"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


கணவனுக்கெதிராக வரதட்சணைப் புகார் எழுதுவது எப்படி

கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கெதிராக வரதட்சணைப்புகார் எழுதுவது எப்படி? - இந்திய மருமகள்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு

இதுவரை மருமகளைப் போற்றும் சிறப்புச் சட்டங்களான IPC498A, Dowry Prohibition Act போன்றவற்றைப் பற்றியும் அதுதொடர்பான வெற்றிகரமான செய்திகளைப் பற்றியும் பல பதிவுகளில் படித்து மகிழ்ந்தீர்கள். இனி அவற்றை எப்படி செயல்முறைப்படுத்துவது என்று மருமகள்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் உதாரணத்துடன் கூடிய பதிவை இன்று காண்போம்.

மருமகள்களுக்காக ஒரு மாதிரி முதல் தகவல் அறிக்கையையும் (FIR) இங்கே கொடுத்திருக்கிறேன். இது உண்மையாகவே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு FIR-ன் நகலாகும். அதனால் வரதட்சணை புகார் FIR எப்படி இருக்கும் என்று தெரியாத மருமகள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரிபடிவத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

புகார் மனுவில் நீல நிற எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைதான் முக்கியமான வார்த்தைகள். அவற்றை நன்றாக கவனித்து குறிப்பெடுத்துக்கொள்ளவும்.

படத்தின் மீது ‘Click’ செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்.


பக்கம் 1
பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5
புகார் மனுவை படித்தபிறகு உங்களாலும் இதுபோல எழுதமுடியும் என்று இப்போது உங்களுக்கும் ஒரு தன்னம்பிக்கை வந்திருக்கும் என நம்புகிறேன்.

புகார் மனுவில் நீல நிற எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைதான் முக்கியமான வார்த்தைகள் என்று குறிப்பிட்டிருந்தேன். அவை எப்படி முக்கியமான வார்த்தைகள் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் IPC498A பிரிவை ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

The ingredients of Section 498-A are as follows:

“ 498A: Husband or relative of husband of a woman subjecting her to cruelty- Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.

Explanation – For the purpose of this section ’cruelty’ means –

(a) any wilful conduct which is of such a nature as is likely to drive the woman to commit suicide or to cause grave injury or danger to life, limb or health (whether mental or physical) of the woman;

or

(b) harassment of the woman where such harassment is with a view to coercing her or any person related to her to meet any unlawful demand for any property or valuable security or is on account of failure by her or any person related to her to meet such demand.”



மேலே குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவுப்படி கொடுமை என்பது உடலளவில் அல்லது மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். அதனால் மேற்கண்ட புகார் மனுவில் “எனது கணவரும் மாமியாரும் அடித்து துன்புறுத்தினார்கள்”, “எனது கணவர் கருப்பு சட்டை அணிந்துவந்து மனதளவில் துன்புறுத்தினார்”, “எனக்கு அரை வயிற்றுக்குக் கூட உணவு கொடுக்கவில்லை”, “ஃபோன் தொடர்பை துண்டித்து வீட்டுக் கைதியாக வைத்திருந்தனர்”, “கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார் போன்ற வார்த்தைகள் எப்படி இந்த IPC498A சட்டப்பிரிவில் சொல்லப்பட்டதற்கேற்ப பக்குவமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று மருமகள்கள் நன்றாக கவனிக்கவும்.

அது போல “மாமியாரும் அவரது குடும்பத்தாரும் நிச்சயதார்த்த தினத்தன்று கூட்டமாக அமர்ந்து வரதட்சணை கேட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது ”, “நாத்தனார் வரதட்சணை வாங்க மூளையாக செயல்பட்டார்” போன்ற வார்த்தைகளையும் கவனியுங்கள். மாமியார் குடும்பத்தைக் கூட்டமாக சிறையில் தள்ளவேண்டுமென்றால் இதைவிட வேறெந்த அற்புதனமான வார்த்தையை பயன்படுத்தமுடியும்!

