"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


வெளிநாடு வாழ் இந்தியரை திருமணம் செய்திருக்கும் மருமகள்களுக்கு இந்த செய்தி

இப்போது பல மருமகள்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களை திருமணம் செய்து கொண்டு குடும்ப சிக்கல்களில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்திய நீதிமன்றத்தின் உதவியோடு சிக்கலிலிருந்து விடுபடும்போது தெரிந்து வைத்திருக்க வேண்டிய செய்தி இது.

இந்த செய்தியில் “Quash” என்ற வார்த்தையை கவனமாக குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்படும் இந்த சட்ட நுணுக்க வார்த்தைதான் மருமகள்கள் தங்கள் கணவன் மீது தொடுக்கும் வரதட்சணை வழக்கில் மிகவும் முக்கியமான சட்ட நடைமுறை. இதைப் பற்றி அடுத்த பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள்!

NRI agrees to pay Rs 67 lakhs to wife in matrimonial dispute

New Delhi, Thu Dec 24 2009, The Indian Express


A London-based NRI, accused of attempting to kill his wife in a matrimonial dispute, has been granted anticipatory bail by the Delhi High Court after he agreed to pay her the permanent alimony of Rs 67 lakhs towards her and their child's maintenance.

Justice Kailash Gambhir in a recent order allowed a bail plea of Anuj Kapoor(name changed), an Indian origin British National, after he and his wife entered into an agreement and the original copy of the agreement was furnished before the court.

"In the event of arrest, the petitioner(Kapoor) shall be granted bail subject to his furnishing of personal bond in the sum of Rs 50,000 with one surety of the like amount to the satisfaction of the SHO of the concerned police station", said Justice Gambhir.

Directing the wife to co-operate, the Court asked both of them to file petitions for quashing of the FIRs lodged by her following their settlement and later they can approach the family court for mutual divorce.

The Court said Kapoor, a businessman, will deposit the amount in three instalments. Out of Rs 67 lakhs, he will deposit Rs 32 lakhs with the trial court which will hear their mutual divorce case, Rs 25 lakhs will be given by way of a demand draft and rest Rs 10 lakhs will paid by him to the wife after quashing of the criminal cases against him.

It was directed that after compliance of the court order, Kapoor will be allowed to visit abroad.

The couple's marriage took place in August 2007 and within a few months they moved to England. After the birth of their son and due to their differences the wife moved back to India.

Kapoor, in the petition, claimed he had come to India to resolve the differences with his wife but following some arguments, she filed two FIRs against him for alleged attempt to murder with Rajouri Garden police station.




NRI கணவனை விமான நிலையத்தில் இலவசமாக கைது செய்வது எப்படி? - Part 2

இரண்டு வாரங்களுக்கு முன்பு மருமகளின் சொல்லுக்கு கட்டுப்படாத NRI கணவனை இந்திய போலிஸின் துணையோடு இந்திய விமான நிலையத்தில் இலவசமாக கைது செய்வது எப்படி என்று எழுதியிருந்தேன். அதற்கு உதாரணமாக அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய ஒரு கணவனை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கைது செய்த செய்தியையும் எழுதியிருந்தேன் . அதனை படிக்காத மருமகள்கள் இந்த இணைப்பில் சென்று படித்துக் கொள்ளுங்கள்: NRI கணவனை விமான நிலையத்தில் கைது செய்வது எப்படி?

அந்த வரிசையில் இப்போது மருமகளின் சொற்படி நடக்காத மற்றொரு NRI கணவனை “வரதட்சணை வழக்கில் சிக்கவைத்து” தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சர்வதேச குற்றவாளி வரிசையில் சேர்த்து கைது செய்திருக்கிறார்கள் என்பது மருமகள்கள் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டிய செய்தி.

இதுபோன்று மருமகளுக்கு அடங்காத NRI கணவன்களுக்கு எதிராக இந்தியாவில் “வரதட்சணை வழக்கு” பதிவு செய்து காவல்துறை நண்பர்களின் உதவியோடு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அந்த NRI கணவன் இந்தியாவிற்கு வரும்போது விமான நிலையத்தில் கைது செய்வதோடு மருமகள்களின் வேலை முடிந்துவிடாது என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்காது. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக மருமகள்கள் செய்ய வேண்டிய மற்றொரு காரியமும் இருக்கிறது.

இதுபோன்று காவல்துறை நண்பர்களின் இலவச உதவியோடு NRI கணவனை விமான நிலையத்தில் கைதுசெய்யும்போது மருமகள்கள் மறக்காமல் “மீடியா” நண்பர்களின் இலவச சேவையையும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கணவன் கைது சம்பவத்தை உடனடியாக செய்தித்தாள், தொலைக்காட்சி நிருபர்களுக்கு சொல்லிவிட்டால் போதும் மற்ற வேலையை அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்வார்கள்.

இதுபோன்ற “பரபரப்பான” செய்தியை அவர்களுக்கு அளிக்கும்போது “மீடியா” நண்பர்கள் தங்களின் நன்றிக்கடனை மருமகள்களுக்கு செலுத்தத் தவறுவதில்லை. செய்தி வெளியிடும்போது கணவனைப் பற்றி தெள்ளத் தெளிவாக எல்லா விவரங்களையும் எழுதிவிட்டு மருமகளின் பெயர் மற்றும் தகவல்களை இருட்டடிப்பு செய்து மருமகளின் பெயர் வெளியே தெரியாமல் மருமகளின் “கண்ணியத்தை” பாதுகாத்து தங்களது நன்றிக் கடனை மருமகளுக்கு செலுத்திவிடுவார்கள். அதற்கு உதாரணமாக பின்வரும் இன்றைய பரபரப்பான செய்தியை படித்துப் பாருங்கள்.


