"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


இந்தியாவிற்கு வந்திருக்கும் கணவன் மீது வெளிநாட்டில் இருந்துகொண்டே இந்திய காவல்துறையிடம் புகாா் கொடுப்பது எப்படி?

வெளி நாடு வாழ் ஆண்களை நம்பி திருமணம் செய்து மோசம் போகாதீா்கள் என்று நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.  ஆனாலும் பல இளம் மருமகள்கள் ஆண்கள் வீசும் மாய வலையில்  சிக்கி பிறகு துன்பப்படுகிறாா்கள்.  எது எப்படியோ இளம் மருமகள்களுக்கு துன்பம் என்று வந்துவிட்டால் நமது இந்திய நாட்டு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எல்லை கடந்தும் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன. 

சரி. வெளிநாடு வாழ் இந்தியரை நம்பி ஏமாந்த பிறகு எப்படி அதிலிருந்து மீண்டு கணவனுக்கு பாடம் கற்பிப்பது என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்காது.   நீங்கள் எந்த நாட்டில் வசித்தாலும் உங்கள் கணவன் உங்களை துன்புறுத்துவதாக நீங்கள் கருதினால் உடனடியாக இந்திய காவல்துறையை இணையதளம்  மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்பு கொண்டு உங்கள் புகாரை அனுப்பி வைக்கலாம்.  

இப்படி வெளிநாடு வாழ் மருமகள் ஒருவா் இந்தியாவிற்கு வந்திருக்கும் தனது கணவன் மீது வெளிநாட்டில் இருந்துகொண்டே மின்னஞ்சல் மூலமாக சென்‌னை நகர காவல் ஆணையருக்கு புகாா்க அனுப்பியிருக்கிறாா்.   கவனமாக படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

 காவல்துறையை தொடா்பு கொள்ள வேண்டிய இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  குறிப்பெடுத்து‌ வைத்துக்கொண்டு தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வெளிநாடுகளில் இருக்கும் மருமகள்களுக்கு வசதியாக மின்னஞ்சல் மூலமாக புகார் கொடுக்கும் வசதியும் இப்போது வந்துவிட்டது. அதனால் வெளிநாட்டு வாழ் மருமகள்கள் தங்கள் கணவரைப் பற்றியும் இந்தியாவில் உள்ள கணவரின் குடும்பத்தைப் பற்றியும் புகார் கொடுக்க இந்த எளிய வழியைப் பின்பற்றலாம். இந்தியாவிற்கு செலவு செய்துகொண்டு வரவேண்டும் என்ற அவசியமில்லை. மின்னஞ்சலில் உங்கள் புகார் பெறப்பட்டவுடன் நீங்கள் குறிப்பிடும் உங்களது மாமியார் குடும்பம் வாழும் ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு உங்களது புகார் அனுப்பப்பட்டு அங்குள்ள போலிஸ் உங்களது எண்ணப்படி உங்களது மாமியார் குடும்பத்தை நன்கு கவனித்துவிடுவார்கள். இந்த வசதி எப்படி இருக்கிறது! இதனைப் பயன்படுத்தி நீங்கள் மகிழ்ச்சியடைய கீழுள்ள இணைப்பைத் தொடரவும்.


24 hours Telephone Desk at CM office & DGP office
24/7 automatic computerised telephone service for registering public grievances/complaints has been installed at the control room of the DGP office. Public in the State and even outside the State may use the facility. Their representations would be immediately forwarded to the police officer/police station concerned. Those who require emergency help may also dial 100.
CM Office 044-25672510
Control Room (DGP Office) 044-28447200

இது தவிர மருமகள்களுக்காகவே இலவச போன் வசதியும் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த எண்ணுக்கு எந்த தொலைபேசியிலிருந்தும் இலவசமாக அழைக்கலாம். 24 மணிநேர சேவை. இதோ அந்த எண்:

WOMEN HELPLINE

The Government of Tamil Nadu has launched a new scheme to aid women in distress. "Women Helpline" Units have been ordered to be opened throughout the state. Today "WOMEN HELPLINE UNITS" are functioning in most districts of Tamil Nadu. Women Police provide prompt help round the clock to women in distress in these "WOMEN HELPLINE UNITS".
Toll Free Numbers
Women help Line - 1091
மருமகள்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் கீழ்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

Dowry Harassment
(வரதட்சணை கொடுமை புகார் கொடுக்க)
Domestic violence / Problems by in-laws
(கணவர் மற்றும் அவனது குடும்பத்தின் மீது புகார் கொடுக்க)
Alcoholic spouses
(குடிகாரக் கணவருக்கு பாடம் புகட்ட)
Sexual harassment
(பாலியல் பலாத்காரம் என்று புகார் கொடுக்க)
Problems related to love affairs
(காதலனை வழிக்குக் கொண்டு வர)


இப்போது மருமகள்களுக்கு வரதட்சணை புகார் கொடுக்க கொஞ்சம் தைரியம் வந்திருக்கும் என்று நம்புகிறேன்.

கணவனுக்கெதிராக உங்கள் புகாரை தயாா் செய்யும்போது பின்வரும் பாடங்களிலிருந்து தகுந்த குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.





ஆணாதிக்க அராஜகத்திற்கு எதிராக தமிழ் பெண்ணுக்குக் கிடைத்த வெற்றி!

கடந்த சில ஆண்டுகளாக போலிஸ் குடும்பத்தில் இளம் மருமகளாகத் துடித்துக்கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிற்கு திருமணம் நடப்பதற்கு முன்பாகவே வரதட்சணைக் கொடுமை ஆரம்பித்திருந்தது. அதனை எதிர்த்து போராடி காதலனையும், அவனது குடும்பத்தையும் சிறைக்கு அனுப்ப அவர் பட்ட பாடு சொல்லி மாளாது. கடைசியில் ஒரு வழியாக காவல்துறை பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து IPS காதலனையும் அவனது குடும்பத்தையும் ஒரு பெரிய குற்ற வழக்குப் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்.

இதை இப்படியே விட்டுவிடவும் கூடாது. கடைசிவரை என்ன நடக்கிறது என்று எல்லா மருமகள்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும். வழக்கை பதிவு செய்துவிட்டோம் என்று கணக்குக் காட்டிவிட்டு பிறகு புலன் விசாரணை செய்கிறோம் என்ற பெயரில் வழக்கை மாற்றிவிடுவார்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று கடந்த 2012ல் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.  2011ம் ஆண்டிலிருந்து போரடிய இந்த இளம்பெண்ணிற்கு நான்கு ஆண்டுகள் கடந்து கடைசியில் இப்போதுதான் அந்த அபலைப் பெண்ணிற்காக நீதியின் கண்கள் திறந்திருக்கின்றன......