மருமகள்கள் கவனிக்கவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் புகார் எழுதியிருக்கும் மருமகள் தன்னை டாக்டர், Ph.D. உயர் பட்டம் பெற்றவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறியிருக்கும் சம்பவங்கள் நடந்திருப்பது வெளிநாட்டில். ஆனால் உயர் கல்வி படித்திருக்கும் இவர் அந்த நாட்டில் போலிஸில் புகார் செய்யாமல் இந்தியாவிற்கு வந்து பொறுமையாக பல மாதங்கள் கழித்து புகார் கொடுத்திருக்கிறார். இதை வெளிநாட்டுவாழ் மருமகள்கள் நன்கு கவனிக்கவேண்டும்.

நீங்கள் கணவனின் குடும்பத்திற்கெதிராக புகார் கொடுக்கவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டால் நீங்கள் புகார் கொடுக்க தேர்வு செய்யவேண்டிய நாடு இந்தியா. என்ன இருந்தாலும் தாய்நாட்டுப்பற்றை விடமுடியுமா? இந்தியாவில் இதுபோன்ற வரதட்சணை புகார் கொடுத்தால் அதுவும் மருமகள் கையால் எழுதிக்கொடுத்தால் அதன் மதிப்பே தனிதான். ஏனென்றால் இந்தியாவில்தான் காவல்துறையில் இருப்பவர்களுக்கும், நீதித்துறையில் இருப்பவர்களுக்கும் சிந்திக்கும் திறன் என்பதே கிடையாது. அவர்கள்தான் மருமகள்கள் எது சொன்னாலும் அதை மந்திரமாக ஏற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்வார்கள். அதில் நமக்கும் லாபம் இருக்கிறதல்லவா! மற்ற நாடுகளில் இது போல மருமகள்கள் நினைப்பதையெல்லாம் செய்வது மிகவும் கடினமான செயல்.

ஒருமுறைக்கு பலமுறை நன்கு படித்து இந்த மாதிரி புகார் படிவத்திலிருந்து முக்கியமான வார்த்தைகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். வரதட்சணைப் புகார் எழுதுவது என்பது சமையல் செய்வது போலத்தான். சட்டப்பிரிவுகளை முதலில் படித்துக்கொள்ளுங்கள். பிறகு சட்டப்பிரிவுகளுக்கேற்றவாறு உங்களது புகாரில் வார்த்தைகளை உபயோகித்தால் உங்களின் புகார் மிகவும் உறுதியானதாக இருக்கும். போலிஸ் அதை படித்தவுடன் உடனடியாக கணவனையும் அவனது குடும்பத்தையும் சிறையில் தள்ளிவிடுவார்கள்.

சட்டம் தெரியாத மருமகள்கள் வழக்கறிஞர்களின் உதவியை நாடுகிறார்கள். அப்படி எழுதப்பட்ட புகார்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு விசேஷத்தை கவனித்தீர்களா? புகாரின் கடைசி பாகத்தில் யார் யாருக்கு எந்ததெந்தப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றுகூட போலிஸிற்கே ஆலோசனை வழங்கும் விதமாக இந்த புத்திசாலி மருமகள் வழக்கறிஞரின் உதவியுடன் புகார் எழுதியிருக்கிறார்.

வழக்கறிஞரிடம் சென்றால் குறைந்தபட்சம் 5000 ரூபாயாவது கொடுத்தால்தான் இதுபோன்ற புகாரைப் பெறமுடியும். மருமகள்களுக்கு அந்த சிரமமெல்லாம் வேண்டாம். மருமகள்களின் பொருளாதார நலன் கருதி நான் இந்த புகாரின் மாதிரிப் படிவத்தை கொடுத்திருக்கிறேன். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் சிறு திருத்தங்கள்தான். இதனை மாதிரிப்படிவமாகப் பயன்படுத்தி கணவர் குடும்பத்திலுள்ளவர்களின் பெயர், சம்பவ நாள், மற்றும் சம்பவம் நடந்த இடம் இவற்றை மற்றும் மாற்றி உங்களுக்கேற்றவாறு சம்பவங்களை எழுதி வரதட்சணைப் புகார் கொடுக்கப் பயன்படுத்தலாம். மிகவும் எளிதான செயல்.

