத்து மிரட்டல் விடுத்தனர். மேலும் புனித் என்னை தனது மனைவியாக ஏற்று கொள்ளாமல், கனடாவை சேர்ந்த ஒரு பெண் உடன் தகாத உறவு கொண்டிருந்தார்.

கொடுமை தாங்க முடியாமல் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டேன். தற்போது பெற்றோருடன் வசித்து வரும் எனக்கு கணவர் புனித் எந்த உதவியும் அளிக்க மறுக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றச்சாட்டப்பட்ட புனித் அரோரா, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நாளை கணக்கில் கொண்டு, தனது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.33,000 வீதம் ஜீவானம்சம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


இந்த செய்தியை படிக்கும்போது “நாகரீகத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய பல நாடுகளை விட இந்தியாவில் தான் மருமகள்களுக்குச் சாதகமான பல சட்டங்கள் இருப்பதாகவும், வெளிநாடு வாழ் மருமகள்கள் தங்களது தேவையை பூர்த்தி செய்துகொள்ளவேண்டுமென்றால் இந்தியாவிற்கு வந்து கணவன் மீது வழக்கு தொடுத்தால் நினைத்ததை சாதிக்கலாம்” என்று நமது தேசிய பெண்கள் நல வாரியம் பெருமையுடன் கூறியிருப்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்று உங்களுக்கே தெரியும்.
"Do not be forced into participating in legal action in country of husband’s residence. You can file a case in India and cannot be forced to defend a case filed against you by husband abroad-especially divorce. India has more women-friendly laws than many other countries." Report on “Problems Relating to NRI Marriages” by National Commission for Women

செய்தியை நன்றாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!!


NRI-கணவன் மீது இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுக்கப்போகிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்

வெளிநாட்டில் சந்தோஷமாக வாழலாம் என நினைத்துக்கொண்டு வெளிநாடு வாழ் இந்தியரை (NRI) திருமணம் செய்து பின்பு தாங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் வெளிநாட்டில் கிடைக்காதபோது தாங்கள் உடலாலும், மனதாலும் கொடுமைகளை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் கொடுமைக்கும் உள்ளாகிறோம் என்று திடீரென்று விழிப்புணர்ச்சி பெறும் அப்பாவி மருமகள்கள் தங்கள் NRI கணவன் மீதும், இந்தியாவில் இருக்கும் அவனது குடும்பத்தார் மீதும் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்வதற்காக இந்தியாவிற்கு வருவது மரபு.

அப்படி NRI கணவன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர விரும்பும் மருமகள்கள் புகார் எழுதும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில இருக்கின்றன. மருமகள் கொடுக்கும் வரதட்சணை புகாரிலிருந்து கணவன் தப்பித்து விடமுடியாதபடி சட்டத்தின் அனைத்து ஓட்டைகளையும் இந்த விஷயங்கள் அடைத்துவிடும். அவற்றை பட்டியலிட்டு சொல்கிறேன். அதற்கு நல்ல செயல் முறை உதாரணமாக ஒரு அருமையான செய்தி பத்திரிக்கையில் வந்திருக்கிறது. அதையும் இங்கே கொடுத்திருக்கிறேன். படித்து நன்றாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

பின்வரும் “பாயிண்ட்டுகளுக்கு” பொருத்தமான வரிகள் பின் வரும் செய்தியில் இதே எண்ணிக்கை வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

  1. வரதட்சணை புகார் எழுதும்போது உங்களது திருமணத்தில் கொடுத்த சீர்வரிசையை கணவன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை என்று திருமணம் முடிந்து பல ஆண்டுகள் கழித்து நீங்கள் எழுதும் வரதட்சணைப் புகாரில் தயங்காமல் எழுதலாம். வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3-ன்படி வரதட்சணை கொடுப்பது குற்றம். நீ ஏன் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்தாய்? என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது என்பது மருமகள்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!

