- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm
மருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்
தாலி நிலைத்திருக்க நாலு முடிச்சு!
தாலியில் போடப்படும் மூன்று முடிச்சு நிலைத்திருக்க நான்காவதாக ஒரு முடிச்சு போடவேண்டுமாம். தமிழ்நாட்டுப் பெரியவர்கள் சொல்கிறார்கள். மருமகள்களே நீங்கள் இதுபோல தாலி நிலைக்க உங்கள் வீட்டிலிருந்து வைரத்தால் ஆன கழுத்தணியை போட்டு நான்காவது முடிச்சு போட்டுக்கொண்டீர்களா?
1. உரிமைக்காக முதல் முடிச்சு - கணவனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் உரிமை. நான் முன்பே கூறியிருப்பது போல் இது தான் IPC 498A ரிமோட் கண்ட்ரோல். மறந்து போனவர்கள் முந்தைய பதிவுகளைப் படிக்கவும்.
2. உறவுக்காக இரண்டாம் முடிச்சு - கணவனுடன் சேர்த்து அவனது உறவினர் அனைவரையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துகொள்வதற்காக கொடுக்கப்படும் உரிமை. அதனால் வரதட்சணைப் புகார் எழுதும்போது கணவனின் குடும்பத்திலுள்ள எல்லா உறவினர்களையும் சேர்த்து கூட்டமாக எழுதலாம். இப்போது தான் எனக்குக் கூட இந்த இரண்டாம் முடிச்சின் அர்த்தம் புரிகிறது. நான் இதுவரை பார்த்த வரதட்சணைப் புகார்களிலெல்லாம் மருமகள்கள் கணவனின் குடும்பத்திலுள்ள எல்லோருடைய பெயரையும் சேர்த்து எழுதியிருந்தார்கள். அவர்களின் "தாலி சென்டிமென்ட்" இப்போது தான் புரிகிறது!
3. ஊருக்காக மூன்றாவது முடிச்சு - இதற்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கிறது. ஒன்று ஊரில் இருக்கும் கணவருடன் தொடர்புடைய யாரைவேண்டுமானாலும் வரதட்சணை வழக்கில் சேர்க்கலாம் என்று ஒரு அர்த்தம். இரண்டாவது அர்த்தம் மருமகளுக்குக் கட்டுப்படாத கணவனையும் அவனது குடும்பத்தையும் வரதட்சணை வழக்கில் சிக்கவைத்து தொலைக்காட்சி, செய்தித்தாள் என எல்லாவற்றிலும் செய்தியை போட்டு கணவனின் குடும்பத்தை ஊரறிய அவமானப்படுத்தலாம் என்றும் பொருள் கொள்ளலாம். பிறகு கணவன் தானாக வழிக்கு வருவான்.
ஆகா! மருமகள்களுக்காக பிற்காலத்தில் சட்ட மேதைகள் எழுதப்போகும் பலசட்டங்களை நமது முன்னோர்கள் எப்படி சுருக்கமாக மருமகள்களுக்கு புரியும் விதமாக மூன்று முடிச்சில் முடிந்து வைத்திருக்கிறார்கள். அருமை!
இந்த மூன்று முடிச்சுகளின் முழுப்பலனும் கிடைக்க நான்காவதாக ஒரு முடிச்சும் போட்டுக்கொள்ளவேண்டும் என்கிறார்கள். ஒரு வேளை வாஸ்த்து சாஸ்த்திரப்படி இது சரியாக இருக்கலாம் என நினைக்கிறேன். அல்லது திருமணத்தில் போடப்படும் இந்த நகையை எதிர்காலத்தில் கணவனும் அவனது குடும்பமும் கேட்ட வரதட்சணை என்று வழக்கில் சேர்க்க ஒரு ஆதாரமாக உதவும் என்ற உயர்வான நோக்கத்திலும் சொல்லியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் மேலே சொல்லியபடி தாலியில் போடப்படும் மூன்று முடிச்சுகள் உங்களுக்கு பலமாக அமைய இந்த நான்காவது முடிச்சு உறுதுணையாக இருக்கும் என நினைக்கிறேன்.
