இந்த மருமகள் பாதுகாப்பு சட்டங்களில் குறிப்பிடத்தக்கவை:
- வரதட்சணை தடுப்புச் சட்டம்
- கணவனின் குடும்பத்தை கூட்டமாக சிறைக்கு அனுப்ப உதவும் மருமகள் கொடுமை தடுப்புச் சட்டம் ( IPC498A)
- கணவனிடமிருந்து மாதாந்திர பராமரிப்புத் தொகை பெற வழிவகை செய்யும் சட்டம் (CrPC 125)
- உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், கைச் செலவிற்கு பணம் என அனைத்து வசதிகளையும் கணவனிடமிருந்து பெற்றுத் தரும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம்.
- தற்போது வந்துள்ள பணியிடத்தில் பாலியல் கொடுமை தடுப்புச் சட்டம்
இப்போது முக்கியமான விஷயத்திற்கு வருவோம். மருமகளின் விருப்பத்திற்கு கட்டுப்படாமல் கொடுமை செய்யும் கணவன்களை அடக்க உதவும் வரதட்சணை தடுப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்றவற்றை மருமகள்கள் கணவனுக்கெதிராக பயன்படுத்தினாலும் கணவன்களின் கொட்டம் அடங்குவதில்லை. அதற்குக் காரணம் அவர்கள் கையில் துள்ளிக் கொண்டிருக்கும் மாத வருமானம். தாங்கள் நல்ல அரசாங்க பணியில் இருக்கிறோம் என்ற மமதையினால் கணவன்கள் துள்ளிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கொட்டத்தையும் அடக்க இப்போது நீதிமன்றங்கள் மருமகள்களுக்கு உதவக் காத்துக்கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு அரசாங்க பணியாளர் நடத்தை விதிமுறை மற்றும் தமிழ்நாடு காவல்துறை பணியாளர் நடத்தை விதிமுறைகளின்படி குற்ற வழக்கு சுமத்தப்பட்ட நபர் அரசாங்கப் பணியிலோ காவல்துறையிலோ ஈடுபட தகுதியற்றவர் என்று கருதப்படலாம். அதன் அடிப்படையில் நீங்கள் உங்கள் கணவன் மீது வரதட்சணை குற்ற வழக்கு சுமத்தியவுடன் நிலுவையில் இருக்கும் அந்த குற்ற வழக்கை காரணம் காட்டி கணவனின் அரசாங்க வேலையை பறிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு சமர்ப்பிக்கலாம். இதுபோன்ற வழிமுறையைப் பின்பற்றி ஒரு புத்திசாலி மருமகள் தனது கணவனின் வேலைக்கு உலை வைத்துவிட்டார். இதனை வழிகாட்டுதலாகக் கொண்டு இனி எல்லா மருமகள்களும் உயர்நீதிமன்றத்தை அணுகி தங்கள் கணவனின் அரசாங்க வேலையை பறித்து கணவனுக்கு தக்க பாடம் கற்பிக்கலாம்.
பின்வரும் செய்தியை கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்!!!!
குற்றசாட்டுக்குள்ளானவரை டி.எஸ்.பி.,யாக நியமிக்க ஐகோர்ட் தடை தினமலர் ஜனவரி 19,2013
சென்னை: குடும்ப வன்முறை குற்றம் சாட்டப்பட்டவரை, டி.எஸ்.பி.,யாக நியமிக்க, சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஈரோடு, சம்பத்நகரைச் சேர்ந்த, லட்சுமிபிரியா என்பவர், தாக்கல் செய்த மனு: எனது கணவர், வினோத் சாந்தாராம். வங்கியில் பணியாற்றிய அவர், டி.என்.பி.எஸ்.சி., மூலம், தமிழக அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, டி.எஸ்.பி.,யாக, போலீஸ் பயிற்சி கல்லூரியில், பயிற்சி எடுத்து வருகிறார்.
ஈரோட்டில், எங்களுக்கு, 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர், எனது நெருங்கிய உறவினர். இரண்டாம் திருமணம் செய்து வைப்பதற்காக, ஒரு வயது குழந்தையுடன், என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினர்.
விவாகரத்து கோரி, ஈரோடு கோர்ட்டில், எனது கணவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடியானது. கணவருடன் சேர்த்து வைக்கக் கோரிய, எனது மனுவை, கோர்ட் ஏற்றுக் கொண்டது; ஆனால், கோர்ட் உத்தரவுக்குப் பின்னும், என்னுடன் குடும்பம் நடத்தவில்லை. கோர்ட் உத்தரவை அமல்படுத்தவும், எனக்கு எதிரான குடும்ப வன்முறையை தடுக்கவும் கோரி, டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். எனது மனுவை பரிசீலிக்குமாறு, உத்தரவிட வேண்டும். தற்போது, பயிற்சி முடிக்க உள்ளதால், அவரை டி.எஸ்.பி.,யாக நியமிக்க உள்ளனர். போலீஸ் பிரிவில், ஒழுங்கு முறையாக பணியாற்றுபவருக்கு தான் இடம் அளிக்க வேண்டும். கோர்ட் உத்தரவுக்குப் பின்னும், குடும்பம் நடத்த அவரால் இயலவில்லை. பெண்ணை தொந்தரவு செய்தது, குடும்ப வன்முறை செய்தது, என, ஈடுபட்ட ஒருவரை, போலீஸ் பிரிவில் சேர்க்கக் கூடாது. எனவே, டி.எஸ்.பி.,யாக, வினோத் சந்தாராமை நியமிக்க, தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார், "அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குற்றச்சாட்டுக்கள் மீது, விசாரணை நிலுவையில் உள்ளது என, கூறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் கோரியபடி, ஒரு வாரத்துக்கு, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார்.