வரதட்சணை கொடுமை வழக்கில் ஆஸ்திரேலிய சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நான்கு மாதம் சிறை
ஜனவரி 08,2012 தினமலர்
ஜனவரி 08,2012 தினமலர்
சென்னை:ஒரு கோடி ரூபாய் கேட்டு வரதட்சணை கொடுமை செய்த வழக்கில், ஆஸ்திரேலிய சாப்ட்வேர் இன்ஜினியருக்கு, நான்கு மாதம் சிறை தண்டனை வழங்கி, ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
நாகர்கோவிலை அடுத்துள்ள வள்ளிவிளையைச் சேர்ந்தவர், தொழிலதிபர் ஸ்டீபன். இவரது மகள் பியூலாவை, அதே ஊரைச் சேர்ந்த, பத்மநாபனின் மகன் சிவகுமாருக்கு, 2003ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். அப்போது வரதட்சணையாக, 1.5 கிலோ தங்கம், 6 லட்சம் மதிப்புள்ள கார், 3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.சிவகுமார், கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
திருமணத்துக்கு பின் சிவகுமாரும், பியூலாவும் சென்னையில் வசித்தனர். அப்போது, வரதட்சணை போதாது என்றும், கூடுதலாக ஒரு கோடி ரூபாய் பெற்றோரிடம் இருந்து வாங்கி வரும்படி பியூலாவை, கணவர், மாமனார் பத்மநாபன், மாமியார் பத்மா ஆகியோர் கொடுமை செய்தனர்.
பியூலா, தன் கணவர், மாமியார், மாமனார் மீது வரதட்சணை புகாரை, கன்னியாகுமரி போலீசாரிடம் கொடுத்தார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த, நாகர்கோவில் மாஜிஸ்திரேட் கோர்ட், சிவகுமார் மற்றும் அவரது பெற்றோரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில், பியூலா அப்பீல் செய்தார்.
இந்த அப்பீல் வழக்கை நீதிபதி எஸ்.பழனிவேலு விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: வரதட்சணை கேட்டு துன்புறுத்தியது, வரதட்சணை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவின் கீழ், சிவகுமாருக்கு 4 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.பத்மா, பத்மநாபன் ஆகிய இருவருக்கும், 2 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 17 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனை காலத்தை ஏற்கனவே அனுபவித்து இருந்தால், விடுதலை செய்யலாம்.இவ்வாறு, நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

=====