அதனால் நான்காவது முடிச்சு போட்டுக்கொள்ள விரைவில் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இதுவரை அப்படி செய்யவில்லையென்றால் உங்கள் வீட்டில் உங்களுக்கு சேரவேண்டிய சொத்தின் ஒரு பகுதியிலிருந்து பணத்தைப்பெற்று நான்காவது முடிச்சைப் போட்டுக்கொள்ளுங்கள். பல குடும்பங்களில் உடன்பிறந்த சகோதரர்களும், பெற்றோரும் பெண்ணின் திருமணத்திற்காக நிறைய செலவு செய்துவிட்டதாக பொய்கணக்குக் கூறி அத்தோடு உங்கள் கணக்கை முடித்துவிட்டு உங்களுக்கு சேரவேண்டிய சொத்தைக் கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள்.
அரசாங்கம் எப்போதோ பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை இயற்றிவிட்டது. ஆனால் தந்தையும், சகோதரர்களும் கூட்டணியமைத்து அந்த சட்டங்களை மதிக்காமல் தங்கள் வீட்டு பெண்களையே ஏமாற்றுகிறார்கள். அந்த சட்டங்களைப் பற்றி முன்பு ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்: பந்தாடப்படும் (மரு) மகள்கள்
இதுபோன்று ஏமாற்றுக்கார தந்தையும் சகோதரர்களும் இருக்கும் வரை எத்தனை பெரியார்கள் வந்து பெண்ணுரிமைக்காகப் போராடினாலும் பெண்களுக்கு சமஉரிமையை இந்த ஆணாதிக்க சமுதாயம் கொடுக்கப்போவதில்லை.
கணவனை சமாளிப்பது எப்படி?
வழக்கம் போல இந்த முக்கியமான பாடத்திற்கு போவதற்கு முன் முந்தைய பாடங்களை மறந்து போனவர்கள் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அதற்கான இணைப்புகள் கீழே உள்ளன.
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4
இனி, வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 5
போலிஸ் என்றவுடன் பயத்துடன் நாம் என்ன செய்யமுடியும் என்று தயங்கவேண்டாம். நீங்கள் வழக்கம் போல உங்களுக்குத் தேவையானபடி IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற சட்டங்களைப் பயன்படுத்தலாம். சில சமயம் இந்த புகார்களை நீங்கள் கொடுத்தவுடன் அவர்கள் எந்த வகையிலாவது "அவர்களுக்குத் தெரிந்த வழியில்" தப்பித்துவிடலாம்.
அதனால் நீங்கள் இந்த சட்டங்களுடன் கூடவே வேறுவிதமான வழிமுறைகளையும் பின்பற்றவேண்டும். அது தான் துறை சார்ந்த நடவடிக்கை. இதன் மூலம் காவல்துறையில் வேலையை இழக்கவோ அல்லது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதற்காக மருமகள்களுக்கு உதவுவது தான் "தமிழ்நாடு காவல்துறை அலுவலர் நடத்தை விதிகள்". இதை ஒவ்வொரு காவல்துறை பணியாளரும் கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் துறைசார்ந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த நடத்தை விதிகளின் படி காவல்துறையில் பணியாற்றும் நபர் வரதட்சணை வாங்கவோ அல்லது கொடுக்கவோ அல்லது கொடுப்பதற்கு உதவியோ செய்யக்கூடாது.
மேலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மணமகள் அல்லது மணமகன் அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த எவரிடமும் வரதட்சணை கேட்கக்கூடாது.
