"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


வரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள் - மருமகளுக்கு மட்டும்

வரதட்சணைக் கொடுமைக்குள்ளாகும் மருமகள்கள் கணவனின் குடும்பத்திற்கெதிராக IPC498A, Dowry Prohibition Act பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டிய ஆதாரங்கள் கீழே பட்டியலிடப்பட்டிருக்கிறது.

மருமகள்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர மாநில காவல் துறை இந்தப் பட்டியலைக் கொடுத்திருக்கிறது. அதனால் மருமகள்கள் மறக்காமல் இந்த ஆதாரங்களை காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்றால் உங்களின் புகார் உடனடியாக முதல் தகவல் அறிக்கையாக (FIR) பதிவு செய்யப்பட்டு உடனடியாக கணவனின் ஒட்டுமொத்தக் கூட்டமும் கைது செய்யப்படும்.

இந்த ஆதாரங்களை எப்படி திரட்டுவது என்று பல மருமகள்கள் கொடுத்த அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து ஒவ்வொரு பாயிண்ட்டிற்கும் கீழே மருமகள்களின் வசதிக்காக விளக்கமாக தந்திருக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Reporting Dowry Harassment
What should your complaint include?
  • Details of marriage including wedding card, marriage certificate, photos, videos etc.
இப்போதே உங்களின் திருமண அழைப்பிதழை தேடி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். போட்டோ மற்றும் வீடியோவை தனியாக ஒரு DVD காப்பி செய்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் எப்போது எந்த விசேஷம் நடந்தாலும் மாமனார் மாமியாருக்கு மரியாதை செய்வது போல ஒரு தட்டில் பூ பழங்கள் வைத்து கொடுப்பதுபோல ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது அந்தத் தட்டில்தான் பணம் வைத்துக்கொடுக்கப்பட்டதாக சொல்லலாம். முடிந்தால் அந்தத்தட்டில் பணம் இருப்பது போல ஒரு செட்டப் செய்து புகைப்படம் எடுத்துக்கொள்வது மிகவும் சிறப்பானது. நீங்கள் கொடுப்பதை விட உங்களது பெற்றோர் கொடுப்பதுபோல புகைப்படம் எடுத்துக்கொள்வது மிக மிக சிறப்பானது. அந்தப் புகைப்படத்தை யார் பார்த்தாலும் வரதட்சணை பரிவர்த்தனை நடந்ததாக நம்பிவிடுவார்கள்.
  • Name(s) of accused persons and their details like addresses and passports etc.

யார் மீதெல்லாம் புகார் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களைப்பற்றிய விவரங்களை தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் சமயத்தில் மிகவும் உதவியாக இருக்கும்!
  • Details of harassment like duration, time period, place and type of harassment.
கணவனுக்குத் தெரியாமல் தனியாக ஒரு நோட்டுப் புத்தகம் வைத்து அவ்வப்போது குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை தேதி, நேரம், இடம் போன்றவற்றை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக வெளி ஊர்களில் இருந்து நாத்தனார் உங்கள் கணவனுடனோ அல்லது உங்களுடனோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய விவரங்களை தவறாமல் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.
  • Details of demand of dowry, if any
  • Bank statement, if you have drawn dowry from the bank
  • Details of the cheque if you have paid the dowry in that form
பணப்பரிவர்த்தனை விஷயங்களை கவனமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்களது பெற்றோர் வங்கியிலிருந்து தங்களது சொந்த செலவிற்கு பணம் எடுத்திருந்தாலும் அந்த விஷயங்களை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது வரதட்சணை கொடுப்பதற்காகத்தான் அந்தப் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டதாக புகாரில் கணக்குக் காட்டிவிடலாம்.