  2. திருமணம் முடிந்து இந்தியாவில் தங்கியிருக்காமல் உடனடியாக நீங்கள் வெளிநாடு சென்றுவிட்டாலும் புகார் கொடுக்கும்போது இந்தியாவில் கணவன் வீட்டில் தங்கியிருந்த சில நாட்களில் கணவனும் அவனது குடும்பமும் கொடுமை செய்ததாக இந்தியாவில் சில சம்பவங்கள் நடந்ததாக எழுதவேண்டும். அப்போதுதான் வழக்கு நன்றாக உறுதியாக இருக்கும். குற்றம் வெளிநாட்டில் மட்டும் நடந்ததாக சொன்னால் சட்டத்தில் இருக்கும் சில நெறிமுறைகளை (Jurisdiction) மேற்கோள் காட்டி கணவனும் அவனது குடும்பமும் தப்பித்துவிடும். அதனால் இந்த “பாயிண்ட்டை” நன்றாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

  3. திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து நம் வசதிக்கேற்ப வரதட்சணை புகார் கொடுக்கும்போது அனைவருக்கும் சிறிது சந்தேகம் வரும். இத்தனை ஆண்டுகளாக நன்றாகத்தானே இருந்தாய் இப்போது என்ன? என்று கேட்பார்கள். அதனால் புகார் எழுதும்போது “திருமணம் ஆன அடுத்த நாள் முதலே கணவனும், அவனது குடும்பமும் கொடுமை செய்தார்கள், இருந்தாலும் குடும்ப நலனை கருத்தில் கொண்டு அந்தக் கொடுமைகளையெல்லாம் பல ஆண்டுகள் பொறுத்துக்கொண்டேன். இப்போது அந்தக் கொடுமைகளை தாங்க முடியாமல் புகார் கொடுக்கிறேன்”. என்ற வரிகளை கட்டாயம் புகாரில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் புகாரை படிப்பவர்கள் உங்களின் பொறுமையான குணத்தைப் பார்த்து பரிதாபப்படுவார்கள்.

  4. வெளிநாட்டில் வாழும் மருமகள்களுக்கு மற்றொரு வசதி என்னவென்றால் வெளிநாட்டில் பல கொடுமையான குற்றங்களை செய்து கணவன் என்னை துன்புறுத்தினான் அதனால் நான் இந்தியாவிற்கு வந்து புகார் கொடுக்கிறேன் என்று சொன்னால் இந்தியாவில் இருப்பவர்கள் வெளிநாடுகளில் போலிஸ் என்று ஒன்று இல்லவே இல்லை என்று நம்பி விடுவார்கள். அதனால் வெளிநாட்டில் பல வித கொடுமைகள் நடந்ததாக இந்தியாவில் புகாரில் எழுதலாம். உதாரணத்திற்கு ஓடும் காரிலிருந்து கணவன் என்னை தள்ளிவிட்டான். அந்த நாட்டில் போவோரும் வருவோரும் வேடிக்கை மட்டும்தான் பார்த்தார்கள், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுகூட சொல்லாம். வெளிநாட்டில் என்ன நடக்கிறது என்று இந்தியாவில் யாருக்கும் தெரியாது! குறிப்பாக புகாரை பதிவு செய்யும் காவல்துறைக்கும், வழக்கை விசாரணை செய்யும் நீதிமன்றத்திற்கும் சுத்தமாக ஒன்றுமே தெரியாது. இது மருமகள்களுக்கு நல்லதுதானே!!

  5. மருமகள்களின் கடைசி ஆயுதம் இதுதான். NRI கணவன் செய்த எல்லாக் கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு கடைசியில் NRI கணவனின் பெற்றோரிடம் அதாவது மாமியார், மாமனாரிடம் முறையிட்டேன். ஆனால் அவர்கள் நான் சொல்லும் எதையும் காதில் வாங்காமல் மேலும் வரதட்சணை கொடுக்குமாறு மிரட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள் என்று புகாரில் எழுதினால் IPC498A, 5o6 (1), வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 4 இவற்றின் கீழ் கண்டிப்பாக மாமியார், மாமனார் கைதாவது உறுதி.

