வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3
வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4
இப்போது புதிதாக வந்திருக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் மூலம் இன்னும் எப்படி அதிக பலத்துடன் அடக்கலாம் என்று செய்தித்தாளில் விளக்கமாக எழுதியிருக்கிறார்கள்.
முக்கியமான “பாயிண்ட்டுகளை” சிவப்பு நிறத்தில் கனமான எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »சொல்கிறார்கள் >> அக்டோபர் 24,2011
குடும்ப வன்முறையிலிருந்து மீள வழி கூறும் வழக்கறிஞர் அஜிதா:
"குடும்பம் வேண்டும்; வன்முறை வேண்டாம்' என்று சொல்லும் பெண்களுக்காக, இது ஒரு சிவில் சட்டமாக போடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தில் ஒருவர் மீது புகார் கொடுத்தால், அவர்களைக் கைது செய்வதோ, சிறையில் அடைப்பதோ இல்லை. மாறாக, பாதுகாப்பு அதிகாரி என்ற ஒருவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிப்பர். இவர்களிடம் நேரடியாக புகார் தரலாம்.புகார் தரும் போது, பாதிக்கப்பட்ட பெண் என்றில்லை, அவர் சார்பாக, வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் தரலாம். ஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது.
ஒரு வீட்டில் வன்முறைக்கு யார் காரணமோ, அந்த ஆணுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, அதன் பின் அவரை யாராவது தூண்டினால், சம்பந்தப்பட்ட பெண் மீதும் புகார் தரலாம். புகாரைப் பெற்றுக் கொண்டவுடன், சம்பந்தப்பட்டவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பி, பேசச் சொல்வார்கள். அதனடிப்படையில், கோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
எதற்குமே கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு எதிராகத் தான் இந்தச் சட்டம். புகார் மீதான ஆரம்பக் கட்ட நடவடிக்கையின் போதே, சிலர் "பிரச்னை செய்ய மாட்டேன்' என்று சொல்லி வீட்டிற்கு வருவர். வந்த பின், பழையபடி பிரச்னையை ஆரம்பிக்கலாம் என்பதால், அவர்களிடம் எழுதி வாங்கிக் கொள்வர். இதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்!
======
இனி இந்த சட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ள விளக்கத்தினைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்....
- ஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது.
குறிப்பாக மகளின் காதலுக்குத் தடைபோடும் அப்பா மீதும் இந்த சட்டத்தை மகள் ஏவிவிடலாம். எல்லாம் குடும்ப வன்முறைதானே...அதற்கும் இந்த சட்டத்தில் வழி இருக்கிறது! இதைப் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக எழுதியிருக்கிறேன். இங்கே சென்று படித்துப் பாருங்கள்: காதலுக்கு தடை போடும் பெற்றோருக்கு பாடம் கற்பிக்க வந்துவிட்டது சட்டம்!
- கோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
அவன் வீட்டிற்கு வரவில்லையென்றால் செலவிற்கு பணத்திற்கு என்ன செய்வது என்று மருமகள்கள் கவலையோடு யோசிப்பது புரிகிறது. அதைப் பற்றி கவலையே படவேண்டாம். இந்த குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம் கணவனை அவன் வீட்டிற்குள்ளேயே நுழைய விடாமல் தடுக்கலாம் ஆனால் மாதந்தோறும் குடும்ப பராமரிப்பிற்கு மட்டும் சரியாக பணத்தை அனுப்பவேண்டும் என்றும் நீதிமன்றத்தின் மூலம் ஆணை பிறப்பிக்கலாம். எப்படிஇருக்கிறது இந்த புதிய சட்டம்!!!!!!
- இதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்!
இதன் விளைவாக அவன் என்ன செய்வதென்றே வழி தெரியாமல் மருமகள் சொல்லும் பேச்சிற்கு அடங்கி நடக்கலாம் என்ற முடிவிற்கு வந்துவிடுவான். அல்லது வேறு நல்ல தீர்வாக மருமகள் கேட்கும் ஒரு பெருந்தொகையை கொடுத்துவிட்டு ஆளை விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடிவிடுவான்.
இந்த இரண்டிற்கும் அவன் கட்டுப்படவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது IPC498A. இந்த IPC498A சட்டம் இப்போது தனித்து செயல்படாமல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்திற்குள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. தேவையானதை மருமகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதனால் மேலே குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து பலன்களையும் மருமகள் அனுபவிக்கலாம் அதே சமயம் IPC498A சட்டத்தையும் பயன்படுத்தி கணவனை கைது செய்து நீதிமன்றத்திலும் அலைய விடலாம். இந்த வசதி எப்படி இருக்கிறது....பிரமாதம்.
இப்படிப் பலவகையான வசதிகள் இருக்கின்றன இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில். அதனால் மருமகள்கள் இந்த புதிய சட்டத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு பக்குவமாகப் பயன்படுத்தி பலன் அடையாலாம். இப்படிப் பலர் இப்போது பயனடைந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்!
முக்கியமான பின்குறிப்பு: இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை பெண்கள் தாராளமாக ஆண்களுக்கெதிராக பயன்படுத்தலாம். ஆனால் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் குடும்ப வன்முறை செய்வதாகக் கூறி பெண்ணின் மீது ஒரு ஆணால் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி புகார் கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்தியாவில் ஆண் மட்டுமே குடும்ப வன்முறை செய்பவன் என்பது உலகறிந்த உண்மை. மருமகள்களுக்கு எந்த வன்முறையும் செய்யத் தெரியாது! இதுவும் மருமகள்களுக்கு நல்லதுதானே!!