திரிசூலம்:வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசாரிடம் இருந்து தப்பி, சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்தவர், நாடு திரும்பிய போது விமான நிலையத்தில் சிக்கினார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சோமசுந்தர சுப்ரமணி, 38, இவருக்கும்,
தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், வரதட்சணை கேட்டு, தன்னை கொடுமைப்படுத்தியதாக, சோமசுந்தர சுப்ரமணி மீது அவரது மனைவி, தஞ்சாவூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில், போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சோமசுந்தர சுப்ரமணி, சிங்கப்பூர் சென்று தலைமறைவானார். அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த தஞ்சாவூர் போலீசார், அவர் குறித்த தகவல்களை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சோமசுந்தர சுப்ரமணி நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு, ஏர் இந்தியா விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்திறங்கிய போது, குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்தனர். பின், தஞ்சாவூர் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

அதனால் மருமகள்கள் NRI கணவனை வரதட்சணை வழக்கில் சிக்கவைத்து விமான நிலையத்தில் கைது செய்யும்போது மறக்காமல் “மீடியா” நண்பர்களின் சேவையையும் பயன்படுத்திக் கொண்டால் இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும்.

வாழ்த்துக்கள்!!


மருமகளை வாழவிடாமல் தடுக்கும் மாமனாரின் மீது புகார் கொடுப்பது எப்படி?

பல குடும்பங்களில் கணவன் மருமகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடங்கி நடந்தாலும் அவனது குடும்பத்தில் இருக்கும் கிழடுகளான மாமியார், மாமனார் இரண்டும் சும்மா இருக்க முடியாமல் கணவனை மருமகளிடமிருந்து பிரிக்கும் வேலையில் ஈடுபடும். உதாரணத்திற்கு மருமகள் தனிக்குடித்தனம் போக விரும்பினால் பெரும்பாலான குடும்பங்களில் அதற்கு முட்டுக் கட்டையாக இருப்பது இந்த கிழடுகள்தான்.

இதுபோன்ற சமயத்தில் மருமகள் சாதாரண காவல் நிலையத்தை அனுகாமல் தன்னுடைய புகாரை தெளிவாக எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது மாநகர காவல் ஆணையர் இவர்களை நேரில் சென்று பார்த்து தன் கைப்பட புகாரை நேரடியாகக் கொடுத்தால் உடனடியாக மாமனார், மாமியார் மீது நடவடிக்கை பாயும் என்பது பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதாவது பின்வரும் செய்தியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!

ஒன்இந்தியா

நெல்லை: திருச்சி பரஞ்சோதிக்கு வந்த பஞ்சாயத்தைப் போல இப்போது சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி குடும்பத்திற்கும் ஒரு சிக்கல் கிளம்பியுள்ளது. முத்துச்செல்வியின் சகோதரர் மனைவி சமுத்திரக்கனி, தன்னை தனது கணவருடன் வாழ விடாமல் அவரது தந்தை தடுப்பதாக கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி மீது அவரது 2வது மனைவி டாக்டர் ராணி புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இருப்பினும் தேர்தலில் பரஞ்ஜோதி ஜெயித்தார், பின்னர் அமைச்சரும் ஆனார்.ஆனால் ராணியின் புகார் வலுவானதாக இருந்ததால் அமைச்சர் பதவியை இழந்தார்.

இந்த நிலையில், சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியின் குடும்பத்திற்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. முத்துச்செல்வியின் சகோதரர் இளையராஜா. இவரது மனைவி சமுத்திரக்கனி. இவர் நெல்லை மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில்,எனது கணவர் இளையராஜா. இவருக்கும், எனக்கும் கடந்த மே மாதம் கல்யாணம் நடந்தது. ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் என்னையும், எனது கணவரையும் அவரது தந்தை சங்கரலிங்கம் சேர்ந்து வாழ விடவில்லை. மேலும், நான் எனது கணவருடன் வசித்து வந்த வீட்டையும் பூட்டி விட்டார்.

என்னை எனது கணவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்காமல் தடுத்து வரும் சங்கரலிங்கம் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரிக்குமாறு சங்கரன்கோவில் மகளிர் போலீஸாருக்கு எஸ்பி உத்தரவிட்டதன் பேரில் தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சங்கரலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது. முத்துலட்சுமியின் தந்தை மீது அவரது மருமகள் கொடுத்துள்ள புகாரால் அதிமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.


NRI கணவனை விமான நிலையத்தில் கைது செய்வது எப்படி?

NRI ஆண்களை நம்பி திருமணம் செய்துகொள்ளும் அப்பாவி இந்திய மருமகள்கள் கணவன் தனது சொற்படி நடக்காதபோது பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாவது வழக்கமாக இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் கொடுமைகளில் ஒன்றாகும். இதுபோன்ற சமயத்தில் வரதட்சணை சட்டங்களைப் (IPC498A, Dowry Prohibition Act) பயன்படுத்தி கணவனையும், அவனது குடும்பத்தையும் “வழிக்குக்”கொண்டுவருவதுதான் பல காலமாக மருமகள்களுக்கு இருந்துவரும் ஒரே வழிமுறையாகும்.