அதுமட்டுமல்ல திருமணம் முடிந்தவுடன் ஒவ்வொரு காவல் துறை பணியாளரும் தன்னுடைய திருமணத்திற்காக தான் வரதட்சணை கொடுக்கவோ அல்லது வாங்கவோ அல்லது கேட்கவோ இல்லை என்று உறுதிமொழியளித்து கணவன், மனைவி இருவரும் கையொப்பமிட்ட படிவத்தைத் தமிழ்நாடு காவல் துறைத் தலைவருக்கு (DGP) அனுப்பவேண்டும். திருமணம் காவல் துறை பணியாளரின் மகனுக்கோ அல்லது மகளுக்கோ நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட இரு குடும்பங்களும் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
இதோ அது சம்பந்தப்பட்ட அரசாணை. பக்குவமாக நோட்டுப்புத்தகத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்:
TAMILNADU SUBORDINATE POLICE OFFICERS’ CONDUCT RULES 1964
(G.O.Ms.No. 3638, Home 24th November, 1964)The amendment hereby made shall come into force with effect from 24th September 2009
DOWRY
No Police Officer shall(5) (a) (i) give or take or abet the giving or taking of dowry
or
(ii) demand directly or indirectly, from the parents or guardian of a bride or bridegroom, as the case may be,any dowry.
Explanation.—For the purpose of this sub-rule, “dowry” has the same meaning as in the Dowry Prohibition Act, 1961(Central Act 28 of 1961).
(b) Every Police Officer shall, after his marriage or when he celebrates the marriage of his children furnish to the Director General of Police, a declaration that he has not taken any dowry. Where the Police Officer gets married, the declaration shall be signed by the Police Officer, the wife or husband, as the case may be, of the Police Officer and their parents or guardian. Where the son or daughter of the Police Officer gets married, the delcaration shall be signed by the parties of the marriage and their parents or guardian which shall include the Police Officer also”.
இது போல் எத்தனைக் காவலர்கள் அல்லது காவல்துறைக் குடும்பங்கள் இந்த நடத்தை விதிகளைப் பின்பற்றியிருப்பார்கள் என்று சற்று யோசித்துப்பாருங்கள். இவர்கள்தான் நாட்டில் மற்றவர்கள் கொடுக்கும் வரதட்சணைப் புகார்களை பதிவுசெய்து "விசாரணை செய்து" பலருக்கு குற்றப்பத்திரிக்கை "தயார் செய்து" நீதிமன்றங்களுக்கு அனுப்பும் வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் இதுபோன்ற காவல்துறை குடும்பங்களில் மருமகளாக சிக்கிகொண்டு "வரதட்சணை கொடுமைகளில்" தவித்துக்கொண்டிருந்தால் இந்த வழிகளையும் பயன்படுத்திக்கொள்ள கொஞ்சமும் தயங்காதீர்கள். அரசாங்கம் கொடுத்திருக்கும் சலுகைகளை பயன்படுத்தாமல் போவது மருமகள்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்வதற்குச் சமமாகும்.
பிறகென்ன காவல்துறை தலைவரின் காதுகளில் காவலர் குடும்பத்தைப் பற்றிய இந்த விஷயத்தைப் போட்டுவிடுங்கள். பிறகு எந்த வகையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேளுங்கள். சரியான பதில் கிடைக்கவில்லையென்றாலோ அல்லது எந்தவகையிலாவது மிரட்டல்கள் வந்தாலோ மாநில மகளிர் ஆணையத்தை அணுகி உதவி கேட்பதற்குக் கொஞ்சமும் தயங்காதீர்கள். மகளிர் ஆணைய அலுவலகத்தின் கதவுகள் மருமகள்களுக்காகவே எப்போதும் பாசமுடன் திறந்திருக்கின்றன.
இதோ அவர்களின் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்கள்.