காதலித்த பெண்ணை ஏமாற்றிய வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் புழல் சிறையில் அடைப்பு


Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/ips-officer-varun-kumar-surrenders-199446.html

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்த போது காதலித்த பெண்ணை பின்னர் ஏமாற்றியதாக கிளம்பிய வழக்கில் தற்போது ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் சரணடைந்துள்ளார். வளசரவாக்கத்தைச் சேர்ந்த பிரியதர்சினிக்கும், வருண்குமாருக்கும் காதல் ஏற்பட்டது. யுபிஎஸ்சி தேர்வு முடிவில் வருண்குமார் ஐ.பி.எஸ் பதவிக்குத் தேர்வானார். அவருக்காக பிரியதர்சினி தனது ஐ.ஏ.எஸ் கனவை உதறி விட்டு வருண்குமாருக்கு உதவி செய்தார்.

இரு வீட்டார் சம்மதத்துடன் வருண்குமார் - பிரியதர்சினி நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் வருண்குமார் திடீரென பிரியதர்சினி குடும்பத்தாரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் திருமணம் நடைபெறாமல் நின்று போனது. இதுபற்றி கடந்த ஆண்டு பிரியதர்சினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வருண்குமார் மீது புகார் செய்தார். அந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் கீழ் செயல்படும் வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். வருண்குமாரை நேரில் அழைத்தும் விசாரணை நடந்தது. அதன்பிறகு கோர்ட் உத்தரவின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வருண்குமார் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை வருண்குமார் நாடினார். அங்கும் அந்த மனு தள்ளுபடியானது.

இதையடுத்து பிரியதர்சினி, மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து வருண்குமாரை கைது செய்ய வலியுறுத்தினார். இந்த நிலையில் வருண்குமார் இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் திடீரென ஆஜராகி சரணடைந்தார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னர் வருண்குமார் ஜாமீன் கேட்டு ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற்றது. இவ்விசாரணையின் முடிவில் அவரை வரும் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார்.இதை அடுத்து வருண்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/ips-officer-varun-kumar-surrenders-199446.html


கையில் தாலியுடனும், மனதில் ஆசையுடனும் திருமணத்திற்கு காத்திருக்கும் இந்திய இளைஞர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்

இதுவரை மருமகள்களுக்கு மட்டுமே ஆலோசனை வழங்கிவந்த நமது பதிவுத்தளம் இன்று இந்தியாவில் திருமணம் செய்ய மனதில் ஆசைகளை சுமந்து நிற்கும் ஆண்களுக்கு ஒரு அறிவுரைச் செய்தியை வழங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறது.  ஏனென்றால் இந்த அறிவுரை மருமகள்களின் எதிர்கால நலனுடன் தொடர்புடையதாக இருப்பதால் இதனை சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் திருமணம் செய்து சுகமாக மருமகளின் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்தலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு கையில் தாலியுடன் திரியும் ஆண்கள் இனி முதலில் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்து வங்கியில் குறிப்பிட்ட அளவிற்கு சேமிப்பு வைத்துக்கொண்டு பிறகுதான் திருமணம் பற்றியே யோசிக்க வேண்டும். 

ஆண் என்பவன் மனைவி மற்றும் குடும்பத்தை எல்லா சூழ்நிலையிலும் பாதுகாக்கவேண்டிய கடைப்பட்டவனாவான் என்று CrPC 125 என்ற சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்தக் கடமையிலிருந்து தவறும் பட்சத்தில் அவனுக்கு தண்டனை வழங்கப்படும். இது பற்றி முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன்.  
========================================================
இந்த பகுதி மருமகள்களுக்கு - இதோ அந்த CrPC 125 உங்களது நோட்டுப்புத்தகத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

125. Order for maintenance of wives, children and parents.

(1) If any person leaving sufficient means neglects or refuses to maintain-

(a) His wife, unable to maintain herself, (கவனியுங்கள் முதல் உரிமை மனைவிக்குத்தான்) or

(b) His legitimate or illegitimate minor child, whether married or not, unable to maintain itself, or

(c) His legitimate or illegitimate child (not being a married daughter) who has attained majority, where such child is, by reason of any physical or mental abnormality or injury unable to maintain itself, or

(d) His father or mother, unable to maintain himself or herself.
 மேலுள்ள வாக்கியங்களில் கவனித்தீர்களா? எல்லா வாக்கியமும் ஆண் அல்லது கணவன் என்று பொருள்படும்படி "HIS" என்று தான் ஆரம்பித்திருக்கிறது. அதனால் உங்களது கணவர் உங்களை அனைத்து விதத்திலும் பராமரிக்க சட்டப்படி கடமைப்பட்டவராவார்.

என்றைக்குத் திருமணத்தின்போது இந்த முட்டாள்கள் தாலியை உங்களது கழுத்தில் கட்டுகிறார்களோ அன்றே CrPC 125 என்னும் இரும்புச் சங்கிலியை தங்களது கையில் கட்டிக்கொள்கிறார்கள். தாலியில் போடப்படும் முடிச்சு அவன் கையில் தானே இரும்புச் சங்கிலியால் போட்டுக்கொள்ளும் முடிச்சாகும். முட்டாள் கணவர்கள் இதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உணரமாட்டார்கள்.
========================================================
அதனால் இந்தியாவில் திருமணம் செய்ய கனவு காணும் ஆணுக்கு பணம், பதவி என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்பதை பின்வரும் செய்தி மீண்டும் ஒருமுறை இந்திய ஆண்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது. 


தினமலர் மே 22,2013

மும்பை: சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான், கணவர்களின் கடமை. அதைச் செய்யத் தவறிய கணவன், தன் மனைவிக்கு பராமரிப்பு செலவுக்கான தொகையை கொடுத்து தான் ஆக வேண்டும்,'' என, மும்பை ஐகோர்ட் நீதிபதி, எம்.எல்.தகிலியானி உத்தரவிட்டுள்ளார்.

மகேஷ் என்பவரின் மனைவி சசி. மும்பையில் வசிக்கும் இருவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்கின்றனர். கடந்த, 2012ம் ஆண்டில், தனக்கு மாதம், 1,500 ரூபாயும், தன், 1 வயது குழந்தைக்கு, மாதம் தோறும், 1,000 ரூபாயும், பராமரிப்பு செலவாக வழங்க, கணவருக்கு உத்தரவிட வேண்டும் என, குடும்ப நல கோர்ட்டில், சசி வழக்கு தொடர்ந்தார்.அதைக் கேட்ட கோர்ட், மாதம் தோறும், 1,500 ரூபாய் கொடுக்க, மகேஷுக்கு உத்தரவிட்டது.