ஆனால் வெளிநாட்டில் வாழும் NRI கணவன் மீது இந்தியாவில் வரதட்சணை புகார் கொடுக்கும்போது முடிந்தவரை காவல்துறை நண்பர்கள் இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்பத்திலுள்ள அனைவரையும் சிறைப்பிடித்துவிடுவார்கள். ஆனால் NRI கணவன் வெளிநாட்டில் இருப்பதால் தப்பித்துவிடுவான். இதுபோன்ற சூழலில் கணவனை சிறையில் தள்ள முடியாமல் பல மருமகள்கள் குழம்பிய மனதுடன் என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பார்கள். இதுவும் ஒருவகையில் NRI கணவன் மருமகளை மனதளவில் கொடுமை செய்வதற்குச் சமமாகும். இதுபோன்ற சூழலில் இருக்கும் மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வழிமுறை ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர்தான் LOC என்று செல்லமாக அழைக்கப்படும் “Lookout Circular”.

கொலை, கொள்ளை என பல பெரிய குற்றங்களை செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பமுயலும் குற்றவாளி, அல்லது முன்பே தப்பித்துச் சென்றுவிட்ட குற்றவாளி தலைமறைவாக இருந்துவிட்டு இந்தியாவிற்கு திரும்பும்போது கைது செய்வதற்கு வசதியாக இந்த LOC பல காலமாக காவல்துறையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழிமுறைதான் இப்போது மருமகள்களுக்கு தங்களின் குறிக்கோளை அடைய உதவும் கருவியாக பயன்படுகிறது.

மருமகளின் சொல்லுக்கு கட்டுப்படாத கணவன் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தவுடன் புலன் விசாரணை அதிகாரியை (Investigation Officer, IO) சற்று “கவனித்தால்” போதும். உடனடியாக NRI கணவனை “தலைமறைவான, தேடப்பட்டுவரும் கொடிய (கொலைக்) குற்றவாளி” என்ற முத்திரையைக் குத்தி ஒரு அறிக்கை தயார் செய்து இந்தியாவில் இருக்கும் அனைத்து விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்கள், எல்லைகள் என அனைத்து இடங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவிடுவார்கள்.

பிறகு NRI கணவன் எப்போது இந்தியாவிற்குள் நுழைந்தாலும் உடனடியாக எலியைப் பிடிப்பதுபோல விமான நிலையத்தில் பிடித்துவைத்துக்கொண்டு நீங்கள் புகார் கொடுத்த காவல் நிலையத்தில் உங்களின் காவல்துறை நண்பர்களுக்கு விமான நிலைய அதிகாரிகள் செய்தி அனுப்பிவிடுவார்கள்.

உடனே காவல்துறை நண்பர்கள் இந்த நற்செய்தியை மருமகளுடன் பகிர்ந்துகொண்டு கணவனை கைது செய்ய வேண்டும் என்ற மருமகளின் நெடுநாளைய ஏக்கத்தை போக்குவார்கள். பிறகென்ன நீங்கள் வழக்கம்போல இந்த இனிய செய்தியைக் கேட்டு “தலை தீபாவளியை” விட மகிழ்ச்சியான நாளாக அந்த தினத்தைக் கொண்டாடலாம். மற்றொரு சந்தோஷமான செய்தி என்னவென்றால் வழக்கம்போல நமது மீடியா நண்பர்கள் இந்த செய்தியை பத்திரிக்கையில் பிரசுரித்து NRI கணவனுக்கு “இரட்டை வரவேற்பு அளித்து” மருமகள்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி விடுவார்கள்.

அதுபோல ஒரு புத்திசாலி மருமகளின் சமயோசிதமான செயலால் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்ட ஒரு கணவனைப் பற்றிய செய்தியைத் தருகிறேன் படித்து கவனமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

வரதட்சணை வழக்கில் அமெரிக்கா தப்பி ஓடிய என்ஜீனியர் சென்னை விமான நிலையத்தில் கைது

பிப்ரவரி 18, 2012தினத்தந்தி
படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்

=====

இது சாத்தியமா? என்று உங்களுக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருக்கலாம். கண்டிப்பாக நம்புங்கள். 100% இது சாத்தியம். இந்தியாவில் பெரிய குற்றங்களை செய்தவர்களை விமான நிலையத்தில் வழியனுப்பி தப்பிக்க உதவிசெய்தாலும் செய்வார்கள் ஆனால் மருமகளின் வரதட்சணை வழக்கில் சிக்கும் NRI கணவனை மட்டும் விடவே மாட்டார்கள். மருமகளின் நலனில் அக்கறையுள்ள நமது நாட்டில் மருமகள்கள் தயங்காமல் இந்த வழிமுறையைப் பயன்படுத்தி NRI கணவன்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கலாம். வழக்கம்போல இந்த வழிமுறை மருமகள்களுக்கு முற்றிலும் இலவசம். அதனால் மருமகள்கள் கொஞ்சமும் தயங்காமல் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி NRI கணவனை விமான நியைத்தில் கைதுசெய்து பாடம் கற்பிக்கலாம்.