அது எப்படி இதை ஒரு டெம்ப்ளேட் போல பயன்படுத்த முடியும்? அது சாத்தியாமா? என்று சில புத்திசாலி மருமகள்கள் யோசிப்பது புரிகிறது. உங்களுக்கு அந்த சந்தேகம் இருந்தால் நடிகர் பிரசாந்த் அவர்களின் மீது கொடுக்கப்பட்ட புகார் மனுவையும் மேலே நான் கொடுத்துள்ள இந்த புகார் மனுவையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இரண்டு புகார் மனுவிற்கும் உள்ள பல ஒற்றுமைகளைக் காண்பீர்கள். அதனால் சட்டப்பிரிவுகளுக்கேற்றவாறான குற்றச்சாட்டுகளுக்கான பாயிண்ட்டுகள் தான் முக்கியம். அவை எல்லா புகார்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று இப்போது உங்களால் உணரமுடியும் என்று நம்புகிறேன்.

நடிகர் பிரசாந்த் அவர்கள் மீது எழுதப்பட்ட புகாரைப் படித்து மேலும் பல நல்ல பாயிண்ட்டுகளை தெரிந்து கொள்ள ஆவலுடைய மருமகள்கள் இங்கே சென்று படிக்கவும் --> நடிகர் பிரசாந்த் அவர்களின் 498A வழக்கின் போலிஸ் விசாரணை முழு அறிக்கை (PDF Format)

எல்லாவற்றிற்கும் மேலாக மருமகள்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் எந்த சட்டப்பிரிவின் கீழ் வரும் என்று காவல்துறையையும் சட்டத்துறையையும் யோசிக்க வைப்பதைவிட சட்டப்பிரிவிற்கு பொருந்துமாறு உங்களது குற்றச்சாட்டுகளை எழுதிவிட்டால் எல்லாருக்குமே வேலை எளிதாகிவிடும். நீங்களும் உங்களது குறிக்கோளை எளிதாக அடைந்துவிடலாமல்லவா? அதுதான் வரதட்சணை தொடர்பான மருமகள் பாதுகாப்பு சட்டங்களின் சிறப்பம்சம். அதனால் உங்களின் புகாரை எழுதுவதற்கு முன் சட்டப்பிரிவுகளை நினைவுபடுத்திக்கொண்டு பிறகு நீங்கள் எந்தவகையான குற்றச்சாட்டுகளை சொல்லலாம் என்று யோசித்து பிறகு புகாரை எழுத ஆரம்பியுங்கள். இதுதான் இன்றுவரை பலகாலமாக இந்திய மருமகள்கள் பின்பற்றிவரும் இந்திய மரபு.

உங்களுக்கு குற்றச்சாட்டுகள் சொல்வதற்கு எதுவும் பாயிண்ட்டுகள் கிடைக்கவில்லையென்றால் உங்களுக்காகவே பல சட்டப்பிரிவுகள் இருக்கின்றன. குறிப்பாக IPC498A, IPC406, IPC506, IPC34, Dowry Prohibition Act போன்றவை பொதுவாக அனைத்துப் புகார்களிலும் பயன்படுத்தப்படும் சட்டப் பிரிவுகள். இவை எளிதாகப் பயன்படுத்தக்கூடிய பிரிவுகள். இந்த சட்டப்பிரிவுகளைப் பற்றி தெரிந்து கொண்டால் புகார் எழுதுவதற்கான பாயிண்ட்டுகள் உங்களின் சிந்தனை அருவியிலிருந்து தானாகவே கொட்டும்.

மருமகள்களே, இப்போது உங்களின் வரதட்சணைப் புகாரை எப்படி எழுதுவது என்று ஒரு தெளிவும் தன்னம்பிக்கையும் பிறந்திருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்!