  • Details of the person to whom it was handed over.
கணவன் வீட்டில் யார் யாரைப் பிடிக்கவில்லையோ அவர்கள் பெயரையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டு எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது யார் பெயரையாவது புகாரில் சேர்க்காமல் மறந்து போய்விடுவீர்கள்.
  • In case of physical violence, details of injuries and type of weapon.
  • Doctor’s prescription or case sheets of the treatment of such injuries.
எப்போதாவது அரிதாக வீட்டு வேலை செய்யும்போது (?) சிறு காயம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு அதற்கான ஆதாரத்தை பத்திரமாக ஒரு ஃபைலில் அழகாக தேதிவாரியாக அடுக்கிவைத்துக்கொள்ளுங்கள். புகார் கொடுக்கும்போது கணவனும் அவனது குடும்பத்தாரும் வரதட்சணைக்காக அடித்துக் கொடுமை செய்யும்போது ஏற்பட்ட காயம் என்று புகாரில் சேர்த்துவிடலாம்.
  • Details of the elders who had arranged the marriage and who tried to patch up the differences.
  • Places where the mediation/counselling sessions were held
கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கு வந்த பெரிசுகளின் பெயர்களை விலாசத்துடன் முழுவிவரத்தோடு சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக வயதான கிழவன்களை உங்கள் பக்கம் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இது போன்ற கிழங்கள்தான் ஜொல்லுவிட்டுக்கொண்டு மருமகள் சொல்வதெல்லாம் நியாயம் என்று எங்கு வேண்டுமானாலும் கண்ணை மூடிக்கொண்டு சத்தியம் செய்யத் தவம் கிடக்கும்.
  • Details of witnesses, especially independent witnesses and your own children.
உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆண் கிழடுகளை சரிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போதும் வழக்கு நடக்கும்போதும் காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ உங்கள் சார்பாக வாக்குமூலம் கொடுக்கவோ, சாட்சி சொல்லவோ உதவியாக இருக்கும். உங்களுக்கு குழந்தை இருந்தால் இப்போதே கணவனுக்கெதிராக பேசுவதற்கு தயார்படுத்தி வைத்து விடுங்கள். தேவையான சமயத்திற்கு உதவும்.
  • Any written agreements during marriage.
  • Details of gifts in the form of movable property like jewels/cash/garments/vehicles and immovable property like plots/flats.
  • Any written/voice communication between the partners, the victim and the parents in the form of letters, emails, voice records etc.
கணவன் தரப்பிலிருந்து யார் எப்போது பேசினாலும் அவற்றை எல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்துவைத்துக்கொள்ளுங்கள். வரதட்சணை தொடர்பான பேச்சை நீங்களே ஆரம்பித்து அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை பதிவு செய்துவிடுங்கள். அதே போல கடிதத்தில் ஏதாவது பணம், நகை போன்ற சொற்கள் எங்காவது இருந்தால் அந்தக் கடிதங்களை தனியாக ஒரு ஃபைலில் சேகரித்துவைத்துக்கொள்ளுங்கள்.
  • Reasons for the delay in lodging the complaint, if any.
  • Signature of the victim and contact number.

ஆதாரங்களை எப்படி திரட்டுவது என்று இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த புதிய வழிமுறைகள் இருந்தாலும் எனக்கு அனுப்பிவையுங்கள். மற்ற மருமகள்களும் பயனடையட்டும்.

வாழ்த்துக்கள்!


27 comments:

  1. //கணவன் வீட்டில் யார் யாரைப் பிடிக்கவில்லையோ அவர்கள் பெயரையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டு எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது யார் பெயரையாவது புகாரில் சேர்க்காமல் மறந்து போய்விடுவீர்கள்//

    மறந்து ​போனாலும் பரவாயில்​லை... சில வருடங்கள் மற்றும் சில மாதங்கள் கழித்தும் ​பெய​ரை அந்த F.I.Rல் இ​ணைத்துக்​கொள்ளலாம். உதாரணத்திற்கு எனது தம்பி ​பெயர் பல மாதங்கள் கழித்து இ​ணைக்கப்​பெற்று அவ​னையும் ​கைது ​செய்து சி​றையில் அ​டைத்தார் உங்கள் மருமகள் மன்ற சிறப்பு உறுப்பினர்.. (அதாங்க என்​னோட 498ஏ ம​னைவி)

    ReplyDelete
  2. மிகவும் தவறான வழிகாட்டி பதிவு. தவறிழைக்கும் மருமகளை வழிகாட்டும் என்றும் நல்ல மருமகளுக்கு நல்லதொரு பாதுகாப்பு நல்கிடும் என்றும் 'மருமகளிடம்' எதிர்பார்த்தேன்.