உங்களுக்கு நம்பிக்கை பிறக்க பின்வரும் இரண்டு செய்திகளைப் படித்துப் பாருங்கள்...

==========
செய்தி - 1
தனி விமானத்தில் வெளிநாடு கிளம்பினார் கலாநிதி!
பிப்ரவரி 11,2012 தினமலர்

சென்னை: 2 ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்க துறையினர் சட்ட நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வரும் வேளையில் சன்குழும தலைவர் கலாநிதி தனது மனைவியுடன் இத்தாலி புறப்பட்டு சென்றார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஆதாயம் பெற்ற மாக்ஸிஸ் நிறுவனம் சன் குழுமத்தில் ரூ. 550 கோடியை முதலீடு செய்தது. இந்த பணம் பெற்றதன் நோக்கம் என்ன என்பதும், இது சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்தும் மத்திய அமலாக்க இயக்குனரகம் விசாரித்து கடந்த 7ம் தேதி வழக்கை பதிவு செய்தது. மாஜி அமைச்சர் தயாநிதி மற்றும் கலாநிதி குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சி.பி.ஐ.,தாக்கல் செய்த வழக்கும் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ( வெள்ளிக்கிழமை) மதியம் 2. 20., க்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சன் குழும சிறப்பு விமானம் மூலம் கலாநிதி இத்தாலிக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் மனைவி காவேரி கலாநிதி, சன்குழும தலைமை அலுவலர் விஜயகுமார், இவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் சென்றனர். இதனை ஏர்போர்ட் அலுவலக வட்டாரம் மற்றும் உளவு பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.

இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் நகருக்குசென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்க துறையின் வழக்கு பதிவிற்கு பின்னர் விசாரணைக்கு அழைப்பர். இந்நிலையில் கலாநிதி இத்தாலி பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எப்போது திரும்புவார் என்ற விவரம் வெளியே அறியப்படவில்லை.
=====
செய்தி - 2

தலையங்கம்: யார் குற்றவாளி?
17 Jun 2010 தினமணி தலையங்கத்தின் ஒரு பகுதி

சுமார் 23,000 பேரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த சம்பவத்தில் அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் மெத்தனமாக இருந்தது என்பதும், குறைந்தபட்ச இழப்பீட்டைத்தான் அரசு பெற்றுத்தந்தது என்பதும்தான் இதுவரையிலும் விவாதமாக இருந்து வந்தது. ஆனால் இப்போதுதான் அம்பலமாகியிருக்கிறது, குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியும் பறித்த கதை.

வாரன் ஆன்டர்சனை போபாலிலிருந்து தனி விமானத்தில் தில்லிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குத் தப்பவிட்டனர் என்ற உண்மை இப்போது வெளியுலகுக்குத் தெரிந்த பிறகு, அதற்குக் காரணமே அப்போதைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங்தான் என்று கூசாமல் பழிகூறி பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது காங்கிரஸ்.


அர்ஜுன் சிங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி "சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுமே என்று அஞ்சியே வாரன் ஆன்டர்சன் அனுப்பி வைக்கப்பட்டதாக'வும் அர்ஜுன் சிங் அந்த நோக்கிலேயே செயல்பட்டதாகவும் கூறி அவரையும் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். இது இந்திய அரசின் நிர்வாக லட்சணம் எப்படி இருக்கிறது என்பதையே பறைசாற்றுகிறது.
==========


23,000 பேர் இறந்துபோக காரணமான போபால் விஷவாயு கசிவில் நேரடித்தொடர்புடைய ஆட்களை பாதுகாப்பாக விமானத்தில் ஏற்றி அமெரிக்காவிற்கு அனுப்பிய இதே நாட்டில் மருமகளை கொடுமை செய்தார் என்ற ஒரு புகாரின் அடிப்படையில் விமான நிலையத்தில் கணவனை கைது செய்திருக்கிறார்கள். இதிலிருந்து மருமகள்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் 23,000 அப்பாவிகள் இறந்து அவர்களின் குடும்பங்கள் விடும் கண்ணீரைவிட ஒரே ஒரு இந்திய மருமகளின் கண்ணீருக்கு ஆற்றல் மிகவும் அதிகம்!

அதனால் மருமகள்கள் தங்களது கண்ணீரை இந்தியாவில் தக்க சமயத்தில் சிந்தினால் அதன் மூலம் தங்களது குறிக்கோளை எளிதாக அடையலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் உங்களுக்கு உதவினாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து அவற்றை பக்குவமாகப் பயன்படுத்தத் தெரிந்தால்தான் கணவனின் குடும்பத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். இதுதான் இந்திய மருமகளாக இருப்பதற்கான அடிப்படை ரகசியம்.

இதுபோன்ற பல அருமையான வழிமுறைகளைப் பற்றி மேலும் கலந்தாலோசிக்க “ஃபேஸ் புக்கில்” மகிழ்ச்சியான மருமகள் கழகத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!

NRI கணவன்களுக்கு பாடம் புகட்டுவது தொடர்பாக மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மற்ற பதிவுகள்...

வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படி?

NRI கணவனை “கட்டுக்குள்” வைப்பது எப்படி? - இளம் மருமகளுக்கு மட்டும்

NRI மாப்பிள்ளையா? வேண்டவே வேண்டாம்

NRI கணவனுக்கு “கட்டம் கட்டுவது” எப்படி?