Tamil Nadu State Commission for Women
Ground Floor, Agriculture Office Building,
Chepauk, Chennai - 600 005
Phone: 044 - 28592750
Dr. (TMT) K.M. Ramathal (Chaiperson) | 100, Anna Salai, Guindy, Chennai–6000032 | Phone: | |
Tmt. Qudsia Gandhi, I.A.S. (Member) | Special Commissioner and Commissioner, Treasuries and Accounts, Panagal Building, Chennai–15 | Phone: | |
Tmt. V. Vanitha (Member) | Principle, Police Training College, Chennai- 600 083 | Phone: | |
Tmt. Alice Manohari, (Member) | No.13, G.S.Nagar, Ramapuram Chennai-600 089 | Phone: | |
Tmt. Eugenie pinto (Member) | Principle Queen Mary’s College, Chennai- 600004 | -NA- | |
Tmt. C. Sangamithrai, (Member) | 259/9, Kilpauk Garden Road Chennai – 10 | Phone: | |
Tmt. K. Gayathridevi, (Member) | No.38, G.S.T. Road, Opposite to Police Quarters, Madurantagam,Kancheepuram District, Tamil Nadu | Phone: | |
Tmt. P. kamalambai, MLA (Member) | 12-A, S.V.N. Street, Kancheepuram, Tamil Nadu | Phone: | |
Thiru N. S. Palaniappan, I.A.S. (Member) | Secretary to Government, Social Welfare and NMP Department, Secretariat, Chennai- 600009 | Phone: | |
Thiru V. Thangavelu, I.A.S.(Member Secretary) | Commissioner and Director of Social Welfare, Chepauk. Chennai-600005 | Phone: |
போலிஸ் குடும்பத்திலுள்ள மருமகளுக்குத் தேவையான மேலும் சில முக்கியமானத் தகவல்கள்
வரதட்சணைத் தவிர பரிசுப் பொருட்கள் பெறுவதிலும் காவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சில விதிமுறைகள் இருக்கின்றன.
காவலரோ அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ காவல்துறைத் தலைவரின் அனுமதியில்லாமல் யாரிடமிருந்தும் 5000 ரூபாய் மதிப்பிற்கு மேலாக எந்தப் பொருட்களையும் பரிசாகப் பெறக்கூடாது. அதே சமயம் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பெறப்படும் பரிசுகளுக்கு காவல் துறைத் தலைவரிடமிருந்து அனுமதி பெறவேண்டாம். ஆனால் பரிசுப்பொருளின் மதிப்பு 5000 ரூபாய்க்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
அதனால் உங்கள் திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட பரிசுகளின் மதிப்பை மறந்து விடாதீர்கள். தேவைப்படும்போது கணவரை கட்டுப்பாட்டிற்குள் வைக்க இந்த சின்ன விஷயங்கள் பெரிய அளவில் உதவும்! சிறு துரும்பும் பல் குத்த உதவும் அல்லவா!
இதோ பரிசுப்பொருட்கள் தொடர்பான அரசாணை:
Gifts
‘Police Officer’ means any member of the Tamil Nadu Police Sub-Ordinate Service or Tamil Nadu Special Police Sub-Ordinate Service whether for the time being on Foreign Service or not (substituted by G.O.Ms.No. 1279, Home, 8th June, 1981).
போலிஸ் குடும்பங்களில் வாழ்க்கைப்பட்டுள்ள அப்பாவி மருமகள்களின் வாழ்வில் இப்போது நம்பிக்கை என்ற தீப ஒளி தெரியும் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை ஒளியில் எந்தவகையிலாவது குறுக்கீடு ஏற்பட்டால் முன்பே கூறியது போல மகளிர் ஆணையம் என்ற கோட்டைக்குள் தஞ்சம் புக கொஞ்சமும் தயங்காதீர்கள்.
சட்டங்களைப் பயன்படுத்துங்கள்! சந்தோஷமாக வாழுங்கள்!!
இனி அடுத்த பதிவில் அரசுப்பணியில் உள்ள கணவரின் குடும்பத்தில் அல்லது மாமனாரின் குடும்பத்தில் வாழ்க்கையை தொலைத்திருக்கும் மருமகள்களுக்குத் தேவையான விஷயங்களைத் தருகிறேன்.
வாழ்த்துக்கள்!