    குடும்பத்தினை சிதைக்கும் கோடரிக் காம்பு பதிவு என்று உணர்கிறேன். கருத்தினை சற்று ஆணித்தரமாக சொல்வதற்காக வருந்துகிறேன் ஆனால் உண்மை அது தான். இந்த பதிவு செல்லும் விதத்தினை பார்க்கும் போது ஒன்று உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகிஇருக்காது அல்லது நீங்கள் ஒரு ஆணாக இருக்க வேண்டும் (சும்மா ஒரு பந்தாவுக்க) இந்த பதிவினை எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    நாட்டின் நலன் மற்றும் இறையாண்மை கருதி உங்கள் கருத்துகளை சீர்திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. Nithya Lavanya,
    உங்களின் வருகைக்கும் “ஆணித்தரமான” கருத்திற்கும் நன்றி. மருமகளிடம் எதிர்பார்த்து நீங்கள் ஏமாற்றம் அடைந்ததற்கு வருந்துகிறேன். உங்களைப் போல பலரும் இப்படித்தான் ஏமாற்றமடைகிறார்கள். ஏனென்றால் இந்த சமூகம் மருமகள் என்றவுடன் ஒரு எதிர்பார்ப்புடன்தான் பார்க்கிறது. அதனால்தான் இந்த கசப்பான ஏமாற்றங்கள்.

    உங்களின் கருத்தினை பார்க்கும்போது நீங்கள் கண்டிப்பாக ஒரு “மாமியாராகத்தான்” இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மாமியாருக்குத்தான் மருமகள் எது செய்தாலும் குற்றமாகத் தெரியும்.

    மீண்டும் ஒருமுறை உங்களின் கருத்திற்கு நன்றி!

    ReplyDelete
  4. கல்யாணமே பண்ணாம இருப்பது எவ்வளவு நல்லது :))

    ReplyDelete
  5. // Blogger செந்தழல் ரவி said...

    கல்யாணமே பண்ணாம இருப்பது எவ்வளவு நல்லது :)) //

    இப்படிப் பொதுவாக ஒரு கருத்து தெரிவித்து திருமண பந்தத்திலிருந்து நீங்கள் ஒதுங்கிக்கொண்டால் பிறகு குடும்பங்களில் “மருமகள்” என்ற “புனிதமான” உறவே இல்லாமல் போய்விடுமே.

    ReplyDelete
  6. இந்த பதிவு மிக்க உண்மை, திருமணம் செய்தவுடன் பெண்கள் கணவரின் வருமானம் அனைத்தும் தங்களின் பிறந்த வீட்டிர்க்கு தான் சொந்தம் என்று பேராசை பிடிதவர்களாக நிறைய பெண்கள் இருக்கின்றார்கள். முதலில் போலீசில் வழக்கு போடுவதாக மிரட்டுகின்றனர். இவர்களின் ஆசைக்கு கட்டுபடாவிட்டால் பழிவாங்க போலீசில் போய் வழக்கு போடுகின்றனர். பாவம் கஷ்டப்பட்டு படிக்க வைத்த பையனின் பெற்றோர் எந்த தவறும் செய்யாமல் தண்டிக்க படுகின்றனர்.

    ReplyDelete
  7. thirumanam aahi ethanai varudathirkul varathatchanai kodumai case poda mudium

    ReplyDelete
    Replies
    1. தகுந்த முறையில் புகாரை பதிவு செய்தால் வரதட்சணை வழக்கு பதிவு செய்ய எந்தவித காலவிதிமுறையும் இல்லாமல் பதிவு செய்ய முடியும். அது புகாரை எழுதும் விதத்தைப் பொறுத்து இருக்கிறது. வரதட்சணை வழக்கு பதிவு செய்ய காலம் கடந்துவிட்டதாக கருதினால் அதைவிட சக்தி வாய்ந்த குடும்ப வன்முறை சட்டம் இருக்கிறது. அதனைப் பயன்படுத்தலாம்.