NRI மாப்பிள்ளையா? வேண்டவே வேண்டாம்

வரதட்சணை கொடுமை வழக்கில் ஆஸ்திரேலிய சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நான்கு மாதம் சிறை
ஜனவரி 08,2012 தினமலர்

சென்னை:ஒரு கோடி ரூபாய் கேட்டு வரதட்சணை கொடுமை செய்த வழக்கில், ஆஸ்திரேலிய சாப்ட்வேர் இன்ஜினியருக்கு, நான்கு மாதம் சிறை தண்டனை வழங்கி, ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

நாகர்கோவிலை அடுத்துள்ள வள்ளிவிளையைச் சேர்ந்தவர், தொழிலதிபர் ஸ்டீபன். இவரது மகள் பியூலாவை, அதே ஊரைச் சேர்ந்த, பத்மநாபனின் மகன் சிவகுமாருக்கு, 2003ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். அப்போது வரதட்சணையாக, 1.5 கிலோ தங்கம், 6 லட்சம் மதிப்புள்ள கார், 3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.சிவகுமார், கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

திருமணத்துக்கு பின் சிவகுமாரும், பியூலாவும் சென்னையில் வசித்தனர். அப்போது, வரதட்சணை போதாது என்றும், கூடுதலாக ஒரு கோடி ரூபாய் பெற்றோரிடம் இருந்து வாங்கி வரும்படி பியூலாவை, கணவர், மாமனார் பத்மநாபன், மாமியார் பத்மா ஆகியோர் கொடுமை செய்தனர்.

பியூலா, தன் கணவர், மாமியார், மாமனார் மீது வரதட்சணை புகாரை, கன்னியாகுமரி போலீசாரிடம் கொடுத்தார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த, நாகர்கோவில் மாஜிஸ்திரேட் கோர்ட், சிவகுமார் மற்றும் அவரது பெற்றோரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில், பியூலா அப்பீல் செய்தார்.

இந்த அப்பீல் வழக்கை நீதிபதி எஸ்.பழனிவேலு விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: வரதட்சணை கேட்டு துன்புறுத்தியது, வரதட்சணை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவின் கீழ், சிவகுமாருக்கு 4 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.பத்மா, பத்மநாபன் ஆகிய இருவருக்கும், 2 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 17 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனை காலத்தை ஏற்கனவே அனுபவித்து இருந்தால், விடுதலை செய்யலாம்.இவ்வாறு, நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
=====

மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பதிவு
NRI கணவனுக்கு “கட்டம் கட்டுவது” எப்படி?

இந்திய அரசின் மருமகள் உதவி மையம்

வெளிநாட்டில் இருக்கும் கணவனை மடக்கிப்பிடித்துவர அல்லது உள்நாட்டில் இருக்கும் கணவனை நல்“வழிக்கு” கொண்டுவர:

National Commission for Women, India

4, Deen Dayal Upadhayaya Marg,
New Delhi - 110 002
Phone: 91-11-23237166
91-11-23236988
Fax: 91-23236154
Complaints Cell:
91-11-23219750
Email: ncw@nic.in

Click Here to File Complaint Against NRI Husband
 Online Complaint Registration for NRI's




மருமகள்களே வழக்கறிஞரிடம் ஜாக்கிரதையாக இருங்கள்!

மருமகள்களை ஏமாற்ற பல கூட்டம் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. சட்டம் படித்து உதவி செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஒரு கூட்டமும் இதில் அடங்கும். மருமகள்கள்தான் விழிப்புணர்ச்சியுடன் இருந்து தங்களை அனைத்துவித தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் ஆசிரியை விவாகரத்து வழக்கில் போலி பெயரில் "ஒரிஜினல்' வழக்கறிஞர்கள் :விசாரணையில் அம்பலம்

ஜனவரி 01,2012 தினமலர்


மனைவிக்கு பதில் வேறு ஒரு பெண்ணை கோர்ட்டில் நிறுத்தி, விவாகரத்து பெற்ற வழக்கில், போலி பெயரில், ஒரிஜினல் வழக்கறிஞர்கள் ஆஜரானது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கோவை, பீளமேட்டைச் சேர்ந்தவர் சொர்ணலதா, 34; சிங்கப்பூரில் ஆசிரியராக பணியாற்றுகிறார். 2004ல் இவருக்கும், நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த, இன்ஜினியர் சிவகுமாருக்கும் திருமணம் நடந்தது. சிவகுமார், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவரை அணுகி, சிங்கப்பூரில் இருக்கும் மனைவிக்கு தெரியாமல், கோவை குடும்பக்கோர்ட்டில் இருந்து, விவாகரத்து பெற்றார். தகவல் அறிந்த சொர்ணலதா, உடனடியாக கோவை திரும்பி, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இன்ஜினியர், தனது பெற்றோருடன் கைது செய்யப்பட்டார்.