"குழந்தை சிறு குழந்தையாக இருப்பதால், அதிகம் சாப்பிடாது. எனவே, அதற்காக தனி பராமரிப்பு செலவு கொடுக்கத் தேவையில்லை' என, குடும்ப நல கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.
 
இதை எதிர்த்து, அந்தப் பெண், மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு, பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ள நீதிபதி, எம்.எல்.தகிலியானி முன், விசாரணைக்கு வந்தது."மகேஷ் வேலையில்லாமல் இருப்பதால், மாதம் தோறும், 1,500 ரூபாய் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார். இதில், கூடுதலாக, 1,000 ரூபாய் கேட்பது நியாயமல்ல' என, அவரின் வழக்கறிஞர் வாதிட்டார்.

நீதிபதி தகிலியானி, தன் உத்தரவில், நேற்று கூறியதாவது: சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான் கணவரின் கடமை. சம்பாதிக்காமல் இருப்பதும், வேலையில்லாமல் இருப்பதும், மனைவியின் குற்றமல்ல; கணவனின் குற்றம். இதற்காக, தகுந்த வேலை பார்ப்பது, கணவனின் பொறுப்பு. அதை, மகேஷ் செய்யத் தவறிவிட்டார்.எனவே, குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டபடி, சசிக்கு, மாதம், 1,500 ரூபாயும், அவர்களின் குழந்தைக்கு, மாதம், 1,000 ரூபாயும் பராமரிப்பு செலவாக கொடுக்க வேண்டும். இந்தத் தொகையை, 2012ம் ஆண்டிலிருந்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி தன் உத்தரவில் கூறியிருந்தார்.



மருமகளை மதிக்காத கணவனின் அரசாங்க வேலையை பறிப்பது எப்படி?

இந்திய அரசாங்கம் மருமகள்களின் நலனை கருத்தில் கொண்டு பல பாதுகாப்பு சட்டங்களை அளித்திருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.  இதைப் பற்றி தெரியாத மருமகள்கள் முந்தைய பதிவுகளை படித்து குறிப்பெடுத்துக் கொள்ளவும்.
இந்த மருமகள் பாதுகாப்பு சட்டங்களில் குறிப்பிடத்தக்கவை:
  1.  வரதட்சணை தடுப்புச்  சட்டம்
  2. கணவனின் குடும்பத்தை கூட்டமாக சிறைக்கு அனுப்ப உதவும் மருமகள் கொடுமை தடுப்புச்  சட்டம் ( IPC498A)
  3. கணவனிடமிருந்து மாதாந்திர பராமரிப்புத் தொகை பெற வழிவகை செய்யும் சட்டம் (CrPC 125)
  4. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், கைச் செலவிற்கு பணம் என அனைத்து வசதிகளையும் கணவனிடமிருந்து பெற்றுத் தரும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம்.
  5. தற்போது வந்துள்ள பணியிடத்தில் பாலியல் கொடுமை தடுப்புச் சட்டம்
மேலே பட்டியலிடப்பட்டுள்ள சட்டங்களின் பயன்பாடுகள் பற்றி இந்த ஒரு பதிவில் எழுதிவிட முடியாது.  அவ்வளவு பலன்கள் இருக்கின்றன!!

இப்போது முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.  மருமகளின்  விருப்பத்திற்கு கட்டுப்படாமல் கொடுமை செய்யும் கணவன்களை அடக்க உதவும் வரதட்சணை தடுப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்றவற்றை மருமகள்கள் கணவனுக்கெதிராக பயன்படுத்தினாலும் கணவன்களின் கொட்டம் அடங்குவதில்லை.  அதற்குக் காரணம் அவர்கள் கையில் துள்ளிக் கொண்டிருக்கும் மாத வருமானம்.  தாங்கள் நல்ல அரசாங்க பணியில் இருக்கிறோம் என்ற மமதையினால் கணவன்கள் துள்ளிக் கொண்டிருப்பார்கள்.  அந்தக் கொட்டத்தையும் அடக்க இப்போது நீதிமன்றங்கள் மருமகள்களுக்கு உதவக் காத்துக்கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு அரசாங்க பணியாளர் நடத்தை விதிமுறை மற்றும் தமிழ்நாடு காவல்துறை பணியாளர் நடத்தை விதிமுறைகளின்படி குற்ற வழக்கு சுமத்தப்பட்ட நபர் அரசாங்கப் பணியிலோ காவல்துறையிலோ ஈடுபட தகுதியற்றவர் என்று கருதப்படலாம்.  அதன் அடிப்படையில் நீங்கள் உங்கள் கணவன் மீது வரதட்சணை குற்ற வழக்கு சுமத்தியவுடன் நிலுவையில் இருக்கும் அந்த குற்ற வழக்கை காரணம் காட்டி கணவனின் அரசாங்க வேலையை பறிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு சமர்ப்பிக்கலாம்.  இதுபோன்ற வழிமுறையைப் பின்பற்றி ஒரு புத்திசாலி மருமகள் தனது கணவனின் வேலைக்கு உலை வைத்துவிட்டார். இதனை வழிகாட்டுதலாகக் கொண்டு இனி எல்லா மருமகள்களும் உயர்நீதிமன்றத்தை அணுகி தங்கள் கணவனின் அரசாங்க வேலையை பறித்து கணவனுக்கு தக்க பாடம் கற்பிக்கலாம்.

பின்வரும் செய்தியை கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!!!!

 
சென்னை: குடும்ப வன்முறை குற்றம் சாட்டப்பட்டவரை, டி.எஸ்.பி.,யாக நியமிக்க, சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஈரோடு, சம்பத்நகரைச் சேர்ந்த, லட்சுமிபிரியா என்பவர், தாக்கல் செய்த மனு: எனது கணவர், வினோத் சாந்தாராம். வங்கியில் பணியாற்றிய அவர், டி.என்.பி.எஸ்.சி., மூலம், தமிழக அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, டி.எஸ்.பி.,யாக, போலீஸ் பயிற்சி கல்லூரியில், பயிற்சி எடுத்து வருகிறார்.

ஈரோட்டில், எங்களுக்கு, 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர், எனது நெருங்கிய உறவினர். இரண்டாம் திருமணம் செய்து வைப்பதற்காக, ஒரு வயது குழந்தையுடன், என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினர். 