      Delete
    2. Thirumanathin podhu en thozhiku (age 27) aval kanavarukku (age 40) anal kanavar (age 33) jathagathai matri koduthu yarukum theyriyamal thirumanam seithu kondar. Anal kanavar venda veyrupaga vandhu vandhu irukirar.manaiviedam sandai,veyliel alithu selvathillai.mamiyar ,nathanar kulanthai ellai endru sandai. oru varudam kalithu than kanavar vayathai thozhi theyrinnthu kondal .aval payrithaga yeduthu kollavillai.kanavaridam ketkavom ellai. Rendu varudathil pirachanai thanga mudiyamal amma veetirku vandhu vettal , 6 mathangal ahium kanavar varavillai,police case kodutha piragu valavaikirean yendru alaithu sendru 10 natkalil adithu veetai vittu virati vittar. Eppodhu kadantha 4 varadamaga amma veetil irukiral . eppodhu en manaiviku kulanthai pirakadhu yendrum illara valvil nattam illathaval endrum divorce notice anupi irukirar ethairkumeal porumaiyaga iruka mudiyathu endra mudivoku vadhu avar mel enna, enna case podalam endru theylivaga sollugal. Eni ungaludaiya aalosanai thodarnthu theyvai padukiradhu uthaungal pls, pls, pls.....

      Delete
    3. உங்கள் கேள்விகளையும், கருத்துக்களையும் அழகிய தமிழில் எழுதினால் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். அல்லது முற்றிலும் ஆங்கிலத்தில் எழுதுங்கள். இந்த “தங்லீஷ்” படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது.

      Delete
  8. yennaku thirumanam aahi 6 varudangal aahirathu.Ella kanavargalum manaiviyai nadathai kettaval endru Solkirarkal,ethu pola kodumai ennal thanga mudiyamal kadantha 4 varudamaga naan en thaai,thanthaiyarudan valinthu varukerean.

    ReplyDelete
    Replies
    1. மனைவியின் நடத்தையைப் பற்றித் தவறாகக் கூறுதல் IPC498A சட்டப் பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும். தவறான சொற்களால் மனைவியின் மனதை புண்டுபடுத்துவது பெண்ணிற்கெதிரான குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி குற்றமாகும். அதனால் நீங்கள் இருவித சட்டங்களில் நிவாரணம் பெறலாம்.

      Delete
  9. yenaku oru satheygam eru tharappu lawers kum edaiel link vaithu kondu pasai ulla pakkam sathagamaga seivargal endru solkiragalea edhu unmaiya? vilakkamaga sollugal

    ReplyDelete
    Replies
    1. மருமகள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.

      Delete
  10. என் தோழி அவள் குடும்பத்தில் ஒரே மகள். தோழிக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. திருமணத்தின் போது என் தோழிக்கு (வயது 27) அவள் கணவரருக்கு (வயது 40) ஆனால் 33 வயது என்று பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவர் வேண்டா வெறுப்பாக (அன்யோன்யம் இல்லாமலும்)வாழ்ந்து வந்தார். மனைவியிடம் சண்டை, வெளியில் அழைத்து செல்வது கிடையாது. மாமியார்,நாத்தனார் குழந்தை இல்லை என்று பிரச்சனை. ஒரு முறை தற்கொலை முயற்சியும் செய்து கொண்டாள்.எப்படியோ ஒரு வருடம் கழிந்தது. பிறகு தான் கணவர் வயதை தெரிந்து கொண்டாள் தோழி. அவள் அதை பற்றி தெரிந்து கொண்டு ஏதாவது கேட்டால் இரு குடும்பதிற்க்கும் பிரச்சனை ஆகி விடுமோ என்று தெரியாதது போல இருந்து கொண்டாள். இரண்டு வருடத்தில் பிரச்சனை தாங்க முடியாமல் அம்மா வீட்டிற்க்கு வந்து விட்டாள். 6 மாதம் ஆகியும் கணவர் வீட்டிலிருந்து யாரும் அழைக்க வரவி ல்லை. காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தவுடன் அவள் கணவர் நான் சேர்ந்து வாழ்கிறேன் என்று அழைத்து சென்று 10 நாட்களில் அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டார். இப்போது கடந்த நான்கு வருடமாக அம்மா வீட்டில் இருகிறாள். இப்போது அவள் கணவர் தன்னிடம் உள்ள குறைகளையெல்லாம் என் தோழி மீது சுமத்தி இருக்கிறார். அதாவது என் மனைவி இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாதவள் என்றும் அதனால் அவளுக்கு குழந்தை பிறக்காது என்றும் விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார். தோழி இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டாள். இனி அவர் மேல் என்ன வழக்கு தொடரலாம் என்று ஆலோசனை கூறுங்கள். இனி உங்கள் ஆலோசனை படி தான் என் தோழியின் வழக்கு நகரும். உங்கள் சேவை எங்களுக்கு தேவை.