விவாகரத்து உத்தரவு பெற்றுத்தந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், சிவகுமாரின் மனைவியாக கோர்ட்டில் ஆஜரான பெண், நண்பர் மாரிமுத்து, இருதரப்பிலும் வழக்கறிஞர்களாக ஆஜரான போலி நபர்களை, போலீசார் தேடினர். கடந்த 28ம் தேதி, மாரிமுத்து கோர்ட்டில் சரணடைந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், சிவகுமார், சொர்ணலதா சார்பில், குடும்பக் கோர்ட்டில் ஆஜரானவர்கள் போலி வழக்கறிஞர்கள் அல்ல; போலி பெயரில் ஆஜரான ஒரிஜினல் வழக்கறிஞர்கள் தான் என்றும், எங்கும் தலைமறைவாகாமல் தினமும் கோர்ட்டுக்கு வருகின்றனர் என்ற தகவலும், தெரிய வந்துள்ளது. தனிப்படை போலீசாரிடம் கேட்டபோது,""அவர்களை கைது செய்ய, நாள் குறித்து விட்டோம். இவ்வழக்கில், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், முன்ஜாமின் பெற ஐகோர்ட்டுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அவர் சரணடைந்தால் அல்லது கைது செய்யப்பட்டால், மற்ற இரு வழக்கறிஞர்களை கைது செய்வதில் சிரமம் இருக்காது,'' என்றனர்.



கணவனின் ஓய்வூதியத்தை “கட்” செய்த வீரமான மருமகள்

சென்னை:மனைவி, குழந்தைகளை பராமரிக்காத ராணுவ வீரருக்கு, ஓய்வூதிய பலன்கள் வழங்க, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவர் தாக்கல் செய்த மனு:எனக்கும், நீலகிரி வெலிங்டனில் பணியாற்றும் ராணுவ வீரர் சங்கர் என்பவருக்கும், 1998ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு, 12 வயதில் மகன், ஒன்பது வயதில் மகள் உள்ளனர். வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக, என்னிடம் விவாகரத்து பெறும் வகையில், வெற்றுப் பேப்பரில் கையெழுத்து போடுமாறு மிரட்டினார்.நான் மறுக்கவே, என்னை தாக்கினார்.

ஆம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். என்னையும், குழந்தைகளையும் கைவிட்டு விட்டார். கடந்த ஆண்டு ஜூலை முதல், என் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன்.எங்கள் இருவருக்கும் கூட்டாக வங்கியில் கணக்கு இருந்தது. ஏ.டி.எம்., மூலம் மாதம் 7,000 ரூபாய் எடுத்து வந்தேன். தற்போது அந்தக் கணக்கை முடித்து விட்டார். அவரது பணி ஆவணங்களில், "நாமினி' ஆக, என்னை தான் குறிப்பிட்டிருந்தார்.தற்போது, அவரது ஓய்வூதிய சலுகைகள் அனைத்தும், வேறொரு பெண்ணுக்கு கிடைக்கும் வகையில் செயல்படுகிறார். வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடுத்த வழக்கில், இடைக்கால நிவாரணமாக மாதம், 7,000 ரூபாய் எனக்கு வழங்க உத்தரவிட்டது.

எனக்கு ஏற்பட்ட இழப்புக்காக, 30 ஆயிரம் ரூபாய் மற்றும் இருப்பிட வசதி அளிக்க, என் கணவருக்கு உத்தரவிட்டது.என்னையும், குழந்தைகளையும் பராமரிக்காததால், ஓய்வூதிய பலன்களை வழங்கக்கூடாது என, ராணுவ உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். வரும் 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். எனக்கு வர வேண்டிய பராமரிப்புத் தொகையை தராமல், அவருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கக்கூடாது. எனவே, ஓய்வூதிய பலன்களை வழங்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதி சுகுணா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.செல்வராஜ் ஆஜரானார். விசாரணையை, மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து, அதுவரை ஓய்வூதிய பலன்களை வழங்க இடைக்காலத் தடை விதித்தார்.




அடங்காத கணவன்களை அடக்க உதவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்

அடங்காத கணவன்களை வரதட்சணை சட்டங்கள் (IPC498A) மூலம் அடக்குவது எப்படி என்று பல மருமகள்களுக்கும் தெரிந்திருக்கும். இதுவரை தெரிந்துகொள்ளாத மருமகள்கள் இந்த இணைப்புகளில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போது புதிதாக வந்திருக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் மூலம் இன்னும் எப்படி அதிக பலத்துடன் அடக்கலாம் என்று செய்தித்தாளில் விளக்கமாக எழுதியிருக்கிறார்கள்.

முக்கியமான “பாயிண்ட்டுகளை” சிவப்பு நிறத்தில் கனமான எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். கவனமாகப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »சொல்கிறார்கள் >> அக்டோபர் 24,2011


குடும்ப வன்முறையிலிருந்து மீள வழி கூறும் வழக்கறிஞர் அஜிதா:

"குடும்பம் வேண்டும்; வன்முறை வேண்டாம்' என்று சொல்லும் பெண்களுக்காக, இது ஒரு சிவில் சட்டமாக போடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தில் ஒருவர் மீது புகார் கொடுத்தால், அவர்களைக் கைது செய்வதோ, சிறையில் அடைப்பதோ இல்லை. மாறாக, பாதுகாப்பு அதிகாரி என்ற ஒருவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிப்பர். இவர்களிடம் நேரடியாக புகார் தரலாம்.புகார் தரும் போது, பாதிக்கப்பட்ட பெண் என்றில்லை, அவர் சார்பாக, வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் தரலாம். ஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது.

