"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


மருமகள்களே வழக்கறிஞரிடம் ஜாக்கிரதையாக இருங்கள்!

மருமகள்களை ஏமாற்ற பல கூட்டம் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. சட்டம் படித்து உதவி செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஒரு கூட்டமும் இதில் அடங்கும். மருமகள்கள்தான் விழிப்புணர்ச்சியுடன் இருந்து தங்களை அனைத்துவித தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் ஆசிரியை விவாகரத்து வழக்கில் போலி பெயரில் "ஒரிஜினல்' வழக்கறிஞர்கள் :விசாரணையில் அம்பலம்

ஜனவரி 01,2012 தினமலர்


மனைவிக்கு பதில் வேறு ஒரு பெண்ணை கோர்ட்டில் நிறுத்தி, விவாகரத்து பெற்ற வழக்கில், போலி பெயரில், ஒரிஜினல் வழக்கறிஞர்கள் ஆஜரானது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கோவை, பீளமேட்டைச் சேர்ந்தவர் சொர்ணலதா, 34; சிங்கப்பூரில் ஆசிரியராக பணியாற்றுகிறார். 2004ல் இவருக்கும், நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த, இன்ஜினியர் சிவகுமாருக்கும் திருமணம் நடந்தது. சிவகுமார், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவரை அணுகி, சிங்கப்பூரில் இருக்கும் மனைவிக்கு தெரியாமல், கோவை குடும்பக்கோர்ட்டில் இருந்து, விவாகரத்து பெற்றார். தகவல் அறிந்த சொர்ணலதா, உடனடியாக கோவை திரும்பி, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இன்ஜினியர், தனது பெற்றோருடன் கைது செய்யப்பட்டார்.

விவாகரத்து உத்தரவு பெற்றுத்தந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், சிவகுமாரின் மனைவியாக கோர்ட்டில் ஆஜரான பெண், நண்பர் மாரிமுத்து, இருதரப்பிலும் வழக்கறிஞர்களாக ஆஜரான போலி நபர்களை, போலீசார் தேடினர். கடந்த 28ம் தேதி, மாரிமுத்து கோர்ட்டில் சரணடைந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், சிவகுமார், சொர்ணலதா சார்பில், குடும்பக் கோர்ட்டில் ஆஜரானவர்கள் போலி வழக்கறிஞர்கள் அல்ல; போலி பெயரில் ஆஜரான ஒரிஜினல் வழக்கறிஞர்கள் தான் என்றும், எங்கும் தலைமறைவாகாமல் தினமும் கோர்ட்டுக்கு வருகின்றனர் என்ற தகவலும், தெரிய வந்துள்ளது. தனிப்படை போலீசாரிடம் கேட்டபோது,""அவர்களை கைது செய்ய, நாள் குறித்து விட்டோம். இவ்வழக்கில், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், முன்ஜாமின் பெற ஐகோர்ட்டுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அவர் சரணடைந்தால் அல்லது கைது செய்யப்பட்டால், மற்ற இரு வழக்கறிஞர்களை கைது செய்வதில் சிரமம் இருக்காது,'' என்றனர்.



1 comment:

  1. தெரிஞ்சிக்க வேண்டிய செய்தி தான் நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்