விவாகரத்து கோரி, ஈரோடு கோர்ட்டில், எனது கணவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடியானது. கணவருடன் சேர்த்து வைக்கக் கோரிய, எனது மனுவை, கோர்ட் ஏற்றுக் கொண்டது; ஆனால், கோர்ட் உத்தரவுக்குப் பின்னும், என்னுடன் குடும்பம் நடத்தவில்லை. கோர்ட் உத்தரவை அமல்படுத்தவும், எனக்கு எதிரான குடும்ப வன்முறையை தடுக்கவும் கோரி, டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். எனது மனுவை பரிசீலிக்குமாறு, உத்தரவிட வேண்டும். தற்போது, பயிற்சி முடிக்க உள்ளதால், அவரை டி.எஸ்.பி.,யாக நியமிக்க உள்ளனர். போலீஸ் பிரிவில், ஒழுங்கு முறையாக பணியாற்றுபவருக்கு தான் இடம் அளிக்க வேண்டும். கோர்ட் உத்தரவுக்குப் பின்னும், குடும்பம் நடத்த அவரால் இயலவில்லை. பெண்ணை தொந்தரவு செய்தது, குடும்ப வன்முறை செய்தது, என, ஈடுபட்ட ஒருவரை, போலீஸ் பிரிவில் சேர்க்கக் கூடாது. எனவே, டி.எஸ்.பி.,யாக, வினோத் சந்தாராமை நியமிக்க, தடை விதிக்க வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார், "அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குற்றச்சாட்டுக்கள் மீது, விசாரணை நிலுவையில் உள்ளது என, கூறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் கோரியபடி, ஒரு வாரத்துக்கு, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார்.



பணியிடத்தில் தொந்தரவு செய்யும் ஆண்களை ஒடுக்க புது வழி!

பணியிடத்தில் தொந்தரவு செய்யும் ஆண்களை கட்டுக்குள் வைக்க புது சட்டம் வந்திருக்கிறது. அனைத்து மருமகள்களும் இதைப் பற்றி தெரிந்துகொண்டால் தாங்கள் பணி புரியும் இடங்களில் ஆண்களை பின்னுக்குத் தள்ளி எளிதாக பதவி உயர்வு பெறலாம்.

படத்தின் மீது “Right Click” செய்து "Open Link in New Tab" என்பதை “Click" செய்து பெரிதாக்கி அனைத்து தகவல்களையும் கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!!!





வெளிநாட்டிலிருந்து வரும் உங்கள் கணவனை விமான நிலையத்தில் கைது செய்ய வேண்டுமா?

மருமகளுக்கு பிடிக்காத கணவனையும், அவனது குடும்பத்தையும் ஏதாவது செய்ய வேண்டும்போல ஒரு உள்ளுணர்வு பல மருமகள்களுக்கும் உள்மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும்.   என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும்போது மருமகளின் தந்தை, சகோதரன் போன்றவர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்தோ அல்லது செய்தித்தாள், தொலைக் காட்சி போன்றவற்றில் பார்த்து தெரிந்துகொண்டு   ஒரு நல்ல வழிமுறையை மருமகளுக்கு ஆலோசனையாக வழங்குவார்கள்.  அது என்ன என்று கேட்கிறீர்களா?

அதுதான் இந்திய அரசாங்கம் மருமகள்களுக்குக் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டம்.  இதன் பயன்பாடுகள் பற்றி இந்த ஒரு பதிவில் எழுதி முடிக்க முடியாது. இந்த சட்டங்கள் மூலம் மருமகள்கள் அளவிடற்கரிய பலன்களை அடையலாம்.  உதாரணத்திற்கு தனிக்குடித்தனம் வராத கணவனையும், அதற்குத் தடையாக இருக்கும் மாமியாரையும் பெட்டிப் பாம்புபோல அடக்கிவிடலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்ள பின்வரும் முந்தைய பதிவுகளை படித்துப் பாருங்கள்.


எல்லாம் சரி இப்போது கணவன் வெளிநாட்டில் இருக்கிறான். மருமகள் ஏதோ காரணத்தால் இந்தியாவிற்கு வந்துவிட்டால் அந்தக் கணவனுக்கு எப்படி பாடம் புகட்ட முடியும்? என்று பல மருமகள்களுக்கும் சந்தேகம் இருக்கும்.  கவலையே படாதீர்கள்.  மருமகளுக்கு பிடிக்காத கணவன் உலகத்தில் எந்த மூலையிலிருந்தாலும் பிடித்து பாடம் புகட்டக் காத்திருக்கிறது இந்திய காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை.  
 
மருமகள் செய்யவேண்டியதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான்.  தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் கணவன் வரதட்சணைக் கொடுமை செய்தான் என்று ஒரு எளிய புகாரை பதிவு செய்யவேண்டும்.  பிறகு காவல்துறையினரிடம் சொல்லி கணவன் வெளிநாட்டில் இருப்பதால்  மத்திய புலனாய்வுத் துறையை பயன்படுத்தி அவனை தேடப்படும் சர்வதேச குற்றவாளி என்று பிரகடனம் (Red Corner Notice) செய்துவிடலாம்.  

இதற்கு நடுவே மற்றொரு சிறிய வேலை இருக்கிறது.  நமது காவல்துறை நண்பர்களை பயன்படுத்தி கணவன் மீது பதிவு செய்யப்பட்ட புகாரை (FIR) பயன்பத்தி இந்தியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்கள்,  தரைவழி எல்லைகள் இங்கெல்லாம் உள்ள இந்திய குடியேற்ற அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பிவைக்கலாம்.  இதனை தேடப்படும் குற்றவாளி சுற்றறிக்கை (Look Out Circular)  என்று அழைப்பார்கள்.  இந்தியாவிலிருந்து தப்பித்துவிட்ட கொடிய குற்றவாளி எப்போதாவது இந்திய எல்லைக்குள் நுழையும்போது குடியேற்ற அதிகாரிகள் மூலம் குற்றவாளியை கைது செய்ய காவல்துறை இந்த வழிமுறையைப் பயன்படுத்துவார்கள்.

இப்போது இதே வழிமுறையைப் பயன்படுத்தி வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு தெரியாமல் அவன் மீது இந்தியாவில் வரதட்சணை வழக்கு பதிவு செய்து அவனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, வழக்கிலிருந்து தப்பித்து வெளிநாட்டில் ஒளிந்துகொண்டிருப்பதாக சித்தரித்து அனைத்து விமானநிலையங்களுக்கும் அறிவிப்பு செய்துவிட்டால் போதும்.  இங்கு நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம் என்று தெரியாமல் கணவன் இந்தியாவிற்கு வரும்போது விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் அவனை பிடித்து நாட்டைவிட்டு தப்பிச் சென்ற தீவிரவாதி போல கைது செய்து  காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவார்கள். 

