"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


இந்திய சமூகம் ஆபத்தானது: மருமகள்களே உஷார்!

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இந்திய சமூகமே சீரழிந்துகொண்டிருக்கிறது. மருமகள்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதனால் மருமகள்களே இந்திய வரதட்சணை தடுப்புச்சட்டங்களை (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act) நீங்கள் கையில் எடுத்தால்தான் கணவனையும் அவனது குடும்பத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

உங்களுக்குக் கொடுமை ஏற்படும் வரை காத்துக்கொண்டிருக்காமல் உடனடியாக சட்டங்களை எப்படிப் பயன்படுத்தி கணவனின் குடும்பத்தை எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்று பின்வரும் முந்தைய பதிவுகளில் தெரிந்துகொள்ளுங்கள்.

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4


இந்தியாவில் மருமகளாக இருப்பதில் இருக்கும் ஆபத்துக்களைப்பற்றி இந்திய உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது. அதனால் நீங்கள்தான் உங்களை புத்திசாலித்தனமாக காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.


அக்டோபர் 31,2010 தினமலர்

புதுடில்லி : ""இந்திய சமூகம் நோய்வாய்ப்பட்டிருக்கிறது,'' என, சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.

சத்யநாராயணா திவாரி என்பவர் தனது மனைவி கீதாவை, அவரின் தந்தையிடமிருந்து மாருதி காரை வரதட்சணையாக வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தினார். 2000ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, கீதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். இதற்கு திவாரியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். இவர்களுக்கு அலகாபாத் ஐகோர்ட் ஆயுள் தண்டனை வழங்கியது. இதையடுத்து, இருவரும் சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை, நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: இந்திய சமூகம் தற்போது, நோய்வாய்ப்பட்ட சமூகமாக மாறி வருகிறது. இதற்கு ஆதாரமாக, சுப்ரீம் கோர்ட் உட்பட, நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும், அதிக எண்ணிக்கையில் இத்தகைய வரதட்சணைக் கொலை வழக்குகள் வரத்தொடங்கியுள்ளன. புதிதாக திருமணம் செய்து கொண்டு, ஆயிரம் கனவுகளோடு புகுந்த வீடு போகும் இளம்பெண்கள், தனது கணவனாலும், மாமனார் மற்றும் மாமியாரால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

மேலும், மண்ணெண்ணெய் ஊற்றி, உயிருடன் எரிக்கப்படுகின்றனர் அல்லது, வலுக்கட்டாயமாக தற்கொலை செய்து கொள்ள தூண்டப்படுகின்றனர். இந்த நாகரிக சமூதாயத்தில், பெண்கள் பயங்கரமாகவும், காட்டு மிராண்டித்தனமாகவுமே கையாளப்படுகின்றனர். பொதுவாக, இத்தகைய கொடூரச் செயலுக்கு, அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஆனால், அரிதிலும், அரிதாகவே, வரதட்சணைக் கொலை வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். அத்துடன் திவாரிக்கும் அவரின் தாயாருக்கும் அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.


திருமணம் செய்து கனவுகளுடன் மாமியார் வீட்டிற்குள் புகுந்தால் மட்டும் போதாது மருமகள்களே. அந்தக் கனவுகளை நனவாக்கிக்கொள்ள இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் மருமகள் பாதுகாப்பு சட்டங்களை எப்படிப் பக்குவமாக பயன்படுத்தவேண்டும் என்ற கலையையும் நீங்கள் கற்றிருக்கவேண்டும். வேறு எந்த வேலை தெரிகிறதோ இல்லையோ கண்டிப்பாக ஒவ்வொரு இந்திய மருமகளும் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற சட்டங்களை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று கற்றறிந்து வைத்திருக்கவேண்டும். இதுதான் உங்கள் திருமணக் கனவுகளை நனவாக்கிக்கொள்ள பயன்படும் மந்திரம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்