    ReplyDelete
  11. அம்மா பயப்பாடாதிங்க.என்ன அடிச்சு விரட்டிட்டார்.என்னோட நகை எல்லாம் பிடுங்கிட்டார்.நான் நிர்கதியா இருக்கேன்.என்று 498ஆ போடுங்கள்

    ReplyDelete
  12. Entha oru evidence illamal varathatchanai kodumai endru pugar seiya mudiyuma ?

    ReplyDelete
  13. கணவன் மீது வழக்கு தொடர எந்தவித ஆதாரமும் தேவையில்லை. கணவன் வரதட்சணை கேட்டு மனதளவில் துன்புறுத்தினான் என்று கூறினாலே போதும். ஆயுசு முழுக்க கணவனை நீதிமன்றத்தில் அலையவிடலாம்.

    ReplyDelete
  14. என் கணவர் முதல் திருமணத்தை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார் நான் பிரசவத்திற்காக அம்மா வீட்டீற்கு வந்திருக்கிறேன் இங்கே புகார் செய்யலாமா

    ReplyDelete
    Replies
    1. தாராளமாக நீங்கள் இருக்கும் ஊரிலிருந்தே புகாா் கொடுக்கலாம். மேலும் தகவல்களுக்கு மருமகள் பதிவுத்தளத்தை (www. marumagal.blogspot.com) பாா்வையிடவும்.

      Delete
  15. enaku thirumanam aagi 2 vardudam aanthu..ethu varikim en kanavan 12 svaran nagaigalai veithu vittar..adikadi amma vetuku poi kasu ethutu va endru adichi anupuvar..enaku eratai pen kolanthaigal irukindra(twin girls) ethu varium panam matram 300000 en amma vittil koduthanar..mendum enaku kasu venum endru en kanavan enga amma vetuku anupi vitar..enoda mamanar kasu kudunga ilana en paiyanukum unga ponukum samantham ila endru unga poona eduthi koduka solunga endru enga amma vetla vandhu sanda podranga..ethuku ena mudivu

    ReplyDelete
  16. enaku thiumanam 2013 nadai petrathu (22) .varathatchaniyaga 30 savaran enathu kanavan veetil vangi kondanar..epothu enaku eratai pen kolanthaigal erukindra (twin girls)
    emtha renday varudathil 12 savran nagaiyai en kanavan veithu vittar..velaikum engum selavathilai..adikadi amma vetuku poi kasu konduva endru anupi viduvar..ethuvarikum kodutha panam 3,00,000..mendum oru varum mundai kasu venum endru enai thontharavu seithar..nan enga amma vetuku vandhu vitan..enathu maamanarum maamiyarum en amma vetuku vandhu kasu kudunga ilana unga ponna enakum en paiyanukum samantham ila nu eluthi kuduka solunga endru enga vetuku vandhu sanda podranga..ethuku ena mudivu endru solunga..

    ReplyDelete
  17. வரதட்சணை கொடுமை வழக்கில் கணவரைஇயந்திரத்தனமாக கைது செய்யக்கூடாது'
    'வரதட்சணை கொடுமை வழக்குகளில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை, இயந்திரத் தனமாக கைது செய்யக்கூடாது' என, 2014ல், பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட், மீண்டும் உறுதி செய்துள்ளது.