இந்தக் காட்சியை கண்ணாறக்கண்டு களிக்க காவல்துறை நண்பர்களிடம் சொல்லிவைத்திருந்தால் போதும் கணவன் விமான நிலையத்தில் பிடிபட்டதும் உங்களுக்கு தொலைபேசியில் தகவல் தருவார்கள்.  உடனடியாக நீங்கள் உங்களது செய்தித்தாள், தொலைக்காட்சி மீடியா நண்பருடன் விமான நிலையத்திற்கு சென்று கணவனை படம் பிடித்து வரதட்சணை வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த கணவன் விமான நிலையத்தில் பிடிபட்டான் என்று செய்தி வெளியிட்டு விமான நிலையத்திலேயே தீபாவளியை கொண்டாடிவிடலாம். அதுபோல் ஒரு மருமகள் கணவனை விமானநிலையத்தில் கைது செய்த செய்தியை கீழே கொடுத்திருக்கிறேன். படித்து கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

கணவனுக்கெதிராக Look Out Circular, Red Corner Notice  போன்றவறை ஒரு எளிய வரதட்சணைப் புகார் மூலம் எப்படி தயார் செய்வது என்ற தகவல்கள் கீழ்கண்ட இணைப்புகளில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
  1. வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படி?
  2. NRI கணவனை “கட்டுக்குள்” வைப்பது எப்படி? - இளம் மருமகளுக்கு மட்டும்
  3. NRI மாப்பிள்ளையா? வேண்டவே வேண்டாம்
  4. NRI கணவனுக்கு “கட்டம் கட்டுவது” எப்படி?
  5. NRI கணவனை விமான நிலையத்தில் கைது செய்வது எப்படி?
  6. NRI-கணவன் மீது இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுக்கப்போகிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்

வாழ்த்துக்கள்!!
 

தாம்பரம், அக். 29-
 
மேற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி வரதட்சணை கொடுமை புகார் அளித்து இருந்தார்.
 
இதுதொடர்பாக விஸ்வநாதனிடம் போலீசார் விசாரிக்க சென்றபோது தலைமறைவாகி விட்டார். அவர் ஜெர்மனி சென்று இருப்பது தெரிந்தது. இந்த நிலையில் நேற்று இரவு ஜெர்மனியில் இருந்து வந்த விமான பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
 
அப்போது வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசாரல் தேடப்பட்ட விஸ்வநாதன் இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.



இந்திய ஆண்களை நம்பி திருமணம் செய்வது ஆபத்தானதா?

இந்திய ஆண்களை நம்பி திருமணம் செய்யும் இந்திய இளம் பெண்களுக்கு கணவனும் அவனது குடும்பமும் சேர்ந்து செய்யும் வித விதமான கொடுமைகள் என்னென்ன என்று டில்லியைச் சேர்ந்த “மனுஷி” என்ற அரசு சாரா மகளிர் அமைப்பு ஆராய்ந்து ஒரு பட்டியில் வெளியிட்டிருக்கிறது.

இந்திய மருமகள்கள் தாங்கள் கணவனாலும், அவனது குடும்பத்தாலும் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்து அவை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபிறகு அந்த வழக்குகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த பட்டியலை படிக்கும்போது உள்ளம் நடுங்குகிறது.  இப்படிப்பட்ட இந்திய ஆண்களை நம்பி இந்திய இளம் பெண்கள் திருமணம் செய்வது எவ்வளவு ஆபத்தான செயல் என்று தோன்றுகிறது.


The forms of marital cruelty as recognised by the courts are as follows 
 Laws against Domestic Violence, Manushi (Vol. 137) July-Aug, 2003, New Delhi, pp.24-25

a) Persistent denial of food
(பல நாட்கள் உணவு கொடுக்காமல் மருமகளை துன்புறுத்துதல்)

b) Insisting on perverse sexual conduct
 (தகாப்புணர்ச்சிக்கு வற்புறுத்துதல்)

c) Constantly locking a woman out of the house
(வீட்டை விட்டு வெளியே விரட்டிவிடுதல்)

d) Denying the woman access to children, thereby causing mental torture
(குழந்தைகளை மருமகளின் கண்ணில்கூட காட்டாமல் விரட்டுதல்)

e) Physical violence
(அடித்து உதைத்தல், சிகரெட்டால் சூடு வைத்தல், தலையில் பீரை ஊற்றி “பீர்” குளியல் செய்வது, இன்னும் பல)

f) Taunting, demoralising and putting down the woman with the intention of causing mental torture
(மருமகளைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் அவதூறு பேசி மருமகளின் மனதை காயப்படுத்துதல்)

g) Confining the woman at home and not allowing her normal social intercourse
(மருமகளை வீட்டிற்குள் தனியறையில் அடைத்துவைத்தல்)

h) Abusing children in their mother’s presence with the intention of causing her mental torture
(மருமகளின் கண்ணெதிரே அவரது குழந்தைகளை துன்புறுத்துதல்)

i) Denying the paternity of the children with the intention of inflicting mental pain upon the mother
(மருமகளுக்குப் பிறந்த குழந்தை தன்னுடையது அல்ல என்றுகூறி கணவன் மருமகளின் மனதை புண்படுத்துதல்)

j) Threatening divorce unless dowry is given
(கேட்ட பொருட்களையும், பணத்தையும் கொடுக்க மறுத்தால் விவாகரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டுதல்)


மருமகள்கள் இந்த பட்டியலை கவனமாக படித்து குறிப்பெடுத்துக்கொண்டு கணவனுக்கெதிரான தங்களது வரதட்சணைக் கொடுமை புகாரை எழுதும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாழ்த்துக்கள்!!!


வரதட்சணை வழக்கில் கணவனை அதிரடியாக கைது செய்வது எப்படி?

கணவனையும், அவனது குடும்பத்தையும் மருமகளுக்கு பிடிக்காத சூழ்நிலை ஏற்படும்போது மருமகளுக்கு கைகொடுத்து உதவுபவைதான் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்கும்.  அதுபோன்ற சூழ்நிலையில் கணவனும், அவனது குடும்பத்தாரும் வரதட்சணைக் கொடுமை செய்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் சில சமயங்களில் காவல்நிலைய அதிகாரி அந்த புகாரை பதிவு செய்ய தயங்குவார்.   இதனை எப்படிக் கையாள்வது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இந்திய காவல்துறை பணித் தேர்வு எழுதி பதவிக்கு வரும் மாவட்ட கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் போன்றவர்கள் இந்திய மருமகள்களின் கவலையை போக்குவதற்கு பெரிதும் உதவுவார்கள் என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இன்று தெரிந்துகொள்ளுங்கள். 