(பின்குறிப்பு: உண்மையாக வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மருமகள்கள் இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தவேண்டியதில்லை. அவர்கள் உள்ளது உள்ளபடி உண்மையை மட்டும் எழுதித்தருவதே போதுமானது. )


IPC498A சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி?

சமீபத்தில் செய்தித்தாள்களில் பரபரப்பாக பேசப்பட்ட பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் பற்றிய வரதட்சணை வழக்கைப் பற்றி எல்லா மருமகள்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பத்திரிக்கைகளில் பலவிதமான செய்திகள் வந்திருந்தன. அவற்றையெல்லாம் தொகுத்துப்பார்க்கும்போது கீழ்கண்ட உண்மைகள் தெரியவருகிறது. இவற்றிலிருந்து இந்திய மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. குறிப்பாக வரதட்சணை தொடர்பான சட்டங்களை தங்களுக்குச் சாதகமாக எப்படிக் கையாள்வது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். இதை எத்தனை மருமகள்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதனால் மருமகள்களின் நலன் கருதி இந்த செய்திகளின் தொகுப்பைப்பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை உங்களுக்குத் தருகிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

செய்தி 1

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கும், ஷோயப் மாலிக்குக்கும் வரும் 15-ம் தேதி ஹைதராபாதில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆயிஷா சித்திக் என்பவர், ஷோயப் தன்னை ஏற்கெனவே திருமணம் செய்துகொண்டு விட்டார் என்றும் அதற்கான சான்றிதழையும் அவர் வெளியிட்டார். இதனால் ஷோயப்-சானியா திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தன்னை முறைப்படி சோயப் மாலிக் விவாகரத்து செய்யாவிட்டால்
, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆயிஷாவின் தந்தை சித்திக் ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், அச்சுறுத்தல் (IPC506), திருமண மோசடி(IPC420), வரதட்சணை கொடுமை (IPC498A) உள்ளிட்ட பிரிவுகளில் மாலிக் மீது குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயிஷாவின் உறவினரும் டாக்டருமான ஷாம்ஸ் பாபர் குறிப்பிடுகையில்,சோயப் மாலிக்கிடமிருந்து நாங்கள் பணமோ, வேறெந்த உதவியையோ எதிர்பார்க்கவில்லை. ஆயிஷாவை மணந்து கொண்டதை ஒப்புக்கொண்டு முறைப்படி விவாகரத்து செய்யட்டும். நாங்கள் அவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்' என்றார்.



செய்தி 2

ஆந்திர சிறுபான்மைத்துறை அமைச்சர் முகமது அகமதுல்லா, ஆந்திர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அபித் ரசூல் கான், முஸ்லிம் மத பெரியவர்கள் ஒன்று கூடி ஆயிஷா குடும்பத்துடனும், சோயப்புடனும் நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சோயப் மாலிக், ஆயிஷா சித்திக்கை விவாகரத்து செய்வதாக எழுத்துப் பூர்வமாக நேற்று தெரிவித்தார். ஆயிஷாவை 'தலாக்' செய்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக ஆயிஷாவின் தாய் பரிசா தெரிவித்துள்ளார். முஸ்லிம் பெரியவர்களின் ஆலோசனையின் பேரில், இந்த நடவடிக்கையை முழு மனதோடு ஏற்பதாகவும், இந்த முடிவை தான் ஆயிஷா எதிர்ப்பார்த்ததாகவும் கூறினார்.


செய்தி 3


ஐதராபாத்:பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டது தொடர்பாக ஆந்திர குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து போலீஸ் குழு விசாரணை நடத்தி வருகின்றன. அதே சமயம், சோயப் நான்கு கோடி ரூபாயைத் தந்தால், ஆயிஷா தலையீடு செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது.


செய்தி 4


Kyon paisa paisa karti hai? Shiraj Sareen Khan, president of the United Women Front said she wants the money for her organisation, not herself.