    கடந்த, 2014ல், வரதட்சணை கொடுமை வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'குற்றச் சாட்டுக்கு ஆளாகும், கணவர், அவரது குடும்பத்தினரை, போலீசார், இயந்திரத் தனமாக, தேவையின்றி கைது செய்யக்
    கூடாது' என, உத்தரவிட்டது.
    வரதட்சணை ஒழிப்பு சட்டம் தவறாக பயன் படுத்தப்படுவதாக கருத்து கூறிய சுப்ரீம் கோர்ட், குற்றம் சாட்டப்படும் கணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றது.
    இந்த உத்தரவை எதிர்த்து, பெண்கள் அமைப்பு கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதை யடுத்து, 'வரதட்சணை கொடுமை வழக்கில், நியாயமற்ற உத்தரவை, போலீசாருக்கு, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை, போலீசார் தவறாக பயன்படுத்தக் கூடும். எனவே, உத்தரவை வாபஸ் பெற வேண்டும்' எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தேசிய பெண்கள் கமிஷன் மனு தாக்கல் செய்தது.
    இருப்பினும், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இதையடுத்து, சிறப்பு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனு, சுப்ரீம்
    கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர்,நீதிபதிகள், அனில் ஆர்.தவே, ஜே.எஸ்.கேஹர், பினாகி சந்திர கோஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
    விசாரணைக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வரதட்சணை கொடுமை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட, சிறப்பு சீராய்வு மனு, 2002ல், சுப்ரீம் கோர்ட் வரையறுத்த வரையறைப்படி அமையவில்லை.
    எனவே, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் கூறும் குற்றச்சாட்டின் படி, கணவர், அவரது குடும்பத்தின ருக்கு எதிராக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்தவுடன், இயந்திரத்தனமாக, அவர்களை போலீசார் கைது செய்யக்கூடாது என, 2014ல், பிறப்பித்த உத்தரவு, உறுதி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    '498 - ஏ' சொல்வது என்ன?

    இந்திய கிரிமினல் சட்டம், '498 - ஏ' பிரிவின் கீழ், வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளாகும் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினரை, ஜாமினில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்க லாம்; இந்த சட்டப்பிரிவை, பல பெண்கள், கணவர் களை பழிவாங்க பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு கள் எழுந்துள்ளன.
    பல வழக்குகளில், கணவர், அவரது வயதான தாய், தந்தை, வழக்கில் துளியும் சம்பந்தம் இல்லாமல், வெளிநாடுகளில் வசித்து வரும் சகோதரிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்; எனவே, இச்சட்டப் பிரிவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

    போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு:வரதட்சணை கொடுமை வழக்கில், 2014ல், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், 'இந்திய குற்றவியல் சட்டம், 498 - ஏ பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்த வுடன், குற்றம் சாட்டப்பட்டோரை, போலீஸ் அதிகாரிகள், இயந்திரத்தனமாக கைது செய்வதை, அனைத்து
    Advertisement
    மாநில அரசுகளும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
    அந்த உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது: குற்றவியல் நடைமுறைச் சட்டம், 41வது பிரிவின் கீழ், வரையறுக்கப்பட்ட விதி முறைகளை தீவிரமாக பரிசீலித்த பின், தேவை இருந்தால் மட்டுமே, கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
    இந்த சட்டப்பிரிவின் கீழ், குற்றம் சாட்டப்பட் டோர், இரு வாரங்களுக்குள் ஆஜராகும்படி போலீசார், 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும்; இந்த காலத்தை, போலீஸ் கண்காணிப்பாளர், நீட்டிக்கலாம். கோர்ட் உத்தரவை மீறும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக, துறை ரீதி யிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும்.
    வரதட்சணை கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டோரை கைது செய்யும்படி, மாஜிஸ் திரேட் அனுமதி அளிக்கும்போது, வழக்கு தொடர்பான, போலீஸ் அதிகாரியின் அறிக் கையை கவனமாக பரிசீலிக்க வேண்டும்;
    அதில் முழு திருப்தி அடைந்தால் மட்டுமே, கைது நடவடிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    Thanks Dinamalar

    ReplyDelete
  18. thank you for all super informations about dowry harassment cases. please let me know more about case study about dowry harassment

    ReplyDelete
  19. இப்பநிங்க சொன்ன எதுவும் இல்லை காதல் திருமணம் அப்படி எதுவும் இல்லையின்ன வழக்கு தொடுக்க முடியுமா

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்