இன்றைய செய்தித்தாளில் வந்த செய்தி. மருமகள்கள் இதிலிருந்து பல குறிப்புகளை எடுத்து தங்களது வரதட்சணைப் புகாரிலும் பயன்படுத்தலாம். அதனால் உங்களுக்காக இந்த செய்தி. கவனமாகப் படித்து முக்கியமான “பாயிண்ட்டுகளை” குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
தகப்பன்சாமி பட தயாரிப்பாளர் மீது மனைவி கொலை மிரட்டல் புகார்
திருச்சி : திருச்சி தி.மு.க., பிரமுகரும், "தகப்பன்சாமி' படத்தின் தயாரிப்பாளருமான கோபால், தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக, அவரது மனைவியே, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். திருச்சி மாநகர, தி.மு.க.,வின், 50வது வட்ட செயலராக இருப்பவர் கோபால், 35. நடிகர் பிரசாந்த் நடித்த, "தகப்பன் சாமி' படத்தின் தயாரிப்பாளரான இவர், தற்போது, "உச்சக்கட்டம்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
படத்தயாரிப்பாளர் கோபால் மீது, அவரது முதல் மனைவி ராதிகா, 30, தன் மகன் செலின்குமாருடன் வந்து, மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
- நானும், கோபாலும், 16 ஆண்டுக்கு முன், கடும் போராட்டத்துக்கு பின், இரு வீட்டாரின் சம்மதத்துடன், காதல் திருமணம் செய்து கொண்டோம். 80 சவரன் நகை, வீட்டுக்குத் தேவையான பொருட்களும் கொடுத்து, தடபுடலாக திருமணத்தை, என் தந்தை நடத்தினார்.
- திருமணமாகி மூன்று மாதம், சந்தோஷமாக குடும்பம் நடத்தியவர், அதன் பிறகு, தினமும் பல்வேறு காரணங்கள் கூறி, சித்ரவதை செய்யத் துவங்கினார்.
- எனக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், வீட்டுக்கே பல பெண்களை கூட்டிவந்து ஜாலியாக இருப்பார்.
- தட்டிக்கேட்டால் அடி, உதைதான் கிடைக்கும்.
- ஒருமுறை என்னை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த போது தப்பிவிட்டேன்.
- கவிதா என்ற பெண்ணை கற்பழித்த வழக்கில் சிக்கி, பணம் கொடுத்து அவ்வழக்கை சரிசெய்து விட்டார். இதற்கு, அவரது சகோதரி தேன்மொழி, அவரது கணவர், மாமியார் சுரும்பாயி, மாமனார் சேகர், தம்பி வீரா ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.
- மகன் பிறந்த நேரம் சரியில்லை என கூறி, என் மகனை கூட சரியாக கவனித்துக் கொள்ளாமல் கொடுமைப்படுத்தினார்.
- என் கணவன் தம்பி வீரா, இரவு நேரங்களில் என் ரூம் கதவை தட்டி இம்சை கொடுப்பார்
- இதையெல்லாம் சகித்து, 16 ஆண்டாக அவரது வீட்டிலேயே வாழ்ந்தேன். ஆனால், இதுநாள் வரை என் மகனை அவர் பார்க்கவில்லை என்பதால், என் மகனின் எதிர்காலத்துக்காக, எனக்கும், என் மகனுக்கும் நடந்த கொடுமைகளை, தற்போது புகாராக அளித்துள்ளேன்.
- எனக்கு கொடுமை செய்து, கொலை செய்ய முயற்சித்த என் கணவர் கோபால் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- என் கணவர் இரண்டாவது திருமணம் செய்தது குறித்தும் விசாரித்து நடவடிக்கையும், திருமணத்தின் போது எனக்கு போட்ட நகைகளையும் மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.