ஒரு வீட்டில் வன்முறைக்கு யார் காரணமோ, அந்த ஆணுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, அதன் பின் அவரை யாராவது தூண்டினால், சம்பந்தப்பட்ட பெண் மீதும் புகார் தரலாம். புகாரைப் பெற்றுக் கொண்டவுடன், சம்பந்தப்பட்டவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பி, பேசச் சொல்வார்கள். அதனடிப்படையில், கோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.

எதற்குமே கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு எதிராகத் தான் இந்தச் சட்டம். புகார் மீதான ஆரம்பக் கட்ட நடவடிக்கையின் போதே, சிலர் "பிரச்னை செய்ய மாட்டேன்' என்று சொல்லி வீட்டிற்கு வருவர். வந்த பின், பழையபடி பிரச்னையை ஆரம்பிக்கலாம் என்பதால், அவர்களிடம் எழுதி வாங்கிக் கொள்வர். இதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்!
======

இனி இந்த சட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ள விளக்கத்தினைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்....

  • ஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது.
இந்த சட்டத்தைப் பயன்படுத்தி வீட்டில் இருக்கும் ஆண் மீது மட்டும்தான் புகார் தரமுடியும். ஏனென்றால் ஆண்கள்தான் எப்போதும் கொடுமை செய்யும் கொடுமைக்காரன்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் கணவன், தந்தை, சகோதரன், கணவனின் சகோதரன், திருமணம் செய்யாமல் கூடி வாழும் துணைவன், நாத்தனார்களின் கணவன்கள் என எந்த ஆண் மீது வேண்டுமானாலும் இந்த சட்டத்தின் மூலம் புகார் கூறலாம்.

குறிப்பாக மகளின் காதலுக்குத் தடைபோடும் அப்பா மீதும் இந்த சட்டத்தை மகள் ஏவிவிடலாம். எல்லாம் குடும்ப வன்முறைதானே...அதற்கும் இந்த சட்டத்தில் வழி இருக்கிறது! இதைப் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக எழுதியிருக்கிறேன். இங்கே சென்று படித்துப் பாருங்கள்: காதலுக்கு தடை போடும் பெற்றோருக்கு பாடம் கற்பிக்க வந்துவிட்டது சட்டம்!

  • கோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
கணவனைப் பிடிக்க வில்லை. அவன் முகத்திலேயே விழிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் மருமகள்கள் அதை குடும்ப வன்முறை தடுப்பு அலுவலரிடம் கூறி கணவனை அவன் சொந்த வீட்டிற்குள்ளேயே காலடி எடுத்து வைக்க முடியாமல் தடையுத்தரவு வாங்கி விடலாம். மீறி வந்தால் சிறைக்குத் தான் செல்ல வேண்டும்.

அவன் வீட்டிற்கு வரவில்லையென்றால் செலவிற்கு பணத்திற்கு என்ன செய்வது என்று மருமகள்கள் கவலையோடு யோசிப்பது புரிகிறது. அதைப் பற்றி கவலையே படவேண்டாம். இந்த குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம் கணவனை அவன் வீட்டிற்குள்ளேயே நுழைய விடாமல் தடுக்கலாம் ஆனால் மாதந்தோறும் குடும்ப பராமரிப்பிற்கு மட்டும் சரியாக பணத்தை அனுப்பவேண்டும் என்றும் நீதிமன்றத்தின் மூலம் ஆணை பிறப்பிக்கலாம். எப்படிஇருக்கிறது இந்த புதிய சட்டம்!!!!!!

  • இதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்!
முன்பிருந்தது போல் IPC498A வை மட்டும் பயன்படுத்தினால் ஜாமின் வாங்கிக்கொண்டு கணவன்கள் ஓடிவிடுவார்கள். இது பழைய நடைமுறை. அதனால்தான் இப்போது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் மருமகள்களின் கரங்களை வலுப்படுத்த வந்திருக்கிறது. இந்த குடும்ப வன்முறை சட்டத்தைப் பயன்படுத்தினால் கணவனை அவனது சொந்த வீட்டைவிட்டே விரட்டலாம், அவனது வருமானத்தில் கணிசமான ஒரு தொகையை மாதா மாதம் பெற்றுக் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால் அவன் குடும்ப சொத்தில் பங்குகூட வாங்கிக் கொள்ளலாம்.

இதன் விளைவாக அவன் என்ன செய்வதென்றே வழி தெரியாமல் மருமகள் சொல்லும் பேச்சிற்கு அடங்கி நடக்கலாம் என்ற முடிவிற்கு வந்துவிடுவான். அல்லது வேறு நல்ல தீர்வாக மருமகள் கேட்கும் ஒரு பெருந்தொகையை கொடுத்துவிட்டு ஆளை விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடிவிடுவான்.


இந்த இரண்டிற்கும் அவன் கட்டுப்படவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது IPC498A. இந்த IPC498A சட்டம் இப்போது தனித்து செயல்படாமல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்திற்குள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. தேவையானதை மருமகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதனால் மேலே குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து பலன்களையும் மருமகள் அனுபவிக்கலாம் அதே சமயம் IPC498A சட்டத்தையும் பயன்படுத்தி கணவனை கைது செய்து நீதிமன்றத்திலும் அலைய விடலாம். இந்த வசதி எப்படி இருக்கிறது....பிரமாதம்.