  6. சில சமயம் மருமகள்களுக்கு மாமியார் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் தேவைப்படலாம். அப்படி ஏதாவது தேவையென்றால் ஒரு பட்டியல் தயார் செய்து அவையெல்லாம் தனது திருமணத்திற்கு தனது பெற்றோர் கொடுத்தவை . இப்போது மாமியார் வீட்டில் அதை திருப்பித் தராமல் மிரட்டுகிறார்கள் என்று ஒரு வரி புகாரில் எழுதினால் போதும் IPC406 என்று மற்றொரு சட்டப் பிரிவையும் வழக்கில் சேர்த்து நன்றாக வலையை பின்னி விடுவார்கள். பிறகு இந்த வழக்கிலிருந்து கணவனையும், அவனது குடும்பத்தையும் கடவுளால்கூட காப்பாற்ற முடியாது.
உங்கள் புகாரை பதிவு செய்ததும் உடனடியாக காவல்துறை நண்பர்கள் மாமியார் வீட்டு கதவை தட்டி வீட்டில் இருப்பவர்களை அள்ளிக் கொண்டு வந்து சிறையில் அடைத்து விடுவார்கள். பிறகு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டால் நீங்கள் பட்டியலிட்டு கொடுத்த பொருட்களை திரும்பக் கொடுக்காதவரை ஜாமின் கிடையாது என்று நீதிபதி மிகுந்த கண்டிப்புடன் சொல்லிவிடுவார்.

NRI கணவன் குடும்பத்தார் மீது வரதட்சணை புகார் கொடுப்பதற்கு முன் இவ்வளவு விஷயங்களையும் மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உங்களுக்கு புகார் சரியாக எழுதத் தெரியவில்லையென்றால் உங்கள் தெருவில் இருக்கும் ஏதாவது ஒரு வழக்கறிஞரை நேரில் சென்று பார்த்து உங்களது தேவைகளை சொல்லுங்கள். அவர் தனது சட்ட அறிவை நன்றாக பயன்படுத்தி உங்களுக்குத் தேவையானபடி புகாரை அழகாக எழுதித் தந்துவிடுவார். பிறகென்ன காவல்நிலையத்திற்குச் சென்று NRI கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சிறையில் தள்ளி தீபாவளி கொண்டாடி விடவேண்டியதுதான்!!!!! இப்படி புகார் கொடுக்கும்போது மறக்காமல் “மீடியாக்களுக்கும்” உங்களது புகாரின் நகலை கொடுத்து விடுங்கள். அவர்கள் மருமகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிவிடுவார்கள்.

இனி செய்தியைப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!!



COIMBATORE: A couple was arrested in connection with a dowry harassment case on Tuesday by city police. Police have registered a case against the couple's son who is a software engineer in USA.

The couple has been identified as P A S Raj (65), a retired Air Force Commander and his wife Vimala Raj, 58, a retired school teacher of Rajiv Gandhi Nagar near Sowripalayam in the city.

Police said, a 24-year-old A Jenifer, hailing from Selaiyur in Chennai had completed a diploma in business management and got married to R Ajayraj (31), hailing from Rajiv Gandhi Nagar, on May 20, 2009. (1) Her parents gave 135 sovereigns of gold jewels and Rs 5 lakh as dowry to the groom's family. After the wedding, Jenifer moved to Coimbatore along with her husband and lived with her in-laws. Three weeks later, the couple left for USA.

On Tuesday, Jenifer lodged a complaint with the all women police station in Ramanathapuram alleging that (2) her husband Ajayraj mentally and physically tortured her both in India and USA. (3) Earlier, she had complained to her parents about the abuse but they had advised her to adjust and live with him. (4) Unable to bear the trauma, she overdosed on sleeping pills in an attempt to commit suicide. Her husband rushed her to a hospital in America. He also pleaded with her not to reveal the truth, promising not to torture her again, as he would go to prison.

However, Ajayraj failed to keep his word and began torturing Jenifer again. (5) She complained to her in-laws Raj and Vimala Raj and was taken aback with their response. They informed her that since they had not got the dowry they expected from her, they were looking for a bride for their son.

Jenifer came to India on January 3, 2012, and stayed at her parent's house in Saleiyur. (6) When she asked her in-laws to return the gold they had given as dowry, they refused to do so. Stuck in a rut, she eventually approached the police and registered a case against them under section 498(A), 406, 506 (i) and under section 4 of Tamil Nadu women harassment act against Ajayraj and his parents.

On Tuesday, Raj and Vimala Raj were arrested and they have been lodged in Coimbatore central prison. Presently Ajayraj is in USA.

"We have arrested the parents-in law of the victim," said Inspector K Munirabegam, Ramanathapuram.