"I don't want money for myself. All I want is a donation for our organisation, which is fighting for vulnerable women like Ayesha. I heard that Shoaib gave Rs 15 crore to Ayesha before he signed the divorce papers. If this is true, at least 10 per cent of the amount should be donated to our organisation," said Shiraj Khan.


செய்தி 5

Soniaji, help!

"Ayesha says she plans to write to Prime Minister Manmohan Singh and Congress president Sonia Gandhi if people continue to pester her. She has not received the sort of money they think she did from Shoaib.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



இனி இந்த செய்திகளிலிருந்து IPC498A சட்டத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற பாடத்தை மருமகள்கள் தெரிந்துகொள்ளலாம்.

செய்தி 1 & 2-ன் படி மாலிக் ஆயிஷாவை திருமணம் செய்துவிட்டு இரண்டாவதாக வேறு திருமணம் செய்யமுற்பட்டதை அறிந்த ஆயிஷா தன்னை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார். திருமணமே பொய் என்று சொல்லிய மாலிக்கை அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக ஆயிஷாவின் தந்தை போலிஸில் IPC498A, 420, 506 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார். வழக்கைத் திரும்பப்பெறவேண்டுமென்றால் மாலிக் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்திடவேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.

இந்த வழக்குகளிலிருந்து தப்புவதற்காக மாலிக் தான் திருமணம் செய்துகொண்டதாக ஒப்புக்கொண்டு விவாகரத்து செய்வதற்கு சம்மதித்திருக்கிறார். அதன்படி ஆயிஷா தரப்பில் தாங்கள் கொடுத்த வழக்கை திரும்பப்பெற்றுக்கொண்டு விவாகரத்திற்கு சம்மதித்ததே போதும், மிகவும் மகிழ்ச்சி என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கிடையில் ஆயிஷா வழக்கைத் திரும்பப்பெறுவதற்கு பணம் பெற்றுக்கொண்டதாக செய்திகள் வந்து அதை ஆயிஷா மறுத்துள்ளார்.

எனவே மேற்கண்ட குற்ற சட்டப்பிரிவுகள்படி (IPC498A, 420,506) மாலிக் தவறு செய்தவராக கருதப்பட்டிருந்தால் அவரை ஏன் வழக்கிலிருந்து விடுதலை செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. அவர் பணம் கொடுத்து வழக்கை முடித்துவிட்டாரா என்ற சந்தேகமும் எழுகிறது.

இரண்டாவது சந்தேகம். ஆயிஷா வழக்கைத் திரும்பப்பெற பணம் வாங்கவில்லை என்று மறுக்கிறார். அதனால் மாலிக் பணம் எதுவும் கொடுக்காமல் ஒரு முழம் பூவும், 100 கிராம் அல்வாவும் கொடுத்து தான் செய்த அத்தனை கொடுமைகளிலிருந்தும் ஆயிஷாவின் மனத்தை மாற்றி வழக்குகளை திரும்பப்பெறச் செய்துவிட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது. அப்படியென்றால் இந்திய மருமகள்கள் ஆண்கள் கொடுக்கும் ஒரு முழம் பூவிற்கும் அல்வாவிற்கும் மயங்கும் இழிநிலையிலா இருக்கிறார்கள்?

IPC498A என்பது தீவிரவாதிகளை தண்டிக்கக்கூடிய அளவிற்கான கொடிய தண்டனைக்குரிய சட்டம். ஒருவர் தன்னை அந்த அளவிற்கு கொடுமைப்படுத்தினார் என்று குற்றம் சாட்டிவிட்டு பிறகு விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்திட்டால் அந்த கொடுமைகள் எப்படி உடனடியாக மறைந்துவிடுமா? விவாகரத்து என்பது வேறு, கொடுமை என்பது வேறு. விவாகரத்துப் பெற்றாலும் ஒருவர் செய்த கொடுமைகளுக்கு தண்டனை கொடுக்கப்படவேண்டுமல்லவா? அது தானே நீதி?