இப்படிப் பலவகையான வசதிகள் இருக்கின்றன இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில். அதனால் மருமகள்கள் இந்த புதிய சட்டத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு பக்குவமாகப் பயன்படுத்தி பலன் அடையாலாம். இப்படிப் பலர் இப்போது பயனடைந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள்!

முக்கியமான பின்குறிப்பு: இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை பெண்கள் தாராளமாக ஆண்களுக்கெதிராக பயன்படுத்தலாம். ஆனால் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் குடும்ப வன்முறை செய்வதாகக் கூறி பெண்ணின் மீது ஒரு ஆணால் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி புகார் கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்தியாவில் ஆண் மட்டுமே குடும்ப வன்முறை செய்பவன் என்பது உலகறிந்த உண்மை. மருமகள்களுக்கு எந்த வன்முறையும் செய்யத் தெரியாது! இதுவும் மருமகள்களுக்கு நல்லதுதானே!!



யாரிடம் வாலாட்டக் கூடாது தெரியுமா?

வரதட்சணை சட்டங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட மருமகள்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக பலம் படைத்தவர்கள் சட்டம் படித்த வக்கில்கள்தான். அதனால் சட்டம் தெரிந்த மருமகள்களிடம் கணவன்களும் அவனது குடும்பமும் வாலாட்டக் கூடாது! சட்டம் படித்த வக்கில்களிடம் பொது மக்கள் வாலாட்டக் கூடாது!!

மருமகள்களின் தோழர்களான சட்டம் படித்த வக்கில்களுக்கு மருமகள்கள் தங்களது ஆதரவை அளிக்க வேண்டும்.

போலீசுக்கு எதிரான போராட்டம் என கூறி வக்கில்கள் நடத்திய மனித சங்கிலியை ஏதோ ஒரு அவசர காரணமாக கடக்க முயன்ற பொதுமக்களை வக்கில்கள் தாக்கினர். (15 அக்டோபர் 2011 தினமலரில் வந்த செய்தியும் படமும்)



மருமகள்களின் ஆயுத பூஜை!


ஆயுத பூஜையான இன்று மருமகள்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் “மருமகள் பாதுகாப்பு சட்ட ஆயுதங்களைப்” பற்றி மருமகள்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மருமகள்களுக்கு பாதுகாப்பு அளிக்க அகிம்சை வழி ஆயுதங்களாக அரசாங்கம் கொடுத்திருக்கும் சட்டங்களான வரதட்சணை தடுப்புச் சட்டம் (The Dowry Prohibition Act, 1961 (28 of 1961)), மருமகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (IPC498A), கணவனின் வன்முறையிலிருந்து மருமகளை காக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (Protection of Women from Domestic Violence Act, 2005) இவற்றைப் பற்றி மருமகள்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஆயுத பூஜை நன்னாளில் மருமகள்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த சக்தி மிகு அகிம்சை வழி ஆயுதங்களை பின்வரும் இணைப்புகளில் இருந்து தரவிறக்கம் செய்து அச்சடித்து இன்றைய பூஜையில் வைத்து பூஜை செய்து இந்த நகலை எப்போதும் கையில் வைத்துக்கொண்டால் கணவன் மற்றும் அவனது குடும்பத்தால் ஏற்படும் அனைத்துவித கொடுமைகளையும் அரசாங்கத்தின் உதவியோடு எதிர்த்து பாதுகாப்பு பெறலாம்.

பின்வரும் இணைப்புகளில் “PDF” வடிவில் இந்த சட்டங்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

1. வரதட்சணை தடுப்புச் சட்டம்

தற்போது வரதட்சணை கேட்கும் அல்லது திருமணத்தின்போது வரதட்சணை கேட்ட கணவனை அல்லது திருமணத்தின்போது வரதட்சணை பெற்றுக்கொண்ட கணவனை இந்த சட்டத்தின் மூலம் எப்போது வேண்டுமானாலும் தண்டிக்கலாம்.

2. மருமகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்

வரதட்சணைக்காகவோ அல்லது மதிப்பு மிக்க பொருட்களுக்காகவோ அல்லது எந்தவித காரணமும் இன்றி மருமகளை மனளதளவிலோ அல்லது உடலளவிலோ துன்புறுத்தும் கணவன் மற்றும் அவனைச் சார்ந்த அனைவரையும் (உறவினர், நண்பர்கள் உட்பட வயது, பாலினம் வித்தியாசம் இல்லாமல்) இந்த சட்டத்தின் மூலம் தண்டிக்கலாம்.

3. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்

மகள், மருமகள், மனைவி, சகோதரி என அனைத்து பெண்களும் தங்கள் குடும்பத்தில் இருக்கும் எந்த ஆண் உறவினராலும் (திருமணம் செய்யாமல் கூடிவாழும் துணைவன், கணவன், சகோதரன், தந்தை உட்பட) உடலியல், பாலியல், மனவியல், மற்றும் பொருளாதாரக் (Physical and Sexual Abuse, Verbal & Emotional Abuse and Economic Abuse) கொடுமைகளுக்கு ஆளானால் இந்த சட்டத்தின் மூலம் தகுந்த நிவாரணம் பெறலாம்.

இந்த ஆயுத பூஜை “சக்திமிக்க” பூஜையாக இருக்கட்டும்!

வாழ்த்துக்கள்!!