கணவனை வரதட்சணை வழக்கில் உடனடியாக கைது செய்யவேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் உங்கள் புகாரை தெளிவாக எழுதி (புகார் எழுதத் தெரியாத மருமகள்கள் வழக்கறிஞரின் உதவியை நாடலாம்) அழகாக தட்டச்சு செய்து, நேர்த்தியாக உடையணிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அலுவலகத்திற்கு சென்று நேரடியாக காவல் கண்காணிப்பாளரிடம் உங்களது புகாரை கொடுங்கள்.   பிறகு பாருங்கள் புகாரை பதிவு செய்து கணவனை கைது செய்யும்படி காவல்நிலையத்திற்கு உத்தரவு பறக்கும்.

காவல் கண்காணிப்பாளரின் உத்தரவு கிடைத்ததும் காவல் நிலையத்தில் உங்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கும்.  உடனடியாக கணவனின் வீட்டிற்கு காவலர்கள் ஓடிச் சென்று கணவனையும், அவனது குடும்பத்தையும் கூண்டுடோடு  காவல் நிலையத்திற்கு கட்டி இழுத்து வந்துவிடுவார்கள்.  கணவனை கைது செய்து அழைத்துவரும் காட்சியைக் கண்ட மகிழ்ச்சியில் காவல் நண்பர்களுக்கு போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவுகள்  இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்!

இந்த வழிமுறையில் இன்றைய செய்தியில் பாருங்கள் ஒரு வீரமான மருத்துவ மருமகள் தனது கணவனை காவல்துறை மூலம் அதிரடியாக கைது செய்ய வைத்திருக்கிறார்.


விருதுநகர்: விருதுநகரில், பெண் டாக்டரை, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய, பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் டி.கே.எஸ்.பி. நகரை சேர்ந்த, பல் டாக்டர் ஹேமாசங்கரி.
இவர், நஜ்மல் கோதா எஸ்.பி., யிடம் கொடுத்த புகார்: எனக்கும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி உதவி பேராசிரியர் மலைராஜனுக்கும், 2007 நவ., 14 ல், திருமணம் நடந்தது. வரதட்சணையாக 60 பவுன் நகை, 75 ஆயிரம் ரூபாய், 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொடுக்கப்பட்டன.

கடந்த 2009 ல், மலைராஜன், மாமியார் குருவம்மாள், நாத்தனார் லதாதேவி (மதுரை மீனாட்சி கல்லூரி உதவி பேராசிரியர்), மைத்துனர் அழகுராஜா (தனியார் கல்லூரி பேராசிரியர்) கேட்டதற்கிணங்க, ஒரு லட்சம் ரூபாய், 25 பவுன் நகையை, எனது பெற்றோரிடம் வாங்கிக் கொடுத்தேன்.

மீண்டும் வரதட்சணையாக, ஐந்து லட்சம், 25 பவுன் நகை வாங்கி வர, கணவர், குடும்பத்தார் வற்புறுத்தினர். "என்னால் கொடுக்க முடியாது' என, கூறியதால், கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர் என, குறிப்பிட்டிருந்தார். மலைராஜனை, மகளிர் போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
மேற்கண்ட செய்தியை படித்தவுடன் வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு-3ன் படி  “வரதட்சணை கொடுப்பதும் குற்றம்தானே” என்று  சில மருமகள்களுக்கு லேசான சந்தேகம் வரலாம்.  அதைப் பற்றி கவலையே படாதீர்கள்.  புகாரிலும் சரி, செய்தித்தாளிலும் சரி நீங்கள் வெளிப்படையாக வரதட்சணை கொடுத்துதான் திருமணம் செய்ததாக தைரியமாகக் கூறலாம். அப்போதுதானே அதன் தொடர்ச்சியாக கணவன் மேலும் வரதட்சணை கேட்பதாக புகாரை ஒரு கோர்வையாக எழுதமுடியும்?

அதனால் நீங்கள் வரதட்சணை கொடுத்ததாக தயங்காமல் புகாரில் எழுதலாம்.  அப்படி எழுதினாலும் காவல்துறையோ, நீதிமன்றமோ மருமகளை ஒன்றுமே கேட்கமாட்டார்கள்.  அதுமட்டுமல்லாமல் மருமகள்களுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு-7ல் வரதட்சணை கொடுத்திருந்தாலும் தண்டிக்க முடியாதபடி பாதுகாப்பும் இருக்கிறது.

 இப்போது மத்திய அரசாங்கம் மருமகள்களுக்கு சாதகமாக வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் மேலும் பல திருத்தங்களை கொண்டுவரவிருக்கிறது.  இதனால் மருமகள்களுக்கு அமோகமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லாம்.  முன்பெல்லாம் கணவனுக்கு 5 ஆண்டுகள்தான் தண்டனை, இப்போது அதனை திருத்தி 7 ஆண்டுகள் என்று மாற்றவிருக்கிறார்கள்.  இதன் மூலம் ஏராளாமான பலன்கள் மருமகள்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. அதைப் பற்றி மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.  இப்போதைக்கு மத்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து  இந்த சட்டதிருத்தத்திற்கு உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

வாழ்த்துக்கள்!!

வரதட்சணை கேட்போருக்கான தண்டனை உயர்கிறது
தினமலர்
செப்டம்பர் 01,2012

புதுடில்லி:வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை ஒழிப்பு சட்டத்தில், சில திருத்தங்களைக் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, திருமணத்தின் போது, அன்பளிப்பாக கொடுக்கப்படும், தங்க நகைகள் மற்றும் பிற பொருட்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, இரு தரப்பினரும் கையெழுத்திட்டு, இதற்கென நியமிக்கப்படும் வரதட்சணை ஒழிப்பு அதிகாரியிடம், ஒப்படைக்க வேண்டும்.இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, சிறைத் தண்டனை வழங்கப்படும்.

அதே நேரத்தில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் குற்றத்துக்கான சிறைத் தண்டனை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்தப்படும். ஆனால், வரதட்சணை தருவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஒரு ஆண்டாக குறைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் பெற்றோரே அதிகம் பாதிக்கப்படுவோராக இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் புகார் செய்யும் பெண், அதற்கான நிவாரணம் பெறவும், வழிவகை செய்யப்படும். இச்சட்டத்தின் கீழ், குற்றம் நடந்த இடம் மட்டுமல்லாது, வேறு இடத்தில் இருந்தும் புகார் செய்யலாம்.பாதிக்கப்பட்ட பெண், தன் சொந்த அல்லது தற்காலிக வீட்டில் இருந்து, புகார் செய்ய அனுமதிக்கப்படும் போது, அப்பெண், தன் பெற்றோரின் வீட்டில் இருந்து கொண்டும், சுதந்திரமாக புகார் செய்யலாம். அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களை, பாதிக்கப்பட்ட நபர்கள் என, வகைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.