பெண்கொடுமை, வரதட்சணை கொடுமை என்பதை ஒரு தனிப்பட்ட பெண்ணிற்கெதிரான குற்றமாகக் கருதாமல் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கெதிராக இழைக்கப்பட்ட குற்றமாக இந்திய சட்டம் கருதுகிறது. அதனால்தான் இந்த IPC498A என்பதை மருமகள்களுக்கான சிறப்புச் சட்டமாக அரசாங்கம் இயற்றியிருக்கிறது (Crime against society, non cognizable, non bailable, non compoundable). அப்படியிருக்க இந்த கொடிய குற்றத்தை செய்தவரை எப்படி அவ்வளவு எளிதாக விட்டுவிடமுடியும்? இந்திய சட்டங்களும், வழக்கைப் பதிவு செய்த காவல்துறையும், பேச்சுவார்த்தை நடத்திய ஆந்திர அமைச்சரும், லோகல் காங்கிரஸ் தலைவரும் என்ன அவ்வளவு கேனைத்தனமானவர்களா? என்று கேட்டுப்பார்த்தால் இல்லை என்றுதான் பதில் வருகிறது.


இவையனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றாலும் முதல் செய்தியில் ஆயிஷா குறிப்பிட்டுள்ளபடி தனக்கு விவாகரத்து மட்டும் தான் வேண்டும் "பணம்", "அல்வா", "பூ" எது கொடுத்தாலும் வேண்டாம் என்றிருந்தால் அவர் விவாகரத்தைப் பெறுவதற்கு பயன்படுத்தியிருப்பது உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கக்கூடிய கிரிமினல் சட்டங்களான IPC498A, 506, 420. வெறும் விவாகரத்து மட்டும் பெறுவதற்கு இவர் ஏன் இந்த சட்டங்களைப் பயன்படுத்தினார்? இந்த சட்டங்களை இந்தக்காலத்தில் மருமகள்கள்தான் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள பயன்படுத்திவருகிறார்கள் என்பது மருமகள்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

இந்த செய்திகளை பகுத்தாய்ந்து பார்த்ததில் மாலிக் மீது வரதட்சணை கொடுமை தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர் வரதட்சணை தொடர்பான எந்தக் குற்றமும் செய்திருக்கவில்லை என்று தோன்றுகிறது. இல்லையென்றால் மாலிக்கை நீதிமன்றத்தில் விசாரிக்காமல் வெறும் கட்டப்பஞ்சாயத்து மட்டும் செய்து அவ்வளவு எளிதாக இந்திய அரசாங்கம் எப்படி இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து இரண்டே நாட்களில் விடுவித்திருப்பார்களா?


அதே சமயம் ஆயிஷாவிற்கு தேவைப்பட்டது விவாகரத்து மட்டுமே என்று அவரது கூற்றிலிருந்து தெரிகிறது. "பணமோ" அல்லது மாலிக் கொடுக்கும் "ஒரு முழம் பூவோ அல்லது அல்வாவோ" கிடையாது. வழக்கை திரும்பப்பெறுவதற்கு ஆயிஷா அவற்றைப் பெற்றுக்கொள்ளவுமில்லை என்று செய்தி சொல்கிறது. அதனால் "விவாகரத்தை மட்டும்" பெறுவதற்கு அவர் பயன்படுத்தியிருப்பது வரதட்சணை தொடர்பான பெண்கள் பாதுகாப்பு சட்டமான IPC498A. இதைப் பயன்படுத்தி மாலிக்கை மிரட்டி ஆயிஷா தனது குறிக்கோளை அடைந்துவிட்டாரா? உண்மையாக ஆயிஷா பாதிக்கப்பட்டிருந்தால் இந்திய அரசாங்கம் ஏன் மாலிக்கை அவ்வளவு எளிதாக விட்டுவிட்டார்கள்? ஒட்டுமொத்த சமுதாயத்திற்கெதிராக மாலிக் செய்த கொடுமையை எந்தக் காரணத்தின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் குற்றமாகக் கருதாமல் விடுவித்திருக்கிறது?அப்படியென்றால் இந்திய அரசாங்கம் இந்திய மருமகள்களுக்கு துரோகம் செய்கிறதா?


அதனால் மேற்கண்ட பகுத்தாய்ந்த கருத்துக்களிலிருந்து இந்திய மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் உங்களுக்குத் தேவையானதை கணவர் வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ள நீங்கள் பயன்படுத்தவேண்டிய சட்டம் IPC498A. இதை பயன்படுத்தினால் எல்லாவற்றையும் அடையலாம். பணமோ, விவாகரத்தோ, அல்லது மாமியார் மாமனாரை வீட்டை விட்டு விரட்டவோ, அல்லது கணவனை தனிக்குடித்தம் அழைத்துச்செல்லவோ பயன்படுத்தலாம். அதுவும் அரசாங்கத்தின் முழுஆதரவோடு பெற்றுக்கொள்ளலாம் என்பதுதான் இந்த செய்திகளின் சாராம்சம்.


இந்த செய்திகளிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களின் குறிக்கோளை அடைய நீங்கள் எந்தவித தொடர்பும் இல்லாத வரதட்சணை தடுப்புச்சட்டங்களைப் பயன்படுத்தி பொய் புகார்களையும் தைரியமாகக் கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தால் தான் தவறு செய்யவில்லையென்றாலும் முட்டாள் கணவனும் அவனது கூட்டமும் ஒரு கையில் வெள்ளைக் கொடியை பிடித்துக்கொண்டு மறுகையில் தேர்தல் சீட் வாங்க சூட்கேசுடன் ஓடும் அரசியல்வாதி போல பெட்டிநிறைய பணத்துடன் உங்களைநாடி தானாக ஓடிவருவார்கள். அதனால் இந்த IPC498A சட்டத்தை எப்படி லாவகமாகப் பயன்படுத்தி உங்களது வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளலாம் என்று சிந்தியுங்கள்.


மருமகள்களே இந்தியஅரசாங்கத்தின் ஆசியுடன் இந்த வரதட்சணை தொடர்பான சட்டங்களைப் பயன்படுத்தி உங்களின் வெற்றிக்கொடியை வீடெங்கும், நாடெங்கும், நாடுகடந்தும் நிலைநாட்டுங்கள்.


இன்னும் பல மருமகள்களுக்கு இந்த IPC498Aவை எப்படி தங்களின் ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ள பயன்படுத்துவது என்று சந்தேகம் இருக்கும். கீழுள்ள சட்டப்பிரிவை படித்துவிட்டு இது எப்படி ஆயிஷாவின் “விவாகரத்திற்கு மட்டும் ” பயன்பட்டிருக்கிறது என்று யோசித்தால் நீங்கள் உங்களுக்கேற்றவாறு கணவனுக்கும் மாமியாரின் குடும்பத்திற்கெதிராகவும் எப்படி இதை பயன்படுத்தலாம் என்று பல புதிய யோசனைகள் உங்களுக்கே தோன்றும்.

The ingredients of Section 498-A are as follows:

“ 498A: Husband or relative of husband of a woman subjecting her to cruelty- Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.

Explanation – For the purpose of this section ’cruelty’ means –
(a) any wilful conduct which is of such a nature as is likely to drive the woman to commit suicide or to cause grave injury or danger to life, limb or health (whether mental or physical) of the woman;

or

(b) harassment of the woman where such harassment is with a view to coercing her or any person related to her to meet any unlawful demand for any property or valuable security or is on account of failure by her or any person related to her to meet such demand.”


மருமகள்களே இப்போது உங்களுக்கு IPC498Aவின் மகத்துவம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்குத்தேவையானபடி பயன்படுத்தி வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

மருமகள்களுக்கான இந்த எளிய IPC498A சட்ட பயன்பாட்டு வழிமுறையை வெளிப்படையாக விளக்கிக் காட்டியிருக்கும் மாலிக் & Co. கூட்டத்தாற்கும், ஆந்திர அரசியல் தலைவர்களுக்கும், ஆந்திர காவல் துறைக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மருமகள்கள் சார்பாக நன்றி!