ஆண் பல மனைவியரை வைத்திருந்தால் ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண் பல திருமணம் செய்தால் “செக்ஸ் வெறி” என்கிறது!

பெண்களைப் பற்றிய இந்தியர்களின் சிந்தனை மிகவும் விசித்திரமானது.  இந்தியாவில் சட்டத்தை பின்பற்றி நாட்டை வழி நடத்தவேண்டிய பல ஆண்கள் பல மனைவியரை வைத்திருந்தால் வாயை பொத்திக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் மக்கள் ஒரு பெண் பல திருமணம் செய்தால் “செக்ஸ் வெறி” என்கிறார்கள். 

பெண்களை அடிமைப்படுத்தும் மனநிலையிலேயே இருக்கும் ஆணாதிக்க சமுதாயம் தான் செய்வது மட்டும்தான் சரி என்று எண்ணி பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்பது பின்வரும் இரு செய்திகளில் தெரிகிறது. 

In South India, more the merrier

May 2, 2006 Times of India


HYDERABAD/CHENNAI/BANGALORE: That engineer K Suryanarayana had two wives became public only after his murder in Afghanistan, but the revelation isn't surprising in Andhra Pradesh, indeed in most of south India.

In Tamil Nadu, bigamy is pretty much institutionalised and even has a name - Chinna veedu, which translates as 'small house' or second home. It is an age-old tradition surviving to this day despite its illegality.

When DMK was in power in the state, security agencies had a tough time providing security to two houses for many ministers, as each of them had two wives.

Whether it was the late M G Ramachandran, or M Karunanidhi, they have all had it, and flaunted it. Karunanidhi has married at least three women, the first of whom is dead.

The DMK chief now divides his time in the houses of both wives - spending mornings at the Gopalapuram residence with Dayaluammal while moving to the house of his other wife, Rajathiammal, at CIT Nagar in Chennai in the afternoons.

Another towering Tamil actor, Gemini Ganesan, married five times while his first wife was alive. The Chinna veedu concept is fairly common in Krishnagiri and Salem districts of TN, where males believe in more the merrier.

Actor-director K Bhagyaraj even made a Tamil movie called Chinna Veedu.

At least one top Union minister from Tamil Nadu is known to have two wives and so does a senior DMK official, who married his daughter's classmate. An academic said, "The social sanction for two wives can be traced to religion and mythology. Lord Muruga, for instance, had two wives."

In Andhra, bigamy doesn't have the traditional sanction it enjoys in TN, but the practice is fairly widespread among the powerful and even a status symbol.

=====

"செக்ஸ்' வெறிக்கு, திருமண பந்தத்தை கொச்சைப்படுத்திய பெண்
தினமலர் 23 ஆகஸ்ட் 2012
சென்னை:சென்னையில் அடிக்கடி இடத்தை மாற்றி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்த பெண், 10க்கும் மேற்பட்ட வாலிபர்களைத் திருமணம் செய்து ஏமாற்றினார். ஏமாந்த வாலிபர்கள் 5 பேர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். "செக்ஸ்' வெறிக்கு, திருமண பந்தத்தை கொச்சைப்படுத்திய பெண்ணின் வலையில் திருச்சி, கோவை வாலிபர்களும் சிக்கிய தகவல் வெளியாகியுள்ளது.





மருமகளின் வரதட்சணை வழக்கை காரணம் காட்டி விவாகரத்து கோரும் கணவனின் முகத்தில் கரி பூசுவது எப்படி?

மருமகள்களே,

இன்றைய பதிவில் விவாகரத்து வழக்கு தொடர்பான மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி விளக்குகிறேன்.  குறிப்பெடுத்துக்கொள்ள கையில் நோட்டுப்புத்தகம், எழுதுகோல் எல்லாவற்றையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். 

மருமகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்காத கணவனையும் அவனது குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்த இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் (IPC498A, Dowry Prohibition Act) பல காலமாக மருமகள்களுக்கு உதவி வருகின்றன என்று பல மருமகள்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும்.  இதுவரை தெரிந்துகொள்ளாத அப்பாவி மருமகள்கள் பின்வரும் இணைப்புகளில் சென்று அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

இனி முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.  பொதுவாக வரதட்சணை வழக்கு பதிவு செய்தவுடன் காவல்துறை நண்பர்கள் கணவனையும், அவனது குடும்பத்திலுள்ள அனைவரையும் (மாமியார், நாத்தனார்கள், நாத்தனார்களின் கணவன்கள், கணவனின் அண்ணன்கள், அண்ணிகள்) கைது செய்து சில நாட்கள் சிறையில் வைத்திருந்து பிறகு ஜாமினில் விடுவது வழக்கம்.  அதன்பிறகு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கை நம் விருப்பப்படி நீட்டித்து பல ஆண்டுகள் கணவனை நீதிமன்றத்தில் அலையவிட்டு வேடிக்கை பார்க்க நீதிமன்றம் மருமகள்களுக்கு ஒத்துழைப்பது மரபு.  இதுபற்றி எல்லா மருமகள்களுக்கும் நன்றாகத் தெரியும். 

இதுபோன்ற சமயத்தில் கணவன்கள் மருமகளை வெறுத்து ஒதுக்க நினைத்துக் கொண்டிருப்பார்கள். அப்போது இந்த வரதட்சணை வழக்கை காரணம் காட்டி  விவாகரத்து கோரலாம் என்று வழக்கறிஞர்கள் கணவன்களை தவறாக வழிநடத்திச் செல்வார்கள்.  அதுவும் ஒருவகையில் நமக்கு நல்லதுதான்.  ஏனென்றால் கடைசியில் மருமகளின் அனுமதியில்லாமல் கணவனுக்கு விவாகரத்து கிடைக்காது என்பது அந்த முட்டாள்களுக்கு பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் நடையாய் நடந்த பிறகுதான் புரியும்!

சில துரதிர்ஷ்டமான சமயங்களில் வரதட்சணை வழக்கை நடத்தும் நீதிமன்றம் கணவனையும், அவனது குடும்பத்தாரையும்  மருமகள் தொடுத்த வரதட்சணைக் கொடுமை வழக்கிலிருந்து விடுதலை செய்துவிடும்.  அதுபோன்ற சமயங்களில் கணவன்கள் ஏதோ தங்களை புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு  மருமகள் கொடுத்த வரதட்சணைப் புகார் பொய்யானது அதனால் எங்களை நீதிமன்றம் விடுவித்துவிட்டது.  மருமகளின் இந்த பொய் வழக்கு காரணமாக எனது குடும்பத்தார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இது மருமகளால் கணவனுக்கு மனதளவில் இழைக்கப்பட்ட கொடுமை என்று கூறி இந்து திருமணச்சட்டம் பிரிவு 13-ன் படி விவாகரத்து கோருவார்கள்.

இதுபோல் மருமகளின் வரதட்சணை வழக்கை பொய் என்று கூறி விவாகரத்து கோரும் கணவன்களின் முகத்தில் கரி பூசி விவாகரத்து கிடைக்காமல் செய்து மருமகள்கள் வெற்றி பெற சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 

மருமகள் வரதட்சணைப் புகார் கொடுத்து அதனால் கணவனின் குடும்பத்தார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் மருமகள் கொடுத்த வரதட்சணைப் புகார் பொய்யானது என்று கூறிவிடமுடியாது.  அதனால் கணவனின் குடும்பத்தார் சிறையில் அடைக்கப்பட காரணமாக இருந்த மருமகளின் செயல் கணவனுக்கு செய்யப்பட்ட கொடுமையாக கருதமுடியாது.  இதன் அடிப்படையில் கணவன் கோரும் விவாகரத்தை வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கணவன்களுக்கு நெத்தியடி கொடுக்கும்விதமாக மருமகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்.  கவனமாக குறிப்பெடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
High Court of Judicature at Madras
23-12-2011
Judge(s)

JUSTICE K. MOHAN RAM & JUSTICE G.M. AKBAR ALI
Parties
P. Abirami Versus D.E. Tamilarasan
Advocate(s)
For the Appellant: D. Ramalingam for Sudha Ramalingam, Advocates.
For the Respondent: M. Venkatachalapathy, Senior Counsel for M. Kempraj, Advocate.
Hindu Marriage Act, 1955 (25 of 1955), Section 13 – Mental Cruelty – Decree of divorce – Grant of - Validity of – Decree of divorce granted in favour of husband by Trial Court on account of mental cruelty – However, no specific acts, which amounted to mental cruelty, have been pleaded with material particulars – Only general allegations made in petition for divorce – Allegation that wife did not behave as a dutiful wife also not substantiated – Moreover, allegations that husband was not informed about pregnancy of wife also proved to be false – Acquittal of mother and sister in Criminal case filed by wife would not prove that Complaint being falseThus, allegation of mental cruelty not established – Decree of divorce granted on ground of mental cruelty, set aside.

இந்த தீர்ப்பினை முன்னுதாரணமாகக் கொண்டு கணவனுக்கெதிராக வரதட்சணை வழக்குத் தொடர்ந்த மருமகள்கள் தங்கள் தரப்பு வாதத்தை குடும்ப நல நீதிமன்றத்தில் முன்வைத்து கணவன் கோரும் விவாகரத்தை அவனுக்குக் கிடைக்காமல் செய்து விடலாம்.

ஆனால் பல முறை இந்திய உச்ச நீதிமன்றம் இதுபோல மருமகள் தொடுக்கும் வரதட்சணை வழக்கில் கணவன் குடும்பத்தார் விடுதலை செய்யப்பட்டால் அதனை மருமகள் செய்த கொடுமையாகக் கருதி கணவன் விவாகரத்து கோருவது சரிதான் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.  சமீபத்தில்கூட ஒரு விவாகரத்து வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் அதைப்பற்றி கூறியிருக்கிறது.  ஆனால் இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் எத்தனை கணவன்களால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டில்லிவரை சென்று வழக்கறிஞருக்கு பல லட்சம் கொடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி விவாரகத்து பெறமுடியும்?   இந்த "வீக்னஸ்" மருமகள்களுக்கு மிகவும் சாதகமான விஷயம்தானே?! 
IN THE SUPREME COURT OF INDIA
CIVIL APPELLATE JURISDICTION
CIVIL APPEAL NO . 4905 OF 2012
(Arising out of S.L.P. (Civil) No. 16528 of 2007)
July 04, 2012
Vishwanath S/o Sitaram Agrawal .....……..Appellant
Versus
Sau. Sarla Vishwanath Agrawal ………Respondent

35. Another aspect needs to be taken note of. She had made allegation about the demand of dowry. RCC No. 133/95 was instituted under Section 498A of the Indian Penal Code against the husband, father-in-law and other relatives. They have been acquitted in that case. The said decision of acquittal has not been assailed before the higher forum. Hence, the allegation on this count was incorrect and untruthful and it can unhesitatingly be stated that such an act creates mental trauma in the mind of the husband as no one would like to face a criminal proceeding of this nature on baseless and untruthful allegations.
இப்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவது உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாதவரை மருமகள்கள் தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை தேவையானபடி உயர்நீதிமன்றங்களில் பெற்றுக்கொண்டு கணவனை ஒரு வழி செய்துவிடலாம்.

அப்படியே குடும்பநல நீதிமன்றத்தில் மருமகளுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காவிட்டாலும் அதனை எதிர்த்து மாவட்ட நீதிமன்றம் செல்லலாம், அதற்குப் பிறகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அங்கும் மருமகளுக்குத் தேவையான தீர்ப்பு கிடைக்கவில்லையென்றால் உச்ச நீதிமன்றத்திற்கும் செல்லாம்.  இந்த நீதிமன்றங்களில் தீர்ப்பு கிடைக்க சுமார் 25-50 ஆண்டுகளாவது ஆகிவிடும்.  அதுவரை கணவன் வேறு திருமணமும் செய்ய முடியாது. 

இந்த விஷயங்கள் தெரிந்த புத்திசாலிக் கணவனாக இருந்தால் இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாமல் வழக்கின் ஆரம்ப நிலையிலேயே மருமகளின் காலடியில் விழுந்து மருமகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து தனக்கு வேண்டிய நிவாரணத்தைப் பெறலாம்.  இது புரியாத முட்டாள் கணவன்கள் 25 - 50 ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைந்து கடைசியில் சோர்ந்துபோய் மருமகளின் கட்டளைக்கு கட்டுப்பட்டு காலடியில் விழுவான்.  

எது எப்படியோ மருமகளின் வரதட்சணை வழக்கை காரணம் காட்டி விவாகரத்து கோரும் கணவனின் முகத்தில் கரி பூசுவது எப்படி என்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்திவிட்டது.  இது எவ்வளவு அருமையான வழிமுறை!

வாழ்த்துக்கள்!!